Arampannai ஜமாஅத் தலைவர் .
திரு .வைஸ் .கே.ஏ .முஹம்மது உதுமான்
பஞ்சாயத்துதலைவர்
திருமதி.ஹமிதாஹனிபா ;
கவுன்சிலர் .
திருமதி.சரிபாபசிர்

செவ்வாய், 21 ஆகஸ்ட், 2012

பித்ராவை சொல்லி ஓட்டு கேட்டேனா ?


பித்ராவை சொல்லி ஓட்டு கேட்டேனா ?

பித்ரா செய்ததை சுட்டி காட்டி கடந்த பஞ்சாயத்து தேர்தலில் நான் ஓட்டு கேட்டு 
நெட்டில் பிரச்சாரம் செய்ததாக கீழ்க்காணும் 20011 அக்டோபரில் 9,11தேதிகளில் நான் வெளியிட்டுள்ள  கடைசி பத்தியை பிரின்ட் அவுட் எடுத்து அவதூறு பரப்பியுள்ளார்கள் . மஞ்சள் கலரில் அடையாளமிட்டுள்ள பகுதியை 
பாருங்கள் .நான் இதில் பித்ராவை சுட்டிக்காட்டி ஓட்டு  கேட்டதற்கு ஆதாரம் இருக்கிறதா?

ஞாயிறு, 9 அக்டோபர், 2011


தவ்ஹித் ஜமாத்தின் வெற்றி

அஸ்ஸலாமு அலைக்கும், 
                                                             சென்னையில் இருந்து வந்த சுன்னத் ஜமாஅத் தீவிர ஆதரவாளர் பெரியவர் ஒருவர் சொன்னாராம் ,கத்தம் பாத்தியாவில் கலந்து கொள்ள வந்த தனக்கு கடும் ஏமாற்றமே மிஞ்சியதாக கூறியுள்ளார்.மேலும் தனக்கும் ஓத மாட்டார்களோ ,தனது சந்தூக்கிலும் மாலை போட மாட்டார்களோ,அடக்கம் முடிந்த பிறகு முசாபாஹ் இருக்காதோ  என்ற ஆதங்கப் பட்டதாக கேள்விபட்டேன்.அல்ஹம்துலில்லாஹ்..இதுதான் தவ்ஹித் ஜமாத்தின் வெற்றி .எந்த தவ்ஹித் ஜமாத்தை ஒழிக்கப் போவதாக மக்களிடம் பொல்லாங்கு கூறி ஜமாஅத் தேர்தல் கொண்டு வந்தார்களோ அந்த ஜமாத்தாலே இன்று தவ்ஹித் வளர்கிறது.கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் பள்ளிவாசல் நிர்வாகத்தை மாற்றப் போகிறோம் என்று கையெழுத்து வேட்டை நடத்தி வக்ப் வாரியத்திற்கு மனுக்கள் அனுப்பினார்கள் .வக்ப் போர்டின் வழிகாட்டுதலின் படி அப்போது சூப்ரண்டாக இருந்த உதுமான் மைதீன் தலைமையில் தேர்தல் இல்லாமல் நிர்வாகத்தினரை தேர்ந்தெடுக்க கூட்டம் நடத்திய பொழுது இரு தரப்பிலும் உறுப்பினர் பட்டியல்களை கேட்டார். அப்போது அப்துல்பாரி அவர்கள் தலைமையில் ஒரு அணியும் யாக்கூப்  தலைமையில் ஒரு அணியும் பட்டியல் கொடுக்கப்பட்டது இரு தரப்பினரையும் கலந்து நிர்வாகிகளை தேர்வு செய்யலாமா என்பது பற்றி பரிசீலனை செய்தபோது யாக்கூப் தரப்பினர் மறுத்துவிட்டனர்.கூட்டம் தீர்வற்ற நிலையில் இருந்த பொழுது ,நாங்கள் .ஒரு தீர்வை சொன்னோம்.அதாவது பள்ளியில் வைத்து மவ்ளுத் ஓதக்கூடாது ,மவ்லூத் ஒதுபவரை இமாமாக நியமிக்கக் கூடாது என்று எழுதித் தந்துவிட்டு யாக்கூப் அணியினர் மட்டுமே நிர்வாகிகளாக இருந்து கொள்ளட்டும் என்று கூறினோம்.அதற்கு ஒரு சிலர் தவிர மற்றவர்களும் எதிர்த்து தேர்தல் கொண்டு வந்தனர்.எப்படியோ வென்றனர்.ஆனால் நாங்கள் எதை எழுதி  கேட்டோமோ,அதை கண்ணியமான முறையில் பள்ளிவாசலில் வைத்து  எழுதி தராதவர்கள் போலிஸ் ஸ்டேசனில் வைத்து எந்த  காலத்திலும்  மவ்ளுத்  ஓதும் இமாம்களை நியமிக்க மாட்டோம் என்று எழுதி கொடுத்தனர். இதுதான் எங்களுக்கு வெற்றி .இதைத்தானே அன்று நாங்கள் கேட்டோம் அப்போதே கொடுத்தால் நமது டெப்பாசிட் காசு மிஞ்சியிருக்கும்.தேர்தல் செலவுகள் இரு பக்கமும் ஆகியிருக்காது மேலும் நீங்க சென்னைக்கும் நெல்லைக்கும் பல முறைகள் படை எடுத்திருக்க வேண்டாம்.நபி[ஸல்] அவர்கள் காட்டித்தந்த பெருநாள் திடல் தொழுகைக்கு அப்துல் பாரி அவர்களை ஏற்பாடு செய்யுமாறு வேண்டிய போது எங்களது ஆதரவாளர் என்று கூறப்பட்ட அவர் மறுத்தார். ஆனால் இன்று நபி[ஸல்]அவர்கள் கூறியவாறு நாங்கள் நடத்தி காட்டியது போன்று நீங்களும் திடல் தொழுகைக்கு வந்து விட்டீர்கள். இதுதான் எங்களுக்கு வெற்றி .நாங்கள் ஓட்டுகளை எண்ணி அடையும் அற்ப வெற்றியை விட இது போன்ற வெற்றியை எதிர்பாக்கிறோம்.தேர்தலில் நீங்கள் யார் வெற்றி பெற்றாலும் எங்களுக்கு அதில் ஒன்றும் இல்லை.ஆனால் நீங்கள் அனைவரும் தவ்ஹித் கொள்கைகளை பின்பற்ற வேண்டும் என்பதே எங்களது இலக்கு.அதுவே எங்கள் வெற்றி.
நாங்கள் உள்ளாட்சி தேர்தலில் பங்கேற்கவோ ,ஆதரிக்கவோ மாட்டோம் என்று அறிவித்த பிறகும் உங்களது தேர்தல் ஆதாயம் கருதி வேண்டுமென்றே எங்களை எதிர்த்து போட்டியிடுவதாக கூறிவந்ததோடு எஸ்.பீ யூனூஸ் மருமகன் அப்துல் சலாம் என்பவரை நிஜாம் என்ற மது சப்ளையரை தோற்கடிக்க நாங்கள் நாற்பதினாயிரம் கொடுத்து நிறுத்தியுள்ளதாக தொழ வராத செயலாளர் உட்பட சில கழுகுகள் வதந்தி பரப்பி வந்தனர்.சலாம் ஏன் அடுத்தவர்களிடம் பணம் எதிர்பாக்க வேண்டும்?பொய்யை சொன்னாலும் பொருந்த சொல்லவேண்டுமா?மோசடி மன்னன் நிஜாமின் சிறப்புகளை சொல்லி ஓட்டு கேட்க வழியில்லாததால் இவ்வாறு பொய்யை பரப்பி இப்படி ஒரு உள்ளூர்காரனை தோற்கடிக்க வெளியூர்காரனுக்கு பணம் கொடுக்க வேண்டுமா?ஐயோ பாவம் நிஜாம். ஆதலால் அவருக்கு சுன்னத் ஜமாத்தினரே ஓட்டு போடுங்கள் ,என்று பிரச்சாரம் செய்து வருகின்றனர். இந்த பொய்யர்கள் கூறுவதை எல்லாம் உண்மை என்று நம்பி வந்த ஒரு பெரியவர் சுன்னத் ஜமாஅத் வெறியர் , இன்று பிரச்சாரம் செய்ய வந்த அப்துல் சலாமிடமும் அவரது மாமாவிடமும் நாற்பதினாயிரம் பற்றி கேட்டுள்ளார்.விடுவார்களா அவர்கள்? செமையாக வாங்கி கட்டிகொண்டார்.ஆக பெரும் பொய்யர்களே நய வஞ்சகர்களே நாங்கள் உள்ளாட்சி தேர்தல்களை கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை என்னும் நிலையில் எங்களை வம்புக்கு இழுப்பது நியாயமா? உங்களது ஸ்பெசல் சுன்னத் ஜமாஅத் கொள்கைப் படி அண்ணன் நிஜாம் வழியில் சாராயம் கொடுத்து நாடார் தெருவில் ஓட்டு கேட்டது போல் தெருக்களிலும் ஏதாவது பாமாயில் கொடுத்து ஓட்டு கேட்க வேண்டியது தானே ! ஏன் தவ்ஹித் ஜமாத்தையும் சுன்னத் ஜமாத்தையும் உங்கள் அற்ப அரசியல் ஆதாயங்களுக்கும் சேர்மன் வேட்பாளர் போடும் லட்சங்களுக்கும் பயன்படுத்த வேண்டும்? [இறைவன் நாடினால் தொடரும்]

திங்கள், 10 அக்டோபர், 2011


தவ்ஹித் ஜமாத்தின் வெற்றி 2

ஆத்தூரில் பஞ்சாயத்து தலைவராகவும் .ஜமாத்தலைவராகவும்,ஆழ்வார்திருநகர் அதிமுக ஒன்றிய செயலாளராகவும் ஷேக் தாவுத் என்பவர் இருந்தார். இவருக்கு அதிகார மட்டத்திலும் நெருக்கமான தொடர்பு இருந்தது.அடியாட்கள் பலமும் உண்டு.அந்த ஊரில் இவர்  தவ்ஹித் ஜமாத்தை அழித்து விடுவோம் .பொசுக்கி விடுவோம் என்றார்.பல இடையூறுகள் பண்ணினார்.வாடகைக்கு இருந்தவர்களின் வீடுகளை,கடைகளை காலி பண்ணுமாறும் கட்டாயப் படுத்தினார். அத்தனை தடைகளையும் உடைத்தெறிந்து சுன்னத் ஜமாஅத் பள்ளி அருகிலே தவ்ஹித் மார்கஸ் உருவாக்கி ஜும்மா மற்றும் ஐவேளைகள் தொழுகைகளும் நடை பெற்று வருகிறது.தவ்ஹித் ஜமாஅத் உறுப்பினர்கள் நமதூரை விட மிகக் குறைவாக இருந்தும் பலமிக்க ஷேக் முகம்மதுவால் தவ்ஹித் ஜமாத்தின் சுண்டு விரலைக் கூட அசைக்க முடியவில்லை.இன்னும் இந்த தடவை அவருக்கு போட்டியிட அதிமுக சீட்டும் கிடைக்காமல் போயிற்று.இவர் எந்த டி.எஸ்.பி.யைவைத்து ஆட்டம் போட்டாரோ அவர் ஓரிரு மாதங்களில் இட மாற்றம் செய்யப்பட்டார்.இதை இங்கே சொல்லுவதற்கு காரணம் என்னவெனில் ,கள்ள ஜமாத் வேட்பாளர்களுக்கு ஆதரவு தேடும் பொய்யர்கள் கூட்டம் ,'நாங்கள் பிரெசிடென்ட் தேர்தலில் வெற்றி பெற்றால் , போலீஸை வைத்து தவ்ஹித் ஜமாத்தை ஒன்றும் இல்லாமல் ஒடுக்கி விடுவோம் .இப்போதைய ப்ரெசிடென்ட் ஹனிபா ,தவ்ஹித் ஜமாத்துக்கு  ஆதரவாக் இருப்பதால் தான் ஒன்றும் செய்ய முடிய வில்லை.என்றும் வெளியூர் பண்ணை  மக்களிடம் நமதூரில் பெரும் பிரச்னைகளும் தகராறுகளும் அதனால் தான் ஜமாத்தில் இருந்து போட்டியிடுகிறோம் என்றும் அதனால் எங்களுக்கு ஆதரவளிக்குமாறு வேண்டி வருகிறார்கள் .பஞ்சாயாத்தை கைப்பற்றி தங்கள் அதிகார ஆட்டம் போட்டு கமிசனிலும் பங்கு போடவே அன்றி வேறொன்றுமில்லை.இவர்கள் இதைப்போல் ஜமாஅத் தேர்தலில் இரண்டாவது ஜமாத்தை நிறுத்திவிடுவோம் என்று சொன்னார்களே முடிந்ததா?நாங்கள் ஏற்கனவே சொன்னது போல் பள்ளிவாசலில் வைத்து எழுதி கேட்டதை போலிஸ் ஸ்டேசனில் இன்ஸ்பெக்டரிடம் ஏச்சுக்கள் வாங்கி எழுதி கொடுத்தனர்.
மீரா ஸ்கூலை கைப்பற்ற திட்டம் போட்டார்கள். அதற்கும் காரணம் தவ்ஹித் ஜமாஅத் அதை வைத்துதான் வளர்ந்துவிட்டார்கள். அங்கு படிக்கும் மாணவர்களிடம் தவ்ஹித் ஜமாஅத் பற்றி பிரச்சாரம் செய்து இளைஞர்களை வழிகெடுத்து விட்டதாகவும் பொய்யர்கள் அவதூறுகளை சொல்லி வந்தனர்.அது உண்மை என்றல் அதிகமான மாணவர்கள் தவ்ஹித் மர்கசில் அல்லவா தொழுகைக்கு வரவேண்டும்.?நேரில் கண்கூடாக பார்க்கும் விசயங்களிலே இப்படி பச்சை பொய்.சொல்லுகிறார்கள்.தவ்ஹித் ஜமாத்தை சேர்ந்தவர்கள் பிள்ளைகள் கூட தவ்ஹித் மர்கசுக்கு தொழுகைக்கு வருவதில்லை.ஸ்கூலில் கல்வி மட்டுமே இருக்கிறதே தவிர அங்கு மார்க்கம் பற்றி எந்த பாடங்களும் நடக்கவில்லை.இவர்கள் சொல்லை நம்பி என்னிடம் கல்வியாளர் ஒருவர் கேட்டார்."தவ்ஹித் பற்றி பள்ளியில் பாடம் எடுக்கிறீர்களா"?என்று. இவர்களது நோக்கம் ஸ்கூலை கையாள வேண்டும் என்பதே.மீரா ஸ்கூலை வைத்துத்தான் ஆறாம் பண்ணையில் தவ்ஹித் வளர்ந்தது உண்மை என்றால் ,செய்துங்கநல்லூரில் எந்த ஸ்கூல் இருக்கிறது?அங்கு தவ்ஹித் ஜமாஅத் ஒரு பழைய பள்ளிவாசல் இருந்ததை புனரமைப்பு செய்து நமதூரை விட சிறப்பாக ஏசி பள்ளிவாசலாக செயல்பட்டு வருகிறதே.இன்னும் தவ்ஹித் ஜமாஅத் தமிழகம் முழுவதும் மிகவும் சிறப்பாகவும் சீரிய முறைகளிலும் செயல்பட்டு வருகிறதே .அந்த ஊர்களில் எந்த ஸ்கூல் உள்ளது?
அன்பு சகோதரர்களே, இந்த பொய்யர்கள் தங்களது அபிலாசைகளையும் அற்ப அதிகார வெறிகளையும் நிறைவேற்றவே தவ்ஹித் ஜமாத்தை காரணம் காட்டி வருகிறார்கள்.தவ்ஹித் ஜமாஅத் என்ன பாவம் செய்தது?
இன்று பல இளைஞர்களை நபி வழியில் திருமணங்கள் செய்கிறார்களே அது பாவமா?வட்டியில்லா கடன் வழங்கியது பாவமா? கல்வி உதவி,மருத்துவ உதவி ,ரத்ததானங்கள் செய்கிறோமே அவைகள் பாவமா?பித்ராவை முறையாக வசூல் செய்து ஏழைகளுக்கு வழங்குகிறோமே ,கூட்டு குர்பானி மூலம் ஏழைகளுக்கும் பயன் கிடைக்க செய்கிறோமே அவைகள் எல்லாம் பாவமா?மொத்த முஸ்லிம் சமுதாய நலன்களுக்கு போராட்டங்கள் நடத்துவதுதான் பாவமா? சிந்தியுங்கள் .அயோக்கியர்களை அடையாளம் காணுங்கள்.
பின் குறிப்பு ;தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத் பற்றி இவர்கள் வெளியிட்ட 
தேர்தல் பிரசார துண்டு பிரசுரத்தில் குறிப்பிட்டதால் 
தவ்ஹித்ஜமாஅத் மாநில  தலைமையிடம் தொடர்பு கொண்டு
 தேர்தலில் பங்கேற்பது பற்றி கேட்டோம் .முதலில் மறுத்துவிட்டார்கள்.அந்த சமயத்தில் எழுதப்பட்டது.
அதன் பின்னர் அவர்கள் பரிசீலனைக்கு 
பின்னர் இது போன்று தஞ்சாவூரிலும் ஓரிரு கிராமங்களில் 
பஞ்சாயத்து தேர்தல் நிலை உள்ளதால் ஆராம்பன்னைக்கும் 
அந்த ஊர்களுக்கு மட்டும் தேர்தலில் டிஎன்டிஜே 
கொடி ,பேனர் இல்லாமல் பிரச்சாரம் செய்து கொள்ளுங்கள் 
என்று அனுமதி வழங்கினார்கள் . இது பற்றி பீஜே அவர்கள் 
நெல்லையில் நடந்த பொதுகுழுவிலும் குறிப்பிட்டார் .

கருத்துகள் இல்லை: