அன்பு பண்ணையர்களே,அஸ்ஸலாமுஅலைக்கும்.
வர இருக்கின்ற பஞ்சாயத்து தேர்தலில் நமது ஒற்றுமை வேடதாரிகள் ஒற்றுமையை நிலை நாட்ட எங்ஙனம் வேஷம் போட்டு வருகின்றனர் என்பதைமுன்பு கூறியிருந்தேன்.நமதூரில் மிக முக்கிய முடிவுகள் எல்லாம் வெள்ளியன்று ஜும்மாவுக்கு பிறகே எடுப்பது வழக்கம்.ஆனால் தேர்தல் வருவதும் அதில் போட்டியிடுவதற்கு திட்டமிட்டு ரேசன் கார்டு வாக்காளர் அடையாள அட்டை எல்லாம் முன்பே மாற்ற திட்டமிட்டவர்கள் ஜமாத்தினர் அதிகமாக கூடக்கூடிய ஜும்மா நாளை வேண்டுமென்றே தவிர்த்துள்ளனர்..அதன் பிறகு செப்.27 அன்று செவ்வாய் மாலை மக்ரிப் ஜமாத்தில் பஞ்சயத்துதேர்தல் பற்றி முடிவு எடுக்கப் போவதாக போர்டில் எழுதி போட்டவர்கள்,தொழுகை முடிந்ததும் வழக்கம் போல் அறிவிப்பு எதுவும் செய்யாமல் ஜமாத்தினர் நிர்வாகி உட்பட பெரும்பகுதியினர் சென்ற பின்னர் பத்து பேர் கொண்ட ஜமாஅத் அதாவது அசல் நிர்வாக கமிட்டிசேர்ந்தவர்கள் மட்டுமே பஞ்சாயத்து வேட்பாளர்களை தீர்மானிக்கின்றனர்.நிர்வாக கமிட்டி உறுப்பினர்கள் மட்டும் ஜமாஅத் என்று சொல்லிக்கொண்டு தேர்ந்து எடுப்பதற்கு பஞ்சாயத்து தலைவரும் கவுன்சிலரும் என்ன பள்ளிவாசல் ஊழியர்களா?சரி அதன் பின்னர் பஞ்சாயத்து வேட்பாளர் மாற்றப்படுகிறார் .ஏன் மாற்றப்பட்டார் ?என்று மக்களுக்கு தெரிவித்தீர்களா?நாலு பேர்கள் கூடி ஜமாஅத் வேட்பாளரை தேர்ந்தெடுக்க உங்களுக்கு அதிகாரத்தை தந்தது யார்?நீங்கள்தானே ஜமாத் தேர்தலில் வெற்றி பெற்றீர்கள்.அப்போது ஜமாஅத் உங்களுக்கு ஆதரவாகத்தானே இருக்கும் ?பிறகு ஏன் வெள்ளி ஜும்மா ஜமாத்தைசும்மா வாக்கி விட்டு புதன் இரவு வித்ரு ஜமாத்தில் கூடி பஞ்சாயத்து தலைவரை தேர்ந்தெடுக்க வேண்டிய அவசியம் என்ன? உங்களால் போட்டியிட திராணியற்று ,பஞ்சாயத்து அலுவல்களில் அனுபவம் இலாத மாதர் சாஹிபை அவரது விருப்பத்திற்கு மாற்றமாக வலுக்கட்டாயமாக தேர்ந்துடுத்தது ஏன்? அவரது வெகுளித்தனத்தை பயன்படுத்தி ,போற்றி புகழ்ந்து ஏமாற்றிவிட்டு அதிகாரத்திலும் ,கமிசனில் பங்கும் போடவா? ஜமாஅத் சார்பாக பஞ்சாயத்து தலைவர்க்கும் கவுன்சிலருக்கும் வேட்பாளர்களை நிறுத்த வேண்டும் என்று சுன்னத் ஜமாத்தில் எந்த மத்ஹபில் கூறப்பட்டுள்ளது.ஒற்றுமை கருத்தில் கொண்டால் பெரும்பான்மை மக்கள் கூடும் ஜும்மா நாளில் அல்லவா முடிவு எடுத்திருக்க வேண்டும்?உங்களை தேர்ந்தெடுத்த ஜமாத்தினரை புறக்கணித்துவிட்டு வித்ரு ஜமாத்தில் முடிவு எடுக்க வேண்டிய அவசியம் என்ன?
மறைந்த மதார் சாஹிப் அவர்களுக்கு இதய வலி ஏற்பட்டு ஷிபா மருத்துமனையில் அனுமதிக்கப்படுள்ளார்.மிகவும் சீரியசான முறையில் உடன் அறுவை சிகிச்சை தேவைப்படும் கட்டாயத்தில் அனுமதிக்கப்படுள்ளார். ஆனால் உங்களுடன் நெருங்கி பழகிய பல விசயங்களில் உங்களுடன் ஒத்துப்போன ஜாபார் ஆலிம் நீக்கப்பட்ட பிறகும் உங்களுடன் ஐக்கியமாக இருந்தவர் ,உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் சூழ் நிலையில் கவுன்சிலர் வேட்பாளர் ,முன்னாள் கவுன்சிலருடன் ஓட்டு வேட்டையாடியது நியாயமா?நாடார் தெருவில் மதுபாட்டில்கள் வழங்கியும் கொங்கராயகுரிச்சியில் எதை எல்லாமோ கொடுத்தும் பிரச்சாரமும் பண்ணியது மனிதாபிமான செயலா?அவர் இறந்த செய்தி ஒன்பது மணியிலிருந்து காட்டு தீ போல் பரவிக் கொண்டிருக்கையில் இரவு பத்தரை மணிவரை உங்களது ஓட்டு வெறி தணியவில்லையே ஏன்? பிரச்சாரத்திற்கு இன்னும் நாட்கள் இல்லாமல் போகிவிட்டதா? தன்னுடன் போட்டியிடும் சக வேட்பாளர் உயிருக்கு போராடும் வேலை அவரருகில் இருந்து கண்ணுக்கு இமை போல் இருந்து காத்திருக்க வேண்டாமா? அவர்தம் உயிரை விட உனது வெற்றி அத்தனை பெரிதாகி விட்டதா?
அவர்தம் ஜனாசா அடங்கப்படும் வேளையிலும் கபர்ஷ்தானிலும் வந்த மக்களிடம் ஓட்டு கேட்க வேண்டுமா?இது உங்களது மனிதாபிமான செயலா? தவ்ஹித் மர்கசில் தொழ வந்தாலே,நெருங்கி உறவினர் ஆனாலும் முகத்தை திருப்பிக் கொள்ளும் அவர் வேட்பு மனுவாபஸ் நாளில்,தன்னை எதிர்த்து போட்டியிடும் ஹனிபாவை டீ சாப்பிட அழைத்ததோடு தன்னுடன் காரில் ஊருக்குகு வருமாறு அழைத்துள்ளார்..மதார் சாஹிப் உண்மையிலே எதிர்த்து போட்டியிடுபவாராக இருந்தால் தன்னை எதிர்ப்பவன் நிழல் கூட தன மீது விழக்கூடாது என்று நினைப்பவர்.ஆனால் அதற்கு மாற்றமான அவரது செயல்பாடுகளிலிருந்து அவர் மீது தேர்தல் வலுக்கட்டாயமாக திணிக்கப்பட்டுள்ளது என்பது உண்மை .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக