Arampannai ஜமாஅத் தலைவர் .
திரு .வைஸ் .கே.ஏ .முஹம்மது உதுமான்
பஞ்சாயத்துதலைவர்
திருமதி.ஹமிதாஹனிபா ;
கவுன்சிலர் .
திருமதி.சரிபாபசிர்

திங்கள், 4 ஜூன், 2012

சயின்ஸ் பாடத்தில் சதம் பெற்ற இரு மாணவிகள் .

மீரா ஸ்கூல் பத்தாம் வகுப்பு பள்ளி தேர்வு முடிவுகள் .
சயின்ஸ் பாடத்தில் சதம் பெற்ற இரு மாணவிகள் .
1.ஷபானா த/பெ .எம்.உமர்கதாப் 
2.ரஹமத்துன் நிஷா த /பெ நய்யா மைதீன் 
இருவருமே பிளஸ் ஒன படிக்கப் போவதில்லை என்று திட்டமிட்டு படிக்காதவர்கள்.
1.ஷபானா 467
2.ரஹமத்துன் நிசா 451
3.முஹம்மது ஆசிகா 433
4.வெங்கடேஷ் குமார் 428
5..ஜைனுல் ஆபதின் 418
6.ஹாஜி இப்ராஹிம் 404
7.நாதிரா இர்பானா 403
8இப்ராஹீம் மூஸா 402
9.மாஜித் ஹமித் 398
10.முஹம்மது ஆசீர் 393
11.சமீரா 393
12.அப்ரோஸ் 390
13.ஜெஸ்ஸி கெசையா 346
14அப்துர் ரஹ்மான் 346
15.சித்திக் 315
16.கபூர் ரிஸ்வான் 314
17.தினேஷ் 312
18ஷர்மிளா 311
19.முபீனா 20.சுமையா ரலினா 291
மாதத்திற்கு ரூ.250/=கட்டணத்தில் மட்டுமே படித்த மற்றும் ஸ்பெசல் ட்யுஷன் எதுவும் இல்லாமல் அதிக மதிப் பெண்கள் பெற்ற மாணவ மாணவிகளுக்கு இறைஅருள் கிடைக்கட்டும் .
பெண்ணியம் மிக்க துடிப்பானவர்கள் பத்தாவது வகுப்பு மாணவிகள் .
நாங்கள் பிளஸ் ஒன்  படிக்கப் போவதில்லை.அதனால் நாங்கள் ஏன் அதிகம் சிரமம் எடுத்து படிக்க வேண்டும் என்று அடிக்கடி எதிர் கேள்வி கேட்பவர்கள்.பரீட்சை நேரங்களிலும் ஒன்பது மணிக்கே படுக்கைக்கு செல்லக் கூடிய இந்த மாணவிகளை நினைத்தால் ஒருபுறம் வேதனையாகவும் இருக்கிறது.பெற்றோர்களின் ஆர்வமின்மையால் அவர்களது எதிர்காலம் பாதிக்கபடுகிறது .ஆர்வமுள்ளவர்களின் பிள்ளைகள் [மாணவ மாணவிகள்] சுமாராக படிக்கிறர்கள் என்பது இன்னொரு வேதனையான விஷயம்.ஏழு,எட்டு ,ஒன்பதாவது வகுப்பில் சில மாணவர்கள் வெளியே சென்று விட்டதால் ரேன்க் வரிசையில் இடைவெளி ஏற்பட்டுள்ளது.சில பள்ளிகளில் அதிக ஸ்கோர் காட்டுவதற்காக தமிழையும் சோசியல் சயின்சையும் முக்கியத்துவம் கொடுத்து படிக்க வைக்கிறார்கள் .இது பிளஸ் டூவில் மதிப்பெண்கள் பெற உதவாது .
பள்ளி மாணவர்களிடம் வயதுக்கு மீறிய மதஉணர்வுகளை பரப்பும் கூட்டமும்  மார்க்க போதனைகளை வற்புறுத்தும் தப்லிக் வகையறாக்களும்  தங்களது வீட்டு பிள்ளைகள் விசயத்தில் உசாராக இருக்கின்றனர்..பள்ளிவாசலில் நடக்கும் ஷிர்ககளை கண்டுகொள்ளாத சிலர் தூண்டுதலின் பேரில் ஸ்கூல் போர்டில் ஷிர்க்களை கண்டிக்கும் குர்ஆன வசனங்களை எழுதிப் போடுவது உண்டு.ஒன்பதாவது வகுப்பு பையன் ஒருவன் தாடிவைக்க ஒரு மவுலவியால் வற்புறுத்தப் பட்டுள்ளான்.

1 கருத்து:

SULAIMAN சொன்னது…

Congratulations. Really it is nice to hear that, two students got 100 marks in one subject. Really this is good sign and tremendous improvement in quality of education. Once again I congratulate all those who are behind for this success. From K. Sulaiman. From Dubai, U.A.E.