Arampannai ஜமாஅத் தலைவர் .
திரு .வைஸ் .கே.ஏ .முஹம்மது உதுமான்
பஞ்சாயத்துதலைவர்
திருமதி.ஹமிதாஹனிபா ;
கவுன்சிலர் .
திருமதி.சரிபாபசிர்

சனி, 4 மே, 2013

அல்லாஹ்வின் பைலாவை குப்பையில் போட்டுவிட்டார்கள்

அஸ்ஸலாமுஅலைக்கும் ,ஆறாம்பண்ணை முஹிதீன் பள்ளிவாசலுக்கு புதியதாக Bylaws விதிமுறைகள் வகுத்து உள்ளார்கள் .தனது நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்ளவும் மீண்டும் சிலர் நிர்வாகத்தில் புகுந்து ஆதிக்கம் பண்ணவும் அதற்கு தகுந்தவாறு சில விதிமுறைகளை சேர்க்க முடிவு செய்து உள்ளனர் .அந்த விதிமுறைகளை மட்டும் சேர்த்தால் ஒரு பக்கத்தில் அடங்கிவிடும் அனைவரும் படிப்பார்கள் .விசயங்களும் மக்களுக்கு எளிதில் புரிந்து விடும்.இதனால் 5 பக்கங்களுக்கு எழுதினால் படிப்பதற்கு எரிச்சல் அடைந்து கையெழுத்து மட்டும் போடுவார்கள் என்ற நோக்கத்தில் தேவையற்ற விதிமுறைகள் பட்டியலிட்டுள்ளார்கள்
14 கமிட்டி உறுபினர்களை தேர்ந்தெடுக்க வேண்டுமாம் .அப்புறம் அவர்களுக்கு ஆலோசனை வழங்க நமதூரை சேர்ந்த வெளியூரில் உள்ள 5 நபர்களை ஆலோசனை குழுவாக நியமித்துக் கொள்ளலாம் என்றும் விதிமுறை சேர்க்கப்பட்டுள்ளது.அதாவது ஊரில் உள்ள 14 பொம்மைகளை கமிட்டியாக தேர்தெடுத்து 5 நபர்களாகிய நாங்கள் நிர்வாகம் பண்ணுவோம் என்பது இதன் பொருள் .ஏன் இப்படி புறவாசல் வழியாக நுழைய வேண்டும் ?
அவர்கள் 5 பேர்களுமே நிர்வாக தேர்தலில் போட்டியின்றியோ போட்டியிலோ தேர்ந்தெடுக்க படட்டுமே .
நாம் நேரடியாக நின்றால்  மக்கள் நம்மை தேர்ந்தெடுக்க மாட்டார்கள் என்ற அச்சம் உள்ளவர்கள் கள்ளத்தனமாக நுழைவதில் ஆட்சேபனை இல்லை .இந்த அற்ப செயலை ஊரார் அறிந்து கொள்ளவேண்டும் என்பதே எனது விருப்பம்.
நான் 14 பொம்மைகள் என்று கூறியிருப்பது சிலருக்கு தவறாக தெரியலாம்.ஆனால் உண்மையைத்தான் நான் கூறியுள்ளேன் .இப்போது  நிறைவேற்றியுள்ள பல தீர்மானங்கள் மற்றும் சில நடவடிக்கைகள் உறுப்பினர்களில் பாதிபேருக்கு மேல் தெரியாது .அதை நிருபிக்கவும் முடியும்..
கமிட்டி உறுப்பினர்கள் கையெழுத்தையே போர்ஜரியாக தீர்மானத்தில் போட்டுள்ளனர்.
மாதந்திர செலவுகளை சமாளிக்க முடியவில்லை என்று சொன்னார்கள் .அதனால் சந்தாவை 3 மடங்கு உயர்த்த வேண்டும் என்று கூறினார்கள் .இத்தனை குறைவாக வருமானம் உள்ள பள்ளிவாசலுக்கு 40 க்கு மேற்பட்ட விதிமுறைகள் வகுக்க வேண்டிய அவசியம் என்ன?
குறைந்த வருமானம் உள்ள பள்ளிவாசலை நிர்வகிக்க 14 பேர்கள் கொண்ட கமிட்டி மற்றும் 5 பேர்கள் கொண்ட ஆலோசனை குழு எதற்கு ?
அப்து பாரி ஒருவர் மட்டுமே நிர்வகித்த நிர்வாகத்திற்கு 19 பேர்கள் ஏன்? அப்படியெனில் அப்துல்பாரி 19 பேர்களுக்கு சமமா? அவரைவிட இந்த கமிட்டி சாதித்தது என்ன?
அவர்கள் இருந்த 3 வருட காலமும் ரமலான் இரவு தொழுகைக்கு சாபிமத்ஹப் கொள்கைபடி குர்ஆன் முழுவதும் ஓதப்பட்டு இமாமத் செய்ய ஒருவரை நியமிக்க முடியவில்லையே .
எத்தனை இமாம்கள் ? 3 வருடத்தில் 6 இமாம்கள் .
அது மட்டுமா ஒரு ஜும்மா ,சும்மா நடந்ததே .
போலிஸ் ஸ்டேசன் படையெடுப்புகள் .அங்கு சென்று சாதித்தது என்ன?
கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து சாதித்தது என்ன?
2010 இல நிறைவேற்றிய கக்கூஸ் தீர்மானத்தை 2013 இல் கட்டிமுடித்த செயல்பாட்டின் அருமையை சொல்லி பெருமைப்பட முடியுமா?
இமாம்களை கண்ணியப் படுத்திய அற்புத வார்த்தைகளை இங்கு எழுதக் கூட முடியாதே 
இமாம்களுக்கு நாள்கணக்கு பார்த்து சம்பளம் கொடுத்து கொச்சை படுத்தியதை மறக்கமுடியுமா?
இன்னும் எத்தனைகள்?
வாக்களர் பட்டியலின் அடிப்படையில் நிர்வாக கமிட்டி தேர்ந்தெடுக்காமல் சந்தா செலுத்தியவர்களை மட்டுமே பொதுக்குழு உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டு அவர்களே நிர்வாக கமிட்டி யை தேர்தெடுக்க வேண்டும் என்பது புதிய பைலா .இது வரவேற்க்கப்பட வேண்டிய பைலா தான் .ஆனால் இதில் அராஜகம் பண்ண வாய்ப்பு உள்ளது .இதில் அயோக்கியத்தனம் பண்ணினால் அவர்கள் அல்லாஹ்வையும் அவன்தூதரையும் துச்சமென மதிக்கிறார்கள் என்றுதான் கருத முடியும் .அவர்களது அதிகார வெறி இறைபயத்தை நொறுங்க  செய்துவிட்டது .
நிர்வாகிகளாக  வருபவர்கள் தங்கள் மன இச்சை போல விதிமுறை வகுத்தவர்கள் ,அல்லாஹ் குர்ஆனில் கூறிய பைலாவை குப்பை கூடையில் போட்டுவிட்டார்கள் ஆம் .தொழுபவர்களும் சக்காத் கொடுப்பவர்களும் மட்டுமே பள்ளிவாசலை நிர்வகிக்க வேண்டும் என அல்லாஹ் கூறியுள்ளான் .இந்த ஒரு பைலாவை மட்டுமே அல்லாஹ் கூறியுள்ளான் .ஆனால் அந்த அற்புத ஒரே ஒரு பைலாவை தவிர்த்து விட்டு அவன் சொல்லாத ,அவன் தூதர் கற்று தராத அத்தனை விதிமுறைகளையும் பைலாவில் சேர்த்துள்ளனர் .இவர்கள் அல்லாஹ்வின் இல்லத்தை நிர்வகிக்க பைலா எழுதியுள்ளார்களா? அல்லது இவர்கள் முன்னோர்கள் கட்டிய கட்டிடத்தில் சடங்குகள் நடத்த பைலா வகுத்து உள்ளார்களா?
அஹ்லே சுன்னத்காரர்கள் தான் நிர்வாகியாக வேண்டும் .அப்படிஎன்றால் சுன்னத் உடையவர்கள் நிர்வாகியாக வேண்டும் என்று பொருள் .ஒரு முஸ்லிமுக்கும் காபிருக்கும் உள்ள வித்தியாசம் தொழுகை .அந்த தொழுகையை பள்ளிவாசலிலே நிறைவேற்ற வேண்டும் என்று இருக்க நான் வீட்டில் தொழுகிறேன் என்று பொய் சொல்ல கூடிய ஒருவரை .கத்னாவை விட வலியுறுத்தப் பட்ட சுன்னத் தாடியை கத்தரிப்பது ,ஆனால் தாடியை மழித்துக் கொண்ட ஒருவரை முத்தவல்லியாக வைத்துக் கொண்டு அஹ்லே சுன்னத் என்று எழுத வெட்கப் பட்டிருக்க வேண்டாமா? இந்த பைலாவின் படி நீங்கள்  நிர்வாகியாக இருக்க முடியாது என்று அவரை ராஜினாமா செய்ய வைத்திருக்க வேண்டாமா?
மேலும் இவர்கள் வீடு வீடாக தலைக்கட்டு கணக்கெடுத்து விவரங்கள் சேகரித்தது பள்ளிவாசல் வருமனாத்தை அறிவதற்காக அல்ல .அந்த தலை கட்டுகளை சேகரித்து அவர்களில் எத்தனை பேர்கள் ஓட்டு நமக்கு கிடைக்கும் என்பதை கணிக்கவே .
அவர்கள் கணிப்பில் ஏற்பட்ட அச்சம் காரணமாகவே 18 வயதுக்கும் மேற்பட்டவர்கள் சந்தா கட்டினால் அவர்களும் வாக்களிக்கலாம் என்ற பைலாவை சேர்த்துள்ளார்கள் என்ற எனது கருத்தில் தவறு காண முடியாது.

கருத்துகள் இல்லை: