இந்த போட்டா விற்கான விளக்கம் கீழே
பள்ளி கட்டிடத்திலும்,குழந்தைகள் விளையாட்டு மைதானமாக உபயோகிக்க கொடுக்கப் பட்ட மனையிலும் வேறு சில கட்சிகள் ,மத இயக்க காரியங்களுக்காக பயன்படுத்துவதாகவும் தெரிய வருகிறது..இக்காரியங்கள் கொடுக்கப்பட்ட ஒப்பந்தங்களை மீறிய செயலாகும்.,என்று நமது பள்ளிவாசல் தலைவர் அவர்கள் கடிதம் அனுப்பியுள்ளார்கள்.
கடந்த இருவருடங்களுக்கு முன்பு பெண்கள் ,ரமலான் இரவு தொழுகை நடத்த பள்ளி வகுப்பறைகள் கொடுத்ததை கூறியுள்ளார்கள்.இந்த வருடம் ஆண்கள் இரவு தொழுகை நடத்த இடம் கேட்டார்கள் .நான் கொடுக்கவில்லை.ஆனால் தொழுகை நின்று விட்டதா?இறைவன் அருளால் ஒரு சகோதரர் இடம் கொடுத்துள்ளார்.
அதைபோல் பெருநாள் தொழுகை நடத்த மைதானத்தை கொடுத்ததையும் குற்றம் கண்டுள்ளனர்.இன்சா அல்லாஹ் இந்தவருடம் மைதானத்தை கொடுக்காவிட்டால் திடல் தொழுகை நின்றுவிடுமா? இறைவன் வேறு எங்காவது இடம் கொடுப்பான் என்ற நம்பிக்கை எங்களுக்கு உண்டு.மேலும் இன்னொரு விசயத்தையும் இங்கே குறிப்பிட விரும்புகிறேன்.தூத்துக்குடி தவ்ஹித் ஜமாத்க்கு திடல் தொழுகை நடத்த நகராட்சி பள்ளிமைதானத்தில் இடம் கொடுத்தார்கள்.ஆழ்வார் திருநகரில் ஜி.டி.ஜிஸ்கூல் மைதானத்தில் இடம் கொடுத்தார்கள்.என்பதையும் உங்கள் கவனத்திற்கு கொண்டுவருகிறேன்.
பள்ளி கட்டிடத்தை ரத்த தான முகாம் ,இலவச மருத்துவ முகாம் தவ்ஹித்ஜமாஅத் சார்பில் நடை பெற்றபோது இடம் கொடுத்ததையும் இங்கு குற்றம் பிடித்துள்ளார்கள்.நமது ஜமாஅத் தலைவர் அவர்களே இலவச மருத்துவ முகாமில் கலந்து கொண்டதைத்தான் மேற்கண்ட போட்டாவில் பார்க்கிறீர்கள்.இதுபோன்ற நற் சேவைகளுக்கு யார் கேட்டாலும் பள்ளி கொடுப்பது வழக்கம். மற்ற ஊர்களிலும் டி.என்.டிஜே சார்பாக ரத்ததான முகாம்,மருத்துவமுகாம் நடைபெறவே செய்கின்றன.பல ஸ்கூலில் இடம் கொடுக்கவே செய்கின்றனர்.இதெல்லாம் ஒருகுற்றமா?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக