Arampannai ஜமாஅத் தலைவர் .
திரு .வைஸ் .கே.ஏ .முஹம்மது உதுமான்
பஞ்சாயத்துதலைவர்
திருமதி.ஹமிதாஹனிபா ;
கவுன்சிலர் .
திருமதி.சரிபாபசிர்

சனி, 9 ஜூன், 2012

ஓய்ந்துபோன கொடிகட்டை ஒய்யாரமாக தூக்கி பிடிக்கும் அடிகட்டைகள்


வல்லமை மிக்க இறைவனுக்கு புகழனைத்தும் .அவன் மகாத்தானவன்.கடந்த மாதத்தில் ஆராமபன்னையில் நடந்த ஒன்றிரண்டு திருமணங்கள் தவிர மற்ற திருமணங்கள் அனைத்தும் நபி வழியிலும் நபி வழியை நெருங்கும் வகையிலும் நடந்த திருமணங்களே .மிகுந்த வரவேற்ப்புக்கும் இறைவனை பெருமிதம் கொள்ளுவதற்கும் உரிய விசயங்களே .இவர்கள் அனைவரும் தவ்ஹித் ஜமாத்தில் உறுப்பினர்களாக சேர்க்க வேண்டும் என்பது எங்களது நோக்கமல்ல .யார் சொன்னாலும் நபி வழியை பின்பின்பற்ற வேண்டும் என்பதே எங்கள் வேண்டுகோள்.
மணமகன் மாலை அணிந்து வருவது வெட்கத்திற்குரிய செயலாகிவிட்டது .இருபது ஆண்டுகளுக்கு முன்பு மாலை அணிவதை சரி என்று வாதிட்ட ,அதை தாங்கி பிடிக்க மார்க்க அறிஞர்கள் என்னும் மார்க்க முட்டாள்கள் படாதபாடு பட்டனர்.அவர்களால் கூட மாலை அணிவதை எதிர்த்து நிற்க முடியாமல் மாலைக்கும் பாத்திகா ஓதி தங்கள வாலை  ஆட்டி வந்தனர்.ஆனால் இன்று அவர்கள் கண்கள் முன்பே அந்த மாலை தூக்கி வீசப்பட்டுவிட்டது.தங்களது திருமணங்களில் மாலை அணிவது நபி வழிக்கு மாற்றம் என்று தெரிந்து இருந்தும் அதை தவிர்க்க திராணியற்று ,அதை கழுத்திலும் நாவிலும் தாங்கி பிடித்தவர்கள் ,இன்று சாதாரண இளைஞர்களால் ஒழிக்கப் பட்டுள்ளதை அறிந்து வெட்கி தலை குனிய வேண்டும் .யூசுப்நபிக்கும் சுலைகா என்ற பெண்ணுக்கும் திருமணமே நடவாத பொழுது அவர்களைப் போல வாழ்த்துவது யோக்கியமா?என்று கேட்டால் ,இது என்ன முல்லை பெரியாரா? கூடங்குளம் ரசியரா?என்று சினக்கிறது ஒரு மவுலவி சிந்தனை செல்வம்.இவர்கள் எதை எங்கு சிலாய்க்கிறார்களோ அங்குதானே அதற்கு பதில் அளிக்க முடியும்.அதல்லாமல் திருமண குத்பாவில் எதை பற்றி பேச பேச வேண்டுமோ அதைத்தான் பேசியுள்ளோம் ..முல்லை பெரியாறு ஆராம்பண்ணைக்கு  ஒன்றும் தலை வெடிக்கும் விவகாரம் அல்ல.அது எங்கு பேசப்பட வேண்டுமோ அங்கு அதைப் பற்றி பேசுவோம்.சரிவர பஸ் ஓடாமல் இருக்கையில்,அதையே கண்டு கொள்ளாத நாம்  முல்லை பெரியாறு பற்றி ஏன் பேசவேண்டும்? இந்த மவுலவி கூட்டம் இதுவரை எத்தனை பொது பிரச்சனைகளில் தலையிட்டுள்ளது ?இதுவரை எத்தனை பொது பிரச்னைகளில் போராட்டம் பண்ணியுள்ளது? ஆக ஆறாம்பண்ணையில் அனைத்து மக்களும் நபி வழியில் திருமணம் செய்ய நெருங்கி வந்து கொண்டிருக்கிறார்கள்.பாவம் மவ்லவிகள் கூட்டத்திற்கு வேறு வழியில்லாமல் கிடைத்த வாய்ப்பை மனம்போன போக்கில் பயன்படுத்தியுள்ளனர்.
அடுத்து ,கொடிகட்டு .கடந்த சில வருடங்களாக பொய்த்துப் போன கொடி கட்டை மீண்டும் இரு வருடங்களாக சிலர் உயிர்பிக்க முனைந்தனர்,அணையப் போகும் விளக்கைப் போல அது மீண்டும் ஜொலித்தது .இப்போது முற்றிலுமாக அணைந்து விட்டது.அல்லாவை புகழ் வோமாக !அவனிடமே மன்னிப்புக் கோருவோம்.ஒரு காலத்தில் கொடியை உழு செய்து ஏற்றும் நிலை.இன்றோ முஸ்லிம் அல்லாதவரே ஏற்றும் கராமத்துகள்  நிகழ்கின்றன
கொடிகட்டை  ஒய்யாரமாக தூக்கி பிடிக்கும் சில அடிக்கட்டைகள் ,யானை ஊர்வலம் மேளதாளங்கள் கொண்டு வந்து சைத்தானை திருப்திபடுத்தியே ஆக வேண்டும், என்ற முனைப்பில் சென்னையிலிருந்து வசூல் திரட்ட     பொய்ஜிகள் முனைந்தனர். அடிகட்டைகள் இல்லாமல் வசூல் செய்யும் இவர்களிடம் காசு கொடுக்க மறுத்த ஜமாலிய ஜமாஅத் செல்வந்தர்கள் ஒரு தகரடப்பா கச்சேரி படையை அனுப்பி அந்த குழுவின் பாட்டு கேட்டு காஜா பந்தே நவாஸ் உரூசை முடித்துக் கொள்ளுமாறு வேண்ட , அடிகட்டைகள் அதிகம் காசு பார்க்க வழியின்றி போனது பரிதாபம்.இந்த டப்பாக்கள் ஒலிக்கும் முன்னர் அதோடு வந்த ஒரு சைத்தான் சொற்பொழிவு ஆற்றியிருக்கிறது.அந்த சொற்பொழிவில் முஸ்லிம்களின் கடமைகள் ஐந்து அல்ல என்றும் ஆறு கடமைகள் உண்டு என்றும் ஆறாவது கடமை வலிமார்களை பின்பற்றுவது என்றும் நச்சு கக்கியுள்ளது.ஒருவர் ஐவேளை தொழுதாலும் ,நோன்பு வைத்தாலும் ஹஜ்ஜுக்கு சென்றாலும் சொர்க்கம் செல்ல முடியாது.இத்தனைக்கும் பிறகு வலிமார்களை பின்பற்றினாலே அவன் சொர்க்கம் செல்ல முடியும் என்று பேசியிருக்கிறார்.இன்சா அல்லாஹ் இனி வரும் காலங்களில் இப்படி பட்டவர்கள் பேச வந்தால் அடித்து விரட்டப்பட்ட வேண்டியது நமது கடமையாகும்.
                                                                                                                  அபுஷிரின்

கருத்துகள் இல்லை: