Arampannai ஜமாஅத் தலைவர் .
திரு .வைஸ் .கே.ஏ .முஹம்மது உதுமான்
பஞ்சாயத்துதலைவர்
திருமதி.ஹமிதாஹனிபா ;
கவுன்சிலர் .
திருமதி.சரிபாபசிர்

ஞாயிறு, 7 ஆகஸ்ட், 2011


கண்ணியவான்களே! யானையை சோற்றில் மறைக்கும் பொய் புளுகும் நிர்வாகம் பாரீர் !
மீனா மெற்றிகுலேசனில் வேலை பார்க்கும் இப்ராஹீம் என்பவர்,அப்போதைய பள்ளி நிர்வாகத்தில் குடிசை அமைத்து ஜும்மாநடத்தவும் அரபி பள்ளி நடத்தவும்
மூன்று ஆண்டுகள் ஒப்பந்தம் போட்டு பெற்ற இடத்தில் , மூன்று வருடங்களாக குடிசை அமைக்கவில்லை.ஜும்மா தொழுகை நடத்தவில்லை.அரபி பள்ளி நடத்தவில்லை .வம்புக்காக இருநூறு ரூபாய் வாடகை கொடுத்து வருகிறார்,இப்போது கட்டடம் கட்ட முயற்சிக்கிறார் .எனவே அந்த இடத்தை காலி பண்ண வேண்டும் .மேலும் கட்டிடம் கட்ட இடைக்கால உத்தரவும் வக்கீலுக்கு பத்தாயிரம் ரூபாய் பீஸ் கொடுத்து வாங்கியுள்ளனர்.பள்ளிவாசல் நிர்வாகத்தினர்.
கொஞ்சம் கூட இறை அச்சம் இன்றி தொழுகை இல்லாத நிர்வாகம் , பள்ளிவாசலுக்கு வந்தால் கால் வலிக்கும் நிர்வாகம் ,தூத்துக்குடிக்கும் .முரப்பனாடுவுக்கும் திருவை குண்டத்திற்கும் கால் வலி இல்லாமல் அலையும் நிர்வாகம் ,ரமலான் மாதத்தில் பொய் கேஸ் தொடுத்துள்ளார்கள்.
பள்ளிவாசலுக்கு நல்ல இமாமை நியமிக்க,வழியின்றி காலிமனையை கைப்பற்ற மக்களிடம் நஜாத் காரர்களை இல்லாமல் ஆக்கப் போகிறோம் ஊரை ஒற்றுமையாகஆக்கப் போகிறோம் என்று கள்ளத்தனமாக வசூல் செய்து போலீசுக்கும் வக்கீலுக்கும் காசை கரியாக்கும் செயலை இந்த நிர்வாகம் மேற்கொண்டுள்ளது.இமாமுக்கும் பள்ளி ஊழியர்களுக்கும் சம்பளம் கொடுப்பதில் கறாராக இருக்கும் நிர்வாகம் வக்கீலுக்கும் கோர்ட்டுக்கும் காசை விரயமாக்கி வருகிறது.தங்கள் குடும்பங்களிலே ஒற்றுமையாக இருக்காத இவர்கள் ஊர் ஒற்றுமைக்கு பாடுபடுவது போல் வேஷம் காட்டி மக்களை ஏமாற்றும் இவர்களே ஊர் ஒற்றுமைக்கு முதல் எதிரிகள்.
மீரா என்ற பெயரை வக்கீலிடம் சரியாக சொல்லாமல் மீனா என்று சொல்லி,அங்கெ நான் வேலை பார்ப்பதாக எழுதி என்னை கேவலப் படுத்துவதாக இவர்களுக்கு நினைப்பு.அல்லாஹ் யாரை கேவலப் படுத்துவான் என்பது போக போகத் தெரியும்

கருத்துகள் இல்லை: