ராஜிவ்காந்தியை யும் அவருடன் உயர் அதிகாரிகள் உட்பட 18 பேர்களை ஈவு இரக்கமின்றி கொன்ற வழக்கில் தூக்கு தண்டனை பெற்ற ,முருகன்,சாந்தன் ,பேரறிவாளன் மூவரின் தூக்கு தண்டனைகள் ரத்து செய்யப்படவேண்டும் என்று கோரிக்கை வைத்து தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் நடை பெற்றுவருகிறது.இதற்கு மனித நேய சாயம் பூசப்பட்டு நியாயப்படுத்தியும் ஊடகங்களும் ஆதரவு தெரிவித்து வருகின்றன.இது போன்று அப்சல்குருவுக்கு காஷ்மீரிகள் ஆர்பாட்டம் நடத்தியிருந்தால் மீடியாக்கள் கொதித்து எழுந்திருக்கும். உண்ட வீட்டுக்கு கெண்டி தூக்கிய இந்த நய வஞ்சககர்கள் மீது தமிழ் பயங்கரவாதிகளுக்கு நேசம் இருப்பதில் தவறில்லை. ஆனால் இந்த ஊடகங்களுக்கு பச்சாத்தாபம் ஏற்பட்டதன் காரணம் என்ன?ஓமர் அப்துல்லா தனது வெப்சைட்டில் கேட்டுள்ள நியாயமான கேள்வியை ,தினமணி சர்ச்சைக்குரியதாக கூறியுள்ளது.
கொலையாளிகள் மீது மனித நேயம் காட்டும் வது மனித நேயமா?கொலையாளி நேயமா? இப்போது மரணதண்டனைகளை நிறுத்த போராடுவதை விட இவர்களை யாராவது கொலை செய்தால் அவர்களது வாரிசுகள் வேண்டுமானால் அந்த போராட்டத்தை ஆரம்பிக்கட்டும்..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக