இந்திய அரசியலின் இரண்டாவது ஆண்மகனா?
இந்திய அரசியலின் இரண்டாவது ஆண்மகனா? என்று சொல்லும் அளவிற்க்கு தனது கருத்தை மிகத் துனிச்சலாக வெளியிட்டு வருகிறார் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளார் திக்விஜய் சிங்
இந்தியாவில் நடக்கும் எல்லா குண்டுவெடிப்புகளுக்கும் இஸ்லாமிய தீவீரவாதிகள் தான் காரணம் என்று பத்திரிக்கைகளும் செய்திதுறையும் சொல்லிவருவதை நாம் அறிவோம் அதற்க்கு ஏற்றாற் போல் காவல்துறையும் அடுத்த மறுவிநாடியே ஒரு முஸ்லீம் இளைஞனை கைது செய்து ஏதாவது வாயில் வந்த பெயரை போட்டு விடுவார்கள்
இது தான் காலம் காலமாக நடந்து வருகிறது ஒவ்வொரு முறை குண்டுவெடிப்புகள் நடக்கும் போது பல முஸ்லீம்களை கைது செய்கிறார்கள ஆனால் குற்றங்கள் குறைந்தபாடில்லை உண்மையான குற்றவாளிகளை வெளியில் சுற்றித் திரிய விட்டுவிட்டு பெயருக்கு கைது செய்துவிட்டோம் என்று பொய்யான நாடகமாடினால் எப்படி குற்றம் குறையும்?
இந்நிலையில் சமீப காலத்தில் நடந்த மாலேகான் குண்டு வெடிப்பு மற்றும் அஜ்மீரில் நடந்த குண்டுவெடிப்பு மற்றும் ஏ.டி.எஸ தலைவர் ஹேமந்த் கார்கரே கொலை போன்ற நாட்டை சீர்குலைக்கும் செயல்களை ஆர்எஸ்எஸ் தான் நடத்தியது என்பதை அஸிமானந்தா வெளிப்படுத்தினார் இதை பகிரங்கப்படுத்தியதில் திக்விஜய்சிங் கின் பங்கு அளப்பெரியது இதை உள்துறை அமைச்சர் பா.சிதம்பரம் கூட காவிபயங்கரவாதம் என்று கூறி உறுதி செய்தார்
இருந்தாலும் இன்னும் ஒரு சார்பு பார்வை நமது அரசியல் தலைவர்கள் முதல் பத்திரிக்கை, செய்தி ,காவல் துறை வகைறாக்களிடம் காணப்படுகின்றன இது தான் சமிபத்தில் நடந்த மும்பை குண்டு வெடிப்பு சம்பவத்தில் நடந்துள்ளது
குண்டு வெடிப்பை கண்டிக்காத எந்த அமைப்பும் இல்லை இது மனித தன்மையற்ற செயல் என்பதை எல்லோரும் ஏற்றுக்கொள்கிறார்கள் அதே சமயத்தில் குண்டு வெடிப்பு நடந்த அடுத்த விநாடியே ஏதாவது ஒரு இஸ்லாமிய அமைப்பின் பெயரை பயன் படுத்துவதும் ஒரு முஸ்லீம் இளைஞரை கைது செய்வதும் தான் கண்டிக்கதக்கது
இத்தகைய இழி செயலை இஸ்லாம் ஒரு போதும் அங்கிகரிக்காது இப்படி செய்பவர்கள் முஸ்லீம்களே அல்ல. இதை அங்கிகரிப்பவர்களும் முஸ்லீம் களாக இருக்க முடியாது மனிதன் மனிதனாக வாழ கற்றுத்தரும் மார்க்கம் இஸ்லாம் மட்டுமே என்பதை பகுத்தறிவுள்ள மாற்று மத சகோதரர்கள் கூட புரிந்து வைத்துள்ளார்கள் இதை தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பாக மாற்று மத சகோதரரகளுக்காக நடத்தும் ”இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்” என்ற நிகழ்ச்சியின் வாயிலாக புரிந்து கொள்ள முடிகிறது
இஸ்லாத்தின் இத்தகைய கருத்து செவிடன் காதில் ஊதிய சங்கு போலத்தான் செய்தி ஊடகங்கள் மற்றும் அரசு துறையினருக்கு இருக்கிறது
இந்து பயங்காரவாத தாய் அமைப்பான ஆர்எஸ்எஸ் ஸின் உன்மை முகம் நன்றாக தெரிந்தும் அதை வெளியிடுவதறக்கு தயக்கம் காட்டும் இந்திய அரசியலில் சமீப காலாமாக அதை மிகவும் துணிச்சலாகவும் தைரியமாகவும் வெளியிட்டு எதிர்த்தும் வந்தவர் பீகாரின் லல்லூ பிரசாத் யாதவ் என்பதை நாம் அறிவோம் இவர் இந்தியா அரசியலின் முதலாது ஆண்மகன் என்று அறிவுஜீவீகளால் போற்றப்பட்டவர்.
இந்த வரிசையில் காங்கிரஸ் கட்சியின் திக்விஜய் சிங்கும் சேர்ந்துள்ளார் ஆர்எஸ்எஸ் என்ற இந்து பயங்கரவாத அமைப்பிற்க்கு எதிரான இவருடைய கருத்துக்கள் மிகவும் ஆழமானவை சிந்திக்கவேண்டியவை இதை கீழுள்ள செய்தியின் மூலமாகவும் முன்புள்ள செய்தியின் மூலமாகவும் நாம் அறியலாம் அனால் ஆட்சியாளர்கள் இதை கண்டுகொள்ளமாட்டார்கள் என்பது நாம் அறிந்தவிஷயம் என்றாலும் இத்தகைய துனிச்சலான கருத்தை தெரிவித்த இந்த இந்தியாவின் இரண்டாவது ஆண்மகனுக்கு நாம் நன்றி சொல்லியே ஆகவேண்டும்
ஏன் என்றால் இந்தியாவில் என்னற்ற இஸ்லாமிய அரசியல் அமைப்புகள் உள்ளன குறிப்பாக தமிழ் நாட்டில் நம் சமுதாய நலனை காக்க போகிறோம் என்று சொல்லிக்கொள்ளும் அமைப்புகள் ஏராளமாக உள்ளன
இவர்களால் இந்த சமூதாயத்திற்க்கு என்ன பயன்? சமுதாய பணத்தை வாரிசுருட்டுவது சமுதாய நலன் கருதி வழங்கப்பட்ட ஆம்புலன்ஸை கூட சின்னத்திரையில் நடிக்க வாடகைக்கு விடுவது இன்னும் இது போன்ற இழி செயல்கள் தான் இவர்கள் சமுதாயத்திற்கு செய்தவை
இன்னும் இஸ்லாத்தின் எதிரிகளான ஆர்எஸ்எஸ் போன்ற அமைப்புகளின் இஸ்லாமிய விரோதப் போக்கை காரணம் காட்டி இளைஞர்களிடம் அவர்களை எதிர்க்க வேண்டும் என்று ஆசைவார்த்தை காட்டி களம் கண்டிருக்கும் அமைப்பு ஆரம்பத்தில் அரசியல் வேண்டாம் என்றாலும் நமது கருத்தை செயல்பாடுகளை நாம் துணிச்சலாக வெளிப்படுத்த வேண்டும் என்று சொல்லி தற்போது அரசியலில் இறங்கியிருக்கிறார்கள் (இவர்கள் இஸ்லாமியர்களை தான் எதிர்க்கிறார்கள் என்பது வேறு விஷயம்)
இத்தகைய அமைப்புகள் இருந்தும் இதுபோல் நடக்கும் குண்டுவெடிப்புகளுக்கு கண்டனம் தான் தெரிவிக்க முடிந்ததே தவிர திக்விஜய் சிங்போல் துணிச்சலான கருத்தை சொல்லமுடியவில்லை இதில் மாமாகட்சி இன்னும் வாயே திறக்கவில்லை
தனக்காகவும் தனது அமைப்பிற்காகவும் எந்த அரசியல் கட்சியினரிடமும் மண்டியிடாமலும் தன்னை அடகு வைக்காமலும் சமுதாய நலன் ஒன்றை மட்டுமே குறிக்கோளாக கொண்டு செயல்பட்டுவரும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மட்டுமே இத்தகைய துணிச்சலான கருத்தை சொல்லிவருகிறது
குஜராத் கோத்ரா ரயில் எரிப்பு மற்றும் பெஸ்ட் பேக்கரி வழக்கில் மோடி குற்றம் சுமத்தப்பட்ட போதும் அதை மக்களுக்கு வெளிக்கொண்டுவரும் பணியை தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத் தான் செய்தது இன்னும் சென்ற வருடம் சென்னை தீவுத்திடலில் லட்சக்கணக்காண மக்கள் கூடியிருந்த கூட்டத்தில் பத்திரிக்கை துறையினர் உளவுத் துறையினர் கண்காணிப்புக்கு மத்தியிலும் எங்களின் ஒரே எதிரி பாஸிஸ இந்து பயங்கரவாதிகள் தான் என்று துனிச்சலாக சொன்ன ஒரே இயக்கம் தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத் தான் என்பதை இங்கு நினைவு படுத்துவோம்.
செய்தி:
JULY 17, புதுடெல்லி: மும்பை தொடர் குண்டு வெடிப்பில் ஹிந்து தீவிரவாத இயக்கமான ஆர்.எஸ்.எஸ்ஸின் பங்கினை நிராகரித்து விடமுடியாது என காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் திக்விஜய்சிங் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் நடந்த ஏராளமான தீவிரவாத செயல்களில் ஆர்.எஸ். எஸ்ஸின் பங்கினைக் குறித்த ஆதாரங்கள் தன் வசம் உள்ளதாக திக்விஜய்சிங் தெரிவித்துள்ளார். புதுடெல்லியில் இன்று பத்திரிகையாளர் களுக்கு பேட்டியளிக்கையில் திக்விஜய்சிங் இதனை தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறியதாவது: இதில் எதனையும் தகுதியற்றது என தள்ளுபடிச் செய்து விடமுடியாது. அவற்றை குறித்தெல்லாம் புலனாய்வு ஏஜன்சிகள் விசாரணை நடத்தவேண்டும். ஆர்.எஸ்.எஸ்ஸின் பங்கினைக் குறித்து ஆதாரங்களை புலனாய்வு ஏஜன்சிகள் கேட்டால் நான் அளிக்க தயாராக உள்ளேன்.
ஆர்.எஸ்.எஸ்ஸிற்கு எதிரான ஆதாரங்கள் என்னிடம் உள்ளன. ஆனால் இந்த குண்டுவெடிப்பைக் குறித்து அல்ல. எதற்கான வாய்ப்பையும் நிராகரித்து விடமுடியாது என நான் கூறியது இதனால்தான் என திக்விஜய்சிங் கூறியுள்ளார். இந்த குண்டு வெடிப்புகளில் ஆர்.எஸ்.எஸ். க்கு தொடர்பிருக்கின்றதா என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்பட வேண்டும்.
இந்தியாவில் நடந்த ஏராளமான தீவிரவாத செயல்களில் ஆர்.எஸ். எஸ்ஸின் பங்கினைக் குறித்த ஆதாரங்கள் தன் வசம் உள்ளதாக திக்விஜய்சிங் தெரிவித்துள்ளார். புதுடெல்லியில் இன்று பத்திரிகையாளர் களுக்கு பேட்டியளிக்கையில் திக்விஜய்சிங் இதனை தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறியதாவது: இதில் எதனையும் தகுதியற்றது என தள்ளுபடிச் செய்து விடமுடியாது. அவற்றை குறித்தெல்லாம் புலனாய்வு ஏஜன்சிகள் விசாரணை நடத்தவேண்டும். ஆர்.எஸ்.எஸ்ஸின் பங்கினைக் குறித்து ஆதாரங்களை புலனாய்வு ஏஜன்சிகள் கேட்டால் நான் அளிக்க தயாராக உள்ளேன்.
ஆர்.எஸ்.எஸ்ஸிற்கு எதிரான ஆதாரங்கள் என்னிடம் உள்ளன. ஆனால் இந்த குண்டுவெடிப்பைக் குறித்து அல்ல. எதற்கான வாய்ப்பையும் நிராகரித்து விடமுடியாது என நான் கூறியது இதனால்தான் என திக்விஜய்சிங் கூறியுள்ளார். இந்த குண்டு வெடிப்புகளில் ஆர்.எஸ்.எஸ். க்கு தொடர்பிருக்கின்றதா என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்பட வேண்டும்.
நன்றி:http://www.sinthikkavum.net/
1 கருத்து:
http://kasiyaribrahim.blogspot.com/
கருத்துரையிடுக