Arampannai ஜமாஅத் தலைவர் .
திரு .வைஸ் .கே.ஏ .முஹம்மது உதுமான்
பஞ்சாயத்துதலைவர்
திருமதி.ஹமிதாஹனிபா ;
கவுன்சிலர் .
திருமதி.சரிபாபசிர்

திங்கள், 3 செப்டம்பர், 2012

மோடி எடுபிடிகளின் பயங்கர செயல்களும் கோர்ட்டின் தீர்ப்பும்

 வினவு ,லிருந்து ,,,,


பாபு-பஜ்ரங்கி-மாயா-கோத்னானி
பாபு பஜ்ரங்கி – மாயா கோத்னானி
2002 குஜராத் இனப்படுகொலையிலேயே ஆகக் கொடியதான நரோதா பாட்டியா படுகொலையின்தீர்ப்பு வெளிவந்திருக்கிறது. குற்றம் சாட்டப்பட்டோரில் 32 பேர் தண்டிக்கப் பட்டிருக்கின்றனர் 29 பேர் விடுவிக்கப் பட்டிருக்கின்றனர். மோடியின் அமைச்சரவையில் பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சராக இருந்த மாயா கோத்னானிக்கு 28 ஆண்டுகள் சிறை. பாபு பஜ்ரங்கிக்கு சாகும் நாள் வரை சிறை.
கோத்ரா சம்பவத்துக்கு மறுநாளே நடைபெற்ற இந்தப் படுகொலையில் கொல்லப்பட்ட முஸ்லிம் மக்கள் 97 பேர். அவர்களில் 36 பேர் குழந்தைகள், 35 பேர் பெண்கள். 9 மாத கர்ப்பிணியான கவுசர் பீ என்ற பெண்ணின் வயிற்றைக்கிழித்து சிசுவை வெளியே இழுத்து வெட்டிக் கொன்ற குற்றவாளிகள்தான் தற்போது தண்டிக்கப்பட்டிருப்பவர்கள்.
சிறுமிகளும் பெண்களும் கணவன்மார்களின் கண் முன்னே, சகோதரர்களின் கண் முன்னே கும்பல் வன்புணர்ச்சிக்கு ஆளாக்கப்பட்டு பின்னர் கண்டதுண்டமாக வெட்டிக்கொல்லப்பட்டதும், படுகொலையெல்லாம் நடத்தி முடித்தபின், கொல்லப்பட்ட மக்களின் உடல்கள் அப்பகுதிக்கு அருகில் இருந்த ஒரு பாழுங்கிணற்றில் வீசப்பட்டதும் நரோதா பாட்டியாவில்தான்.
பாபு பஜ்ரங்கி ஒரு மனித மிருகம். “நான் பஜ்ரங்கி, நரோதா வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவன்” என்று பெருமையாக ஊடகங்களுக்கு பேட்டி கொடுத்தவன். “கொலைகளையும் வன்புணர்ச்சிகளையும் முடித்தபின்னர் நான் என்னை ஒரு ராணா பிரதாப் போல உணர்ந்தேன்” என்று தெகல்காவுக்கு பேட்டி கொடுத்தவன்.
இந்தப் படுகொலையின் சூத்திரதாரி (kingpin) என்று நீதிபதியால் சித்தரிக்கப்பட்டிருக்கும், மாயா கோத்னானிதான் இத்தனை அக்கிரமங்களையும் தலைமை தாங்கிய நடத்தியவள். பெண்கள் மீது நிகழ்த்தப்பட்ட எல்லா வன்முறைகளும் மாயாவின் கண் பார்வையில்தான் நடந்தன.
மாயா ஒரு கைனகாலஜிஸ்ட். தாய் சேய் நல மருத்துவர். 2002 இல் அந்த தொகுதியின் எம்.எல்.ஏ. வாக இருந்த மாயாவை அமைச்சராக்கி அவருக்கு பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை வழங்கினார் மோடி.
தீஸ்தா சேதல்வாத் உள்ளிட்ட பல அர்ப்பணிப்புணர்வு மிக்க வழக்குரைஞர்கள் மற்றும் அமைப்புகளின் முயற்சியால், நரோதா பாட்டியா வழக்கின் புலன் விசாரணையை உச்சநீதிமன்றம் தனது நேரடி கண்காணிப்பில் எடுத்துக் கொண்டு, சிறப்புப் புலனாய்வுக் குழுவை நியமித்த பின்னர்தான் விசாரணை நகர்ந்தது.
அமைச்சராக இருந்த மாயாவை போலீசு பாதுகாப்புடன் தலைமறைவாக அனுப்பி வைத்தார் மோடி. தன்னை மவுன்ட் அபுவில் தங்க வைத்து மோடி பாதுகாத்தாரென்று தெகல்கா வீடியோவில் வாக்குமூலமே கொடுத்திருக்கிறான் பஜ்ரங்கி. நரோதா பாட்டியா வெறியாட்டம் நடக்கும்போது, அங்கிருந்தபடியே மாயா கோத்னானி பலமுறை முதல்வர் அலுவலகத்துடன் தொலைபேசியில் பேசி, தங்கள் சாதனைகளை லைவ் ரிலே செய்திருக்கிறார்.
சாட்சி சொல்லிய பலர் படுகொலை செய்யப்பட்ட நிலையிலும், நீதி பெறுவதற்காக தம் உயிரைப் பணயம் வைத்திருக்கிறார்கள் இந்த வழக்கில் சாட்சி சொன்ன முசுலீம் மக்கள். இன்னமும் மோடியின் குஜராத்தில், அதே நரோதா பாட்டியாவில் குடியிருந்தபோதிலும், எள்ளளவும் அச்சமின்றி நீதிமன்றத்தில் சாட்சி சொன்ன பெண்களின் தைரியம்தான் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவதற்கு மிக முக்கியமான காரணம் என்கிறார் தீஸ்தா சேதல்வாத்.
அதுமட்டுமல்ல, கலவரத்தில் ஈடுபட்ட காலாட்படையினரை மட்டுமின்றி, அதற்கு தலைமை தாங்கி வழிநடத்தியவர்களையும் தண்டித்திருப்பது இத்தீர்ப்பின் சிறப்பம்சம் என்கிறார் தீஸ்தா.
கோத்ரா படுகொலையினால் ஆத்திரம் அடைந்த இந்துக்களின் எதிர்வினைதான் குஜராத் படுகொலை, என்ற வாதத்தை தனது தீர்ப்பில் நிராகரித்திருக்கிறார் நீதிபதி திருமதி. ஜியோத்ஸ்னா யாக்னிக்.  இது திட்டமிட்ட சதி என்று அழுத்தம் திருத்தமாக கூறியிருப்பதுடன், சதிக்குற்றத்துக்காக தண்டித்துமிருக்கிறார். அது மட்டுமல்ல, மோடியின் போலீசு மாயா கோத்னானியைப் பாதுகாத்தது என்பதையும் தனது தீர்ப்பில் பதிவு செய்திருக்கிறார் யாக்னிக்.
நரோதா தீர்ப்பு கூறும் செய்தியாக பா.ஜ.க கூறுவது என்ன? மோடியைப் பற்றி அவதூறு செய்தவர்களின் வாயை இத்தீர்ப்பு அடைத்திருக்கிறதாம். மோடி அரசின் நடுநிலையை நிரூபித்திருக்கிறதாம். ஆனால் இதை கோத்னானியும், பாபு பஜ்ரங்கியுமல்லவா சொல்ல வேண்டும்?
UthayamSeptember 4, 2012 at 12:02 am 
4
பாபு பஜ்ரங்கி ஒரு மனித குல விரோதி. இப்போது தூக்கு தண்டனை கொடுக்கப்பட்டுள்ள அஜ்மல் கசாப்புக்கு கொஞ்சம் கூட சளைத்தவனல்ல இந்த மனித மிருகம். இருவரும் அப்பாவிகளை கொன்று குவித்தவர்கள் என்ற நிலையில் சமமானவர்கள் என்றாலும் முஸ்லிம்கள் கொல்லப்படுவதை ரசித்து அனுபவித்து அவர்கள் துடிதுடித்து செத்து மடிவதை சந்தோசமாக பார்த்தது மட்டுமின்றி அதனை தெகல்கா நிருபரின் விடியோ முன் பெருமிதப்பட்டான். இவன் இப்படி முஸ்லிம்களை துடிக்க விட்டு கொல்லப்படுவதை ரசிக்குமளவிற்கு இவனை உருவாக்கியது “ஹிந்துத்துவ பயங்கரவாதம்”. மனித குல விரோதிகளை பாசறைகளில் வளர்த்து வரும் இந்து வகுப்புவாத இயக்கங்களை வெளிச்சத்திற்கு எந்த ஊடகங்களும் கொண்டு வர தயாரில்லை.
“அவர்களை(முஸ்லிம்களை) நாங்கள் விரட்டிச் சென்று ஒரு குழியில் தள்ளினோம். அவர்கள்அஞ்சி நடுங்கி ஒருவரையொருவர் கட்டிப்பிடித்துக் கொண்டனர். முந்தையதினம் சேகரித்த பெட்ரோலையும், டீசலையும் அவர்கள் மீது ஊற்றினோம். பின்னர் டயர்களை தீவைத்து அவர்கள் மீது வீசினோம்”- இரத்தத்தை உறைய வைக்கும் இந்த வார்த்தைகளுக்கு சொந்தக்காரன் தாம் பாபு பஜ்ரங்கி.
பாபு பஜ்ரங்கியின் கொள்கைகள்??
இந்த நாட்டில் முஸ்லிம்களைக் கொல்ல மத்தியரசே உத்தரவிடவேண்டும். அவர்களை கொல்ல, உயர் ஜாதி இந்துக்கள் வீதிக்கு வர தேவையில்லை. பழங்குடி மற்றும் தாழ்த்தபட்ட மக்களிடம், முஸ்லிம்களை கொன்று அவர்களின் சொத்துக்களை சூறையாடிக்கொள்ளுங்கள் என்று சொன்னால் போதுமாம், முஸ்லிம்கள் அனைவரும் மூன்று நாட்களில் இந்தியாவிலிருந்து துடைத்தெறியப்படுவார்களாம்.
கவுசர் பானு என்ற கர்ப்பினியின் வயிற்றைக் கிழித்து அந்த சிசுவை சூலாயுதத்தால் குத்தி தீயிலிட்டு பொசுக்கியவn இவன் தான். இதனையும் அந்த விடியோ முன் பெருமையாக சொன்னவன் “இன்னொரு வாய்ப்பை மோடி சாப் கொடுத்தாலும் சந்தோஷமாக அவர்களை (முஸ்லிம்களை) கொல்வேன்” என்றான். இந்த காட்சியை நேரில் கண்ட, கவுசர் பானுவின் கணவர் பித்து பிடித்தவர் போலானார். கடந்த வருடங்களில் நடை பிணமாக வாழ்ந்த அவருக்கு பாபு பஜ்ரங்கிக்கு எதிரான இந்த தீர்ப்பு பெரிய சந்தோசத்தை கொடுத்திருக்க வேண்டும். அவர் அழுததை பார்த்தவர்கள் எல்லாம் தங்களது உணர்வுகளை கட்டுப்படுத்த முடியாமல் கண்கள் கசிந்தனர்.
ஒரிஸ்ஸாவில் காவிமயமான பள்ளிக்கூடங்களில் கூட முஸ்லிம்களை வெறுப்பதை பாடப்புத்தகங்களில் பாடமாக வைத்திருக்கிறார்கள். அப்பட்டமான முஸ்லிம் வெறுப்பு என்பதை இந்த சங்பரிவார் பயங்கரவாதிகள் எப்படியெல்லாம் விதைக்கிறார்கள் என்று பார்ப்போம். ஒரு முஸ்லிம் தனது வாழ்நாளில் ஏழு மாடுகளை உண்கிறானாம். ஒரு முஸ்லிமை கொன்றால் எத்தனை மாடுகளை காப்பாற்ற முடியும் என்று கணிதப்பாடத்தில் கேள்வி வருகிறது. வெறுப்பை எங்கே விதைக்கிறார்கள் பாருங்கள். இங்கு முஸ்லிம்களுக்கு எதிராக பெரிய சதிவலை எல்லா வகையிலும் பின்னி வருகிறது காவி பயங்கரவாதம், அதில் வெற்றியும் பெற்று வருகிறது. இந்துத்துவ பயங்கரவாதத்தை ஊடகங்கள் வெளிக்கொணருவார்கள் என்று எதிர்பார்ப்பது அவநம்பிக்கையாக போய்விடுமோ என்ற அச்சம் ஏற்படுவதை தவிர்க்க முடியவில்லை. தீஸ்டா வுக்கு இந்திய முஸ்லிம் சமூகம் கடமைபட்டிருக்கிறது. சகோதரி.. உங்களின் போராட்ட குணத்திற்கும் நேர்மைக்கும் நன்றி.
கொடூர குற்றமும் புரிய ஊக்கப்படுத்தியதோடு அதற்கு மறைமுகமாக ஆதரவும் கொடுத்து தூண்டிவிட்டு , தூண்டப்பட்டவர்கள் செய்த மனித தன்மையற்ற செயல்களை மூடி மறைக்கவும் செய்த ஒரு நாயை செருப்பால் அடிக்காமல், வருங்கால பிரதமர் என்று துதி பாடும் வெறி பிடித்த கூட்டமா இந்தியாவின் எதிர்காலத்தை நிர்ணயிக்கப்போகிறது?? எவ்வளவு பெரிய ஒரு உண்மை வெளிப்பட்டிருக்கிறது ஆனால், காவிமயமான காவல்துறை இன்னமும் தீவிரவாதிகளை முஸ்லிம் சமூகத்தில் தான் தேடிக்கொண்டிருக்கிறார்கள். எத்தனை தடைகளை மீறி இந்த நரோடா தீர்ப்பு வந்திருக்கிறது என்று பின்னோக்கி பார்க்கும் போது தான் தெரிகிறது நியாயத்தின் குரல்வலையை நெறிக்க எத்தனை அநியாயவாதிகள் முயன்றிருக்கிறார்கள் என்று.

1 கருத்து:

சிரிப்புசிங்காரம் சொன்னது…

இந்த தீர்ப்பின் மீது ஹிந்துக்களுக்கு நம்பிக்கையில்லை.........உண்மையாக இருந்தால்கூட இறைவன் அவர்களுக்கு இந்த உலகத்திலும், பரலோகத்திலும் நற்கதியை அருளுவான்