அன்புடையீர் அஸ்ஸலாமு அலைக்கும், நேற்று நமதூரில் ஜமா[த்தை]அத்தார்கள்மற்றும் அனைத்து சமுதாய பொது மக்கள் சார்பாக ஒரு நோட்டிசை வெளியிட்டிருந்தார்கள்..அதில் கூறப்பட்டுள்ளதாவது,'கடந்த காலங்களில் நம் ஜமாத்தினரின் ஒட்டு மொத்த ஆதரவுடன் வெற்றி பெற்ற முந்தைய ஊராட்சி மன்ற தலைவர்கள் [எத்தனை பேர்?]நிலை பற்றி நாங்கள் உங்கள் நினைவுக்கு கொண்டு வருகிறோம்.
இரண்டு முறையாக அவர்கள் ஜமாத்தார்களின் ஆதரவோடு ஏக மனதாகப்,போட்டியின்றி ,வென்றதோடு அல்லாமல் ,கடந்த மூன்றாவது முறை போட்டியிருந்தும்ஜமாத்தார்களின் ஆதரவை கேட்டு பெற்றுக் கொண்டே மீண்டும் வெற்றி பெற்றார்கள்.
அவாறு மூன்று முறை வென்று 15 வருடங்கள் பொறுப்பில் இருந்த அவர்கள் இந்த முறையும் நிற்க நினைத்தபோது ,தங்களை எல்லா தடவைகளிலும் வெற்றி பெறச்செய்த ,இதே ஜமாத்தார்களின் ஆதரவை மீண்டும் நாடி வராததன் காரணம் ஏனோ?
இவர்கள் பொய்யர்கள் ,மக்கள் மறதியை பயன்படுத்தி எப்படி வேண்டுமானாலும் புழுகுவார்கள்.என்பதற்கு இது ஒன்றே போதும்.இதற்கு முன்னர் கண்ணியமான நிர்வாக கமிட்டி இருந்தது .அவர்கள் தேர்தலில் போட்டி ஏற்படக்கூடாது என்று இஸ்லாமிய பாரம்பர்யப்படி வெள்ளி ஜும்மாவில் ஆலோசனை கூட்டம் நடக்க இருப்பதை முந்திய ஜும்மாவில் அறிவித்தும் நோட்டிஸ் போர்டில் அறிவிப்பு செய்தும் ஜும்மாவில் கூடி மூன்று முறைகளும் ஏக மனதாக தேர்வு செய்யப்பட்டார்.ஹனிபா முன்பும் ஜமாத்தில் மனு கொடுக்கவில்லை., அவர் போட்டியிடப் போவதாகவும் சொல்லவில்லை .,இப்போது ஏன் கேட்கவில்லை அவர் அப்போது ஜமாஅதாரின் ஆதரவை ஏன் கேட்டுப் பெற்றார் ?என்பது தேவையற்ற கேள்வி. மூன்று முறைகளும் ஜமாத்தில்தான் பஞ்சாயத்துத் தலைவரும் கவுன்சிலரும் முடிவு செய்யப்பட்டு ஜமாஅத் ஆதரவு கொடுத்தது.ஆனால் இந்த தடவையும் ஜமாஅத் நிர்வாக கமிட்டி அதுபோன்று தேர்தல் மனுதாக்கல் முடியும் முன் வெள்ளி ஜும்மாவில் கூடி முடிவு எடுப்பார்கள் என்று அனைவரும் எதிர் பார்த்தோம் .ஆனால் வெள்ளி ஜும்மா முடிந்தது .அதன் பின்னர் கள்ளத்தனமாக வக்ப் போர்டில் காசு கொடுத்து வெற்றி பெற்ற குள்ள நரி ஆலோசகர்களின் ஜமாஅத் மகிரிப்பில் இது விசயமாக முடிவு எடுக்கப் போவதாக அறிவித்தது.அந்த மக்ரிப் ஜமாத்தையும் ஞாயிருவில் வைக்கக் கூடாதா? அதிக கூட்டம் வந்து விடக் கூடாது என்பதற்காக் செவ்வாயில் வைத்தார்கள். தொழுகை முடிந்ததும் எந்த அறிவிப்பும் செய்ய வில்லை.தொழுகை முடிந்ததும் வாரந்தோறும் வழக்கமாக நடைபெறும் தப்லிக் கூட அறிவிப்பு செய்வார்கள் .அந்த அறிவிப்பு கூட கிடையாது..செவ்வாய் கிழமையை தேர்ந்தெடுத்தது தப்லிக் காரர்கள் கூட இருக்க கூடாது என்பதர்க்ககவும் இருக்கலாம்.வழக்கம் போலவே கள்ள மசூராவில் கூடக்கூடிய உறுப்பினர்களும் ஆலோசனை வல்லுனர்களும் கூடி அதாவது பத்துபேர்கள் மட்டும் கூடி முடிவு எடுத்தார்கள். சேக்கையும் நில மோசடி நிஜாமையும் தலைவருக்கும் கவுன்சிலருக்கும் தேர்ந்து எடுத்தார்கள்.அப்புறம் சில கவுரவ ஆலோசகர்களுக்கும் இது பிடிக்காததால் நாலைந்து பேர் வித்ரு ஜமாஅத் வீட்டில் கூடி மறைந்த மதார் சாஹிபை தேர்வு செய்தார்கள்.இப்படியாக கூடிய செவ்வாய் கிழமை மக்ரிப் ஜமாஅத் ,வித்ரு ஜமாத்தில் கூடிய அதிகபட்சம் பத்து பேர் மட்டும் கூடி எடுத்த முடிவுகளும் பள்ளிவாசல் நிரம்பி வழிந்த ஜும்மா முடிவுகளும் ஒன்றாகுமா?
இப்போதைய ஜமாத்தின் தலைவர் யார் ?
கடந்த தேர்தலின் பொது ஜும்மா ஜமாஅத் எடுத்த முடிவுக்கு எதிராக உறுப்பினராக போட்டியிட்டவர்தான் வைஸ் .உதுமான் ஆவார்கள் .
இப்போதைய இணை செயலாளர் ஜும்மா ஜமாஅத் முடிவுக்கு எதிராக பிரச்சாரம் செய்தவர்.
துணை செயலாளர் உறுப்பினராக போட்டியிட்டவர்.
இன்னும் பள்ளிவாசல் கமிட்டி உறுப்பினர்களும் ஜும்மா ஜமாஅத் முடிவுக்கு எதிராக போட்டியிட்டவர்கள் மற்றும் பிரச்சாரம் செய்தவர்கள்.
இப்படிப்பட்ட வர்கள் இப்போது ஜமாத்தின் மகிமை பற்றி பேசுவது வேடிக்கை அல்லாவா?
அடுத்து அவர்கள் கேட்டிருப்பது ,எதனையும் செய்யாத தங்களின் சாதனைகள் பட்டியலிட முடியாமல் ஜமாத்தை சந்திக்க முடியாத பயத்தினாலா?என்பது
ஒ.ஒருவேளை இதனால் தான் பன்னாஸ் கவுன்சிலர் ,பழைய வல்லூருவும் மறைமுகமாக வளவு வழியாக பஞ்சாயத்துக்குள் நுழைய முயற்சிக்கிறாரோ! இதிருக்கட்டும் உங்க ஜமாஅத் கமிட்டி ஏன் வெள்ளியன்று வழக்கம் போல் ஜும்மாவில் கூடி முடிவு எடுக்காமல் செவ்வாய் மக்ரிபிலும் வித்ருவிலும் கூடி முடிவு எடுத்தத்து? நீங்கள் ஜமாத்தில் வெற்றி பெற்றவர்கள் தானே ! உங்களுக்குள் இருந்த பயம் என்ன /அதை சொல்லுங்கள்
அடுத்து மூன்று முறையும் ஜமாத்தினரின் ஆதரவால் வெற்றியை ருசித்த அவர்கள் இவ்வாறு ஜமாத்தினரை புறக்கணிக்கலாமா?ஏற்றி வைத்த ஏணியை உதாசீனப் படுத்தலாமா?
கொஞ்சம் கூட வெட்கம் இல்லாமல் இப்படி கேட்டுள்ளார்கள்.இஸ்லாமிய பாரம்பரிய படி ஜமாத்தின் முக்கிய முடிவுகள் அனைத்தும் வெள்ளிகிழமை ஜும்மா நாளிலே எடுக்கப்படும் .அந்த நிகழ வை அப்படியே மாற்றி ஜமாத்தை குப்பை கூளமாக்கி கள்ளமசூரா கூட்டி உறுப்பினர்கள் அல்லாத கள்ள ஆலோசகர்களுடன் ஆலோசனை செய்து வந்தவர்கள் ,பஞ்சாயத்து தேர்தலிலாவது வெள்ளியன்று அதிகமான மக்கள் கூடும் நாளில் பஞ்சாயத் தலைவர் பற்றி முடிவு எடுக்க கூடாமல் வித்ரு ஜமாத்தில் முடிவு எடுத்து ஜும்மாவில் ஜமாத்தின் முடிவு என்று அறிவிக்கிறார்களே இவர்களுக்குஎன்ன திமிர் இருக்கிறது? ஜமாத்தை கிள்ளுக் கீரையாகாக்கி விட்டு நிஜாமின் மனம் போல் ஆடும் இவர்கள் அல்லவா ஏற்றி வைத்த ஏணியை உதாசீனப் படுத்தி வருகிறார்கள்.ஒருவேளை வக்ப்போர்டில் பணம் கொடுத்து தங்களை நிர்வாகிகளாக ஆக்கிய நிஜாமை ஏற்றி வைத்த ஏணியாக எடுத்துக் கொண்டார்களோ?
நமதூரின் முன்னேற்றரத்திர்க்காக குறிப்பிட்டு சொல்லக் கூடிய திட்டங்களில் அவர்கள் கவனம் செலுத்திய விவரத்தினை அவர்கள் பட்டியலிட்டு காட்ட முடியுமா?
முடியுமே !கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் ஒவ்வொரு யூனியனிலும் ஜனாதிபதி அவார்டுக்காக மூன்று பஞ்சாயத்துக்கள் தேர்வு செயப்பட்டதில் நமது யூனியனில் ஆறாம்பண்ணை பஞ்சாயத்துவும் ஒன்று. 31 பஞ்சாயத்துக்களில் முதல் மூன்று இடங்களில் ஒன்றாக இருந்து ஜனாதிபதியிடம் சான்று வாங்கியது ஒன்று போதாதா? இந்த கள்ள மசூரா ஜமாத்திடம் சான்று வாங்க என்ன வேண்டி கிடக்குது
அடுத்து அவர்கள் கூறுவது
ஊர் இரண்டுபட்டால் வேண்டாதவர்களுக்கு கொண்டாட்டம்தானே
இதில் ஊர் யார்?வேண்டாதவர்கள் யார்?விவஸ்தைகெட்ட கள்ள ஜமாத்தே !உங்களுக்கு யோக்கியதை இருந்தால் ,உங்களது செயலாளர்,சில உறுப்பினர்கள் உட்பட ஊர் மக்கள் அனைவரும் கலந்து கொள்ளக் கூடிய ஜும்மாவில்அல்லவா முடிவு எடுத்திருக்க வேண்டும் .பள்ளிவாசளுக்குரிய ஊழியர்களை நியமிக்கவே கள்ள ஜமாது நிர்வாக் கமிட்டிக்கு அதிகாரம் உண்டுபஞ்சாயத்து தலைவரை போட்டியின்றி தேர்ந்தெடுக்க உங்களுக்கு அதிகாரம் தந்தது யார்?வெள்ளி ஜும்மாவை சந்திக்க திராணியில்லாமல் மக்ரிபிலும் வித்ருவிலும் கூட வேண்டிய அவசியம் என்ன?ஆக ஊரை இரண்டாக்கி ஜும்மாவில் கூடாமல் மக்ரிபிலும் வித்ருவிலும் கொண்டாடுவது நீங்கள் அல்லவா?
பள்ளிவாசல் நிர்வாகத்திற்கு இடைஞ்சலாகவும் ,தொந்தரவையும் கொடுக்கும் நபர்களின் மீது காவல்துறையிடம் புகார் அளிக்க சென்றால் ,அவர்களுக்காக வக்காலத்து வாங்கவே தங்களது முக்கிய கடமைகள் அவர்களின் பணிகள் இருந்தனே என்பதனை நீங்கள் அறிவீர்கள்.
மக்களை ஏமாற்ற சொல்லப்படும் பசப்பு வார்த்தைகள். இவர்களது செயலாளர் தொழுதால் அல்லவா பள்ளிவாசலின் அருமை தெரியும் .அவரது மகன் தனது தந்தை செயலாளர் ஆகிவிட்டார் என்பதால் ராஜாவூட்டு கன்னுக்குட்டி போல் பள்ளிவாசலை அந்தப்புரமாக நினைத்து
தவ்ஹித் ஜமாத்காரர்களை கிண்டல் செய்து வந்தார்.அன்று சாகுலை கிண்டல் செய்யவும் அவரது சகோதரரும் சேர்ந்து விரட்டினார்கள் பள்ளிக்குள் ஓடி ஒழித்து தப்பித்துக் கொண்டான்.இதை தலைவர் இருதரப்பினரையும் அழைத்து விசாரிக்காமல் ,நிலமோசடி நிஜாமின் ஆலோசனை பேரில் பள்ளிவாசல் லட்டர் பேடில் குறிப்பிட்ட நபர்கள் மீது கம்ப்ளைன்ட் கொடுத்தார்கள்.உடன் தவ்ஹித் ஜமாஅத் மாவட்ட நிர்வாகத்துடன் தொடர்பு கொண்டு உண்மை நிலை சொல்லப்பட்டு நடவடிக்கை எதுவும் எடுக்க வில்லை.பள்ளிவாசல் லட்டர் பேடு என்னவோ ஜனாதிபதி சிபாரிசு என்று நினைத்தவர்களுக்கு ஏமாற்றம் .இதற்கும் ஹனிபாவுக்கும் என்ன சம்பந்தம் மேலும் இரண்டாம் ஜமாஅத் ஐ இவர்களது தேர்தல் வாக்குறுதி என்று நினைத்து அதை அவர்களால் ஒன்றும் செய்ய முடியவில்லையே அதற்கும் ஹனிபா தான் காரணமாக இருக்குமோ என்ற அச்சம்.பாளையம் கோட்டை மிலிடெரி லயன் பள்ளி நிர்வாகிகள் உங்களைவிட திறமை மிக்கவர்கள் அரசு வேலை ஓய்வு பெற்றவர்கள்,அவர்கள் சாலை மறியல் நடத்தியும் அங்கு இரண்டாம் ஜமாஅத் நிறுத்த முடிய வில்லை.அங்கு யார் உதவுகிறார்கள்?அல்லாஹ்வின் அருளால் அலகாபாத் கோர்ட் உதவுகிறது.மேலும் ஆத்தூரில் சுன்னத் ஜமாஅத் தலைவராகவும் பஞ்சாயத்து தலைவராகவும் ஆத்தூர் ஒன்றிய அதிமுக செயலாளராகவும் டிஎஸ்பியுடன் நெருங்கிய தொடர்பும் உடைய ஷேக் தாவுதாலே அங்கு உள்ள தவ்ஹித் ஜமாத்தை அசைக்க முடியவில்லை.இறுதியில் ஷேக் தாவுத் க்கு இப்போது சீட் கிடைக்காமல் போயிற்று .
இறையருளால் புதிதாக பொறுப்பேற்ற பள்ளி நிர்வாகம் ,வெற்றி களிப்பில் எதிரணியை பழி வாங்க வேண்டும் என்ற எண்ணம் இல்லாமல் பொறுப்புடனும் பொறுமையுடனும் தம் பணியினை மிகவும் கவனத்துடனும் செய்து வருவதை ,,,,,,,
பழி வாங்க இவர்கள் என்ன தமிழக அரசையா கைப்பற்றி உள்ளார்கள் ?ஆசையைப்பாரு ,இவர்கள் என்னவோ ஜெயலிதா அரசு போலும் நாங்கள் என்னவோ திமுக காரர்கள் போல் நிலமோசடி பண்ணியிருப்பது போலவும்,முழு சுகாதார திட்டத்தின் கீழ் தனது உறவினர்களுக்கு மட்டும் பழைய கழிப்பறையில் வெள்ளையடித்து புதியதாக கட்டியதாக காட்டி காசு பெற்றது போலவும் உளறி யுள்ளார்கள் .
வளவு வழியாக நுழைய நினைக்கும் பழைய வல்லூருகளையும் பன்னாஸ்களையும் விரட்டியடிக்க கத்தரிக்கோல் சின்னத்தில் வாக்கு அளியுங்கள்.பள்ளிவாசல் பிரச்னைகளை தீர்க்க தெரியாத போலிஸ் ஸ்டேசனுக்கும் கோர்ட்டுக்கும் ஓடும் இவர்கள் மக்கள் பிரச்னைகளை தீர்த்து வைப்பார்களா?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக