Arampannai ஜமாஅத் தலைவர் .
திரு .வைஸ் .கே.ஏ .முஹம்மது உதுமான்
பஞ்சாயத்துதலைவர்
திருமதி.ஹமிதாஹனிபா ;
கவுன்சிலர் .
திருமதி.சரிபாபசிர்

திங்கள், 8 ஆகஸ்ட், 2011

தினமணியின் அயோக்கியத் தனம்


பயங்கரவாதி என்று இந்து மதத்தைச் சேர்ந்தவரை தவறாகச் சுட்ட ராணுவம் 

First Published : 08 Aug 2011 03:39:20 PM IST


காஷ்மீர், ஆக.8: ஜம்மு-காஷ்மீரில் லஷ்கர் பயங்கரவாதி என்ற சந்தேகத்தில் இந்து மதத்தைச் சேர்ந்த மனரீதியாக பாதிக்கப்பட்ட ஒருவரை ராணுவத்தினர் சுட்டுக் கொன்றுள்ளனர்.
பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள காட்டுப்பகுதியில் பாதுகாப்புப் படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அபு உஸ்மான் என அடையாளம் காணப்பட்ட ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார். எனினும் பின்னர் பிரேதப் பரிசோதனையின்போது அவர் அபு உஸ்மான் இல்லை;  மனநலம் பாதிக்கப்பட்ட இந்து மதத்தைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்தது.
ராணுவ வீரர் ஒருவர் அளித்த தவறான தகவலின்பேரில் பயங்கரவாதி என்ற சந்தேகத்தில் அவர் சுட்டுக்கொல்லப்பட்டதாக இந்திய ராணுவத்தின் 16-வது படைப்பிரிவின் செய்தித்தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.
கருத்துகள்

8/8/2011 10:39:00 PM
 So there is no terrorist in Hindu? it's belong to particular religion only? don't give report like this. 
By Muthu Raja 
8/8/2011 10:32:00 PM
 முஸ்லிம் மக்களையும் ராணுவம் சுட்டுகொல்கிறது ஹிந்து என்றல் நியூஸ் வருகிறது முஸ்லிம் என்றல் தீவிரவாதி என்றுமூடி மறைகிறது எந்த அப்பாவியாய் சுட்டாலும் தப்பு தப்புதான் 
By shahul 
8/8/2011 9:25:00 PM
 TM
 இதே தவறாக ஒரு முஸ்லிமோ அலது ஒரு christeen யோ தவறாக சூட் பண்ணி இருந்தால் என்ன நடந்திருக்கும் இந்தியாவில் 
By செந்தில்வேல் 
8/8/2011 6:08:00 PM
M
 பயங்கரவாதிகளே இந்து மதத்தில் இல்லாதவாறும், முஸ்லிம்கள் தான் பயங்கரவாதிகள் போன்றும் செய்தியை சித்தரிக்கும் ஆசிரியரின் நோக்கம் என்ன? ஊடகங்கள் மத சாயல் பூசிகொள்வது இந்திய ஜனநாயகத்துக்கு அழிவே அன்றி வேறு இல்லை...! ஆசிரியர் செய்தியை திருத்தி வெளியிடுவது அவர் கடமை....! 
By நவாப் 
8/8/2011 4:39:00 PM
 தினந்தோறும் கஷ்மீரில் ராணுவம் அப்பாவி முஸ்லிம்களை பயங்கரவாதி என்று சித்தரித்து கொடூரமாக கொலை செய்து கொண்டிருகிறது. இன்று பாவம் ஒரு அப்பாவி இந்து சகோதரர் மாட்டி கொண்டாற்போல் தெரிகிறது. இன்று இராணுவத்தினரின் கண்களுக்கு முஸ்லிம்கள் யாரும் தென்படவில்லை போலும். தற்போது நாட்டு மக்களை காப்பதை விட கொள்ளுவதே ராணுவதினற்கு பிடித்துள்ளது போல் தெரிகிறது. ஒருவரை தீவிரவாதியா அல்லது அப்பாவியா என்று கண்டு பிடிக்க முடியாமல் இருந்தால் அவர் எதற்கு ராணுவத்துக்கு போக வேண்டும். வேறு எங்காவது புரோட்டா மாஸ்டர் வேளைக்கு போய் புரோட்டா சுட வேண்டியது தானே. 
By kadhar 
8/8/2011 4:30:00 PM
 செய்தியின் தலைப்பை தினமணி மறுபரிசீலனை செய்ய வேண்டும். தலைப்பில் இந்து என்ற ஒரு வார்த்தை தவறான கண்ணோட்டத்தை காண்பிப்பதாக உள்ளது. ஒரு வேலை இறந்தவர் முஸ்லிமாக இருந்தால் "பயங்கரவாதி என்று முஸ்லிம் மதத்தை சேர்ந்தவரை தவறாக சுட்ட ராணுவம்" என்று தலைப்பு போடுவீர்களா? யோசித்துப்பாருங்கள். முஸ்லிம்கள் எல்லோரும் தீவிரவாதிகள் அல்ல. தீவிரவாதிகளுக்க்ம் அல்லாதவர்களுக்கும் மத சாயம் பூசி தங்கள் நடுநிலை தவறால் தவறி விட வேண்டாமே! 
By அன்பு 
8/8/2011 4:25:00 PM
 இதே போன்று ராணுவத்தினரால் பல முஸ்லிம்கள் தவறுதலாக சுடப்பட்ட போது 'பயங்கரவாதி என்று இஸ்லாமிய மதத்தை சார்ந்தவாரை தவறாக சுட்ட இராணுவம்' என்று தினமணி ஏன் செய்தி வெளியிடவில்லை? 

கருத்துகள் இல்லை: