Arampannai ஜமாஅத் தலைவர் .
திரு .வைஸ் .கே.ஏ .முஹம்மது உதுமான்
பஞ்சாயத்துதலைவர்
திருமதி.ஹமிதாஹனிபா ;
கவுன்சிலர் .
திருமதி.சரிபாபசிர்

செவ்வாய், 21 ஆகஸ்ட், 2012

பித்ராவை சொல்லி ஓட்டு கேட்டேனா ?


பித்ராவை சொல்லி ஓட்டு கேட்டேனா ?

பித்ரா செய்ததை சுட்டி காட்டி கடந்த பஞ்சாயத்து தேர்தலில் நான் ஓட்டு கேட்டு 
நெட்டில் பிரச்சாரம் செய்ததாக கீழ்க்காணும் 20011 அக்டோபரில் 9,11தேதிகளில் நான் வெளியிட்டுள்ள  கடைசி பத்தியை பிரின்ட் அவுட் எடுத்து அவதூறு பரப்பியுள்ளார்கள் . மஞ்சள் கலரில் அடையாளமிட்டுள்ள பகுதியை 
பாருங்கள் .நான் இதில் பித்ராவை சுட்டிக்காட்டி ஓட்டு  கேட்டதற்கு ஆதாரம் இருக்கிறதா?

ஞாயிறு, 9 அக்டோபர், 2011


தவ்ஹித் ஜமாத்தின் வெற்றி

அஸ்ஸலாமு அலைக்கும், 
                                                             சென்னையில் இருந்து வந்த சுன்னத் ஜமாஅத் தீவிர ஆதரவாளர் பெரியவர் ஒருவர் சொன்னாராம் ,கத்தம் பாத்தியாவில் கலந்து கொள்ள வந்த தனக்கு கடும் ஏமாற்றமே மிஞ்சியதாக கூறியுள்ளார்.மேலும் தனக்கும் ஓத மாட்டார்களோ ,தனது சந்தூக்கிலும் மாலை போட மாட்டார்களோ,அடக்கம் முடிந்த பிறகு முசாபாஹ் இருக்காதோ  என்ற ஆதங்கப் பட்டதாக கேள்விபட்டேன்.அல்ஹம்துலில்லாஹ்..இதுதான் தவ்ஹித் ஜமாத்தின் வெற்றி .எந்த தவ்ஹித் ஜமாத்தை ஒழிக்கப் போவதாக மக்களிடம் பொல்லாங்கு கூறி ஜமாஅத் தேர்தல் கொண்டு வந்தார்களோ அந்த ஜமாத்தாலே இன்று தவ்ஹித் வளர்கிறது.கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் பள்ளிவாசல் நிர்வாகத்தை மாற்றப் போகிறோம் என்று கையெழுத்து வேட்டை நடத்தி வக்ப் வாரியத்திற்கு மனுக்கள் அனுப்பினார்கள் .வக்ப் போர்டின் வழிகாட்டுதலின் படி அப்போது சூப்ரண்டாக இருந்த உதுமான் மைதீன் தலைமையில் தேர்தல் இல்லாமல் நிர்வாகத்தினரை தேர்ந்தெடுக்க கூட்டம் நடத்திய பொழுது இரு தரப்பிலும் உறுப்பினர் பட்டியல்களை கேட்டார். அப்போது அப்துல்பாரி அவர்கள் தலைமையில் ஒரு அணியும் யாக்கூப்  தலைமையில் ஒரு அணியும் பட்டியல் கொடுக்கப்பட்டது இரு தரப்பினரையும் கலந்து நிர்வாகிகளை தேர்வு செய்யலாமா என்பது பற்றி பரிசீலனை செய்தபோது யாக்கூப் தரப்பினர் மறுத்துவிட்டனர்.கூட்டம் தீர்வற்ற நிலையில் இருந்த பொழுது ,நாங்கள் .ஒரு தீர்வை சொன்னோம்.அதாவது பள்ளியில் வைத்து மவ்ளுத் ஓதக்கூடாது ,மவ்லூத் ஒதுபவரை இமாமாக நியமிக்கக் கூடாது என்று எழுதித் தந்துவிட்டு யாக்கூப் அணியினர் மட்டுமே நிர்வாகிகளாக இருந்து கொள்ளட்டும் என்று கூறினோம்.அதற்கு ஒரு சிலர் தவிர மற்றவர்களும் எதிர்த்து தேர்தல் கொண்டு வந்தனர்.எப்படியோ வென்றனர்.ஆனால் நாங்கள் எதை எழுதி  கேட்டோமோ,அதை கண்ணியமான முறையில் பள்ளிவாசலில் வைத்து  எழுதி தராதவர்கள் போலிஸ் ஸ்டேசனில் வைத்து எந்த  காலத்திலும்  மவ்ளுத்  ஓதும் இமாம்களை நியமிக்க மாட்டோம் என்று எழுதி கொடுத்தனர். இதுதான் எங்களுக்கு வெற்றி .இதைத்தானே அன்று நாங்கள் கேட்டோம் அப்போதே கொடுத்தால் நமது டெப்பாசிட் காசு மிஞ்சியிருக்கும்.தேர்தல் செலவுகள் இரு பக்கமும் ஆகியிருக்காது மேலும் நீங்க சென்னைக்கும் நெல்லைக்கும் பல முறைகள் படை எடுத்திருக்க வேண்டாம்.நபி[ஸல்] அவர்கள் காட்டித்தந்த பெருநாள் திடல் தொழுகைக்கு அப்துல் பாரி அவர்களை ஏற்பாடு செய்யுமாறு வேண்டிய போது எங்களது ஆதரவாளர் என்று கூறப்பட்ட அவர் மறுத்தார். ஆனால் இன்று நபி[ஸல்]அவர்கள் கூறியவாறு நாங்கள் நடத்தி காட்டியது போன்று நீங்களும் திடல் தொழுகைக்கு வந்து விட்டீர்கள். இதுதான் எங்களுக்கு வெற்றி .நாங்கள் ஓட்டுகளை எண்ணி அடையும் அற்ப வெற்றியை விட இது போன்ற வெற்றியை எதிர்பாக்கிறோம்.தேர்தலில் நீங்கள் யார் வெற்றி பெற்றாலும் எங்களுக்கு அதில் ஒன்றும் இல்லை.ஆனால் நீங்கள் அனைவரும் தவ்ஹித் கொள்கைகளை பின்பற்ற வேண்டும் என்பதே எங்களது இலக்கு.அதுவே எங்கள் வெற்றி.
நாங்கள் உள்ளாட்சி தேர்தலில் பங்கேற்கவோ ,ஆதரிக்கவோ மாட்டோம் என்று அறிவித்த பிறகும் உங்களது தேர்தல் ஆதாயம் கருதி வேண்டுமென்றே எங்களை எதிர்த்து போட்டியிடுவதாக கூறிவந்ததோடு எஸ்.பீ யூனூஸ் மருமகன் அப்துல் சலாம் என்பவரை நிஜாம் என்ற மது சப்ளையரை தோற்கடிக்க நாங்கள் நாற்பதினாயிரம் கொடுத்து நிறுத்தியுள்ளதாக தொழ வராத செயலாளர் உட்பட சில கழுகுகள் வதந்தி பரப்பி வந்தனர்.சலாம் ஏன் அடுத்தவர்களிடம் பணம் எதிர்பாக்க வேண்டும்?பொய்யை சொன்னாலும் பொருந்த சொல்லவேண்டுமா?மோசடி மன்னன் நிஜாமின் சிறப்புகளை சொல்லி ஓட்டு கேட்க வழியில்லாததால் இவ்வாறு பொய்யை பரப்பி இப்படி ஒரு உள்ளூர்காரனை தோற்கடிக்க வெளியூர்காரனுக்கு பணம் கொடுக்க வேண்டுமா?ஐயோ பாவம் நிஜாம். ஆதலால் அவருக்கு சுன்னத் ஜமாத்தினரே ஓட்டு போடுங்கள் ,என்று பிரச்சாரம் செய்து வருகின்றனர். இந்த பொய்யர்கள் கூறுவதை எல்லாம் உண்மை என்று நம்பி வந்த ஒரு பெரியவர் சுன்னத் ஜமாஅத் வெறியர் , இன்று பிரச்சாரம் செய்ய வந்த அப்துல் சலாமிடமும் அவரது மாமாவிடமும் நாற்பதினாயிரம் பற்றி கேட்டுள்ளார்.விடுவார்களா அவர்கள்? செமையாக வாங்கி கட்டிகொண்டார்.ஆக பெரும் பொய்யர்களே நய வஞ்சகர்களே நாங்கள் உள்ளாட்சி தேர்தல்களை கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை என்னும் நிலையில் எங்களை வம்புக்கு இழுப்பது நியாயமா? உங்களது ஸ்பெசல் சுன்னத் ஜமாஅத் கொள்கைப் படி அண்ணன் நிஜாம் வழியில் சாராயம் கொடுத்து நாடார் தெருவில் ஓட்டு கேட்டது போல் தெருக்களிலும் ஏதாவது பாமாயில் கொடுத்து ஓட்டு கேட்க வேண்டியது தானே ! ஏன் தவ்ஹித் ஜமாத்தையும் சுன்னத் ஜமாத்தையும் உங்கள் அற்ப அரசியல் ஆதாயங்களுக்கும் சேர்மன் வேட்பாளர் போடும் லட்சங்களுக்கும் பயன்படுத்த வேண்டும்? [இறைவன் நாடினால் தொடரும்]

திங்கள், 10 அக்டோபர், 2011


தவ்ஹித் ஜமாத்தின் வெற்றி 2

ஆத்தூரில் பஞ்சாயத்து தலைவராகவும் .ஜமாத்தலைவராகவும்,ஆழ்வார்திருநகர் அதிமுக ஒன்றிய செயலாளராகவும் ஷேக் தாவுத் என்பவர் இருந்தார். இவருக்கு அதிகார மட்டத்திலும் நெருக்கமான தொடர்பு இருந்தது.அடியாட்கள் பலமும் உண்டு.அந்த ஊரில் இவர்  தவ்ஹித் ஜமாத்தை அழித்து விடுவோம் .பொசுக்கி விடுவோம் என்றார்.பல இடையூறுகள் பண்ணினார்.வாடகைக்கு இருந்தவர்களின் வீடுகளை,கடைகளை காலி பண்ணுமாறும் கட்டாயப் படுத்தினார். அத்தனை தடைகளையும் உடைத்தெறிந்து சுன்னத் ஜமாஅத் பள்ளி அருகிலே தவ்ஹித் மார்கஸ் உருவாக்கி ஜும்மா மற்றும் ஐவேளைகள் தொழுகைகளும் நடை பெற்று வருகிறது.தவ்ஹித் ஜமாஅத் உறுப்பினர்கள் நமதூரை விட மிகக் குறைவாக இருந்தும் பலமிக்க ஷேக் முகம்மதுவால் தவ்ஹித் ஜமாத்தின் சுண்டு விரலைக் கூட அசைக்க முடியவில்லை.இன்னும் இந்த தடவை அவருக்கு போட்டியிட அதிமுக சீட்டும் கிடைக்காமல் போயிற்று.இவர் எந்த டி.எஸ்.பி.யைவைத்து ஆட்டம் போட்டாரோ அவர் ஓரிரு மாதங்களில் இட மாற்றம் செய்யப்பட்டார்.இதை இங்கே சொல்லுவதற்கு காரணம் என்னவெனில் ,கள்ள ஜமாத் வேட்பாளர்களுக்கு ஆதரவு தேடும் பொய்யர்கள் கூட்டம் ,'நாங்கள் பிரெசிடென்ட் தேர்தலில் வெற்றி பெற்றால் , போலீஸை வைத்து தவ்ஹித் ஜமாத்தை ஒன்றும் இல்லாமல் ஒடுக்கி விடுவோம் .இப்போதைய ப்ரெசிடென்ட் ஹனிபா ,தவ்ஹித் ஜமாத்துக்கு  ஆதரவாக் இருப்பதால் தான் ஒன்றும் செய்ய முடிய வில்லை.என்றும் வெளியூர் பண்ணை  மக்களிடம் நமதூரில் பெரும் பிரச்னைகளும் தகராறுகளும் அதனால் தான் ஜமாத்தில் இருந்து போட்டியிடுகிறோம் என்றும் அதனால் எங்களுக்கு ஆதரவளிக்குமாறு வேண்டி வருகிறார்கள் .பஞ்சாயாத்தை கைப்பற்றி தங்கள் அதிகார ஆட்டம் போட்டு கமிசனிலும் பங்கு போடவே அன்றி வேறொன்றுமில்லை.இவர்கள் இதைப்போல் ஜமாஅத் தேர்தலில் இரண்டாவது ஜமாத்தை நிறுத்திவிடுவோம் என்று சொன்னார்களே முடிந்ததா?நாங்கள் ஏற்கனவே சொன்னது போல் பள்ளிவாசலில் வைத்து எழுதி கேட்டதை போலிஸ் ஸ்டேசனில் இன்ஸ்பெக்டரிடம் ஏச்சுக்கள் வாங்கி எழுதி கொடுத்தனர்.
மீரா ஸ்கூலை கைப்பற்ற திட்டம் போட்டார்கள். அதற்கும் காரணம் தவ்ஹித் ஜமாஅத் அதை வைத்துதான் வளர்ந்துவிட்டார்கள். அங்கு படிக்கும் மாணவர்களிடம் தவ்ஹித் ஜமாஅத் பற்றி பிரச்சாரம் செய்து இளைஞர்களை வழிகெடுத்து விட்டதாகவும் பொய்யர்கள் அவதூறுகளை சொல்லி வந்தனர்.அது உண்மை என்றல் அதிகமான மாணவர்கள் தவ்ஹித் மர்கசில் அல்லவா தொழுகைக்கு வரவேண்டும்.?நேரில் கண்கூடாக பார்க்கும் விசயங்களிலே இப்படி பச்சை பொய்.சொல்லுகிறார்கள்.தவ்ஹித் ஜமாத்தை சேர்ந்தவர்கள் பிள்ளைகள் கூட தவ்ஹித் மர்கசுக்கு தொழுகைக்கு வருவதில்லை.ஸ்கூலில் கல்வி மட்டுமே இருக்கிறதே தவிர அங்கு மார்க்கம் பற்றி எந்த பாடங்களும் நடக்கவில்லை.இவர்கள் சொல்லை நம்பி என்னிடம் கல்வியாளர் ஒருவர் கேட்டார்."தவ்ஹித் பற்றி பள்ளியில் பாடம் எடுக்கிறீர்களா"?என்று. இவர்களது நோக்கம் ஸ்கூலை கையாள வேண்டும் என்பதே.மீரா ஸ்கூலை வைத்துத்தான் ஆறாம் பண்ணையில் தவ்ஹித் வளர்ந்தது உண்மை என்றால் ,செய்துங்கநல்லூரில் எந்த ஸ்கூல் இருக்கிறது?அங்கு தவ்ஹித் ஜமாஅத் ஒரு பழைய பள்ளிவாசல் இருந்ததை புனரமைப்பு செய்து நமதூரை விட சிறப்பாக ஏசி பள்ளிவாசலாக செயல்பட்டு வருகிறதே.இன்னும் தவ்ஹித் ஜமாஅத் தமிழகம் முழுவதும் மிகவும் சிறப்பாகவும் சீரிய முறைகளிலும் செயல்பட்டு வருகிறதே .அந்த ஊர்களில் எந்த ஸ்கூல் உள்ளது?
அன்பு சகோதரர்களே, இந்த பொய்யர்கள் தங்களது அபிலாசைகளையும் அற்ப அதிகார வெறிகளையும் நிறைவேற்றவே தவ்ஹித் ஜமாத்தை காரணம் காட்டி வருகிறார்கள்.தவ்ஹித் ஜமாஅத் என்ன பாவம் செய்தது?
இன்று பல இளைஞர்களை நபி வழியில் திருமணங்கள் செய்கிறார்களே அது பாவமா?வட்டியில்லா கடன் வழங்கியது பாவமா? கல்வி உதவி,மருத்துவ உதவி ,ரத்ததானங்கள் செய்கிறோமே அவைகள் பாவமா?பித்ராவை முறையாக வசூல் செய்து ஏழைகளுக்கு வழங்குகிறோமே ,கூட்டு குர்பானி மூலம் ஏழைகளுக்கும் பயன் கிடைக்க செய்கிறோமே அவைகள் எல்லாம் பாவமா?மொத்த முஸ்லிம் சமுதாய நலன்களுக்கு போராட்டங்கள் நடத்துவதுதான் பாவமா? சிந்தியுங்கள் .அயோக்கியர்களை அடையாளம் காணுங்கள்.
பின் குறிப்பு ;தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத் பற்றி இவர்கள் வெளியிட்ட 
தேர்தல் பிரசார துண்டு பிரசுரத்தில் குறிப்பிட்டதால் 
தவ்ஹித்ஜமாஅத் மாநில  தலைமையிடம் தொடர்பு கொண்டு
 தேர்தலில் பங்கேற்பது பற்றி கேட்டோம் .முதலில் மறுத்துவிட்டார்கள்.அந்த சமயத்தில் எழுதப்பட்டது.
அதன் பின்னர் அவர்கள் பரிசீலனைக்கு 
பின்னர் இது போன்று தஞ்சாவூரிலும் ஓரிரு கிராமங்களில் 
பஞ்சாயத்து தேர்தல் நிலை உள்ளதால் ஆராம்பன்னைக்கும் 
அந்த ஊர்களுக்கு மட்டும் தேர்தலில் டிஎன்டிஜே 
கொடி ,பேனர் இல்லாமல் பிரச்சாரம் செய்து கொள்ளுங்கள் 
என்று அனுமதி வழங்கினார்கள் . இது பற்றி பீஜே அவர்கள் 
நெல்லையில் நடந்த பொதுகுழுவிலும் குறிப்பிட்டார் .

ஞாயிறு, 12 ஆகஸ்ட், 2012

உண்மைகள் உசைன் காச்சாவை ஊமையாக்கி விட்டதா என்ன?

[தலைப்பு மாற்றம்]
வெளிநாடுவாழ் சகோதரர்களுக்கு அஸ்ஸலாமுஅலைக்கும் ,
                                            புனரமைப்பு  கமிட்டி பைலாவின் படி பொதுக் குழு கூட்டம் நடத்தி புனரமைப்பு கமிட்டி நிர்வாகத்தை புதிதாக தேர்தெடுத்து வங்கியில் பணத்தை பெற்றுக் கொள்ளுங்கள் என்று பலமுறைகள் கூறியிருந்தோம் .ஆனால் கடந்த 12/09/2012 அன்று பொது குழுவை கூட்டினார்கள்.மினிட் புக்கில் கலந்து கொண்டவர்கள் என்ற தலைப்பில் கையெழுத்து பெற்றார்கள்,இக்கூட்டத்தில் மகபூப் அலி தலைமை தாங்கி நடத்தினார்.இதில் அனைத்து மக்களும் கலந்து கொண்டனர் .இந்த கூட்டத்தில்
  நம்பிக்கை கொண்டோரே! ஊகங்களில் அதிகமானதை விட்டு விலகிக் கொள்ளுங்கள்! சில ஊகங்கள் பாவமாகும். துருவித் துருவி ஆராயாதீர்கள்! உங்களில் ஒருவர் மற்றவரைப் புறம் பேசாதீர்கள்! உங்களில் எவரேனும் இறந்த தமது சகோதரனின் மாமிசத்தைச் சாப்பிட விரும்புவாரா? அதை வெறுப்பீர்கள். அல்லாஹ்வை அஞ்சுங்கள்! அல்லாஹ் மன்னிப்பை ஏற்பவன்; நிகரற்ற அன்புடையோன்.என்ற குர்ஆன் வசனத்தை ஒரு ஆலிம் துவக்கத்தில் வாசித்தார்.
 முன்னாள் பள்ளிவாசல் தலைவர் பற்றி இந்நாள் இ.செ அவதூறு பரப்பியதை ஆதாரத்துடன் இந்த வசனத்தை சுட்டிக்காட்டி கேட்டோம்.
அடுத்து தொவ செயலாளர் மகன் பள்ளிவாசலில் வைத்து ஒருவரை கிண்டல் செய்ததினால் வந்த பிரச்னையில் அந்த பொடியனை கண்டிக்காமல் ,தனி நபர் பிரச்னைக்காக பள்ளிவாசல் லட்டர் பேடில் போலீசிடம் புகார் கொடுத்தது பற்றி கேட்டோம் ..நாங்கள் அவ்வாறு பள்ளிவாசல் பேடில்  கொடுக்கவில்லை என்று  தலைவர் கூறினார்.நாங்கள் கொடுத்த புகாரின் நகலை காட்டுவதாக சொன்னார்.ஆனால் இதுவரை காட்டப்படவில்லை .போகட்டும் 
அதன் பிறகு தீர்மானம் என்னவென்று கேட்கப்பட பொழுது நான்கு கழிப்பறைகள் கட்டப் போவதாக கூறினார்கள்.அந்த தீர்மானம் நிறைவேறியதும் வேறு தீர்மானங்கள் இல்லை என்று கூறப்பட்டது.மகபூப் அலி மீண்டும் கேட்டார் .இது ஒரு தீர்மானம் மட்டுமே என்று கூறப்பட்டது.புனரமைப்புகமிட்டி பற்றி கேட்டதற்கு அதன் தலைவர் அப்துல் பாரி அவர்கள் இப்போது உம்ரா சென்றுள்ளதால் அவர் வந்த பிறகு அது பற்றி பேசலாம் என்று கூறப்பட்டது.அதன் பிறகு ஈசாவின் கூச்சலால் குழப்பம் ஏற்பட்டு போலீசார் தலையிட்டு கூட்டம் முடிவடைந்தது என்பதை னைவரும் அறிவார்கள்.
ஆனால் இந்த பொது குழுவில் புனரமைப்பு கமிட்டி நிர்வாகத்தை புது பள்ளிவாசல் கமிட்டி  ஏற்றுக் கொள்வதாகவும் ,வரதட்சணை மாப்பிள்ளைக்கு பள்ளிவாசலில் நிக்காஹ் நடத்த அனுமதிக்க கூடாது என்றும் ஐந்து தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டதாக போலிதீர்மானங்களை தயார் செய்து  கமிட்டி உறுப்பினர்கள்  உட்பட சிலரின் கையெழுத்துகள் போடப்பட்டுள்ளது.அதில் சில கமிட்டி உறுப்பினர்களின்  கையெழுத்துக்கள் போர்ஜரி என்பது தெளிவு .. பொதுகுழுவில் கலந்து கொண்டவர்களின் கையெழுத்து களையும் இந்த போலி தீர்மானங்களுக்கு ஆதரவு தெரிவித்ததாகவும் காட்டப்பட்டுள்ளது. 

அதைப்போல 22/07/2011 அன்று ஜும்மாவில் பள்ளி விரிவாக்கம் பற்றி வக்ப்  போர்டில் அனுமதிக்காக  மனு செய்ய  உள்ளதால் அதற்க்கு அனைவரும் ஆதரவு  தெரிவித்து கையெழுத்து போடுமாறு வேண்டிக் கொண்டனர்.. இவ்வாறு ஜமாத்தினரின் கையெழுத்துக்களை பெற்று ,அன்று பொதுக்குழு கூட்டம் நடந்ததாகவும் அதில் புனரமைப்பு கமிட்டி உறுப்பினர்களாக  தேர்ந்தெடுக்கப் பட்டு ,அபுல்ஹசன்,பசீர் ஆகிய இருவரும் வங்கி வரவு செலவு அத்தாரிட்டியாக  தேர்வு செய்யப் பட்டதாக கூறப் பட்டுள்ளது 
பொதுகுழு  நடத்தாமல் பொதுக்குழு நடத்தியதாக மினிட் புக்கில் பதிவு செய்துள்ளனர் 
இந்த இரண்டு போலி கூட்டத்தின் தீர்மானங்களையும்  கொடுத்து வங்கி பணத்தை கைப்பற்ற முயற்சித்து உள்ளனர்.அத்துடன் பள்ளிவாசல் கமிட்டி தேர்வு செய்யப்ப் பட்டதற்கான வக்ப் அங்கீகார நகலையும் கொடுத்துள்ள்ளனர்.அதை   பெற்றுக் கொண்ட வங்கி அதிகாரி operating authorities மாற்றினாலும் வரவு செலவு பண்ணுவதை நிறுத்தி வைத்துள்ளார் 
இதில் குறிப்பிடும் விஷயம் என்ன வென்றால் S.A.அபுல் உசேன் என்று ஓரிடத்தில்  கையெழுத்து உள்ளது..இன்னொரு இடத்தில் S.Aஅபுல் ஹசன் என்றும் கையெழுத்து உள்ளது . டிஎம் எ  யாக்கூப் அவர்களின் கையெழுத்துமூன்று  விதமாக உள்ளது.கையெழுத்து வித்தியாசம் மட்டும் அல்ல .பெயரின் ஸ்பெல்லிங்கும் வித்தியாசமாக உள்ளது yacoob என்றும் yacoof என்றும் yookof என்றும் மூன்றுவிதமாக் உள்ளது 
ஒரு உறுப்பினர் ஒரே நாளில் ஒரு இடத்தில் ஆங்கிலத்திலும் இன்னொரு இடத்தில் தமிழிலும் கையெழுத்து இட்டுள்ளார்.இன்னும் பல குளறுபடிகள் உள்ளன.
இதைப் பற்றி கேட்டால் இன்று வரை மவுனம் சாதிக்கிறான் .வங்கியில் இவன்தான் வாதம் பண்ணிஇருக்கிறான் .
நமக்கு வெட்ட வெளிச்சமாக தெரிந்த விசயங்களிலே இத்தனை மோசடி செய்துள்ள நிஜாமுத்தின் என்ற ஹுசைன் காஜா  முந்தைய விசயங்களிலும் என்னவெல்லாம் பண்ணியிருப்பான் என்று நினைவுறுத்தி பாருங்கள் .
பள்ளிவாசல்  நிர்வாகம் பண்ண  மோசடி வித்தைகள் எல்லாம் பண்ண வேண்டுமா?
வெளியுலகில் பண்ணும் பாவங்களுக்கு மன்னிப்பு கோரும் பள்ளியிலே பாவங்கள் செய்தால் இவர்கள் போட்டி போட்டு நிர்வாகத்திற்கு வந்தது அல்லாஹ்வுக்காகவா ?இல்லை அயோக்கியத்தனத்திர்ககாகவா ?
நமதூருக்கு பஸ் போக்குவரத்து முதன்முதலாக கொண்டு வந்த முஸ்லிம் இளைஞர் முன்னணி யின் செயலாளராகவும் ,நன்கு வாதிடக் கூடியவருமான கோஸ் பீர்முஹம்மத்தை தேர்ந்தெடுக்காமல் ,தொழ  வராதவரை தேர்ந்தெடுத்து கைபிள்ளையாக வைத்து ஆட்டிபடைக்கலாம் என்பதற்காகவா?
உஸ் காசான் ஊமை இல்லையாம் ,இதோ ஊமையாக்கிய உண்மைகள் அவனை இப்போது உளற வைத்துவிட்டது .வெளிநாடுவாழ் சகோதரர்களுக்கு வெட்டி ஒட்டவில்லை என்பதற்கு மட்டும் அல்லாஹ்வின் மீது ஆணையாக சத்தியம் செய்தவன், பதில் என்ற பெயரில் ,போர்ஜரி இல்லை என்பதற்கு வெளிநாடு சகோதரர்களுக்காக இன்னும் அல்லாஹ்வின் மீது ஆணையாக சத்தியம் பண்ண மறுத்து வருகிறான்.
கள்ள தீர்மானங்கள் பற்றி  வாய் திறக்காமல் ஊமையாக நடிக்கும் அவன் விற்கவே முடியாத வக்ப் சொத்துக்கள் பற்றியும் அது சம்பந்தமாக எனக்கு எவ்வித பங்கும் இல்லாத பொழுது ரமளானில் கொஞ்சம் கூட  அச்சம் இல்லாமல்  மனம் துணிந்து  பொய்களை அள்ளி வீசிஉள்ளதை பாருங்கள்.
நான் கேட்டிருப்பது 
1.போர்ஜரி  இல்லை  என்று அல்லாஹ்வின்மீது மீது ஆணையாக சத்தியம் பண்ணத் தயாரா ?
2. 12/09/2010 அன்று ஐந்து தீர்மானங்கள் நிறைவேறியதாகவும் ,22/07/2011 அன்று பொது குழு நடந்து புனரமைப்பு நிர்வாக கமிட்டி மற்றும் operating authorities தேர்வு செயப்பட்டதும் உண்மையா?

வெள்ளி, 10 ஆகஸ்ட், 2012

பெருநாள் குத்பாவுக்கு

வெளிநாடு சகோதரர்களுக்காக ஒரு விசயத்தில் மட்டும் அல்லாஹ்வின் மீது ஆணையிட்ட ப.நூ .,போர்ஜரி பிரச்சனையில் வெளிநாடு சகோதரர்களுக்காக ஏன் இன்னும் அல்லாஹ்வின் மீது ஆணையாக சத்தியம் செய்ய  மறுக்கும் மர்மம் என்னவென்று வெளிநாடு சகோதரர்கள் தப்பாக நினைக்க மாட்டார்களா?
ஆதாரத்தை சும்மாவெல்லாம் வெளியிட முடியாது .நான் வெளியிடும் ஆதாரத்தை நீ பொய்யானது என்று நிருபித்தால் நீயோ ,உனது எடுபிடி ஜமாஅத் நிர்வாகிகளோ என்ன சொன்னார்களோ அதற்கு நான் கட்டுபடுகிறேன் .அது உண்மையானது என்றால் அதில் சம்பந்தப்பட்ட நிர்வாகிகள் பெருநாள் குத்பாவுக்கு பிறகு பகிரங்கமாக தவறை ஒப்புக் கொள்வார்களா?ப.நூ.பதிலை வெளிநாடு சகோதரர்கள் இரண்டு நாளாக எதிர்பாத்தவண்ணம் உள்ளனர் .
ப.நூசே ,ஆதாரத்தை வெளியிட உனது பதிலுக்காக நானும் காத்திருக்கிறேன்.

திங்கள், 6 ஆகஸ்ட், 2012

ஜும்மாவில் ஒப்புக் கொள்ளத்தயாரா?


நான் பதில் எழுத அவசியம் இல்லாத அளவுக்கு கிட்டத்தட்ட உண்மையை மறைமுகமாக ஒப்புக் கொள்ளும் அளவுக்கு உளறிக் கொட்டியதை பன்னி நூசில் காணலாம்.உனது உளறலில் இருந்தே உன்னை பலர் புரிந்து கொள்வார்கள்.நான் என்ன கேட்டிருக்கிறேன் ,நீ என்ன உளறியுல்லாய் என்பதை அனைவரும் அறிவார்.நீ இப்படி உளறாமல் இருந்தாலே உன் மீது ஒரு சிலருக்காவது அறை குறை நம்பிக்கை இருந்திருக்கும் 
///இந்த பொய்யன் ஏதோ பேப்பரில் வெட்டி,ஒட்டி, போர்ஜரி செய்ததாக கிறுக்கி  உள்ளான். அல்லாஹ் மீது ஆணையாக எதுவும்  வெட்டி ஒட்டப்படவில்ல////
இவனே அல்லாஹ்வின் மீது ஆணையாக நான் வெட்டி ஒட்டவில்லை என்று சொல்லிவிட்டு இதை போல மற்றவிசயங்களுக்கு அல்லாஹ்வின் மீது ஆணையாக என்று சொல்ல மாட்டானாம் .அப்படி கேட்க எனக்கு தகுதி இல்லையாம் .அப்படி ஒரு தகுதியை அல்லாஹ்வும் அவனது தூதர் நபி [ஸல்] அவர்களும் சொல்லாத நிலையில் தகுதி பற்றி வரையறுக்க இந்த சாக்கடை பன்னிக்கு என்ன தகுதி இருக்கிறது?
அவன் மேலே கருப்பு குண்டு எழுத்தில் எழுதியுள்ளதை பாருங்கள் அதிலேயே அவனை பொய்யன் என்பதை அடையாளம் கண்டு கொள்ளலாம்.பேப்பரில் வெட்டி ஓட்டி போர்ஜரி செய்துள்ளதாக கிறுக்கி உள்ளேனாம் .அப்புறம் பாருங்கள் அல்லாஹ்வின் மீது ஆணையாக எதுவும் வெட்டி ஓட்டப்படவில்லையாம் .போர்ஜரி என்பதை லாவகமாக விட்டுவிட்டான்.அல்லாஹ்வின் மீது ஆணையாக போர்ஜரியும் செய்யப்படவில்லை என்று சொல்லியிருக்க வேண்டுமா?இல்லையா?

பன்னி நூசுசொன்னது ; நீ ஆதாரத்தை வெளியிடு. ஒவ்வொன்றுக்கும்  பதில் சொல்றேன். 
நமது பதில் ;12 /09 /2012 அன்று நடந்த பொதுக் குழுவில் உண்மையில் ஒரு தீர்மானம் மட்டும் நிறைவேற்றப்பட்டதை மறைத்து ஐந்து தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டதாக வங்கியில் கொடுத்தது உண்மையா இல்லையா? நான் அந்த ஆதாரத்தை இப்போது வெளியிட்டால் நாங்கள் பள்ளிவாசல் விசயத்தில் கள்ளத்தனமாக நடந்தது உண்மைதான்  என்று நீ உட்பட சம்பந்தப்பட்ட நிர்வாகிகள் பகிரங்கமாக ஜும்மாவில்   ஒப்புக் கொள்ளத்தயாரா?இன்சா அல்லாஹ் இப்போதைக்கு இது போதும் 
பன்னி நூசுசொன்னது ; நீ ஆதாரத்தை வெளியிடு. ஒவ்வொன்றுக்கும்  பதில் சொல்றேன். 
நமது பதில் ;"வரதட்சணை ஒழிப்பில் முதல்படியாக வரதட்சணை வாங்கும் மாப்பிள்ளைமார்களுக்கு பள்ளிவாசலில் வைத்து திருமணம் நடத்த அனுமதியை மறுப்பது என்று பொது குழு தீர்மானித்தது '
இப்படி ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக யாருக்காவது தெரியுமா?சரி ரகசியமாக ஒருவேளை நிறைவேற்றினாலும் அப்படி வரதட்சணை வாங்கிய எந்த மாப்பிள்ளைக்கு பள்ளிவாசலில்  வைத்து நிக்காஹ் நடத்த அனுமதி மறுத்ததை கூறுவார்களா?
  நான்  மேலே என்ன கேட்டுள்ளேன் .அவன் அதற்கு கீழே என்ன பதில் சொல்லியிருக்கிறான் என்று பாருங்கள் 

சைக்கோவிற்கு (வட்டிமூசா)  பதில்     

            சகோதரர்களே !   சைக்கோ பள்ளிவாசல் புனரமைப்பு நிர்வாகம் சில அவதூறு சொல்லி இருக்கிறான். இவன்  தன்  பிராடுதனத்தை  மறைக்கவே அவ்வப்போது தன் சாக்கடை புத்தி மூலம்  சிலபொய்களை சொல்லி  மற்றவர்கள்  மீது  அபாண்டம் பரப்பி  தன் மீதான  குற்றத்தை  நீர்த்து  போகசெய்வான்.ஆனால் இப்போது   மக்கள் இவனை நன்றாக புரிந்து, புறக்கணித்து விட்டனர் .நான் அல்லாஹ்மீது ஆணையாக என்று சொன்னது வெளிநாடுவாழ் சகோதரர்கள் இவனை மீண்டும்நம்பிரகூடாது என்றுதான் சொன்னேன்.    இப்பவும் சொல்கிறேன் அவனை வெளியிட சொல்லுங்கள். நான் பதில் சொல்கிறேன் என்று கூறி விட்டேன். முன்பு கள்ளஒட்டு நிர்வாகம் என்றான், கக்கூஸ் வழி நிர்வாகம் என்றான்  இப்போ இதை  சொல்கிறான். ஆனால் இதுவரை அவன் கூறிய எந்த (அவதூறையும்) பொய்யையும் நிரூபித்ததில்லை. ஆதாரமும் காட்டியதில்லை. இனி இந்த பிராடை (வட்டிமூசா என்று ஒத்துகொண்டான்) ஆதாரத்தை வெளியிட சொல்லுங்கள்.  நான் பதில் சொல்கிறேன்.
            இவன் களவாண்டி, வட்டிதுட்டு,சீட்டுகாசு, மார்வாடியிடம்  ஆட்டையை  போட்டது என்று   நிறைய வைத்து உள்ளான். ஆனால் நாம் அப்படி  அல்ல.  உழைத்தால்  தான் துட்டு. இவன்(பொய்யன்)  வெட்டி  கூச்சலுக்கு  தினமும்  பதில்  எழுதமுடியாது . ஆதாரம் காட்ட சொல்லுங்கள். அவன் ரியாத் அவுட் நபரிடம்  சவால் விட்டுவிட்டு  ஓடியது போல், நான்  ஓட மாட்டேன்.
                                             .......நிஜாம்.   ////
எனது கேள்விகளுக்கும் இவனது பதில்களுக்கும் கொஞ்சமாவது பொருத்தம் உள்ளதா?வெளிநாடு வாழ் சகோதரர்களை இன்னும் ஒன்றும் தெரியாதவர்கள் என்று நினைத்துக் கொண்டு இருக்கிறானா ?
அவன் வெளிநாடு சகோதர்களுக்காக அல்லாஹ்வின் மீது ஆணையாக கூறினானாம் . சரி  வைத்துக் கொள்வோம் .போர்ஜரி பண்ணவில்லை என்பதற்கும் வெளிநாடு சகோதரர்களுக்காக அல்லாவின் மீது ஆணையாக போர்ஜரி பண்ணவில்லை என்று கூற வேண்டியது தானே .12/09/2010 அன்று நடந்த பொதுக் குழுவில் கக்கூஸ்  மட்டுமே தீர்மானம் என்றும் புனரமைப்பு கமிட்டி பணம் பற்றி அப்துல்பாரி அவர்கள் இப்போது ஊரில் இல்லாததால் அவர் வந்த சமயம் அதுபற்றி பேசிக்கொள்ளலாம் என்று முடிவு எடுத்ததும் அனைவரும் அறிவர் .அவ்வாறிருக்க புனரமைப்பு நிர்வாகத்தை புது நிர்வாகம் ஏற்றுக் கொள்வது உட்பட ஐந்து தீர்மானங்கள் நிறைவேற்றியதாக வங்கியில் கொடுத்தது உண்மையா இல்லையா  என்றால் ஆம் அல்லது இல்லை என்று மட்டுமே பதில் சொல்லவேண்டும் .அவன் இல்லை என்று சொன்னால் நான் ஆதாரத்தை வெளியிடுகிறேன் .அது உண்மையான ஆதாரம் என்றால் அதில் சம்பந்தப்பட்டவர்கள் ஜும்மாவில் கள்ளத்தனத்தை ஒப்புக் கொள்ள வேண்டும் எனது ஆதாரத்தை பொய் என்று நிருபித்தால் இவர்கள் என்ன சொன்னார்களோ அதற்கு நான் கட்டுபடுகிறேன் ஆனால் இவன் அதற்கு மட்டும் பதில் சொல்லாமல் வேறு தனிநபர் பிரச்னை பற்றி இங்கு உளறுகிறான் .அதற்கு இடிமாங்கரையில் பதில் அளித்துள்ளேன் .யார் ஓடியுள்ளார்கள் என்பதை அங்கு பார்த்தால் தெரியும் .

         

ஞாயிறு, 5 ஆகஸ்ட், 2012

அல்லாவின் மீது ஆணையாக கூறத்தயாரா?

////இந்த பொய்யன் ஏதோ பேப்பரில் வெட்டி,ஒட்டி, போர்ஜரி செய்ததாக கிறுக்கி  உள்ளான். அல்லாஹ் மீது ஆணையாக எதுவும்  வெட்டி ஒட்டப்படவில்ல////
கடந்த இரு வருட காலமாக எத்தனையோ பிரச்னைகளுக்கு அல்லாவின் மீது ஆணையாக சத்தியமிட்டு கூறத் தயாரா? என்று கேட்டுள்ளேன் .அப்போது பலமுறைகள் மவுனம் காத்தும் உனக்கு அதற்கு தகுதி இருக்கிறதா என்றுமே கேட்டு வந்துள்ள பன்னி நூசு இப்போது முதல்முறையாக அல்லாஹ்வின் மீத ஆணையாக என்று கூறியுள்ளதை வரவேற்போம் .இதற்கு முன்பு இவன் அல்லாஹ்வின் மீது ஆணையாக நான் அழைத்தபோதெல்லாம் மவுனம் காட்டியதிலிருந்து அதெல்லாம் அதாவது நான் சொன்னதெல்லாம் உண்மை என்பதை மறைமுகமாக ஒப்புக் கொண்டான் என்பதை இப்போது விளங்கிக் கொள்ளலாம்.
///12 /09 /2010 அன்று  நடந்த பொதுக்குழுவில் கக்கூஸ் தீர்மானம் மட்டுமே என்று ஊரறிய  சொல்லிவிட்டு ஐந்து தீர்மானங்கள் நிறைவேற்றியதாக இடை செருகல் செய்தது யார்?
பொதுக் குழுவில் கலந்து கொண்டவர்கள் என்று கையெழுத்து வாங்கிவிட்டு ஐந்து தீர்மானகள் ஏகமனதாக நிறைவேற்ற ஒப்புதல் அளித்தது போல் பேங்கில் காட்டியது அயோக்கியத்தனமா இல்லையா?///
மேலே நான் கேட்டது பற்றி பதில் சொல்லவில்லையே ஏன்?
இப்போது நான் கேட்கிறேன் ,12 /09 /2010 அன்று நடந்த பொதுக்குழுவில் வங்கியில் கொடுத்தவாறு ஐந்து தீர்மானங்கள் நிறைவேற்றியது உண்மைதான் என்று அல்லாஹ்வின் மீது ஆணையாக கூறத் தயாரா?
அடுத்து 17 /07 /2011 அன்று  பொதுகுழு கூட்டம் நடந்தது என்று அல்லாஹ்வின்  மீது ஆணையாக கூறத் தயாரா?
அன்று இன்னாறேல்லாம்  புனரமைப்பு கமிட்டி உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டது உண்மை என்று அல்லாஹ்வின் மீது ஆணையாக கூறத் தயாரா?
அன்று வங்கி வரவு செலவு பண்ண இரண்டு நபர்கள் தேர்தெடுக்கப்பட்டது பொதுக்குழுவில் கூடிய அனைவர்களுக்கும் தெரியும் என்று அல்லாவின் மீது ஆணையாக கூறத்தயாரா?
17 /07 /2011 அன்று பள்ளிவாசல் விரிவாக்கம் பண்ண வக்ப் போர்டில் அனுமதி கேட்க உள்ளோம் அதற்காக அனைவரும் ஒப்புதல் அளித்து வெளி பள்ளியியில் வைக்கப்பட்டுள்ள புத்தகத்தில் கையெழுத்திட்டு செல்லுமாறு கூறியது உண்மையா இல்லையா ?அல்லாஹ்வின் மீது ஆணையாக இதை மறுக்க தயாரா?
அப்புறம் ஹெச்.எஸ் பார்ட்டி என்றால் உனக்கு யார் என்று தெரியாதது உண்மையா?உனக்கு மெயிலில் அது யார் என்று உனக்கு அதன் full form அனுப்பவில்லையா ?.சமிபத்தில் கூட H.S.என்பதை வேறொரு நபரிடம் அது நீங்கள்தான் உனது வகையறாக்கள் தூண்டிவிட முயன்ற போது அது நண்ணி இக்பால் என்று நான் எழுதியதை அறியாதது போல வேசமிடும் அயோக்கியனே ,இனியும் உனது கிரிமினல் கதை மக்களிடம் எடுபட வாய்ப்பில்லை.
பள்ளிவாசல் வயலில் நூறு ரூபாய் மனை வாடகையில் அவர்கள் சொந்த செலவில் வீடு கட்டிக் கொள்ள வேண்டும் என்று கொண்டுவரப்பட்ட தீர்மானத்திற்கும்  எனக்கும் எந்த பங்கும் இல்லை .அன்று ஜும்மாவில் பலரும் அதை அமோதித்தது போல நானும் ஆமோதித்தேன் .பைத்துல்மால் சொத்தை பாவப்பட்ட மக்களுக்கு நபி ஸல் அவர்கள் தாரளமாக வழங்கியுள்ளார்கள் .மக்களுக்கு பயன்படாத பைத்துல்மால் எதற்கு ?யாருக்கு?
நமதூரில்பல எளிய மக்கள் வீடு இல்லாமல் படும் அவஸ்தைகள் சிரமங்கள் பற்றி நல்லவர்களுக்கு தெரியும் .எத்தனையோ ஊர்களில் பள்ளிவாசல் இடங்களை இது போன்று எளிய மக்கள் குடியிருக்க மனை வாடகைக்கு கொடுத்துள்ளார்கள்.அதன்படியே நமதூரிலும் செயல்படுத்தலாம் என்று பஞ்ச.தலைவர் உட்பட சிலர் கூறினார்கள்.இந்த திட்டத்தை பழைய பஞ்ச.தலைவர் உட்பட சிலர் எதிர்த்தனர்.அதனால் அவர் ஒரு மாற்று திட்டம் கொண்டு வந்தார்.
வக்ப் சொத்தை விற்பனை செய்ய முடியாது என்பது மாங்க மடையனும் அறிவான் .இருப்பினும் சென்ட் ஒரு லட்ச ரூபாய் என்ற கணக்கில் ஒரு நபருக்கு மூன்று சென்ட் அவர்கள் உரிமை பாத்தியம் பெரும் வகையில் சில பள்ளிவாசல் களில் எழுதி கொடுக்கிறார்கள் அது போல எழுதி கொடுக்கலாம் என்று முன்னால்பஞ்ச.தலைவர் தான் சொன்னார் .அந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது .ஆனால் இந்த திட்டத்தின்படி யாரும் வாங்க முன்வரவில்லை 
ஆக பள்ளிவாசல் இடம் இந்த திட்டத்தின்படி யாரும் மனையைப் பெற முன்வரவில்லை.
இரண்டுமே நல்ல திட்டங்களே ஆனால் அது செயல்படாமல் மக்களுக்கும் பயன்பாடு இல்லாமல் பள்ளிவாசலுக்கும் பயன்பாடு இல்லாமல் இன்று விலை மதிப்புள்ள இடம் தரிசாக உள்ளது.
இந்த பிரச்சனையில் உனக்கு எந்த பங்கும் இல்லை.எனக்கும் எந்த பங்கும் இல்லை மற்றபடி நல்லதும் நடக்கவில்லை கெட்டதும் நடக்கவில்லை.பிறகு இந்தவிசயத்தை இப்போது பேசுவானேன் .திசைதிருப்பும் நோக்கம் தான் காரணமாக இருக்க வேண்டும் .
 கையெழுத்து போர்ஜரி என்பதை அடுத்து வெளியிடுகிறேன் .நண்பர்களே நீங்களே பார்த்து எளிதாக முடிவு  பண்ணலாம்  

சனி, 4 ஆகஸ்ட், 2012

கொட்டைபாக்குக்கு விலை கேட்டால் பட்டு கோட்டைக்கு வழி காட்டினானாம்

கொட்டைபாக்குக்கு விலை கேட்டால் பட்டு கோட்டைக்கு வழி காட்டினானாம் அதுவும் பட்டுகோட்டைக்காரனுக்கு
நான் கேட்டிருப்பது புனிதமான பள்ளிவாசலை கட்டுவதற்கு கள்ள தீர்மானங்கள் நிறைவேற்றவேண்டிய அவசியம் என்ன?
12 /09 /2010 அன்று  நடந்த பொதுக்குழுவில் கக்கூஸ் தீர்மானம் மட்டுமே என்று ஊரறிய  சொல்லிவிட்டு ஐந்து தீர்மானங்கள் நிறைவேற்றியதாக இடை செருகல் செய்தது யார்?
பொதுக் குழுவில் கலந்து கொண்டவர்கள் என்று கையெழுத்து வாங்கிவிட்டு ஐந்து தீர்மானகள் ஏகமனதாக நிறைவேற்ற ஒப்புதல் அளித்தது போல் பேங்கில் காட்டியது அயோக்கியத்தனமா இல்லையா?
பள்ளிவாசல் கட்ட வக்பில் அனுமதி என்று சொல்லி ஜும்மாவில் அறிவித்து அனைவரையும் கையெழுத்திட வைத்து விட்டு பின்னர் வைஸ் உதுமான் தலைமையில் பொதுக்குழு 17 /11 /2011 நடந்ததாகவும் அதில் புனரமைப்பு கமிட்டி மற்றும் பான்க் வரவு செலவு  பண்ண இன்னாறேல்லாம் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள் என்று தீர்மானம் நிறைவேற்றியதாக  பாங்குக்கு ஆவணங்கள் அளிக்கப்பட்டுள்ளதே  17 /11 /2011 அன்று பொதுக்குழு நடந்ததா?  ஜும்மா தொழ வந்தவர்களிடம் பொய்யான காரணத்தை சொல்லி கையெழுத்து வாங்கிவிட்டு பொதுக்குழு நடந்ததாக வும் அதில் இன்ன தீர்மானங்கள் நிறைவேற்றியதாகவும் போலியான ஆவணங்கள் தயார் செய்து வங்கியில் கொடுத்தது கசடற்ற கயமைத்தனம் இல்லையா?
பொதுக்குழுவில் கலந்துகொண்டவர்கள் என்ற இடத்தில் கமிட்டி உறுப்பினர்கள்  கையெழுத்துகளுக்கும் அதே நாளில் ஐந்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதாக வெட்டி ஒட்டிஉள்ள பேப்பரில் கோஸ் பீர்முஹம்மது மற்றும் பொருளாளர் என்ற இடத்தில் கையெழுத்திட்டுள்ள அப்துல் கனி மற்றும் கமிட்டி உறுப்பினர்கள் சிலர் கையெழுத்துகளுக்கும் உள்ள வித்தியாசங்களையும் பார்த்தால் அந்த கையெழுத்துக்கள் போர்ஜரி என்பதை தெளிவாக அறிய  முடியும்.கமிட்டி உறுப்பினர்களே உசார் .இறையருளால் பெருநாள் அன்று ஆதாரங்கள் வெளியிடப்படும் .

புனரமைப்பு கமிட்டி பைலாவின் படி பொதுக்குழுவை கூட்டி தீர்மானங்கள் நிறைவேற்றி புனரமைப்பு கமிட்டி நிர்வாக பொறுப்பை மாற்றிட  சொன்னால் அதை திருட்டுத்தனமாக சூழ்ச்சியாக செய்தது ஏன்? சூழ்ச்சிக்காரனுக்கேல்லாம் சூழ்ச்சிக்காரன் ஒருவன் இருக்கிறான் என்பதை மறக்கடித்த சைத்தான் அல்லவா அவன் .
இதற்கு பதில் சொல்லாமல் இவன் எம்ஜியார் படத்தில் பெண்ணுக்கு ஆபத்து வரும்பொழுது மலையிலிருந்து குதித்து வந்து எம்ஜியார் காப்பாற்றுவது போல ஆறாம்பண்ணை பள்ளிவாசலுக்கு ஆபத்து வந்தது போலவும் இவன் சென்னையிலிருந்து குதித்து ஸ்கூலில் கள்ளத்தனமாக கணக்கு கேட்டது முதல் பல கள்ளத்தனங்களை செய்து பள்ளிவாசலை காப்பாற்றியதாக வம்பலக்கிறான் .அவனது நோக்கம் திசை திருப்பவே .அவன் சொல்லியுள்ளது அத்தனையும் பொய் கலந்துள்ளது என்பதும் அதில் எனக்கு எவ்வித பங்கும் இல்லை என்பதையும் நடுநிலையாளர்கள் அறிவார்கள்.பள்ளிவாசல் இடத்தில் மாதம் நூறு ரூபாய்க்கு வாடகை திட்டட்டத்தில்  ஐந்து இடங்களை எழுதியது இவன் அடிவருடும் ஹெச்.எஸ் பார்ட்டிதான் என்பதை இந்த விசயங்களை இவனுக்கு சொல்லி கொடுத்தவரிடம் கேட்டு தெரிந்து கொள்ளட்டும். நான் எனக்கோ எனது உறவினர்களுக்கோ என்று ஒரு இடத்தையும் கேட்கவில்லை .
கெட்டிக்காரனின் பொய்யும் புரட்டும் எத்தனை நாளைக்கு?
உனது போலியான ஆதாரங்களை ஏற்றுக் கொள்ளாமல்
In the meantime as a precautionary measure ,we have blocked the operation of the SB a/c15961 till the dispute is solved.
வங்கி அதிகாரி மேற்கண்டவாறு நடவடிக்கை எடுத்துள்ளார்    

திங்கள், 23 ஜூலை, 2012

கடையநல்லூர் விவாதம்

கடைய நல்லூரை    சேர்ந்த கலீலுர் ரஹ்மான் என்பவர் கம்யுனிஸ்ட் ஆக மாறி செங்கொடி என்ற தனது இணையதளத்தில் இஸ்லாத்திற்கு எதிராக எழுதி வருகிறார் .அதிலும் எனக்கு தெரிந்தவரையில் பதில் எழுதி உள்ளேன் .மேலும் ஆணாதிக்கமும் இஸ்லாமும் பற்றி விவாதமும் நடத்தி உள்ளேன் .இப்போது அவர் நல்லூர் முழக்கம் என்ற அவரது இணையதளத்தில் கடையநல்லூரில் நடந்த ஒரு சம்பவம் பற்றி முஸ்லிம்களுக்கு விவாத அழைப்பு விடுத்து இருந்தார் .அதை ஏற்று நான் அவருடன் பண்ணிய விவாதம் கீழ்க்காணும் இணைப்பில் உள்ளது.எனைப்பற்றி அவதூறுகள் சில மானங்கெட்டதுகள் இடையில் எழுப்பியதால் அவர்களுக்கு பதில் அளித்து வருகையில்  தொடரமுடியாமல் போயிற்று .இன்சா அல்லாஹ் இனி தொடர்வோம் .
கீழே உள்ள லிங்கில் க்ளிக் செய்க
http://nallurmuzhakkam.wordpress.com/senkodi-ibrahim/#comment-594

வெள்ளி, 20 ஜூலை, 2012

இதுக்கு பதில் சொல்லாமல் திசை திருப்புறான் உசார்


கக்கூஸ் வழியாக நிர்வாகத்திகு வந்தவர்கள்
அன்பர்களே உசார்
உங்களிடம் பள்ளிவாசல் விசயமாக யாரும் கையெழுத்து கேட்டால் தீர விசாரித்து இன்ன காரியத்திற்காக என்று எழுதி கையெழுத்து போடுங்கள் .ஏனெனில் பள்ளிவாசலில் ஒரு நில மோசடி கும்பல் புகுந்துள்ளது .கையெழுத்து பெறுவதற்கு ஒன்றை சொல்லுவார்கள் .கையெழுத்துகள் வாங்கியதும் வேறொன்றை சொல்லுவார்கள் .இவர்கள் கூட்டிய ஒரே ஒரு பொதுக் குழுவில் ஒரே ஒரு தீர்மானம் தான் என்று பகிரங்கமாக சொன்னார்கள் .அந்த கூட்டத்தில் நடுநிலையாக செயல்பட்டு வழிநடத்திய மகபூப்அலியும் மீண்டும் மீண்டும் கேட்டார் ஒருதீர்மானம்தான ,அதுவும் கக்கூஸ் தீர்மானம் மட்டுமே என்றார்கள்.கக்கூஸ் வழியாக நிர்வாகத்திற்கு வந்தவர்கள் கக்கூஸ் தீர்மானம் மட்டும் நிறைவேற்றுவதாக கூறிவிட்டு வக்ப்  போர்டிற்கு புனரமைப்பு கமிட்டி மாற்ற தீர்மானம் நிறைவேற்றுதல் உட்பட நான்கு தீர்மானங்கள் நிறைவேற்றியுள்ளதாக வக்ப் போர்டிற்கு அனுப்பியுள்ளார்கள் .
அதன் பிறகு பள்ளிவாசல் விரிவாக்கம் பண்ண அனுமதி கேட்டு தீர்மானம் என்று வெள்ளி ஜும்மா வில் பச்சை பொய்யை சொல்லி கையெழுத்து வாங்கி இன்னாறேல்லாம் புனரமைப்பு கமிட்டி மெம்பர்கள் ஆக தேர்ந்தெடுக்கப்பட்டார்கள் என்றும் முகைதின் பள்ளிவாசல் பில்டிங் பன்ட் அக்கவுண்ட்க்கு சைன் அத்தாரிட்டி யாக இன்னாரை தேர்ந்தெடுத்ததாக தீர்மானம் நிறைவேற்றியுள்ளார்கள் பொய்யர்கள்.பள்ளிவாசல் கமிட்டி உறுப்பினர்களுக்கே இந்த ரகசியம் தெரியாது .அல்லாவுடைய பள்ளியை கள்ளத்னமாக  தீர்மானம் நிறைவேற்றி கட்ட வேண்டும் என்று மங்காணி மத்ஹபில் கூட இல்லை. இவர்கள் தொழ வந்தாலோ ,தொழுதாலோ அல்லவா இறை நம்பிக்கை இருக்கும் .அயோக்கியர்களின் புகலிடம் அரசியல் என்பார்கள் .அரசியல் ஒரு சாக்கடை என்று சொல்லுவார்கள் அந்த சாக்கடைகள் பள்ளிவாசலுக்கு நுழைந்தால் என்னவாகும் ?கள்ளதீர்மானங்கள் அமலாகும் .

செய்யும்பாவங்களுக்கு மன்னிப்பு கேட்க வரும் பள்ளிவாசலிலே பாவம் செய்வது அயோக்கியர்களுக்கு கைவந்த கலை .இவர்கள் தான் அலைவதற்கு லாயக்கு என்று கயவர்களிடம் பள்ளிவாசல் காரியங்களை கொடுத்தால் ,அப்படிப்பட்ட பள்ளிவாசலுக்கே தொழ வர இயலாதசோம்பேறிகளிடம் பொறுப்புகளை ஏன் ஒப்படைக்க வேண்டும் ? உங்கள் வீட்டு கட்டுமானத்தை இவர்களிடம் ஒப்படைப்பீர்களா? இளைஞர்களே இவர்களது மயக்கும் சொற்களில் மயங்காது உண்மை அறிந்து செயல்படுங்கள்.மார்க்கத்தில் எந்த கொள்கை பிடிப்பும் இல்லாத கயவர்கள் பள்ளிவாசல் கட்டுவதற்கு ஓடோடி அலைவது ஏனோ?கள்ள தீர்மானங்கள் நிறைவேற்றி பள்ளிவாசல் கட்ட முனைப்பு காட்டுவது ஏனோ?

புதன், 18 ஜூலை, 2012

நேர்மையுடன் செயல்பட்ட தவ்ஹித்ஜமாத்

உ.வி பா.நெல்லை மாவட்ட தவ்ஹித்ஜமாத்தில் என்னைப்பற்றி புகார் செய்து விவகாரம் நடந்த வேளையில் என்னைப்பற்றி அவதூறு கூறுகையில் ஆத்திரமுற்று நான் கடும் சொற்களை பயன்படுத்திய சமயம் நெல்லை மாவட்ட துணை செயலாளர் என்னிடம் கடும் கண்டனம் தெரிவித்தார்.அதன் பின்னர் வசனத்தை ஞாபக படுத்தி அவரை சமாதானம் அடைய செய்தேன்.இருப்பினும் தவ்ஹித் ஜமாஅத்காரனாக நான் இருந்தும் ஒரு தவறான சொல்லையே அனுமதிக்காத நிலையில் என்னுடைய செயல்பாட்டில் மாவட்ட நிர்வாகம் குற்றம் கண்டிருந்தால் சும்மா விடுவார்களா?


ஞாயிறு, 15 ஜூலை, 2012

கக்கூஸ் வழியாக நிர்வாகத்திற்கு வந்தவர்கள்

அன்பர்களே உசார்
உங்களிடம் பள்ளிவாசல் விசயமாக யாரும் கையெழுத்து கேட்டால் தீர விசாரித்து இன்ன காரியத்திற்காக என்று எழுதி கையெழுத்து போடுங்கள் .ஏனெனில் பள்ளிவாசலில் ஒரு நில மோசடி கும்பல் புகுந்துள்ளது .கையெழுத்து பெறுவதற்கு ஒன்றை சொல்லுவார்கள் .கையெழுத்துகள் வாங்கியதும் வேறொன்றை சொல்லுவார்கள் .இவர்கள் கூட்டிய ஒரே ஒரு பொதுக் குழுவில் ஒரே ஒரு தீர்மானம் தான் என்று பகிரங்கமகா சொன்னார்கள் .அந்த கூட்டத்தில் நடுநிலையாக செயல்பட்டு வழிநடத்திய மகபூப்அலியும் மீண்டும் மீண்டும் கேட்டார் ஒருதீர்மானம்தான ,அதுவும் கக்கூஸ் தீர்மானம் மட்டுமே என்றார்கள்.கக்கூஸ் வழியாக நிர்வாகத்திற்கு வந்தவர்கள் கக்கூஸ் தீர்மானம் மட்டும் நிறைவேற்றுவதாக கூறிவிட்டு வக்ப்  போர்டிற்கு புனரமைப்பு கமிட்டி மாற்ற தீர்மானம் நிறைவேற்றுதல் உட்பட நான்கு தீர்மானங்கள் நிறைவேற்றியுள்ளதாக வக்ப் போர்டிற்கு அனுப்பியுள்ளார்கள் .அதன் பிறகு பள்ளிவாசல் விரிவாக்கம் பண்ண அனுமதி கேட்டு தீர்மானம் என்று வெள்ளி ஜும்மா வில் பச்சை பொய்யை சொல்லி கையெழுத்து வாங்கி இன்னாறேல்லாம் புனரமைப்பு கமிட்டி மெம்பர்கள் ஆக தேர்ந்தெடுக்கப்பட்டார்கள் என்றும் சைன் அத்தாரிட்டி இன்னாரை தேர்ந்தெடுத்ததாக தீர்மானம் நிறைவேற்றியுள்ளார்கள் பொய்யர்கள்.பள்ளிவாசல் கமிட்டி உறுப்பினர்களுக்கே இந்த ரகசியம் தெரியாது .அல்லாவுடைய பள்ளியை கள்ளத்னமாக  தீர்மானம் நிறைவேற்றி கட்ட வேண்டும் என்று மங்காணி மத்ஹபில் கூட இல்லை. இவர்கள் தொழ வந்தாலோ ,தொழுதாலோ அல்லவா இறை நம்பிக்கை இருக்கும் .அயோக்கியர்களின் புகலிடம் அரசியல் என்பார்கள் .அரசியல் ஒரு சாக்கடை என்று சொல்லுவார்கள் அந்த சாக்கடைகள் பள்ளிவாசலுக்கு நுழைந்தால் என்னவாகும் ?கள்ளதீர்மானங்கள் அமலாகும் .

செய்யும்பாவங்களுக்கு மன்னிப்பு கேட்க வரும் பள்ளிவாசலிலே பாவம் செய்வது அயோக்கியர்களுக்கு கைவந்த கலை .இவர்கள் தான் அலைவதற்கு லாயக்கு என்று கயவர்களிடம் பள்ளிவாசல் காரியங்களை கொடுத்தால் ,அப்படிப்பட்ட பள்ளிவாசலுக்கே தொழ வர இயலாதசோம்பேறிகளிடம் பொறுப்புகளை ஏன் ஒப்படைக்க வேண்டும் ? உங்கள் வீட்டு கட்டுமானத்தை இவர்களிடம் ஒப்படைப்பீர்களா? இளைஞர்களே இவர்களது மயக்கும் சொற்களில் மயங்காது உண்மை அறிந்து செயல்படுங்கள்.மார்க்கத்தில் எந்த கொள்கை பிடிப்பும் இல்லாத கயவர்கள் பள்ளிவாசல் கட்டுவதற்கு ஓடோடி அலைவது ஏனோ?கள்ள தீர்மானங்கள் நிறைவேற்றி பள்ளிவாசல் கட்ட முனைப்பு காட்டுவது ஏனோ?

வியாழன், 5 ஜூலை, 2012

சாக்கடைவாசிகள் வாய் திறக்க வேண்டும் என்பதற்காகவே மவுனம் காத்தோம்

பள்ளிவாசல் கட்டுவது இறைபணியாகும்.நீங்கள் அல்லாவுக்காக ஒரு பள்ளிவாசல் கட்ட உதவினால் ,அல்லாஹ் உங்களுக்காக சொர்க்கத்தில் ஒரு வீடு கட்டிதருவான் என்றநபி[[ஸல்]]கருத்திற்கிணங்க அப்பணியை செய்து வருகிறோம்.அதற்க்காக  பணத்தை திருடி பள்ளிவாசல் கட்டினால் ,இறை சட்டம் கையை வெட்டவே சொல்லும்.
ஆனால் சாக்கடை அரசியல் வாசிகளின் தயவில் கள்ளத்தனமாக வக்ப் தேர்தலில் வெற்றி பெற்று இறைபணி ஆற்ற வேண்டுமா??என்று கேட்கப்பட்ட சமயத்தில் ,கள்ளத்தனமாக வெற்றி பெற்றோமா?? என்று ஆதங்கப்பட்ட இளைஞர்களே!அதற்க்கான ஆதாரங்களை பொதுக் குழுவை கூட்டுங்கள் தருகிறோம் என்றால் வெற்றி பெற்றவர்களுக்கு பொதுக் குழுவை கூட்ட பயப்பட்ட வேண்டிய அவசியம் என்ன?
இப்பொழுது இறையருளால் அவர்களது கள்ளத்தனம கையும் களவுமாக சிக்கியுள்ளது .விரிவாக விநியோகிப்போம்
மேலும் அவர்கள் கூட்டிய ஒரு பொதுக் குழுவிலும் கள்ளத்தனமாக அரசியல் சாக்கடைகளைவிட கேவலமாக நடந்து கொண்ட சாக்கடைவாசிகளைபற்றி விரிவாக எழுதுவோம் .துண்டு பிரசுரம் அடித்து ஊர் முழுவதும் விநியோகிக்கப்படும்.
 கடனில் மூழ்கிய ஒருவரது  விவகாரம் பற்றி பள்ளி நிர்வாகி என்ற நிலையில் கிடைத்த வாய்ப்பில்  அந்த விவகாரம் பற்றி பேசி விற்ற வீட்டில் கடனையே அடைக்கமுடியாத நிலையில் தனக்குரிய கமிசனை பறித்துக் கொண்ட கயவர்கள் அதாவது எரிகிற வீட்டில் வீட்டுக்காரன் அழுது கொண்டிருக்க வேடிக்கை பார்க்க வந்தவன் பிடுங்கித் தின்ன கதை போல நடந்து கொண்ட கயவர்கள் எல்லாம் பள்ளிவாசலின் நிர்வாகிகள் ஆகிவிட்டால் , கள்ள மசூரா என்ன கள்ள தீர்மானங்கள் என்ன ,கள்ளர்களின் கூடாரமாக பள்ளிவாசலை ஆக்கிவிடுவார்கள்..
பள்ளிவளவுவாசல் வழியாக வந்தவன் ஜமாஅத் வேட்பாளராக தேர்ந்தெடுக்கப் பட்டு ,போட்டியிட்டு சாராய பாக்கெட் விநியோகம் பண்ணி,கோயிலுக்கும் நன்கொடை அளித்து ,அதை மறுக்க வேண்டும் என்று சுட்டி காட்டிய போதும் ,வெற்றி மப்பில் மவுனியாக இருந்து  ஓட்டு கேட்டு மண்ணை கவ்விய கயவர்கள் எல்லாம் குர்ஆன் வசனம் எழுதும் நயவஞ்சகத்தனத்தை தோலுரித்து காட்டுவோம் இறையருளால் ,

கள்ளத்தனமாக பள்ளிவாசல் கமிட்டியை தேர்ந்தெடுத்து ,குர் ஆன வசனத்திற்கு எதிராக அல்லாவின் சொல்லுக்கு மாற்றமாக அதன் முத்தவல்லியை தேர்ந்தெடுத்தது போல 2010 இலே கள்ள பொதுகுழுவில் புனரமைப்பு  கமிட்டி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு ,இதுவரை ரகசியமாக வைத்து இப்போது புனரமைப்புகமிட்டி தலைவர் அனுமதி கேட்டு எழுதப் போகிறானாம் என்று எழுதும் கள்ளப்பேர்வழியை கவனத்தில் கொள்ளுங்கள்..இதற்கு முன்பு எப்போதாவது புனரமைப்பு கமிட்டி தலைவர் என்று எந்த இடத்திலும் சொல்லாதவன் இப்போது அந்த வார்த்தையை உபயோகிப்பதிளிருந்தே இவர்கள் எத்தனை பெரிய சாக்கடை அரசியல்வாதிகள் என்று இளைஞர்களே உணர்ந்துகொள்ளுங்கள்.இந்த சாராய பாக்கெட் சாக்கடை அரசியல்வாதி எல்லாம் மார்க்கம் பற்றி பேச வந்தால் ,,,,
சைத்தான் இப்படிஎல்லாம மாறுவேடம் போட்டு வருகிறான் பாருங்கள் .

சனி, 23 ஜூன், 2012

புகழின் உச்சிக்கு போனவர் கசத்தில் விழுந்தார்.


பத்தாவது வகுப்பு தேர்வில் மாநிலத்தில் முதலாவதும் ,ப்ளஸ் டூ தேர்வில் மாநிலத்தில் இரண்டாவது ரேங்கும் பெற்ற ஆசா பெனாசிர் என்ற திருநெல்வேலி பேட்டை மாணவி,சென்னையில்  M.B.,B.S முடித்த  அவர்  டெல்லியில் M.D படித்து அங்குள்ள வேறொரு மதத்தை சேர்ந்தவரை காதலித்து சமாதானபுரத்தில்  உள்ள பதிவு அலுவலகத்தில் திருமணம் செய்து கொண்டார்.

வியாழன், 21 ஜூன், 2012

புனரமைப்பு கமிட்டி கூட்டம் நடை பெற உள்ளது.

நமது பள்ளிவாசலின் புனரமைப்பு கமிட்டி இன்சா அல்லாஹ் வரும் 1/07/2012 ஞாயிறு  மாலை அசருக்கு பின்னர் அசராத நேரத்தில் 4.30மணியளவில் அவசர கூட்டம் கூட்டப்பட உள்ளது  .நாங்கள் பள்ளிவாசல் கட்டவே பணம் தந்தோம் என்றும் ,இப்போது அந்த பணத்தில் கல்யாண மண்டபம் கட்டப்பட்டு பள்ளிவாசலுக்கு ஒரு பக்கம் வருமானம் குவிந்தாலும் ஆனால் நாங்கள் என்ன நோக்கத்திற்கு கொடுத்தோமோ அந்த நோக்கம் நிறைவேறவில்லை.மேலும் இப்போது பள்ளிவாசலை நிர்வகிப்போர் வெறும் வருமான நோக்கத்தையே இலக்காக கொடுள்ளனர். வெள்ளிக்கிழமை ஒருவர் சலாம் சொன்னால் உடன் பாரம்பர்யமிக்க பரபரப்புடன் சலாம் சொன்னவரிடம் காரணம் கேட்டு வழக்கை தீர்க்காமல் வலக்கையால் உண்டியல் சில்லறை எண்ணும் சில்லறை நோக்கத்தோடு அதிகாரமிக்க தொழ வராத செயலாளர் செயல்படுகிறார். இன்னொரு நிர்வாகியோ சிர்க்கின் சிகரமாக உள்ளார்.ஆகவே நாங்கள் இந்த பள்ளிவாசலுக்கு வராத பொழுது நாங்கள் கொடுத்த பணத்தை எங்களிடம் பள்ளிவாசல் கட்ட திருப்பித் தர வேண்டும் ,நாங்கள் தனியாக பள்ளிவாசல் கட்டிக் கொள்கிறோம் என்று பள்ளிவாசலுக்கு பணம் கொடுத்த ஒரு கொள்கையினர் புனரமைப்பு கமிட்டிஇடம் கோரிக்கை வைத்துள்ளனர்.ஆனால புனரமைப்பு கமிட்டியினரோ பணத்தை திருப்பித் தரமுடியாது ,மற்றபடி கடனாக தருகிறோம்,அது பற்றி பரிசிலனை செய்ய வரும் ஜூலை 1ந்தேதி கூட்டட்தை கூட்டி முடிவெடுத்து சொல்லுகிறோம் என்று கூறியுள்ளார்கள் .இதன் பொருட்டு வரும் ஜூலை 1ந்தேதி புனரமைப்பு கமிட்டி கூட்டம் நடை பெற உள்ளது.
முக்கிய குறிப்பு .> இந்த புனரமைப்பு கூட்டம் ரகசியமாக கதவடைத்து கள்ள மசூராகவாக நடை பெறாது என்றும் புனரமைப்பு கமிட்டி உறுப்பினர் அல்லாதவர்களும் கலந்து கொள்ளலாம் .ஆனால் கருத்து தெரிவிக்க கூடாது என்றும் கூறப்பட்டுள்ளது.இடம் பின்னர் அறிவிக்கப்படும் .

சனி, 9 ஜூன், 2012

ஓய்ந்துபோன கொடிகட்டை ஒய்யாரமாக தூக்கி பிடிக்கும் அடிகட்டைகள்


வல்லமை மிக்க இறைவனுக்கு புகழனைத்தும் .அவன் மகாத்தானவன்.கடந்த மாதத்தில் ஆராமபன்னையில் நடந்த ஒன்றிரண்டு திருமணங்கள் தவிர மற்ற திருமணங்கள் அனைத்தும் நபி வழியிலும் நபி வழியை நெருங்கும் வகையிலும் நடந்த திருமணங்களே .மிகுந்த வரவேற்ப்புக்கும் இறைவனை பெருமிதம் கொள்ளுவதற்கும் உரிய விசயங்களே .இவர்கள் அனைவரும் தவ்ஹித் ஜமாத்தில் உறுப்பினர்களாக சேர்க்க வேண்டும் என்பது எங்களது நோக்கமல்ல .யார் சொன்னாலும் நபி வழியை பின்பின்பற்ற வேண்டும் என்பதே எங்கள் வேண்டுகோள்.
மணமகன் மாலை அணிந்து வருவது வெட்கத்திற்குரிய செயலாகிவிட்டது .இருபது ஆண்டுகளுக்கு முன்பு மாலை அணிவதை சரி என்று வாதிட்ட ,அதை தாங்கி பிடிக்க மார்க்க அறிஞர்கள் என்னும் மார்க்க முட்டாள்கள் படாதபாடு பட்டனர்.அவர்களால் கூட மாலை அணிவதை எதிர்த்து நிற்க முடியாமல் மாலைக்கும் பாத்திகா ஓதி தங்கள வாலை  ஆட்டி வந்தனர்.ஆனால் இன்று அவர்கள் கண்கள் முன்பே அந்த மாலை தூக்கி வீசப்பட்டுவிட்டது.தங்களது திருமணங்களில் மாலை அணிவது நபி வழிக்கு மாற்றம் என்று தெரிந்து இருந்தும் அதை தவிர்க்க திராணியற்று ,அதை கழுத்திலும் நாவிலும் தாங்கி பிடித்தவர்கள் ,இன்று சாதாரண இளைஞர்களால் ஒழிக்கப் பட்டுள்ளதை அறிந்து வெட்கி தலை குனிய வேண்டும் .யூசுப்நபிக்கும் சுலைகா என்ற பெண்ணுக்கும் திருமணமே நடவாத பொழுது அவர்களைப் போல வாழ்த்துவது யோக்கியமா?என்று கேட்டால் ,இது என்ன முல்லை பெரியாரா? கூடங்குளம் ரசியரா?என்று சினக்கிறது ஒரு மவுலவி சிந்தனை செல்வம்.இவர்கள் எதை எங்கு சிலாய்க்கிறார்களோ அங்குதானே அதற்கு பதில் அளிக்க முடியும்.அதல்லாமல் திருமண குத்பாவில் எதை பற்றி பேச பேச வேண்டுமோ அதைத்தான் பேசியுள்ளோம் ..முல்லை பெரியாறு ஆராம்பண்ணைக்கு  ஒன்றும் தலை வெடிக்கும் விவகாரம் அல்ல.அது எங்கு பேசப்பட வேண்டுமோ அங்கு அதைப் பற்றி பேசுவோம்.சரிவர பஸ் ஓடாமல் இருக்கையில்,அதையே கண்டு கொள்ளாத நாம்  முல்லை பெரியாறு பற்றி ஏன் பேசவேண்டும்? இந்த மவுலவி கூட்டம் இதுவரை எத்தனை பொது பிரச்சனைகளில் தலையிட்டுள்ளது ?இதுவரை எத்தனை பொது பிரச்னைகளில் போராட்டம் பண்ணியுள்ளது? ஆக ஆறாம்பண்ணையில் அனைத்து மக்களும் நபி வழியில் திருமணம் செய்ய நெருங்கி வந்து கொண்டிருக்கிறார்கள்.பாவம் மவ்லவிகள் கூட்டத்திற்கு வேறு வழியில்லாமல் கிடைத்த வாய்ப்பை மனம்போன போக்கில் பயன்படுத்தியுள்ளனர்.
அடுத்து ,கொடிகட்டு .கடந்த சில வருடங்களாக பொய்த்துப் போன கொடி கட்டை மீண்டும் இரு வருடங்களாக சிலர் உயிர்பிக்க முனைந்தனர்,அணையப் போகும் விளக்கைப் போல அது மீண்டும் ஜொலித்தது .இப்போது முற்றிலுமாக அணைந்து விட்டது.அல்லாவை புகழ் வோமாக !அவனிடமே மன்னிப்புக் கோருவோம்.ஒரு காலத்தில் கொடியை உழு செய்து ஏற்றும் நிலை.இன்றோ முஸ்லிம் அல்லாதவரே ஏற்றும் கராமத்துகள்  நிகழ்கின்றன
கொடிகட்டை  ஒய்யாரமாக தூக்கி பிடிக்கும் சில அடிக்கட்டைகள் ,யானை ஊர்வலம் மேளதாளங்கள் கொண்டு வந்து சைத்தானை திருப்திபடுத்தியே ஆக வேண்டும், என்ற முனைப்பில் சென்னையிலிருந்து வசூல் திரட்ட     பொய்ஜிகள் முனைந்தனர். அடிகட்டைகள் இல்லாமல் வசூல் செய்யும் இவர்களிடம் காசு கொடுக்க மறுத்த ஜமாலிய ஜமாஅத் செல்வந்தர்கள் ஒரு தகரடப்பா கச்சேரி படையை அனுப்பி அந்த குழுவின் பாட்டு கேட்டு காஜா பந்தே நவாஸ் உரூசை முடித்துக் கொள்ளுமாறு வேண்ட , அடிகட்டைகள் அதிகம் காசு பார்க்க வழியின்றி போனது பரிதாபம்.இந்த டப்பாக்கள் ஒலிக்கும் முன்னர் அதோடு வந்த ஒரு சைத்தான் சொற்பொழிவு ஆற்றியிருக்கிறது.அந்த சொற்பொழிவில் முஸ்லிம்களின் கடமைகள் ஐந்து அல்ல என்றும் ஆறு கடமைகள் உண்டு என்றும் ஆறாவது கடமை வலிமார்களை பின்பற்றுவது என்றும் நச்சு கக்கியுள்ளது.ஒருவர் ஐவேளை தொழுதாலும் ,நோன்பு வைத்தாலும் ஹஜ்ஜுக்கு சென்றாலும் சொர்க்கம் செல்ல முடியாது.இத்தனைக்கும் பிறகு வலிமார்களை பின்பற்றினாலே அவன் சொர்க்கம் செல்ல முடியும் என்று பேசியிருக்கிறார்.இன்சா அல்லாஹ் இனி வரும் காலங்களில் இப்படி பட்டவர்கள் பேச வந்தால் அடித்து விரட்டப்பட்ட வேண்டியது நமது கடமையாகும்.
                                                                                                                  அபுஷிரின்

திங்கள், 4 ஜூன், 2012

சயின்ஸ் பாடத்தில் சதம் பெற்ற இரு மாணவிகள் .

மீரா ஸ்கூல் பத்தாம் வகுப்பு பள்ளி தேர்வு முடிவுகள் .
சயின்ஸ் பாடத்தில் சதம் பெற்ற இரு மாணவிகள் .
1.ஷபானா த/பெ .எம்.உமர்கதாப் 
2.ரஹமத்துன் நிஷா த /பெ நய்யா மைதீன் 
இருவருமே பிளஸ் ஒன படிக்கப் போவதில்லை என்று திட்டமிட்டு படிக்காதவர்கள்.
1.ஷபானா 467
2.ரஹமத்துன் நிசா 451
3.முஹம்மது ஆசிகா 433
4.வெங்கடேஷ் குமார் 428
5..ஜைனுல் ஆபதின் 418
6.ஹாஜி இப்ராஹிம் 404
7.நாதிரா இர்பானா 403
8இப்ராஹீம் மூஸா 402
9.மாஜித் ஹமித் 398
10.முஹம்மது ஆசீர் 393
11.சமீரா 393
12.அப்ரோஸ் 390
13.ஜெஸ்ஸி கெசையா 346
14அப்துர் ரஹ்மான் 346
15.சித்திக் 315
16.கபூர் ரிஸ்வான் 314
17.தினேஷ் 312
18ஷர்மிளா 311
19.முபீனா 20.சுமையா ரலினா 291
மாதத்திற்கு ரூ.250/=கட்டணத்தில் மட்டுமே படித்த மற்றும் ஸ்பெசல் ட்யுஷன் எதுவும் இல்லாமல் அதிக மதிப் பெண்கள் பெற்ற மாணவ மாணவிகளுக்கு இறைஅருள் கிடைக்கட்டும் .
பெண்ணியம் மிக்க துடிப்பானவர்கள் பத்தாவது வகுப்பு மாணவிகள் .
நாங்கள் பிளஸ் ஒன்  படிக்கப் போவதில்லை.அதனால் நாங்கள் ஏன் அதிகம் சிரமம் எடுத்து படிக்க வேண்டும் என்று அடிக்கடி எதிர் கேள்வி கேட்பவர்கள்.பரீட்சை நேரங்களிலும் ஒன்பது மணிக்கே படுக்கைக்கு செல்லக் கூடிய இந்த மாணவிகளை நினைத்தால் ஒருபுறம் வேதனையாகவும் இருக்கிறது.பெற்றோர்களின் ஆர்வமின்மையால் அவர்களது எதிர்காலம் பாதிக்கபடுகிறது .ஆர்வமுள்ளவர்களின் பிள்ளைகள் [மாணவ மாணவிகள்] சுமாராக படிக்கிறர்கள் என்பது இன்னொரு வேதனையான விஷயம்.ஏழு,எட்டு ,ஒன்பதாவது வகுப்பில் சில மாணவர்கள் வெளியே சென்று விட்டதால் ரேன்க் வரிசையில் இடைவெளி ஏற்பட்டுள்ளது.சில பள்ளிகளில் அதிக ஸ்கோர் காட்டுவதற்காக தமிழையும் சோசியல் சயின்சையும் முக்கியத்துவம் கொடுத்து படிக்க வைக்கிறார்கள் .இது பிளஸ் டூவில் மதிப்பெண்கள் பெற உதவாது .
பள்ளி மாணவர்களிடம் வயதுக்கு மீறிய மதஉணர்வுகளை பரப்பும் கூட்டமும்  மார்க்க போதனைகளை வற்புறுத்தும் தப்லிக் வகையறாக்களும்  தங்களது வீட்டு பிள்ளைகள் விசயத்தில் உசாராக இருக்கின்றனர்..பள்ளிவாசலில் நடக்கும் ஷிர்ககளை கண்டுகொள்ளாத சிலர் தூண்டுதலின் பேரில் ஸ்கூல் போர்டில் ஷிர்க்களை கண்டிக்கும் குர்ஆன வசனங்களை எழுதிப் போடுவது உண்டு.ஒன்பதாவது வகுப்பு பையன் ஒருவன் தாடிவைக்க ஒரு மவுலவியால் வற்புறுத்தப் பட்டுள்ளான்.

திங்கள், 21 மே, 2012

நபிமார்கள் பற்றி பேச உங்களுக்கு வெட்கமாக தெரியவில்லையா


நேற்று21/5/2012 நடந்த திருமண நிகழ்வில் கலந்து கொண்ட ஒரு மவுலவி மணமக்களை நபிமார்கள் போல் வாழ்த்துவதில் தவறு இல்லை என்று நபி ஸல் அவர்கள் காட்டி தந்த நடைமுறைகளுக்கு மாற்றமாக பேசினார் . திருமணத்தில் நபிமார்கள் வாழ்ந்தது போல வாழ்த்துவது உண்மை என்றால் வாழ்நாள் முழுவதும் நபிமார்கள் வாழ்ந்தது போல வாழுவது ஒருபுறம் இருக்கட்டும்.ஆனால் குறைந்த பட்சம் அந்த திருமணத்திலாவது முஹம்மது நபி ஸல் அவர்கள் திருமணம் செய்தது போல ,அவர்கள் மகள் பாத்திமா [ரலி]அவர்களுக்கு திருமணம் செய்து வைத்தது போல ,இன்னும் நபி[ஸல்] வாழும் பொழுதே நடந்த அவர்களது தோழர்கள் திருமணங்கள் போல இவர்கள் செய்தார்களா?
பைதது ஓதி எந்த நபிமார் மாப்பிளை அழைத்து வந்தார்கள்?
அல்லாஹும்மா அள்ளிப்னபைனஹுமா துஆ எந்த நபிமார்கள் ஓதிக்காட்டினார்கள்?அத்துடன் பதினைந்து நிமிட திருமண துஆ ஓதினார்கள்?
மாப்பிள்ளைக்கு பிஸ்மில்லாஹ் கூறி மாலை அணிவ்த்து மவுலவிகள் அதற்கு ஒரு துஆ ஒதுகிறார்களே  இது எந்த நபிமார் செய்தார்கள்?
பெண்வீட்டார் விருந்தை சாப்பிட்டு வருகிறார்களே இந்த மவ்லவிகள் ,எந்த நபிமார் பெண்வீட்டில் திருமண விருந்து என்னும் வலிமாவை வயிறு புடைக்க சாப்பிட்டார்கள்?
பெண்ணுக்கு தாலி கட்டுகிறார்களே இது எந்த நபிமார் செய்தார்கள்?
இன்னும் எத்தனையோ கேள்விகள் கேட்ட்கலாம் .

வரதட்சணை சீர் சீராட்டு ,பெண்வீட்டு விருந்து தாலிகட்டுதல் முதல் ஆரத்தி எடுத்தல் வரை அத்தனை மூட பழக்கங்களுடன் திருமணம் செய்த மவுலவிகளே ! நபிமார்கள் பற்றி பேச தூண்டிவிடுவதற்கும் பேசுவதற்கும் உங்களுக்கு வெட்கமாக தெரியவில்லையா?
யூசுப் [அலை]அவர்களுக்கும் அஜீஸின் மனைவிக்கும் திருமணம் நடந்ததாகவும் அவர்கள்போல  வாழ வாழ்த்துவதகா கதைக்கும் சொதப்பல் மவுலவிகளே  !
அந்த அஜீஸின் மனைவிக்கு சுலைகா என்று பெயர் வைத்து காதுகுத்தி கைமடக்கு வாங்கிய ஆளிமுசா யார்?
அஜீஸின் மனைவியான சுலைகா என்று சொல்லப்பட்ட அந்த பெண்ணுக்கும் யூசுப் [அலை] அவர்களுக்கும் திருமணம் நடந்தது என்றால் அஜிஸ் தலாக் சொல்லியிருக்க வேண்டும் .அஜிஸ் தலாக் விட்டாரா?இல்லை அந்த பெண் குலா விட்டாரா ?தீர்த்துவிட்ட ஜமாஅத் எது? பதினாலு பேர் கொண்ட ஆராம்பண்ணை கமிட்டி ஜமாத்தா?
யூசுப் நபி[அலை]அவர்களுக்கும் சுலைகா என்று சொல்லப்பட்ட பெண்ணுக்கும் திருமனம செய்ய பேசி முடித்து வெற்றிலை பாக்கு வாங்கிய  பெத்தா யார்?
யூசுப்நபி[அலை] அவர்களுக்கும் சுலைகா என்று சொல்லப்பட்ட பெண்ணுக்கும் பச்சை போட்டு பந்தக்கால் நாட்டி பாத்தியா ஓதியதும் அதன் பின்னர் நிக்காஹ் எழுதி அல்லிப்ன பைனஹும்மா 
துஆ ஓதிய மவுலான மௌலவி யாரோ?
அட மானங்கெட்ட மவுலவிகளே !அல்லாஹ்வுடைய இல்லத்தில் இருந்து இப்படி ஒரு கதையா?
திருமண சொற்பொழிவுகளில் வரதட்சணை பற்றி மணிகணக்கில் பேசியுள்ளோம்.மகர் பற்றி பேசுகிறோம் வலிமாபற்றி பேசுகிறோம் மற்றும் மாலை போன்ற மற்ற அனாச்சாரங்களை பற்றி பேசுகிறோம் .அதைவிடவா யூசுப் சுலைகா பற்றி அதிக நேரம் பேசியுள்ளோம் .நிருபிக்க முடியுமா?அதைப் பற்றியெல்லாம் வாய் திறக்காமல் யூசுப் சுலைகாவை நங்கள் முல்லைபெரியாறு கூடங்குளம் பிரச்னை போல பேசினோம் என்று உட்டாலடிக்கும் மட மவுலவி கூட்டமே ! முஸ்லிம்களின் கல்வி வேலை வாய்ப்பு பற்றி கடுகுஅளவேனும் சிந்திக்காமல் மவுலூது சோறுவிலே காலம் கழித்தது மறந்து போச்சா? தாயத்து விற்பதிலே தாலாட்டியது மறந்துவிட்டதா? முல்லை பெரியாறு தமிழகத்துக்கும் கர்நாடகத்துக்கும் உள்ள பிரச்னை .ஆனால் அஜீஸின் மனைவி ,யூசுப்நபி[அலை] அவர்கள் மீது கொண்ட கள்ளக் காதலை அங்கீகரித்து அஜிசுக்கு தெரியாமலே, யூசுப் நபி[அலை] அவர்களுக்கு திருமணம் செய்து வைத்து அவர்கள் போல வாழ்த்துவது கள்ளக் காதலை ஊக்குவித்தது ஆகாதா?
கூடங்குளம் பிரச்னையில் மவுலவிகள் பலர் உண்ணாவிரதம் இருந்து மவுழுத் சாப்பாட்டை தியாகம் செய்தது எலும்பும்தோலுமாக ஆகிவிட்டார்களாமே!அது  உண்மையா?

வெள்ளி, 11 மே, 2012

செங்கொடி ,


செங்கொடி ,நீங்கள் கொண்டு வந்த 
கேட்பொலி ஆதாரம் ;அவர்கள் ,”அடிங்க’ என்று சொன்னார்களா ?இல்லையா ? என்றால் அடிங்க என்று சொன்னார்கள் என்பதற்கு மட்டுமே 'கேட்பொலி'யை  ஆதாரமாக கொள்ள முடியும் .நியாய சிந்தனையுள்ள நடுநிலையாளர்கள் யாரும் அதை அடித்ததற்கு ஆதாரமாக கொள்ளமாட்டார்கள்.
2. காணொளி ஆதாரம் ;அடிக்கவில்லை என்பதற்கு 'காணொளி 'ஆதாரமாக மிகத் தெளிவாக உள்ளது . அடிக்கவேண்டும் என்ற சிநதனையில் சிலர் இருந்தார்கள் .ஆனால் உங்களின் நிலைக்கு , அதாவது அடிக்கப்பட வேண்டும் என்ற நிலைக்கு வந்துவிட்டீர்களே என்று பலர் வருத்தப்பட்டதாகா முல்லா தெளிவாகக் கூறுகிரார்..இதைவிட அடிக்கபடவில்லை என்பதற்கு என்ன ஆதாரம் வேண்டும்?வார்க்கப்பட்ட தோசையை திரித்து மீண்டும் இட்லி பண்ண முயற்சிக்க வேண்டாம்.
மேலும் அங்கே உள்ள துராப்சாவும் அதை ஆமோதிக்கிறார்..அவர் அடிபட்டிருந்தால் , சிலர் எனனை அடித்துவிட்டார்கள் ,இருப்பினும் எனக்கு அது பொருட்டல்ல ,நான் அவர்களின் உணர்வுகளை புரிந்து கொண்டேன்.நான் தாக்கப்பட்டதை விட அவர்களின் உணர்வுகளை நான் மதிக்கிறேன் என்று நாசுக்காக கூட அவர் தாக்கப்பட்டதை பதிவு செய்திருக்கலாம் ஆனால நடவாத ஒன்றை ஏன் சொல்லவேண்டும்? என்றே அவர் அங்கு ஏதும் கூறவில்லை.
நொண்டி ஆதாரங்கள் நொறுங்கிப்போன பிறகு உதாரணத்தை தேடி பூமியை சுத்திவருகிறார்.என்னிடம் கேட்பொலி இருக்கிறது ,காணொளி இருக்கிறது என்று போட்ட ஆதாரங்கள் பொய்த்துப் போனபிறகு இப்போது பைத்தியம் என்கிறார்.அது யாருக்கு என்பது போக போகத் தெரியும்.கம்யுனிச வெறிபிடித்து பேயாட்டம் போடும் செங்கொடி தனது காட்டுமிராண்டித்தனத்தை நிருபித்து வருகிறார்..இவருடைய உதாரணத்தை அவர்தான் மெச்சிக் கொள்ளவேண்டும்.இவர் படத்தைக் காட்டியது உண்மைதான் .ஆனால் அது வடிவேல் வடிவத்தில் உள்ளது.மக்களிடம் பணத்தை வாங்கி கடவுளை காட்டப்போவதாக காட்டிற்கு அழைத்து சென்று குன்றின் உச்சியை காட்டி அங்கே கடவுள் தெரிவதாக சொல்லி மக்களிடமிருந்து நழுவியது போல ,இவர் நழுவாமல் ,ஒரு சாப்பாடு தட்டு படத்தை காட்டி ,இதுதான் பூமியின் செயற்கைக்கோள் படம் இதை பாருங்கள் ,இது கோளவடிவத்தில் உள்ளது ,என்கிறார்.அங்கு சென்ற நான் நீவிர் காட்டியிருப்பது தட்டு படம் ,அது எப்படி கோள வடிவத்தில் இருக்கும் என்று கூறினால் எனனை பார்த்து பைத்தியம் என்கிறார்.
///தோழர் துராப்ஷாவின் கருத்துச் சுதந்திரத்தை மீறி காட்டுமிராண்டிகளால் தாக்கப்பட்டார். இது சரியா? தவறா? அது தவறானது, காட்டுமிராண்டித்தனமானது என்று ஆதாரத்துடன் காட்டியிருக்கிறேன். ///
ரசியாவில் ஸ்டாலின் ஆட்சியில் உள்ள கருத்து சுதந்திரத்தை கொஞ்சம் மக்கள் மத்தியில் காணொளி ,கேட்பொலி இல்லாவிட்டாலும் , உங்களது சோஷலிச இருப்பிலிருந்தாவது ஒன்றை காட்டலாம் இல்லையா? உழைக்கும் முஸ்லிம் மக்கள் மத்தியில் முஹம்மது நபி[ஸல்] அவர்களை போல படம் போட்டதற்கே கலவரம் நடந்ததை அறியமாட்டீர்களா? அவ்வாறிருக்க குர் ஆனில் இலாத ஒன்றை எங்கிருந்தோ கொண்டு வந்து ஏன் விமர்சிக்க வேண்டும்? முஸ்லிம்கள்,கம்யுனிஸ்ட்கள் மத்தியில் வந்து சோஷலிச உங்களது தெய்வம் ஸ்டாலினோடு ,ஸ்டாலின் கதை பாதி தெரிந்து மீதி முடிவு இல்லாவிட்டால் நித்தியானந்தா கதையோடு இணைத்து முடித்தால் அதற்கு பெயர் விமர்சனமா?கருத்து சுதந்திரமா?இல்லை முஸ்லிம்கள் அப்படி ஏதாவது செய்தார்களா? இஸ்லாத்தை விட்டு வெளியேறி விட்டீர்களா? எப்படியும் நாசமாக போகவேண்டியதுதானே ,இஸ்லாத்தை விமர்சித்தால் , அதை உழைக்கும் மக்கள் மத்தியில் கொண்டு சென்றால் ,அவர்கள் உணர்வுபூர்வமாக எதையாவது செய்ய வேண்டும் ,அதன் மூலம் பிரபல்யமாக வேண்டும் என்பதுதானே உங்களது குறிக்கோள் . எவனும் அடித்துக் கொண்டு சாகட்டும். நாங்கள குளிரறையில் உட்கார்ந்து கொண்டு கீபோர்டு தட்டி வேடிக்கையை ரசிக்கிறோம் என்பது பச்சையான மொள்ளமாறித்தனமா ஆகாதா? இவர் கருத்துப்படி , துராப்சா காட்டுமிராண்டித்தனமாக தாக்கப்பட்டார் என்று வைத்துக் கொள்வோம் .அப்போது இவரது தோழரை காப்பாற்ற இவர் என்ன செய்தார் ? இவர் தோழர் தாக்கப்படும் போழ்து ஓடோடி வந்து அவருக்கு உற்ற துணையாக இருக்க வேண்டுமா?இல்லையா ? அவர் விசாரிக்க அழைக்கப்பட்டால் அழைத்தவர்களை தொடர்பு கொண்டு அவரது கருத்து சுதந்திரம் பற்றி பேசியிருக்க வேண்டாமா?அவர்களுடன் வாதாடி உமது நியாயத்தை கேட்டிருக்க வேண்டாமா?அவாரில்லாமல் தன்னை காப்பாற்ற எடுத்த முயற்சியில் ,தந்திரத்தில் ,கொஞ்சமேனும் தோழருக்காக செய்யவில்லையே , அதுவும் ஒரு மொள்ளமாரித்தனம் என்பதாலே குறிப்பிட்டுள்ளேன் .
கருத்து சுதந்திரமா?இல்லாத ஒன்றை இட்டு கட்டுவது கருத்து சுதந்திரமா ? ஆதாரம் ,தாரம் இல்லாமல் தவிக்கிறது .இவர் ஆதாரத்துடன் காட்டிவிட்டாராம்.நீவிர் காட்டிய கானொளியில் சிலர் அடிக்க வேண்டும் என்ற சிந்தனையில் இருந்தார்கள் என்று தெளிவாக இருக்கிறது..நீவிர் காட்டிய கானொளியில் அவர் கண்ணியமாகவே காட்டப்பட்டுள்ளார். அதை நீவிர் கன்னியாக ,,,,,,இழுத்துக்கொண்டே போனால் எனெக்கென்ன ஆயிற்று?
////காணொளியில் தோழர் தாக்கப்பட்டார் என்று தான் அந்த முல்லா கூறியிருக்கிறார் என்பதை தெளிவாக நிறுவியிருக்கிறேன். ஒன்று அதை ஏற்றுக் கொள்ள வேண்டும் அல்லது மறுத்து அவரின் விளக்கங்களை கூற வேண்டும். மறுத்து கூற முடியவில்லை என்றால் ஏற்றுக் கொண்டதாகத்தான் பொருள்.///
அடிக்க வேண்டும் என்ற சிந்தையில் இருந்திருக்கிரறாக்கள் என்று முல்லா தெளிவாக கூறுவது தாக்கப்பட்டார் என்று கூறியிருப்பதாக அர்த்தமாம். அதையும் தெளிவாக நிருவியிருக்கிராராம் .கேழ்வரகில் நெய்வடிகிறது,,,,,,,,செங்கொடியும் அவரது செல்லகிளிகளும் தான் நக்கிக் கொள்ளவேண்டும்.மேலும் கேட்பொலியில் பிற சேர்க்கை சாத்தியம் என்றுதான் சொல்லியுள்ளேன் .அதை அவர் மறுத்தது தோடு நில்லாது அதையும் அவரே நிருபித்திருக்க வேண்டும்.இல்லைஎன்றால் நான் அக்கருத்தை வலியுறுத்தாத பொழுது அதை பிடித்து தொங்கி கொண்டிருப்பது ஏனோ? வேறு வாதங்களுக்கு வாய்ப்பில்லை என்று நினைத்துவிட்டாரோ?
அடித்தற்கு கேட்பொலி ஒரு ஆதாரமே இல்லை .அடிப்போம் என்று கூறினார்களா இல்லையா ?என்பதற்கே இந்த கேட்பொலியை ஆதாரமாகக் கொள்ளமுடியும் .
////அடிக்காதீர்கள் என்று சிலர் கூறுகிறார்கள் என்றாலே அவர்கள் அடிக்கப் பாய்ந்திருக்கிறார்கள் என்பதாகத்தான் இருக்கும். ///
அப்படிஎன்றால் அடிக்கவில்லை என்றுதானே அர்த்தம்.
////இல்லையென்றால் அடிக்காதீர்கள் என்று கூற வேண்டிய தேவை இல்லையே.///
அடிக்காதீர்கள் என்று அவரது உறவினர்கள் கூறியுள்ளதால் அடிக்க படவில்லை என்பதுதானே உண்மை.
//இவ்வளவு தூரம் முனைப்பு காட்டியவர்கள் அடிக்க மட்டும் செய்யவில்லை என்றால் அது எப்படி? அப்படி இப்ராஹிம் நம்ப விரும்புகிறார் என்பதால் நாமும் அப்படித்தான் நம்ப வேண்டுமா? பாவம் ///
இவ்வளவு தூரம் கேட்பொலி ,காணொளி எடுத்தவர்கள் ஒரு அடி விழுவதையாவது காட்டியிருக்க வேண்டுமா இல்லையா எப்படி? அப்படி அடித்ததாக செங்கொடி நம்ப விரும்புகிறார் என்பதால் அப்படித்தான் எல்லோரும் நம்பவேண்டுமா?
அடிப்பதை கானொளியில் படம்பிடித்துக் காட்டினாலும் அழுக்கை துடைத்ததாக கூறுவேணாம். . அடித்தால்தானே படம் எடுப்பதற்கு ?நடவாத ஒன்றை எப்படி படம் எடுக்க முடியும்? நல்லவேளை இந்தியாவில் செங்கொடி தெய்வம் ஸ்டாலின் ஆட்சி இல்லை .இல்லைஎன்றால் காணோளியாவது கேட்பொலியாவது ? காணமும் கேப்பையும்தான் கிடைக்கும் சிறையில் .
///இப்போதும் கூட நேரில் கண்ட ஒருவர் தோழர் தாக்கப்பட்டார் என்று கூறியிருக்கிறார். ///
என்னிடம் கூட நேரில் கண்டவர் ஒருவர் கூறினார் ,தாக்கப்படவில்லை என்று.
பரசுராமபுரம் பள்ளியில் கூறியது தீர்ப்பாம் ,முபாரக் பள்ளியில் கூறியது அறிவிப்பாம்.சே ,,உங்களது வியாக்கியானமே தனி அலாதி. முபாரக் பள்ளியின் அறிவிப்பிற்கு யாரும் கட்டுபடவில்லையாம் . பரசுராமபுரம் பள்ளியில் சொன்னபிறகு ஒருவரும் கோழிகடைக்கு செல்லவில்லையாம் .முபாரக் பள்ளியை மஹல்லாவாக கொண்டவர்கள் ஐந்து சதவீதம் இருப்பார்கள் .அதனால் அவர்கள் மட்டும் கட்டுபட்டிருப்பார்கள் .பரசுராமபுரம் பள்ளியை மஹல்லா வாக கொண்டவர்கள் 75 சதவீதம் பேர்கள் இருப்பார்கள் .அதனால் அனைவரும் கட்டுபட்டிருக்க வேண்டும்.ஆக இரண்டுமே அறிவிப்புகள் தான் .
///எந்த இரண்டு பேர் தம்பதியரோ அந்த இருவரோடும் தொடர்பில்லாத இன்னொருவர் மூன்று குழந்தைகள் இருக்கும் நிலையில் அந்த இருவரும் கணவன் மனைவி அல்லர் என்று கூறினால் அது அறிவிப்பா? தண்டனையா? ///
எந்த இரண்டு பேர் தம்பதியரோ அந்த இருவரும் அவர்களோடு தொடர்புடைய பெற்றோரும் தங்களை தம்பதியர்களாக்க எங்கே விண்ணப்பித்து கட்டணம் கட்டி அவர்கள் தம்பதியர்கள் என்று சாட்சிகளுடன் உறுதி செய்யபப்ட்டு ,அவர்களை தம்பதியர்கள் என்று அறிவித்தார்களோ , அந்த ஜமாத்தும் எதன் அடிப்படையில் அறிவித்ததோ ,அந்த அடிப்படையை ,அந்த தமபதியர்களில் ஒருவர் மீறினால் , அவர்களுக்கு அவர்கள் இஸ்லாத்தின் அடைப்படையில் கணவன் மனைவி அல்ல என்று கூறினால் அது அறிவிப்பே .தண்டனை அல்ல .அதன் பிறகும் அவர்கள் கணவன் மனைவியாக வாழ்ந்து அவர்களில் ஒருவருக்கு கசையடி கொடுத்தாலே தண்டனை.சிலர் அந்த அறிவிப்பையே தண்டனையாக கொண்டால் அதற்கு ஜமாஅத் பொறுப்பல்ல .
பிஸ்மி சொல்லி கற்பு அழித்ததாக கூறும் ஒருவர் தனது கடையில் பிஸ்மி சொல்லி கோழியை அறுக்க ஆள் வைத்திருக்கிறார் என்றால் அது கேலி செய்வதாக கொள்ளமுடியும் என்பதே எனது சொல்லின் சாராம்சம் .நான் நேரடியாக கூறினார் என்று கூறவில்லை.
///லூத் ஒரு லூஸு எனும் கட்டுரையில், கட்டுரையாளர் லூத்தை ஏன் லூஸ் என்று கூறுகிறார் என்பது மிகத் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது. தைரியமோ, திராணியோ இருந்தால் கட்டுரையாளர் கூறுவது தவறு என்று நிரூபித்துவிடுங்கள் பார்க்கலாம்.///
செங்கொடி பற்றி கதை எழுத ஆரம்பித்து ,அவரது இணைய தளம் மூடி விட்டு ஓடிவிட்டாதால் அதற்கு மேல் அவரைப்பற்றி ஒன்றும் தகவல் இல்லாததால் மீதி கதையை செந்தோழன் நிகழ்வுடன் முடித்தால் அதற்கு என்ன பெயர்? இருவரும் செந்தோழர்கள் தானே .
மீண்டும் மீண்டும் சொல்லுகிறோம் ,லூது நபி[அலை]அவர்களின் கதையை குர்ஆனில் சொல்லவில்லை. அவர்களின் வாழ்க்கையை ஒரு குறிப்பிட்ட குற்ற செயலுக்காக ,அதை கண்டித்து மக்கள் அதலிருந்து விடுபடவேண்டும் என்பதர்க்ககா ஒரு பாடமாக சொல்லப்பட்டுள்ளது.அதிலிருந்து உமது அல்ப புத்தி கதையை துவங்கினால் முஸ்லிம்கள் கண்டிக்கவே செய்வார்கள்.உங்களுக்கு தேவையானால் அது போன்ற படங்கள் நிறைய இருப்பதால் அங்கே உமிழ்ந்து கொள்ளுங்கள்.மேலும் உமர்[ரலி] பற்றிய ஹதிது புகாரியில் உள்ளது ஹதித் எண் அடுத்து தருவோம்
//பழைய ஏற்பாட்டில் இருப்பதையும் அதுவே குரானில் கூறப்பட்டிருக்கும் விதத்தையும் இதற்கு முன்னர் ஒப்பு நோக்கப்பட்டதே இல்லையா? ///
இதற்கு முன்னர் என்ன ஒப்பு நோக்கப்பட்டது?சொல்லுங்கள்.
///அப்பரசண்டிகளா! இப்படித்தான் பார்ப்பன பயங்கரவாதிகளும் நம்புகிறார்கள். அயோத்தியில் குறிபிட்ட இடத்தில் தான் ராமன் பிறந்தான் என்று. அதை மட்டும் ஏன் மறுக்கிறீர்கள். அப்படி என்றால் உங்கள் நம்பிக்கை மட்டும் கேள்வி கேட்கப்படக் கூடாது. அடுத்தவர் நம்பிக்கையை கிண்டிக் கிளறி ஆதாரம் கேட்பீர்கள் அப்படித்தானே. இதற்குப் பெயர்தான் பாசிசம். ///
செங்கொடியின் அறிவின் முதிர்ச்சி வெறித்தனம் ஆகி நாளடைவில் உளற ஆரம்பித்துவிட்டது.இதைத்தான் பட்டுகோட்டைக்கு வழி கேட்டால் கொட்டைபாக்குக்கு விலை சொல்வதாக சொல்லுவார்கள்.குர் ஆனில் என்ன உள்ளதோ ,அதை மட்டுமே நாங்கள் நம்புகிறோம் . அந்த நம்பிக்கைப் பற்றி இவரது தச்ச ஆள விமர்சிக்கட்டும் .துச்சமெனக் கொண்டு பதிலுரைப்போம். பைபிளில் உள்ள கதையை குரானின் தொடராக சேர்த்தது மொள்ளமாறித்தனமா இல்லையா? பைபிள் எங்களது நம்பிக்கையா? இதற்கும் ராமன் பிறந்த நம்பிக்கை எங்களுக்கு பொருட்டல்ல அதற்காக அங்குள்ள பள்ளிவாசலை இடித்து இடத்தை வன்முறையில் பெறுவதும் ஒன்றாகுமா?அடுத்தவர் நம்பிக்கைக்கு ஆதாரம் கேட்கவில்லை .குறிப்பிட்ட பள்ளிவாசலை இடிப்பதற்கும் ,அந்த இடத்தை அவர்களிடம் ஒப்படைப்பதற்கும் தான் ஆதாரம் கேட்கப்பட்டுள்ளது.மேலும் இதில் அரசியல் உலகறிந்த உண்மை .அதை தூக்கி கொண்டு இங்கே செங்கொடி வருவது ,தமிழன் போன்றவர்கள் இவர் புகழ் பாடவே .
அடுத்து இவர் அப்ரண்டிஸ் என்பதை நிருபிக்கிறார் .உட்கார்ந்துதான் சிறுநீர் கழிக்க வேண்டும் என்று நபி[ஸல்] அவர்கள் நடத்தை நெறியாக வற்புருத்தியுள்ளர்கள்.ஆனால் உட்கார்ந்தால் அசுத்தமாகிவிடும் என்று கருதப்பட்ட இடத்தில் நின்று சிறுநீர் கழித்துள்ளார்கள் .அதை போலவே ,உமர் [ரலி] அவர்கள் இன்ஜிலை வாசித்த சமயத்தில் மக்களுக்குஅது தேவை இல்லை எனப்பட்ட காலம் . முகம்மதுநபி[ஸல்] அதனால்அதை வாசிப்பதை நிறுத்த வேண்டுகிறார்கள்.ஆனால் இப்போது கஹ்பா நிலைக்குமா?குரான் இறைவேதமா ? என்று அவர்கள் இஸ்லாத்தை விமர்சிக்க ,அதை ஒழிக்க முனையும் பொழுது அவர்களோடு தர்கித்து உண்மையை மக்களுக்கு விளக்க அவர்களது வேதத்தை பாராயண செய்தது தவறில்லை.கம்யுனிசத்தில புரளும் தாங்கள் இஸ்லாத்தை இப்படி அரைகுறையாக அறிந்து கொண்டு விமர்சிப்பது அழகன்று .
துராப்சாவின் நிலைபாட்டை மக்கள் அறிந்திருந்தும் அவர் கடையில் கோழிக்கறி வாங்கினார்கள் என்று செங்கொடி கூறியதாலே ,அப்படி என்றால் துராப்சா ஆயிசா[ரலி]அவர்கள் பற்றி கூறிய இந்த கருத்தையும் மக்கள் அறிந்து இருந்தார்களா? என்று கேட்டிருந்தேன் .அதற்கு செங்கொடி என்ன பதில் சொல்லியிருக்க வேண்டும்? ஆம் அலல்து இல்லை என்றுதான் பதில் சொல்லியிருக்க வேண்டும் .ஆனால் அதை செய்யாமல் தனது குரூர புத்தியை வெளி கொணர்ந்து அந்த செய்தியின் உள்ள நுழைகிறார்.செந்தோழன் என்ற பெயரில் துராப்சா ஆயிசா பற்றி எழுதியதை வற்புருத்த்கிறார்.
முகம்மது நபி[ஸல்] அவர்கள் காலத்திலும் அவர்களுக்கு முந்தைய ,பிந்திய காலத்திலும் நடைமுறையில் உள்ள வழக்கபடியே ,.சபிய்யா [ரலி] அவர்கள் கைபர் போரில் கைதானபோளுது அவருக்கு வயது பதினேழி என்று கூறப்படுகிறது.ஆனால் அதற்கு முன்பே அவர் யூதராக இருக்கையிலே இரண்டு திருமணம் செய்துள்ளார் என்றால் அவரது முதல் திருமணம் என்ன வயதில் நடந்திருக்கும்?இந்த மாதிரி இளம் வயதிலே திருமணம் நடந்துள்ளதால் ,தோழிகள் மூலம் இல்லற வாழ்க்கையி அவர்கள் அறிந்து இருக்கவே முடியும்.அதனால் கற்பழிப்பு என்று கூறுபவர்கள் நிர்வாண ஊரில் கோவணம் கட்டியவன் தான் பைத்தியக்காரன் .ஆனாலும் முஹம்மது நபி [ஸல்] அவர்கள் பெண்களின் சம்மதத்துடனே திருமணம் என்று வரையருத்திருப்பதிளிருந்து ,உலகின் முதன் முதலாக பால்யவிவாகத்திர்க்கு முற்றுப் புள்ளி வைத்தது இஸ்லாமே .
மேலும் ,பெண்களை வலுகட்டாயமாக் அடைவது உங்களுக்கு அனுமதி இல்லை.[அல் குர் ஆன் 4;19 ]
///இப்ராஹிம் தலையைச் சுற்றி மூக்கைத் தொடுவது போன்ற அவசியமில்லாமல் அதை விட தெளிவாகவே குரான் வசனம் இருக்கிறது.///
மூக்கில் வடிவதை நேரடியாகவே துடைத்துக் கொள்ளுங்கள்
குழந்தை திருமணத்தை ஆதரிக்கும் வசனத்தை கூறுங்கள்.