யுவான் ரிட்லி (Yvonne Ridley), நம்மில் பலருக்கும் நன்கு தெரிந்த பெயர். பிரிட்டன் நாட்டைச் சேர்ந்தவர். பத்திரிக்கையாளர், சமூக சேவகர், அரசியல்வாதி என்று பல பரிமாணங்களை கொண்டவர்.
தாலிபன்களை பற்றி இவர் கூறியதாவது
செப்டம்பர் 2001 ன் பிற்பகுதி, சகோதரி யுவான் ரிட்லி அவர்கள் பிரிட்டனின் சண்டே எக்ஸ்பிரஸ் பத்திரிக்கைக்காக பணியாற்றிய நேரம். உலகம், அமெரிக்க இரட்டை கோபுர தாக்குதல்களால் ஸ்தம்பித்திருந்த நேரம். அமெரிக்காவின் சந்தேகக் கண்கள் அப்கானிஸ்தான் மீதும், அதனை ஆளும் தாலிபான்களின் மீதும் வலுவாக விழுந்திருந்த சமயம்.
இந்த சூழ்நிலையில் தான் யுவான் ரிட்லி அவர்கள், தாலிபான்களை பற்றி செய்தி சேகரிப்பதற்காக பாகிஸ்தானில் இருந்து அப்கானிஸ்தானிற்கு புறப்பட்டார். ஆனால் அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது.இருந்தும் மறைமுகமாக அப்கானிஸ்தானிற்குள் நுழைந்து விட்டார். எப்படி? புர்காவை அணிந்து, எல்லையார மக்கள் செல்வது போல் கழுதையின் மீது பயணம் செய்து அப்கானிஸ்தானிற்குள் நுழைந்து விட்டார்.
உள்ளே நுழைந்த சிறிது நேரத்தில், தாலிபன் வீரர் ஒருவரின் முன், கழுதையிலிருந்துதவறி விழுந்து மாட்டிக்கொண்டார். உளவாளி என்று சந்தேகம் எழுப்பி தாலிபன் அரசாங்கம் அவரை சிறையில் தள்ளியது. பதினோரு நாட்கள் சிறைவாசத்திற்குபின்பு, அக்டோபர் 9, 2001ல், தாலிபன்களால் நல்லெண்ண அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டார்.
சிறையிலிருக்கும் போது தன்னை ஒரு தாலிபன் வீரர் இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ள அழைத்ததாகவும், தான் மறுத்து விட்டதாகவும், ஆனால் சிறையிலிருந்து வெளியே சென்ற பின் குரானைப் படிப்பதாக தான் அந்த வீரரிடம் சொன்னதாக யுவான் ரிட்லி பின்னர் தெரிவித்தார்.
சிறையிலிருந்த போது...
"நான் சிறையிலிருந்த நாட்களில், அவர்களை கடுமையாக திட்டிருக்கிறேன், அவர்களை நோக்கி உமிழ்ந்திருக்கிறேன், அவர்கள் தந்த உணவை உண்ணாமல் அவர்களை அசிங்கப்படுத்தியிருக்கிறேன். இதையெல்லாம் விட, ஒருநாள், என் ஆடைகளை களைந்துவிட்டு அவர்கள் முன் நின்று அவர்களை சங்கடப்படுத்திருக்கிறேன்.
அப்போது அங்கு வரவழைக்கப்பட்ட தாலிபான்களின் உதவி வெளியுறவுத்துறைஅமைச்சர் (Deputy Foreign Misniter) என்னிடம், நீங்கள் இப்படி செய்வது சரியில்லை, உங்கள் ஆடைகளை திருத்திக்கொள்ளுங்கள், உங்கள் செயல் எங்கள் வீரர்களின் மனதில் தவறான எண்ணங்களை விதைக்கக்கூடும்என்றார்.
இன்னும் சில நாட்களில் அமெரிக்கா இவர்கள் மீது குண்டு வீசப் போகிறது, அதைப்பற்றி இவர்கள் கவலைப்படவில்லை,என் உடையைப்பற்றி தான் அதிகம் கவலைப்படுகிறார்கள். அமெரிக்கா இவர்களை விரட்ட தேவையில்லாமல் பணத்தை செலவழித்துக்கொண்டிருக்கிறது, ஆபாசமாக உடையணிந்த பெண்களை இவர்கள் முன்பு அழைத்து வந்தாலே போதும், இவர்கள் ஓடிவிடுவார்கள்"...
சிறையிலிருந்து வெளியே வந்த இவர் தாலிபன்கள் தனக்கு சிறையில் ஒரு பெண்ணுக்குண்டானமதிப்பை அளித்ததாக தெரிவித்தார். மேலும் அல் கைதாவை பற்றி பத்திரிகைகள் கேட்டபோது அப்படி ஒரு அமைப்பு இருப்பதாகவே தெரியவில்லை என்றார் .அவ்வளவுதான். சில ஊடகங்கள் இவருக்கு "ஸ்டாக்ஹோம் சின்றோம் (Stockholm synrome)" பிரச்சனை இருப்பதாக தெரிவித்தன. இந்த பிரச்சனை இருப்பவர்கள், தங்களை கடத்தியவர்களுக்கு சாதகமாக பேசுவார்களாம். அதுசரி...
தான் சார்ந்த சண்டே எக்ஸ்பிரஸ் பத்திரிகை தன்னை காப்பாற்ற முயற்சி செய்ததை பற்றி குறிப்பிடும் இவர்,
"சண்டே எக்ஸ்பிரஸ்சின் உரிமையாளர் ஒரு யூதர். அவர் என்னைக் காப்பாற்ற ஒரு குழுவை அமைத்து, இஸ்லாமாபாத்தில்உள்ள தாலிபன் தூதரகத்தில் பேச்சுவார்த்தை நடத்தினார்.
அவர்களுக்கு என்ன வேண்டும் என்று கேட்டு கொடுத்துவிடுங்கள், எப்படியாவது ரிட்லியை என்னிடம் கொண்டு வாருங்கள் என்று கட்டளையிட்டுவிட்டார்.
அவர் அமைத்த குழுவின் தலைவர் தாலிபன்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். பேச்சுவார்த்தையின் முடிவில் அவர் சண்டே எக்ஸ்பிரஸ் உரிமையாளரை தொடர்பு கொண்டு பேசினார்.
அவர்களுக்கு எவ்வளவு பணம் வேண்டும் என்று கேட்டீர்களா? ஒரு மில்லியன், இரண்டு மில்லியன்?
இல்லை சார், நான் கொண்டுச்சென்ற காசோலையை திரும்ப கொண்டு வந்துவிட்டேன். அவர்களுக்கு பணமெல்லாம் வேண்டாமாம்..
என்ன பணம் வேண்டாமா, வேறு என்ன வேண்டுமாம், ஆயுதங்களா?
இல்லை சார், அவர்களுக்கு எதுவும் வேண்டாமாம், நம்மைப் போன்றவர்கள் அவர்களுக்கு குறைந்தபட்ச மரியாதை அளித்தால் .(எங்களை பற்றிய உண்மையான செய்திகளை மட்டும் எழுதினாலே ) போதுமாம்
இதனை அந்த குழுத்தலைவர் என்னிடம் விவரித்தார். தாலிபன்கள் மீதான வெறுப்பு உச்சத்தில் இருந்த நேரமது. அவர்கள் சொல்லியதில் நிறைய அர்த்தமிருக்கிறது. மேலும் சண்டே எக்ஸ்பிரஸ் குழுவினர் என்னை காப்பாற்ற எடுத்த முயற்சி அளப்பறியது"
மேலும் தான் சிறையிலிருந்தபோது இஸ்ரேலின் உளவுத்துறை தன்னை கொல்ல சதி செய்ததாகவும், அதன்மூலம் தாலிபன்களின் மீதான போருக்கு ஆதரவு கூடுமென அவர்கள் திட்டம் தீட்டியதாகவும் கூறினார் .
உலக மீடியாக்கள் தீவிரவாதிகள் அல்லது பயங்கரவாதிகள் என்று கூறும் தலிபான்களிடம் கைதியாக இருந்து பின்னர் விடுவிக்கப்பட்டநபர் தான் தலிபான்களை பற்றி நல்லவர்கள் என்று கூறினார்..ஆனால்இன்றுவரை அமெரிக்கக் ஆதரவு மீடியாக்களில் தாலிபான்களை பற்றி கூறும் போது பெண்ணடிமை வாதிகள்..பயங்கரவாதிகள் என்று தான் கூறி வருகிறது..காரணம் அமெரிக்காவின் நோக்கம் ஆப்கனை கைப்பற்றுவது அதில் உள்ள இயற்கை வளங்களை கைப்பற்றுவது .ஒருவேளை அமெரிக்கா ஆப்கனில் கொள்ளையடிக்கவே செல்கிறோம் என்றும் கூறும் பட்சத்தில் நிட்சயம் உலகம் ஏற்றுக் கொள்ளாது .இந்த உண்மை அமெரிக்காவிற்கும் தெரியும்..அதற்காக தான் தங்களின் ஆக்கிரமிப்பை நியாயப்படுத்த தீவிரவாதிகள் அல்லது பயங்கரவாதிகள் பென்னடிமைவாதிகள் ஜனநாயகத்தை நிறுவப்போகிறோம்என்ற பொய்யை மீண்டும் மீண்டும் தனது அடிமை மீடியாக்கள் மூலம் பரப்புகிறது..அமெரிக்க மீடியாக்கள் கூறும் இந்த பொய்களை இன்று வரை நாமும் சிந்திக்காமல் நம்பி வருகிறோம்..ஆனால் ஒன்றை மறந்து விட்டோம் அமெரிக்கா கூறிய பொய்யின் விலை இலச்சக்கனகான ஆப்கன் மக்களின் உயிர்..பல பெண்களை அமெரிக்க ராணுவ வீரர்கள் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கியது பல இலச்சம் குழந்தைகளை அமெரிக்கா கொன்றது .இதை பற்றி நாம் என்றாவது சிந்தித்து இருப்போமா இல்லை என்பதே உண்மை..காரணம் இதை பற்றிய செய்திகளை தான் உலக மீடியாக்கள் என்றைக்கும் நமக்கு கொடுப்பதே இல்லையே..
உலகின் மிகப்பெரிய முட்டாள் யார் என்றால் மீடியாவில் வரும் அணைத்து செய்திகளையும் உண்மை என்று நம்புபவர் தான்.....
Thanks to STELLA FATHIMA — with Jalal Udeen and 68 others.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக