Arampannai ஜமாஅத் தலைவர் .
திரு .வைஸ் .கே.ஏ .முஹம்மது உதுமான்
பஞ்சாயத்துதலைவர்
திருமதி.ஹமிதாஹனிபா ;
கவுன்சிலர் .
திருமதி.சரிபாபசிர்

ஞாயிறு, 12 ஆகஸ்ட், 2012

உண்மைகள் உசைன் காச்சாவை ஊமையாக்கி விட்டதா என்ன?

[தலைப்பு மாற்றம்]
வெளிநாடுவாழ் சகோதரர்களுக்கு அஸ்ஸலாமுஅலைக்கும் ,
                                            புனரமைப்பு  கமிட்டி பைலாவின் படி பொதுக் குழு கூட்டம் நடத்தி புனரமைப்பு கமிட்டி நிர்வாகத்தை புதிதாக தேர்தெடுத்து வங்கியில் பணத்தை பெற்றுக் கொள்ளுங்கள் என்று பலமுறைகள் கூறியிருந்தோம் .ஆனால் கடந்த 12/09/2012 அன்று பொது குழுவை கூட்டினார்கள்.மினிட் புக்கில் கலந்து கொண்டவர்கள் என்ற தலைப்பில் கையெழுத்து பெற்றார்கள்,இக்கூட்டத்தில் மகபூப் அலி தலைமை தாங்கி நடத்தினார்.இதில் அனைத்து மக்களும் கலந்து கொண்டனர் .இந்த கூட்டத்தில்
  நம்பிக்கை கொண்டோரே! ஊகங்களில் அதிகமானதை விட்டு விலகிக் கொள்ளுங்கள்! சில ஊகங்கள் பாவமாகும். துருவித் துருவி ஆராயாதீர்கள்! உங்களில் ஒருவர் மற்றவரைப் புறம் பேசாதீர்கள்! உங்களில் எவரேனும் இறந்த தமது சகோதரனின் மாமிசத்தைச் சாப்பிட விரும்புவாரா? அதை வெறுப்பீர்கள். அல்லாஹ்வை அஞ்சுங்கள்! அல்லாஹ் மன்னிப்பை ஏற்பவன்; நிகரற்ற அன்புடையோன்.என்ற குர்ஆன் வசனத்தை ஒரு ஆலிம் துவக்கத்தில் வாசித்தார்.
 முன்னாள் பள்ளிவாசல் தலைவர் பற்றி இந்நாள் இ.செ அவதூறு பரப்பியதை ஆதாரத்துடன் இந்த வசனத்தை சுட்டிக்காட்டி கேட்டோம்.
அடுத்து தொவ செயலாளர் மகன் பள்ளிவாசலில் வைத்து ஒருவரை கிண்டல் செய்ததினால் வந்த பிரச்னையில் அந்த பொடியனை கண்டிக்காமல் ,தனி நபர் பிரச்னைக்காக பள்ளிவாசல் லட்டர் பேடில் போலீசிடம் புகார் கொடுத்தது பற்றி கேட்டோம் ..நாங்கள் அவ்வாறு பள்ளிவாசல் பேடில்  கொடுக்கவில்லை என்று  தலைவர் கூறினார்.நாங்கள் கொடுத்த புகாரின் நகலை காட்டுவதாக சொன்னார்.ஆனால் இதுவரை காட்டப்படவில்லை .போகட்டும் 
அதன் பிறகு தீர்மானம் என்னவென்று கேட்கப்பட பொழுது நான்கு கழிப்பறைகள் கட்டப் போவதாக கூறினார்கள்.அந்த தீர்மானம் நிறைவேறியதும் வேறு தீர்மானங்கள் இல்லை என்று கூறப்பட்டது.மகபூப் அலி மீண்டும் கேட்டார் .இது ஒரு தீர்மானம் மட்டுமே என்று கூறப்பட்டது.புனரமைப்புகமிட்டி பற்றி கேட்டதற்கு அதன் தலைவர் அப்துல் பாரி அவர்கள் இப்போது உம்ரா சென்றுள்ளதால் அவர் வந்த பிறகு அது பற்றி பேசலாம் என்று கூறப்பட்டது.அதன் பிறகு ஈசாவின் கூச்சலால் குழப்பம் ஏற்பட்டு போலீசார் தலையிட்டு கூட்டம் முடிவடைந்தது என்பதை னைவரும் அறிவார்கள்.
ஆனால் இந்த பொது குழுவில் புனரமைப்பு கமிட்டி நிர்வாகத்தை புது பள்ளிவாசல் கமிட்டி  ஏற்றுக் கொள்வதாகவும் ,வரதட்சணை மாப்பிள்ளைக்கு பள்ளிவாசலில் நிக்காஹ் நடத்த அனுமதிக்க கூடாது என்றும் ஐந்து தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டதாக போலிதீர்மானங்களை தயார் செய்து  கமிட்டி உறுப்பினர்கள்  உட்பட சிலரின் கையெழுத்துகள் போடப்பட்டுள்ளது.அதில் சில கமிட்டி உறுப்பினர்களின்  கையெழுத்துக்கள் போர்ஜரி என்பது தெளிவு .. பொதுகுழுவில் கலந்து கொண்டவர்களின் கையெழுத்து களையும் இந்த போலி தீர்மானங்களுக்கு ஆதரவு தெரிவித்ததாகவும் காட்டப்பட்டுள்ளது. 

அதைப்போல 22/07/2011 அன்று ஜும்மாவில் பள்ளி விரிவாக்கம் பற்றி வக்ப்  போர்டில் அனுமதிக்காக  மனு செய்ய  உள்ளதால் அதற்க்கு அனைவரும் ஆதரவு  தெரிவித்து கையெழுத்து போடுமாறு வேண்டிக் கொண்டனர்.. இவ்வாறு ஜமாத்தினரின் கையெழுத்துக்களை பெற்று ,அன்று பொதுக்குழு கூட்டம் நடந்ததாகவும் அதில் புனரமைப்பு கமிட்டி உறுப்பினர்களாக  தேர்ந்தெடுக்கப் பட்டு ,அபுல்ஹசன்,பசீர் ஆகிய இருவரும் வங்கி வரவு செலவு அத்தாரிட்டியாக  தேர்வு செய்யப் பட்டதாக கூறப் பட்டுள்ளது 
பொதுகுழு  நடத்தாமல் பொதுக்குழு நடத்தியதாக மினிட் புக்கில் பதிவு செய்துள்ளனர் 
இந்த இரண்டு போலி கூட்டத்தின் தீர்மானங்களையும்  கொடுத்து வங்கி பணத்தை கைப்பற்ற முயற்சித்து உள்ளனர்.அத்துடன் பள்ளிவாசல் கமிட்டி தேர்வு செய்யப்ப் பட்டதற்கான வக்ப் அங்கீகார நகலையும் கொடுத்துள்ள்ளனர்.அதை   பெற்றுக் கொண்ட வங்கி அதிகாரி operating authorities மாற்றினாலும் வரவு செலவு பண்ணுவதை நிறுத்தி வைத்துள்ளார் 
இதில் குறிப்பிடும் விஷயம் என்ன வென்றால் S.A.அபுல் உசேன் என்று ஓரிடத்தில்  கையெழுத்து உள்ளது..இன்னொரு இடத்தில் S.Aஅபுல் ஹசன் என்றும் கையெழுத்து உள்ளது . டிஎம் எ  யாக்கூப் அவர்களின் கையெழுத்துமூன்று  விதமாக உள்ளது.கையெழுத்து வித்தியாசம் மட்டும் அல்ல .பெயரின் ஸ்பெல்லிங்கும் வித்தியாசமாக உள்ளது yacoob என்றும் yacoof என்றும் yookof என்றும் மூன்றுவிதமாக் உள்ளது 
ஒரு உறுப்பினர் ஒரே நாளில் ஒரு இடத்தில் ஆங்கிலத்திலும் இன்னொரு இடத்தில் தமிழிலும் கையெழுத்து இட்டுள்ளார்.இன்னும் பல குளறுபடிகள் உள்ளன.
இதைப் பற்றி கேட்டால் இன்று வரை மவுனம் சாதிக்கிறான் .வங்கியில் இவன்தான் வாதம் பண்ணிஇருக்கிறான் .
நமக்கு வெட்ட வெளிச்சமாக தெரிந்த விசயங்களிலே இத்தனை மோசடி செய்துள்ள நிஜாமுத்தின் என்ற ஹுசைன் காஜா  முந்தைய விசயங்களிலும் என்னவெல்லாம் பண்ணியிருப்பான் என்று நினைவுறுத்தி பாருங்கள் .
பள்ளிவாசல்  நிர்வாகம் பண்ண  மோசடி வித்தைகள் எல்லாம் பண்ண வேண்டுமா?
வெளியுலகில் பண்ணும் பாவங்களுக்கு மன்னிப்பு கோரும் பள்ளியிலே பாவங்கள் செய்தால் இவர்கள் போட்டி போட்டு நிர்வாகத்திற்கு வந்தது அல்லாஹ்வுக்காகவா ?இல்லை அயோக்கியத்தனத்திர்ககாகவா ?
நமதூருக்கு பஸ் போக்குவரத்து முதன்முதலாக கொண்டு வந்த முஸ்லிம் இளைஞர் முன்னணி யின் செயலாளராகவும் ,நன்கு வாதிடக் கூடியவருமான கோஸ் பீர்முஹம்மத்தை தேர்ந்தெடுக்காமல் ,தொழ  வராதவரை தேர்ந்தெடுத்து கைபிள்ளையாக வைத்து ஆட்டிபடைக்கலாம் என்பதற்காகவா?
உஸ் காசான் ஊமை இல்லையாம் ,இதோ ஊமையாக்கிய உண்மைகள் அவனை இப்போது உளற வைத்துவிட்டது .வெளிநாடுவாழ் சகோதரர்களுக்கு வெட்டி ஒட்டவில்லை என்பதற்கு மட்டும் அல்லாஹ்வின் மீது ஆணையாக சத்தியம் செய்தவன், பதில் என்ற பெயரில் ,போர்ஜரி இல்லை என்பதற்கு வெளிநாடு சகோதரர்களுக்காக இன்னும் அல்லாஹ்வின் மீது ஆணையாக சத்தியம் பண்ண மறுத்து வருகிறான்.
கள்ள தீர்மானங்கள் பற்றி  வாய் திறக்காமல் ஊமையாக நடிக்கும் அவன் விற்கவே முடியாத வக்ப் சொத்துக்கள் பற்றியும் அது சம்பந்தமாக எனக்கு எவ்வித பங்கும் இல்லாத பொழுது ரமளானில் கொஞ்சம் கூட  அச்சம் இல்லாமல்  மனம் துணிந்து  பொய்களை அள்ளி வீசிஉள்ளதை பாருங்கள்.
நான் கேட்டிருப்பது 
1.போர்ஜரி  இல்லை  என்று அல்லாஹ்வின்மீது மீது ஆணையாக சத்தியம் பண்ணத் தயாரா ?
2. 12/09/2010 அன்று ஐந்து தீர்மானங்கள் நிறைவேறியதாகவும் ,22/07/2011 அன்று பொது குழு நடந்து புனரமைப்பு நிர்வாக கமிட்டி மற்றும் operating authorities தேர்வு செயப்பட்டதும் உண்மையா?

கருத்துகள் இல்லை: