நேற்று21/5/2012 நடந்த திருமண நிகழ்வில் கலந்து கொண்ட ஒரு மவுலவி மணமக்களை நபிமார்கள் போல் வாழ்த்துவதில் தவறு இல்லை என்று நபி ஸல் அவர்கள் காட்டி தந்த நடைமுறைகளுக்கு மாற்றமாக பேசினார் . திருமணத்தில் நபிமார்கள் வாழ்ந்தது போல வாழ்த்துவது உண்மை என்றால் வாழ்நாள் முழுவதும் நபிமார்கள் வாழ்ந்தது போல வாழுவது ஒருபுறம் இருக்கட்டும்.ஆனால் குறைந்த பட்சம் அந்த திருமணத்திலாவது முஹம்மது நபி ஸல் அவர்கள் திருமணம் செய்தது போல ,அவர்கள் மகள் பாத்திமா [ரலி]அவர்களுக்கு திருமணம் செய்து வைத்தது போல ,இன்னும் நபி[ஸல்] வாழும் பொழுதே நடந்த அவர்களது தோழர்கள் திருமணங்கள் போல இவர்கள் செய்தார்களா?
பைதது ஓதி எந்த நபிமார் மாப்பிளை அழைத்து வந்தார்கள்?
அல்லாஹும்மா அள்ளிப்னபைனஹுமா துஆ எந்த நபிமார்கள் ஓதிக்காட்டினார்கள்?அத்துடன் பதினைந்து நிமிட திருமண துஆ ஓதினார்கள்?
மாப்பிள்ளைக்கு பிஸ்மில்லாஹ் கூறி மாலை அணிவ்த்து மவுலவிகள் அதற்கு ஒரு துஆ ஒதுகிறார்களே இது எந்த நபிமார் செய்தார்கள்?
பெண்வீட்டார் விருந்தை சாப்பிட்டு வருகிறார்களே இந்த மவ்லவிகள் ,எந்த நபிமார் பெண்வீட்டில் திருமண விருந்து என்னும் வலிமாவை வயிறு புடைக்க சாப்பிட்டார்கள்?
பெண்ணுக்கு தாலி கட்டுகிறார்களே இது எந்த நபிமார் செய்தார்கள்?
இன்னும் எத்தனையோ கேள்விகள் கேட்ட்கலாம் .
வரதட்சணை சீர் சீராட்டு ,பெண்வீட்டு விருந்து தாலிகட்டுதல் முதல் ஆரத்தி எடுத்தல் வரை அத்தனை மூட பழக்கங்களுடன் திருமணம் செய்த மவுலவிகளே ! நபிமார்கள் பற்றி பேச தூண்டிவிடுவதற்கும் பேசுவதற்கும் உங்களுக்கு வெட்கமாக தெரியவில்லையா?
யூசுப் [அலை]அவர்களுக்கும் அஜீஸின் மனைவிக்கும் திருமணம் நடந்ததாகவும் அவர்கள்போல வாழ வாழ்த்துவதகா கதைக்கும் சொதப்பல் மவுலவிகளே !
யூசுப் [அலை]அவர்களுக்கும் அஜீஸின் மனைவிக்கும் திருமணம் நடந்ததாகவும் அவர்கள்போல வாழ வாழ்த்துவதகா கதைக்கும் சொதப்பல் மவுலவிகளே !
அந்த அஜீஸின் மனைவிக்கு சுலைகா என்று பெயர் வைத்து காதுகுத்தி கைமடக்கு வாங்கிய ஆளிமுசா யார்?
அஜீஸின் மனைவியான சுலைகா என்று சொல்லப்பட்ட அந்த பெண்ணுக்கும் யூசுப் [அலை] அவர்களுக்கும் திருமணம் நடந்தது என்றால் அஜிஸ் தலாக் சொல்லியிருக்க வேண்டும் .அஜிஸ் தலாக் விட்டாரா?இல்லை அந்த பெண் குலா விட்டாரா ?தீர்த்துவிட்ட ஜமாஅத் எது? பதினாலு பேர் கொண்ட ஆராம்பண்ணை கமிட்டி ஜமாத்தா?
யூசுப் நபி[அலை]அவர்களுக்கும் சுலைகா என்று சொல்லப்பட்ட பெண்ணுக்கும் திருமனம செய்ய பேசி முடித்து வெற்றிலை பாக்கு வாங்கிய பெத்தா யார்?
யூசுப்நபி[அலை] அவர்களுக்கும் சுலைகா என்று சொல்லப்பட்ட பெண்ணுக்கும் பச்சை போட்டு பந்தக்கால் நாட்டி பாத்தியா ஓதியதும் அதன் பின்னர் நிக்காஹ் எழுதி அல்லிப்ன பைனஹும்மா
துஆ ஓதிய மவுலான மௌலவி யாரோ?
அட மானங்கெட்ட மவுலவிகளே !அல்லாஹ்வுடைய இல்லத்தில் இருந்து இப்படி ஒரு கதையா?
திருமண சொற்பொழிவுகளில் வரதட்சணை பற்றி மணிகணக்கில் பேசியுள்ளோம்.மகர் பற்றி பேசுகிறோம் வலிமாபற்றி பேசுகிறோம் மற்றும் மாலை போன்ற மற்ற அனாச்சாரங்களை பற்றி பேசுகிறோம் .அதைவிடவா யூசுப் சுலைகா பற்றி அதிக நேரம் பேசியுள்ளோம் .நிருபிக்க முடியுமா?அதைப் பற்றியெல்லாம் வாய் திறக்காமல் யூசுப் சுலைகாவை நங்கள் முல்லைபெரியாறு கூடங்குளம் பிரச்னை போல பேசினோம் என்று உட்டாலடிக்கும் மட மவுலவி கூட்டமே ! முஸ்லிம்களின் கல்வி வேலை வாய்ப்பு பற்றி கடுகுஅளவேனும் சிந்திக்காமல் மவுலூது சோறுவிலே காலம் கழித்தது மறந்து போச்சா? தாயத்து விற்பதிலே தாலாட்டியது மறந்துவிட்டதா? முல்லை பெரியாறு தமிழகத்துக்கும் கர்நாடகத்துக்கும் உள்ள பிரச்னை .ஆனால் அஜீஸின் மனைவி ,யூசுப்நபி[அலை] அவர்கள் மீது கொண்ட கள்ளக் காதலை அங்கீகரித்து அஜிசுக்கு தெரியாமலே, யூசுப் நபி[அலை] அவர்களுக்கு திருமணம் செய்து வைத்து அவர்கள் போல வாழ்த்துவது கள்ளக் காதலை ஊக்குவித்தது ஆகாதா?
கூடங்குளம் பிரச்னையில் மவுலவிகள் பலர் உண்ணாவிரதம் இருந்து மவுழுத் சாப்பாட்டை தியாகம் செய்தது எலும்பும்தோலுமாக ஆகிவிட்டார்களாமே!அது உண்மையா?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக