Arampannai ஜமாஅத் தலைவர் .
திரு .வைஸ் .கே.ஏ .முஹம்மது உதுமான்
பஞ்சாயத்துதலைவர்
திருமதி.ஹமிதாஹனிபா ;
கவுன்சிலர் .
திருமதி.சரிபாபசிர்

வெள்ளி, 16 செப்டம்பர், 2011


ஏன் இஸ்லாம்? --- ஆமினா அசில்மி


அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

ஆமினா அசில்மி (Aminah Assilmi), மிகப் பிரபலமான 
இஸ்லாமிய மார்க்க அறிஞர். அமெரிக்காவைச் சார்ந்த  
சர்வதேச முஸ்லிம் பெண்கள் அமைப்பின் 
தலைவர் ( International Union 
of Muslim Women ). 

ஆமினா அசில்மி, இந்த பெயரை கேட்டாலே இவரைப்பற்றி தெரிந்தவர்களுக்கு ஒரு 
புது உற்சாகம் பிறக்கும். ஒரு முஸ்லிம் எப்படி வாழ வேண்டும் என்பதற்கு ஒரு
 உதாரணம். தன்னை இஸ்லாத்தில் இணைத்து கொண்ட பிறகு கடந்த 
33 ஆண்டுகளாக இவர் செய்து வரும் இஸ்லாமிய சேவைகள் அளப்பறியது. 
சொல்லி மாளாதது. பல முஸ்லிம்களுக்கு இவருடைய வாழ்கை பயணம் ஒரு 
பாடம். அதைத்தான் இங்கு காண இருக்கிறோம். இன்ஷா அல்லாஹ். 

"நான் முஸ்லிம் என்று சொல்லிக்கொள்வதில் மிகவும் பெருமை படுகிறேன். 
இஸ்லாம் என்னுடைய இதயத்துடிப்பு. இஸ்லாம் என்னுடைய பலம். இஸ்லாம் இல்லை 
என்றால் நான் ஒன்றுமில்லை. அல்லாஹ், அவனுடைய மகத்தான கிருபையை 
என்னிடம் காட்டாவிட்டால் என்னால் வாழ முடியாது" ----- ஆமினா அசில்மி

ஆமினா அசில்மி அவர்கள் கிறிஸ்துவ பின்னணியில் (Southern Baptist) இருந்து 
வந்தவர், தன் கல்லூரி காலங்களில் ஒரு மிகச்சிறந்த மாணவியாக திகழ்ந்தவர், 
பல விருதுகளை பெற்றவர்.

ஒரு கணினி கோளாறு இவருடைய வாழ்க்கையை திருப்பி போட்டது.  

அது 1975ஆம் ஆண்டு. முதன் முதலாக ஒரு வகுப்புக்கு முன்பதிவு செய்ய 
கணினி பயன்படுத்திய நேரம். ஆமினா அவர்கள் தான் சேர வேண்டிய வகுப்புக்கு 
தன் பெயரை முன் பதிவு செய்து விட்டு தன் தொழிலை கவனிப்பதற்காக 
ஒக்ளஹோமா (Oklahoma) சென்று விட்டார். திரும்பி வர தாமதமாக, வகுப்பு 
துவங்கி இரண்டு வாரம் சென்ற பிறகே வந்து சேர்ந்தார். விட்டு போன வகுப்புகளை 
வெகு சீக்கிரமே கற்றுக்கொள்ளலாம் என்று நினைத்தவருக்கு அதிர்ச்சி மேல் 
அதிர்ச்சி. ஏனென்றால், கணினி தவறுதலாக வேறொரு வகுப்பில் அவரை 
முன்பதிவு செய்திருந்தது. அந்த வகுப்பு தியேட்டர் (Theatre) வகுப்பு 
என்று அழைக்கபட்டது, அந்த வகுப்பில் அடிக்கடி அனைத்து மாணவர்கள் முன்பு 
பேச வேண்டிருந்தது. இயல்பாகவே ஆமினா அவர்கள் மிகுந்த கூச்ச 
சுபாவம் கொண்டிருந்ததால் இந்த வகுப்பில் சேர மிகவும் அஞ்சினார். 

மிகவும் தாமதம் என்பதால் இந்த வகுப்பை புறக்கணிக்க முடியாத நிலை. மேலும் 
இந்த வகுப்பை அவர் புறக்கணித்தால் அவர் பெரும் ஸ்காலர்ஷிப்பை இழக்க 
வேண்டிய நிலை வரலாம். ஆகவே இந்த வகுப்பில் சேருவதென முடிவெடுத்தார். 

அடுத்த நாள் வகுப்பிற்கு சென்ற அவருக்கு மாபெரும் அதிர்ச்சி. அந்த வகுப்பு 
முழுவதும் அரேபிய மாணவர்கள். அவ்வளவுதான். இனிமேல் வகுப்பிற்கு 
செல்ல கூடாதென முடிவெடுத்தார். அதற்கு அவர் சொன்ன காரணம்

"அந்த நாகரிகமற்ற அரேபியர்களுடன் படிக்க மாட்டேன்"

ஆமினா அவர்களின் கணவர் அவருக்கு ஆறுதல் கூறினார், இறைவன் எது செய்தாலும் அதில்
ஒரு அர்த்தம் இருக்குமென்று. அமீனா அவர்கள் இரண்டு நாட்கள் வீட்டின் அறையில்
அடைந்து இருந்தார். அறையை விட்டு வெளியே வந்த அவர் சொல்லியது

"நான் அவர்களுடன் சேர்ந்து படிப்பேன். மேலும் அவர்களை கிறிஸ்துவராக்குவேன்"

இறைவன் இந்த அரேபியர்களை மதம் மாற்றுவதற்காகவே தன்னை அவர்களுடன்
சேர வைத்ததாக நம்பினார். அரேபியர்களுடன் சேர்ந்து படிக்க தொடங்கினார்.
அவர்களுக்கு  கிருஸ்துவத்தை எடுத்துரைத்தார்.
 " நான் அவர்களிடம் சொல்லுவேன், ஏசுவை மீட்பராக ஏற்காவிட்டால் எப்படி அவர்கள் நரகத்தில் வதைக்க படுவார்கள் என்று...நான் சொல்வதை அவர்கள் கவனமாக கேட்டுக்கொண்டார்கள். மிகுந்த கண்ணியம் காட்டினார்கள். ஆனால் மதம் மாறவில்லை. பிறகு நான் அவர்களிடம் ஏசு கிறிஸ்து எவ்வளவு ஆழமாக அவர்களை நேசிக்கிறார் என்று விளக்கினேன். அப்பொழுதும் அவர்கள் என் பேச்சை சட்டை செய்யவில்லை"

பிறகு ஆமினா அசில்மி அவர்கள் ஒரு முடிவெடுத்தார்கள்...
   "நான் அவர்களுடைய புனித நூலை படிப்பதென முடிவெடுத்தேன், இஸ்லாம்  ஒரு பொய்யான மார்க்கம், முஹம்மது ஒரு பொய்யான தூதர் என்று நிரூபிப்பதற்காக"
ஆமினா அசில்மி அவர்களின் வேண்டுதலின் பேரில் ஒரு
மாணவர் குரானையும் மற்றுமொரு இஸ்லாமிய
புத்தகத்தையும் கொடுத்தார். இந்த இரண்டு
புத்தகங்களையும் அடிப்படையாக வைத்து தன்
ஆராய்ச்சியை தொடங்கினார். சுமார் ஒன்றரை ஆண்டுகள்
முடிவில் மேலும் பதினைந்து இஸ்லாமிய புத்தகங்களை
படித்து முடித்திருந்தார். அப்பொழுதெல்லாம் குரானில் தான்
எது சர்ச்சைக்குரியதோ என்று நினைக்கிறாரோ
அதையெல்லாம் குறிப்பெடுத்து கொள்வார், இஸ்லாம் பொய்
என்று நிரூபிப்பதர்க்காக. ஆனால் குரானின் மூலம் தனக்குள்
ஒரு மாற்றம் ஏற்படுவதை உணர்ந்தார்.
" நான் மாறி கொண்டிருந்தேன், சிறிது சிறிதாக, என் கணவர் சந்தேகம் படுமளவிற்கு. நாங்கள் ஒவ்வொரு வெள்ளியும் சனியும் பார் (BAR) மற்றும் பார்ட்டிகளுக்கு சென்று கொண்டிருந்தோம். ஆனால் நான் இனிமேலும் அங்கு  செல்ல விரும்பவில்லை. அது போன்ற இடங்களில் இருந்து என்னை தனிமை படுத்தினேன்."

பன்றி இறைச்சி மற்றும் மதுவை நிறுத்தி விட்டார். இது அவருடைய கணவரை சந்தேகம்
கொள்ள செய்தது. தன்னை விட்டு செல்லும்படி சொல்லிவிட்டார். ஆமினா அசில்மி அவர்கள்
தனி வீட்டில் வசிக்க ஆரம்பித்தார்கள். இப்பொழுது மேலும் இஸ்லாத்தை பற்றி
ஆராயச்  செய்தார்கள். 

அப்பொழுது அவர்களுக்கு அப்துல் அஜீஸ் அல் ஷேய்க் என்பவரது அறிமுகம் கிடைத்தது.
"அவரை என்னால் மறக்க முடியாது. நான் இஸ்லாத்தை பற்றி கேட்ட ஒவ்வொரு கேள்விக்கும் மிக பொறுமையாக அறிவுப்பூர்வமாக பதிலளித்தார். அவர், என்னுடைய கேள்வி தவறானது என்றோ, முட்டாள்தனமானது என்றோ ஒரு பொழுதும் கூறியதில்லை. சிறிது சிறிதாக என்னுடைய சந்தேகங்கள் விலகின"

1977, மே 21இல், அப்துல் அஜீஸ் மற்றும் அவரது தோழர்கள் முன்னிலையில்
இஸ்லாத்தை ஆமினா அவர்கள் ஏற்றுக்கொண்டார்.

   " இறைவன் ஒருவனே என்றும், முஹம்மது (ஸல்) அவர்கள் அவனது  தூதரென்றும் நான் சாட்சியம் கூறுகின்றேன்"
 "நான் முதன்முதலாக இஸ்லாத்தை படிக்க தொடங்கியபோது, எனக்கு இஸ்லாத்தினால் தேவை என்று ஒன்று இருந்ததாக நினைவில்லை. இஸ்லாமும் என் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்தும் என்றும் நான் நினைக்கவில்லை. ஆனால் முன்பிருந்ததைவிட இப்பொழுதோ என் மனதில் சொல்லமுடியாத ஒரு வித அமைதி, மகிழ்ச்சி. இதற்க்கெல்லாம் காரணம் இஸ்லாம் தான்"

இதன் பிறகு தான் நிலைமை மிக மோசமானது. ஆமினா அசில்மி அவர்களின் தாய்
அவரை ஏற்றுக்கொள்ள மறுத்து விட்டார். அவரது சகோதரியோ அவருக்கு மனநிலை சரி
இல்லை என்று மனநல மருத்துவமனையில் சேர்க்கப்  பார்த்தார். அவரது தந்தையோ
ஆமினாவை கொலை செய்ய பார்த்தார். நண்பர்களோ அவரை வெறுத்து விட்டார்கள். 

குடும்பமும், நண்பர்களும் ஒருசேர புறக்கணித்து விட்டார்கள். கிட்டத்தட்ட
அநாதை. இஸ்லாத்தை ஏற்று கொண்ட சில நாட்களிலேயே ஹிஜாப்
அணிய தொடங்கிவிட்டார்கள். அதன் காரணமாக வேலையில் இருந்து
நீட்கபட்டார்கள். இப்பொழுது குடும்பம், நண்பர்கள், வேலை அனைத்தும்
சென்று விட்டது. காரணம் இஸ்லாம். ஆனால் அவருடைய ஈமான் மேம்மேலும்
அதிகரித்தது. எல்லா புகழும் இறைவனுக்கே. 

இப்பொழுது அவருடைய ஒரே ஆறுதல் பிரிந்து போன கணவர் மட்டுமே.  ஆமினா
அவர்கள், அவருடைய கணவரை மிகவும் நேசித்தார்கள், அவரும்தான். ஆனால்
ஆமினா அவர்களின் மாற்றத்தை அவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. 


இதன் பிறகு தான் நிலைமை மிக மோசமானது. ஆமினா அசில்மி அவர்களின் தாய் அவரை ஏற்றுக்கொள்ள மறுத்து விட்டார். அவரது சகோதரியோ அவருக்கு மனநிலை சரி இல்லை என்று மனநல மருத்துவமனையில் சேர்க்கப்  பார்த்தார். அவரது தந்தையோ ஆமினாவை கொலை செய்ய பார்த்தார். நண்பர்களோ அவரை வெறுத்து விட்டார்கள். 

குடும்பமும், நண்பர்களும் ஒருசேர புறக்கணித்து விட்டார்கள். கிட்டத்தட்ட அநாதை. இஸ்லாத்தை ஏற்று கொண்ட சில நாட்களிலேயே ஹிஜாப் அணிய தொடங்கிவிட்டார்கள். அதன் காரணமாக வேலையில் இருந்து நீட்கபட்டார்கள். இப்பொழுது குடும்பம், நண்பர்கள், வேலை அனைத்தும் சென்று விட்டது. காரணம் இஸ்லாம். ஆனால் அவருடைய ஈமான் மேம்மேலும் அதிகரித்தது. எல்லா புகழும் இறைவனுக்கே. 

இப்பொழுது அவருடைய ஒரே ஆறுதல் பிரிந்து போன கணவர் மட்டுமே.ஆமினா அவர்கள், அவருடைய கணவரை மிகவும் நேசித்தார்கள், அவரும்தான். ஆனால் ஆமினா அவர்களின் மாற்றத்தை அவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. 

விவாகரத்து தவிர்க்க முடியாமல் போனது. ஆமினா அவர்களுக்கு இரண்டு குழந்தைகள். இஸ்லாம் அப்பொழுது அங்கு மிக சிறிதே அறியப்பட்ட நேரம். அந்த சிறிதும் கூட இஸ்லாத்தை பற்றிய தவறான எண்ணங்களாகவே இருந்தன. ஆகவே நீதிபதி அவர்கள், குழந்தைகள் ஆமினா அவர்களிடம் வளர்ந்தால் அவர்களுடைய வாழ்க்கை கேள்வி குறியாகிவிடும் என்றும், குழந்தைகள் ஆமினாவின் கணவரிடம் வளர்வதே அவர்கள் எதிர்காலத்துக்கு நல்லது என்றும் தீர்ப்பளித்தார். ஆமினா அவர்களால் தாங்க முடியாத துயரம். 

அப்பொழுது நீதிபதி ஆமினா அவர்களுக்கு 20 நிமிடங்கள் அவகாசம் கொடுத்தார். ஆம் அதேதான். ஒன்று அவர் கணவர் சொல்லுவது போல் இஸ்லாத்தை கைவிடுவது அல்லது குழந்தைகளை கணவரிடத்தில் ஒப்படைப்பது. 

அவர் தன் குழந்தைகள் மேல் அளவு கடந்த பாசம் வைத்திருந்தார். ஒரு தாய்க்கு இதை விட பெரிய இழப்பு என்ன இருக்க முடியும்? ஒரு நாளல்ல, ஒரு மாதமல்ல, ஒரு வருடமல்ல...வாழ்க்கை முழுவதும் தன் குழந்தைகளை பிரிந்திருக்கவேண்டும். அதே சமயத்தில் இஸ்லாத்தை துறந்து ஒரு பொய்யான வாழ்க்கையையும் வாழ முடியாது. இஸ்லாம் என்ற உண்மையை தன் குழந்தைகளிடம் மறைக்கவும் முடியாது.
"நீங்கள் அறிந்துகொண்டே உண்மையை பொய்யுடன் கலக்காதீர்கள்; உண்மையை மறைக்கவும் செய்யாதீர்கள்" --- குரான் 2:42  
"என் வாழ்வின் மிகத்துயரமான 20 நிமிடங்கள் அவை"
வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுவது போல், அவர் உடல் நிலையில் உள்ள சில பிரச்சனைகளால் மேற்கொண்டு குழந்தைகள் பெற்றுக்கொள்ள முடியாது என்று மருத்துவர்கள் கூறியிருந்தார்கள்.
"முன் எப்போதும் இல்லாத அளவிற்கு துவா செய்தேன்..............எனக்கு நன்றாக தெரியும், என் குழந்தைகளுக்கு அல்லாஹ்விடம் தவிர வேறு பாதுகாப்பான இடம் இல்லையென்று. நான் அல்லாவை துறந்தால், எதிர்காலத்தில் என் குழந்தைகளுக்கு இறைவனிடம் இருப்பதால் ஏற்படக்கூடிய அற்புதங்களை எடுத்து கூற முடியாமல் போய்விடும்"  
ஒரு தாய்க்கு இதை விட ஒரு பெரிய தியாகம் இருக்க முடியாது. ஆம்....அல்லாஹ்விற்காக குழந்தைகளை ( ஒரு ஆண், ஒரு பெண் ) துறந்து விட்டார்... 

தன்னால் இஸ்லாத்தை விட முடியாது என்று அழுத்தம் திருத்தமாக சொல்லிவிட்டார்.
"நான் நீதிமன்றத்திலிருந்து வெளியே வந்தபோது என்னால் என் குழந்தைகள் இல்லாமல் வாழ்வது மிகக்கடினம் என்று அறிந்திருந்தேன். இதயம் கனத்தது, ஆனால் எனக்கு தெரியும், நான் சரியானதையே செய்தேன் என்று"
மீண்டும் இஸ்லாத்தை ஆராய தொடங்கினார். தனக்கு தெரிந்த இறைச்செய்தியை மற்றவர்களுக்கும் தெரியச்செய்தார். இஸ்லாமிய தாவாஹ் பணியை தொடங்கினார். அவர் சென்ற இடங்களில் எல்லாம் அவருடைய அழகிய வார்த்தைகளும், இஸ்லாத்தினால் கற்றுக்கொண்ட  குணமும் மற்றவர்களை சுண்டி இழுத்தது. குரான் சொல்லுவது போல மிக அழகிய முறையில் இஸ்லாத்தை எடுத்து கூறினார். இறைவனின் கிருபையால், பலரும் ஆமினா அவர்களின் அழைப்பால் இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ள ஆரம்பித்தார்கள்.

இறைவன் ஆமினா அவர்களுக்கு கொடுத்த சோதனைகள் போதும் என்று நினைத்தானோ என்னவோ, அவர்கள் இழந்ததை விட அதிக அதிகமாக கொடுக்க ஆரம்பித்தான்.
 "அல்லாஹ் எந்த ஒரு ஆத்மாவிற்கும் அது தாங்கிக் கொள்ள முடியாத அளவு கஷ்டத்தை கொடுப்பதில்லை" --- குரான் 2:286
உண்மைதான்....இஸ்லாமினால் இப்போது அவர் மிகவும் மாறி இருந்தார், மிக பக்குவபட்டவராகவும் ஆனார். அவரை வெறுத்த அவரது குடும்பம் அவரது நல்ல பண்புகளை பாராட்டியது, அந்த பண்புகளை அவரிடத்தில் கொண்டு வந்த மார்க்கத்தையும் தான். ஆமினா அவர்கள் தன் குடும்பத்தை பிரிந்தபோதும், அவர்களிடத்தில் வெறுப்பை காட்டவில்லை, குரான் சொல்லியது போல் தன் குடும்பத்தை எப்போதும்போல் மிகவும் நேசித்தார்.
"மேலும், அல்லாஹ்வையே வழிபடுங்கள்; அவனுடன் எதனையும் இணை வைக்காதீர்கள்; மேலும், தாய் தந்தையர்க்கும், நெருங்கிய உறவினர்களுக்கும்,   அனாதைகளுக்கும், ஏழைகளுக்கும், அண்டை வீட்டிலுள்ள உறவினர்களுக்கும், அருகிலுள்ள அண்டை வீட்டாருக்கும், கூட்டாளிகளாக இருப்போருக்கும், வழிப்போக்கர்களுக்கும், உங்களிடமுள்ள அடிமைகளுக்கும் அன்புடன் உபச்சாரம் செய்யுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் கர்வமுடையோரை, வீண் பெருமை பேசுபவர்களை நேசிப்பதில்லை" --- குரான் 4:36       
ஒரு பண்டிகை தினமென்றால், அவரது குடும்பத்திற்கு தவறாமல் வாழ்த்து அட்டை அனுப்புவார், மறக்காமல் குர்ஆனில் இருந்தோ ஹதீஸில் இருந்தோ சில வரிகளை அந்த வாழ்த்து அட்டைகளின் முடிவில் எழுதி விடுவார். ஆனால் அது எங்கிருந்து எடுக்க பட்டது என்று குறிப்பிடமாட்டார்.    

அவரது குடும்பத்தில் இருந்து முதலில் முஸ்லிமானது அவரது பாட்டி. அவருக்கு 100 வயதிற்கு மேல் இருக்கும். ஆமினா அவர்கள் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. 

அடுத்து முஸ்லிமானது, ஆமினா அவர்களை ஒரு காலத்தில் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டதற்க்காக கொலை செய்ய துணிந்தாரே அவரேதான், ஆம் ஆமினா அவர்களின் தந்தையேதான் அவர்.

இது நடந்த சில நாட்களுக்கு பிறகு, அவரது தாய் ஆமினா அவர்களை அழைத்தார், தான் முஸ்லிமாக மாறுவதற்கு என்ன செய்ய வேண்டும் என்று வினவினார். அல்ஹம்துலில்லாஹ், ஆமினா அவர்கள் கண்ணீர் மல்க இறைவனுக்கு நன்றி கூறினார்.  
    " நீங்கள் ஒன்றும் செய்ய தேவை இல்லை, இறைவன் ஒருவனே என்றும் முஹம்மது (ஸல்) அவர்கள் அவனுடைய தூதர் என்றும் சாட்சியம் கூறினால் போதும்"  
அதற்கு அவரது தாய் "அதுதான் எனக்கு முன்னமே தெரியுமே, வேறு என்ன செய்ய வேண்டும்"...
"அப்படியென்றால் நீங்கள் எப்பொழுதோ முஸ்லிமாகிவிட்டீர்கள்"
"ஒ அப்படியா............. இறைவனுக்கு நன்றி, ஆனால் உன் தந்தையிடம் நான் முஸ்லிம் என்று சொல்லிவிடாதே. அவர் மிகவும் கோபப்படுவார், நானே பிறகு சொல்லிவிடுகிறேன்"

சுபானல்லாஹ், அவருடைய தந்தைதான் எப்பொழுதோ முஸ்லிமாகி விட்டாரே. ஆனால் அவரும் மறைத்திருக்கிறார், தன் மனைவி கோபப்படுவார் என்று. ஆக இருவரும் ஒருவருக்கொருவர் தெரியாமல் இத்தனை காலங்களாக முஸ்லிமாக வாழ்ந்திருக்கிறார்கள். ஆமினாவிற்கு என்ன சொல்வதென்று புரியவில்லை. கண்களில் இருந்து கண்ணீர் தாரையாய் வெளியேறியது....
"இறைவா நீ மாபெரும் கிருபையாளன்"
பிறகு முஸ்லிமானது, ஆமினாவை மனநல மருத்துவமனையில் சேர்க்க வேண்டும் என்று சொன்ன அவரது சகோதரி. ஆம் அவர் இஸ்லாம் தான் மனநலத்திற்கு நல்லது என நினைத்திருக்க வேண்டும்.  

16 வருடங்கள் கழித்து, ஆமினா அவர்களின் முன்னாள் கணவரும் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார். பதினாறு வருடங்களாக தான் ஆமினாவை கவனிப்பதாகவும், தன்னுடைய தவறுகளுக்கு மன்னிப்பு கேட்பதாகவும் கூறினார். பிரிந்து சென்ற அவரது மகன் தன்னுடைய 21 ஆவது வயதில் தன்னை இஸ்லாத்தில் இணைத்து கொண்டார்.

ஆக, எந்த மார்க்கத்திற்காக ஆமினாவை தனிமைப்படுத்தினார்களோ, இன்று அதே மார்க்கத்தில் அனைவரும் இணைந்து விட்டார்கள், மிக அதிக பண்புள்ளவர்களாக. எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே.

ஆனால் இறைவனுடைய மற்றுமொரு மாபெரும் பரிசு ஆமினா அவர்களை திக்குமுக்காட செய்தது. ஆமினா அவர்கள் தன்னுடைய விவாகரத்துக்கு பிறகு வேறொருவரை மணந்தார்கள். மருத்துவர்கள் ஆமினா அவர்களுக்கு குழந்தை பிறக்காது என்று சொல்லி இருந்தார்கள். இறைவன் கொடுக்க நினைத்தால் யார் தடுப்பது?. ஆம், அந்த அதிசயம் நிகழத்தான் செய்தது. இறைவன் அவருக்கு ஆண் வாரிசை பரிசாக அளித்தான். இது இறைவனின் மாபெரும் கிருபை. அதனால் அந்த குழந்தைக்கு "பரக்காஹ்" என்று பெயரிட்டு மகிழ்ந்தார்கள். 

அல்லாஹ்விற்காக ஆமினா அவர்கள் செய்த தியாகங்கள் நெஞ்சங்களை உருக்குபவை. 

  • ஒரு காலத்தில் அவரை விட்டு விலகிய குடும்பத்தாரில் இன்று பெரும்பாலானோர் முஸ்லிம்கள்.
  • அன்றோ  இஸ்லாத்தை தழுவியதற்காக அவரை விட்டு விலகினர் அவரது நண்பர்கள். இன்றோ அவரை நேசிக்க கூடியவர்கள் கோடானுகோடி பேர்.  
"நண்பர்கள் நான் போகுமிடமெல்லாம் கிடைத்தார்கள்"
  • அன்றோ ஹிஜாப் அணிந்ததற்காக வேலையை இழந்தார்கள். இன்றோ சர்வதேச முஸ்லிம் பெண்கள் அமைப்பின் தலைவர். 


இறைவன் தன்னை நாடிவந்தவற்கு தன் அருட்கொடைகளை அளித்து விட்டான். இன்று அவர் பல இடங்களுக்கும் சென்று இஸ்லாத்தை போதித்து வருகிறார். பலரையும் இஸ்லாத்தின்பால் அழைத்து வருகிறார். இவரால் இஸ்லாத்தை தழுவியவர்கள் ஏராளமானோர்.  

கடும் முயற்சி எடுத்து அமெரிக்காவில் பெருநாள் தபால்தலைகளை வெளியிட செய்தது இவரது அமைப்பு. இப்பொழுது பெருநாள் தினத்தை விடுமுறை தினமாக அறிவிக்க முயற்சி எடுத்து வருகிறது இந்த அமைப்பு.



                                         


சில வருடங்களுக்கு முன் அவருக்கு புற்றுநோய் இருப்பதாக கண்டறிந்தார்கள். அது முற்றிவிட்டது என்றும் இன்னும் ஒரு வருட காலத்தில் இறந்து விடுவார்கள் என்றும் மருத்துவர்கள் கூறிவிட்டார்கள். ஆனால் ஆமினா அவர்களின் ஈமான் இறந்துவிடவில்லை. அது இன்னும் அதிகரித்தது.
"நாம் எல்லோரும் இறக்கத்தான் போகிறோம். எனக்கு நன்றாக தெரியும், நான் அனுபவிக்ககூடிய இந்த வலியில் என் இறைவனின் அருள் உள்ளது என்று"
எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே, இன்றும் ஆமினா அவர்கள் நல்ல உடல் நலத்துடன் இருக்கிறார்கள். இன்னும் தனக்கு வந்துள்ள இந்த புற்றுநோய்தான் தனக்கு இறைவன் கொடுத்துள்ள மாபெரும் கிருபை என்றும் நம்புகிறார்கள். 

இன்று ஆமினா அவர்களிடம் சொந்தமாக ஒரு வீடு கூட இல்லை. தன் 33 வருட தாவாஹ் பணியில் அனைத்தையும் இஸ்லாத்திற்காக கொடுத்து விட்டார்கள். இப்பொழுது அமெரிக்க முஸ்லிம்கள் அவருக்கு தேவையான உதவிகளை செய்து வருகிறார்கள். 

ஆனால் ஏழை என்று நினைத்து விடாதீர்கள், அவர் மாபெரும் பணக்காரர், ஆம் இறைவனின் பார்வையில்...அவர் செய்துள்ள நன்மைகளின் அளவினால்.
"ஆனால் பொறுமையுடன் சகித்து எவர் நற்கருமங்கள் செய்கின்றார்களோ, அவருக்கு மன்னிப்பும் மகத்தான நற்கூலியும் உண்டு"  --- குரான் 11:11    
 " நிச்சயமாக இந்த குரான் முற்றிலும் நேர்வழியை காட்டுகிறது; அன்றியும் நற்கருமங்கள் செய்து வரும் மூமின்களுக்கு நிச்சயமாக மிகப்பெரும் நற்கூலி உண்டு என்றும் நன்மாராயங் கூறுகிறது" --- குரான் 17:9  
ஆமினாஹ் அசில்மி அவர்கள் சென்ற வருடம் மார்ச் மாதம் ஒரு சாலை விபத்தில் மரணித்து விட்டார்கள். (இன்னலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜீவுன்). இந்த கட்டுரை சென்ற வருடம் பிப்ரவரி மாதம் எழுதப்பட்டது...

ஆமினாஹ் அவர்களின் அமல்களுக்கு தக்க கூலியை இறைவன் தந்தருள்வானாக...ஆமீன்.

உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹ்மத் அ
நன்றிகள் .>எதிர்குரல் பிப்ரவரி 17,2010


ஓராண்டு சாதனை பாரீர் 
தொழவராத நிர்வாகிகள்;இமாம் இல்லாத பள்ளிவாசல் ;முன்னர் ரமலான் தராவிஹ் தொழுகையில் நான்கு ரக்காத் களுக்கு பின் ஓதப்படும் சலவாத்தில் மதரசாவில் ஆசிரியராக இருந்த ஜப்பார் ஆலிம் என்பவர் க்ஹதாயானா என்ற ஒரு சிறப்பு பெயர் சொல்லை சேர்த்ததற்காக கடும் பிரச்னையானது. ஒரு தரப்பினர் சேர்த்து ஓதுவது சிறப்பு என்றும் மற்றொரு தரப்பினர் அவ்வாறு புதிதாக சேர்ப்பது பித்னா என்றும் தினசரி தீராத பிரச்னையாக இருந்து வந்தது. மேலும் இமாம் தராவிஹில் சரியாக ஓதுகிறார என்று சரி பார்க்கவும் [ஷாமீ]ஹாபில் இருப்பார்கள்.ஆனால் இப்போதைய தராவிஹ் தொழுகைக்கு இமாமத் செய்பவர் குர்ஆனில் எத்தனை தவறுகள் பண்ணினாலும் சஜ்தா ஆயத்தில் சஜ்தா செய்யாவிட்டாலும், சஜ்தா இல்லாத ஆயத்தில் சஜ்தா செய்தாலும் கேட்பாரில்லை.கேட்பாரில்லை
தமாம் கொடுக்கும் அன்று தொழ வந்தவர்களுக்கு பழம் கொடுப்பார்களோ இல்லையோ ,வயலில் சீட்டு விளையாடியவர்களுக்கு பழம் கொடுத்து விட்டாலும் கேட்பாரில்லை.
anonymus சொன்னது…
உங்கள் கோஷ்டியினர் ஆலிம் மீது கல்லை வீசி தாக்குவதனால் நமதூருக்கு ஆலிம்கள் வர மறுக்கின்றனர். சாதனை கல் எரிந்து விட்டு இல்லை என்று ஸ்டேஷன்இல் மறுப்பு. செய்தால் ஒத்து கொள்ளுங்கள், இல்லை செய்யாதீர்கள். ஒரு பொய்யை மறைக்க 100 பொய்கள் சொல்ல வேண்டிய நிலையே. இப்படி பொய் சத்தியம் செய்ய மார்க்கத்தில் அனுமதி இருக்கிறதா? உங்கள் கூட்டத்தினர்க்கு மட்டும் சிறப்பு அனுமதியா? கல் எரிந்ததை பார்க்கவில்லை என்று கிளை தலைவர் U. m. s சத்தியம் செய்ய வருவாரா?

S.Ibrahim சொன்னது…

குற்றம் சுமத்திய உங்களுக்கே முழு பொறுப்பு .அவர் சைபுஷைத்தான் மீது கல் எறிந்ததை நீங்கள் பார்த்தீர்களா? பார்த்தவர்கள் சொன்னதை கேட்டு எழுதுகிறீர்களா? நாங்கள் பொய் சத்தியம் பண்ணுகிறோம் அல்லவா? சரி,நீங்கள் உண்மை?சத்தியம் பண்ணுங்களேன்.பார்த்தவர் பண்ணுவாரா? பார்த்ததை கேட்டவர் பண்ணுவாரா?
ஒரு வாரம் ஆகியும் பதில் இல்லை என்பதிலிருந்து பொய்யர்கள் யார் என்பதை அறிந்து கொள்ளலாம்.
anonymus சொன்னது…நீங்கள் கூறுவது தான் 101 % உண்மை. யாரும் சைபுல்லாஹ் ஆலிமை எதுவுமே செய்யவில்லை. அவர் தூங்கி கொண்டிருக்கும் போது ஒரு சின்ன கொசு இருக்குதுல்ல அது கடிச்சிருச்சான், கொசு மேல் உள்ள கோபத்தில் என்ன செய்வதென்று தெரியாமல் உங்கள் வகையறாக்களை தேடி வந்து மாபெரும் பழியை போட்டுட்டாராம். உடனே சும்மா பொழுது போக்கிற்காக கல் எறிந்ததாக கம்ப்லைண்டும் கொடுத்து விட்டார்களாம். இப்படி பொய் சொல்லியே, வெறியூட்டி வெளிநாட்டு வாழ் சகோதரர்களிடம் எத்தனை நாட்களுக்கு காசு கறக்க திட்டம் போட்டிருக்கிரீகள்? கொள்ஹையை பற்றி பிடித்தாலும், கட்டி பிடித்தாலும் பொய் சொல்லி திரிபவர்களுக்கு அல்லாஹ் எப்படி உதவி செய்வான்?
S.Ibrahim சொன்னது…

///இப்படி பொய் சொல்லியே, வெறியூட்டி வெளிநாட்டு வாழ் சகோதரர்களிடம் எத்தனை நாட்களுக்கு காசு கறக்க திட்டம் போட்டிருக்கிரீகள்? கொள்ஹையை பற்றி பிடித்தாலும், கட்டி பிடித்தாலும் பொய் சொல்லி திரிபவர்களுக்கு அல்லாஹ் எப்படி உதவி செய்வான்?////
இத்தனை நாட்கள் அமைதியாக இருந்துவிட்டு ஹெட்டில் போட்டதும் ஆவேசம் வந்துவிட்டது போலும்.
நாங்கள் பொய் சொல்லுகிறோம் ,பொய் சத்தியம் பண்ணுகிறோம் ,அப்படி எனின் நீங்கள் கல் எறிந்ததை பார்த்தேன் என்று சத்தியம் செய்ய வாருங்கள் என்று அழைத்தால் ,வயிற்றை கலக்கி வாய் உளறி கொட்டுவது ஏனோ?


செவ்வாய், 13 செப்டம்பர், 2011


கல்வி உதவி வழங்குதல் [டிஎன்டிஜே தலைமை அனுப்பிய ரூபாய் 3000.00



 பித்ரா வழங்குதல் 

ஈதுல் பித்ர் தொழுகை படங்கள்.

வியாழன், 1 செப்டம்பர், 2011

ராஜிவ்காந்தி

ராஜிவ்காந்தியை யும் அவருடன் உயர் அதிகாரிகள் உட்பட 18 பேர்களை ஈவு இரக்கமின்றி கொன்ற வழக்கில் தூக்கு தண்டனை பெற்ற ,முருகன்,சாந்தன் ,பேரறிவாளன் மூவரின் தூக்கு தண்டனைகள் ரத்து செய்யப்படவேண்டும் என்று கோரிக்கை வைத்து தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் நடை பெற்றுவருகிறது.இதற்கு மனித நேய சாயம் பூசப்பட்டு நியாயப்படுத்தியும் ஊடகங்களும் ஆதரவு தெரிவித்து வருகின்றன.இது போன்று அப்சல்குருவுக்கு காஷ்மீரிகள் ஆர்பாட்டம் நடத்தியிருந்தால் மீடியாக்கள் கொதித்து எழுந்திருக்கும். உண்ட வீட்டுக்கு கெண்டி தூக்கிய இந்த நய வஞ்சககர்கள் மீது தமிழ்  பயங்கரவாதிகளுக்கு நேசம் இருப்பதில் தவறில்லை. ஆனால் இந்த ஊடகங்களுக்கு பச்சாத்தாபம் ஏற்பட்டதன் காரணம் என்ன?ஓமர் அப்துல்லா தனது வெப்சைட்டில் கேட்டுள்ள நியாயமான கேள்வியை ,தினமணி சர்ச்சைக்குரியதாக கூறியுள்ளது.
கொலையாளிகள் மீது மனித நேயம் காட்டும் வது மனித நேயமா?கொலையாளி நேயமா? இப்போது மரணதண்டனைகளை நிறுத்த போராடுவதை விட இவர்களை யாராவது கொலை செய்தால் அவர்களது வாரிசுகள் வேண்டுமானால் அந்த போராட்டத்தை ஆரம்பிக்கட்டும்..

வெள்ளி, 12 ஆகஸ்ட், 2011

இந்த போட்டா விற்கான விளக்கம்

  இந்த போட்டா விற்கான விளக்கம் கீழே 


பள்ளி கட்டிடத்திலும்,குழந்தைகள் விளையாட்டு மைதானமாக உபயோகிக்க கொடுக்கப் பட்ட மனையிலும் வேறு சில கட்சிகள் ,மத இயக்க காரியங்களுக்காக பயன்படுத்துவதாகவும் தெரிய வருகிறது..இக்காரியங்கள் கொடுக்கப்பட்ட ஒப்பந்தங்களை மீறிய செயலாகும்.,என்று நமது பள்ளிவாசல் தலைவர் அவர்கள் கடிதம் அனுப்பியுள்ளார்கள்.
கடந்த இருவருடங்களுக்கு முன்பு பெண்கள் ,ரமலான் இரவு தொழுகை நடத்த பள்ளி வகுப்பறைகள் கொடுத்ததை கூறியுள்ளார்கள்.இந்த வருடம் ஆண்கள் இரவு தொழுகை நடத்த இடம் கேட்டார்கள் .நான் கொடுக்கவில்லை.ஆனால் தொழுகை நின்று விட்டதா?இறைவன் அருளால் ஒரு சகோதரர் இடம் கொடுத்துள்ளார்.
அதைபோல் பெருநாள் தொழுகை நடத்த மைதானத்தை கொடுத்ததையும் குற்றம் கண்டுள்ளனர்.இன்சா அல்லாஹ் இந்தவருடம் மைதானத்தை கொடுக்காவிட்டால் திடல் தொழுகை நின்றுவிடுமா? இறைவன் வேறு எங்காவது இடம் கொடுப்பான் என்ற நம்பிக்கை எங்களுக்கு உண்டு.மேலும் இன்னொரு விசயத்தையும் இங்கே குறிப்பிட விரும்புகிறேன்.தூத்துக்குடி தவ்ஹித் ஜமாத்க்கு திடல் தொழுகை நடத்த நகராட்சி பள்ளிமைதானத்தில் இடம் கொடுத்தார்கள்.ஆழ்வார் திருநகரில் ஜி.டி.ஜிஸ்கூல் மைதானத்தில் இடம் கொடுத்தார்கள்.என்பதையும் உங்கள் கவனத்திற்கு கொண்டுவருகிறேன்.
பள்ளி கட்டிடத்தை ரத்த தான முகாம் ,இலவச மருத்துவ முகாம் தவ்ஹித்ஜமாஅத் சார்பில் நடை பெற்றபோது இடம் கொடுத்ததையும் இங்கு குற்றம் பிடித்துள்ளார்கள்.நமது ஜமாஅத் தலைவர் அவர்களே இலவச மருத்துவ முகாமில் கலந்து கொண்டதைத்தான் மேற்கண்ட போட்டாவில் பார்க்கிறீர்கள்.இதுபோன்ற நற் சேவைகளுக்கு யார் கேட்டாலும் பள்ளி கொடுப்பது வழக்கம். மற்ற ஊர்களிலும் டி.என்.டிஜே சார்பாக ரத்ததான முகாம்,மருத்துவமுகாம் நடைபெறவே செய்கின்றன.பல ஸ்கூலில் இடம் கொடுக்கவே செய்கின்றனர்.இதெல்லாம் ஒருகுற்றமா? 


திங்கள், 8 ஆகஸ்ட், 2011

தினமணியின் அயோக்கியத் தனம்


பயங்கரவாதி என்று இந்து மதத்தைச் சேர்ந்தவரை தவறாகச் சுட்ட ராணுவம் 

First Published : 08 Aug 2011 03:39:20 PM IST


காஷ்மீர், ஆக.8: ஜம்மு-காஷ்மீரில் லஷ்கர் பயங்கரவாதி என்ற சந்தேகத்தில் இந்து மதத்தைச் சேர்ந்த மனரீதியாக பாதிக்கப்பட்ட ஒருவரை ராணுவத்தினர் சுட்டுக் கொன்றுள்ளனர்.
பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள காட்டுப்பகுதியில் பாதுகாப்புப் படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அபு உஸ்மான் என அடையாளம் காணப்பட்ட ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார். எனினும் பின்னர் பிரேதப் பரிசோதனையின்போது அவர் அபு உஸ்மான் இல்லை;  மனநலம் பாதிக்கப்பட்ட இந்து மதத்தைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்தது.
ராணுவ வீரர் ஒருவர் அளித்த தவறான தகவலின்பேரில் பயங்கரவாதி என்ற சந்தேகத்தில் அவர் சுட்டுக்கொல்லப்பட்டதாக இந்திய ராணுவத்தின் 16-வது படைப்பிரிவின் செய்தித்தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.
கருத்துகள்

8/8/2011 10:39:00 PM
 So there is no terrorist in Hindu? it's belong to particular religion only? don't give report like this. 
By Muthu Raja 
8/8/2011 10:32:00 PM
 முஸ்லிம் மக்களையும் ராணுவம் சுட்டுகொல்கிறது ஹிந்து என்றல் நியூஸ் வருகிறது முஸ்லிம் என்றல் தீவிரவாதி என்றுமூடி மறைகிறது எந்த அப்பாவியாய் சுட்டாலும் தப்பு தப்புதான் 
By shahul 
8/8/2011 9:25:00 PM
 TM
 இதே தவறாக ஒரு முஸ்லிமோ அலது ஒரு christeen யோ தவறாக சூட் பண்ணி இருந்தால் என்ன நடந்திருக்கும் இந்தியாவில் 
By செந்தில்வேல் 
8/8/2011 6:08:00 PM
M
 பயங்கரவாதிகளே இந்து மதத்தில் இல்லாதவாறும், முஸ்லிம்கள் தான் பயங்கரவாதிகள் போன்றும் செய்தியை சித்தரிக்கும் ஆசிரியரின் நோக்கம் என்ன? ஊடகங்கள் மத சாயல் பூசிகொள்வது இந்திய ஜனநாயகத்துக்கு அழிவே அன்றி வேறு இல்லை...! ஆசிரியர் செய்தியை திருத்தி வெளியிடுவது அவர் கடமை....! 
By நவாப் 
8/8/2011 4:39:00 PM
 தினந்தோறும் கஷ்மீரில் ராணுவம் அப்பாவி முஸ்லிம்களை பயங்கரவாதி என்று சித்தரித்து கொடூரமாக கொலை செய்து கொண்டிருகிறது. இன்று பாவம் ஒரு அப்பாவி இந்து சகோதரர் மாட்டி கொண்டாற்போல் தெரிகிறது. இன்று இராணுவத்தினரின் கண்களுக்கு முஸ்லிம்கள் யாரும் தென்படவில்லை போலும். தற்போது நாட்டு மக்களை காப்பதை விட கொள்ளுவதே ராணுவதினற்கு பிடித்துள்ளது போல் தெரிகிறது. ஒருவரை தீவிரவாதியா அல்லது அப்பாவியா என்று கண்டு பிடிக்க முடியாமல் இருந்தால் அவர் எதற்கு ராணுவத்துக்கு போக வேண்டும். வேறு எங்காவது புரோட்டா மாஸ்டர் வேளைக்கு போய் புரோட்டா சுட வேண்டியது தானே. 
By kadhar 
8/8/2011 4:30:00 PM
 செய்தியின் தலைப்பை தினமணி மறுபரிசீலனை செய்ய வேண்டும். தலைப்பில் இந்து என்ற ஒரு வார்த்தை தவறான கண்ணோட்டத்தை காண்பிப்பதாக உள்ளது. ஒரு வேலை இறந்தவர் முஸ்லிமாக இருந்தால் "பயங்கரவாதி என்று முஸ்லிம் மதத்தை சேர்ந்தவரை தவறாக சுட்ட ராணுவம்" என்று தலைப்பு போடுவீர்களா? யோசித்துப்பாருங்கள். முஸ்லிம்கள் எல்லோரும் தீவிரவாதிகள் அல்ல. தீவிரவாதிகளுக்க்ம் அல்லாதவர்களுக்கும் மத சாயம் பூசி தங்கள் நடுநிலை தவறால் தவறி விட வேண்டாமே! 
By அன்பு 
8/8/2011 4:25:00 PM
 இதே போன்று ராணுவத்தினரால் பல முஸ்லிம்கள் தவறுதலாக சுடப்பட்ட போது 'பயங்கரவாதி என்று இஸ்லாமிய மதத்தை சார்ந்தவாரை தவறாக சுட்ட இராணுவம்' என்று தினமணி ஏன் செய்தி வெளியிடவில்லை? 

ஞாயிறு, 7 ஆகஸ்ட், 2011


கண்ணியவான்களே! யானையை சோற்றில் மறைக்கும் பொய் புளுகும் நிர்வாகம் பாரீர் !
மீனா மெற்றிகுலேசனில் வேலை பார்க்கும் இப்ராஹீம் என்பவர்,அப்போதைய பள்ளி நிர்வாகத்தில் குடிசை அமைத்து ஜும்மாநடத்தவும் அரபி பள்ளி நடத்தவும்
மூன்று ஆண்டுகள் ஒப்பந்தம் போட்டு பெற்ற இடத்தில் , மூன்று வருடங்களாக குடிசை அமைக்கவில்லை.ஜும்மா தொழுகை நடத்தவில்லை.அரபி பள்ளி நடத்தவில்லை .வம்புக்காக இருநூறு ரூபாய் வாடகை கொடுத்து வருகிறார்,இப்போது கட்டடம் கட்ட முயற்சிக்கிறார் .எனவே அந்த இடத்தை காலி பண்ண வேண்டும் .மேலும் கட்டிடம் கட்ட இடைக்கால உத்தரவும் வக்கீலுக்கு பத்தாயிரம் ரூபாய் பீஸ் கொடுத்து வாங்கியுள்ளனர்.பள்ளிவாசல் நிர்வாகத்தினர்.
கொஞ்சம் கூட இறை அச்சம் இன்றி தொழுகை இல்லாத நிர்வாகம் , பள்ளிவாசலுக்கு வந்தால் கால் வலிக்கும் நிர்வாகம் ,தூத்துக்குடிக்கும் .முரப்பனாடுவுக்கும் திருவை குண்டத்திற்கும் கால் வலி இல்லாமல் அலையும் நிர்வாகம் ,ரமலான் மாதத்தில் பொய் கேஸ் தொடுத்துள்ளார்கள்.
பள்ளிவாசலுக்கு நல்ல இமாமை நியமிக்க,வழியின்றி காலிமனையை கைப்பற்ற மக்களிடம் நஜாத் காரர்களை இல்லாமல் ஆக்கப் போகிறோம் ஊரை ஒற்றுமையாகஆக்கப் போகிறோம் என்று கள்ளத்தனமாக வசூல் செய்து போலீசுக்கும் வக்கீலுக்கும் காசை கரியாக்கும் செயலை இந்த நிர்வாகம் மேற்கொண்டுள்ளது.இமாமுக்கும் பள்ளி ஊழியர்களுக்கும் சம்பளம் கொடுப்பதில் கறாராக இருக்கும் நிர்வாகம் வக்கீலுக்கும் கோர்ட்டுக்கும் காசை விரயமாக்கி வருகிறது.தங்கள் குடும்பங்களிலே ஒற்றுமையாக இருக்காத இவர்கள் ஊர் ஒற்றுமைக்கு பாடுபடுவது போல் வேஷம் காட்டி மக்களை ஏமாற்றும் இவர்களே ஊர் ஒற்றுமைக்கு முதல் எதிரிகள்.
மீரா என்ற பெயரை வக்கீலிடம் சரியாக சொல்லாமல் மீனா என்று சொல்லி,அங்கெ நான் வேலை பார்ப்பதாக எழுதி என்னை கேவலப் படுத்துவதாக இவர்களுக்கு நினைப்பு.அல்லாஹ் யாரை கேவலப் படுத்துவான் என்பது போக போகத் தெரியும்

திங்கள், 1 ஆகஸ்ட், 2011


ஒற்றுமை வியாபாரிகள்

ஒற்றுமை வியாபாரிகள் 
                                                                                                                            அபுஷிரின் 
                  நம்மவர்களுக்கும் மற்றவர்களுக்கும் ஏதாவது பிரச்னைகள் வந்தால்," நம்மிடம் ஒற்றுமை இல்லை அதுதான் இந்த கதி" என்ற வார்த்தை எல்லோரிடமும் ஒற்றுமையாக வரும்.தனக்கு வேண்டாதவனுக்கும் அந்நியருக்கும் பிரச்னைகள் வந்து அதில் வேண்டாதவன் பாதிக்கப்பட்டால் இவனுக்கு இதுவும் வேணும் இன்னமும் வேணும்என்பார்கள்.அதே சமயத்தில் அவன் அந்நியரால் பாதிக்கப் பட்டால் நம் சமுதாயத்தில் ஒற்றுமை இல்லை என்ற கோசத்தை ஓங்கி முழங்குவார்கள்.அனைத்து முஸ்லிம் அமைப்புகளும் 'முஸ்லிம்கள் ஒற்றுமையாக இருந்தால் தான் வெற்றி பெற முடியும் என்று கூறி தங்களது அமைப்பில் சேருமாறு அழைக்கின்றனர்.அவர்கள் கூறும் ஒற்றுமை என்பது ஒரு தலைமையின் கீழ் அணைத்தது முஸ்லிம்களும் செயல்பட வேண்டும் என்பதே .ஒவ்வரு அமைப்பிலும் ஒரு தலைவர் இருக்கும் நிலையில் ,அந்த தலைவருக்காக ,அந்த தலைவரை சுற்றி ஒரு கூட்டம் இருக்கும் வரையில் எப்படி ஒரு தலைமையின் கீழ் ஒற்றுமை வரும்,?.ஆக அந்த தலைவர்கள் ஒற்றுமை பற்றி பேசுவது தங்களது ஆதாயத்துக்காகவே ஒழிய சமுதாயத்துக்காக அல்ல என்பதே உண்மை. 


ஒற்றுமை பற்றி பேசுபவர்கள் மக்களை எளிதில் வெல்ல அவர்கள் கண்ட உத்தி ,உணர்வுகளை தூண்டி விடுவதுதான் .மற்ற மக்களை விட உணர்வுகளுக்கு எளிதில் அடிமையாவதில் முதலிடம் வகிப்பது முஸ்லிம்களே!. தூண்டி விடப்படும் உணர்வுகள் மெல்ல, மெல்லஇளைஞர்களின் உள்ளத்தில் சேர்ந்து உள்ளங்கள் நிரம்பியதும் அது வெடிக்கும் பொழுது சமுதாயம் அதன் பாதிப்பை தாங்குகிறது.ஆனால் சமுதாயத் தலைவர்கள் அதன் ஆதாயத்தை அடைந்து விடுவார்கள்.ஆதாயம் அடைந்த  தலைவர்கள் மெல்ல மறைந்து விடுவார்கள்.பாதிக்கப்பட்ட சமுதாயமோ மீண்டும் ஒற்றுமையை தேடி அலைகிறது.ஆனால் மக்களிடம் உண்மையான ஒற்றுமை எங்கிருந்து வர வேண்டுமோ ,அதை சுட்டி காட்டினாலோ,அதை தட்டி கழிப்பதில் காலத்தை கடத்தி விடுகிறார்கள்..கடந்த சில நாட்களுக்கு முன் நமதூரில் மூன்று இளைஞர்கள் நண்பர் ஒருவரை அவரது வீட்டில் சந்தித்து இரண்டாவது ஜமாத்தை நிறுத்துவது பற்றியும் ஒற்றுமையாக இருப்பது பற்றியும் இரு தரப்பிலும் அமர்ந்து பேசுவோம் என்றும் ஆனால் அங்கு குரான் ஹதீத் பற்றி பேசுவதை தவிர்க்குமாறும் கூறியுள்ளனர்.தவறு அந்தஇளைஞர்களிடம் இல்லை. இன்றைய சமுதாயத்தின் நிலையை இந்த "ஒற்றுமை"இளைஞர்கள் மிகத் தெளிவாக படம் பிடித்து காட்டுகின்றனர்.இவர்களது வாதமெல்லாம் குரான் ஹதித் பற்றி பேசினால் ஒற்றுமை ஒட்டாத மை ஆகிவிடும் என்பதுவே. அவ்வாறெனின்,அல்லாஹ்வுக்கும் அவன் தூதருக்கும் கட்டுப்பட்டவர்கள் என்ற அர்த்தத்தில் வரக் கூடிய முஸ்லிம் என்ற பெயருக்கு சொந்தக்காரர்கள் ஒற்றுமையாக வாழவேண்டு மென்றால் குர்ஆனையும் ஹதித்களையும் புறக்கணிக்க வேண்டுமா? என்பதே நமது கேள்வி.
ஒற்றுமையை எங்கிருந்து கொண்டு வர வேண்டுமோ அங்கிருந்து ஆரம்பிப்பதில்லை. அதனாலேயே பாலஸ்தீனத்தில் இத்தனை ஆண்டுகள் போராடியும் வெற்றி கிடைக்க வில்லை"நாரேதக்பீர் " "ஈட்டி முன் நிறுத்தினாலும் ஈமானை இழக்க மாட்டோம்" போன்ற கோசங்கள் மக்களிடம் ஒற்றுமையை நிலைக்க செய்யாது. குர்ஆனை ஒற்றுமையின் அடிப்படையாக்குங்கள்  என்றால் அந்த குரானிலிருந்தே ஒற்றுமையை கயிறாக காட்டி,அதன் அர்த்தத்தை திரித்து, அந்த கயிறு எப்படி இருக்கும்? எங்கிருந்து வரும் என்பதை சொல்ல மறந்துவிட்டார்கள்.குர்ஆன் அல்லாஹ்வின கயிற்றை பற்றி பிடித்துக் கொள்ளுங்கள் என்று மிகத் தெளிவாக கூறியிருக்கையில் ,இவர்களோ ஒற்றுமை என்னும் கயிறு என்கிறார்கள்.அல்லாஹ்வின் கயிருவை பற்றி பிடித்துக் கொள்ளுங்கள் என்றால் அல்லாஹ்வுக்கும் நமக்கும் தொடர்பு  ஏற்படுத்தக் கூடிய கயிறு குர்ஆனே என்று ஆழாமாக சிந்திக்க தவறிய மொழி பெயர்ப்பாளர்கள் மேலோட்டமாக ஒற்றுமை என்னும் கயிறு என்ற மொழியாக்கத்தை திணித்து விட்டார்கள். அந்த மொழியாக்கம் தவறு என்பதை அரபு இலக்கண வாயிலாகவும் ஏனைய மொழியாக்கங்களின் வாயிலாகவும் நிருபித்த பிறகும் அதை மறுக்க முடியாதவர்கள் அந்த பழைய தவறான மொழியாக்கத்தை கை விட மறுக்கிறார்கள் என்றால் இவர்கள் மூலம் எப்படி ஒற்றுமையை கொண்டு வர முடியும?
முஸ்லிம்களின் ஒற்றுமை பற்றி அதிகமாக பேசுவதும் அதற்கு வேட்டு வைப்பதும் மர்ர்க்க அறிஞர்களே .ஏனெனில் இவர்கள் மக்களை கிள்ளுக் கீரையாக நினைத்துக் கொண்டு, இவர்களுக்கு என்ன மார்க்கம் தெரியும்?நாங்கள் சொல்லுவதை கேட்டுக் கொண்டு அப்படியே பின்பற்ற வேண்டும். கேள்விகள் கேட்க ஆரம்பித்தால் வருமானத்தில் இடி விழுந்து விடும் என்பதால் மக்கள் தங்களிடம் கேள்விகளே கேட்கக் கூடாத நிலையிலே அவர்களை அறியாமையிலே மூழ்க வைத்திருந்தனர். இந்த மார்க்க அறிஞர்கள் தங்களுக்கு ஆதாயம் என்றால் ஒற்றுமை பற்றி பேசுவார்கள். தங்களது ஆதாயம் என்றால்  அதே ஒற்றுமைக்கு எதிராகவும் பேசுவார்கள். இவர்கள் முஸ்லிம்களின் நலனை பற்றி சிந்தித்தால் எப்போதே முஸ்லிம்களுக்காக இட ஒதுக்கீடு பற்றி வாயளவில் கூட பேசியிருக்கவேண்டும்.அதை கூட அவர்கள் செய்யவில்லை.முதன்முதலாக தவ்ஹித் சிந்தனை யாளர்கள் தமிழகத்தில் தவ்ஹித் கொள்கைகளை மக்கள் மத்தியில் சொல்ல வேண்டும் என்பது பற்றி ஆலோசனை கூட்டம் நடத்தினார்கள் ..1984அப்போது ஓர் பெரும் செல்வந்தர் கூறினாராம்.,'என்னிடம் ஒரு நூறு மில்லியன் டாலர் கொடுங்கள் ,ஒரே நாளில் தமிழகத்தை தவ்ஹித் கொள்கைக்கு கொண்டு வந்துவிடுகிறேன் என்று, எப்படி என்றால் தமிழக ஜமாத்துல் உலாமா சபையை கூட்டி ,உங்களில் ஒவ்வொரு மவ்லவிகளுக்கும் ஆளுக்கு பத்து லட்ச ரூபாய் தருகிறேன் ,நீங்கள் இனி மவ்லிது,தர்கா போன்ற சிர்க்,மற்றும் பித்னா,அனாச்சாரங்கள் மார்க்கம் இல்லை என்றும் குர்ஆனும் ஹதித்கலுமே மார்க்கம் என்று மக்களிடம் பிராச்சாரம் செய்ய வேண்டும் என்று கூறினால் போதும் .அல்லாஹு அக்பர் என்று கூறி கரும்பும் அதை திங்க கூலியும் தரும் பொது எங்களுக்கு உலகத்தில் வேறு என்ன வேண்டும் என்று பெற்றுக் கொண்டு அவர்கள் தங்களிடம் கட்டுண்டு கிடக்கும் மக்களை ஒரே நாளில் தவ்ஹித் கொள்கைக்கு கொண்டு வந்து விடுவார்கள் என்று அந்த செல்வந்தர் கூறினார்.இது முற்றிலும் உண்மை.இந்த மவ்லவிகளின் சொல்லை ஒவ்வொரு முஸ்லிம்களும் கண்மூடித்தனமாக பின்பற்றாமல்  சிந்தித்து பின்பற்றுவார்களே யானால் ஒற்றுமை முஸ்லிம்களிடையே  நொடிப்பொழுதில்  வந்து விடும் ,என்பதையே அல்லாஹ் ,குரானில்தனது குரானை பற்றி பிடித்துக் கொள்ளுமாறு கூறுகிறான்.[தொடரும் இன்சால்லாஹ்]

சனி, 23 ஜூலை, 2011

எப்படி போலிஸ் ஸ்டேசனில் கருத்துக்கு,கருத்து .

  • நியாய வாதிகளே!எங்கள் மீது நிர்வாக கமிட்டியின் பிரதிநிதியாக கேள்விகள் வைத்த அரசனின் பதில்கள் இன்னும் கிடைக்க வில்லை.நேரில் அமர்ந்து பேசினால் அவர்களது வண்டவாளம் வெளுத்துவிடும் என்ற பயமே! காரணம்.
  • அரசன் இங்கு இரண்டு கேள்விகளை அனுப்பியுள்ளார்.குடிசை கட்ட மூன்று வருடம் மட்டுமே அனுமதி என்றும் அதை மீறுவது உங்களது தவ்ஹிதில் அனுமதி உண்டா? என்றும் ,வருமானம் வரும் இடத்தை காசு கொடுத்து வாங்க தெரிந்த உங்களது கூட்டத்தாருக்கு பள்ளிவாசல் இடத்தில் ஊர் மக்கள்  அனுமதி இல்லாமல் கட்டடம் கட்ட அனுமதி கொடுத்தது யார்?என்றும் கேட்டுள்ளார்.
  • முதல் கேள்வியில் என்ன கேட்க வந்துள்ளார் என்பது புரிகிறது,இரண்டாவது கேள்வியில் வருமானம் வரும் இடத்தை வாங்கியதாகவும் என்று கூறியிருப்பது புரிய வில்லை .புரியும்படியாக சொன்னால் பதில் அளிக்கலாம்.பிறகு ,கட்டடம் கட்ட அனுமதி கொடுத்தது யார் என்று கேட்டுள்ளார்? கட்டம் எங்கே கட்டியுள்ளோம் ?என்பதை அவரே சொன்னால் நன்றாக இருக்கும் .
  • அரசன் என்ற பெயரில் தாங்கள் அழகிய முறையிலே கேள்வி கேட்க ஆரம்பிக்கிறீர்கள்..ஆனால் நான் பதில் அளிக்கையில் ,எனது பதில்களில் நியாயம் வலுப் பெறும்போது ,அதை மறுப்பதோ அல்லது ஏற்பதோ ,இரண்டும் இன்றி மறைந்து விடுகிறீர்கள்.இங்ஙனம் தாங்கள் நடந்து கொள்வது சரியான வழிமுறை  அன்று .
  • ஆகவே ,நாம் இரு தரப்பிலும்  மூன்று பேர்களோ அல்லது ஐந்து பேர்களோ நேரில் அமர்ந்து ,கருத்துக்கு கருத்து என்ற அடிப்படையில் போலிஸ் ஸ்டேசனில் பேசியது போல் ஒரு அமர்வு இருந்து பேசினால் நல்ல தீர்வு  கிடைக்கும் என்று நம்புகிறேன்.தனி நபர் காழ்ப்புணர்வுகளை மறந்து நியாயம் நிலை நாட்டப்படவேண்டும் என்ற எண்ணம் உங்களுக்கு இருந்தால் உங்களிடமிருந்து சரியான் பதில் கிடைக்கும் என்பது எனது எதிர்பார்ப்பு.உங்கள் பதிலைப் பொருத்து,,,,,,,தொடர்வோம் இன்சா  அல்லாஹ் 

செவ்வாய், 19 ஜூலை, 2011

இந்திய அரசியலின் இரண்டாவது ஆண்மகனா? 

இந்திய அரசியலின் இரண்டாவது ஆண்மகனா? என்று சொல்லும் அளவிற்க்கு தனது கருத்தை மிகத் துனிச்சலாக வெளியிட்டு வருகிறார் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளார் திக்விஜய் சிங்
 இந்தியாவில் நடக்கும் எல்லா குண்டுவெடிப்புகளுக்கும் இஸ்லாமிய தீவீரவாதிகள் தான் காரணம் என்று பத்திரிக்கைகளும் செய்திதுறையும் சொல்லிவருவதை நாம் அறிவோம் அதற்க்கு ஏற்றாற் போல் காவல்துறையும் அடுத்த மறுவிநாடியே ஒரு முஸ்லீம் இளைஞனை கைது செய்து ஏதாவது வாயில் வந்த பெயரை போட்டு விடுவார்கள்
இது தான் காலம் காலமாக நடந்து வருகிறது ஒவ்வொரு முறை குண்டுவெடிப்புகள் நடக்கும் போது பல முஸ்லீம்களை கைது செய்கிறார்கள ஆனால் குற்றங்கள் குறைந்தபாடில்லை உண்மையான குற்றவாளிகளை வெளியில் சுற்றித் திரிய விட்டுவிட்டு பெயருக்கு கைது செய்துவிட்டோம் என்று பொய்யான நாடகமாடினால் எப்படி குற்றம் குறையும்?
இந்நிலையில் சமீப காலத்தில் நடந்த மாலேகான் குண்டு வெடிப்பு மற்றும் அஜ்மீரில் நடந்த குண்டுவெடிப்பு மற்றும் ஏ.டி.எஸ தலைவர் ஹேமந்த் கார்கரே கொலை போன்ற நாட்டை சீர்குலைக்கும் செயல்களை ஆர்எஸ்எஸ் தான் நடத்தியது என்பதை அஸிமானந்தா வெளிப்படுத்தினார் இதை பகிரங்கப்படுத்தியதில் திக்விஜய்சிங் கின் பங்கு அளப்பெரியது இதை உள்துறை அமைச்சர் பா.சிதம்பரம் கூட காவிபயங்கரவாதம் என்று கூறி உறுதி செய்தார்
இருந்தாலும் இன்னும் ஒரு சார்பு பார்வை நமது அரசியல் தலைவர்கள் முதல் பத்திரிக்கை, செய்தி ,காவல் துறை வகைறாக்களிடம் காணப்படுகின்றன இது தான் சமிபத்தில் நடந்த மும்பை குண்டு வெடிப்பு சம்பவத்தில் நடந்துள்ளது
குண்டு வெடிப்பை கண்டிக்காத எந்த அமைப்பும் இல்லை இது மனித தன்மையற்ற செயல் என்பதை எல்லோரும் ஏற்றுக்கொள்கிறார்கள் அதே சமயத்தில் குண்டு வெடிப்பு நடந்த அடுத்த விநாடியே ஏதாவது ஒரு இஸ்லாமிய அமைப்பின் பெயரை பயன் படுத்துவதும் ஒரு முஸ்லீம் இளைஞரை கைது செய்வதும் தான் கண்டிக்கதக்கது
இத்தகைய இழி செயலை இஸ்லாம் ஒரு போதும் அங்கிகரிக்காது  இப்படி செய்பவர்கள் முஸ்லீம்களே அல்ல. இதை அங்கிகரிப்பவர்களும் முஸ்லீம்களாக இருக்க முடியாது மனிதன் மனிதனாக வாழ கற்றுத்தரும் மார்க்கம் இஸ்லாம் மட்டுமே என்பதை பகுத்தறிவுள்ள மாற்று மத சகோதரர்கள் கூட புரிந்து வைத்துள்ளார்கள் இதை தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பாக மாற்று மத சகோதரரகளுக்காக நடத்தும் ”இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்” என்ற நிகழ்ச்சியின் வாயிலாக புரிந்து கொள்ள முடிகிறது
இஸ்லாத்தின் இத்தகைய கருத்து செவிடன் காதில் ஊதிய சங்கு போலத்தான் செய்தி ஊடகங்கள் மற்றும் அரசு துறையினருக்கு இருக்கிறது
இந்து பயங்காரவாத தாய் அமைப்பான ஆர்எஸ்எஸ் ஸின் உன்மை முகம் நன்றாக தெரிந்தும் அதை வெளியிடுவதறக்கு தயக்கம் காட்டும் இந்திய அரசியலில் சமீப காலாமாக அதை மிகவும் துணிச்சலாகவும் தைரியமாகவும்  வெளியிட்டு எதிர்த்தும் வந்தவர் பீகாரின் லல்லூ பிரசாத் யாதவ் என்பதை நாம் அறிவோம் இவர் இந்தியா அரசியலின் முதலாது ஆண்மகன் என்று அறிவுஜீவீகளால் போற்றப்பட்டவர்.
இந்த வரிசையில் காங்கிரஸ் கட்சியின் திக்விஜய் சிங்கும் சேர்ந்துள்ளார் ஆர்எஸ்எஸ் என்ற இந்து பயங்கரவாத அமைப்பிற்க்கு எதிரான இவருடைய கருத்துக்கள் மிகவும் ஆழமானவை சிந்திக்கவேண்டியவை இதை கீழுள்ள செய்தியின் மூலமாகவும் முன்புள்ள செய்தியின் மூலமாகவும் நாம் அறியலாம் அனால் ஆட்சியாளர்கள் இதை கண்டுகொள்ளமாட்டார்கள் என்பது நாம் அறிந்தவிஷயம் என்றாலும் இத்தகைய துனிச்சலான கருத்தை தெரிவித்த இந்த இந்தியாவின் இரண்டாவது ஆண்மகனுக்கு நாம் நன்றி சொல்லியே ஆகவேண்டும்
ஏன் என்றால் இந்தியாவில் என்னற்ற இஸ்லாமிய அரசியல் அமைப்புகள் உள்ளன குறிப்பாக தமிழ் நாட்டில் நம் சமுதாய நலனை காக்க போகிறோம் என்று சொல்லிக்கொள்ளும் அமைப்புகள் ஏராளமாக உள்ளன
இவர்களால் இந்த சமூதாயத்திற்க்கு என்ன பயன்? சமுதாய பணத்தை வாரிசுருட்டுவது சமுதாய நலன் கருதி வழங்கப்பட்ட ஆம்புலன்ஸை கூட சின்னத்திரையில் நடிக்க வாடகைக்கு விடுவது இன்னும் இது போன்ற இழி செயல்கள் தான் இவர்கள் சமுதாயத்திற்கு செய்தவை
இன்னும்  இஸ்லாத்தின் எதிரிகளான ஆர்எஸ்எஸ் போன்ற அமைப்புகளின் இஸ்லாமிய விரோதப் போக்கை காரணம் காட்டி இளைஞர்களிடம் அவர்களை எதிர்க்க வேண்டும் என்று ஆசைவார்த்தை காட்டி களம் கண்டிருக்கும் அமைப்பு ஆரம்பத்தில் அரசியல் வேண்டாம் என்றாலும் நமது கருத்தை செயல்பாடுகளை நாம் துணிச்சலாக வெளிப்படுத்த வேண்டும் என்று சொல்லி தற்போது அரசியலில் இறங்கியிருக்கிறார்கள் (இவர்கள் இஸ்லாமியர்களை தான் எதிர்க்கிறார்கள் என்பது வேறு விஷயம்) 
இத்தகைய அமைப்புகள் இருந்தும் இதுபோல் நடக்கும் குண்டுவெடிப்புகளுக்கு கண்டனம் தான் தெரிவிக்க முடிந்ததே தவிர  திக்விஜய் சிங்போல் துணிச்சலான கருத்தை சொல்லமுடியவில்லை இதில் மாமாகட்சி இன்னும் வாயே திறக்கவில்லை
தனக்காகவும் தனது அமைப்பிற்காகவும் எந்த அரசியல் கட்சியினரிடமும் மண்டியிடாமலும்  தன்னை அடகு வைக்காமலும் சமுதாய நலன் ஒன்றை மட்டுமே குறிக்கோளாக கொண்டு செயல்பட்டுவரும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மட்டுமே இத்தகைய துணிச்சலான கருத்தை சொல்லிவருகிறது
குஜராத் கோத்ரா ரயில் எரிப்பு மற்றும் பெஸ்ட் பேக்கரி  வழக்கில் மோடி குற்றம் சுமத்தப்பட்ட போதும் அதை மக்களுக்கு  வெளிக்கொண்டுவரும் பணியை தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத் தான் செய்தது இன்னும் சென்ற வருடம் சென்னை தீவுத்திடலில் லட்சக்கணக்காண மக்கள் கூடியிருந்த கூட்டத்தில் பத்திரிக்கை துறையினர் உளவுத் துறையினர் கண்காணிப்புக்கு மத்தியிலும் எங்களின் ஒரே எதிரி  பாஸிஸ இந்து பயங்கரவாதிகள் தான் என்று துனிச்சலாக சொன்ன ஒரே இயக்கம் தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத் தான் என்பதை இங்கு நினைவு படுத்துவோம்.


செய்தி:
JULY 17, புதுடெல்லி: மும்பை தொடர் குண்டு வெடிப்பில் ஹிந்து தீவிரவாத இயக்கமான ஆர்.எஸ்.எஸ்ஸின் பங்கினை நிராகரித்து விடமுடியாது என காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் திக்விஜய்சிங் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் நடந்த ஏராளமான தீவிரவாத செயல்களில் ஆர்.எஸ். எஸ்ஸின் பங்கினைக் குறித்த ஆதாரங்கள் தன் வசம் உள்ளதாக திக்விஜய்சிங் தெரிவித்துள்ளார்.  புதுடெல்லியில் இன்று பத்திரிகையாளர் களுக்கு பேட்டியளிக்கையில் திக்விஜய்சிங் இதனை தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறியதாவது: இதில் எதனையும் தகுதியற்றது என தள்ளுபடிச் செய்து விடமுடியாது. அவற்றை குறித்தெல்லாம் புலனாய்வு ஏஜன்சிகள் விசாரணை நடத்தவேண்டும். ஆர்.எஸ்.எஸ்ஸின் பங்கினைக் குறித்து ஆதாரங்களை புலனாய்வு ஏஜன்சிகள் கேட்டால் நான் அளிக்க தயாராக உள்ளேன்.

ஆர்.எஸ்.எஸ்ஸிற்கு எதிரான ஆதாரங்கள் என்னிடம் உள்ளன. ஆனால் இந்த குண்டுவெடிப்பைக் குறித்து அல்ல. எதற்கான வாய்ப்பையும் நிராகரித்து விடமுடியாது என நான் கூறியது இதனால்தான் என திக்விஜய்சிங் கூறியுள்ளார். இந்த குண்டு வெடிப்புகளில் ஆர்.எஸ்.எஸ். க்கு தொடர்பிருக்கின்றதா என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்பட வேண்டும்.
நன்றி:http://www.sinthikkavum.net/

ஞாயிறு, 17 ஜூலை, 2011

இன்ஸ்பெக்டர் ,திரு ரவி கேட்டாரே!ஒரு கேள்வி!!

அல்லாஹ்வையும் இறுதிநாளையும் நம்பி தொழுகையை நிலைநாட்டி சக்காத்தும் கொடுத்து அல்லாஹ்வைத் தவிர எவருக்கும் அஞ்சாதிருப்போரே அல்லாவின் பள்ளிவாசல்களை நிர்வகிக்க வேண்டும் அவர்களே நேர்வழி பெற்றவர்களாக இருக்க முடியும் .[அல்குர் ஆன் 9;18] 
இணை  கற்பிப்போர் தமது இறை மறுப்புக்கு தாமே சாட்சி கூறிக் கொண்டிருக்கும் நிலையில்,அல்லாஹ்வின் பள்ளிவாசல்களை நிர்வகிப்பது தகாது அவர்கள் செய்தவை அழிந்துவிட்டன,அவர்கள் நரகில் நிரந்தரமாக இருப்பார்கள். {அல்குர்ஆன் 9;17}

நேற்று முரப்பநாடு இன்ஸ்பெக்டர் திரு.ரவி அவர்கள் முன்னிலையில் நடந்த டிஎன்டிஜே மற்றும் மத்ஹப் ஜமாத்தினர் இடையே நடந்த பேச்சு  வார்த்தைகளின் இடையே இன்ஸ்பெக்ட்டர் ,"நானும் தவ்ஹித்வாதிதான்" என்று சொல்லக்கூடிய ஒரு நபரை பார்த்து,ஒரு முஸ்லிம் எப்படி இருக்க வேண்டும் ?என்று கேட்டார் .அவருடைய பதில் சரி இல்லை என்று கூறி ஒரு முஸ்லிம் கண்டிப்பாக குர்ஆனை பின்பற்ற வேண்டும்,என்று கூறினார்.

இப்போது நான் கேட்பது ,ஒரு பிறமத நண்பருக்கு தெரிந்திருக்கிறது,முஸ்லிம் குரானை பின்பற்ற வேண்டும் என்று.,ஆனால் உங்களுக்கு குரான் வசனத்தில் மிகத்தெளிவாக,இறை மறுப்புக்கு சாட்சிக் கொண்டிருக்கும் நிலையில் ,அதாவது இறைமறுப்பை பிரதானமாகக் கொண்ட மவ்லிது ஓதி வரும் ஒருவர் தலைவராக இருக்கிறார்.,"தொழுகையை நிலைநாட்டி சக்காத்தும் கொடுத்து அல்லாஹ்வைத் தவிர எவருக்கும் அஞ்சாதிருப்போரே அல்லாவின் பள்ளிவாசல்களை நிர்வகிக்க வேண்டும்"என்று குரான் வசனம் தெளிவாக இருக்கும்போது ,இரண்டாவது ஜமாதுக்காக தூத்துக்குடியும் ,முரப்பநாடும் மற்றும் தனது சொந்த அற்ப ஆதாயங்களுக்காக ஆங்காங்கே அலையக் கூடியவர்,பள்ளியிலுருந்து சரியாக 150  அடி தூரத்தில் இருந்து கொண்டு பள்ளிக்கு தொழ வந்தால் கால் வலிக்கும் என்றால் அப்படிப்பட்ட நிர்வாகியை ஏற்றுக் கொள்வது தான் தவ்ஹித் வாதிகளின் நிலையா? ஏன் கால் வலிக்காத மற்ற உறுப்பினர்கள் இல்லையா? பள்ளிவாசலை நிர்வகிக்க அல்லாஹ் தொழுவதும் சக்காத்து கொடுப்பதும் இணை வைக்காக் கூடாது என்பதுதான் சரத்துக்கள் என்று அல்லாஹ் கூறுகிறான் ஆனால் அவர் தான் கெட்டிக்கார நிர்வாகி என்கிறீர்கள்.குரானுடன் முரண்படும் நீங்களும் உங்களது வகையறாக்களும் ,நாங்களும் தவ்ஹித்வாத்கிகள் தான் என்று இனி  சொல்ல வெட்கப் படவேண்டும்.
ஆறாம்பண்ணை தவ்ஹித் ஜமாத்தினர் செயல்பாடுகள் சரியில்லை அதனால்தான் நாங்கள் அவர்களுடன் இணைந்து செயல்படவில்லை என்று ஒரு சிலர் பொய் பேசுவதை தயவு செய்து நிறுத்திக் கொள்ளுங்கள்.



சனி, 9 ஜூலை, 2011

ஓடுகாலி அரசனின் கண்ணியம் பாரீர்

Arasan கூறியது...
அரசன் ( இந்த பெயரில் அர்த்தம் உள்ளது உண்மையே ) இனி அரசன் என்ற பெயரிலேயே கேட்கிறேன். உங்களுக்கு தெரிந்த பதிலை கூறுங்கள். என்னுடைய வார்த்தைகளில் கண்டிப்பாக கண்ணிய குறைவு இருக்காது. இது ஒரு ஆரோக்கியமான விவாதமே அன்றி வேறில்லை. இதில் யாரும் ஜெயிப்பது, தோற்பது முக்கியம் இல்லை
31 மார்ச், 2011 1:55 


பிளாகர் Arasan கூறியது...


இவ்வளவுக்கு பிறகும், (இன்னும்) நீங்கள் சொல்லும் கணக்கையும், சமாளிப்பையும் நம்ப நான் ஒன்றும் ___ ண்ணி வீட்டுக்காரன் இல்லை..
2 ஜூலை, 2011 10:54 pm
நண்பர்களே,
என்னுடைய வாதங்களில் கண்ணியக் குறைவு இருக்காது என்று மார்ச் 31 இல் இங்கே எழுதிய அரசன் [இந்த பெயரில் அர்த்தம் உள்ளது உண்மையே ) , ஜூலை 2  இல் ஒரு அபாண்டத்தை கூறியுள்ளார்.


அதாவது எனக்கும் அவர் குறிப்பிட்டுள்ள நபருக்கும் உள்ள எங்களது சொந்த விவகாரம்.இதை இவர் இங்கே சொல்லுவதுதான் இவரது கண்ணியமா? சரி அதிலாவது உண்மை இருக்கிறதா? அதுவும் இவரே இட்டுக் கட்டியுள்ளார்.  இனியும் கண்ணியம் என்பது கொஞ்சமாவது அவரிடம் இருக்குமானால் அவர் அதை நிருபிக்கட்டும் .அவர் கூறும் நண்ணிக்கு நான் என்ன ஏமாற்றினேன்? என்பதையாவது நிருபித்து அவரது கண்ணியத்தை மீட்கட்டும் 


இந்த மகா பொய்யன் அடுத்தவர்கள் பற்றி புறம் பேசுவதையே வாடிக்கையாக வைத்துள்ளான்.இவன் ஐடியைவைத்து அடையாளம் கண்டுகொள்ளப்பட்டுள்ளது.இந்த பொறுக்கிக்கு இனி இங்கு இடம் இல்லை.இவன் மீது நடவடிக்கை எடுத்து இந்த கபோதியை பெரியளாக்க விரும்பவில்லை.