Arampannai ஜமாஅத் தலைவர் .
திரு .வைஸ் .கே.ஏ .முஹம்மது உதுமான்
பஞ்சாயத்துதலைவர்
திருமதி.ஹமிதாஹனிபா ;
கவுன்சிலர் .
திருமதி.சரிபாபசிர்

திங்கள், 1 ஆகஸ்ட், 2011


ஒற்றுமை வியாபாரிகள்

ஒற்றுமை வியாபாரிகள் 
                                                                                                                            அபுஷிரின் 
                  நம்மவர்களுக்கும் மற்றவர்களுக்கும் ஏதாவது பிரச்னைகள் வந்தால்," நம்மிடம் ஒற்றுமை இல்லை அதுதான் இந்த கதி" என்ற வார்த்தை எல்லோரிடமும் ஒற்றுமையாக வரும்.தனக்கு வேண்டாதவனுக்கும் அந்நியருக்கும் பிரச்னைகள் வந்து அதில் வேண்டாதவன் பாதிக்கப்பட்டால் இவனுக்கு இதுவும் வேணும் இன்னமும் வேணும்என்பார்கள்.அதே சமயத்தில் அவன் அந்நியரால் பாதிக்கப் பட்டால் நம் சமுதாயத்தில் ஒற்றுமை இல்லை என்ற கோசத்தை ஓங்கி முழங்குவார்கள்.அனைத்து முஸ்லிம் அமைப்புகளும் 'முஸ்லிம்கள் ஒற்றுமையாக இருந்தால் தான் வெற்றி பெற முடியும் என்று கூறி தங்களது அமைப்பில் சேருமாறு அழைக்கின்றனர்.அவர்கள் கூறும் ஒற்றுமை என்பது ஒரு தலைமையின் கீழ் அணைத்தது முஸ்லிம்களும் செயல்பட வேண்டும் என்பதே .ஒவ்வரு அமைப்பிலும் ஒரு தலைவர் இருக்கும் நிலையில் ,அந்த தலைவருக்காக ,அந்த தலைவரை சுற்றி ஒரு கூட்டம் இருக்கும் வரையில் எப்படி ஒரு தலைமையின் கீழ் ஒற்றுமை வரும்,?.ஆக அந்த தலைவர்கள் ஒற்றுமை பற்றி பேசுவது தங்களது ஆதாயத்துக்காகவே ஒழிய சமுதாயத்துக்காக அல்ல என்பதே உண்மை. 


ஒற்றுமை பற்றி பேசுபவர்கள் மக்களை எளிதில் வெல்ல அவர்கள் கண்ட உத்தி ,உணர்வுகளை தூண்டி விடுவதுதான் .மற்ற மக்களை விட உணர்வுகளுக்கு எளிதில் அடிமையாவதில் முதலிடம் வகிப்பது முஸ்லிம்களே!. தூண்டி விடப்படும் உணர்வுகள் மெல்ல, மெல்லஇளைஞர்களின் உள்ளத்தில் சேர்ந்து உள்ளங்கள் நிரம்பியதும் அது வெடிக்கும் பொழுது சமுதாயம் அதன் பாதிப்பை தாங்குகிறது.ஆனால் சமுதாயத் தலைவர்கள் அதன் ஆதாயத்தை அடைந்து விடுவார்கள்.ஆதாயம் அடைந்த  தலைவர்கள் மெல்ல மறைந்து விடுவார்கள்.பாதிக்கப்பட்ட சமுதாயமோ மீண்டும் ஒற்றுமையை தேடி அலைகிறது.ஆனால் மக்களிடம் உண்மையான ஒற்றுமை எங்கிருந்து வர வேண்டுமோ ,அதை சுட்டி காட்டினாலோ,அதை தட்டி கழிப்பதில் காலத்தை கடத்தி விடுகிறார்கள்..கடந்த சில நாட்களுக்கு முன் நமதூரில் மூன்று இளைஞர்கள் நண்பர் ஒருவரை அவரது வீட்டில் சந்தித்து இரண்டாவது ஜமாத்தை நிறுத்துவது பற்றியும் ஒற்றுமையாக இருப்பது பற்றியும் இரு தரப்பிலும் அமர்ந்து பேசுவோம் என்றும் ஆனால் அங்கு குரான் ஹதீத் பற்றி பேசுவதை தவிர்க்குமாறும் கூறியுள்ளனர்.தவறு அந்தஇளைஞர்களிடம் இல்லை. இன்றைய சமுதாயத்தின் நிலையை இந்த "ஒற்றுமை"இளைஞர்கள் மிகத் தெளிவாக படம் பிடித்து காட்டுகின்றனர்.இவர்களது வாதமெல்லாம் குரான் ஹதித் பற்றி பேசினால் ஒற்றுமை ஒட்டாத மை ஆகிவிடும் என்பதுவே. அவ்வாறெனின்,அல்லாஹ்வுக்கும் அவன் தூதருக்கும் கட்டுப்பட்டவர்கள் என்ற அர்த்தத்தில் வரக் கூடிய முஸ்லிம் என்ற பெயருக்கு சொந்தக்காரர்கள் ஒற்றுமையாக வாழவேண்டு மென்றால் குர்ஆனையும் ஹதித்களையும் புறக்கணிக்க வேண்டுமா? என்பதே நமது கேள்வி.
ஒற்றுமையை எங்கிருந்து கொண்டு வர வேண்டுமோ அங்கிருந்து ஆரம்பிப்பதில்லை. அதனாலேயே பாலஸ்தீனத்தில் இத்தனை ஆண்டுகள் போராடியும் வெற்றி கிடைக்க வில்லை"நாரேதக்பீர் " "ஈட்டி முன் நிறுத்தினாலும் ஈமானை இழக்க மாட்டோம்" போன்ற கோசங்கள் மக்களிடம் ஒற்றுமையை நிலைக்க செய்யாது. குர்ஆனை ஒற்றுமையின் அடிப்படையாக்குங்கள்  என்றால் அந்த குரானிலிருந்தே ஒற்றுமையை கயிறாக காட்டி,அதன் அர்த்தத்தை திரித்து, அந்த கயிறு எப்படி இருக்கும்? எங்கிருந்து வரும் என்பதை சொல்ல மறந்துவிட்டார்கள்.குர்ஆன் அல்லாஹ்வின கயிற்றை பற்றி பிடித்துக் கொள்ளுங்கள் என்று மிகத் தெளிவாக கூறியிருக்கையில் ,இவர்களோ ஒற்றுமை என்னும் கயிறு என்கிறார்கள்.அல்லாஹ்வின் கயிருவை பற்றி பிடித்துக் கொள்ளுங்கள் என்றால் அல்லாஹ்வுக்கும் நமக்கும் தொடர்பு  ஏற்படுத்தக் கூடிய கயிறு குர்ஆனே என்று ஆழாமாக சிந்திக்க தவறிய மொழி பெயர்ப்பாளர்கள் மேலோட்டமாக ஒற்றுமை என்னும் கயிறு என்ற மொழியாக்கத்தை திணித்து விட்டார்கள். அந்த மொழியாக்கம் தவறு என்பதை அரபு இலக்கண வாயிலாகவும் ஏனைய மொழியாக்கங்களின் வாயிலாகவும் நிருபித்த பிறகும் அதை மறுக்க முடியாதவர்கள் அந்த பழைய தவறான மொழியாக்கத்தை கை விட மறுக்கிறார்கள் என்றால் இவர்கள் மூலம் எப்படி ஒற்றுமையை கொண்டு வர முடியும?
முஸ்லிம்களின் ஒற்றுமை பற்றி அதிகமாக பேசுவதும் அதற்கு வேட்டு வைப்பதும் மர்ர்க்க அறிஞர்களே .ஏனெனில் இவர்கள் மக்களை கிள்ளுக் கீரையாக நினைத்துக் கொண்டு, இவர்களுக்கு என்ன மார்க்கம் தெரியும்?நாங்கள் சொல்லுவதை கேட்டுக் கொண்டு அப்படியே பின்பற்ற வேண்டும். கேள்விகள் கேட்க ஆரம்பித்தால் வருமானத்தில் இடி விழுந்து விடும் என்பதால் மக்கள் தங்களிடம் கேள்விகளே கேட்கக் கூடாத நிலையிலே அவர்களை அறியாமையிலே மூழ்க வைத்திருந்தனர். இந்த மார்க்க அறிஞர்கள் தங்களுக்கு ஆதாயம் என்றால் ஒற்றுமை பற்றி பேசுவார்கள். தங்களது ஆதாயம் என்றால்  அதே ஒற்றுமைக்கு எதிராகவும் பேசுவார்கள். இவர்கள் முஸ்லிம்களின் நலனை பற்றி சிந்தித்தால் எப்போதே முஸ்லிம்களுக்காக இட ஒதுக்கீடு பற்றி வாயளவில் கூட பேசியிருக்கவேண்டும்.அதை கூட அவர்கள் செய்யவில்லை.முதன்முதலாக தவ்ஹித் சிந்தனை யாளர்கள் தமிழகத்தில் தவ்ஹித் கொள்கைகளை மக்கள் மத்தியில் சொல்ல வேண்டும் என்பது பற்றி ஆலோசனை கூட்டம் நடத்தினார்கள் ..1984அப்போது ஓர் பெரும் செல்வந்தர் கூறினாராம்.,'என்னிடம் ஒரு நூறு மில்லியன் டாலர் கொடுங்கள் ,ஒரே நாளில் தமிழகத்தை தவ்ஹித் கொள்கைக்கு கொண்டு வந்துவிடுகிறேன் என்று, எப்படி என்றால் தமிழக ஜமாத்துல் உலாமா சபையை கூட்டி ,உங்களில் ஒவ்வொரு மவ்லவிகளுக்கும் ஆளுக்கு பத்து லட்ச ரூபாய் தருகிறேன் ,நீங்கள் இனி மவ்லிது,தர்கா போன்ற சிர்க்,மற்றும் பித்னா,அனாச்சாரங்கள் மார்க்கம் இல்லை என்றும் குர்ஆனும் ஹதித்கலுமே மார்க்கம் என்று மக்களிடம் பிராச்சாரம் செய்ய வேண்டும் என்று கூறினால் போதும் .அல்லாஹு அக்பர் என்று கூறி கரும்பும் அதை திங்க கூலியும் தரும் பொது எங்களுக்கு உலகத்தில் வேறு என்ன வேண்டும் என்று பெற்றுக் கொண்டு அவர்கள் தங்களிடம் கட்டுண்டு கிடக்கும் மக்களை ஒரே நாளில் தவ்ஹித் கொள்கைக்கு கொண்டு வந்து விடுவார்கள் என்று அந்த செல்வந்தர் கூறினார்.இது முற்றிலும் உண்மை.இந்த மவ்லவிகளின் சொல்லை ஒவ்வொரு முஸ்லிம்களும் கண்மூடித்தனமாக பின்பற்றாமல்  சிந்தித்து பின்பற்றுவார்களே யானால் ஒற்றுமை முஸ்லிம்களிடையே  நொடிப்பொழுதில்  வந்து விடும் ,என்பதையே அல்லாஹ் ,குரானில்தனது குரானை பற்றி பிடித்துக் கொள்ளுமாறு கூறுகிறான்.[தொடரும் இன்சால்லாஹ்]

கருத்துகள் இல்லை: