Arampannai ஜமாஅத் தலைவர் .
திரு .வைஸ் .கே.ஏ .முஹம்மது உதுமான்
பஞ்சாயத்துதலைவர்
திருமதி.ஹமிதாஹனிபா ;
கவுன்சிலர் .
திருமதி.சரிபாபசிர்

ஞாயிறு, 26 மே, 2013

துல அஞ்சலி
(களத்தில்) சந்திக்கும் போது அவர்களைக் கொல்லுங்கள்! அவர்கள் உங்களை வெளியேற்றியவாறு நீங்களும் அவர்களை வெளியேற்றுங்கள்! கலகம், கொலையை விடக் கடுமையானது. மஸ்ஜிதுல் ஹராமில் அவர்கள் உங்களுடன் போருக்கு வராத வரை அங்கே அவர்களுடன் போர் செய்யாதீர்கள்! அவர்கள் உங்களுடன் போருக்கு வந்தால் அவர்களைக் கொல்லுங்கள்! (ஏக இறைவனை) மறுப்போருக்கு இதுவே தண்டனை.2;191

இந்த வசனத்தை பற்றி துலஅஞ்சலி விளக்கம் கேட்கிறார் .2;191 இல் காபிர்களை எங்கு கண்டாலும் கொல்லுங்கள் என்று குர்ஆன் வசனம் கூறுகிறது .இது நியாயமா என்று கேட்கிறார். அது போர்களத்தில் சொல்லபப்ட்ட உத்தரவு என்று பல வாதங்களையும் வைத்த பிறகு உண்மை புரிந்த பின்னரும் கடைசியில் குழப்பமாக உள்ளது என்று மறைமுகமாக உண்மையை ஒத்துக் கொண்டார்.
அதன் பிறகு
வேதம் கொடுக்கப்பட்டோரில் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பாமல், அல்லாஹ்வும், அவனது தூதரும் விலக்கியவற்றை விலக்கிக் கொள்ளாமல், உண்மையான மார்க்கத்தைக் கடைப் பிடிக்காமல் இருப்போர் சிறுமைப்பட்டு ஜிஸ்யா வரியைத் தம் கையால் கொடுக்கும் வரை அவர்களுடன் போரிடுங்கள்! 9;29
இந்த வசனத்திற்கு விளக்கம் கேட்கிறார்.இந்த வசனம் முதலில் அவர் விளக்கம்கேட்ட 2;191 க்கு பதிலாக உள்ளது .பாருங்கள் காபிர்களைக் கண்ட இடத்தில் கொல்லுங்கள் என்றால் பிறகு எப்படி காபிர்களிடம் ஜிஸ்யா வரியை வசூலிக்க சொல்ல வேண்டும் ?.
எப்படி முஸ்லிம்களுக்கு சக்காத் வசூலிக்க கட்டாய கடமையாக்கி உள்ளதோ ,அங்ஙனம் சக்காத் கொடுக்காதவர்கள் மீது நடவடிக்கை எடுக்க சொல்லுகிறதோ ,அதைப் போலவே ஜிஸ்யா வரியை கொடுக்காதவர்கள் மீதும் நடவடிககை  எடுக்க சொல்லுகிறது.

சனி, 25 மே, 2013

தாலிபான்களும் மீடியாக்களின் பிரச்சாரமும்...!!



யுவான் ரிட்லி (Yvonne Ridley), நம்மில் பலருக்கும் நன்கு தெரிந்த பெயர். பிரிட்டன் நாட்டைச் சேர்ந்தவர். பத்திரிக்கையாளர், சமூக சேவகர், அரசியல்வாதி என்று பல பரிமாணங்களை கொண்டவர்.

தாலிபன்களை பற்றி இவர் கூறியதாவது

செப்டம்பர் 2001 ன் பிற்பகுதி, சகோதரி யுவான் ரிட்லி அவர்கள் பிரிட்டனின் சண்டே எக்ஸ்பிரஸ் பத்திரிக்கைக்காக பணியாற்றிய நேரம். உலகம், அமெரிக்க இரட்டை கோபுர தாக்குதல்களால் ஸ்தம்பித்திருந்த நேரம். அமெரிக்காவின் சந்தேகக் கண்கள் அப்கானிஸ்தான் மீதும், அதனை ஆளும் தாலிபான்களின் மீதும் வலுவாக விழுந்திருந்த சமயம்.

இந்த சூழ்நிலையில் தான் யுவான் ரிட்லி அவர்கள், தாலிபான்களை பற்றி செய்தி சேகரிப்பதற்காக பாகிஸ்தானில் இருந்து அப்கானிஸ்தானிற்கு புறப்பட்டார். ஆனால் அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது.இருந்தும் மறைமுகமாக அப்கானிஸ்தானிற்குள் நுழைந்து விட்டார். எப்படி? புர்காவை அணிந்து, எல்லையார மக்கள் செல்வது போல் கழுதையின் மீது பயணம் செய்து அப்கானிஸ்தானிற்குள் நுழைந்து விட்டார்.

உள்ளே நுழைந்த சிறிது நேரத்தில், தாலிபன் வீரர் ஒருவரின் முன், கழுதையிலிருந்துதவறி விழுந்து மாட்டிக்கொண்டார். உளவாளி என்று சந்தேகம் எழுப்பி தாலிபன் அரசாங்கம் அவரை சிறையில் தள்ளியது. பதினோரு நாட்கள் சிறைவாசத்திற்குபின்பு, அக்டோபர் 9, 2001ல், தாலிபன்களால் நல்லெண்ண அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டார்.

சிறையிலிருக்கும் போது தன்னை ஒரு தாலிபன் வீரர் இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ள அழைத்ததாகவும், தான் மறுத்து விட்டதாகவும், ஆனால் சிறையிலிருந்து வெளியே சென்ற பின் குரானைப் படிப்பதாக தான் அந்த வீரரிடம் சொன்னதாக யுவான் ரிட்லி பின்னர் தெரிவித்தார்.

சிறையிலிருந்த போது...

"நான் சிறையிலிருந்த நாட்களில், அவர்களை கடுமையாக திட்டிருக்கிறேன், அவர்களை நோக்கி உமிழ்ந்திருக்கிறேன், அவர்கள் தந்த உணவை உண்ணாமல் அவர்களை அசிங்கப்படுத்தியிருக்கிறேன். இதையெல்லாம் விட, ஒருநாள், என் ஆடைகளை களைந்துவிட்டு அவர்கள் முன் நின்று அவர்களை சங்கடப்படுத்திருக்கிறேன்.

அப்போது அங்கு வரவழைக்கப்பட்ட தாலிபான்களின் உதவி வெளியுறவுத்துறைஅமைச்சர் (Deputy Foreign Misniter) என்னிடம், நீங்கள் இப்படி செய்வது சரியில்லை, உங்கள் ஆடைகளை திருத்திக்கொள்ளுங்கள், உங்கள் செயல் எங்கள் வீரர்களின் மனதில் தவறான எண்ணங்களை விதைக்கக்கூடும்என்றார்.

இன்னும் சில நாட்களில் அமெரிக்கா இவர்கள் மீது குண்டு வீசப் போகிறது, அதைப்பற்றி இவர்கள் கவலைப்படவில்லை,என் உடையைப்பற்றி தான் அதிகம் கவலைப்படுகிறார்கள். அமெரிக்கா இவர்களை விரட்ட தேவையில்லாமல் பணத்தை செலவழித்துக்கொண்டிருக்கிறது, ஆபாசமாக உடையணிந்த பெண்களை இவர்கள் முன்பு அழைத்து வந்தாலே போதும், இவர்கள் ஓடிவிடுவார்கள்"...

சிறையிலிருந்து வெளியே வந்த இவர் தாலிபன்கள் தனக்கு சிறையில் ஒரு பெண்ணுக்குண்டானமதிப்பை அளித்ததாக தெரிவித்தார். மேலும் அல் கைதாவை பற்றி பத்திரிகைகள் கேட்டபோது அப்படி ஒரு அமைப்பு இருப்பதாகவே தெரியவில்லை என்றார் .அவ்வளவுதான். சில ஊடகங்கள் இவருக்கு "ஸ்டாக்ஹோம் சின்றோம் (Stockholm synrome)" பிரச்சனை இருப்பதாக தெரிவித்தன. இந்த பிரச்சனை இருப்பவர்கள், தங்களை கடத்தியவர்களுக்கு சாதகமாக பேசுவார்களாம். அதுசரி...

தான் சார்ந்த சண்டே எக்ஸ்பிரஸ் பத்திரிகை தன்னை காப்பாற்ற முயற்சி செய்ததை பற்றி குறிப்பிடும் இவர்,

"சண்டே எக்ஸ்பிரஸ்சின் உரிமையாளர் ஒரு யூதர். அவர் என்னைக் காப்பாற்ற ஒரு குழுவை அமைத்து, இஸ்லாமாபாத்தில்உள்ள தாலிபன் தூதரகத்தில் பேச்சுவார்த்தை நடத்தினார்.

அவர்களுக்கு என்ன வேண்டும் என்று கேட்டு கொடுத்துவிடுங்கள், எப்படியாவது ரிட்லியை என்னிடம் கொண்டு வாருங்கள் என்று கட்டளையிட்டுவிட்டார்.

அவர் அமைத்த குழுவின் தலைவர் தாலிபன்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். பேச்சுவார்த்தையின் முடிவில் அவர் சண்டே எக்ஸ்பிரஸ் உரிமையாளரை தொடர்பு கொண்டு பேசினார்.

அவர்களுக்கு எவ்வளவு பணம் வேண்டும் என்று கேட்டீர்களா? ஒரு மில்லியன், இரண்டு மில்லியன்?

இல்லை சார், நான் கொண்டுச்சென்ற காசோலையை திரும்ப கொண்டு வந்துவிட்டேன். அவர்களுக்கு பணமெல்லாம் வேண்டாமாம்..

என்ன பணம் வேண்டாமா, வேறு என்ன வேண்டுமாம், ஆயுதங்களா?

இல்லை சார், அவர்களுக்கு எதுவும் வேண்டாமாம், நம்மைப் போன்றவர்கள் அவர்களுக்கு குறைந்தபட்ச மரியாதை அளித்தால் .(எங்களை பற்றிய உண்மையான செய்திகளை மட்டும் எழுதினாலே ) போதுமாம்

இதனை அந்த குழுத்தலைவர் என்னிடம் விவரித்தார். தாலிபன்கள் மீதான வெறுப்பு உச்சத்தில் இருந்த நேரமது. அவர்கள் சொல்லியதில் நிறைய அர்த்தமிருக்கிறது. மேலும் சண்டே எக்ஸ்பிரஸ் குழுவினர் என்னை காப்பாற்ற எடுத்த முயற்சி அளப்பறியது"
மேலும் தான் சிறையிலிருந்தபோது இஸ்ரேலின் உளவுத்துறை தன்னை கொல்ல சதி செய்ததாகவும், அதன்மூலம் தாலிபன்களின் மீதான போருக்கு ஆதரவு கூடுமென அவர்கள் திட்டம் தீட்டியதாகவும் கூறினார் .

உலக மீடியாக்கள் தீவிரவாதிகள் அல்லது பயங்கரவாதிகள் என்று கூறும் தலிபான்களிடம் கைதியாக இருந்து பின்னர் விடுவிக்கப்பட்டநபர் தான் தலிபான்களை பற்றி நல்லவர்கள் என்று கூறினார்..ஆனால்இன்றுவரை அமெரிக்கக் ஆதரவு மீடியாக்களில் தாலிபான்களை பற்றி கூறும் போது பெண்ணடிமை வாதிகள்..பயங்கரவாதிகள் என்று தான் கூறி வருகிறது..காரணம் அமெரிக்காவின் நோக்கம் ஆப்கனை கைப்பற்றுவது அதில் உள்ள இயற்கை வளங்களை கைப்பற்றுவது .ஒருவேளை அமெரிக்கா ஆப்கனில் கொள்ளையடிக்கவே செல்கிறோம் என்றும் கூறும் பட்சத்தில் நிட்சயம் உலகம் ஏற்றுக் கொள்ளாது .இந்த உண்மை அமெரிக்காவிற்கும் தெரியும்..அதற்காக தான் தங்களின் ஆக்கிரமிப்பை நியாயப்படுத்த தீவிரவாதிகள் அல்லது பயங்கரவாதிகள் பென்னடிமைவாதிகள் ஜனநாயகத்தை நிறுவப்போகிறோம்என்ற பொய்யை மீண்டும் மீண்டும் தனது அடிமை மீடியாக்கள் மூலம் பரப்புகிறது..அமெரிக்க மீடியாக்கள் கூறும் இந்த பொய்களை இன்று வரை நாமும் சிந்திக்காமல் நம்பி வருகிறோம்..ஆனால் ஒன்றை மறந்து விட்டோம் அமெரிக்கா கூறிய பொய்யின் விலை இலச்சக்கனகான ஆப்கன் மக்களின் உயிர்..பல பெண்களை அமெரிக்க ராணுவ வீரர்கள் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கியது பல இலச்சம் குழந்தைகளை அமெரிக்கா கொன்றது .இதை பற்றி நாம் என்றாவது சிந்தித்து இருப்போமா இல்லை என்பதே உண்மை..காரணம் இதை பற்றிய செய்திகளை தான் உலக மீடியாக்கள் என்றைக்கும் நமக்கு கொடுப்பதே இல்லையே..

உலகின் மிகப்பெரிய முட்டாள் யார் என்றால் மீடியாவில் வரும் அணைத்து செய்திகளையும் உண்மை என்று நம்புபவர் தான்.....


Thanks to STELLA FATHIMA
 — with Jalal Udeen and 68 others.


வெள்ளி, 10 மே, 2013

மகாத்மாவை அதிர வைத்த மாமனிதர் உமர் சுப்ஹானி !!!!


தேசவிடுதலைக்காக போராடும் காஙிகிரஸ் பேரியக்கத்தின் பொருளாதார ஆதாரங்களுக்காக நிதி திரட்டும் முயற்சியில் காங்கிரஸ் கமிட்டி முனைந்தது. 1921 மார்ச் 31 – ஆம் தேதி விஜயவாடாவில் கூடிய காங்கிரஸ் கமிட்டி கூட்டத்தில் ஒரு கோடி ரூபாய் நிதி திரட்டுவது என்றும், அந்நிதிக்கு திலகர் நினைவு சுயராஜ் நிதி என்றும் பெயரிட்டனர்.

சனி, 4 மே, 2013

அல்லாஹ்வின் பைலாவை குப்பையில் போட்டுவிட்டார்கள்

அஸ்ஸலாமுஅலைக்கும் ,ஆறாம்பண்ணை முஹிதீன் பள்ளிவாசலுக்கு புதியதாக Bylaws விதிமுறைகள் வகுத்து உள்ளார்கள் .தனது நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்ளவும் மீண்டும் சிலர் நிர்வாகத்தில் புகுந்து ஆதிக்கம் பண்ணவும் அதற்கு தகுந்தவாறு சில விதிமுறைகளை சேர்க்க முடிவு செய்து உள்ளனர் .அந்த விதிமுறைகளை மட்டும் சேர்த்தால் ஒரு பக்கத்தில் அடங்கிவிடும் அனைவரும் படிப்பார்கள் .விசயங்களும் மக்களுக்கு எளிதில் புரிந்து விடும்.இதனால் 5 பக்கங்களுக்கு எழுதினால் படிப்பதற்கு எரிச்சல் அடைந்து கையெழுத்து மட்டும் போடுவார்கள் என்ற நோக்கத்தில் தேவையற்ற விதிமுறைகள் பட்டியலிட்டுள்ளார்கள்
14 கமிட்டி உறுபினர்களை தேர்ந்தெடுக்க வேண்டுமாம் .அப்புறம் அவர்களுக்கு ஆலோசனை வழங்க நமதூரை சேர்ந்த வெளியூரில் உள்ள 5 நபர்களை ஆலோசனை குழுவாக நியமித்துக் கொள்ளலாம் என்றும் விதிமுறை சேர்க்கப்பட்டுள்ளது.அதாவது ஊரில் உள்ள 14 பொம்மைகளை கமிட்டியாக தேர்தெடுத்து 5 நபர்களாகிய நாங்கள் நிர்வாகம் பண்ணுவோம் என்பது இதன் பொருள் .ஏன் இப்படி புறவாசல் வழியாக நுழைய வேண்டும் ?
அவர்கள் 5 பேர்களுமே நிர்வாக தேர்தலில் போட்டியின்றியோ போட்டியிலோ தேர்ந்தெடுக்க படட்டுமே .
நாம் நேரடியாக நின்றால்  மக்கள் நம்மை தேர்ந்தெடுக்க மாட்டார்கள் என்ற அச்சம் உள்ளவர்கள் கள்ளத்தனமாக நுழைவதில் ஆட்சேபனை இல்லை .இந்த அற்ப செயலை ஊரார் அறிந்து கொள்ளவேண்டும் என்பதே எனது விருப்பம்.
நான் 14 பொம்மைகள் என்று கூறியிருப்பது சிலருக்கு தவறாக தெரியலாம்.ஆனால் உண்மையைத்தான் நான் கூறியுள்ளேன் .இப்போது  நிறைவேற்றியுள்ள பல தீர்மானங்கள் மற்றும் சில நடவடிக்கைகள் உறுப்பினர்களில் பாதிபேருக்கு மேல் தெரியாது .அதை நிருபிக்கவும் முடியும்..
கமிட்டி உறுப்பினர்கள் கையெழுத்தையே போர்ஜரியாக தீர்மானத்தில் போட்டுள்ளனர்.
மாதந்திர செலவுகளை சமாளிக்க முடியவில்லை என்று சொன்னார்கள் .அதனால் சந்தாவை 3 மடங்கு உயர்த்த வேண்டும் என்று கூறினார்கள் .இத்தனை குறைவாக வருமானம் உள்ள பள்ளிவாசலுக்கு 40 க்கு மேற்பட்ட விதிமுறைகள் வகுக்க வேண்டிய அவசியம் என்ன?
குறைந்த வருமானம் உள்ள பள்ளிவாசலை நிர்வகிக்க 14 பேர்கள் கொண்ட கமிட்டி மற்றும் 5 பேர்கள் கொண்ட ஆலோசனை குழு எதற்கு ?
அப்து பாரி ஒருவர் மட்டுமே நிர்வகித்த நிர்வாகத்திற்கு 19 பேர்கள் ஏன்? அப்படியெனில் அப்துல்பாரி 19 பேர்களுக்கு சமமா? அவரைவிட இந்த கமிட்டி சாதித்தது என்ன?
அவர்கள் இருந்த 3 வருட காலமும் ரமலான் இரவு தொழுகைக்கு சாபிமத்ஹப் கொள்கைபடி குர்ஆன் முழுவதும் ஓதப்பட்டு இமாமத் செய்ய ஒருவரை நியமிக்க முடியவில்லையே .
எத்தனை இமாம்கள் ? 3 வருடத்தில் 6 இமாம்கள் .
அது மட்டுமா ஒரு ஜும்மா ,சும்மா நடந்ததே .
போலிஸ் ஸ்டேசன் படையெடுப்புகள் .அங்கு சென்று சாதித்தது என்ன?
கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து சாதித்தது என்ன?
2010 இல நிறைவேற்றிய கக்கூஸ் தீர்மானத்தை 2013 இல் கட்டிமுடித்த செயல்பாட்டின் அருமையை சொல்லி பெருமைப்பட முடியுமா?
இமாம்களை கண்ணியப் படுத்திய அற்புத வார்த்தைகளை இங்கு எழுதக் கூட முடியாதே 
இமாம்களுக்கு நாள்கணக்கு பார்த்து சம்பளம் கொடுத்து கொச்சை படுத்தியதை மறக்கமுடியுமா?
இன்னும் எத்தனைகள்?
வாக்களர் பட்டியலின் அடிப்படையில் நிர்வாக கமிட்டி தேர்ந்தெடுக்காமல் சந்தா செலுத்தியவர்களை மட்டுமே பொதுக்குழு உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டு அவர்களே நிர்வாக கமிட்டி யை தேர்தெடுக்க வேண்டும் என்பது புதிய பைலா .இது வரவேற்க்கப்பட வேண்டிய பைலா தான் .ஆனால் இதில் அராஜகம் பண்ண வாய்ப்பு உள்ளது .இதில் அயோக்கியத்தனம் பண்ணினால் அவர்கள் அல்லாஹ்வையும் அவன்தூதரையும் துச்சமென மதிக்கிறார்கள் என்றுதான் கருத முடியும் .அவர்களது அதிகார வெறி இறைபயத்தை நொறுங்க  செய்துவிட்டது .
நிர்வாகிகளாக  வருபவர்கள் தங்கள் மன இச்சை போல விதிமுறை வகுத்தவர்கள் ,அல்லாஹ் குர்ஆனில் கூறிய பைலாவை குப்பை கூடையில் போட்டுவிட்டார்கள் ஆம் .தொழுபவர்களும் சக்காத் கொடுப்பவர்களும் மட்டுமே பள்ளிவாசலை நிர்வகிக்க வேண்டும் என அல்லாஹ் கூறியுள்ளான் .இந்த ஒரு பைலாவை மட்டுமே அல்லாஹ் கூறியுள்ளான் .ஆனால் அந்த அற்புத ஒரே ஒரு பைலாவை தவிர்த்து விட்டு அவன் சொல்லாத ,அவன் தூதர் கற்று தராத அத்தனை விதிமுறைகளையும் பைலாவில் சேர்த்துள்ளனர் .இவர்கள் அல்லாஹ்வின் இல்லத்தை நிர்வகிக்க பைலா எழுதியுள்ளார்களா? அல்லது இவர்கள் முன்னோர்கள் கட்டிய கட்டிடத்தில் சடங்குகள் நடத்த பைலா வகுத்து உள்ளார்களா?
அஹ்லே சுன்னத்காரர்கள் தான் நிர்வாகியாக வேண்டும் .அப்படிஎன்றால் சுன்னத் உடையவர்கள் நிர்வாகியாக வேண்டும் என்று பொருள் .ஒரு முஸ்லிமுக்கும் காபிருக்கும் உள்ள வித்தியாசம் தொழுகை .அந்த தொழுகையை பள்ளிவாசலிலே நிறைவேற்ற வேண்டும் என்று இருக்க நான் வீட்டில் தொழுகிறேன் என்று பொய் சொல்ல கூடிய ஒருவரை .கத்னாவை விட வலியுறுத்தப் பட்ட சுன்னத் தாடியை கத்தரிப்பது ,ஆனால் தாடியை மழித்துக் கொண்ட ஒருவரை முத்தவல்லியாக வைத்துக் கொண்டு அஹ்லே சுன்னத் என்று எழுத வெட்கப் பட்டிருக்க வேண்டாமா? இந்த பைலாவின் படி நீங்கள்  நிர்வாகியாக இருக்க முடியாது என்று அவரை ராஜினாமா செய்ய வைத்திருக்க வேண்டாமா?
மேலும் இவர்கள் வீடு வீடாக தலைக்கட்டு கணக்கெடுத்து விவரங்கள் சேகரித்தது பள்ளிவாசல் வருமனாத்தை அறிவதற்காக அல்ல .அந்த தலை கட்டுகளை சேகரித்து அவர்களில் எத்தனை பேர்கள் ஓட்டு நமக்கு கிடைக்கும் என்பதை கணிக்கவே .
அவர்கள் கணிப்பில் ஏற்பட்ட அச்சம் காரணமாகவே 18 வயதுக்கும் மேற்பட்டவர்கள் சந்தா கட்டினால் அவர்களும் வாக்களிக்கலாம் என்ற பைலாவை சேர்த்துள்ளார்கள் என்ற எனது கருத்தில் தவறு காண முடியாது.