மக்ரிப் ஜமாஅத் தோற்றது ,அனைவர் ஜமாஅத் வென்றது,அல்ஹம்துலில்லாஹ்
ஐம்பது ஆண்டு கால திமுக கோட்டை நொறுங்கி தூள் தூளானது ,
ஆறாம்பண்ணையில் பசீர்[அதிமுகவு]க்கு 750 ஓட்டுக்கள்
ஜமாத்தின் ஆதரவுடன் போட்டியிட்ட ஜமாத் கமிட்டியின் மேலானா ஆலோசகரும்,வக்ப் போர்ட் ப்ரோக்கரும், கலெக்டர் ஆபிஸ் ,பிடிஒ ,தாலுகா ஆபிஸ் ,போலிஸ் ஸ்டேசன் அனைத்திலும் இவர் இமை அசைத்தால்போதும் பணி செய்ய காத்திருக்கும் அளவில் செல்வாக்கு உள்ளவரும் திமுக வேட்பாளருமான
ஒசெங்காஜாவுக்கு ஆறாம் பண்ணையில் 300௦௦ ஓட்டுகள்
படித்த மெகா மேதையின் பசப்பு வார்த்தைகள் படுகுழிக்குள் பாயிந்தது.
ஆயிரம் ஓட்டுக்களுக்காக அரசியல் பண்ணியவருக்கு ,பட்டவர்த்தி முக்கை தாண்டாத அரசியல் சா நக்கியருக்கு சவுக்கடி.
இது சுன்னத் ஜமாத்துக்கும் தவ்ஹித் ஜமாத்துக்கும் நடக்கும் தேர்தல் என்று கொக்கரித்த கபரிஸ்தானில் ஓட்டு கேட்ட கோழைக்கு மரண அடி
ஏணி இல்லாமலே ஏற்றம் பெற்றுவிட்டார் ஹனிபா,நாலாவது தடவையாக
ஏணியும் கோணியுமாக வந்தவர்களுக்கு ஏப்பம் தான் மிச்சம்.
இறைவன் அருளால் கிடைக்கும் ஜனாதிபதி விருதும் ,மக்கள் தீர்ப்பும் ஹனிபாவின் பணிகளுக்கு கிடைக்கும் சான்றுகள்.
ஒசெங்காஜா ஜமாத்தின் சான்றும் படித்த மெகா மேதையின் சான்றும் யாருக்கு வேண்டும்?
ஹனிபாவின் நேர்மை
எதிர் தரப்பு வேட்பாளர் ஓட்டு கேட்க செல்ல முடியாத நிலையில் ,தனது மனைவி ஓட்டு கேட்க முனைந்த போது அதை தடுத்துவிட்டார் ஹனிபா. . "போட்டி என்பது சம வாய்ப்புகளுடன் இருக்க வேண்டும் என்பதும்,பிறர் மன நிலை பாதிக்கும் வகையில் இருக்கக் கூடாது "என்றும் கூறிவிட்டார்.அவரின் செலவு எதிர் தரப்பு நோட்டிசுக்கு பதில் அளிக்கும் வண்ணம் நோட்டிஸ் அடித்த வகையில் எண்ணூறு ரூபாய் மட்டும் ,மற்றும் டீ செலவுகள் மட்டுமே .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக