அன்பர்களே உசார்
உங்களிடம் பள்ளிவாசல் விசயமாக யாரும் கையெழுத்து கேட்டால் தீர விசாரித்து இன்ன காரியத்திற்காக என்று எழுதி கையெழுத்து போடுங்கள் .ஏனெனில் பள்ளிவாசலில் ஒரு நில மோசடி கும்பல் புகுந்துள்ளது .கையெழுத்து பெறுவதற்கு ஒன்றை சொல்லுவார்கள் .கையெழுத்துகள் வாங்கியதும் வேறொன்றை சொல்லுவார்கள் .இவர்கள் கூட்டிய ஒரே ஒரு பொதுக் குழுவில் ஒரே ஒரு தீர்மானம் தான் என்று பகிரங்கமகா சொன்னார்கள் .அந்த கூட்டத்தில் நடுநிலையாக செயல்பட்டு வழிநடத்திய மகபூப்அலியும் மீண்டும் மீண்டும் கேட்டார் ஒருதீர்மானம்தான ,அதுவும் கக்கூஸ் தீர்மானம் மட்டுமே என்றார்கள்.கக்கூஸ் வழியாக நிர்வாகத்திற்கு வந்தவர்கள் கக்கூஸ் தீர்மானம் மட்டும் நிறைவேற்றுவதாக கூறிவிட்டு வக்ப் போர்டிற்கு புனரமைப்பு கமிட்டி மாற்ற தீர்மானம் நிறைவேற்றுதல் உட்பட நான்கு தீர்மானங்கள் நிறைவேற்றியுள்ளதாக வக்ப் போர்டிற்கு அனுப்பியுள்ளார்கள் .அதன் பிறகு பள்ளிவாசல் விரிவாக்கம் பண்ண அனுமதி கேட்டு தீர்மானம் என்று வெள்ளி ஜும்மா வில் பச்சை பொய்யை சொல்லி கையெழுத்து வாங்கி இன்னாறேல்லாம் புனரமைப்பு கமிட்டி மெம்பர்கள் ஆக தேர்ந்தெடுக்கப்பட்டார்கள் என்றும் சைன் அத்தாரிட்டி இன்னாரை தேர்ந்தெடுத்ததாக தீர்மானம் நிறைவேற்றியுள்ளார்கள் பொய்யர்கள்.பள்ளிவாசல் கமிட்டி உறுப்பினர்களுக்கே இந்த ரகசியம் தெரியாது .அல்லாவுடைய பள்ளியை கள்ளத்னமாக தீர்மானம் நிறைவேற்றி கட்ட வேண்டும் என்று மங்காணி மத்ஹபில் கூட இல்லை. இவர்கள் தொழ வந்தாலோ ,தொழுதாலோ அல்லவா இறை நம்பிக்கை இருக்கும் .அயோக்கியர்களின் புகலிடம் அரசியல் என்பார்கள் .அரசியல் ஒரு சாக்கடை என்று சொல்லுவார்கள் அந்த சாக்கடைகள் பள்ளிவாசலுக்கு நுழைந்தால் என்னவாகும் ?கள்ளதீர்மானங்கள் அமலாகும் .
செய்யும்பாவங்களுக்கு மன்னிப்பு கேட்க வரும் பள்ளிவாசலிலே பாவம் செய்வது அயோக்கியர்களுக்கு கைவந்த கலை .இவர்கள் தான் அலைவதற்கு லாயக்கு என்று கயவர்களிடம் பள்ளிவாசல் காரியங்களை கொடுத்தால் ,அப்படிப்பட்ட பள்ளிவாசலுக்கே தொழ வர இயலாதசோம்பேறிகளிடம் பொறுப்புகளை ஏன் ஒப்படைக்க வேண்டும் ? உங்கள் வீட்டு கட்டுமானத்தை இவர்களிடம் ஒப்படைப்பீர்களா? இளைஞர்களே இவர்களது மயக்கும் சொற்களில் மயங்காது உண்மை அறிந்து செயல்படுங்கள்.மார்க்கத்தில் எந்த கொள்கை பிடிப்பும் இல்லாத கயவர்கள் பள்ளிவாசல் கட்டுவதற்கு ஓடோடி அலைவது ஏனோ?கள்ள தீர்மானங்கள் நிறைவேற்றி பள்ளிவாசல் கட்ட முனைப்பு காட்டுவது ஏனோ?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக