நமது பள்ளிவாசலின் புனரமைப்பு கமிட்டி இன்சா அல்லாஹ் வரும் 1/07/2012 ஞாயிறு மாலை அசருக்கு பின்னர் அசராத நேரத்தில் 4.30மணியளவில் அவசர கூட்டம் கூட்டப்பட உள்ளது .நாங்கள் பள்ளிவாசல் கட்டவே பணம் தந்தோம் என்றும் ,இப்போது அந்த பணத்தில் கல்யாண மண்டபம் கட்டப்பட்டு பள்ளிவாசலுக்கு ஒரு பக்கம் வருமானம் குவிந்தாலும் ஆனால் நாங்கள் என்ன நோக்கத்திற்கு கொடுத்தோமோ அந்த நோக்கம் நிறைவேறவில்லை.மேலும் இப்போது பள்ளிவாசலை நிர்வகிப்போர் வெறும் வருமான நோக்கத்தையே இலக்காக கொடுள்ளனர். வெள்ளிக்கிழமை ஒருவர் சலாம் சொன்னால் உடன் பாரம்பர்யமிக்க பரபரப்புடன் சலாம் சொன்னவரிடம் காரணம் கேட்டு வழக்கை தீர்க்காமல் வலக்கையால் உண்டியல் சில்லறை எண்ணும் சில்லறை நோக்கத்தோடு அதிகாரமிக்க தொழ வராத செயலாளர் செயல்படுகிறார். இன்னொரு நிர்வாகியோ சிர்க்கின் சிகரமாக உள்ளார்.ஆகவே நாங்கள் இந்த பள்ளிவாசலுக்கு வராத பொழுது நாங்கள் கொடுத்த பணத்தை எங்களிடம் பள்ளிவாசல் கட்ட திருப்பித் தர வேண்டும் ,நாங்கள் தனியாக பள்ளிவாசல் கட்டிக் கொள்கிறோம் என்று பள்ளிவாசலுக்கு பணம் கொடுத்த ஒரு கொள்கையினர் புனரமைப்பு கமிட்டிஇடம் கோரிக்கை வைத்துள்ளனர்.ஆனால புனரமைப்பு கமிட்டியினரோ பணத்தை திருப்பித் தரமுடியாது ,மற்றபடி கடனாக தருகிறோம்,அது பற்றி பரிசிலனை செய்ய வரும் ஜூலை 1ந்தேதி கூட்டட்தை கூட்டி முடிவெடுத்து சொல்லுகிறோம் என்று கூறியுள்ளார்கள் .இதன் பொருட்டு வரும் ஜூலை 1ந்தேதி புனரமைப்பு கமிட்டி கூட்டம் நடை பெற உள்ளது.
முக்கிய குறிப்பு .> இந்த புனரமைப்பு கூட்டம் ரகசியமாக கதவடைத்து கள்ள மசூராகவாக நடை பெறாது என்றும் புனரமைப்பு கமிட்டி உறுப்பினர் அல்லாதவர்களும் கலந்து கொள்ளலாம் .ஆனால் கருத்து தெரிவிக்க கூடாது என்றும் கூறப்பட்டுள்ளது.இடம் பின்னர் அறிவிக்கப்படும் .
முக்கிய குறிப்பு .> இந்த புனரமைப்பு கூட்டம் ரகசியமாக கதவடைத்து கள்ள மசூராகவாக நடை பெறாது என்றும் புனரமைப்பு கமிட்டி உறுப்பினர் அல்லாதவர்களும் கலந்து கொள்ளலாம் .ஆனால் கருத்து தெரிவிக்க கூடாது என்றும் கூறப்பட்டுள்ளது.இடம் பின்னர் அறிவிக்கப்படும் .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக