Arampannai ஜமாஅத் தலைவர் .
திரு .வைஸ் .கே.ஏ .முஹம்மது உதுமான்
பஞ்சாயத்துதலைவர்
திருமதி.ஹமிதாஹனிபா ;
கவுன்சிலர் .
திருமதி.சரிபாபசிர்

திங்கள், 24 அக்டோபர், 2011

வக்ப் தேர்தல் முடிவுகளும் பஞ்சாயத்து தேர்தல் முடிவுகளும்

அன்பார்ந்த சகோதரர்களே ,அஸ்ஸலாமு அலைக்கும். 

                                                  நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தல் முடிவுகளை பார்த்திருப்பீர்கள்.இந்த முடிவுகள் மூலம் சில உண்மைகளை அறிய முடியும்.கடந்த உள்ளாட்சிதேர்தல்களில் 1986 நடந்தது போன்று போட்டிகள் ஏற்பட்டு ஒரே ஊரில் உறவினர்களிடையே குடும்ப உறவுகள் பாதிக்ககூடாது என்று 1996 இல் நிர்வாகம் ஜும்மாவுக்கு பிறகு பொதுக் குழு கூடி போட்டியின்றி பஞ்சாயத்து தலைவரும்,யூனியன் கவுன்சிலர் வேட்பாளரும் தேர்வு செய்யப்பட்டனர்.அதே போன்றே 2001  இலும் தேர்வு செய்யப்பட்டனர்.2006 லும் அதே போன்றே போட்டியின்றி தேர்வுகள் நடந்தன.இருப்பினும் துரதிர்ஷ்ட வசமாக போட்டி  ஏற்பட்டது .

அதே போன்று இப்போதைய உள்ளாட்சி தேர்தல் பற்றியும் ஆலோசனை நடத்த ஜும்மாவுக்கு பிறகு பொது குழுவை கூட்டாமல் மக்கள் அதிகம் கூடாத செவ்வாய் மக்ரிபில் கூட்டம் நடத்தினர் அதில் எடுத்த முடிவுகளை இரவு பதினோரு மணியளவில் மாற்றினார்கள்.இந்த கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் பத்துக்கும் குறைவானவர்களே .தலைவர் வெகுளியானவர் என்பதும் அவருக்கு இதில் எந்த பங்கும் இல்லை என்பதும் அனைவரும் தெரிந்த விசயம்தான். செயலாளர்,இதற்கு முன்னர் எந்த ஒரு பொது நலனிலும் அக்கறை எடுத்துக் கொண்டவர் அல்லர்.இந்த உள்ளாட்சி தேர்தல் விசயத்திலும் அவர் மேம்போக்காகவே இருந்துள்ளார்.பொருளாளர் ,உடல் நலக் குறைவாக உள்ளார்.கமிட்டி உறுப்பினர்கள் பலருக்கு இந்த கூட்டம் நடப்பதே தெரியாது..உறுப்பினர்கள் அல்லாத சிலர் நாங்கள் தான் நிர்வாக தேர்தலை கொண்டு வந்தோம் ,ஆதலால் நாங்களே நிர்வாகத்தை கவனிப்போம் என்ற ரீதியில் பள்ளியின் நிர்வாகத்தை கையில் எடுத்துக் கொண்டு ,அவர்கள் மனம் போன போக்கில் நிர்வாகத்தை கேலிக்குரியதாக்கி விட்டனர்.தனி நபர் பகைமையையும் காழ்ப்புணர்வுகளையும் கொள்கையின் பேரால் மக்களை பிளவுபடுத்தி வந்தனர். அதன் பேரில் பஞ்சாயத்திலும் ஆதாயம் அடைய கனவுகண்டனர். தமிழ்நாடு தேர்தல் ஆணையத்தையும் வக்ப் போர்டு என எண்ணிக் கொண்டனர்.இறைவன் அருளால் மக்கள் தீர்ப்பு மாற்றமாகவே இருந்தது.அவனுக்கே புகழனைத்தும். பள்ளிவாசலில் நடக்கும் இத்தனை கேலி கூத்துக்களையும் மக்கள் கண்டு கொள்ளவே இல்லையே என்று தவறாக நினைத்துவிட்டோம்.ஜமாத்தார் மவுனமாகவே இவர்களது நடவடிக்கைகளையே கவனித்தே வந்துள்ளனர்.தவ்ஹித் ஜமாஅத் என்று சொல்லி மக்களை ஏமாற்றி விடலாம் என்ற அவர்களது பசப்புகள் பலிக்கவில்லை.தவ்ஹித் ஜமாத்தினர் என்ன செய்து வருகிறார்கள் என்பதை அவர்கள் அறியாமல் இல்லை.இல்லையெனில் பித்ரா காசுகள் தவ்ஹித் ஜமாத்திடம் ரூ. 115000/= வசூலாகி இருக்குமா? நமதூர் பொது நலனில் எவ்வித அக்கறையும் இல்லாத ,இதுவரை  கலந்து கொள்ளாத சிலர் ,தவ்ஹித் ஜமாஅத் தனது சிறப்பான செயல்பாட்டினால் மக்கள் மத்தியில் செல்வாக்கு பெற்று வருகிறதே என்ற பொறாமை குணத்தால்   உந்தப்பட்டவர்கள் சூழ்ச்சி செய்தனர்.ஏகத்துவ கொள்கையுள்ள PFI இளைஞர்களை ,ஏகத்துவமில்லாத PFIகளை வைத்து அவதூறுகளை அள்ளி வீசி பிரித்தனர் தங்கள் கையில் ஒரு இளைஞர்கள் க்ரூப் இருக்கிறது என்று எண்ணி பள்ளிவாசலின் நிர்வாகத்தை கைப்பற்ற திட்டமிட்டனர்.இதனிடையே தவ்ஹித் ஜமாத்தினர் மீது மக்களிடம் கெட்ட பெயர் ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் அரசியல்வாதிகளையும் மிஞ்சும் வண்ணம் சில அபார சூழ்ச்சிகள் செய்தனர். பள்ளியில் அசருக்கு பின்னர் மவ்ளுத் ஓதியவர்கள் மீது கற்களை வீசினர்.சிந்தா  தர்கா கந்தூரியின்போது யானை ஊர்வலம் தெருக்குள் சென்ற வேளையில் தர்காவின் அரண்மனை கொடி என்று சொல்லப்படும் கொடியை கீழிறக்கி கொளுத்த முயன்றனர். மேலும் தர்காவின் டியுப் லைட்கள் உடைக்கப்பட்டன.இது விசயமாக மறுநாள் தர்கா நிர்வாகம் போலீசில் தவ்ஹித் ஜமாத் மீது கம்ப்ளைன்ட் கொடுக்க சென்றனர்.விவகாரம்   முற்றுவதை அறிந்த தவறு செய்தவன் உண்மையை ஒப்புக் கொண்டதால் போலிஸ் ஸ்டேசனுக்கு சென்றவர்கள் பாதியில் திரும்பி வந்தனர்.அதன் பின்னர் தவ்ஹித் ஜமாஅத் போர்டு சுவரில் மாட்டு சாணியடிப்பதை வழக்கமாக கொண்டனர்.இதை நாங்கள் கண்டு கொள்ளாத வேளையில் தீடிரென்று தர்காவின் நெற்றி சுவரில் மாட்டு சாணியால் பூசியிருந்தனர்.அதாவது தவ்ஹித் ஜமாத் சுவரில் சாணி அடித்ததும்  அவர்களே ,அதன் பின்னர் தர்க்கா சுவரில் சாணியடித்ததும் அவர்களே.தவ்ஹித் சுவரில் சாணியடித்ததால் பதிலுக்கு நாங்கள் தர்கா சுவரில் சாணியடித்தது போல் போலிஸ் கம்ப்ளைன்ட் கொடுக்க இப்படி ஒரு அற்புத திட்டம்.இறையருளால் உளவு துறை மூலம் அதுவும்   தகர்க்க பட்டது..சாணியடித்தவர்கள் பெயர்களை கூறியும் அவர்கள் கண்டுகொள்ளப்படவே இல்லை. இவ்வாறாக  தவ்ஹித்  ஜமாத்துக்கு எதிராக செயல்பட்டவர்கள் பள்ளிவாசல் நிர்வாக தேர்தல் கொண்டு வரும்பொருட்டு தங்களுக்கு தெரிந்த வக்ப் போர்டு உறுப்பினர் சிக்கந்தர் மூலமாக பல புகார்கள் செய்தனர்..அதன்  பின்னர் வக்ப் சூப்ரன்ட் உதுமான் மைதின் என்பவர் தேர்தல் இல்லாமல் நிர்வாக கமிட்டி ஏற்படுத்தும் முயற்சி தோல்வி அடைந்ததும் நாங்கள் சொன்ன யோசனைகளையும் ஏற்காது வக்ப் அதிகாரிகள் அவர்கள் கையில் உள்ளனர் என்ற மமதையில் தேர்தலை கொண்டு வந்தனர். தேர்தலில் அணி பிரித்தது முதல் சில தவறுகள் நடக்கவே செய்தன.மேலும் விதிமுறைகளின்படி ஓட்டு பெட்டிகளை சீல் வைத்த பிறகு அவற்றை தனி அறையில் வைத்து பூட்டி சீல் வைத்திருக்க வேண்டும்.அதிகாரிகள் தனி அறையில் திறந்த அலுவலகத்தில் இருந்தே வாக்கு பற்றிய விவரங்களை சரி பார்க்க வேண்டும் . ஆனால் அனைவரையும் வெளி ஏற்றிவிட்டு அனைத்து கதவுகளையும் பூட்டிவிட்டு ஓட்டு பெட்டிகளுடன் இருந்த மர்மம் என்ன?இவ்வாறு அதிகாரிகள் நடந்து கொள்ள விதிமுறைகள் அனுமதிக்கின்றனவா?இல்லை .இந்த தவறுகளை சுட்டிக்காட்டி மறுநாளே தேர்தல் முடிவுகளை நிறுத்தி வைக்குமாறு ஸ்டே ஆர்டர் வாங்க முடியும்.ஆனாலும் நாங்கள் நல்ல முறையில் நிர்வாகம் செய்தால் சரி என்றே விட்டுவிட்டோம் அவர்கள் வீம்புகாட்டமாட்டர்கள் என்று நம்பினோம்.இருக்கட்டும். இப்போது நடந்த தேர்தல் முடிவுகளை பாருங்கள் .பஞ்சாயத்து தேர்தலில் உள்ள ஒன்று முதல் ஐந்து வரை உள்ள வார்டுகளை ஒருவார்டாகவும் ஆறு முதல் ஒன்பது வரை உள்ள வார்டுகளை ஒரு வார்டாகவும் வக்ப் தேர்தலில் பிரித்து இருந்தனர்.அதன்படியே இப்போதுள்ள தேர்தல் முடிவுகளையும் வக்ப் தேர்தலையும் ஒப்பிட்டு பார்த்தால் உண்மை புரியும்.

மெயின் ரோடு ,வடக்குத்தெரு ,நடுத்தெரு மேல்பகுதி நீங்கலாக  அடங்கிய வார்டில் டி.ஏன்.டிஜே ஆதரவு  பெற்ற அப்துல் பாரி அணி பெற்ற ஓட்டுக்கள் ;97 ;வைஸ் உதுமான் அணி பெற்ற ஓட்டுக்கள்  77    தெற்குதெரு,அரபாத் நகர் அடங்கிய வார்டில் அப்துல் பாரி அணிக்கு  32ஓட்டுக்கள்: வைஸ் உதுமான் அணிக்கு 97ஓட்டுக்கள் 
அதே போன்று பஞ்சாயத்து தேர்தலில் ,மெயின் ரோடு ,வடக்கு தெரு ,நடுத்தெரு மேல் பகுதி நீங்கலாக உள்ள வார்டில் ஹனிபாவுக்கு 366  ஓட்டுக்கள்  மதார் அவர்கட்கு286 ஓட்டுக்கள் 
நடு தெரு மேல்பகுதி  ,தெற்கு  தெரு அரபாத்  நகர்  நாடார் தெரு , sc  தெரு அடங்கிய   வார்டில் ஹனிபாவுக்கு 176 ஓட்டுக்களும் மதாருக்கு 174 ஓட்டுக்களும்  விழுந்துள்ளன 
முதல் வார்டில் அப்துல் பாரி  அணி [டிஎன்டிஜே ],வைஸ் உதுமான் அணியை விட 20௦ ஓட்டுக்கள் அதிகம் .அதே வார்டுகளில் ஹனிபா 80  ஓட்டுக்கள் அதிகம்.பெற்றுள்ளார்.அதாவது மொத்த ஓட்டுக்கள் நான்கு மடங்காகும் போது வித்தியாசமும் நான்கு மடங்காகி உள்ளது.
இரண்டாவது வார்டில் வைஸ்உதுமான் அணிக்கு 65  ஓட்டுக்கள் அப்துல் பாரி அணியை விட அதிகம்.அதேபோல் இப்போது நான்கு மடங்காக அதிகம் கிடைக்காவிட்டாலும் ஒரு மடங்காவது அதிகமாக கிடைத்திருக்க வேண்டும்.ஆனால் ஹனிபாவுக்கே 2  ஓட்டுக்கள் அதிகம் கிடைத்துள்ளது.ஹனிபாவுக்கு 176  ஓட்டுக்களும் மதாருக்கு 174  ஓட்டுக்களும் கிடைத்துள்ளன.இதை சமம் என்று வைத்துக் கொள்ளலாம்.நாடார் ஓட்டுக்கள் sc  ஓட்டுக்கள் இருதரப்புக்கும் சமமாக  விழுந்திருக்கின்றன. இப்படி சமமாகவோ  அல்லது ஐந்து அல்லது அதிக பட்சமாக பத்து ஓட்டுக்களோ அதிகமாக வைஸ் உதுமான் அணிக்கு கிடைத்திருக்க வேண்டும். எவ்வ்வித காரணமும் இன்றி 65  ஓட்டுக்கள் அதிகமாக கிடைக்க வாய்ப்பில்லை.ஆக வக்ப் தேர்தலில் மோசடி நடந்திருக்கிறது என்பதற்கு பஞ்சாயத்து தேர்தல் முடிவுகள் அற்புதமான ஆதாரம்.

சனி, 22 அக்டோபர், 2011

பஞ்சாயத்து தேர்தல் ஓட்டு விவரம் .

பஞ்சாயத்து தேர்தல் ஓட்டு விவரம் .
         ஹமிதா ஹனிபா 542 
           மைதின் பாத்திமாமதார் 460 
            ஆமினா மைதின் 76
               செல்லாதா ஓட்டுக்கள் 43 
                   மொத்த ஓட்டுக்கள் 1121        
இது எங்களை ஏன் நாடவில்லை ?என்று நோட்டிசில் கேள்வி கேட்ட ஜமாஅத் கமிட்டிக்கு ,அல்லாஹ்வை நாடிய அனிபாவிற்கு அதிக ஓட்டுக்கள் கிடைப்பதன் மூலம் இறைவன் கொடுத்த பதில். 


பஞ்சாயத்து கவுன்சிலர் ஓட்டு விவரம் 
                   சரிபா பசீர் ADMK  878 
                     ஆபிதா சலாம் IND  862 
                      அனீஸ் உசைன்காஜாDMK  779  
                        மொத்த ஓட்டுக்கள் 2641

ஆராம்பன்னையில் மட்டும் கவுன்சிலருக்கு கிடைத்த ஓட்டுக்கள் {தோராயமாக] 10 ஓட்டுகள் முதல்  20 ஓட்டுகள் வரை வித்தியாசங்கள் இருக்கலாம்.
                      சரிபாபசீர் [அதிமுக] 730
                      அனீஸ்ஒசெங்காஜா [திமுக ] 270 
                      ஆபிதா சலாம் [ind]105
௩ vathuநாங்கள் தான் சுன்னத் ஜமாஅத் நிர்வாக கமிட்டி ,நாங்கள் பத்து பேர் எடுக்கும் முடிவே ஜமாத்த் முடிவு என்று ஆட்டம் போட்டவர்களுக்கு அவர்களின் நிறுவன தலைவர் ஒசெங்காஜாவிற்கு ஜமாத்தினர் கொடுத்த பதிலடிகள் மேலே பார்த்தீர்களா?


கொ.குறிச்சியில் கிடைத்த கவுன்சிலர் ஓட்டுக்கள் விவரம் [தோராயமாக ]
                    ஆபிதா 750 
                      அனீஸ் 510 
                        சரிபா 150
தேர்ந்தெடுக்கப்பட்ட  பஞ்சாயத்து  உறுப்பினர்கள் 
1.வது வார்டு மவுலான அபுல் ஹசன் 36 ஓட்டுக்கள் அதிகம் 
2.வது வார்டு அ.சே.அஜீசா 30௦ ஓட்டுக்கள் அதிகம் 
3.வது வார்டு எ.எஸ்.எம்.செய்யது முஹம்மது 
4.வது வார்டு சல்மா [குலுக்கல் மூலம் தேர்வு ]
5 .வது வார்டு இப்ராஹீம் [வித்தியாசம் இரண்டே இரண்டு ஓட்டுக்கள்]
6 .வது வார்டு பூத் கனி 
7 .வது வார்டு அமிதா பத்து ஓட்டுக்கள் அதிகம் 
8 ,9 ,வார்டுகள் போட்டியின்றி தேர்வனாவர்கள் 

வார்டு வாரியாக ஓட்டுக்கள் விவரம் 
1& 2 வது வார்டு ஹமிதா 146 
                               மைதின் பாத்திமா 76 
3&4 வது வார்டு ஹமிதா 112 
                                மைதின்பாத்திமா 106 
5&6வது வார்டு ஹமிதா 108 
                               மைதின் பாத்திமா 104 
7.வது வார்டு ஹமிதா 34 
                             மைதின் பாத்திமா 29 
8&9 வது வார்டு ஹமிதா 142 
                                மைதின் பாத்திமா 145    

வெள்ளி, 21 அக்டோபர், 2011

ஏணி இல்லாமலே ஏற்றம் பெற்றுவிட்டார்

மக்ரிப் ஜமாஅத் தோற்றது ,அனைவர் ஜமாஅத் வென்றது,அல்ஹம்துலில்லாஹ் 

ஐம்பது ஆண்டு கால திமுக கோட்டை நொறுங்கி தூள் தூளானது ,

ஆறாம்பண்ணையில்  பசீர்[அதிமுகவு]க்கு 750  ஓட்டுக்கள் 

ஜமாத்தின் ஆதரவுடன் போட்டியிட்ட ஜமாத் கமிட்டியின் மேலானா ஆலோசகரும்,வக்ப் போர்ட் ப்ரோக்கரும், கலெக்டர் ஆபிஸ் ,பிடிஒ ,தாலுகா ஆபிஸ் ,போலிஸ் ஸ்டேசன் அனைத்திலும் இவர் இமை   அசைத்தால்போதும் பணி செய்ய  காத்திருக்கும் அளவில் செல்வாக்கு உள்ளவரும் திமுக வேட்பாளருமான 
ஒசெங்காஜாவுக்கு ஆறாம் பண்ணையில் 300௦௦ ஓட்டுகள்
படித்த மெகா மேதையின் பசப்பு வார்த்தைகள் படுகுழிக்குள் பாயிந்தது.
ஆயிரம் ஓட்டுக்களுக்காக அரசியல் பண்ணியவருக்கு  ,பட்டவர்த்தி முக்கை தாண்டாத அரசியல் சா நக்கியருக்கு சவுக்கடி.
இது சுன்னத் ஜமாத்துக்கும் தவ்ஹித் ஜமாத்துக்கும் நடக்கும் தேர்தல் என்று கொக்கரித்த கபரிஸ்தானில் ஓட்டு கேட்ட  கோழைக்கு மரண அடி 
ஏணி இல்லாமலே ஏற்றம் பெற்றுவிட்டார் ஹனிபா,நாலாவது தடவையாக 
ஏணியும் கோணியுமாக வந்தவர்களுக்கு ஏப்பம் தான் மிச்சம்.
இறைவன் அருளால் கிடைக்கும் ஜனாதிபதி விருதும் ,மக்கள் தீர்ப்பும் ஹனிபாவின் பணிகளுக்கு கிடைக்கும் சான்றுகள்.
ஒசெங்காஜா ஜமாத்தின் சான்றும் படித்த மெகா மேதையின் சான்றும் யாருக்கு வேண்டும்?
ஹனிபாவின்  நேர்மை 
எதிர் தரப்பு வேட்பாளர் ஓட்டு கேட்க செல்ல முடியாத நிலையில் ,தனது மனைவி ஓட்டு கேட்க முனைந்த போது அதை தடுத்துவிட்டார் ஹனிபா. . "போட்டி என்பது சம வாய்ப்புகளுடன் இருக்க வேண்டும் என்பதும்,பிறர் மன நிலை பாதிக்கும் வகையில் இருக்கக் கூடாது "என்றும் கூறிவிட்டார்.அவரின் செலவு எதிர் தரப்பு நோட்டிசுக்கு பதில் அளிக்கும் வண்ணம் நோட்டிஸ் அடித்த வகையில் எண்ணூறு ரூபாய் மட்டும் ,மற்றும் டீ செலவுகள் மட்டுமே .

செவ்வாய், 18 அக்டோபர், 2011

தமிழ்மணம்


சென்ற மாதம் தமிழ்மணத்துடனான ஒரு உரையாடலின் போது (அந்த உரையாடலை காணஇங்கே சுட்டவும்) அவர்களை நோக்கி "உங்கள் மீது இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக" என்று முகமன் கூறியதற்கு, தமிழ்மணம் அளித்த பதில் அதிர்ச்சி தந்தது. அது, 

"தமிழ்மணம்மீது இறைவனின் சாந்தியும், சமாதானமும் நிலவ வேண்டாம்"

இந்த பதில் அதிர்ச்சியை கொடுத்தாலும், அந்த தளத்தை விவாதக்களமாக்க விரும்பாததால் இது குறித்து கேட்கவில்லை. 

ஆனால், சில நாட்களுக்கு முன்பு terrorkummi என்னும் தளத்தில் தமிழ்மண நிர்வாகி இரமணிதரன் என்பவர் கூறிய கருத்து (அந்த கமெண்ட்டுக்களை காண இங்கே சுட்டவும்) மிகுந்த அதிர்ச்சியையும், முஸ்லிம்களின் உணர்வுகளை தூண்டுவதாகவும் இருந்தது. 

"சாந்தியும் அவ அக்கா சமாதானியும் உங்களுடன்கூடியே..சே! பதிவுத்தோஷம்.. கூடவேயிருப்பார்கள்"

ஒரு திரட்டியின் நிர்வாகி பொறுப்பில் இருப்பவர் இப்படியான தரம் தாழ்ந்த கருத்தை கூறுவது மிகுந்த வேதனையளிக்கும் விசயம்.                                         {எதிர்குரல் }


தமிழ் மணம் நிர்வாகத்தின் கவனத்திற்கு ,
                          தமிழ் மணக்க வேண்டும் என்பதே நமது விருப்பம் .அதனை நாற்ற மெடுக்க முனைந்தால் அவர்களை தவிர்ப்பதே தமிழ் மணம்.
தமிழ்  மணக்கும் இஸ்லாமிய தளங்களில்,காணப்படும் கண்ணியம் ,சகோதரத்துவம் ,அறிவியல் போன்றவற்றை தகர்க்க ஒரு அற்ப முயற்சி.
ரமணிதரன் போன்றவர்கள் ,உள்ளத்தில் எவ்வளவு நாற்றத்தை வைத்துக் கொண்டு ,மேலே வாசனை திரவியங்களை பூசிக் கொண்டு தமிழ் மணத்தில் வலம் வருகிறார்கள் என்பதற்கு இது ஒரு சாட்சி. .வருத்தம் தெரிவித்தாலே தமிழ் மணமும் மனமும்.

ஞாயிறு, 16 அக்டோபர், 2011

சூப்பரோ சூப்பர்

////பெரும் பொய்யர்களே நய வஞ்சகர்களே நாங்கள் உள்ளாட்சி தேர்தல்களை கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை என்னும் நிலையில் எங்களை வம்புக்கு இழுப்பது நியாயமா? உங்களது ஸ்பெசல் சுன்னத் ஜமாஅத் கொள்கைப் படி அண்ணன் நிஜாம் வழியில் சாராயம் கொடுத்து நாடார் தெருவில் ஓட்டு கேட்டது போல் தெருக்களிலும் ஏதாவது பாமாயில் கொடுத்து ஓட்டு கேட்க வேண்டியது தானே ! ஏன் தவ்ஹித் ஜமாத்தையும் சுன்னத் ஜமாத்தையும் உங்கள் அற்ப அரசியல் ஆதாயங்களுக்கும் சேர்மன் வேட்பாளர் போடும் லட்சங்களுக்கும் பயன்படுத்த வேண்டும்? ///

தவ்ஹித் ஜமாத்தின் வெற்றி என்ற தலைப்பில் நான் மேலே கண்டவாறு எழுதி இருந்தேன் .நான் அதை மறுத்து பதில் வரும் என்று எதிர்பார்ர்த்தேன் ,ஆனால் நடந்தது என்ன?நான் நெட்டில் நாடார் மக்களுக்கு அவர்கள் மதுபானங்களை கொடுத்ததை  எழுதி நாடார் மக்களை கேவலப் படுத்தி விட்டதாக சொல்லி வாக்கு கேட்டுள்ளார்கள்.
சுன்னத் ஜமாஅத் பெயரில் இவர்கள் அடிக்கும் கூத்தை பார்த்தீர்களா? மது கொடுத்து ஓட்டு கேட்டது போதாது என்று அதை நாம் எடுத்து கூறியதையும் சொல்லி ஓட்டு கேட்டுள்ளார்கள் என்றால் ,;இவர்களை சுன்னத் ஜமாஅத் என்று நம்பி ஓட்டு போடுபவர்களை என்னவென்று சொல்லுவது?என்னால் தான் ஆராம்பன்னையில்  தவ்ஹித் வீழ்ச்சி அடைகிறது,நான் இருப்பதால்தான் அவர்கள் தவ்ஹிதுக்கு வரவில்லை என்று பேசுபவர்கள் இந்த மானங்கெட்டவர்களுடன் கூட்டு வைத்துள்ளார்கள் என்றால் இவர்கள் சுன்னத் ஜமாத்தை கேவலப்படுத்துகிறார்களா? இல்லை தங்கள் ஓட்டுக்காக எதையும் உண்ணுவார்களா?

புதன், 12 அக்டோபர், 2011

பொய்யர்களின் நோட்டிஸ்



அன்புடையீர் அஸ்ஸலாமு அலைக்கும், நேற்று நமதூரில் ஜமா[த்தை]அத்தார்கள்மற்றும் அனைத்து சமுதாய பொது மக்கள் சார்பாக ஒரு நோட்டிசை வெளியிட்டிருந்தார்கள்..அதில் கூறப்பட்டுள்ளதாவது,'கடந்த காலங்களில் நம் ஜமாத்தினரின் ஒட்டு மொத்த ஆதரவுடன் வெற்றி பெற்ற முந்தைய ஊராட்சி மன்ற தலைவர்கள் [எத்தனை பேர்?]நிலை பற்றி நாங்கள் உங்கள் நினைவுக்கு கொண்டு வருகிறோம்.
இரண்டு முறையாக அவர்கள் ஜமாத்தார்களின் ஆதரவோடு ஏக மனதாகப்,போட்டியின்றி ,வென்றதோடு அல்லாமல் ,கடந்த மூன்றாவது முறை போட்டியிருந்தும்ஜமாத்தார்களின் ஆதரவை கேட்டு பெற்றுக் கொண்டே மீண்டும் வெற்றி பெற்றார்கள்.
அவாறு மூன்று முறை வென்று 15  வருடங்கள் பொறுப்பில் இருந்த அவர்கள் இந்த முறையும் நிற்க நினைத்தபோது ,தங்களை எல்லா தடவைகளிலும் வெற்றி பெறச்செய்த ,இதே ஜமாத்தார்களின் ஆதரவை மீண்டும் நாடி வராததன் காரணம் ஏனோ?
இவர்கள் பொய்யர்கள் ,மக்கள் மறதியை பயன்படுத்தி எப்படி வேண்டுமானாலும் புழுகுவார்கள்.என்பதற்கு இது ஒன்றே போதும்.இதற்கு முன்னர் கண்ணியமான நிர்வாக கமிட்டி இருந்தது .அவர்கள் தேர்தலில் போட்டி ஏற்படக்கூடாது என்று இஸ்லாமிய பாரம்பர்யப்படி வெள்ளி ஜும்மாவில் ஆலோசனை கூட்டம் நடக்க இருப்பதை முந்திய ஜும்மாவில் அறிவித்தும் நோட்டிஸ் போர்டில் அறிவிப்பு செய்தும் ஜும்மாவில் கூடி மூன்று முறைகளும் ஏக மனதாக தேர்வு செய்யப்பட்டார்.ஹனிபா முன்பும் ஜமாத்தில் மனு கொடுக்கவில்லை., அவர் போட்டியிடப் போவதாகவும் சொல்லவில்லை .,இப்போது ஏன் கேட்கவில்லை அவர் அப்போது ஜமாஅதாரின் ஆதரவை ஏன் கேட்டுப் பெற்றார் ?என்பது தேவையற்ற கேள்வி. மூன்று முறைகளும் ஜமாத்தில்தான் பஞ்சாயத்துத் தலைவரும் கவுன்சிலரும் முடிவு செய்யப்பட்டு ஜமாஅத் ஆதரவு கொடுத்தது.ஆனால் இந்த தடவையும் ஜமாஅத் நிர்வாக கமிட்டி அதுபோன்று தேர்தல் மனுதாக்கல் முடியும் முன் வெள்ளி ஜும்மாவில் கூடி முடிவு எடுப்பார்கள் என்று அனைவரும் எதிர் பார்த்தோம் .ஆனால் வெள்ளி ஜும்மா முடிந்தது .அதன் பின்னர் கள்ளத்தனமாக வக்ப் போர்டில் காசு கொடுத்து வெற்றி பெற்ற குள்ள நரி ஆலோசகர்களின் ஜமாஅத் மகிரிப்பில் இது விசயமாக முடிவு எடுக்கப் போவதாக அறிவித்தது.அந்த மக்ரிப் ஜமாத்தையும் ஞாயிருவில் வைக்கக் கூடாதா? அதிக கூட்டம் வந்து விடக் கூடாது என்பதற்காக் செவ்வாயில் வைத்தார்கள். தொழுகை முடிந்ததும் எந்த அறிவிப்பும் செய்ய வில்லை.தொழுகை முடிந்ததும் வாரந்தோறும் வழக்கமாக நடைபெறும் தப்லிக் கூட அறிவிப்பு செய்வார்கள் .அந்த அறிவிப்பு கூட கிடையாது..செவ்வாய் கிழமையை தேர்ந்தெடுத்தது தப்லிக் காரர்கள் கூட  இருக்க கூடாது என்பதர்க்ககவும் இருக்கலாம்.வழக்கம் போலவே கள்ள மசூராவில் கூடக்கூடிய உறுப்பினர்களும் ஆலோசனை வல்லுனர்களும் கூடி அதாவது பத்துபேர்கள் மட்டும் கூடி முடிவு எடுத்தார்கள். சேக்கையும் நில மோசடி நிஜாமையும் தலைவருக்கும் கவுன்சிலருக்கும் தேர்ந்து எடுத்தார்கள்.அப்புறம் சில கவுரவ ஆலோசகர்களுக்கும் இது பிடிக்காததால் நாலைந்து பேர் வித்ரு ஜமாஅத் வீட்டில் கூடி மறைந்த மதார் சாஹிபை தேர்வு செய்தார்கள்.இப்படியாக கூடிய செவ்வாய் கிழமை மக்ரிப் ஜமாஅத் ,வித்ரு ஜமாத்தில் கூடிய அதிகபட்சம் பத்து பேர் மட்டும் கூடி எடுத்த முடிவுகளும் பள்ளிவாசல் நிரம்பி வழிந்த ஜும்மா முடிவுகளும் ஒன்றாகுமா?
இப்போதைய ஜமாத்தின் தலைவர் யார் ?
கடந்த தேர்தலின் பொது ஜும்மா ஜமாஅத் எடுத்த முடிவுக்கு எதிராக உறுப்பினராக போட்டியிட்டவர்தான் வைஸ் .உதுமான் ஆவார்கள் .
இப்போதைய இணை செயலாளர் ஜும்மா ஜமாஅத் முடிவுக்கு எதிராக பிரச்சாரம் செய்தவர்.
துணை செயலாளர் உறுப்பினராக போட்டியிட்டவர்.
இன்னும் பள்ளிவாசல் கமிட்டி உறுப்பினர்களும் ஜும்மா ஜமாஅத் முடிவுக்கு எதிராக போட்டியிட்டவர்கள் மற்றும் பிரச்சாரம் செய்தவர்கள்.
இப்படிப்பட்ட வர்கள் இப்போது ஜமாத்தின் மகிமை பற்றி பேசுவது வேடிக்கை அல்லாவா?
அடுத்து அவர்கள் கேட்டிருப்பது ,எதனையும் செய்யாத தங்களின் சாதனைகள் பட்டியலிட முடியாமல்  ஜமாத்தை சந்திக்க முடியாத பயத்தினாலா?என்பது 
ஒ.ஒருவேளை இதனால் தான் பன்னாஸ் கவுன்சிலர் ,பழைய  வல்லூருவும்  மறைமுகமாக வளவு வழியாக பஞ்சாயத்துக்குள் நுழைய முயற்சிக்கிறாரோ! இதிருக்கட்டும் உங்க ஜமாஅத் கமிட்டி ஏன் வெள்ளியன்று வழக்கம் போல் ஜும்மாவில் கூடி முடிவு எடுக்காமல் செவ்வாய் மக்ரிபிலும் வித்ருவிலும் கூடி முடிவு எடுத்தத்து? நீங்கள் ஜமாத்தில் வெற்றி பெற்றவர்கள் தானே ! உங்களுக்குள் இருந்த பயம் என்ன /அதை சொல்லுங்கள் 
அடுத்து மூன்று முறையும் ஜமாத்தினரின் ஆதரவால் வெற்றியை ருசித்த அவர்கள் இவ்வாறு ஜமாத்தினரை புறக்கணிக்கலாமா?ஏற்றி வைத்த ஏணியை உதாசீனப் படுத்தலாமா?
கொஞ்சம் கூட வெட்கம் இல்லாமல் இப்படி கேட்டுள்ளார்கள்.இஸ்லாமிய பாரம்பரிய படி ஜமாத்தின் முக்கிய  முடிவுகள் அனைத்தும் வெள்ளிகிழமை ஜும்மா நாளிலே எடுக்கப்படும் .அந்த நிகழ வை அப்படியே மாற்றி ஜமாத்தை குப்பை கூளமாக்கி கள்ளமசூரா கூட்டி உறுப்பினர்கள் அல்லாத கள்ள ஆலோசகர்களுடன் ஆலோசனை செய்து வந்தவர்கள் ,பஞ்சாயத்து தேர்தலிலாவது வெள்ளியன்று அதிகமான மக்கள் கூடும் நாளில் பஞ்சாயத் தலைவர் பற்றி முடிவு எடுக்க கூடாமல் வித்ரு ஜமாத்தில் முடிவு எடுத்து ஜும்மாவில் ஜமாத்தின் முடிவு என்று அறிவிக்கிறார்களே இவர்களுக்குஎன்ன திமிர் இருக்கிறது? ஜமாத்தை கிள்ளுக் கீரையாகாக்கி விட்டு நிஜாமின் மனம் போல் ஆடும் இவர்கள் அல்லவா  ஏற்றி வைத்த ஏணியை உதாசீனப் படுத்தி வருகிறார்கள்.ஒருவேளை வக்ப்போர்டில் பணம் கொடுத்து தங்களை நிர்வாகிகளாக ஆக்கிய நிஜாமை ஏற்றி வைத்த ஏணியாக எடுத்துக் கொண்டார்களோ?
நமதூரின் முன்னேற்றரத்திர்க்காக குறிப்பிட்டு சொல்லக் கூடிய திட்டங்களில் அவர்கள் கவனம் செலுத்திய விவரத்தினை அவர்கள் பட்டியலிட்டு காட்ட  முடியுமா? 
முடியுமே !கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் ஒவ்வொரு யூனியனிலும் ஜனாதிபதி அவார்டுக்காக மூன்று பஞ்சாயத்துக்கள் தேர்வு செயப்பட்டதில் நமது யூனியனில் ஆறாம்பண்ணை பஞ்சாயத்துவும் ஒன்று. 31  பஞ்சாயத்துக்களில் முதல் மூன்று இடங்களில் ஒன்றாக இருந்து ஜனாதிபதியிடம் சான்று வாங்கியது ஒன்று போதாதா? இந்த கள்ள மசூரா ஜமாத்திடம் சான்று வாங்க என்ன வேண்டி கிடக்குது 
அடுத்து அவர்கள் கூறுவது 
ஊர் இரண்டுபட்டால் வேண்டாதவர்களுக்கு கொண்டாட்டம்தானே 
இதில் ஊர் யார்?வேண்டாதவர்கள் யார்?விவஸ்தைகெட்ட கள்ள ஜமாத்தே !உங்களுக்கு யோக்கியதை இருந்தால் ,உங்களது செயலாளர்,சில உறுப்பினர்கள் உட்பட ஊர் மக்கள் அனைவரும் கலந்து கொள்ளக் கூடிய ஜும்மாவில்அல்லவா முடிவு எடுத்திருக்க வேண்டும் .பள்ளிவாசளுக்குரிய ஊழியர்களை நியமிக்கவே கள்ள ஜமாது நிர்வாக் கமிட்டிக்கு அதிகாரம் உண்டுபஞ்சாயத்து தலைவரை போட்டியின்றி தேர்ந்தெடுக்க உங்களுக்கு அதிகாரம் தந்தது யார்?வெள்ளி ஜும்மாவை சந்திக்க திராணியில்லாமல் மக்ரிபிலும் வித்ருவிலும் கூட வேண்டிய அவசியம் என்ன?ஆக ஊரை இரண்டாக்கி ஜும்மாவில் கூடாமல் மக்ரிபிலும் வித்ருவிலும் கொண்டாடுவது நீங்கள் அல்லவா? 
பள்ளிவாசல்  நிர்வாகத்திற்கு இடைஞ்சலாகவும் ,தொந்தரவையும் கொடுக்கும் நபர்களின் மீது காவல்துறையிடம் புகார் அளிக்க சென்றால் ,அவர்களுக்காக வக்காலத்து வாங்கவே தங்களது முக்கிய கடமைகள் அவர்களின் பணிகள் இருந்தனே என்பதனை நீங்கள் அறிவீர்கள்.
மக்களை ஏமாற்ற சொல்லப்படும் பசப்பு வார்த்தைகள். இவர்களது செயலாளர் தொழுதால் அல்லவா பள்ளிவாசலின் அருமை தெரியும் .அவரது மகன் தனது தந்தை செயலாளர் ஆகிவிட்டார் என்பதால் ராஜாவூட்டு கன்னுக்குட்டி போல் பள்ளிவாசலை அந்தப்புரமாக நினைத்து 
தவ்ஹித் ஜமாத்காரர்களை கிண்டல் செய்து வந்தார்.அன்று சாகுலை கிண்டல் செய்யவும் அவரது சகோதரரும் சேர்ந்து விரட்டினார்கள் பள்ளிக்குள் ஓடி ஒழித்து தப்பித்துக் கொண்டான்.இதை தலைவர் இருதரப்பினரையும் அழைத்து விசாரிக்காமல் ,நிலமோசடி நிஜாமின் ஆலோசனை பேரில் பள்ளிவாசல் லட்டர் பேடில் குறிப்பிட்ட நபர்கள் மீது கம்ப்ளைன்ட் கொடுத்தார்கள்.உடன் தவ்ஹித் ஜமாஅத் மாவட்ட நிர்வாகத்துடன் தொடர்பு கொண்டு உண்மை நிலை சொல்லப்பட்டு நடவடிக்கை எதுவும் எடுக்க வில்லை.பள்ளிவாசல் லட்டர் பேடு என்னவோ ஜனாதிபதி சிபாரிசு என்று நினைத்தவர்களுக்கு ஏமாற்றம் .இதற்கும் ஹனிபாவுக்கும் என்ன சம்பந்தம் மேலும் இரண்டாம் ஜமாஅத் ஐ இவர்களது தேர்தல் வாக்குறுதி என்று நினைத்து அதை அவர்களால் ஒன்றும் செய்ய முடியவில்லையே அதற்கும் ஹனிபா தான் காரணமாக இருக்குமோ என்ற அச்சம்.பாளையம் கோட்டை மிலிடெரி லயன் பள்ளி நிர்வாகிகள் உங்களைவிட திறமை மிக்கவர்கள் அரசு வேலை ஓய்வு பெற்றவர்கள்,அவர்கள் சாலை மறியல் நடத்தியும் அங்கு இரண்டாம் ஜமாஅத் நிறுத்த முடிய வில்லை.அங்கு யார் உதவுகிறார்கள்?அல்லாஹ்வின் அருளால் அலகாபாத் கோர்ட் உதவுகிறது.மேலும் ஆத்தூரில் சுன்னத் ஜமாஅத் தலைவராகவும் பஞ்சாயத்து தலைவராகவும் ஆத்தூர் ஒன்றிய அதிமுக செயலாளராகவும் டிஎஸ்பியுடன் நெருங்கிய தொடர்பும் உடைய ஷேக் தாவுதாலே அங்கு உள்ள தவ்ஹித் ஜமாத்தை அசைக்க முடியவில்லை.இறுதியில் ஷேக் தாவுத் க்கு இப்போது சீட் கிடைக்காமல் போயிற்று .
இறையருளால் புதிதாக பொறுப்பேற்ற பள்ளி நிர்வாகம் ,வெற்றி களிப்பில் எதிரணியை பழி வாங்க வேண்டும் என்ற எண்ணம் இல்லாமல் பொறுப்புடனும் பொறுமையுடனும் தம் பணியினை மிகவும் கவனத்துடனும் செய்து வருவதை ,,,,,,,
பழி வாங்க இவர்கள் என்ன தமிழக அரசையா கைப்பற்றி உள்ளார்கள் ?ஆசையைப்பாரு ,இவர்கள் என்னவோ ஜெயலிதா அரசு போலும் நாங்கள் என்னவோ திமுக காரர்கள் போல் நிலமோசடி பண்ணியிருப்பது போலவும்,முழு சுகாதார திட்டத்தின் கீழ் தனது உறவினர்களுக்கு மட்டும் பழைய கழிப்பறையில் வெள்ளையடித்து புதியதாக கட்டியதாக காட்டி காசு பெற்றது போலவும் உளறி யுள்ளார்கள் .
வளவு வழியாக நுழைய நினைக்கும் பழைய வல்லூருகளையும் பன்னாஸ்களையும் விரட்டியடிக்க கத்தரிக்கோல் சின்னத்தில் வாக்கு அளியுங்கள்.பள்ளிவாசல் பிரச்னைகளை தீர்க்க தெரியாத போலிஸ் ஸ்டேசனுக்கும் கோர்ட்டுக்கும் ஓடும் இவர்கள் மக்கள் பிரச்னைகளை தீர்த்து வைப்பார்களா?

திங்கள், 10 அக்டோபர், 2011

தவ்ஹித் ஜமாத்தின் வெற்றி 2

ஆத்தூரில் பஞ்சாயத்து தலைவராகவும் .ஜமாத்தலைவராகவும்,ஆழ்வார்திருநகர் அதிமுக ஒன்றிய செயலாளராகவும் ஷேக் தாவுத் என்பவர் இருந்தார். இவருக்கு அதிகார மட்டத்திலும் நெருக்கமான தொடர்பு இருந்தது.அடியாட்கள் பலமும் உண்டு.அந்த ஊரில் இவர்  தவ்ஹித் ஜமாத்தை அழித்து விடுவோம் .பொசுக்கி விடுவோம் என்றார்.பல இடையூறுகள் பண்ணினார்.வாடகைக்கு இருந்தவர்களின் வீடுகளை,கடைகளை காலி பண்ணுமாறும் கட்டாயப் படுத்தினார். அத்தனை தடைகளையும் உடைத்தெறிந்து சுன்னத் ஜமாஅத் பள்ளி அருகிலே தவ்ஹித் மார்கஸ் உருவாக்கி ஜும்மா மற்றும் ஐவேளைகள் தொழுகைகளும் நடை பெற்று வருகிறது.தவ்ஹித் ஜமாஅத் உறுப்பினர்கள் நமதூரை விட மிகக் குறைவாக இருந்தும் பலமிக்க ஷேக் முகம்மதுவால் தவ்ஹித் ஜமாத்தின் சுண்டு விரலைக் கூட அசைக்க முடியவில்லை.இன்னும் இந்த தடவை அவருக்கு போட்டியிட அதிமுக சீட்டும் கிடைக்காமல் போயிற்று.இவர் எந்த டி.எஸ்.பி.யைவைத்து ஆட்டம் போட்டாரோ அவர் ஓரிரு மாதங்களில் இட மாற்றம் செய்யப்பட்டார்.இதை இங்கே சொல்லுவதற்கு காரணம் என்னவெனில் ,கள்ள ஜமாத் வேட்பாளர்களுக்கு ஆதரவு தேடும் பொய்யர்கள் கூட்டம் ,நாங்கள் பிரெசிடென்ட் ஆனால் போலிசை வைத்து தவ்ஹித் ஜமாத்தை ஒன்றும் இல்லாமல் ஆக்கி விடுவோம் .இப்போதைய ப்ரெசிடென்ட் அவர்களுக்கு ஆதரவாக் இருப்பதால் தான் ஒன்றும் செய்ய முடிய வில்லை.என்றும் வெளியூர் பண்ணை  மக்களிடம் நமதூரில் பெரும் பிரச்னைகளும் தகராறுகளும் அதனால் தான் ஜமாத்தில் இருந்து போட்டியிடுகிறோம் என்றும் அதனால் எங்களுக்கு ஆதரவளிக்குமாறு வேண்டி வருகிறார்கள் .பஞ்சாயாத்தை கைப்பற்றி தங்கள் அதிகார ஆட்டம் போட்டு கமிசனிலும் பங்கு போடவே அன்றி வேறொன்றுமில்லை.இவர்கள் இதைப்போல் ஜமாஅத் தேர்தலில் இரண்டாவது ஜமாத்தை நிறுத்திவிடுவோம் என்று சொன்னார்களே முடிந்ததா?நாங்கள் ஏற்கனவே சொன்னது போல் பள்ளிவாசலில் வைத்து எழுதி கேட்டதை போலிஸ் ஸ்டேசனில் இன்ஸ்பெக்டரிடம் ஏச்சுக்கள் வாங்கி எழுதி கொடுத்தனர்.
மீரா ஸ்கூலை கைப்பற்ற திட்டம் போட்டார்கள். அதற்கும் காரணம் தவ்ஹித் ஜமாஅத் அதை வைத்துதான் வளர்ந்துவிட்டார்கள். அங்கு படிக்கும் மாணவர்களிடம் தவ்ஹித் ஜமாஅத் பற்றி பிரச்சாரம் செய்து இளைஞர்களை வழிகெடுத்து விட்டதாகவும் பொய்யர்கள் அவதூறுகளை சொல்லி வந்தனர்.அது உண்மை என்றல் அதிகமான மாணவர்கள் தவ்ஹித் மர்கசில் அல்லவா தொழுகைக்கு வரவேண்டும்.?நேரில் கண்கூடாக பார்க்கும் விசயங்களிலே இப்படி பச்சை பொய்.சொல்லுகிறார்கள்.தவ்ஹித் ஜமாத்தை சேர்ந்தவர்கள் பிள்ளைகள் கூட தவ்ஹித் மர்கசுக்கு தொழுகைக்கு வருவதில்லை.ஸ்கூலில் கல்வி மட்டுமே இருக்கிறதே தவிர அங்கு மார்க்கம் பற்றி எந்த பாடங்களும் நடக்கவில்லை.இவர்கள் சொல்லை நம்பி என்னிடம் கல்வியாளர் ஒருவர் கேட்டார்."தவ்ஹித் பற்றி பள்ளியில் பாடம் எடுக்கிறீர்களா"?என்று. இவர்களது நோக்கம் ஸ்கூலை கையாள வேண்டும் என்பதே.மீரா ஸ்கூலை வைத்துத்தான் ஆறாம் பண்ணையில் தவ்ஹித் வளர்ந்தது உண்மை என்றால் ,செய்துங்கநல்லூரில் எந்த ஸ்கூல் இருக்கிறது?அங்கு தவ்ஹித் ஜமாஅத் ஒரு பழைய பள்ளிவாசல் இருந்ததை புனரமைப்பு செய்து நமதூரை விட சிறப்பாக ஏசி பள்ளிவாசலாக செயல்பட்டு வருகிறதே.இன்னும் தவ்ஹித் ஜமாஅத் தமிழகம் முழுவதும் மிகவும் சிறப்பாகவும் சீரிய முறைகளிலும் செயல்பட்டு வருகிறதே .அந்த ஊர்களில் எந்த ஸ்கூல் உள்ளது?
அன்பு சகோதரர்களே, இந்த பொய்யர்கள் தங்களது அபிலாசைகளையும் அற்ப அதிகார வெறிகளையும் நிறைவேற்றவே தவ்ஹித் ஜமாத்தை காரணம் காட்டி வருகிறார்கள்.தவ்ஹித் ஜமாஅத் என்ன பாவம் செய்தது?
இன்று பல இளைஞர்களை நபி வழியில் திருமணங்கள் செய்கிறார்களே அது பாவமா?வட்டியில்லா கடன் வழங்கியது பாவமா? கல்வி உதவி,மருத்துவ உதவி ,ரத்ததானங்கள் செய்கிறோமே அவைகள் பாவமா?பித்ராவை முறையாக வசூல் செய்து ஏழைகளுக்கு வழங்குகிறோமே ,கூட்டு குர்பானி மூலம் ஏழைகளுக்கும் பயன் கிடைக்க செய்கிறோமே அவைகள் எல்லாம் பாவமா?மொத்த முஸ்லிம் சமுதாய நலன்களுக்கு போராட்டங்கள் நடத்துவதுதான் பாவமா? சிந்தியுங்கள் .அயோக்கியர்களை அடையாளம் காணுங்கள்.

ஞாயிறு, 9 அக்டோபர், 2011

தவ்ஹித் ஜமாத்தின் வெற்றி

அஸ்ஸலாமு அலைக்கும், 
                                                             சென்னையில் இருந்து வந்த சுன்னத் ஜமாஅத் தீவிர ஆதரவாளர் பெரியவர் ஒருவர் சொன்னாராம் ,கத்தம் பாத்தியாவில் கலந்து கொள்ள வந்த தனக்கு கடும் ஏமாற்றமே மிஞ்சியதாக கூறியுள்ளார்.மேலும் தனக்கும் ஓத மாட்டார்களோ ,தனது சந்தூக்கிலும் மாலை போட மாட்டார்களோ,அடக்கம் முடிந்த பிறகு முசாபாஹ் இருக்காதோ  என்ற ஆதங்கப் பட்டதாக கேள்விபட்டேன்.அல்ஹம்துலில்லாஹ்..இதுதான் தவ்ஹித் ஜமாத்தின் வெற்றி .எந்த தவ்ஹித் ஜமாத்தை ஒழிக்கப் போவதாக மக்களிடம் பொல்லாங்கு கூறி ஜமாஅத் தேர்தல் கொண்டு வந்தார்களோ அந்த ஜமாத்தாலே இன்று தவ்ஹித் வளர்கிறது.கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் பள்ளிவாசல் நிர்வாகத்தை மாற்றப் போகிறோம் என்று கையெழுத்து வேட்டை நடத்தி வக்ப் வாரியத்திற்கு மனுக்கள் அனுப்பினார்கள் .வக்ப் போர்டின் வழிகாட்டுதலின் படி அப்போது சூப்ரண்டாக இருந்த உதுமான் மைதீன் தலைமையில் தேர்தல் இல்லாமல் நிர்வாகத்தினரை தேர்ந்தெடுக்க கூட்டம் நடத்திய பொழுது இரு தரப்பிலும் உறுப்பினர் பட்டியல்களை கேட்டார். அப்போது அப்துல்பாரி அவர்கள் தலைமையில் ஒரு அணியும் யாக்கூப்  தலைமையில் ஒரு அணியும் பட்டியல் கொடுக்கப்பட்டது இரு தரப்பினரையும் கலந்து நிர்வாகிகளை தேர்வு செய்யலாமா என்பது பற்றி பரிசீலனை செய்தபோது யாக்கூப் தரப்பினர் மறுத்துவிட்டனர்.கூட்டம் தீர்வற்ற நிலையில் இருந்த பொழுது ,நாங்கள் .ஒரு தீர்வை சொன்னோம்.அதாவது பள்ளியில் வைத்து மவ்ளுத் ஓதக்கூடாது ,மவ்லூத் ஒதுபவரை இமாமாக நியமிக்கக் கூடாது என்று எழுதித் தந்துவிட்டு யாக்கூப் அணியினர் மட்டுமே நிர்வாகிகளாக இருந்து கொள்ளட்டும் என்று கூறினோம்.அதற்கு ஒரு சிலர் தவிர மற்றவர்களும் எதிர்த்து தேர்தல் கொண்டு வந்தனர்.எப்படியோ வென்றனர்.ஆனால் நாங்கள் எதை எழுதி  கேட்டோமோ,அதை கண்ணியமான முறையில் பள்ளிவாசலில் வைத்து  எழுதி தராதவர்கள் போலிஸ் ஸ்டேசனில் வைத்து எந்த  காலத்திலும்  மவ்ளுத்  ஓதும் இமாம்களை நியமிக்க மாட்டோம் என்று எழுதி கொடுத்தனர். இதுதான் எங்களுக்கு வெற்றி .இதைத்தானே அன்று நாங்கள் கேட்டோம் அப்போதே கொடுத்தால் நமது டெப்பாசிட் காசு மிஞ்சியிருக்கும்.தேர்தல் செலவுகள் இரு பக்கமும் ஆகியிருக்காது மேலும் நீங்க சென்னைக்கும் நெல்லைக்கும் பல முறைகள் படை எடுத்திருக்க வேண்டாம்.நபி[ஸல்] அவர்கள் காட்டித்தந்த பெருநாள் திடல் தொழுகைக்கு அப்துல் பாரி அவர்களை ஏற்பாடு செய்யுமாறு வேண்டிய போது எங்களது ஆதரவாளர் என்று கூறப்பட்ட அவர் மறுத்தார். ஆனால் இன்று நபி[ஸல்]அவர்கள் கூறியவாறு நாங்கள் நடத்தி காட்டியது போன்று நீங்களும் திடல் தொழுகைக்கு வந்து விட்டீர்கள். இதுதான் எங்களுக்கு வெற்றி .நாங்கள் ஓட்டுகளை எண்ணி அடையும் அற்ப வெற்றியை விட இது போன்ற வெற்றியை எதிர்பாக்கிறோம்.தேர்தலில் நீங்கள் யார் வெற்றி பெற்றாலும் எங்களுக்கு அதில் ஒன்றும் இல்லை.ஆனால் நீங்கள் அனைவரும் தவ்ஹித் கொள்கைகளை பின்பற்ற வேண்டும் என்பதே எங்களது இலக்கு.அதுவே எங்கள் வெற்றி.
நாங்கள் உள்ளாட்சி தேர்தலில் பங்கேற்கவோ ,ஆதரிக்கவோ மாட்டோம் என்று அறிவித்த பிறகும் உங்களது தேர்தல் ஆதாயம் கருதி வேண்டுமென்றே எங்களை எதிர்த்து போட்டியிடுவதாக கூறிவந்ததோடு எஸ்.பீ யூனூஸ் மருமகன் அப்துல் சலாம் என்பவரை நிஜாம் என்ற மது சப்ளையரை தோற்கடிக்க நாங்கள் நாற்பதினாயிரம் கொடுத்து நிறுத்தியுள்ளதாக தொழ வராத செயலாளர் உட்பட சில கழுகுகள் வதந்தி பரப்பி வந்தனர்.சலாம் ஏன் அடுத்தவர்களிடம் பணம் எதிர்பாக்க வேண்டும்?பொய்யை சொன்னாலும் பொருந்த சொல்லவேண்டுமா?மோசடி மன்னன் நிஜாமின் சிறப்புகளை சொல்லி ஓட்டு கேட்க வழியில்லாததால் இவ்வாறு பொய்யை பரப்பி இப்படி ஒரு உள்ளூர்காரனை தோற்கடிக்க வெளியூர்காரனுக்கு பணம் கொடுக்க வேண்டுமா?ஐயோ பாவம் நிஜாம். ஆதலால் அவருக்கு சுன்னத் ஜமாத்தினரே ஓட்டு போடுங்கள் ,என்று பிரச்சாரம் செய்து வருகின்றனர். இந்த பொய்யர்கள் கூறுவதை எல்லாம் உண்மை என்று நம்பி வந்த ஒரு பெரியவர் சுன்னத் ஜமாஅத் வெறியர் , இன்று பிரச்சாரம் செய்ய வந்த அப்துல் சலாமிடமும் அவரது மாமாவிடமும் நாற்பதினாயிரம் பற்றி கேட்டுள்ளார்.விடுவார்களா அவர்கள்? செமையாக வாங்கி கட்டிகொண்டார்.ஆக பெரும் பொய்யர்களே நய வஞ்சகர்களே நாங்கள் உள்ளாட்சி தேர்தல்களை கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை என்னும் நிலையில் எங்களை வம்புக்கு இழுப்பது நியாயமா? உங்களது ஸ்பெசல் சுன்னத் ஜமாஅத் கொள்கைப் படி அண்ணன் நிஜாம் வழியில் சாராயம் கொடுத்து நாடார் தெருவில் ஓட்டு கேட்டது போல் தெருக்களிலும் ஏதாவது பாமாயில் கொடுத்து ஓட்டு கேட்க வேண்டியது தானே ! ஏன் தவ்ஹித் ஜமாத்தையும் சுன்னத் ஜமாத்தையும் உங்கள் அற்ப அரசியல் ஆதாயங்களுக்கும் சேர்மன் வேட்பாளர் போடும் லட்சங்களுக்கும் பயன்படுத்த வேண்டும்? [இறைவன் நாடினால் தொடரும்]

வெள்ளி, 7 அக்டோபர், 2011

மனிதாபிமானத்தை விஞ்சும் தேர்தல் வெறி


அன்பு பண்ணையர்களே,அஸ்ஸலாமுஅலைக்கும்.

வர  இருக்கின்ற  பஞ்சாயத்து  தேர்தலில் நமது ஒற்றுமை வேடதாரிகள் ஒற்றுமையை நிலை நாட்ட எங்ஙனம் வேஷம் போட்டு வருகின்றனர் என்பதைமுன்பு கூறியிருந்தேன்.நமதூரில் மிக முக்கிய முடிவுகள் எல்லாம் வெள்ளியன்று ஜும்மாவுக்கு பிறகே எடுப்பது வழக்கம்.ஆனால்  தேர்தல் வருவதும் அதில் போட்டியிடுவதற்கு திட்டமிட்டு ரேசன் கார்டு வாக்காளர் அடையாள அட்டை எல்லாம் முன்பே மாற்ற திட்டமிட்டவர்கள் ஜமாத்தினர் அதிகமாக கூடக்கூடிய ஜும்மா நாளை வேண்டுமென்றே தவிர்த்துள்ளனர்..அதன் பிறகு செப்.27 அன்று செவ்வாய் மாலை மக்ரிப் ஜமாத்தில் பஞ்சயத்துதேர்தல் பற்றி முடிவு எடுக்கப் போவதாக போர்டில் எழுதி போட்டவர்கள்,தொழுகை முடிந்ததும் வழக்கம் போல் அறிவிப்பு எதுவும் செய்யாமல் ஜமாத்தினர் நிர்வாகி உட்பட பெரும்பகுதியினர் சென்ற பின்னர் பத்து பேர் கொண்ட ஜமாஅத் அதாவது அசல் நிர்வாக கமிட்டிசேர்ந்தவர்கள் மட்டுமே பஞ்சாயத்து வேட்பாளர்களை தீர்மானிக்கின்றனர்.நிர்வாக கமிட்டி உறுப்பினர்கள் மட்டும் ஜமாஅத் என்று சொல்லிக்கொண்டு தேர்ந்து எடுப்பதற்கு பஞ்சாயத்து தலைவரும் கவுன்சிலரும் என்ன பள்ளிவாசல் ஊழியர்களா?சரி அதன் பின்னர் பஞ்சாயத்து வேட்பாளர் மாற்றப்படுகிறார் .ஏன் மாற்றப்பட்டார் ?என்று மக்களுக்கு தெரிவித்தீர்களா?நாலு பேர்கள் கூடி ஜமாஅத் வேட்பாளரை தேர்ந்தெடுக்க உங்களுக்கு அதிகாரத்தை தந்தது யார்?நீங்கள்தானே ஜமாத் தேர்தலில் வெற்றி பெற்றீர்கள்.அப்போது ஜமாஅத் உங்களுக்கு ஆதரவாகத்தானே இருக்கும் ?பிறகு ஏன் வெள்ளி ஜும்மா ஜமாத்தைசும்மா வாக்கி விட்டு புதன் இரவு வித்ரு ஜமாத்தில் கூடி பஞ்சாயத்து தலைவரை தேர்ந்தெடுக்க வேண்டிய அவசியம் என்ன? உங்களால் போட்டியிட திராணியற்று ,பஞ்சாயத்து அலுவல்களில் அனுபவம் இலாத மாதர் சாஹிபை அவரது விருப்பத்திற்கு மாற்றமாக வலுக்கட்டாயமாக தேர்ந்துடுத்தது ஏன்? அவரது வெகுளித்தனத்தை பயன்படுத்தி ,போற்றி புகழ்ந்து ஏமாற்றிவிட்டு அதிகாரத்திலும் ,கமிசனில் பங்கும் போடவா? ஜமாஅத் சார்பாக பஞ்சாயத்து தலைவர்க்கும் கவுன்சிலருக்கும் வேட்பாளர்களை நிறுத்த வேண்டும் என்று சுன்னத் ஜமாத்தில் எந்த மத்ஹபில் கூறப்பட்டுள்ளது.ஒற்றுமை கருத்தில் கொண்டால் பெரும்பான்மை மக்கள் கூடும் ஜும்மா நாளில் அல்லவா முடிவு எடுத்திருக்க வேண்டும்?உங்களை தேர்ந்தெடுத்த ஜமாத்தினரை புறக்கணித்துவிட்டு வித்ரு ஜமாத்தில் முடிவு எடுக்க வேண்டிய அவசியம் என்ன?

மறைந்த மதார் சாஹிப் அவர்களுக்கு இதய வலி ஏற்பட்டு ஷிபா மருத்துமனையில் அனுமதிக்கப்படுள்ளார்.மிகவும் சீரியசான முறையில் உடன் அறுவை சிகிச்சை தேவைப்படும் கட்டாயத்தில் அனுமதிக்கப்படுள்ளார். ஆனால் உங்களுடன் நெருங்கி பழகிய பல விசயங்களில் உங்களுடன் ஒத்துப்போன ஜாபார் ஆலிம் நீக்கப்பட்ட பிறகும் உங்களுடன் ஐக்கியமாக இருந்தவர் ,உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் சூழ் நிலையில் கவுன்சிலர் வேட்பாளர் ,முன்னாள் கவுன்சிலருடன் ஓட்டு வேட்டையாடியது நியாயமா?நாடார் தெருவில் மதுபாட்டில்கள் வழங்கியும் கொங்கராயகுரிச்சியில் எதை எல்லாமோ கொடுத்தும் பிரச்சாரமும் பண்ணியது மனிதாபிமான செயலா?அவர் இறந்த செய்தி ஒன்பது மணியிலிருந்து காட்டு தீ போல் பரவிக் கொண்டிருக்கையில் இரவு பத்தரை மணிவரை உங்களது ஓட்டு வெறி தணியவில்லையே ஏன்? பிரச்சாரத்திற்கு இன்னும் நாட்கள் இல்லாமல் போகிவிட்டதா? தன்னுடன் போட்டியிடும் சக வேட்பாளர் உயிருக்கு போராடும் வேலை அவரருகில் இருந்து கண்ணுக்கு இமை போல் இருந்து காத்திருக்க வேண்டாமா? அவர்தம் உயிரை விட உனது வெற்றி அத்தனை பெரிதாகி விட்டதா?

 அவர்தம் ஜனாசா அடங்கப்படும் வேளையிலும் கபர்ஷ்தானிலும் வந்த மக்களிடம் ஓட்டு கேட்க வேண்டுமா?இது உங்களது மனிதாபிமான செயலா? தவ்ஹித் மர்கசில் தொழ வந்தாலே,நெருங்கி உறவினர் ஆனாலும் முகத்தை திருப்பிக் கொள்ளும் அவர் வேட்பு மனுவாபஸ் நாளில்,தன்னை எதிர்த்து போட்டியிடும்  ஹனிபாவை டீ சாப்பிட அழைத்ததோடு தன்னுடன் காரில் ஊருக்குகு வருமாறு அழைத்துள்ளார்..மதார் சாஹிப்  உண்மையிலே எதிர்த்து போட்டியிடுபவாராக இருந்தால் தன்னை எதிர்ப்பவன் நிழல் கூட தன மீது விழக்கூடாது என்று நினைப்பவர்.ஆனால் அதற்கு மாற்றமான அவரது செயல்பாடுகளிலிருந்து    அவர் மீது தேர்தல் வலுக்கட்டாயமாக திணிக்கப்பட்டுள்ளது என்பது உண்மை .

வியாழன், 6 அக்டோபர், 2011


மமக எம்.எல்.ஏ-க்கு 1 ஆண்டு சிறை தண்டனை: பரபரப்பு தீர்ப்பு!

02OCT
முறையாக அனுமதி பெறாமல் வெளிநாட்டிலிருந்து பணம் வசூலித்ததாக சிபிஐ தொடர்ந்த வழக்கில் மனிதநேய மக்கள் கட்சி எம்.எல்.ஏ ஜவாஹிருல்லாவுக்கு ஒரு ஆண்டு கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக கூட்டணியில் மனித நேய மக்கள் கட்சியின் சார்பாக ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.எல்.ஏ வாக இருக்கும் தமுமுக தலைவர் ஜவாஹிருல்லாஹ் மீது தொடரப்பட்டிருந்த வழக்கொன்றில் சென்னை நீதிமன்றம் ஒரு ஆண்டு கடுங்காவல் தண்டனை விதித்து தீர்ப்பு கூறியுள்ளது.
இது தொடர்பாக சிபிஐ காவல்துறையினர் நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
“சிபிஐ காவல்துறையின் லஞ்ச ஒழிப்பு பிரிவு சார்பில் தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழக மாநில தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லாஹ், மாநில பொதுச் செயலாளர் எஸ்.ஹைதர் அலி மற்றும் எச்.சையது நிசார் அகமது, ஜி.எம்.சேக், நல்ல முகமது களஞ்சியம் ஆகியோர் மீது சென்னை எழும்பூர் கூடுதல் தலைமை மெட்ரோபாலிட்டன் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
கடந்த 15.12.1997 முதல் 20.6.2000 வரை இவர்கள் செய்த குற்றம் தொடர்பாக இந்த வழக்கு தொடரப்பட்டது. வெளிநாடுகளில் இருந்து ரூ.1 கோடியே 54 லட்சத்து 88 ஆயிரத்து 508 வசூலித்ததாகவும், இதற்கு முறையாக மத்திய அரசிடமோ, ரிசர்வ் வங்கியிடமோ அனுமதி பெறவில்லை என்றும் மேற்கண்ட 5 பேர் மீதும் வெளிநாட்டு பணம் முதலீட்டு ஒழுங்கு முறை சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டி வழக்கு போடப்பட்டது.
இந்த வழக்கில் சென்னை எழும்பூர் கூடுதல் தலைமை மெட்ரோபாலிட்டன் நீதிபதி பி.மோகன்தாஸ் தீர்ப்பு வழங்கினார். அந்தத் தீர்ப்பில் ஜவாஹிருல்லாவுக்கும், ஹைதர் அலிக்கும் தலா 1 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனையும், சையது நிசார் அகமது, ஜி.எம்.சேக், நல்ல முகமது களஞ்சியம் ஆகியோருக்குத் தலா 2 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்து உத்தரவிட்டார்.
மேலும் இவர்கள் அனைவருக்கும் ரூ.1 லட்சத்து 40 ஆயிரம் (ஜவாஹிருல்லாஹ், ஹைதர் அலி ஆகியோருக்குத் தலா ரூ. 10 ஆயிரம், சையது நிசார் அகமது, ஜி.எம்.சேக், நல்ல முகமது களஞ்சியம் ஆகியோருக்குத் தலா ரூ.40 ஆயிரம்) அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார்.
தண்டனை பெற்றவர்களில் எம்.எச்.ஜவாஹிருல்லாஹ் மனிதநேய மக்கள் கட்சியின் (ராமநாதபுரம் தொகுதி) எம்.எல்.ஏ. ஆவார்.


குலோப் மட்டன் மசால்

தக்கடி என்ற வார்த்தை, நம்மை போன நூற்றாண்டுக்கு அழைத்து செல்வது போல் தெரியும்.பார்ப்பதற்கு சிலருக்கு அருவருப்பாகக்கூட  தெரியும்.ஆனால் அதன் சுவை புதியதாக உண்ணுபவர்களை யும் மீண்டும் தன பக்கம் இழுக்கவே செய்கிறது. நமதூரும் மேலாப்பாளையமும் தவிர மற்ற ஊர்களில் இந்த உணவு கிடையாது. பாரம்பர்யமிக்க இந்த உணவு இப்போது நமது ஊரிலும் கல்யாண வீடுகளில் குறைந்து வருகிறது.இந்த உணவை மீண்டும் பிரபல்யமாக்க கொழுக்கட்டை சைஸ் இல்லாமல்  உருண்டையாக குலோப் ஜாமுன் சைஸ்க்கு செய்து கூட்டு என்று சொல்லக்கூடிய மாவுக்கரைசலை  திக்காக வைத்து ;'குலோப்  சிக்கன் மசால், குலோப் மட்டன் மசால்.' என்று  சென்னை யில் உள்ள நமதூர் பெண்கள் டி.வி  சமையல் நிகழ்ச்சிகளில் அறிமுகம் செய்து வைக்கலாம்.நபி[ஸல்]அவர்கள் இந்த உணவை விரும்பி சாப்பிடுவதாக பிறர் சொல்ல கேள்வி பட்டுள்ளேன். 

munavvirul சொன்னது…
ஆறாம்பண்ணை என்று ஏன் பெயர் வந்தது? "ஆறாம் "என்ற வார்த்தைக்கு உர்து மொழியில் "ஒய்வு" சுகம்" என்று பொருள்..ஓய்வாக,சுகம் அனுபவிக்க சிறந்த பண்ணை என்ற காரணத்தால் இந்த பெயர் வந்தது என்றும் ,நமதூரில் முன்பொரு காலத்தில் திருமணம் செய்திருந்த பொதக்குடியில் அடங்கப்பட்டிருக்கும் அப்துல் கரீம் ஹஜ்ரத் என்பவர் இந்த பெயரை வைத்ததாகவும் "இஸ்லாமிய கலைக்களஞ்சியம் "என்ற புத்தகத்தில் படித்த ஞாபகம் ..

திங்கள், 3 அக்டோபர், 2011

ஆறாம்பண்ணை பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிடுபவர்கள்



பஞ்சாயத்து  தலைவர்  வேட்பாளர்கள் 
1.M .அமிதா W/O -ஹனிபா ---------- கத்தரிகோல்
2.M .ஆமீனாW/O -மைதின் பிள்ளை ---------உருளை 
3.M .முகைதின் பாத்திமாW/O -மதார் -----.பூட்டு
பஞ்சாயத்து உறுப்பினர்கள் வேட்பாளர்கள் 
ஹனிப் அணி 
1.வது  வார்டு மவுலானா .அபுல்  ஹசன் -------சாவி [மெய்ன் ரோடு]
2.வது வார்டு.A .அஜீசா W/O அ.சே. அப்துர் ரஹ்மான்.[வ.தெரு +ந.தெரு]
3.வது A.S.M.செய்து முஹம்மது [வ.தெரு]
4.வது A.சல்மா W/O Mஅஜீஸ்.[ந.தெரு]
5. வது A .அப்துல் அலி[ந.தெரு] [அட்டப்ஸ்]
6 .வது S .காஜா [ந.தெரு+தெ.தெரு] [ப.பட்டியார்]
7 .வது.S .அமிதா S/O ஜிலா [தெ.தெரு]
எதிர் அணி 
1 .வது வார்டு.வைஸ்.இப்ராஹீம் ---------------------சீப்பு 
2 .வது வார்டு.ஒ.கே.சாயிதா 
3.வது ஷேக்.[no.2]
4 வது M .அலிமா W /O.K.MK.முஹம்மது அலி
5 . வது S .இப்ராஹீம் [electric]
6  வது அப்துல் கனி [booth]
7 .வது பாத்திமா W/O K.M அப்துல் வஹாப்  
 தேர்ந்தெடுக்கப்பட்ட  உறுப்பினர்கள் 
8 வது  வார்டு  நாடார்  தெரு ஆரோக்கியம் [தெ.தெரு+நாடார் தெரு]
9 வது வார்டு தாழ்த்தப்பட்டோர் [அரபாத் +தா.தெரு]
போட்டியென்றால் அனைத்து வார்டுகளிலும் முஸ்லிம்களே உறுப்பினர்களாக முடியும்.விட்டு கொடுக்கும் மனப்பான்மையில் அவர்களுக்கு வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
கவுன்சிலர் வேட்பாளர்கள்.
1..W/O  சலாம் சுயேச்சை.[கொ.குறிச்சி+ஆ.பண்ணை]
2.W/O A.பசீர்  அஹ்மது  A.D.M.K
3.W/O T.நிஜாம்   D,M.K 

ஞாயிறு, 25 செப்டம்பர், 2011

ஓட்டைவிழுந்த ஒற்றுமை பஞ்சராகிப் போனது பஞ்சாயத்து தேர்தலில்


ஓட்டை விழுந்த ஒற்றுமை பஞ்சராகிப் போனது பஞ்சாயத்து தேர்தலில் 

அன்பு ஆறாம்பண்ணை  சகோதரர்களுக்கு ,அஸ்ஸலாமு அழைக்கும் .
தமிழ்நாடு தவ்ஹித் ஜமாஅத் வரும் உள்ளாட்சி தேர்தலில் பங்கு பெறாது,அமைப்பின் பேரில் யாரையும் ஆதரிக்காது.நிர்வாகிகள் போட்டியிடக் கூடாது உறுப்பினர்கள் போட்டியிட்டாலும் டிஎன்டிஜே பேனரை பயன்படுத்தக் கூடாது.என்று தெளிவாக அறிவித்துள்ளது.ஆனால் நமதூர் கவுன்சிலர் தேர்தலில் சுன்னத் ஜமாஅத் போர்வையில் ஊருக்குள் நுழைந்த ஒருவர் ,அமைதியாக இருந்த ஆராம்பன்னையில் ஒற்றுமையை கொண்டு வரப்போகிறோம் என்ற போதையை இளைஞர் களிடம் ஏற்றி ஒற்றுமையாக இருந்த ஊரில் வகப் போர்டில் ஹராமாக சம்பாதித்த காசை வீசி  தேர்தலை கொண்டு வந்து அழிசாட்டியம் பண்ணியவர்கள் ஜமாஅத் நிர்வாகத்தை கைப்பற்றி ஒரு  வருடத்தில் சாதித்தது என்ன? அப்துல் பாரி என்ற ஒரு நபரைவிட,பதினான்கு உறுப்பினர்களும் பதினெட்டு ஆலோசகர்களும் ,நிஜாம் என்ற தலைமை ஆலோசகரும் அவருக்கு பின்னால் பல கள்ள ஆலோசகர்களும் சேர்ந்து பள்ளியில் சாதித்தது என்ன ?சிந்தா தர்காவில் கச்சேரி வைபவங்களும் வானவேடிக்கைகளும் ,மீலாதுவிழா என்ற பெயரிலே வக்ப் சிக்கந்தரை அழைத்து வந்து ஆட்டம் போட்டதையும் தவிர இவர்கள் சாதித்தது என்ன?அப்துல் பாரி அவர்கள் இருதரப்பினரையும் அரவணைத்து சென்று இரண்டாவது ஜமாஅத் நடைபெறாமலும் ,பள்ளியின் அனைத்து நிர்வாக வேலைகளையும்,மற்றும் இமாம் இல்லாத காலங்களில் இமாமாகவும் தனி நபராக நின்று செயல் பட்டதைவிட இந்த நிர்வாக கூட்டம் என்ன சாதித்து விட்டது?தரீக்கா காரரை துணைத்தலைவராகவும் தவ்ஹித் ஜமாஅத்காராரை செயலாளராகவும் வைத்துக் கொண்டு போலிஸ் ஸ்டேசனுக்கும் கோர்ட்டுக்கும் செல்லாமலே பள்ளியில் எந்த ஒரு பிரச்னைகளும் இல்லாமல் வழி நடத்தி செல்லவில்லையா?இதுவன்றோ ஒற்றுமைக்கு சான்று. ஹாருணை தெரியும் சிக்கந்தரை தெரியும் என்று தேர்தலை கொண்டுவந்து நமதூர் பணம் 28000/= ரூபாய்களை வக்ப் போர்டில் கொண்டு சேர்த்தததை தவிர வகப் போர்டில் இருந்து இவர்கள் நமது பள்ளிவாசலுக்கு ஏதாவது உதவிகளை பெற முடிந்ததா?
              ஊரை இரண்டாக்கிவிட்டார்கள் என்று ஏகமாய் கோசம் போட்டவர்கள்.ஒரே ஜமாத்தாக தொழவேண்டும் என்று சென்னை சிபாரிசுடன் எஸ்பி அலுவலகத்துக்கு மனு கொடுத்தவர்கள் ,ஊரில் ஒற்றுமை இல்லாததால் பலநாட்கள் தூங்காமல் இருக்கிறோம் ,என்று கண்ணீர் வடித்தவண்ண்மாக இருந்தவர்கள் இப்போது நடைபெற இருக்கின்ற பஞ்சாயத்து தேர்தலில் என்னஒற்றுமை நடவடிக்கை எடுத்தார்கள்?வழக்கமாக கடந்த மூன்று பஞ்சாயத்து தேர்தல் களிலும் ஜும்மாவுக்கு பிறகு ஆலோசனை கூட்டம் நடத்தி தேர்தல் இல்லாமல் தேர்ந்தெடுக்க வழி வகைகளை ஆலோசனை செய்தது போல் இல்லாவிட்டாலும் கூட அற்ப முயற்சி கூட செய்யவில்லையே ஏன்?மனக்கரையில் பிரச்னைகள் வரக் கூடாது என்று அவர்கள் எடுத்த முடிவுகள் கூட அமைதி பூங்காவான ஆராம்பன்னையில் எடுக்கப் படவில்லையே ஏன்? ஒரு மாதமாக ரேசன் கார்ட் ,வாக்காளர் அடையாள அட்டை மாற்றம் முயற்சியில் இடி விழுந்து விடக் கூடாது என்பதாலா? இல்லை , நிர்வாக கமிட்டியின் தகுதி மிக்க,மீக்க வேட்பாளர்களை ஜமாத் பொதுக் குழு நிராராகரித்துவிடும் என்ற உள்ளூர பயமா?இல்லை தங்களுக்காக காசை செலவழித்து பள்ளிவாசல் நிர்வாக கமிட்டி அந்தஸ்தை தந்த நிஜாமுக்கு நன்றி பாராட்டும் செயலாகவா?நிஜாமும் செக்கும் வந்து இன்னும் என்ன என்ன ஒற்றுமைகள் ஏற்படுத்தப் போகிறார்களோ?அல்லது என்ன கேவலங்கள் நடைபெறப் போகிறதோ ,அல்லாஹ் காப்பாற்றுவானாக ,இவர்களை தோற்கடிக்க அவன் அருள் புரிவானாக!இவர்கள் ஆராம்பன்னைக்கு செய்த புண்ணியங்களை கொஞ்சம் பட்டியலிட்டு காட்டுங்களேன்.அல்லது அவர்களின் தனி பட்ட பண்புகளை செயல்பாடுகளை மக்களிடம் எடுத்து சொல்லி உங்களது நன்றி கடனை நிறை வேற்றுங்கள்.{அடுத்தவர் நிறுவனத்தில் அறிமுகமில்லாத பெண்களிடம் சென்று கள்ள கணக்கு கேட்டது உட்பட }நாங்கள் அதில் தலையிடவில்லை.ஆனால் தேவையற்ற முறையில் சுன்னத் ஜமாதுக்கும் தவ்ஹித் ஜமாத்துக்கும் இடையே நடக்கும் தேர்தல் என்று பொல்லாங்கு பேச வேண்டாம்.தவ்ஹித் ஜமாஅத் சார்பாக கொங்கராயகுரிச்சியை சேர்ந்த ஒருவரை கவுன்சிலர் தேர்தலில் நிறுத்தி உள்ளதாக  ஒரு பச்சை  பொய்யை நிர்வாக கமிட்டி முதன்மை செயலாளர் அவர்கள் கூறியுள்ளார்கள்.இப்படி ஆதாரமற்ற அவதூறுகளை பரப்பியதன் காரணமாகவே இந்த பிளாக்கர் மூலம் உடைத்திட ஒரு வருட காலமாகிவிட்டது.மீண்டும் பொய்களா?உங்களது அரசியல் ஆதாயங்களை அடைய சேர்மனுக்கு போட்டியிடுபவர் வீசும் சில லட்சங்களை தட்டி பறிக்க அல்லாஹ்வின் மார்க்கத்தை பயன்படுத்துவதா?பஞ்சாயத்து கான்றாக்ட்களில் கமிசன் பெற சுன்னத் ஜமாஅத் என்ற பசுத்தோல் போர்வையா?நீங்கள் யாரை ஏமாற்ற முயசிக்கிரீர்கள்?அல்லாஹ்வையா?அவனது பெயரில் அவனின் அடிமைகளையா? இல்லை சாபி மத்ஹபில்  ,தெருவிளக்கு போடுவது,ரோடு போடுவது ,பஞ்சாயத்து நிர்வாகத்தை நிர்வகிப்பது,சேர்மன் தேர்தலில் எவ்வளவு பெறவேண்டும்?பஞ்சாயத்து திட்டங்களில் கமிசன் எத்தனை சதவீதம் பெறவேண்டும் என்று சொல்லப்பட்டுள்ளதா?இல்லையெனில்,நாங்கள் சுன்னத் ஜமாஅத் முறையில் தெருக்களை சுத்தம் பண்ணப் போகிறோம் ,அவர்கள் வந்தால் தெருக்களை தவ்ஹித் ஜமாஅத் முறைகளில் சுத்தம் பண்ணிவிடுவார்கள்.நாங்கள் பைல்களில் சுன்னத் முறையில் கையெழுத்து போடுவோம் ,அவர்கள் வந்தால் தவ்ஹித் ஜமாஅத் முறையில் ரேசன் கார்டு தருவார்கள் என்று சொல்லி ஓட்டு கேளுங்களேன்.
               பஞ்சாயத்து தேர்தலுக்கும் சுன்னத் ஜமாஅத் தவ்ஹித் ஜமாஅத்களுக்கும் என்ன தொடர்பு? இவர்களது குறி ஊரில் ஒற்றுமை நிலை நாட்டவேண்டும் என்பதெல்லாம் வெளி  வேஷம்.ஊரில் வேற்றுமையை உருவாக்கி ,அந்த வேற்றுமையை நிலை நாட்டி,ஒற்றுமை ஏற்படாதவண்ணம் நிழல் வேலைகளை செம்மண செய்து ஆதாயம் அடையும் அற்ப நோக்கத்திற்கு இளைஞர்களே!பழியாகிவிடாதீர்கள். நிஜாம் என்பவர் ரேசன் கார்டு வோடேர்ஸ் ஐடி எல்லாம் பல ஆயிரங்கள் லஞ்சம் கொடுத்து ,தேர்தலில் இன்னுமதிகமாக செலவுகள் செய்து கவுன்சிலராக ஆகி சேவைகள் செய்யாவிட்டால் ஆறாம்பண்ணை ஆத்தோடு போகிவிடுமாஎன்ன?இல்லை இந்த செட்டியார்தான் ஆதாயம் இல்லாமல் ஆத்தோடு போவாரா? சிந்திக்க வேண்டாமா?அரசியல் ஆதாயத்திர்க்காக மார்க்கத்துடன் விளையாடும் இவர்களை  என்ன  வென்று  சொல்லுவது ? 


வெள்ளி, 16 செப்டம்பர், 2011


ஏன் இஸ்லாம்? --- ஆமினா அசில்மி


அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

ஆமினா அசில்மி (Aminah Assilmi), மிகப் பிரபலமான 
இஸ்லாமிய மார்க்க அறிஞர். அமெரிக்காவைச் சார்ந்த  
சர்வதேச முஸ்லிம் பெண்கள் அமைப்பின் 
தலைவர் ( International Union 
of Muslim Women ). 

ஆமினா அசில்மி, இந்த பெயரை கேட்டாலே இவரைப்பற்றி தெரிந்தவர்களுக்கு ஒரு 
புது உற்சாகம் பிறக்கும். ஒரு முஸ்லிம் எப்படி வாழ வேண்டும் என்பதற்கு ஒரு
 உதாரணம். தன்னை இஸ்லாத்தில் இணைத்து கொண்ட பிறகு கடந்த 
33 ஆண்டுகளாக இவர் செய்து வரும் இஸ்லாமிய சேவைகள் அளப்பறியது. 
சொல்லி மாளாதது. பல முஸ்லிம்களுக்கு இவருடைய வாழ்கை பயணம் ஒரு 
பாடம். அதைத்தான் இங்கு காண இருக்கிறோம். இன்ஷா அல்லாஹ். 

"நான் முஸ்லிம் என்று சொல்லிக்கொள்வதில் மிகவும் பெருமை படுகிறேன். 
இஸ்லாம் என்னுடைய இதயத்துடிப்பு. இஸ்லாம் என்னுடைய பலம். இஸ்லாம் இல்லை 
என்றால் நான் ஒன்றுமில்லை. அல்லாஹ், அவனுடைய மகத்தான கிருபையை 
என்னிடம் காட்டாவிட்டால் என்னால் வாழ முடியாது" ----- ஆமினா அசில்மி

ஆமினா அசில்மி அவர்கள் கிறிஸ்துவ பின்னணியில் (Southern Baptist) இருந்து 
வந்தவர், தன் கல்லூரி காலங்களில் ஒரு மிகச்சிறந்த மாணவியாக திகழ்ந்தவர், 
பல விருதுகளை பெற்றவர்.

ஒரு கணினி கோளாறு இவருடைய வாழ்க்கையை திருப்பி போட்டது.  

அது 1975ஆம் ஆண்டு. முதன் முதலாக ஒரு வகுப்புக்கு முன்பதிவு செய்ய 
கணினி பயன்படுத்திய நேரம். ஆமினா அவர்கள் தான் சேர வேண்டிய வகுப்புக்கு 
தன் பெயரை முன் பதிவு செய்து விட்டு தன் தொழிலை கவனிப்பதற்காக 
ஒக்ளஹோமா (Oklahoma) சென்று விட்டார். திரும்பி வர தாமதமாக, வகுப்பு 
துவங்கி இரண்டு வாரம் சென்ற பிறகே வந்து சேர்ந்தார். விட்டு போன வகுப்புகளை 
வெகு சீக்கிரமே கற்றுக்கொள்ளலாம் என்று நினைத்தவருக்கு அதிர்ச்சி மேல் 
அதிர்ச்சி. ஏனென்றால், கணினி தவறுதலாக வேறொரு வகுப்பில் அவரை 
முன்பதிவு செய்திருந்தது. அந்த வகுப்பு தியேட்டர் (Theatre) வகுப்பு 
என்று அழைக்கபட்டது, அந்த வகுப்பில் அடிக்கடி அனைத்து மாணவர்கள் முன்பு 
பேச வேண்டிருந்தது. இயல்பாகவே ஆமினா அவர்கள் மிகுந்த கூச்ச 
சுபாவம் கொண்டிருந்ததால் இந்த வகுப்பில் சேர மிகவும் அஞ்சினார். 

மிகவும் தாமதம் என்பதால் இந்த வகுப்பை புறக்கணிக்க முடியாத நிலை. மேலும் 
இந்த வகுப்பை அவர் புறக்கணித்தால் அவர் பெரும் ஸ்காலர்ஷிப்பை இழக்க 
வேண்டிய நிலை வரலாம். ஆகவே இந்த வகுப்பில் சேருவதென முடிவெடுத்தார். 

அடுத்த நாள் வகுப்பிற்கு சென்ற அவருக்கு மாபெரும் அதிர்ச்சி. அந்த வகுப்பு 
முழுவதும் அரேபிய மாணவர்கள். அவ்வளவுதான். இனிமேல் வகுப்பிற்கு 
செல்ல கூடாதென முடிவெடுத்தார். அதற்கு அவர் சொன்ன காரணம்

"அந்த நாகரிகமற்ற அரேபியர்களுடன் படிக்க மாட்டேன்"

ஆமினா அவர்களின் கணவர் அவருக்கு ஆறுதல் கூறினார், இறைவன் எது செய்தாலும் அதில்
ஒரு அர்த்தம் இருக்குமென்று. அமீனா அவர்கள் இரண்டு நாட்கள் வீட்டின் அறையில்
அடைந்து இருந்தார். அறையை விட்டு வெளியே வந்த அவர் சொல்லியது

"நான் அவர்களுடன் சேர்ந்து படிப்பேன். மேலும் அவர்களை கிறிஸ்துவராக்குவேன்"

இறைவன் இந்த அரேபியர்களை மதம் மாற்றுவதற்காகவே தன்னை அவர்களுடன்
சேர வைத்ததாக நம்பினார். அரேபியர்களுடன் சேர்ந்து படிக்க தொடங்கினார்.
அவர்களுக்கு  கிருஸ்துவத்தை எடுத்துரைத்தார்.
 " நான் அவர்களிடம் சொல்லுவேன், ஏசுவை மீட்பராக ஏற்காவிட்டால் எப்படி அவர்கள் நரகத்தில் வதைக்க படுவார்கள் என்று...நான் சொல்வதை அவர்கள் கவனமாக கேட்டுக்கொண்டார்கள். மிகுந்த கண்ணியம் காட்டினார்கள். ஆனால் மதம் மாறவில்லை. பிறகு நான் அவர்களிடம் ஏசு கிறிஸ்து எவ்வளவு ஆழமாக அவர்களை நேசிக்கிறார் என்று விளக்கினேன். அப்பொழுதும் அவர்கள் என் பேச்சை சட்டை செய்யவில்லை"

பிறகு ஆமினா அசில்மி அவர்கள் ஒரு முடிவெடுத்தார்கள்...
   "நான் அவர்களுடைய புனித நூலை படிப்பதென முடிவெடுத்தேன், இஸ்லாம்  ஒரு பொய்யான மார்க்கம், முஹம்மது ஒரு பொய்யான தூதர் என்று நிரூபிப்பதற்காக"
ஆமினா அசில்மி அவர்களின் வேண்டுதலின் பேரில் ஒரு
மாணவர் குரானையும் மற்றுமொரு இஸ்லாமிய
புத்தகத்தையும் கொடுத்தார். இந்த இரண்டு
புத்தகங்களையும் அடிப்படையாக வைத்து தன்
ஆராய்ச்சியை தொடங்கினார். சுமார் ஒன்றரை ஆண்டுகள்
முடிவில் மேலும் பதினைந்து இஸ்லாமிய புத்தகங்களை
படித்து முடித்திருந்தார். அப்பொழுதெல்லாம் குரானில் தான்
எது சர்ச்சைக்குரியதோ என்று நினைக்கிறாரோ
அதையெல்லாம் குறிப்பெடுத்து கொள்வார், இஸ்லாம் பொய்
என்று நிரூபிப்பதர்க்காக. ஆனால் குரானின் மூலம் தனக்குள்
ஒரு மாற்றம் ஏற்படுவதை உணர்ந்தார்.
" நான் மாறி கொண்டிருந்தேன், சிறிது சிறிதாக, என் கணவர் சந்தேகம் படுமளவிற்கு. நாங்கள் ஒவ்வொரு வெள்ளியும் சனியும் பார் (BAR) மற்றும் பார்ட்டிகளுக்கு சென்று கொண்டிருந்தோம். ஆனால் நான் இனிமேலும் அங்கு  செல்ல விரும்பவில்லை. அது போன்ற இடங்களில் இருந்து என்னை தனிமை படுத்தினேன்."

பன்றி இறைச்சி மற்றும் மதுவை நிறுத்தி விட்டார். இது அவருடைய கணவரை சந்தேகம்
கொள்ள செய்தது. தன்னை விட்டு செல்லும்படி சொல்லிவிட்டார். ஆமினா அசில்மி அவர்கள்
தனி வீட்டில் வசிக்க ஆரம்பித்தார்கள். இப்பொழுது மேலும் இஸ்லாத்தை பற்றி
ஆராயச்  செய்தார்கள். 

அப்பொழுது அவர்களுக்கு அப்துல் அஜீஸ் அல் ஷேய்க் என்பவரது அறிமுகம் கிடைத்தது.
"அவரை என்னால் மறக்க முடியாது. நான் இஸ்லாத்தை பற்றி கேட்ட ஒவ்வொரு கேள்விக்கும் மிக பொறுமையாக அறிவுப்பூர்வமாக பதிலளித்தார். அவர், என்னுடைய கேள்வி தவறானது என்றோ, முட்டாள்தனமானது என்றோ ஒரு பொழுதும் கூறியதில்லை. சிறிது சிறிதாக என்னுடைய சந்தேகங்கள் விலகின"

1977, மே 21இல், அப்துல் அஜீஸ் மற்றும் அவரது தோழர்கள் முன்னிலையில்
இஸ்லாத்தை ஆமினா அவர்கள் ஏற்றுக்கொண்டார்.

   " இறைவன் ஒருவனே என்றும், முஹம்மது (ஸல்) அவர்கள் அவனது  தூதரென்றும் நான் சாட்சியம் கூறுகின்றேன்"
 "நான் முதன்முதலாக இஸ்லாத்தை படிக்க தொடங்கியபோது, எனக்கு இஸ்லாத்தினால் தேவை என்று ஒன்று இருந்ததாக நினைவில்லை. இஸ்லாமும் என் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்தும் என்றும் நான் நினைக்கவில்லை. ஆனால் முன்பிருந்ததைவிட இப்பொழுதோ என் மனதில் சொல்லமுடியாத ஒரு வித அமைதி, மகிழ்ச்சி. இதற்க்கெல்லாம் காரணம் இஸ்லாம் தான்"

இதன் பிறகு தான் நிலைமை மிக மோசமானது. ஆமினா அசில்மி அவர்களின் தாய்
அவரை ஏற்றுக்கொள்ள மறுத்து விட்டார். அவரது சகோதரியோ அவருக்கு மனநிலை சரி
இல்லை என்று மனநல மருத்துவமனையில் சேர்க்கப்  பார்த்தார். அவரது தந்தையோ
ஆமினாவை கொலை செய்ய பார்த்தார். நண்பர்களோ அவரை வெறுத்து விட்டார்கள். 

குடும்பமும், நண்பர்களும் ஒருசேர புறக்கணித்து விட்டார்கள். கிட்டத்தட்ட
அநாதை. இஸ்லாத்தை ஏற்று கொண்ட சில நாட்களிலேயே ஹிஜாப்
அணிய தொடங்கிவிட்டார்கள். அதன் காரணமாக வேலையில் இருந்து
நீட்கபட்டார்கள். இப்பொழுது குடும்பம், நண்பர்கள், வேலை அனைத்தும்
சென்று விட்டது. காரணம் இஸ்லாம். ஆனால் அவருடைய ஈமான் மேம்மேலும்
அதிகரித்தது. எல்லா புகழும் இறைவனுக்கே. 

இப்பொழுது அவருடைய ஒரே ஆறுதல் பிரிந்து போன கணவர் மட்டுமே.  ஆமினா
அவர்கள், அவருடைய கணவரை மிகவும் நேசித்தார்கள், அவரும்தான். ஆனால்
ஆமினா அவர்களின் மாற்றத்தை அவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. 


இதன் பிறகு தான் நிலைமை மிக மோசமானது. ஆமினா அசில்மி அவர்களின் தாய் அவரை ஏற்றுக்கொள்ள மறுத்து விட்டார். அவரது சகோதரியோ அவருக்கு மனநிலை சரி இல்லை என்று மனநல மருத்துவமனையில் சேர்க்கப்  பார்த்தார். அவரது தந்தையோ ஆமினாவை கொலை செய்ய பார்த்தார். நண்பர்களோ அவரை வெறுத்து விட்டார்கள். 

குடும்பமும், நண்பர்களும் ஒருசேர புறக்கணித்து விட்டார்கள். கிட்டத்தட்ட அநாதை. இஸ்லாத்தை ஏற்று கொண்ட சில நாட்களிலேயே ஹிஜாப் அணிய தொடங்கிவிட்டார்கள். அதன் காரணமாக வேலையில் இருந்து நீட்கபட்டார்கள். இப்பொழுது குடும்பம், நண்பர்கள், வேலை அனைத்தும் சென்று விட்டது. காரணம் இஸ்லாம். ஆனால் அவருடைய ஈமான் மேம்மேலும் அதிகரித்தது. எல்லா புகழும் இறைவனுக்கே. 

இப்பொழுது அவருடைய ஒரே ஆறுதல் பிரிந்து போன கணவர் மட்டுமே.ஆமினா அவர்கள், அவருடைய கணவரை மிகவும் நேசித்தார்கள், அவரும்தான். ஆனால் ஆமினா அவர்களின் மாற்றத்தை அவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. 

விவாகரத்து தவிர்க்க முடியாமல் போனது. ஆமினா அவர்களுக்கு இரண்டு குழந்தைகள். இஸ்லாம் அப்பொழுது அங்கு மிக சிறிதே அறியப்பட்ட நேரம். அந்த சிறிதும் கூட இஸ்லாத்தை பற்றிய தவறான எண்ணங்களாகவே இருந்தன. ஆகவே நீதிபதி அவர்கள், குழந்தைகள் ஆமினா அவர்களிடம் வளர்ந்தால் அவர்களுடைய வாழ்க்கை கேள்வி குறியாகிவிடும் என்றும், குழந்தைகள் ஆமினாவின் கணவரிடம் வளர்வதே அவர்கள் எதிர்காலத்துக்கு நல்லது என்றும் தீர்ப்பளித்தார். ஆமினா அவர்களால் தாங்க முடியாத துயரம். 

அப்பொழுது நீதிபதி ஆமினா அவர்களுக்கு 20 நிமிடங்கள் அவகாசம் கொடுத்தார். ஆம் அதேதான். ஒன்று அவர் கணவர் சொல்லுவது போல் இஸ்லாத்தை கைவிடுவது அல்லது குழந்தைகளை கணவரிடத்தில் ஒப்படைப்பது. 

அவர் தன் குழந்தைகள் மேல் அளவு கடந்த பாசம் வைத்திருந்தார். ஒரு தாய்க்கு இதை விட பெரிய இழப்பு என்ன இருக்க முடியும்? ஒரு நாளல்ல, ஒரு மாதமல்ல, ஒரு வருடமல்ல...வாழ்க்கை முழுவதும் தன் குழந்தைகளை பிரிந்திருக்கவேண்டும். அதே சமயத்தில் இஸ்லாத்தை துறந்து ஒரு பொய்யான வாழ்க்கையையும் வாழ முடியாது. இஸ்லாம் என்ற உண்மையை தன் குழந்தைகளிடம் மறைக்கவும் முடியாது.
"நீங்கள் அறிந்துகொண்டே உண்மையை பொய்யுடன் கலக்காதீர்கள்; உண்மையை மறைக்கவும் செய்யாதீர்கள்" --- குரான் 2:42  
"என் வாழ்வின் மிகத்துயரமான 20 நிமிடங்கள் அவை"
வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுவது போல், அவர் உடல் நிலையில் உள்ள சில பிரச்சனைகளால் மேற்கொண்டு குழந்தைகள் பெற்றுக்கொள்ள முடியாது என்று மருத்துவர்கள் கூறியிருந்தார்கள்.
"முன் எப்போதும் இல்லாத அளவிற்கு துவா செய்தேன்..............எனக்கு நன்றாக தெரியும், என் குழந்தைகளுக்கு அல்லாஹ்விடம் தவிர வேறு பாதுகாப்பான இடம் இல்லையென்று. நான் அல்லாவை துறந்தால், எதிர்காலத்தில் என் குழந்தைகளுக்கு இறைவனிடம் இருப்பதால் ஏற்படக்கூடிய அற்புதங்களை எடுத்து கூற முடியாமல் போய்விடும்"  
ஒரு தாய்க்கு இதை விட ஒரு பெரிய தியாகம் இருக்க முடியாது. ஆம்....அல்லாஹ்விற்காக குழந்தைகளை ( ஒரு ஆண், ஒரு பெண் ) துறந்து விட்டார்... 

தன்னால் இஸ்லாத்தை விட முடியாது என்று அழுத்தம் திருத்தமாக சொல்லிவிட்டார்.
"நான் நீதிமன்றத்திலிருந்து வெளியே வந்தபோது என்னால் என் குழந்தைகள் இல்லாமல் வாழ்வது மிகக்கடினம் என்று அறிந்திருந்தேன். இதயம் கனத்தது, ஆனால் எனக்கு தெரியும், நான் சரியானதையே செய்தேன் என்று"
மீண்டும் இஸ்லாத்தை ஆராய தொடங்கினார். தனக்கு தெரிந்த இறைச்செய்தியை மற்றவர்களுக்கும் தெரியச்செய்தார். இஸ்லாமிய தாவாஹ் பணியை தொடங்கினார். அவர் சென்ற இடங்களில் எல்லாம் அவருடைய அழகிய வார்த்தைகளும், இஸ்லாத்தினால் கற்றுக்கொண்ட  குணமும் மற்றவர்களை சுண்டி இழுத்தது. குரான் சொல்லுவது போல மிக அழகிய முறையில் இஸ்லாத்தை எடுத்து கூறினார். இறைவனின் கிருபையால், பலரும் ஆமினா அவர்களின் அழைப்பால் இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ள ஆரம்பித்தார்கள்.

இறைவன் ஆமினா அவர்களுக்கு கொடுத்த சோதனைகள் போதும் என்று நினைத்தானோ என்னவோ, அவர்கள் இழந்ததை விட அதிக அதிகமாக கொடுக்க ஆரம்பித்தான்.
 "அல்லாஹ் எந்த ஒரு ஆத்மாவிற்கும் அது தாங்கிக் கொள்ள முடியாத அளவு கஷ்டத்தை கொடுப்பதில்லை" --- குரான் 2:286
உண்மைதான்....இஸ்லாமினால் இப்போது அவர் மிகவும் மாறி இருந்தார், மிக பக்குவபட்டவராகவும் ஆனார். அவரை வெறுத்த அவரது குடும்பம் அவரது நல்ல பண்புகளை பாராட்டியது, அந்த பண்புகளை அவரிடத்தில் கொண்டு வந்த மார்க்கத்தையும் தான். ஆமினா அவர்கள் தன் குடும்பத்தை பிரிந்தபோதும், அவர்களிடத்தில் வெறுப்பை காட்டவில்லை, குரான் சொல்லியது போல் தன் குடும்பத்தை எப்போதும்போல் மிகவும் நேசித்தார்.
"மேலும், அல்லாஹ்வையே வழிபடுங்கள்; அவனுடன் எதனையும் இணை வைக்காதீர்கள்; மேலும், தாய் தந்தையர்க்கும், நெருங்கிய உறவினர்களுக்கும்,   அனாதைகளுக்கும், ஏழைகளுக்கும், அண்டை வீட்டிலுள்ள உறவினர்களுக்கும், அருகிலுள்ள அண்டை வீட்டாருக்கும், கூட்டாளிகளாக இருப்போருக்கும், வழிப்போக்கர்களுக்கும், உங்களிடமுள்ள அடிமைகளுக்கும் அன்புடன் உபச்சாரம் செய்யுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் கர்வமுடையோரை, வீண் பெருமை பேசுபவர்களை நேசிப்பதில்லை" --- குரான் 4:36       
ஒரு பண்டிகை தினமென்றால், அவரது குடும்பத்திற்கு தவறாமல் வாழ்த்து அட்டை அனுப்புவார், மறக்காமல் குர்ஆனில் இருந்தோ ஹதீஸில் இருந்தோ சில வரிகளை அந்த வாழ்த்து அட்டைகளின் முடிவில் எழுதி விடுவார். ஆனால் அது எங்கிருந்து எடுக்க பட்டது என்று குறிப்பிடமாட்டார்.    

அவரது குடும்பத்தில் இருந்து முதலில் முஸ்லிமானது அவரது பாட்டி. அவருக்கு 100 வயதிற்கு மேல் இருக்கும். ஆமினா அவர்கள் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. 

அடுத்து முஸ்லிமானது, ஆமினா அவர்களை ஒரு காலத்தில் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டதற்க்காக கொலை செய்ய துணிந்தாரே அவரேதான், ஆம் ஆமினா அவர்களின் தந்தையேதான் அவர்.

இது நடந்த சில நாட்களுக்கு பிறகு, அவரது தாய் ஆமினா அவர்களை அழைத்தார், தான் முஸ்லிமாக மாறுவதற்கு என்ன செய்ய வேண்டும் என்று வினவினார். அல்ஹம்துலில்லாஹ், ஆமினா அவர்கள் கண்ணீர் மல்க இறைவனுக்கு நன்றி கூறினார்.  
    " நீங்கள் ஒன்றும் செய்ய தேவை இல்லை, இறைவன் ஒருவனே என்றும் முஹம்மது (ஸல்) அவர்கள் அவனுடைய தூதர் என்றும் சாட்சியம் கூறினால் போதும்"  
அதற்கு அவரது தாய் "அதுதான் எனக்கு முன்னமே தெரியுமே, வேறு என்ன செய்ய வேண்டும்"...
"அப்படியென்றால் நீங்கள் எப்பொழுதோ முஸ்லிமாகிவிட்டீர்கள்"
"ஒ அப்படியா............. இறைவனுக்கு நன்றி, ஆனால் உன் தந்தையிடம் நான் முஸ்லிம் என்று சொல்லிவிடாதே. அவர் மிகவும் கோபப்படுவார், நானே பிறகு சொல்லிவிடுகிறேன்"

சுபானல்லாஹ், அவருடைய தந்தைதான் எப்பொழுதோ முஸ்லிமாகி விட்டாரே. ஆனால் அவரும் மறைத்திருக்கிறார், தன் மனைவி கோபப்படுவார் என்று. ஆக இருவரும் ஒருவருக்கொருவர் தெரியாமல் இத்தனை காலங்களாக முஸ்லிமாக வாழ்ந்திருக்கிறார்கள். ஆமினாவிற்கு என்ன சொல்வதென்று புரியவில்லை. கண்களில் இருந்து கண்ணீர் தாரையாய் வெளியேறியது....
"இறைவா நீ மாபெரும் கிருபையாளன்"
பிறகு முஸ்லிமானது, ஆமினாவை மனநல மருத்துவமனையில் சேர்க்க வேண்டும் என்று சொன்ன அவரது சகோதரி. ஆம் அவர் இஸ்லாம் தான் மனநலத்திற்கு நல்லது என நினைத்திருக்க வேண்டும்.  

16 வருடங்கள் கழித்து, ஆமினா அவர்களின் முன்னாள் கணவரும் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார். பதினாறு வருடங்களாக தான் ஆமினாவை கவனிப்பதாகவும், தன்னுடைய தவறுகளுக்கு மன்னிப்பு கேட்பதாகவும் கூறினார். பிரிந்து சென்ற அவரது மகன் தன்னுடைய 21 ஆவது வயதில் தன்னை இஸ்லாத்தில் இணைத்து கொண்டார்.

ஆக, எந்த மார்க்கத்திற்காக ஆமினாவை தனிமைப்படுத்தினார்களோ, இன்று அதே மார்க்கத்தில் அனைவரும் இணைந்து விட்டார்கள், மிக அதிக பண்புள்ளவர்களாக. எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே.

ஆனால் இறைவனுடைய மற்றுமொரு மாபெரும் பரிசு ஆமினா அவர்களை திக்குமுக்காட செய்தது. ஆமினா அவர்கள் தன்னுடைய விவாகரத்துக்கு பிறகு வேறொருவரை மணந்தார்கள். மருத்துவர்கள் ஆமினா அவர்களுக்கு குழந்தை பிறக்காது என்று சொல்லி இருந்தார்கள். இறைவன் கொடுக்க நினைத்தால் யார் தடுப்பது?. ஆம், அந்த அதிசயம் நிகழத்தான் செய்தது. இறைவன் அவருக்கு ஆண் வாரிசை பரிசாக அளித்தான். இது இறைவனின் மாபெரும் கிருபை. அதனால் அந்த குழந்தைக்கு "பரக்காஹ்" என்று பெயரிட்டு மகிழ்ந்தார்கள். 

அல்லாஹ்விற்காக ஆமினா அவர்கள் செய்த தியாகங்கள் நெஞ்சங்களை உருக்குபவை. 

  • ஒரு காலத்தில் அவரை விட்டு விலகிய குடும்பத்தாரில் இன்று பெரும்பாலானோர் முஸ்லிம்கள்.
  • அன்றோ  இஸ்லாத்தை தழுவியதற்காக அவரை விட்டு விலகினர் அவரது நண்பர்கள். இன்றோ அவரை நேசிக்க கூடியவர்கள் கோடானுகோடி பேர்.  
"நண்பர்கள் நான் போகுமிடமெல்லாம் கிடைத்தார்கள்"
  • அன்றோ ஹிஜாப் அணிந்ததற்காக வேலையை இழந்தார்கள். இன்றோ சர்வதேச முஸ்லிம் பெண்கள் அமைப்பின் தலைவர். 


இறைவன் தன்னை நாடிவந்தவற்கு தன் அருட்கொடைகளை அளித்து விட்டான். இன்று அவர் பல இடங்களுக்கும் சென்று இஸ்லாத்தை போதித்து வருகிறார். பலரையும் இஸ்லாத்தின்பால் அழைத்து வருகிறார். இவரால் இஸ்லாத்தை தழுவியவர்கள் ஏராளமானோர்.  

கடும் முயற்சி எடுத்து அமெரிக்காவில் பெருநாள் தபால்தலைகளை வெளியிட செய்தது இவரது அமைப்பு. இப்பொழுது பெருநாள் தினத்தை விடுமுறை தினமாக அறிவிக்க முயற்சி எடுத்து வருகிறது இந்த அமைப்பு.



                                         


சில வருடங்களுக்கு முன் அவருக்கு புற்றுநோய் இருப்பதாக கண்டறிந்தார்கள். அது முற்றிவிட்டது என்றும் இன்னும் ஒரு வருட காலத்தில் இறந்து விடுவார்கள் என்றும் மருத்துவர்கள் கூறிவிட்டார்கள். ஆனால் ஆமினா அவர்களின் ஈமான் இறந்துவிடவில்லை. அது இன்னும் அதிகரித்தது.
"நாம் எல்லோரும் இறக்கத்தான் போகிறோம். எனக்கு நன்றாக தெரியும், நான் அனுபவிக்ககூடிய இந்த வலியில் என் இறைவனின் அருள் உள்ளது என்று"
எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே, இன்றும் ஆமினா அவர்கள் நல்ல உடல் நலத்துடன் இருக்கிறார்கள். இன்னும் தனக்கு வந்துள்ள இந்த புற்றுநோய்தான் தனக்கு இறைவன் கொடுத்துள்ள மாபெரும் கிருபை என்றும் நம்புகிறார்கள். 

இன்று ஆமினா அவர்களிடம் சொந்தமாக ஒரு வீடு கூட இல்லை. தன் 33 வருட தாவாஹ் பணியில் அனைத்தையும் இஸ்லாத்திற்காக கொடுத்து விட்டார்கள். இப்பொழுது அமெரிக்க முஸ்லிம்கள் அவருக்கு தேவையான உதவிகளை செய்து வருகிறார்கள். 

ஆனால் ஏழை என்று நினைத்து விடாதீர்கள், அவர் மாபெரும் பணக்காரர், ஆம் இறைவனின் பார்வையில்...அவர் செய்துள்ள நன்மைகளின் அளவினால்.
"ஆனால் பொறுமையுடன் சகித்து எவர் நற்கருமங்கள் செய்கின்றார்களோ, அவருக்கு மன்னிப்பும் மகத்தான நற்கூலியும் உண்டு"  --- குரான் 11:11    
 " நிச்சயமாக இந்த குரான் முற்றிலும் நேர்வழியை காட்டுகிறது; அன்றியும் நற்கருமங்கள் செய்து வரும் மூமின்களுக்கு நிச்சயமாக மிகப்பெரும் நற்கூலி உண்டு என்றும் நன்மாராயங் கூறுகிறது" --- குரான் 17:9  
ஆமினாஹ் அசில்மி அவர்கள் சென்ற வருடம் மார்ச் மாதம் ஒரு சாலை விபத்தில் மரணித்து விட்டார்கள். (இன்னலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜீவுன்). இந்த கட்டுரை சென்ற வருடம் பிப்ரவரி மாதம் எழுதப்பட்டது...

ஆமினாஹ் அவர்களின் அமல்களுக்கு தக்க கூலியை இறைவன் தந்தருள்வானாக...ஆமீன்.

உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹ்மத் அ
நன்றிகள் .>எதிர்குரல் பிப்ரவரி 17,2010