ஆத்தூரில் பஞ்சாயத்து தலைவராகவும் .ஜமாத்தலைவராகவும்,ஆழ்வார்திருநகர் அதிமுக ஒன்றிய செயலாளராகவும் ஷேக் தாவுத் என்பவர் இருந்தார். இவருக்கு அதிகார மட்டத்திலும் நெருக்கமான தொடர்பு இருந்தது.அடியாட்கள் பலமும் உண்டு.அந்த ஊரில் இவர் தவ்ஹித் ஜமாத்தை அழித்து விடுவோம் .பொசுக்கி விடுவோம் என்றார்.பல இடையூறுகள் பண்ணினார்.வாடகைக்கு இருந்தவர்களின் வீடுகளை,கடைகளை காலி பண்ணுமாறும் கட்டாயப் படுத்தினார். அத்தனை தடைகளையும் உடைத்தெறிந்து சுன்னத் ஜமாஅத் பள்ளி அருகிலே தவ்ஹித் மார்கஸ் உருவாக்கி ஜும்மா மற்றும் ஐவேளைகள் தொழுகைகளும் நடை பெற்று வருகிறது.தவ்ஹித் ஜமாஅத் உறுப்பினர்கள் நமதூரை விட மிகக் குறைவாக இருந்தும் பலமிக்க ஷேக் முகம்மதுவால் தவ்ஹித் ஜமாத்தின் சுண்டு விரலைக் கூட அசைக்க முடியவில்லை.இன்னும் இந்த தடவை அவருக்கு போட்டியிட அதிமுக சீட்டும் கிடைக்காமல் போயிற்று.இவர் எந்த டி.எஸ்.பி.யைவைத்து ஆட்டம் போட்டாரோ அவர் ஓரிரு மாதங்களில் இட மாற்றம் செய்யப்பட்டார்.இதை இங்கே சொல்லுவதற்கு காரணம் என்னவெனில் ,கள்ள ஜமாத் வேட்பாளர்களுக்கு ஆதரவு தேடும் பொய்யர்கள் கூட்டம் ,நாங்கள் பிரெசிடென்ட் ஆனால் போலிசை வைத்து தவ்ஹித் ஜமாத்தை ஒன்றும் இல்லாமல் ஆக்கி விடுவோம் .இப்போதைய ப்ரெசிடென்ட் அவர்களுக்கு ஆதரவாக் இருப்பதால் தான் ஒன்றும் செய்ய முடிய வில்லை.என்றும் வெளியூர் பண்ணை மக்களிடம் நமதூரில் பெரும் பிரச்னைகளும் தகராறுகளும் அதனால் தான் ஜமாத்தில் இருந்து போட்டியிடுகிறோம் என்றும் அதனால் எங்களுக்கு ஆதரவளிக்குமாறு வேண்டி வருகிறார்கள் .பஞ்சாயாத்தை கைப்பற்றி தங்கள் அதிகார ஆட்டம் போட்டு கமிசனிலும் பங்கு போடவே அன்றி வேறொன்றுமில்லை.இவர்கள் இதைப்போல் ஜமாஅத் தேர்தலில் இரண்டாவது ஜமாத்தை நிறுத்திவிடுவோம் என்று சொன்னார்களே முடிந்ததா?நாங்கள் ஏற்கனவே சொன்னது போல் பள்ளிவாசலில் வைத்து எழுதி கேட்டதை போலிஸ் ஸ்டேசனில் இன்ஸ்பெக்டரிடம் ஏச்சுக்கள் வாங்கி எழுதி கொடுத்தனர்.
மீரா ஸ்கூலை கைப்பற்ற திட்டம் போட்டார்கள். அதற்கும் காரணம் தவ்ஹித் ஜமாஅத் அதை வைத்துதான் வளர்ந்துவிட்டார்கள். அங்கு படிக்கும் மாணவர்களிடம் தவ்ஹித் ஜமாஅத் பற்றி பிரச்சாரம் செய்து இளைஞர்களை வழிகெடுத்து விட்டதாகவும் பொய்யர்கள் அவதூறுகளை சொல்லி வந்தனர்.அது உண்மை என்றல் அதிகமான மாணவர்கள் தவ்ஹித் மர்கசில் அல்லவா தொழுகைக்கு வரவேண்டும்.?நேரில் கண்கூடாக பார்க்கும் விசயங்களிலே இப்படி பச்சை பொய்.சொல்லுகிறார்கள்.தவ்ஹித் ஜமாத்தை சேர்ந்தவர்கள் பிள்ளைகள் கூட தவ்ஹித் மர்கசுக்கு தொழுகைக்கு வருவதில்லை.ஸ்கூலில் கல்வி மட்டுமே இருக்கிறதே தவிர அங்கு மார்க்கம் பற்றி எந்த பாடங்களும் நடக்கவில்லை.இவர்கள் சொல்லை நம்பி என்னிடம் கல்வியாளர் ஒருவர் கேட்டார்."தவ்ஹித் பற்றி பள்ளியில் பாடம் எடுக்கிறீர்களா"?என்று. இவர்களது நோக்கம் ஸ்கூலை கையாள வேண்டும் என்பதே.மீரா ஸ்கூலை வைத்துத்தான் ஆறாம் பண்ணையில் தவ்ஹித் வளர்ந்தது உண்மை என்றால் ,செய்துங்கநல்லூரில் எந்த ஸ்கூல் இருக்கிறது?அங்கு தவ்ஹித் ஜமாஅத் ஒரு பழைய பள்ளிவாசல் இருந்ததை புனரமைப்பு செய்து நமதூரை விட சிறப்பாக ஏசி பள்ளிவாசலாக செயல்பட்டு வருகிறதே.இன்னும் தவ்ஹித் ஜமாஅத் தமிழகம் முழுவதும் மிகவும் சிறப்பாகவும் சீரிய முறைகளிலும் செயல்பட்டு வருகிறதே .அந்த ஊர்களில் எந்த ஸ்கூல் உள்ளது?
அன்பு சகோதரர்களே, இந்த பொய்யர்கள் தங்களது அபிலாசைகளையும் அற்ப அதிகார வெறிகளையும் நிறைவேற்றவே தவ்ஹித் ஜமாத்தை காரணம் காட்டி வருகிறார்கள்.தவ்ஹித் ஜமாஅத் என்ன பாவம் செய்தது?
இன்று பல இளைஞர்களை நபி வழியில் திருமணங்கள் செய்கிறார்களே அது பாவமா?வட்டியில்லா கடன் வழங்கியது பாவமா? கல்வி உதவி,மருத்துவ உதவி ,ரத்ததானங்கள் செய்கிறோமே அவைகள் பாவமா?பித்ராவை முறையாக வசூல் செய்து ஏழைகளுக்கு வழங்குகிறோமே ,கூட்டு குர்பானி மூலம் ஏழைகளுக்கும் பயன் கிடைக்க செய்கிறோமே அவைகள் எல்லாம் பாவமா?மொத்த முஸ்லிம் சமுதாய நலன்களுக்கு போராட்டங்கள் நடத்துவதுதான் பாவமா? சிந்தியுங்கள் .அயோக்கியர்களை அடையாளம் காணுங்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக