Arampannai ஜமாஅத் தலைவர் .
திரு .வைஸ் .கே.ஏ .முஹம்மது உதுமான்
பஞ்சாயத்துதலைவர்
திருமதி.ஹமிதாஹனிபா ;
கவுன்சிலர் .
திருமதி.சரிபாபசிர்

வெள்ளி, 28 அக்டோபர், 2011

அப்சலுக்கு தூக்கு-அதிர்ச்சியூட்டும் உண்மைகள்! அருந்ததி ராய்!!



நமக்குத் தெரிந்தது இவ்வளவுதான்: டிசம்பர் 13, 2001 அன்று, இந்திய நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத்தொடர் நடந்து கொண்டிருந்தது. (ஊழல் விவகாரங்களின் வரிசையில் இன்னும் ஒரு விவகாரத்தில் தேசிய முன்னணி அரசாங்கம் தாக்குதலுக்கு உள்ளாகியிருந்தது). காலை 11.30 மணிக்கு, 5 ஆயுதம் தாங்கிய மனிதர்கள் IED ( (உருவாக்கப்பட்ட வெடிக் கருவி) பொருத்தப்பட்ட வெள்ளை அம்பாசடர் காரை நாடாளுமன்ற கட்டிடத்தின் நுழைவாயில் வழியாக ஓட்டி வந்தார்கள். அவர்கள் தடுக்கப்பட்ட போது, காரிலிருந்து வெளியில் குதித்து சுட ஆரம்பித்தார்கள். அதைத் தொடர்ந்து நடந்த துப்பாக்கிச் சண்டையில் அனைத்து போராளிகளும் கொல்லப்பட்டார்கள். கூடவே 8 பாதுகாப்புக் காவலர்களும், ஒரு தோட்டக்காரரும் கொல்லப்பட்டார்கள். நாடாளுமன்ற கட்டிடத்தை வெடித்துச் சிதற வைக்கும் அளவுக்கும், ஒரு படையணி முழுவதுமான சிப்பாய்களை எதிர்க்கும் அளவுக்கும் வெடி கருவிகளை வைத்திருந்தார்கள் என்று காவல் துறை சொன்னது. வழக்கமான மற்ற பயங்கரவாதிகளைப் போல இல்லாமல், இந்த ஐந்து பேரும் கணிசமான சாட்சியங்களை விட்டுச் சென்றார்கள். ஆயுதங்கள், மொபைல்கள், தொலைபேசி எண்கள், அடையாள அட்டைகள், புகைப்படங்கள், உலர்பழ பொதிகள் மற்றும் ஒரு காதல் கடிதம் கூட இவற்றில் அடங்கும்.
அப்போதைய பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய், இதுதான் வாய்ப்பு என்று, மூன்று மாதங்களுக்கு முன்பு செப்டம்பர் 11ல் அமெரிக்காவில் நடந்த தாக்குதல்களுடன் இந்த நிகழ்ச்சியை ஒப்பிட்டதில் நமக்கு வியப்பு ஏதுமில்லை.
தாக்குதல் நடந்த அடுத்த நாளே, டிசம்பர 14, 2001ம் தேதி, தில்லி காவல் துறையின் சிறப்புப் பிரிவு இந்தச் சதியில் ஈடுபட்டிருந்ததாக சந்தேகிக்கப்படும் பலரை தேடிப் பிடித்து விட்டதாக கூறியது. அடுத்த நாளே, வழக்குக்குத் ‘தீர்வு கண்டு விட்டதாக’ அறிவித்தது: இந்தக் கூட்டுத் தாக்குதல் பாகிஸ்தானிலிருந்து இயங்கும் லஷ்கர் – எ -தொய்பா, ஜெய்ஷ் – எ – மொகமது என்று இரண்டு பயங்கரவாதக் குழுக்களின் கூட்டு நடவடிக்கை என்று போலீஸ் கூறியது. 12 பேர் இந்த சதியில் ஈடுபட்டதாகக் குறிப்பிடப்பட்டார்கள். ஜெய்ஷைச் சேர்ந்த காசி பாபா (வழக்கமான சந்தேக நபர் 1), ஜெய்ஷைச் சேர்ந்த மவுலானா மசூத் அசார் (வழக்கமாக சந்தேகப்பட வேண்டிய நபர் 2), தாரிக் அகமது (ஒரு ‘பாகிஸ்தானி’), கொல்லப்பட்ட ஐந்து ‘பாகிஸ்தானி பயங்கரவாதிகள்’ (அவர்கள் யார் என்று இன்று வரை நமக்குத் தெரியாது) கூடவே எஸ்ஏஆர், ஜீலானி, சவுகத் ஹுசைன் குரு, முகமது அப்சல் ஆகிய மூன்று காஷ்மீர் ஆண்களும், சவுக்கத்தின் மனைவி அப்சான் குருவும். இவர்கள் நான்கு பேரும்தான் கைது செய்யப்பட்டவர்கள்.
தொடர்ந்து வந்த பதற்றமான நாட்களில் நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டது. டிசம்பர் 21ஆம் தேதி, பாகிஸ்தானில் இருக்கும் தனது தூதுவரை இந்தியா- திரும்பப் பெற்றதோடு, வான் வழி, ரயில், மற்றும் பேருந்து தொடர்புகளை துண்டித்து, விமானங்கள் பறப்பதை தடை செய்தது. தனது போர் எந்திரத்தை பெரும் அளவில் திரட்டும் நடவடிக்கைகளை ஆரம்பித்து, 5 லட்சத்துக்கும் அதிகமான படைவீரர்களை பாகிஸ்தான் எல்லைக்கு நகர்த்தியது. வெளிநாட்டு தூதரகங்கள் தமது ஊழியர்களையும் குடிமக்களையும் பாதுகாப்பாக வெளியே அனுப்பின. இந்தியாவுக்கு பயணம் செய்யும் பயணிகளுக்கு எச்சரிக்கைகளும், ஆலோசனைகளும் வழங்கப்பட்டன. துணைக்கண்டம் அணு ஆயுதப் போரின் விளிம்புக்கு இட்டுச் செல்லப்பட்டதை உலகம் திகைப்புடன் கவனித்துக் கொண்டிருந்தது. (இதற்கு எல்லாம் இந்திய மக்களின் வரிப்பணமான ரூ.10,000 கோடி செலவானதாக மதிப்பிடப்பட்டது. கலவர முறையில் செய்யப்பட்ட படை திரட்டலின் போது மட்டும் சில நூறு படை வீரர்கள் உயிரிழந்தார்கள்).
கிட்டத்தட்ட மூன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு ஆகஸ்டு 4, 2005ல் உச்சநீதிமன்றம் இந்த வழக்கில் தனது இறுதித் தீர்ப்பை வழங்கியது. நாடாளுமன்றத் தாக்குதல் ஒரு போர் நடவடிக்கை என்று கருதப்பட வேண்டும் என்ற கருத்தை அது ஏற்றுக் கொண்டது. ‘நாடாளுமன்றத்தின் மீதான தாக்குதல் முயற்சி இந்திய அரசாங்கம் உள்ளிட்ட அரசின் இறையாண்மை நலனை மீறுவதாக இருக்கிறது என்பதில் சந்தேகத்துக்கிடமில்லை. கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் உறுதியான இந்திய எதிர்ப்பு உணர்வால் செலுத்தப்பட்டிருக்கிறார்கள். காரில் ஒட்டப்பட்டிருந்த போலி உள்துறை ஸ்டிக்கரில் (சாட்சியம் PW1/8) இருந்த வாக்கியங்கள் அதை வெளிப்படுத்துகின்றன’ என்று அது சொன்னது. ‘தீவிரமான இந்த தற்கொலைப்படையினரின் செயல்முறை இந்திய அரசாங்கத்துக்கு எதிராக போர் தொடுக்கும் நோக்கத்தை வெளிப்படுத்துகிறது’ என்று தொடர்ந்து விளக்கியது.
போலி உள்துறை அமைச்சக ஸ்டிக்கரில் எழுதப்பட்டிருந்த உரை இதுதான்:
‘INDIA IS A VERY BAD COUNTRY AND WE HATE INDIA WE WANT TO DESTROY INDIA AND WITH THE GRACE OF GOD WE WILL DO IT GOD IS WITH US AND WE WILL TRY OUR BEST. THIS EDIET WAJPAI AND ADVANI WE WILL KILL THEM. THEY HAVE KILLED MANY INNOCENT PEOPLE AND THEY ARE VERY BAD PERSONS THERE BROTHER BUSH IS ALSO A VERY BAD PERSON HE WILL BE NEXT TARGET HE IS ALSO THE KILLER OF INNOCENT PEOPLE HE HAVE TO DIE AND WE WILL DO IT’.
மிகவும் அடக்கமான சொற்களில் எழுதப்பட்ட அந்த ஸ்டிக்கர் அறிக்கை, நாடாளுமன்றத்திற்குள் வந்த காரின் முன் புற கண்ணாடியில் ஒட்டப்பட்டிருந்தது. (இவ்வளவு எழுதியிருப்பதைப் பார்க்கும் போது ஓட்டுனர் சாலையை எப்படி பார்த்து வண்டி ஓட்டியிருக்க முடியும் என்றுதான் தோன்றுகிறது. அதனால்தான் துணை குடியரசுத் தலைவரின் வாகன வரிசையுடன் மோதினாரோ என்னவோ?)
காவல்துறையின் குற்றப்பத்திரிகை, பொடா (பயங்கரவாத தடுப்பு சட்டம்) சிறப்பு நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்டது. விசாரணை நீதிமன்றம், ஜீலானி, சவுகத் மற்றும் அப்சலுக்கு மரண தண்டனை விதித்தது. அப்சான் குருவுக்கு ஐந்து ஆண்டு கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது. மேல்முறையீட்டில் உயர்நீதி மன்றம் ஜீலானியும் அப்சானும் குற்றமற்றவர்கள் என்று தீர்ப்பளித்து, சவுகத் மற்றும் அப்சலுக்கான மரண தண்டனையை உறுதி செய்தது. இறுதியாக, உச்ச நீதிமன்றம் குற்றங்கள் தள்ளுபடி செய்யப்பட்டதை உறுதி செய்து, சவுகத்தின் தண்டனையை 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறை என்று குறைத்தது. ஆனால், அது அப்சலின் தண்டனையை உறுதி செய்ததோடு மட்டுமில்லாமல் அதிகரிக்கவும் செய்தது. அவருக்கு மூன்று ஆயுள் தண்டனைகளும் ஒரு இரட்டை மரண தண்டனையும் விதிக்கப்பட்டன.
உச்ச நீதிமன்றம் அதன் ஆகஸ்டு 4, 2005 தீர்ப்பில், அப்சல் குரு எந்தவொரு பயங்கரவாத குழு அல்லது அமைப்பைச் சேர்ந்தவர் என்பதற்கான ஆதாரம் எதுவுமில்லை என்று தெளிவாகச் சொல்கிறது. ஆனால், அது இப்படியும் சொல்கிறது. ‘பெரும்பாலான சதித்திட்டங்களில், குற்றச் சதியில் பங்கேற்றதற்கான நேரடி சாட்சியம் இருக்க முடியாது. இருப்பினும், குற்றம் சாட்டப்பட்ட அப்சல் கொல்லப்பட்ட தற்கொலைப் படை பயங்கரவாதிகளுடன் ஒத்துழைத்தார் என்பது சூழ்நிலைகளைச் சீர்தூக்கிப் பார்க்கும் போது தெளிவாகிறது’.
ஆகவே, நேரடி சாட்சியம் இல்லை, ஆனால், சூழ்நிலை சாட்சியங்கள் உண்டு.
தீர்ப்பின் சர்ச்சைக்குள்ளான ஒரு பத்தியில், ‘இந்த நிகழ்ச்சி முழு தேசத்தையும் உலுக்கியிருக்கிறது. குற்றவாளிக்கு மரண தண்டனை கொடுக்ப்பட்டால்தான் சமூகத்தின் கூட்டு மனசாட்சி சமாதானம் அடையும். இந்தியாவின் ஒற்றுமை, ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மைக்கு சவாலாக இருந்த இந்த பயங்கரவாதிகள் மற்றும் சதிகாரர்களின் செயலுக்கு பரிகாரம் இந்த துரோகச் செயலில் சதிகாரர் என நிரூபிக்கப்பட்ட நபருக்கு அதிகபட்ச தண்டனையை அளிப்பதாகத்தான் இருக்க முடியும்’. (அழுத்தம் என்னுடையது).
மரண தண்டனை என்னும் சடங்கு ரீதியான கொலையை நியாயப்படுத்துவதற்கு ‘சமூகத்தின் கூட்டு மனசாட்சியை’ பயன்படுத்துவது லைஞ்ச் சட்டத்தை (ஒரு கும்பல் சட்ட விரோதமாக கொலை செய்வது – மொழிக் குறிப்பு) போற்றுவதற்கு சமமானது. இதை நம் மீது சுமத்தியவர்கள் கொலைப்பசி கொண்ட அரசியல்வாதிகளோ, பரபரப்பைத் தேடும் பத்திரிகையாளர்களோ இல்லை (அவர்களும் இதைச் செய்திருக்கிறார்கள்). ஆனால், நாட்டின் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவாக இது வந்தது நடுக்கமூட்டுவதாக இருக்கிறது.
‘சரணடைந்த போராளியான மனுதாரர் தேசத்துக்கு எதிரான துரோகச் செயல்களை தொடர்ந்து செய்வதில் முனைந்து நிற்கிறார். அவர் சமூகத்துக்கு ஒரு அச்சுறுத்தல். அவரது உயிர் இல்லாமல் போக வேண்டும்’ என்று அப்சலுக்கு மரண தண்டனை வழங்குவதற்கான காரணங்களை விளக்கும் வகையாக தீர்ப்பு தொடர்ந்து சொல்கிறது.
இந்த பகுதி தவறான வாதத்தையும், இன்றைய காஷ்மீரில் ‘சரணடைந்த போராளி’யாக இருப்பதைப் பற்றிய அறிவின்மையையும் இணைக்கிறது.
எனவே: முகமது அப்சலின் உயிர் இல்லாமல் போக வேண்டுமா?
அறிவுஜீவிகள், பத்திரிகை ஆசிரியர்கள், வழக்கறிஞர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுவாழ்க்கையினர் அடங்கிய சிறிய, செல்வாக்கு மிகுந்த ஒரு சிறுபான்மையினர் மரண தண்டனையை கொள்கை ரீதியாக எதிர்த்தனர். மரண தண்டனை பயங்கரவாதிகளுக்கு ஒரு மனத்தடையாக இருக்கிறது என்பதற்கு எந்த நடைமுறை ஆதாரமும் இல்லை என்றும் அவர்கள் வாதிடுகிறார்கள். (தற்கொலை மனித வெடி குண்டுகளின் இந்தக் காலத்தில், மரணம் ஒரு முக்கிய கவர்ச்சியாக இருக்கும் போது, அப்படி இல்லைதான்).
கருத்துக் கணிப்புகள், ஆசிரியருக்குக் கடிதம், தொலைக்காட்சி நேரடி ஒளிபரப்பில் பங்கு பெறும் பார்வையாளர்கள் இவர்கள்தான் இந்திய பொதுக்கருத்தின் சரியான அளவை என்று வைத்துக் கொண்டால், லைஞ்ச் கும்பல் மணிக்கு மணி அதிகரித்துக் கொண்டே போகிறது. அறுதிப் பெரும்பான்மை இந்திய குடிமக்கள், அடுத்த சில ஆண்டுகளுக்கு அப்சல் குரு ஒவ்வொரு நாளும், சனி, ஞாயிறு கூட விடுமுறை விடாமல், தூக்கில் இடப்பட வேண்டும் என்று விரும்புவதாகத் தெரிகிறது. எதிர்க்கட்சி தலைவர் எல்.கே. அத்வானி, ஒரு கணமும் தாமதிக்காமல் அவர் உடனடியாக தூக்கிலிடப்பட வேண்டும் என்று அநாகரீகமான அவசரத்தைக் காட்டுகிறார்.
இதற்கிடையில், காஷ்மீரில் பொதுக்கருத்து இதே பெரிய அளவில் உருவாகியிருக்கிறது. கோபமான மக்கள் போராட்டங்கள், அப்சல் தூக்கிலிடப்பட்டால் பின்விளைவுகள் அரசியல் ரீதியாக எப்படி இருக்கும் என்பதை தெளிவாக்குகின்றன. நீதி மறுக்கப்பட்டதை எதிர்த்து சிலர் போராடுகிறார்கள், ஆனால், இந்திய நீதிமன்றங்களிடமிருந்து நியாயம் கிடைக்கும் என்று அவர்கள் எதிர்பார்க்கவில்லை. அவ்வளவு கொடுமைகளுக்கிடையில் வாழ்ந்து அனுபவித்து விட்ட அந்த மக்களுக்கு நீதிமன்றங்கள், மனுக்கள், அல்லது நீதி மீது எந்த நம்பிக்கையும் மிஞ்சியிருக்கவில்லை. இன்னும் சிலர், முகமது அப்சல், மக்பூல் பட்டைப் போல தூக்கு மேடைக்கு கம்பீரமாக நடந்து செல்வதைப் பார்க்க விரும்புகிறார்கள். காஷ்மீரின் விடுதலைப் போராட்டத்திற்காக பெருமை மிகு தியாகியாக மாறுவதை விரும்புகிறார்கள். மொத்தத்தில், பெரும்பான்மை காஷ்மீரிகள் அப்சல் ஆக்கிரமிப்பு சக்தியின் நீதிமன்றங்களில் விசாரிக்கப்படும் ஒரு போர்க்கைதி என்றே கருதப்படுகிறார். (அது சந்தேகத்துக்கிடமில்லாத உண்மை). நிகழ்வுகளின் போக்கை மோப்பம் பிடித்து விட்ட அரசியல் கட்சிகள், காஷ்மீரிலும் சரி, இந்தியாவிலும் சரி, கொலை செய்வதற்காக வட்டமிட ஆரம்பித்து விட்டன.

இந்த பரபரப்புகளுக்கிடையே ஒரு தனி நபராக, உண்மையான மனிதனாக வாழ்வதற்கான உரிமையை அப்சல் விட்டுக் கொடுத்து விட்டது போலத் தோன்றுவது வருத்தப்பட வேண்டிய ஒன்று. தேசியவாதிகள், பிரிவினைவாதிகள், மரணதண்டனை எதிர்ப்பு ஆர்வலர்கள் உள்ளிட்ட ஒவ்வொருவரின் கற்பனைக்கும் அவர் வாகனமாக மாறியிருக்கிறார். அவர் இந்தியாவின் மாபெரும் வில்லனாகவும் காஷ்மீரின் மாபெரும் ஹீரோவாகவும் ஆகி விட்டார். நமது நிபுணர்கள், கொள்கை வகுப்பவர்கள், அமைதி குருக்கள் என்ன சொன்னாலும், இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகும், காஷ்மீரில் நடக்கும் போர் எந்த வகையிலும் முடிந்து விடவில்லை என்பதைத்தான் இது நிரூபிக்கிறது.
அச்சம் சூழ்ந்த அரசியல் மயமாக்கப்பட்ட இத்தகைய சூழலில், தலையிட வேண்டிய கட்டம் வந்தது, கடந்து போய் விட்டது என்று விட்டு விடலாம் என்றுதான் தோன்றுகிறது. கடைசியில் பார்க்கும் போது, நீதி விசாரணை 40 மாதங்களுக்கு மேல் நீடித்தது, உச்ச நீதிமன்றம் தனக்கு முன் வைக்கப்பட்ட ஆதாரங்களை பரீசிலித்திருக்கிறது. இரண்டு பேரின் குற்றத்தை உறுதி செய்து, இரண்டு பேரை விடுதலை செய்தது. நிச்சயமாக இதுவே நீதித்துறையின் நடுநிலைமைக்கு சான்றாக இருக்கிறதுதானே? விவாதிப்பதற்கு வேறு என்ன இருக்கிறது? இதையே இன்னொரு கோணத்தில் பார்க்கலாம். அரசுத் தரப்பின் வழக்கு, ஒரு பாதியில் பச்சைத் தவறாகவும் இன்னொரு பாதியில் சிறப்பான வெற்றியாகவும் இருப்பது வியப்பாக இல்லை?
முகமது அப்சல், மக்பூல் பட்டாக இல்லாமல் இருப்பதாலேயே அவரது கதை இவ்வளவு விறுவிறுப்பாக இருக்கிறது. இருப்பினும், அவரது கதை காஷ்மீர் பள்ளத்தாக்கின் வரலாற்றுடன் பிரிக்க முடியாதபடி பிணைந்துள்ளது. இந்தக் கதையின் எல்லைகள், நீதிமன்ற வட்டங்களையும், தன்னைத் தானே ‘வல்லரசாக’ அறிவித்துக் கொண்டுள்ள நாட்டின் பாதுகாப்பான மையத்தில் வசிக்கும் மக்களின் உள்ளங்களையும் தாண்டி விரிகின்றன. முகமது அப்சலின் கதை, இயல்பான நீதியுணர்வின் வாதங்களுக்கும் உணர்வுகளுக்கும் அப்பாற்பட்ட சட்டங்கள் நடைமுறையில் இருக்கும் போர் பிரதேசத்தில் ஆரம்பிக்கிறது.
இந்த எல்லாக் காரணங்களையும் கருத்தில் கொண்டு, டிசம்பர் 13 நாடாளுமன்ற தாக்குதல் என்ற வினோதமான, வருந்தத்தக்க, மர்மமான கதையை கவனமாக பரிசீலிக்க வேண்டும். உலகின் மிகப்பெரிய ‘மக்களாட்சி’ உண்மையில் எப்படி செயல்படுகிறது என்பதைப் பற்றி அது நிறைய நமக்குச் சொல்கிறது. மாபெரும் நிகழ்வுகளை மிகச் சிறு நிகழ்ச்சிகளுடன் அது இணைக்கிறது. காவல் நிலையங்களின் இருள் படிந்த மூலைகளில் நடப்பவற்றையும் குளிர் நிறைந்த பனி படிந்த சொர்க்க பள்ளத்தாக்கின் தெருக்களில் நடந்து கொண்டிருப்பவற்றையும், நாடுகளை அணுஆயுதப் போரின் விளிம்புகளுக்குக் கொண்டு வரும் மனிதநலன்களுக்கு அப்பாற்பட்ட தீய ஆவேசத்தையும் இணைக்கும் பாதைகளை அது காட்டுகிறது. அது எழுப்பும் குறிப்பான கேள்விகளுக்கு தேவை குறிப்பான பதில்கள், தத்துவரீதியான அல்லது விவாதரீதியான பதில்கள் இல்லை. கேள்விக்குரியதாக இருப்பது ஒரு தனிமனிதனின் விதி மட்டுமில்லை.
இந்த ஆண்டு அக்டோபர் 4ம் தேதி, முகமது அப்சலுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை எதிர்த்து புதுதில்லி ஜந்தர் மந்தரில் கூடிய ஒரு சிறு குழுவில் நானும் இருந்தேன். முகமது அப்சல் ஒரு பயங்கரமான திட்டத்தின் ஒரு சிறு பொம்மைதான் என்று நம்பியதால் நான் அங்கு போயிருந்தேன். சித்தரிக்கப்படுவதைப் போன்று அவர் ஒரு டிராகன் இல்லை, அந்த டிராகனின் காலடிச் சுவடுதான் அவர். காலடிச் சுவடை இல்லாமல் செய்து விட்டால், உண்மையில் டிராகனாக இருந்தது யார் என்பது தெரியாமலேயே போய் விடும். இப்போதைய டிராகனும் வெளிவராது.
அந்த பிற்பகலில் போராட்டக்காரர்களை விட பத்திரிகையாளர்களும், தொலைக்காட்சி நிருபர்களும் அதிகமாக இருந்ததில் வியப்பில்லை. அப்சலின் குட்டிப் பையன் காலிப் மீதுதான் பெரும் கவனம் குவிந்திருந்தது. தந்தை தூக்குமேடைக்கு அனுப்பப்படும் நிலையிலிருக்கும் சிறுபையனிடம் எப்படி பழகுவது என்று புரியாமல், கருணை மனம் படைத்தவர்கள் ஐஸ்கிரீம்களையும், குளிர்பானங்களையும் வாங்கித் திணித்துக் கொண்டிருந்தார்கள். அங்கு கூடியிருந்தவர்களைச் சுற்றிப் பார்த்த போது ஒரு சோகமான உண்மையைக் கவனித்தேன்.
அந்தப் போராட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்த, பேச்சாளர்களை அறிமுகம் செய்து அறிவிப்புகளை வெளியிட்டுக் கொண்டிருந்த குள்ளமான குண்டான மனிதர் தில்லி பல்கலைக் கழகத்தில் அரபி இலக்கியத் துறையின் இளம் விரிவுரையாளர். எஸ்ஏஆர் ஜீலானி. நாடாளுமன்ற தாக்குதல் வழக்கில் மூன்றாவது குற்றவாளி. தாக்குதல் நடந்த அடுத்த நாள் டிசம்பர் 14, 2001ல் தில்லி காவல்துறையின் சிறப்புப் பிரிவால் அவர் கைது செய்யப்பட்டிருந்தார். காவல்துறை பாதுகாப்பில் கொடூரமாக சித்திரவதை செய்யப்பட்ட போதும், அவரது மனைவி, சிறு குழந்தைகள் மற்றும் சகோதரர் உள்ளிட்ட குடும்பத்தினர் சட்ட விரோதமாக பிடித்து வைக்கப்பட்ட போதும் அவர் செய்யாத குற்றத்தை செய்ததாக ஒப்புக் கொள்ள மறுத்தார். அவரது கைதைத் தொடர்ந்த நாட்களில் செய்தித் தாள்களைப் படித்திருந்தால் இதெல்லாம் உங்களுக்கு தெரிந்திருக்காது. இல்லாத, கற்பனையான வாக்குமூலங்களைப் பற்றிய விபரங்களை அவை வெளியிட்டன. சதிக்கான இந்திய பகுதியின் கொடூர மூளை ஜீலானி என்று தில்லி காவல்துறை சித்தரித்தது. அதன் கதாசிரியர்கள் ஜீலானிக்கு எதிராக வெறுப்பு நிறைந்த ஒரு பிரச்சார இயக்கத்தை நடத்தினார்கள். அதிதேசியவாத, பரபரப்பு தேடும் ஊடகங்கள் அதை ஊதிப் பெரிதாக்கிக் கொண்டன. குற்ற வழக்கு விசாரணைகளில், நீதிபதிகள், ஊடகச் செய்திகளை கருத்தில் எடுத்துக் கொள்ளக் கூடாது என்று காவல் துறைக்கு நன்றாகவே தெரியும். எனினும், இந்த ‘பயங்கரவாதிகளுக்காக’ அவர்கள் உருவாக்கிய ஈவு இரக்கமற்ற சித்திரம் பொதுக் கருத்தை உருவாக்கி வழக்கு விசாரணைக்கு அவர்கள் விரும்பும் சூழலை உருவாக்கும் என்று தெரிந்து வைத்திருந்தார்கள். ஆனால், அவர்களது நடவடிக்கைகள் எவையும் சட்டரீதியான பரீசிலனைக்கு உட்படப் போவதில்லை.
முன்னணி பத்திரிகைகளில் வெளியான கேவலமான, வெளிப்படையான பொய்களில் சில கீழே:
 ’வழக்கு முடிவுக்கு வந்தது: தாக்குதலின் பின்னணியில் ஜெய்ஷ்’,
தி இந்துஸ்தான் டைம்ஸ், டிச 15, 2001: நீத்தா சர்மா மற்றும் அருண் ஜோஷி.
‘ஜாகிர் உசைன் கல்லூரி(மாலை)யின் அரபி பேராசிரியரை சிறப்புப் பிரிவு காவலர்கள் கைது செய்தார்கள். போராளிகள் தமது செல்போனிலிருந்து அவரது தொலைபேசியை அழைத்தது நிரூபணமாகியிருக்கிறது’. அதே நாளிதழில் இன்னொரு செய்தி: ‘தாக்குதலுக்கு முன்னதாக பயங்கரவாதிகள் அவருடன் பேசினார்கள். தாக்குதலுக்குப் பிறகு பேராசிரியர் பாகிஸ்தானுக்கு தொலைபேசினார்’.
‘தில்லி பல்கலை ஆசிரியர் பயங்கரவாத திட்டத்தின் மையம்’ 
தி டைம்ஸ் ஆப் இந்தியா, டிச 17, 2001.
‘நாடாளுமன்றத்தின் மீது டிசம்பர் 13 அன்று நடத்தப்பட்ட தாக்குதல் ஜெய்ஷ் – எ – முகமது மற்றும் லஷ்கர் – எ – தொய்பா பயங்கரவாத குழுக்களின் கூட்டு நடவடிக்கையாகும். அதில் தில்லி பல்கலைக் கழக ஆசிரியர் சையத் ஏஆர் ஜீலானி ஒரு முக்கிய ஒருங்கிணைப்பாளர் என்று தில்லி காவல்துறை ஆணையாளர் அஜய்ராஜ் ஷர்மா ஞாயிற்றுக் கிழமை சொன்னார்’.
‘பல்கலை தாதா தற்கொலைப்படைக்கு வழிகாட்டினார்’
தி ஹிந்து, டிச 17, 2001: தேவேஷ் கே பாண்டே
‘விசாரணையின் போது, ஜீலானி, ‘தற்கொலை’ தாக்குதல் திட்டமிடப்பட்ட நாளிலிருந்தே சதியைப் பற்றி அவருக்குத் தெரிந்தததாக சொன்னார்.
‘தாதா ஓய்வு நேரத்தில் பயங்கரவாதத்தில் உரை நடத்தினார்’ 
தி ஹிந்துஸ்தான் டைம்ஸ், டிச 17, 2001: சுதிர்தோ பட்ரனோபிஸ்.
‘அவர் மாலையில் கல்லூரியில் அரபி இலக்கியம் கற்றுக் கொடுத்தார். ஓய்வு நேரத்தில் தனது வீட்டில் அல்லது கைது செய்யப்பட்ட இன்னொரு குற்றம் சாட்டப்பட்டவரான சவுகத் ஹூசைனின் வீட்டில் மூடிய கதவுகளுக்குப் பின்பு பயங்கரவாதத்தில் பாடங்கள் நடத்தினார் என்பது விசாரணைகளில் தெரிய வந்தது’.
‘பேராசிரியரின் நடவடிக்கைகள்’
தி ஹிந்துஸ்தான் டைம்ஸ், டிச 17, 2001.
‘சமீபத்தில் ஜீலானி மேற்கு தில்லியில் 22 லட்ச ரூபாய்க்கு ஒரு வீட்டை வாங்கினார். இப்படி ஒரு புதையல் அவருக்கு எப்படி கிடைத்தது என்று தில்லி காவல் துறை விசாரித்து வருகிறது’.
‘அலிகர் சே இங்கிலாந்து தக் சாட்ரோன் மே ஆதங்க்வாத் கே பீஜ் போரஹா ஜீலானி’
(அலிகரிலிருந்து இங்கிலாந்து வரை ஜீலானி பயங்கரவாதத்தின்விதைகளை விதைத்தார் ) ராஷ்ட்ரிய சகாரா, டிச 18, 2001: சுஜித் தாகூர்
மொழிபெயர்ப்பு: ‘…தகவல் தருபவர்கள் மற்றும் புலன்விசாரணை துறைகள் சேகரித்த விபரங்களின் படி, அவர் ஜெய்ஷ் – எ – முகமது அமைப்பின் உளவாளியாக நீண்ட காலம் செயல்பட்டதாக ஜீலானி சொல்லியிருந்தார். ஜீலானியின் பேச்சு வன்மை, பணி முறை, சரியான திட்டமிடல் இவற்றைக் கருத்தில் கொண்டு அவரிடம் கருத்துரீதியான பயங்கரவாதத்தை பரப்பும் பொறுப்பை 2000ம் ஆண்டில் ஜெய்ஷ் – எ – முகமது ஒப்படைத்தது.
‘பயங்கரவாதி என கருதப்படுபவர் பாகிஸ்தான் தூதரகத்துக்குஅடிக்கடி போகின்றவர்’. 
தி ஹிந்துஸ்தான் டைம்ஸ், டிச 21, 2011: ஸ்வாதி சதுர்வேதி
‘விசாரணையின் போது, தான் அடிக்கடி பாகிஸ்தானுக்கு தொலைபேசியதாகவும், ஜெய்ஷ் – எ – முகமது இயக்க போராளிகளுடன் தொடர்பில் இருந்ததாகவும் ஒத்துக் கொண்டார்… ஜெய்ஷ் உறுப்பினர்களில் சிலர் பணம் கொடுத்து தீவிரவாத நடவடிக்கைகளுக்கு பயன்படுத்துவதற்காக இரண்டு அடுக்கு வீடுகளை வாங்குமாறு சொன்னார்கள் என்று தெரிவித்தார்’.
‘இந்த வார நாயகன்’
சண்டே டைம்ஸ் ஆப் இந்தியா, டிச 23, 2001:
‘ஒரு செல்பேசிதான் அவருக்கு உலை வைத்தது. தில்லி பல்கலைக்கழகத்தின் சையத் ஏஆர் ஜீலானிதான் டிசம்பர் 13 வழக்கில் முதலில் கைது செய்யப்பட்டவர். பயங்கரவாதத்தின் வேர்கள் எவ்வளவு தூரம் எவ்வளவு ஆழமாக பரவியிருக்கின்றன என்பதை இந்த திடுக்கிட வைக்கும் தகவல் வெளிப்படுத்துகிறது…’
ஜீ டிவி எல்லாவற்றையும் தூக்கிச் சாப்பிட்டு விட்டது.
‘காவல்துறை குற்றப்பத்திரிகை அடிப்படையிலான உண்மை’ (முரண் சொற்றொடர் என்றுதானே தோன்றுகிறது?) என்று சொல்லி டிசம்பர் 13 என்ற ஒரு ஆவணநாடகத்தை தயாரித்தது. இந்தப் படம் பிரதமர் வாஜ்பாயிக்கும் உள்துறை அமைச்சர் எல்கே அத்வானிக்கும் தனியாக திரையிட்டுக் காட்டப்பட்டது. இரண்டு பேருமே படத்தை பாராட்டினார்கள். அவர்களது பாராட்டு ஊடகங்கள் மூலம் பரவலாக வெளியிடப்பட்டது
இந்த குறும்படத்தை திரையிடுவதை தடை செய்ய வேண்டும் என்ற மனுவை உச்சநீதிமன்றம் நிராகரித்தது. நீதிபதிகள், ஊடகங்களால் பாதிக்கப்படுவதில்லை என்று காரணம் சொல்லப்பட்டிருந்தது. (நீதிபதிகள் ஊடக செய்திகளால் பாதிக்கப்படா விட்டாலும், சமூகத்தின் கூட்டு மனசாட்சி பாதிக்கப்படலாம் என்பதை உச்சநீதி மன்றம் ஏற்றுக் கொள்ளுமா?) ஜீலானி, அப்சல், மற்றும் சவுகத்துக்கு விசாரணை நீதிமன்றம் தூக்கு தண்டனை விதிப்பதற்கு சில நாட்களுக்கு முன்பு டிசம்பர் 13 ஜீ டிவியின் தேசிய ஓடையில் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பானது. மொத்தத்தில் ஜீலானி 18 மாதங்கள் சிறையில் கழித்தார். அவற்றில் பெரும்பகுதி தனிமைச் சிறையில் கழித்தார்.
உயர் நீதிமன்றம் அவரையும் அப்சான் குருவையும் குற்றமற்றவர்கள் என்று தீர்மானித்த பிறகு அவர் விடுவிக்கப்பட்டார். (கைது செய்யப்படும் போது கர்ப்பமாயிருந்த அப்சான் சிறையில் குழந்தை பெற்றார். அந்த அனுபவம் அவரை உடைத்து விட்டது. அவர் இப்போது கடுமையான மனநோய் பாதிப்பில் இருக்கிறார்). உச்சநீதி மன்றம் இந்த விடுதலையை உறுதி செய்தது. ஜீலானியை நாடாளுமன்ற தாக்குதல் அல்லது ஏதாவது ஒரு பயங்கரவாத அமைப்புடன் இணைக்கும் எந்த சாட்சியத்தையும் அது ஏற்றுக் கொள்ளவில்லை.
எந்த ஒரு செய்தித்தாளோ பத்திரிகையாளரோ தொலைக்காட்சிஓடையோ தமது பொய்களுக்காக ஜீலானியிடம் மன்னிப்புக் கேட்டுக்கொள்ளவில்லை.
ஆனால் எஸ்ஏஆர் ஜீலானிக்கு அத்தோடு தொல்லைகள் விட்டு விடவில்லை. அவர் விடுவிக்கப்பட்ட பிறகு சிறப்பு பிரிவின் கையில் மிஞ்சி இருந்தது ‘சூத்திரதாரி’ இல்லாத ஒரு கதைக்கரு மட்டும்தான். இது எப்படி ஒரு விவகாரமாக மாறியது என்று பார்ப்போம். முக்கியமாக, ஜீலானி இப்போது சுதந்திரமாக உலாவுகிறார். ஊடகங்களை அணுகவும், வழக்கறிஞர்களுடன் விவாதிக்கவும், தனது கெட்ட பெயரை சரிப்படுத்திக் கொள்ளவும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்திருக்கிறது.
உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடந்து கொண்டிருந்த போது ஒரு நாள், பிப்ரவரி 8, 2005 அன்று மாலையில் ஜீலானி வழக்கறிஞரின் வீட்டுக்குப் போய்க் கொண்டிருந்தார். ஒரு மர்ம மனிதன் இருட்டிலிருந்து வெளிப்பட்டு அவரை நோக்கி 5 குண்டுகளை சுட்டான். அதிசயமாக, அவர் பிழைத்துக் கொண்டார். இந்தக் கதையில் நம்ப முடியாத புதிய திருப்பமாக இது இருந்தது. அவருக்குத் தெரிந்தவற்றைப் பற்றி அல்லது அவர் என்ன சொல்லி விடுவாரோ என்று யாருக்கோ பயம் இருந்திருக்கிறது. காவல் துறையினர் இதைப் பற்றிய விசாரணைக்கு முன்னிலை கொடுத்து நடத்துவார்கள் என்று எதிர்பார்த்திருப்பீர்கள். நாடாளுமன்ற தாக்குதல் வழக்கில் புதிய கோணங்களுக்கு இது இட்டுச் செல்லும் என்ற நோக்கத்தில் அதை செய்திருக்க வேண்டும். மாறாக, ஜீலானியின் மீதான கொலைத்தாக்குதல் விசாரணையில் அவரையே குற்றவாளி போல நடத்தியது சிறப்புப் பிரிவு. அவரது கணினியை பறிமுதல் செய்து காரையும் எடுத்துக் கொண்டு போய் விட்டார்கள். மருத்துவமனைக்கு வெளியில் நூற்றுக்கணக்கான சமூக ஆர்வலர்கள் கூடி தாக்குதல் பற்றி விசாரணை நடத்தும் படி கோரினார்கள். அத்தகைய விசாரணையில் சிறப்புப் பிரிவின் செயல்பாடும் பரிசீலனைக்கு வரும். (எதிர்பார்த்தபடியே, அது நடக்கவே இல்லை. ஒரு ஆண்டுக்குப் பிறகும் அதைப் பற்றி விசாரணை நடத்துவதில் யாரும் ஆர்வம் காட்டவில்லை. விசித்திரம்!)
கடைசியில் அந்தக் கொடுமையான அனுபவத்தைக் கடந்து வந்த எஸ்ஏஆர் ஜீலானி இங்கே ஜந்தர் மந்தரில் பொது இடத்தில் நின்று முகமது அப்சலுக்கு மரண தண்டனை கொடுக்கப்பட்டது சரியில்லை என்று பிரச்சாரம் செய்கிறார். எந்தத் தொல்லையும் இல்லாமல் வீட்டில் அமைதியாக இருந்திருக்கலாம். அமைதியான முறையில் வெளியான அவரது தைரியம் என்னை மிகவும் பாதித்தது.
எஸ் ஆ ஆர் ஜீலானிக்கு அப்பால், நெருக்கியடித்துக் கொண்டிருக்கும் பத்திரிகையாளர்கள், புகைப்படக் காரர்களுக்கு நடுவில் இன்னொரு ஜீலானி எலுமிச்சை நிற டி – சட்டையில் யாரும் கவனித்து விடக் கூடாது என்ற கூச்சத்துடன் கையில் ஒலிப்பதிவுக் கருவியுடன் நின்று கொண்டிருந்தார். இப்திகார் ஜீலானி. அவரும் சிறைக்குப் போயிருந்தார். ஜூன் 9, 2002 அன்று கைது செய்யப்பட்டு போலீஸ் காவலுக்கு அனுப்பப்பட்டார். அப்போது அவர் ஜம்முவில் இருந்து இயங்கும் காஷ்மீர்டைம்ஸ் நாளிதழில் நிருபராக இருந்தார். அரசாங்க ரகசியங்கள் சட்டத்தின் கீழ் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. ‘இந்தியக் கட்டுப்பாட்டில் இருக்கும் காஷ்மீரில்’ இந்திய படைகளின் நகர்வுகளைப் பற்றிய காலாவதி ஆன தகவல்களை அவர் வைத்திருந்தார் என்று குற்றம் சாட்டப்பட்டது. (இந்த தகவல் பாகிஸ்தானிய ஆராய்ச்சி நிலையம் ஒன்றினால் இணையத்தில் வெளியிடப்பட்ட அறிக்கையில் இருந்ததும், யார் வேண்டுமானாலும் அதை தகவிறக்கிக் கொள்ள முடியும் என்பதும் பின்னர் தெரிய வந்தது). இப்திகார் ஜீலானியின் கணினி பறிமுதல் செய்யப்பட்டது. ஐபி அதிகாரிகள் அவரது ஹார்ட் டிரைவை குடைந்து, தகவிறக்கப்பட்ட கோப்பில் புகுந்து ‘இந்தியக் கட்டுப்பாட்டு காஷ்மீர்’ என்ற சொற்களை ‘ஜம்மு கஷ்மீர்’ என்று மாற்றினார்கள். அப்போதுதான் அது இந்திய ஆவணம் போல இருக்கும், கூடவே ‘தகவலுக்கு மட்டும் பகிர்ந்து கொள்வதற்கு இல்லை’, என்ற சொற்களையும் சேர்த்து உள்துறை அமைச்சகத்திலிருந்து கடத்தி வரப்பட்ட ஆவணம் போன்ற தோற்றத்தை உருவாக்கினார்கள். இது பற்றி இப்திகார் ஜீலானியின் வழக்கறிஞர் பல முறை விளக்கம் கேட்டும் கட்டுரையின் நகல் அதனிடம் கொடுக்கப்பட்டிருந்தும் ராணுவ உளவுத் துறையின் தலைமை இயக்ககம் ஆறு மாதம் வரை விளக்கம் அளிக்க மறுத்தது.
சிறப்புப் பிரிவு சொன்ன கொடூரமான பொய்கள் நாளிதழ்களில் பணிவுடன் வெளியிடப்பட்டன. சொல்லப்பட்ட பொய்களில் சில:
 ’ஹூரியத் தீவிரவாதி சையத் ஷா ஜீலானியின் 35 வயது மருமகன்இப்திகார் ஜீலானி, தான் ஒரு பாகிஸ்தான் உளவு நிறுவனத்தின்ஊழியர் என்று ஒரு மாநகர நீதிமன்றத்தில் ஒத்துக் கொண்டதாகநம்பப்படுகிறது’ – 
தி ஹிந்துஸ்தான் டைம்ஸ், ஜூன் 11, 2002: நீத்தா ஷர்மா
‘இப்திகார் ஜீலானிதான் ஹிஜ்புல் முஜாஹிதீனின் சையத் சலாஹூதீனின் தொடர்பாளர் இந்திய உளவு நிறுவனங்களின் நடவடிக்கைகள் பற்றிய விபரங்களை இப்திகார் சலாஹூதீனுக்கு கொடுப்பது வழக்கம் என்று விசாரணையில் தெரிய வந்தது. அவர் தனது உண்மையான நோக்கங்களை தனது பத்திரிகையாளர் போர்வைக்குப் பின் மறைத்துக் கொண்டதால், அவரது முகமூடியை விலக்கி உண்மையை அறிய பல ஆண்டுகள் பிடித்தன என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்தன’.- தி பயனீர், பிரமோத் குமார் சிங்
‘ஜீலானி கே தமாத் கே கர் ஆய்கர் சாப்போன் மேம் பெஹிசாப்சம்பத்தி வா சமாவாய்தான்ஷெயில் தஸ்தாவேஜ் பர்மாத்’
(ஜீலானியின் மருமகன் வீட்டிலிருந்து வருமான வரி ரெய்டின் போது பெரும் அளவிலான செல்வங்களும், ரகசிய ஆவணங்களும் கைப்பற்றப்பட்டன) – ஹிந்துஸ்தான், ஜூன் 10, 2002
அவர் வீட்டிலிருந்து 3,450 ரூபாய்தான் கைப்பற்றப்பட்டது என்று காவல்துறையின் குற்றப்பத்திரிகை பதிவு செய்திருப்பதைப் பற்றி யாருக்கும் கவலையில்லை.
இதற்கிடையில், அவருக்கு மூன்று படுக்கையறை கொண்ட பிளாட் சொந்தமாக இருப்பதாகவும், மறைக்கப்பட்ட 22 லட்ச ரூபாய் வருமானம் இருப்பதாகவும், 70 லட்சம் ரூபாய் வருமான வரி ஏய்ப்பு செய்ததாகவும், அவரும் அவரது மனைவியும் கைது செய்யப்படுவதை தவிர்க்க தலைமறைவாகி விட்டார்கள் என்றும் மற்ற செய்திகள் வெளியாகின.
ஆனால், அவர் கைது செய்யப்பட்டிருந்துது என்னவோ உண்மை. சிறையில் இப்திகார் ஜீலானி அடிக்கப்பட்டு, அவமானப்படுத்தப்பட்டார். கழிவறையை தனது சட்டையால் துடைக்க வைத்து விட்டு, அதே சட்டையை பல நாட்கள் அணிய வைக்கப்பட்டதைப் பற்றி ‘சிறையில் எனது நாட்கள்’ என்ற புத்தகத்தில் சொல்கிறார். ஆறு மாத நீதிமன்ற வாதங்கள், அவருடன் பணி புரிபவர்களின் முயற்சிகளுக்குப் பிறகு, அவருக்கு எதிரான வழக்கு தொடர்ந்து நடந்தால் பெரிய அவமானத்துக்கு உள்ளாக நேரிடும் என்று தெளிவான பிறகு அவர் விடுவிக்கப்பட்டார்.
அவரும் இப்போது இங்கே வந்திருக்கிறார். ஒரு சுதந்திர மனிதனாக, ஒரு பத்திரிகையாளராக ஜந்தர் மந்தரில் நிகழ்வைப் பற்றி எழுத வந்திருக்கிறார். எஸ்ஏஆர் ஜீலானி, இப்திகார் ஜீலானி, முகமது அப்சல் மூன்று பேரும் ஒரே நேரத்தில் திகார் சிறையில் இருந்தார்கள் என்பது எனக்கு உறைத்தது. (இன்னும் பல டசன் காஷ்மீரிகளும் அவர்களுடன் இருந்தார்கள். அவர்களது கதைகளெல்லாம் நமக்குத் தெரியாமலேயே போய் விடலாம்)
எஸ்ஏஆர் ஜீலானி, இப்திகார் ஜீலானி இவர்களின் மீதான வழக்குகள் இந்திய நீதித் துறையின் நேர்மையை வெளிப்படுத்துவதாக இருக்கிறது என்றும், தனது தவறுகளை தானே திருத்திக் கொள்ளும் அதன் திறனையும் காட்டுகிறது என்றும் அதன் நம்பகத்தன்மையை குறைக்கவில்லை என்றும் ஒருவர் சொல்லலாம். அது ஓரளவுக்குத்தான் உண்மை.
இப்திகார் ஜீலானியும், எஸ்ஏஆர் ஜீலானியும் இரண்டு பேருமே தில்லியைச் சேர்ந்த காஷ்மீரிகள். போராட்ட குணமுடைய நடுத்தர வர்க்க நண்பர்கள், பத்திரிகையாளர்கள், பல்கலைக் கழக ஆசிரியர்கள் என்று அவர்களுக்கு நன்கு தெரிந்தவர்கள் தேவைப்படும் நேரத்தில் உதவிக்கு திரண்டு வந்தார்கள். எஸ்ஏஆர் ஜீலானியின் வழக்கறிஞர் நந்திதா ஹஸ்கர் அகில இந்திய எஸ்ஏஆர் ஜீலானி பாதுகாப்பு குழு ஒன்றை உருவாக்கினார். அதில் நானும் ஒரு உறுப்பினர். ஜீலானிக்கு ஆதரவாக வரும்படி ஆர்வலர்கள், வழக்கறிஞர்கள் மற்றும் பத்திரிகையாளர்களும் பரப்புரை செய்தார்கள். புகழ்பெற்ற வழக்கறிஞர்களான ராம்ஜெத்மலானி, கேஜி கண்ணபிரான், விருந்தா குரோவர் ஆகியோர் அவருக்காக வாதாடினார்கள். அவர்கள் வழக்கின் உண்மை நிலையை தோலுரித்துக் காட்டினார்கள் – உருவாக்கப்பட்ட சாட்சியங்களின் அடிப்படையில் ஏற்படுத்தப்பட்ட ஊகங்கள், கருத்துக்கள், பச்சைப் பொய்கள் இவற்றின் தொகுப்புதான் வழக்கு என்பதை நிறுவினார்கள்.
ஆமாம், நீதித் துறையில் நியாயம் இருக்கிறது. ஆனால், அது நீதித் துறையின் இருட்டு அறைகளுக்குள் மறைந்து கொண்டிருக்கும் ஒரு பயந்த சுபாவமுள்ள விலங்கு. அது எப்போதாவதுதான் தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறது. பெரிய வழக்கறிஞர்களின் குழுக்களால்தான் அதை தாஜா செய்து வெளியில் வரச் செய்து செயல்பட வைக்க முடிகிறது. இதுதான் பத்திரிகையாளர்களின் மொழியில் பிரம்ம பிரயத்தனம் என்று சொல்லப்படுவது. அப்படி ஒரு வலிமை முகமது அப்சலின் தரப்பில் வாதாட இருக்கவில்லை.
கைது செய்யப்பட்ட நாளிலிருந்து 5 மாதங்களுக்குப் பிறகு காவல்துறை குற்றப்பத்திரிகை பதிவு செய்யப்பட்டது வரை அவருக்கு சட்ட பாதுகாப்போ, ஆலோசனையோ கிடைக்கவில்லை. உயர் பாதுகாப்பு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். பெரிய வழக்கறிஞர்களோ, பாதுகாப்புக் குழுக்களோ, பிரச்சாரங்களோ இந்தியாவிலும் சரி காஷ்மீரிலும் சரி நடக்கவில்லை. குற்றம் சாட்டப்பட்ட நான்கு பேரில் அவர்தான் மிக பலவீனமானவர். அவர் மீதான வழக்கு ஜீலானி மீதான வழக்கை விட சிக்கலானது. குறிப்பாக, இந்தக் கால கட்டத்தில் அப்சலின் தம்பி ஹிலால் காஷ்மீரில் சிறப்பு நடவடிக்கை குழுவினரால் பிடித்து வைக்கப்பட்டிருந்தார். குற்றப்பத்திரிகை பதிவு செய்யப்பட்ட பிறகு அவர் விடுவிக்கப்பட்டார். (இந்த வழக்கின் விபரங்கள் அனைத்தும் வெளி வரும் போதுதான் புதிரின் இந்த பகுதி என்னவென்று புரிய வரும்).
புலன் விசாரணை அதிகாரியான காவல் துறை உதவி ஆணையர் ரஜ்பீர் சிங், டிசம்பர் 20, 2011 அன்று சட்ட விரோதமான நடவடிக்கையாக ஒரு பத்திரிகையாளர் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தார். அவரால் ‘என்கவுண்டரில்’ கொல்லப்பட்ட ‘பயங்கரவாதிகளின்’ எண்ணிக்கையை போற்றும் விதமாக ‘தில்லியின் என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட்’ என்று செல்லமாக அழைக்கப்படுபவர் அவர். பத்திரிகையாளர்களின் முன்பு முகமது அப்சல் வாக்குமூலம் கொடுக்க வைக்கப்பட்டார். அப்சல் ஏற்கனவே காவல்துறையிடம் குற்றத்தை ஒத்துக் கொண்டதாக காவல் துறை துணை ஆணையர் அசோக் சாந்த் கூறினார். இதுவும் ஒரு பொய் என்று பின்னர் தெரிய வந்தது. காவல் துறையிடம் அப்சல் முறையாக வாக்குமூலம் அளித்தது அடுத்த நாள்தான் நடந்தது. (அதற்குப் பிறகும் அவர் சித்திரவதையின் அச்சுறுத்தலுடன் காவல் துறையின் பாதுகாப்பில் வைக்கப்பட்டிருந்தார். இதுவும் சட்டப்படி தவறான நடைமுறை). அவரது பத்திரிகையாளர் ‘வாக்குமூலத்தில்’ நாடாளுமன்ற தாக்குதல் வழக்கில் தன்னைத் தானே முழுக்க முழுக்க தொடர்பு படுத்திக் கொண்டார் அப்சல்.
இந்த ‘ஊடக வாக்குமூலத்தின்’ நடுவில் ஒரு மர்மமான நிகழ்ச்சி நடந்தது. நேரடியான ஒரு கேள்விக்கு விடையாக, ஜீலானிக்கும் நாடாளுமன்ற தாக்குதலுக்கும் எந்த தொடர்பும் இல்லை, அவர் முற்றிலும் நிரபராதி என்று அப்சல் தெளிவாகச் சொன்னார். இந்த இடத்தில் உதவி ஆணையர் ரஜ்பீர் சிங் குரலை உயர்த்தி அவரைக் கடிந்து மவுனமாக்கி விட்டு, அப்சலின் வாக்குமூலத்தில் இந்தப் பகுதியை வெளியிடக் கூடாது என்று பத்திரிகையாளர்களைக் கேட்டுக் கொண்டார். அதற்கு அடி பணிந்தார்கள் பத்திரிகையாளர்கள்! இந்த நிகழ்ச்சி மூன்று மாதங்களுக்குப் பிறகுதான் வெளியில் வந்தது.ஆஜ் தக் தொலைக்காட்சி இந்த வாக்குமூலத்தை ‘ஹம்லே கே சவ் தின்’ (தாக்குதலின் நூறு நாட்கள்) என்ற நிகழ்ச்சியில் மறு ஒளிபரப்பினார்கள். இந்த பகுதி எப்படியோ தப்பி வெளி வந்து விட்டிருந்தது. இதற்கிடையில் சட்டமோ, புலன் விசாரணை நடைமுறையோ தெரிந்திராத பொது மக்களைப் பொறுத்த வரை அப்சலின் வெளிப்படையான வாக்குமூலம் அவரது குற்றத்தை உறுதி செய்திருந்தது. ‘சமூகத்தின் கூட்டு மனசாட்சியின் தீர்ப்பு’ என்னவாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இருக்க வேண்டியதில்லை.
அப்சலின் வழக்கறிஞர் ஒரு முறை கூட சிறைக்குப் போய் அவரது கட்சிக்காரரின் கருத்துக்களை கேட்டுக் கொள்ளவில்லை. அப்சலுக்கு ஆதரவாக ஒரு சாட்சியத்தைக் கூட அவர் அழைக்கவில்லை. அரசுத் தரப்பு சாட்சிகளை குறுக்கு விசாரணை செய்யவே இல்லை.
‘ஊடக’ வாக்குமூலத்துக்கு அடுத்த நாள், அப்சலிடமிருந்து ‘அதிகாரபூர்வ’ வாக்குமூலம் கறக்கப்பட்டது. கச்சிதமாக வடிவமைக்கப்பட்ட, உயர் தர ஆங்கிலத்தில் சரளமாக போகும் இந்த வாக்குமூலம் துணை ஆணையர் அசோக் சாந்திடம் சொல்லப்பட்டது. துணை ஆணையர் சொன்னது படி ‘அவர் சொல்லிக் கொண்டே போனார், நான் எழுதிக் கொண்டே இருந்தேன்’. இந்த வாக்குமூலம் சீலிடப்பட்ட உறையில் நீதிபதியிடம் கொடுக்கப்பட்டது. இந்த வாக்குமூலத்தில், அரசுத் தரப்பின் அடிப்படையாக ஆகி விட்டிருந்த அப்சல் ஒரு பிரமாதமான திரைக்கதையை அளிக்கிறார். காசி பாபாவையும் மவுலானா மசூத் அசாரையும் தாரிக் என்பவரையும், இறந்து போன 5 பயங்கரவாதிகளையும், அவர்களது ஆயுதங்கள், கருவிகள், வெடிமருந்துகள், உள்துறை அமைச்சக அட்டைகள், மடிக்கணிகள், போலி அடையாள அட்டைகள் போன்றவற்றையும் இந்தக் கதை திறமையுடன் இணைக்கிறது. எந்த இடத்திலிருந்து எத்தனை கிலோ வெடிமருந்து வாங்கினார், வெடிகுண்டு செய்வதற்காக அவை எந்த விகிதத்தில் கலக்கப்பட்டன, எத்தனை தடவை அவரது மொபைலில் அழைப்புகள் வந்தன என்ற கணக்குகளை துல்லியமாக சொல்கிறார் அப்சல். (இதற்குள், முற்றிலும் மனம் மாறி ஜீலானியையும் சதியில் முழுமையாக சேர்த்துக் கொள்கிறார் அப்சல்).
‘வாக்குமூலத்தின்’ ஒவ்வொரு குறிப்பும் காவல்துறை ஏற்கனவே திரட்டியிருந்த சாட்சியங்களுடன் கச்சிதமாக பொருந்தி வந்தன. அப்சலின் வாக்குமூல அறிக்கை, காவல்துறை ஏற்கனவே பத்திரிகைகளுக்கு பல நாட்களுக்கு முன்பே தெரிவித்திருந்த தகவல்களுடன் கச்சிதமாக பொருந்தின. சிந்தரெல்லாவின் பாதம் கண்ணாடி செருப்பில் பொருந்தியது போல. (இது ஒரு திரைப்படமாக இருந்தால், தனது தேவைக்கு ஏற்ப காட்சிகளை அமைத்துக் கொண்ட ஒரு திரைக்கதை என்று சொல்லலாம். பார்க்கப்போனால், அது ஒரு திரைப்படமாக எடுக்கப்பட்டது என்று இப்போது நமக்குத் தெரியும். ஜீ டிவி அப்சலுக்கு ராயல்டி தொகை கொடுக்க வேண்டியிருக்கிறது).
கடைசியில், உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் இரண்டுமே நடைமுறை விதிமீறல்களை சுட்டிக் காட்டி அப்சலின் வாக்குமூலத்தை தள்ளுபடி செய்தார்கள். ஆனால், அப்சலின் ஒப்புதல் வாக்குமூலம் இன்னமும் எப்படியோ, ஒரு ஆவியாக, அரசு தரப்பின் முக்கிய அடிப்படையாக வாழ்ந்து கொண்டிருக்கிறது. சட்டப்படியும், நடைமுறை அடிப்படையிலும் தள்ளுபடி செய்யப்படுவதற்கு முன்பு அந்த வாக்குமூலம் ஒரு கூடுதல் சட்ட நடவடிக்கைக்குப் பயன்படுத்தப்பட்டது. 2001, டிசம்பர் 21 அன்று இந்திய அரசாங்கம் பாகிஸ்தான் மீது போர் நடவடிக்கைகளை ஆரம்பித்தது. பாகிஸ்தானின் பங்களிப்பு குறித்த ‘மறுக்க முடியாத ஆதாரம்’ இருப்பதாக சொன்னது. பாகிஸ்தானின் பங்களிப்பு பற்றி அரசாங்கத்திடம் இருந்த ஒரே ஆதாரம் அப்சலின் வாக்குமூலம். அப்சலின் வாக்குமூலமும் ஸ்டிக்கர் அறிக்கையும்! சிந்தித்து பாருங்கள். சித்திரவதையின் மூலம் பெறப்பட்ட இந்த சட்ட விரோத வாக்குமூலத்தின் அடிப்படையில் லட்சக்கணக்கான படை வீரர்கள் பாகிஸ்தானுடனான எல்லைக்கு அனுப்பப்பட்டனர். அரசாங்கத்துக்கு பெரும் செலவு ஏற்பட்ட இந்த நடவடிக்கையின் மூலம் துணைக்கண்டம் அணுஆயுத நெருக்கடிக்கு உள்ளாக்கப்பட்டு முழு உலகமும் பணயக் கைதியாக வைக்கப்பட்டது.
கிசுகிசுக்கப்படும் ஒரு பெரிய கேள்வி: கொஞ்சம் மாத்தி இருக்குமோ? வாக்குமூலம் போரை ஏற்படுத்தியதா, போர் ஏற்படுத்த வேண்டிய தேவையிலிருந்து வாக்குமூலம் பிறந்ததா?
அப்சலின் வாக்குமூலம் மேல்மட்ட நீதி மன்றங்களால் தள்ளுபடி செய்யப்பட்டு விட்ட பிறகு, ஜெய்ஷ் – எ – முகமது, லஷ்கர் – எ – தொய்பா பற்றிய எல்லா பேச்சும் நின்று போனது. பாகிஸ்தானுடனான ஒரே இணைப்பு, இறந்து விட்ட தற்கொலைப்படையினரின் அடையாளம் மட்டுமே. இன்னமும் காவல்துறையின் பாதுகாப்பில் இருந்த முகமது அப்சல் அவர்களை முகமது, ரானா, ராஜா, ஹம்சா, ஹைதர் என்று அடையாளம் சொன்னார். உள்துறை அமைச்சர் ‘அவர்கள் பாகிஸ்தானிகள் போலத் தோன்றுவதாக’ சொல்ல, காவல்துறை அவர்கள் பாகிஸ்தானிகள் என்று சொல்ல, விசாரணை நீதிமன்ற நீதிபதியும் அவர்கள் பாகிஸ்தானிகள் என்று சொன்னார். அத்தோடு அந்த விவகாரம் முடிந்து போனது. அவர்களது பெயர்கள் ஹேப்பி, பௌன்சி, லக்கி, ஜாலி மற்றும் கிடிங்காமனி என்றும் அவர்கள் ஸ்காண்டிநேவியாவைச் சேர்ந்தவர்கள் என்றும் சொல்லப்பட்டிருந்தாலும் நாம் அதை ஏற்றுக் கொள்ள வேண்டியதுதான். அவர்கள் யார் எங்கிருந்து வந்தார்கள் என்று நமக்கு இன்னும் தெரியாது. யாருக்காவது அதைப் பற்றி விசாரிக்க அக்கறை இருக்கிறதா? இருப்பது போலத் தெரியவில்லை. ‘இறந்து போனவர்களின் அடையாளம் இப்படியாக நிரூபிக்கப்பட்டுள்ளது. இல்லாவிட்டாலும், ஒன்றும் மாறி விடப் போவதில்லைதான். குற்றம் சாட்டப்பட்டவருக்கு சொல்லப்பட்ட 5 பேருடன் இருக்கும் தொடர்புதான் முக்கியம், அவர்களது பெயர்கள் என்னவாயிருந்தால் என்ன?’ என்று உயர்நீதிமன்றம் சொன்னது.
குற்றம் சாட்டப்பட்டவரின் வாக்குமூலத்தில் (இது நீதிமன்றத்தில் சொல்லப்பட்டது, காவல் துறை விசாரணையில் இல்லை) அப்சல், ‘நான்எந்த பயங்கரவாதியையும் அடையாளப்படுத்தவில்லை.பயங்கரவாதிகளின் பெயர்களைச் சொல்லி அவர்களை அடையாளப்படுத்தும்படி காவல்துறை என்னை கட்டாயப்படுத்தியது‘ என்று சொல்கிறார். ஆனால், அதற்குள் அவருக்குக் காலம் கடந்து விட்டது. வழக்கு விசாரணையின் முதல் நாள் விசாரணை நீதிமன்றத்தினால் நியமிக்கப்பட்ட வழக்கறிஞர், முறையான ஆதாரம் இல்லாமலேயே அப்சல் சொன்ன அடையாளத்தையும் பிரேத பரிசோதனை அறிக்கைகளையும் சாட்சியங்களாக ஏற்றுக் கொள்வதாக ஒப்புக் கொண்டார்! புரிந்து கொள்ள முடியாத இந்த நடவடிக்கை அப்சலுக்கு மோசமான விளைவுகளை ஏற்படுத்தியது. உச்சநீதிமன்ற தீர்ப்பிலிருந்து: ‘குற்றம் சாட்டப்பட்ட அப்சலுக்கு எதிரான முதன்மை சூழ்நிலை அவருக்கு கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் யார் யார் என்று தெரிந்திருந்ததே ஆகும். கொல்லப்பட்ட பயங்கரவாதிகளின் உடல்களை அவர் அடையாளம் காட்டினார். இதைப் பொறுத்த வரை சாட்சியம் உடைக்கப்படாமல் இருக்கிறது’.
கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் வெளிநாட்டு போராளிகளாக இருப்பதற்கு சாத்தியம் இருக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை. அப்படி இல்லாமல் இருக்கவும் அதே அளவு சாத்தியம் இருக்கிறது. மக்களை கொன்ற பிறகு அவர்களை ‘வெளிநாட்டு தீவிரவாதிகள்’ என்று பொய்யாக அடையாளம் காட்டுவதோ, அல்லது இறந்து போனவர்களை ‘வெளிநாட்டு பயங்கரவாதிகள்’ என்று அடையாளம் காட்டுவதோ, அல்லது வாழ்பவர்களை பயங்கரவாதிகள் என்று அடையாளம் சொல்வதோ தில்லியின் தெருக்களில் அல்லது காஷ்மீரில் காவல் துறைக்கும் பாதுகாப்புப் படைகளுக்கும் பழக்கமில்லாத ஒன்றில்லை.
காஷ்மீரில் பரவலாக பலமுறை பதிவு செய்யப்பட்ட நிகழ்வுகளின் ஒன்றான சித்திசிங்புரா படுகொலைகளுக்குப் பிறகான கொலைகள். அது உலக அளவிலான பரபரப்பான விவகாரமாக உருவெடுத்தது. அமெரிக்க குடியரசுத் தலைவர் பில் கிளின்டன் புது தில்லிக்கு வருவதற்கு சற்று முன்பு ஏப்ரல் 20, 2000 இரவில் சித்திசிங்புரா கிராமத்தில் 35 சீக்கியர்கள் இந்திய ராணுவ சீருடை அணிந்த ‘அடையாளம் தெரியாத துப்பாக்கி ஏந்தியவர்களால்’ கொல்லப்பட்டனர். (இந்திய பாதுகாப்புப் படைகள்தான் படுகொலைக்குக் காரணம் என்று காஷ்மீரில் பலர் சந்தேகப்பட்டார்கள்). ஐந்து நாட்களுக்குப் பிறகு பத்ரிபால் என்ற கிராமத்துக்கு வெளியில் எஸ்ஓஜியும் ராணுவத்தின் கிளர்ச்சி எதிர்ப்புப் பிரிவான 7வது ராஷ்டிரிய ரைபிள்சும் கூட்டு நடவடிக்கையில் 5 பேரை கொன்றார்கள். அந்த ஆட்கள் பாகிஸ்தானைச் சேர்ந்த வெளிநாட்டுத் தீவிரவாதிகள் என்றும் அவர்கள்தான் சித்திசிங்புராவில் சீக்கியர்களைக் கொன்றவர்கள் என்றும் அடுத்த நாள் காலையில் அறிவித்தார்கள். உடல்கள் எரிக்கப்பட்டும், சிதைக்கப்பட்டும் இருந்தன. (எரிக்கப்படாத) அவர்களது ராணுவ சீருடைகளுக்கு உள்ளே, சாதாரண சிவிலியன் உடைகள் இருந்தன. கடைசியில் அவர்கள் அனைவரும் அனந்த்நாக் மாவட்டத்தைச் சேர்ந்த பொது மக்கள் என்றும், சுற்றி வளைக்கப்பட்டு இரக்கமில்லாமல் கொல்லப்பட்டவர்கள் என்றும் தெரிய வந்தது
ஏப்ரல் 20, 2004 அன்று, லோலாப் பள்ளத்தாக்கில் நிறுத்தப்பட்டிருந்த 18வது ராஷ்டிரீய ரைபிள்ஸ் படையினர், ஒரு கடும் சண்டையில் நான்கு வெளிநாட்டு போராளிகளைக் கொன்றதாக தெரிவித்தார்கள். அந்த நான்கு பேரும் ஜம்முவிலிருந்து வேலைக்கு அமர்த்தப்பட்டு குப்வாராவுக்கு ராணுவத்தால் அழைத்துச் செல்லப்பட்ட சாதாரண தொழிலாளர்கள் என்று பின்னர் தெரிய வந்தது. அனாமேதய கடிதம் ஒன்று தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு தகவல் தெரிவிக்க, அவர்கள் குப்வாராவுக்குப் போய் உடல்களை வெளியில் எடுக்க ஏற்பாடு செய்தார்கள்.
நவம்பர் 9, 2004 அன்று ராணுவம் ஜம்முவின் நக்ரோதாவில் 47 சரணடைந்த ‘போராளிகளை’ பத்திரிகையாளர்களுக்கு முன் காட்டியது. XVI படை அணியின் ஜெனரல் கமாண்டிங் ஆபிசரும் ஜம்மு காஷ்மீர் டைரக்டர் ஜெனரல் ஆப் போலீசும் உடன் இருந்தனர். அவர்களில் 27 பேர் வேலையில்லாத ஆட்கள் என்றும் போலி பெயர்களும் போலி அடையாளங்களும் கொடுக்கப்பட்டு, இந்த நாடகத்துக்கு ஒத்துழைத்தால் அரசு வேலை கிடைக்கும் என்று ஆசை காட்டப்பட்டவர்கள் என்றும் ஜம்மு காஷ்மீர் காவல் துறை பின்னர் கண்டறிந்தது.
வேறு சாட்சியங்கள் இல்லாத போது காவல்துறை சொல்வதை நம்ப முடியாது என்பதற்கு இவை எல்லாம் சில உதாரணங்கள் மட்டுமே.
விரைவு நீதிமன்றத்தில் விசாரணை மே 2002ல் ஆரம்பித்தது. வழக்கு விசாரணை நடைபெற்ற சூழலை நாம் மறந்து விடக் கூடாது. 9/11 தாக்குதல்கள் பற்றிய பரபரப்பு இன்னமும் ஓய்ந்திருக்கவில்லை. அமெரிக்கா ஆப்கானிஸ்தானில் தனது வெற்றியைக் கொண்டாடிக் கொண்டிருந்தது. குஜராத்தில் மத வன்முறை தலைவிரித்து ஆடிக் கொண்டிருந்தது. சில மாதங்களுக்கு முன்பு, சபர்மதி விரைவு ரயிலின் S-6 பெட்டி கொளுத்தப்பட்டு, 58 இந்து பயணிகள் உயிரோடு எரிக்கப்பட்டார்கள். ‘பழிவாங்கும் விதமாக’ திட்டமிடப்பட்ட இனப் படுகொலையில் 2000க்கும் மேற்பட்ட முஸ்லீம்கள் வெளிப்படையாக கொலை செய்யப்பட்டார்கள், 1,50,000க்கும் மேற்பட்டவர்கள் தங்கள் வீடுகளிலிருந்து விரட்டப்பட்டார்கள்.
எவை எல்லாம் அப்சலுக்கு எதிராக விரோதமாக போக முடியுமோ அவை எல்லாம் போயிருந்தன. உயர் பாதுகாப்பு சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவருக்கு வெளி உலகத்துடன் எந்த தொடர்பும் இருக்கவில்லை, தொழில்முறை வழக்கறிஞர் ஒருவரை நியமித்துக் கொள்ள பணமும் இருக்கவில்லை. வழக்கு விசாரணை மூன்றாவது வாரத்தை நுழைந்த போது நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட வழக்கறிஞர் தன்னை வழக்கிலிருந்து விடுவிக்கக் கோரினார். அவரை எஸ்ஏஆர் ஜீலானியின் வழக்கில் எதிர்த்தரப்பு வழக்கறிஞராக பணி புரிய அமர்த்தியிருந்தார்கள். அனுபவம் இல்லாத அவரது ஜூனியர் வழக்கறிஞரை அப்சலுக்கு வாதாட நீதிமன்றம் நியமித்தது. அவர் ஒரு முறை கூட தனது கட்சிக்காரரை சந்திக்க சிறைச்சாலைக்குப் போகவில்லை. அப்சலின் சார்பில் ஒரு சாட்சியத்தைக் கூட அவர் அழைக்கவில்லை. அரசுத் தரப்பு சாட்சியங்களை குறுக்கு விசாரணை செய்ததாகவே சொல்ல முடியாது.
அவர் நியமிக்கப்பட்டு ஐந்து நாட்களுக்குப் பிறகு, ஜூலை 8 அன்று, அப்சல் இன்னொரு வழக்கறிஞரை நியமிக்கும்படி நீதிமன்றத்தைக் கேட்டுக் கொண்டார். அவருக்காக நியமிக்க விரும்பிய ஒரு சில வழக்கறிஞர்களின் பட்டியலையும் கொடுத்தார். அனைவருமே மறுத்து விட்டனர். (ஊடகங்களில் நடந்து கொண்டிருந்த பிரச்சாரத் தாக்குதலைப் பார்க்கும் போது அதில் ஆச்சரியம் எதுவும் இல்லைதான். வழக்கு விசாரணையில் பிறிதொரு கட்டத்தில் மூத்த வழக்கறிஞர் ராம்ஜெத்மலானி, ஜீலானியின் சார்பில் வாதிட ஒப்புக் கொண்ட போது சிவ்சேனா கும்பல் அவரது பம்பாய் அலுவலகத்தை சூறையாடியது). இதைப் பற்றி எதுவும் செய்ய முடியாத தனது இயலாமையை தெரிவித்த நீதிபதி, சாட்சியங்களை குறுக்கு விசாரணை செய்யும் உரிமையை அப்சலுக்கு அளித்தார்.
ஒரு சாதாரண மனிதன், கிரிமினல் வழக்கு விசாரணையில் சாட்சியங்களை குறுக்கு விசாரணை செய்வார் என்று நீதிபதி எதிர்பார்த்தது ஆச்சரியத்துக்குரியது. குற்றச் சட்டங்கள் பற்றிய நுணுக்கமான அறிவு இல்லாத யாருக்கும் இது சாத்தியமில்லாத பணியாகவே இருக்கும். புதிதாக இயற்றப்பட்டுள்ள பொடா முதலிய சட்டங்கள், சாட்சியங்கள் சட்டம், டெலிகிராப் சட்டம் போன்றவற்றில் செய்யப்பட்ட மாற்றங்கள் இவை அனைத்தையும் புரிந்திருக்க வேண்டும். அனுபவம் நிறைந்த வழக்கறிஞர்கள் கூட கடுமையாக உழைத்துதான் தமது அறிவை மேம்படுத்திக் கொள்ள வேண்டியிருக்கிறது.
அப்சலுக்கு எதிரான வழக்கு கிட்டத்தட்ட 80 அரசுத் தரப்பு சாட்சியங்களைக் கொண்டு உருவாக்கப்பட்டிருந்தது. வீட்டு உரிமையாளர்கள், கடைக்காரர்கள், செல்போன் நிறுவன டெக்னீஷியன்கள் மற்றும் காவல் துறையினரும் இவற்றில் அடங்குவர்.
வழக்கின் சட்ட அடிப்படையை உருவாக்கும் முக்கியமான கட்டமாக இது அமைந்தது. இந்தக் கட்டத்தில் சாட்சியங்களை திரட்டி பதிவு செய்வது, எதிர்த் தரப்பு சாட்சியங்களை அழைப்பது, அரசுத் தரப்பு சாட்சியங்களை குறுக்கு விசாரணை செய்வது என்று கவனமான கடுமையான உழைப்பு தேவைப்பட்டது. விசாரணை நீதிமன்றத்தின் தீர்ப்பு குற்றம் சாட்டப்பட்டவருக்கு எதிராக போனாலும் (பொதுவாக விசாரணை நீதிமன்றங்கள் மிகவும் கடுமையாக தீர்ப்பு சொல்பவை), பதிவு செய்யப்பட்ட சாட்சியங்களை உயர் நீதிமன்றங்களில் வழக்கறிஞர்கள் பயன்படுத்தலாம். இவ்வளவு முக்கியமான கால கட்டத்தில் அப்சலுக்கு பாதுகாப்பு இல்லாமலேயே போனது. இந்தக் கட்டத்தில்தான் அவர் தரப்பு வழக்கு உடைந்து தூக்குக் கயிறு அவரது கழுத்தை இறுக்க ஆரம்பித்தது.
எதிர்த் தரப்பில் இவ்வளவு குறைபாடுகள் இருந்தும், வழக்கு விசாரணையின் போதே, சிறப்பு புலனாய்வு பிரிவின் வண்டவாளங்கள் ஒவ்வொன்றாக வெளிப்பட்டுக் கொண்டிருந்தன. புலன் விசாரணையின் முதல் நாளிலிருந்தே பொய்கள், புரட்டுகள், போலி ஆவணங்கள், நடைமுறை பிறழ்வுகள் ஆரம்பித்து விட்டது மிகத் தெளிவாக தெரிய ஆரம்பித்தது. உயர் / உச்ச நீதிமன்ற தீர்ப்புகள் இவற்றைச் சுட்டிக் காட்டினாலும், காவல் துறையை கண்டிக்கும் விதமான சொற்களை பயன்படுத்தியதோடு நின்று விட்டார்கள். ஓரிரு இடங்களில் இது ஒரு ‘கவலை தரும் போக்கு’ என்று குறிப்பிட்டிருந்தார்கள். நீதிமன்றங்களின் இந்தப் போக்கே கவலை தரக்கூடியதுதான். வழக்கு விசாரணையின் எந்தக் கட்டத்திலும் காவல் துறை கண்டிக்கப்படவோ, தண்டிக்கப்படவோ இல்லை. சிறப்புப் புலனாய்வுக் குழு ஒவ்வொரு அடியிலும் சட்ட நடைமுறைகளை அலட்சியமாக புறக்கணித்திருந்தது. விசாரணை நடத்தப்பட்ட திமிரான போக்கு, என்ன செய்தாலும் ‘வெளியில் தெரிந்து விடப் போவதில்லை, அப்படித் தெரிந்தாலும் எதுவும் ஆகி விடாது’ என்ற கவலை தரும் நம்பிக்கையை காட்டியது. அந்த நம்பிக்கை வீண் போயிருக்கவில்லை.
புலன் விசாரணையின் ஒவ்வொரு பகுதியிலும் தடுமாற்றம் இருந்தது.
கைது மற்றும் கைப்பற்றல்களின் நேரத்தையும் இடத்தையும்எடுத்துக் கொள்வோம்:
ஜீலானி கைது செய்யப்பட்ட பிறகு கொடுத்த தகவல்களின் அடிப்படையில் அப்சலும் சவுகத்தும் ஸ்ரீநகரில் கைது செய்யப்பட்டார்கள் என்று தில்லி காவல் துறை சொன்னது. சவுகத்தையும் அப்சலையும் தேடும்படி தகவல் ஸ்ரீநகர் காவல்துறைக்கு அனுப்பப்பட்டது டிசம்பர் 15 காலை 5.45மணிக்கு என்று நீதிமன்ற பதிவுகள் தெரிவிக்கின்றன.
ஆனால், தில்லி காவல்துறையின் பதிவுகளின்படி ஜீலானி கைது செய்யப்பட்டது டிசம்பர் 15 காலை 10 மணிக்குத்தான், அதாவது அப்சலையும் சவுகத்தையும் ஸ்ரீநகரில் தேடும் முயற்சியை அவர்கள் துவங்கி நான்கு மணி நேரத்துக்குப் பிறகு. இந்த முரண்பாட்டை அவர்களால் விளக்க முடியவில்லை. காவல் துறையின் அறிக்கையில் ‘வெளிப்படையான முரண்பாடு’ இருப்பதாகவும் அது உண்மையாக இருக்க முடியாது என்றும் உயர் நீதி மன்ற தீர்ப்பு பதிவு செய்கிறது. அது ஒரு ‘கவலை தரும் போக்காக’ கடந்து செல்லப்படுகிறது. தில்லி காவல்துறை பொய் சொல்ல வேண்டிய அவசியம் என்ன என்ற கேள்வி கேட்கப்படாமலேயே போகிறது.

காவல் துறை ஒருவரை கைது செய்யும் போது, அந்த கைதுக்கு பொது பார்வையாளர் ஒருவர் இருக்க வேண்டும் என்று சட்டமுறைகள் விதிக்கின்றன. அந்தப் பார்வையாளர் கைது ஆவணத்திலும் கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து பறி முதல் செய்யப்பட்ட பொருட்கள், பணம், ஆவணங்கள் போன்றவற்றை குறித்த கைப்பற்றல் ஆவணத்திலும் கையெழுத்திட்டிருக்க வேண்டும். அப்சலையும் சவுகத்தையும் டிசம்பர் 15 காலை 11 மணிக்கு ஸ்ரீநகரில் சேர்ந்து கைது செய்ததாக காவல் துறை சொல்கிறது. இந்த இரண்டு பேரும் தப்பி ஓடிக் கொண்டிருந்த டிரக்கை ‘கைப்பற்றியதாக’ சொல்கிறார்கள். (அந்த டிரக் சவுகத்தின் மனைவியின் பெயரில் பதிவு செய்யப்பட்டிருந்தது). ஒரு நோக்கியா மொபைல் போன், ஒரு மடிக்கணினி, 10 லட்சம் ரூபாய் ஆகியவை அப்சலிடமிருந்து கைப்பற்றப்பட்டன என்றும் அவர்கள் சொல்கிறார்கள். அப்சல், அவர் ஸ்ரீநகரின் பேருந்து நிலையம் ஒன்றில்தான் கைது செய்யப்பட்டதாகவும் எந்த மடிக்கணினி அல்லது மொபைல் போன் அல்லது பணம் அவரிடமிருந்து ‘கைப்பற்றப்படவில்லை’ என்றும் தனது குற்றம் சாட்டப்பட்டவரின் அறிக்கையில் சொல்லுகிறார்.
புரட்டல்தனமாக, அப்சல் மற்றும் சவுகத் இருவரின் கைது ஆவணங்களும் தில்லியில் கையொப்பமிடப்பட்டன. கையொப்பமிட்டவர், அந்த நேரத்தில் சட்ட விரோதமாக லோதி ரோட் காவல் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த ஜீலானியின் தம்பி பிஸ்மில்லா. போன், மடிக்கணினி மற்றும் 10 லட்ச ரூபாய் பறிமுதலுக்கான கைப்பற்றல் ஆவணத்தில் கையொப்பமிட்டிருந்த இருவரும் ஜம்மு கஷ்மீர் காவல் துறையைச் சேர்ந்தவர்கள். அவர்களில் ஒருவரான தலைமை காவலர் முகமது அக்பர் (அரசுத் தரப்பு சாட்சி 62), அப்சலை முன்பின் தெரியாதவரோ, அந்த பக்கமாக போயக் கொண்டிருந்த ஏதோ ஒரு கிழ போலீஸ்காரரோ இல்லை என்பதை பின்னர் பார்க்கப் போகிறோம். ஜம்மு காஷ்மீர் காவல்துறையின் ஒப்புதல்படி பார்த்தாலும் அவர்கள் முதலில் அப்சலையும் சவுகத்தையும் பாரிம்புரா பழச் சந்தையில்தான் பார்த்தார்கள். ஏனோ தெரியவில்லை, அவர்களை அங்கேயே கைது செய்யவில்லை. பொது மக்கள் யாரும் பார்வையாளர்களாக இல்லாத ஒதுக்குப் புறமான இடத்துக்கு அவர்களைப் பின் தொடர்ந்தார்கள்.
அரசுத் தரப்பு வழக்கில் இன்னொரு முக்கியமான முரண்பாடு இங்கு இருக்கிறது. ‘குற்றம் சாட்டப்பட்டவர்கள் கைது செய்யப்பட்ட நேரம் தெளிவாக பொய்த்துப் போகிறது’ என்று உயர்நீதி மன்றம் தனது தீர்ப்பில் இதைப்பற்றிக் குறிப்பிடுகிறது. அதிர்ச்சியூட்டும் விதமாக இந்த சர்ச்சைக்குரிய கைது நிகழ்வின் போது அதே இடத்தில்தான் அப்சலுக்கு எதிராக பயன்படுத்தப்பட்ட மிக முக்கிய சாட்சியங்களான மொபைல் போன் மற்றும் மடிக்கணினியை கைப்பற்றியதாக காவல் துறை சொன்னது. கைது செய்யப்பட்ட நேரம் மற்றும் இடம், பறிமுதல் செய்யப்பட்டதாகச் சொல்லப்படும் மடிக்கணினி மற்றும் 10 லட்ச ரூபாய் இவற்றைப் பொறுத்த வரை காவல் துறையின் வார்த்தையைத்தான் நம்ப வேண்டியிருக்கிறது. அதற்கு மறுப்பாக இருப்பது ‘பயங்கரவாதியின்’ வார்த்தை மட்டுமே.
கைப்பற்றுதல்கள் பற்றி தொடர்ச்சி:
போலி உள்துறை அமைச்சக பாஸ்கள், மற்றும் போலி அடையாள அட்டைகளை உருவாக்கிய கோப்புகள் பறிக்கப்பட்ட மடிக்கணினியில் இருந்ததாக காவல் துறை சொன்னது. வேறு எந்த உருப்படியான தகவலும் அதில் இல்லை. காசி பாபாவிடம் திருப்பித் தருவதற்காக அப்சல் அதை ஸ்ரீநகருக்கு எடுத்துச் சென்று கொண்டிருந்தார் என்று காவல் துறை சொன்னது. கணினியின் ஹார்ட் டிஸ்க் ஜனவரி 16, 2002 அன்று சீல் செய்யப்பட்டதாக விசாரணை அதிகாரி உதவி ஆணையர் ரஜ்பீர் சிங் சொன்னார். (அதாவது பறிமுதல் செய்யப்பட்ட ஒரு மாதத்துக்குப் பிறகு). அந்த தேதிக்குப் பிறகும் அந்தக் கணினி பயன்படுத்தப்பட்டதற்கான அடையாளங்கள் கணினியில் இருந்தன.
நீதிமன்றம் இதை கருத்தில் எடுத்துக் கொண்டாலும் கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை. (கொஞ்சம் அலசி பார்க்கும் போது, கணினியில் குற்றத்துக்கு ஆதாரங்களாக போலி பாஸ்கள் மற்றும் போலி அடையாள அட்டைகளை செய்ய பயன்படுத்திய கோப்புகள் மட்டும்தான் கண்டு பிடிக்கப்பட்டன என்பது கொஞ்சம் வினோதமாகத்தான் இருக்கிறது? கூடவே நாடாளுமன்ற கட்டிடத்தைக் காட்டும் ஜீ தொலைக்காட்சி படத் துணுக்கு ஒன்று. மற்ற சாட்சிய தகவல்கள் அழிக்கப்பட்டிருந்தால் இவை மட்டும் எப்படி விட்டு வைக்கப்பட்டன? ஒரு பயங்கரவாத அமைப்பின் தலைமை இயக்குனர் காசி பாபாவுக்கு இவ்வளவு அவசரமாக ஒரு மடிக்கணி ஏன் தேவைப்பட்டது?)
மொபைல் போன் அழைப்பு பதிவுகளை எடுத்துக் கொள்வோம்:
கொஞ்சம் அதிகம் முறைத்துப் பார்த்தாலே, சிறப்பு புலனாய்வு குழுவின் ‘பக்கா சாட்சியங்கள்’ பல பல்லிளிக்க ஆரம்பித்து விடுகின்றன. கண்டுபிடிக்கப்பட்ட மொபைல் போன்கள், சிம் அட்டைகள், கணினியில் கிடைத்த அழைப்பு பதிவுகள், செல்பேசி நிறுவன அதிகாரிகள் மற்றும் போன்களையும் சிம் அட்டைகளையும் அப்சலுக்கும் கூட்டாளிகளுக்கும் விற்ற கடைக்காரர்களின் வாக்குமூலங்கள் இவைதான் அரசுத் தரப்பு வழக்கின் முதுகெலும்பாக இருக்கின்றன. சவுகத், அப்சல், ஜீலானி மற்றும் முகமது (கொல்லப்பட்ட போராளிகளில் ஒருவர்) தாக்குதல் நடந்த நேரத்துக்கு சற்று முன்பு வரை ஒருவருடன் ஒருவர் தொடர்பு வைத்திருந்தார்கள் என்பதைக் காட்டுவதற்காக சமர்ப்பிக்கப்பட்ட பதிவுகள் அனைத்தும் உறுதி செய்யப்படாத கணினி பிரின்ட்அவுட்டுகள், முதன்மை ஆவணங்களின் நகல்கள் கூட இல்லை. அவை உரைக் கோப்புகளாக சேமிக்கப்பட்டிருந்த பில்லிங் கணினியிலிருந்து எடுக்கப்பட்டவை, எந்த நேரத்திலும் மாற்றப்பட்டிருக்கக் கூடியவை. எடுத்துக்காட்டாக, அழைப்புப் பதிவுகளின் படி, ஒரே எண்ணிலிருந்து இரண்டு அழைப்புகள் ஒரே நேரத்தில் செய்யப்பட்டிருந்தன. அந்த இரண்டு அழைப்புகளும் ஒரே நேரத்தில் ஒரே சிம் அட்டையிலிருந்து ஆனால், வெவ்வேறு ஐஎம்ஈஐ எண்கள் கொண்ட கருவிகளிலிருந்து வந்திருந்தன. ஒன்று போலி சிம் அட்டை தயாரிக்கப்பட்டது அல்லது அழைப்பு பதிவுகள் திருத்தப்பட்டுள்ளன என்பதை இது காட்டுகிறது.
சிம் அட்டையை: எடுத்துக் கொள்வோம.
தான் சொல்லும் கதைக்கு ஆதாரமாக அரசுத் தரப்பு வெகுவாக நம்பியிருந்தது 9811489429 என்ற மொபைல் எண்ணைத்தான். அது அப்சலின் எண் என்று போலீஸ் சொல்கிறது. அப்சலை முகமதுவிடமும், அப்சலை சவுகத்திடமும், சவுகத்தை ஜீலானியுடனும் அந்த எண்தான் இணைத்தது. கொல்லப்பட்ட பயங்கரவாதிகளிடம் கண்டறியப்பட்ட அடையாள அட்டையின் பின்பக்கம் இந்த எண் எழுதப்பட்டிருந்ததாக போலீஸ் சொல்கிறது. ரொம்ப வசதிதான். பூனைக்குட்டி தொலைந்து விட்டது! 9811489429 என்ற எண்ணில் அம்மாவை அழைக்கவும்!. (குற்றம் நடந்த இடத்தில் திரட்டப்பட்ட ஆதாரங்களை சீல் செய்து வைக்க வேண்டும் என்பது வழக்கமான சட்ட நடைமுறை என்பது இங்கு சொல்ல வேண்டும். இந்த அடையாள அட்டைகள் சீல் செய்யப்படவே செய்யாமல் காவல்துறை வசம் இருந்தன. அவை எந்த நேரத்திலும் மாற்றப்பட்டிருக்கலாம்.)
9811489429 உண்மையிலேயே அப்சலின் எண்தான் என்பதற்கு போலீசிடம் இருந்த உண்மையான ஆதாரம் அப்சலின் வாக்குமூலம் மட்டும்தான், அது ஒரு ஆதாரமே இல்லை என்று நாம் ஏற்கனவே பார்த்தோம். சிம் அட்டை கண்டுபிடிக்கப்படவேவில்லை. தான் அப்சலுக்கு ஒரு மோட்டரோலா போனையும் சிம் அட்டையையும் டிசம்பர் 4, 2001 அன்று விற்றதாக சொல்ல கமல் கிஷோர் என்ற அரசுத் தரப்பு சாட்சியத்தை காவல் துறை கொண்டு வந்தது. இருந்தும், குறிப்பிட்ட சிம் அட்டை நவம்பர் 6ஆம் தேதியிலிருந்தே பயன்பாட்டில் இருந்ததாக அரசுத் தரப்பு ஆதாரமாக வைத்திருந்த அழைப்பு பதிவுகள் தெரிவிக்கின்றன, அதாவது அப்சல் அதை வாங்கியதற்கு ஒரு மாதத்துக்கு முன்பே பயன்பாட்டில் இருந்ததாம். அந்த் சாட்சி பொய் சொல்கிறார் அல்லது அழைப்பு பதிவுகள் பொய்யானவை. கமல் கிஷோர் அப்சலுக்கு சிம் அட்டை விற்றதாகத்தான் சொன்னார், இந்த குறிப்பிட்ட சிம் அட்டையை விற்றதாகச் சொல்லவில்லை என்று சொல்லி உயர் நீதிமன்றம் இதை பூசி மெழுகிறது. ‘சிம் அட்டை 4.12.2001க்கு முன்பே நிச்சயமாக விற்கப்பட்டிருக்க வேண்டும்’ என்று உச்ச நீதி மன்றம் பெருந்தன்மையுடன் சொல்கிறது. அது அத்தோடு விடப்பட வேண்டியதுதான்.
குற்றம் சாட்டப்பட்டவர்கள் அடையாளம் காட்டப்பட்டதை எடுத்துக்கொள்வோம்:
அப்சலுக்கு பல பொருட்களை விற்றதாக, பல கடைக்காரர்கள் அரசுத் தரப்பு சாட்சியங்களாக அடையாளம் காட்டினார்கள். அம்மோனியம் நைட்ரேட், அலுமினியம் பொடி, கந்தகம், ஒரு சுஜாதா மிக்சி, உலர் பழங்களின் பொதிகள் போன்றவற்றை விற்றார்களாம். வழக்கமான நெறிமுறைப்படி, இந்த கடைக்காரர்கள் மற்றவர்களின் மத்தியில் அப்சலை அடையாளம் காட்டும்படி ஏற்பாடு செய்திருக்க வேண்டும். அது அப்படி நடக்கவில்லை. மாறாக, காவல்துறையின் பாதுகாப்பில் இருந்த அப்சல் காவல்துறையினரை ‘அழைத்துச்’ செல்லப்பட்டு நாடாளுமன்ற தாக்குதல் வழக்கில் குற்றம் சாட்டப்படுபவர் என்று இந்தக் கடைக்காரர்களுக்கு அறிமுகம் செய்யப்பட்ட போது அடையாளம் காணப்பட்டார். (அந்த கடைகளுக்கு அவர் காவல்துறையினரை அழைத்துச் சென்றாரா, காவல் துறையினர் அவரை அழைத்துச் சென்றனரா என்று கேள்வி கேட்க நமக்கு உரிமை இருக்கிறதா? பார்க்கப் போனால், அவர் காவல்துறை பாதுகாப்பில் அவர்களின் சித்திரவதைக்கு ஆளாக்கப்படும் நிலைமையில் இருந்தார். அந்தச் சூழலில் அவரது வாக்குமூலம் சட்டப்படி ஏற்றுக் கொள்ள முடியாதது என்றால் இவற்றை எல்லாம் எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்?)
இந்த நிர்வாக நடைமுறை பிறளல்களை விவாதித்த போதிலும் அவற்றை சீரியசாக நீதிபதிகள் எடுத்துக் கொள்ளவில்லை. சாதாரண குடிமக்கள் ஒரு அப்பாவியை குற்றவாளியாகக் காட்டுவதற்கு சிறப்புக் காரணம் இருக்க முடியும் என்று நினைக்க முடியவில்லை என்று அவர்கள் சொல்கிறார்கள். இந்த வழக்கு பற்றி ஊடக பிரச்சார கூத்துக்களுக்கு உட்படுத்தப்பட்ட பொதுமக்களிடம் இந்த வாதம் செல்லுபடியாகும் என்று சொல்ல முடியுமா? சாதாரண கடைக்காரர்கள், குறிப்பாக மின்னணு பொருட்களை கறுப்புச் சந்தையில் விற்கும் கடைக்காரர்கள் தில்லி போலீஸ்காரர்களுக்கு அடிபணிந்துதான் இருக்க வேண்டும் என்ற உண்மையை கணக்கில் எடுத்துக் கொண்டாலும் இந்த வாதம் செல்லுபடியாகுமா?
இது வரை நான் எழுதிய முரண்பாடுகள் எதுவுமே ஏதோ சிறப்பான துப்பறியும் வேலை மூலம் நான் கண்டுபிடித்தவரை இல்லை. இவற்றில் பல, நிர்மலாங்சு முகர்ஜி எழுதிய ‘டிசம்பர் 13, மக்களாட்சியின் மீது பயங்கரவாதம்’ என்ற புத்தகத்திலும், ‘ஜனநாயக உரிமைகளுக்கான மக்கள் ஒன்றியம்’ அமைப்பினால் வெளியிடப்பட்ட (தவறுகளின் விசாரணை மற்றும் மட்டுப்படுத்தும் செயல்பாடு) இரண்டு அறிக்கைகளிலும் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. எல்லாவற்றிலும் முக்கியமாக விசாரணை நீதிமன்றம், உயர் நீதி மன்றம், மற்றும் உச்ச நீதிமன்றம் கொடுத்த மூன்று பருமனான தீர்ப்புகளில் இந்த விவரங்கள் கிடைக்கின்றன. எல்லோருக்கும் கிடைக்கும் இந்த ஆவணங்கள் எனது மேசையில் இருக்கின்றன. இவ்வளவு குழப்பமான உலகம் ஒன்று வெளிப்படுத்தப்பட காத்திருக்கும் போது நமது தொலைக்காட்சி அலைவரிசைகள் அரைகுறை அறிவாளிகளையும், தத்தளிக்கும் அரசியல்வாதிகளையும் வைத்து வெற்று விவாதங்களை நடத்திக் கொண்டிருப்பது ஏன்? ஒரு சில தனியாக செயல்படும் ஆர்வலர்களைத் தவிர்த்து பெரும்பாலான செய்தித் தாள்கள் ஏன் தூக்கில் இடப் போகும் பணியைச் செய்பவர் யார், அப்சலைதூக்கிலிடப் பயன்படுத்தப்படவுள்ள தூக்குக் கயிறின் நீளம் (60மீட்டர்), எடை (3.75 கிலோ) போன்ற குரூரமான தகவல்களிலேயே கவனம் செலுத்தி முதல் பக்க செய்திகளாக வெளியிடுகின்றன? (இந்தியன்எக்ஸ்பிரஸ், அக்டோபர் 16, 2006). கொஞ்சம் நேரம் செலவழித்து பத்திரிகை சுதந்திரத்துக்கு வாழ்த்துப் பாடலாமா?
இதைச் செய்வது அவ்வளவு எளிதில்லை. ஆனால், உங்களால் முடிந்தால் ‘போலீஸ்னா நல்லவங்க, பயங்கரவாதிகள் கெட்டவங்க’ என்ற நம்பிக்கையிலிருந்து ஒரு சில நிமிடங்களுக்கு நம்மை விடுவித்துக் கொள்வோம். இந்த நம்பிக்கைகளிலிருந்து பிரிக்கப்பட்ட பிறகு ஆதாரங்கள் திகைப்பூட்டும் சாத்தியங்களை வெளிப்படுத்துகின்றன. நம்மில் பலர் பார்க்க விரும்பாத திசைகளில் அவை திருப்பி விடுகின்றன.
இந்த வழக்கு மொத்தத்திலும் மிகவும் ஒதுக்கப்பட்ட சட்ட ஆவணம் என்ற விருது குற்றம் சாட்டப்பட்ட முகமது அப்சல் குற்றச் சட்டப் பிரிவு 313ன் கீழ் அளித்த அறிக்கைக்குப் போகிறது. இந்த ஆவணத்தில் அவருக்கு எதிரான தடயங்களை, நீதிமன்றம் அவரிடம் கேள்வி வடிவில் தெரிவிக்கிறது. அவர் அதை ஏற்றுக் கொள்ளலாம் அல்லது மறுக்கலாம். தன் சொந்த வார்த்தைகளில் நடந்ததை சொல்லும் வாய்ப்பு அவருக்குக் கிடைக்கிறது. அப்சலைப் பொறுத்த வரையில், வேறு எந்த வாய்ப்பும் கிடைக்காத நிலையில் இந்த ஆவணம் அவரது குரலில் நடந்ததை சொல்கிறது.
இந்த ஆவணத்தில், அப்சல் அவருக்கெதிராக அரசுத் தரப்பு வைக்கும் சில குற்றச் சாட்டுகளை ஏற்றுக் கொள்கிறார். தாரிக் என்பவரை சந்தித்ததாகவும், தாரிக், முகமது என்பவரிடம் அறிமுகம் செய்து வைத்ததாகவும் ஒப்புக் கொள்கிறார். முகமது தில்லிக்கு வரவும், பழைய வெள்ளை அம்பாசடர் கார் ஒன்றை வாங்கவும் உதவி செய்ததாக ஒப்புக் கொள்கிறார். முகமது கொல்லப்பட்ட ஐந்து தற்கொலைப் படையினரில் ஒருவர் என்று ஒப்புக் கொள்கிறார். அப்சலின் குற்றம் சாட்டப்பட்டவரின் அறிக்கையில் முக்கியமாக பார்க்க வேண்டியது என்னவென்றால் தன்னை முற்றிலும் குற்றம் செய்யாதவர் என்றோ, அப்பாவி என்றோ சொல்ல முயற்சிக்கவில்லை.
ஆனால், அவர் தனது செயல்கள் நடந்ததாக சொல்லும் சூழ்நிலை பயங்கரமானதாக இருக்கிறது. அப்சலின் அறிக்கை, நாடாளுமன்ற தாக்குதலில் அவர் ஆற்றிய வெளிவட்ட பங்கை விளக்குகிறது. ஆனால், புலன் விசாரணை ஏன் சொதப்பலாக நடந்தது, முக்கியமான கட்டங்களில் ஏன் மழுப்பலாகிப் போனது, இது எல்லாம் திறமையின்மை அல்லது தடுமாற்றத்தினால் மட்டுமே நடந்தன என்று விட்டு விடக்கூடாது என்பதற்கான பல காரணங்களை அவரது அறிக்கை சுட்டிக் காட்டுகிறது. அப்சலை நாம் நம்பாமல் இருந்தாலும், வழக்கு விசாரணை, அதில் சிறப்பு புலனாய்வு பிரிவின் பங்கு பற்றி நமக்குத் தெரிந்ததை வைத்துப் பார்க்கும் போது, அப்சல் சுட்டிக் காட்டும் திசைகளில் தேடாமல் இருப்பது மன்னிக்க முடியாத ஒன்றாகும். இடங்கள், பெயர்கள், தேதிகள் என்று குறிப்பான தகவல்களை அவர் சொல்கிறார். (அவரது குடும்பத்தினர், சகோதரர்கள், மனைவி மற்றும் குழந்தை காஷ்மீரில் வசிக்கும் நிலையில், அவர் குறிப்பிடும் நபர்களால் எளிதாக தாக்கப்படக் கூடிய சூழ்நிலையில் அப்படிச் செய்வது அப்சலுக்கு எளிதானதாக இருந்திருக்க முடியாது).
அப்சலின் வார்த்தைகளில்:
’நான் ஜம்மு – காஷ்மீரின் சோப்பூரில் வசிக்கிறேன். 2000ஆம் ஆண்டில் நான் அங்கு இருந்த போது, ராணுவம் கிட்டத்தட்ட தினமும், வாரத்துக்கு ஒரு முறை என்னை தொந்தரவு செய்வது வழக்கம். போராளிகளைப் பற்றிய தகவல்களை அவருக்குத் தர வேண்டும் என்று ராஜா மோகன் ராய் என்பவர் என்னிடம் கேட்பார். நான் ஒரு சரண்டைந்த போராளி. எல்லா சரணடைந்த போராளிகளும் ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் ராணுவ முகாமில் பதிவு செய்ய வேண்டும். என்னை உடல் ரீதியாக சித்திரவதை செய்யவில்லை. அவர் என்ன மிரட்ட மட்டும்தான் செய்தார். என்னை பாதுகாத்துக் கொள்ள செய்தித் தாள்களிலிருந்து தெரிந்து கொண்ட சில தகவல்களை அவருக்கு நான் சொல்வேன்.
ஜூன்/ஜூலை 2000ல் நான் எனது கிராமத்திலிருந்து பாரமுல்லா நகரத்துக்கு குடிபெயர்ந்தேன். அறுவைச் சிகிச்சை கருவிகள் விற்பனைக்கான ஒரு கடை வைத்திருந்தேன். கமிஷன் அடிப்படையில் அதை நடத்தி வந்தேன். ஒரு நாள் நான் எனது ஸ்கூட்டரில் போய்க் கொண்டிருக்கும் போது S.T.F (மாநில செயல் படை) நபர்கள் வந்து என்னைப் பிடித்துச் சென்று ஐந்து நாட்களுக்கு தொடர்ந்து சித்திரவதை செய்தார்கள். நான் மீண்டும் போராளி நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக யாரோ எஸ்.டி.எப்.புக்கு தகவல் கொடுத்திருக்கிறார்கள். அந்த நபரை என் முன் கொண்டு வந்த பிறகு வெளியில் விட்டார்கள். அதன் பிறகு 25 நாட்கள் என்னை அவர்கள் பிடித்து வைத்திருந்தார்கள். ஒரு லட்சம் ரூபாய் கொடுத்து என்னை நான் விடுவித்துக் கொண்டேன். (சிறப்புப் புலனாய்வு பிரிவினர் இந்த நிகழ்ச்சியை உறுதி செய்தார்கள்). அதன் பிறகு எனக்கு எஸ்.டி.எப். ஆல் ஒரு சான்றிதழ் தரப்பட்டது. ஆறு மாதங்களுக்கு என்னை சிறப்பு காவல் அதிகாரியாக ஆக்கினார்கள். அவர்கள் சார்பாக நான் வேலை செய்ய மாட்டேன் என்று அவர்களுக்குத் தெரிந்திருந்தது. தாரிக் என்னை பல்ஹலான் எஸ்டிஎப் முகாமில் நான் எஸ்டிஎப் காவலில் இருந்த போது சந்தித்தார். பின்னர் தாரிக் என்னை ஸ்ரீநகரில் சந்தித்த போது, தான் உண்மையில் எஸ்டிஎப்புக்கு வேலை செய்வதாகச் சொன்னார். நானும் எஸ்டிஎப்புக்கு வேலை செய்வதாக சொன்னேன்.
நாடாளுமன்ற தாக்குதலில் கொல்லப்பட்ட முகமது, தாரிக்குடன் இருந்தார். அவர் காஷ்மீரின் கேரன் பகுதியைச் சேர்ந்தவர் என்று தாரிக் என்னிடம் சொன்னார். முகமது தில்லியிலிருந்து வெளிநாட்டுக்கு போக வேண்டியிருப்பதால் அவரை நான் தில்லிக்கு அழைத்துப் போக வேண்டும் என்று சொன்னார். 15.12.2001 அன்று ஸ்ரீநகரில் என்னை போலீஸ் ஏன் பிடித்தார்கள் என்று எனக்குத் தெரியவில்லை. வீட்டுக்குப் போவதற்காக நான் ஸ்ரீ நகர் பேருந்து நிறுத்தத்தில் பேருந்து ஏறும் போது போலீஸ் என்னை பிடித்தது. என்னையும் சவுகத்தையும் ஸ்ரீநகரில் பிடித்ததாக வாக்குப் பதிவு செய்த சாட்சி அக்பர் டிசம்பர் 2001க்கு ஒரு ஆண்டு முனபு எனது கடையில் ரெய்டு நடத்தினார். போலி அறுவை சிகிச்சை கருவிகளை விற்பதாக சொல்லி 5000 ரூபாய் என்னிடமிருந்து வாங்கிக் கொண்டார். சிறப்புப் பிரிவில் நான் சித்திரவதைக்குட்படுத்தப்பட்டேன். பூப்சிங் என்பவர் என்னை மூத்திரம் குடிக்கும் படி கூட செய்தார். எஸ்ஏஆர் ஜீலானியின் குடும்பத்தை நான் பார்த்தேன். ஜீலானி மோசமான நிலையில் இருந்தார். அவரால் நிற்கக் கூட முடியவில்லை. பரிசோதனைக்காக மருத்துவரிடம் அழைத்துச் செல்லப்பட்டோம். ஆனால், எல்லாம் சரியாகத்தான் இருக்கிறது என்று மருத்துவரிடம் சொல்ல வேண்டும் இல்லை என்றால் மீண்டும் சித்திரவதை செய்யப்படுவோம் என்று மிரட்டப்பட்டோம்…’
இன்னும் சில தகவல்களை சொல்வதற்கு நீதிமன்றத்தின் அனுமதியை அவர் கேட்டார்.
‘நாடாளுமன்ற பயங்கரவாத தாக்குதலில் கொல்லப்பட்ட முகமது என்னுடன் காஷ்மீரிலிருந்து வந்தார். அவரை என்னிடம் ஒப்படைத்தவர் தாரிக்தான். தாரிக் பாதுகாப்புப் படைகளுடனும் ஜம்மு – காஷ்மீர் காவல்துறையின் எஸ்.டி.எப் உடனும் வேலை செய்பவர். முகமதுவால் எனக்கு ஏதாவது பிரச்சனை வந்தால் அவர் எனக்கு உதவி செய்வதாக தாரிக் சொன்னார். அவருக்கு பாதுகாப்புப் படைகளையும் எஸ்டிஎப்பையும் நன்கு தெரியும்… முகமதுவை தில்லியில் விட மட்டும் செய்தால் போதும் வேறு எதுவும் செய்ய வேண்டாம் என்று தாரிக் என்னிடம் சொன்னார். முகமதுவை தில்லிக்கு நான் அழைத்துப் போகாவிட்டால், நான் வேறு ஏதாவது வழக்கில் மாட்டி வைக்கப்படுவேன். இந்த சூழ்நிலையில் கட்டாயத்தின் கீழ் முகமதுவை நான் தில்லிக்கு அழைத்து வந்தேன். அவர் பயங்கரவாதி என்று எனக்குத் தெரியாது’.
முக்கியமான பாத்திரமான ஒருவரைப் பற்றிய விபரங்கள் இதன் மூலம் நமக்குத் தெரிய வருகின்றன. ‘சாட்சி அக்பர்’ (PW 62), முகமது அக்பர், தலைமை காவலர், பாரிம்பரா காவல் நிலையம். இவர்தான் அப்சல் கைது செய்யப்பட்ட ஆவணத்தில் கையொப்பமிட்ட ஜம்மு – காஷ்மீர் காவலர். அவரது உச்சநீதி மன்ற வழக்கறிஞர் சுசில்குமாருக்கு எழுதிய ஒரு கடிதத்தில், வழக்கு விசாரணையின் போது நடந்த ஒரு அச்சமூட்டும் தருணத்தைப் பற்றி அப்சல் குறிப்பிடுகிறார். ஸ்ரீநகரிலிருந்து கைது ஆவணம் பற்றி சாட்சி சொல்ல வந்திருந்த சாட்சி அக்பர், நீதிமன்றத்தில் அப்சலை காஷ்மீரி மொழியில், ‘அவர் குடும்பம் நன்றாகத்தான் இருக்கு’ என்று ஆறுதல் அளித்தார். இது ஒரு மறைமுகமான மிரட்டல் என்பதை அப்சல் உடனடியாக புரிந்து கொண்டார். ஸ்ரீநகரில் கைது செய்யப்பட்ட பிறகு பாரிம்போரா காவல் நிலையத்துக்குக் கொண்டு செல்லப்பட்டு அடித்து உதைக்கப்பட்டதாகவும், அவர் ஒத்துழைக்காவிட்டால் அவரது மனைவியும் குடும்பமும் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் வெளிப்படையாக எச்சரிக்கப்பட்டார். (அப்சலின் சகோதரர் ஹிலால் சில மாதங்களுக்கு சட்ட விரோத காவலில் வைக்கப்பட்டிருந்தார் என்று நாம் ஏற்கனவே பார்த்தோம்.)
இந்தக் கடிதத்தில், தான் எஸ்டிஎப் முகாமில் எப்படி சித்திரவதை செய்யப்பட்டோம் என்று அப்சல் விளக்குகிறார். பிறப்பு உறுப்புகளில் மின்முனைகளும், ஆசனவாயில் மிளகாய் மற்றும் பெட்ரோலும் வைக்கப்பட்டு துன்புறுத்தப்பட்டார். துணைக் காவல் துறை மேலாளர் திராவிந்தர் சிங்கின் பெயரைக் குறிப்பிட்டு, தில்லியில் ஒரு ‘சின்ன வேலை’ முடிக்க வேண்டும் என்று அவர் சொன்னதாக குறிப்பிடுகிறார். குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ள சில தொலைபேசி எண்கள் எஸ்டிஎப் முகாமுடன் தொடர்புடையவை என்று அவர் சொல்கிறார்.
காஷ்மீர் பள்ளத்தாக்கில் வாழ்க்கை எப்படி இருக்கிறது என்பதைப் பற்றிய அறிவு நமக்கு அப்சலின் கதையின் மூலம் கிடைக்கிறது. பாதுகாப்புப் படைகள் போராளிகளுடன் சண்டை போடுவதும், அப்பாவி காஷ்மீரிகள் இடையில் மாட்டிக் கொள்வதும் என்று நாம் பத்திரிகைகளில் படிப்பவை நிகழ்வுகளின் அம்புலிமாமா வடிவம் மட்டும்தான். பெரியவர்களுக்கான வடிவத்தில், போராளிகள், தறுதலைகள், பாதுகாப்புப் படைகள், உளவாளிகள், துரோகிகள், ஏமாற்று வேலைக்காரர்கள், மிரட்டல்காரர்கள், பணம் பறிப்பவர்கள், இந்திய மற்றும் பாகிஸ்தானிய உளவு நிறுவனங்கள், மனித உரிமை ஆர்வலர்கள், என்ஜிஓக்கள், நினைத்துப் பார்க்க முடியாத அளவு கணக்கில் வராத பணமும் ஆயுதங்களும் காஷ்மீரில் கொட்டிக் கிடக்கின்றன.
பொது மக்களுக்கும் இவற்றுக்கிடையேயெல்லாம் இருக்கும் எல்லைகளை குறிக்கும் தெளிவான கோடுகள் இருப்பதில்லை. யார் யாருக்காக வேலை செய்கிறார்கள் என்று சொல்வது எளிதில்லை.
காஷ்மீரில் மற்ற எதையும் விட உண்மைதான் அபாயகரமானது. தோண்டத் தோண்ட மோசமான விபரங்கள் தெரிகின்றன. குழியின் அடியில் இருப்பவை அப்சல் சொல்லும் SOGயும் STFம். காஷ்மீரில் இருக்கும் இந்திய பாதுகாப்பு அமைப்பின் இரக்கமற்ற, ஒழுக்கமற்ற, அச்சமூட்டக் கூடிய பிரிவுகள் இவை. மற்ற முறையான பாதுகாப்புப் படைகளைப் போல் இல்லாமல், போலீஸ்காரர்கள், சரணடைந்த போராளிகள், ரவுடிகள் மற்றும் சாதாரண கிரிமினல்கள் கொடுக்கல் வாங்கல் செய்யும் ஒளி மங்கிய மண்டலத்தில் இந்தப் படையினர் செயல்படுகிறார்கள். அவர்கள் அந்த ஊர் மக்களை, குறிப்பாக கிராமப் புற மக்களை வேட்டையாடுகிறார்கள். அவர்களது முதன்மை இலக்கு, 1990களின் ஒழுங்கற்ற எழுச்சியில் கலந்து கொண்டு பின்னர் சரணடைந்து சாதாரண வாழ்க்கை வாழ முயற்சி செய்யும் ஆயிரக்கணக்கான காஷ்மீரி இளைஞர்கள்.
1989ல் அப்சல் எல்லையைக் கடந்து போராளியாக பயிற்சி எடுக்கப் போன போது அவருக்கு 20 வயதுதான் ஆகியிருந்தது. எந்தப் பயிற்சியும் கிடைக்காமல், கிடைத்த அனுபவத்தில் வெறுத்துப் போய் திரும்பி வந்திருந்தார். துப்பாக்கியை போட்டு விட்டு தில்லி பல்கலைக் கழகத்தில் சேர்ந்தார். 1993ல் நடைமுறையில் ஒருபோதும் போராளியாக இருந்திராத அவர் தானாக எல்லை பாதுகாப்பு படையினரிடம் சரணடைந்தார். புரிந்து கொள்ள முடியாத படி, அந்த புள்ளியிலிருந்துதான் அவரது கொடுங்கனவுகள் ஆரம்பித்தன. அவரது சரணடைவு ஒரு குற்றமாகக் கருதப்பட்டு அவரது வாழ்க்கை நரகமாக மாறியது. சரணடைவது என்பது முட்டாள்தனம் மட்டுமில்லை பைத்தியக்காரத்தனம் என்ற பாடத்தை காஷ்மீரி இளைஞர்கள் அப்சலின் கதையிலிருந்து கற்றுக் கொண்டால், அவர்களை யார் குறை சொல்ல முடியும்? தங்களது ஆயுதங்களை ஒப்படைத்து விட்டு இந்த அரசு அளிக்கும் பலவகையான கொடுமைகளை சந்திக்க வேண்டும் என்று அவர்கள் விரும்பாமல் இருந்தால் என்ன தவறு?
முகமது அப்சலின் கதை காஷ்மீரிகளை கோபப்படுத்தியதற்கு காரணம் என்னவென்றால் அவரது கதை அவர்களது கதையாகும். அவருக்கு நிகழ்ந்தது, ஆயிரக்கணக்கான காஷ்மீரி ஆண்களுக்கும் அவர்களது குடும்பங்களுக்கும் நடந்திருக்க முடியும், நடக்கின்றன, நடந்திருக்கின்றன. ஒரே வேறுபாடு என்னவென்றால், அவர்களது கதைகள் கூட்டு விசாரணை மையங்களிலும், ராணுவ முகாம்களிலும், போலீஸ் ஸ்டேசன்களிலும் அவர்கள் சுடப்பட்டு, அடித்து துவைக்கப்பட்டு, மின்சாரம் செலுத்தப்பட்டு, பயமுறுத்தப்பட்டு கொல்லப்பட்ட பிறகு ஓடும் டிரக்குகளிலிருந்து வெளியில் எரியப்பட்ட பிறகு அந்த வழியாக போகிறவர்களால் கண்டறியப்படுவதன் மூலம் நிறைவேறுகின்றன. அப்சலின் கதையோ, பழங்கால நாடகம் போல தேசிய அரங்கில் முழு வெளிச்சத்தில், நியாயமான வழக்கு விசாரணை என்ற சட்டப் பாதுகாப்பின் கீழ், சுதந்திரமான ஊடக உரிமையுடன், ஜனநாயகம் என்று அழைக்கப்படும் அமைப்பின் எல்லா காட்சிகள் மற்றும் நிகழ்ச்சிகளின் மத்தியில் நடைபெற்றது.
அப்சல் தூக்கிலிடப்பட்டால், யார் இந்திய நாடாளுமன்றத்தைத் தாக்கினார்கள் என்ற கேள்விக்கு விடை தெரியாமலேயே போய் விடும். அது லஸ்கர் – எ – தொய்பாவா? ஜெய்ஷ் – எ – முகமதுவா? இல்லையென்றால் நாம் அனைவரும் நமக்கே உரிய பல்வேறு வகையான வழிகளில் அன்பிலும் வெறுப்பிலும் வாழும் இந்த நாட்டின் ரகசிய மனதுக்குள் ஆழமாக புதைந்திருக்கிறதா?
டிசம்பர் 13 நாடாளுமன்ற தாக்குதல் குறித்து ஒரு நாடாளுமன்ற குழு விசாரணை நடத்தப்பட வேண்டும். விசாரணை முடிவது வரை, சோபோரில் வசிக்கும் அப்சலின் குடும்பம் பாதுகாக்கப்பட வேளண்டும். ஏனென்றால், அவர்கள் இந்த விசித்திர கதையின் பலவீனமான பிணைக்கைதிகள்.
உண்மையில் என்ன நடந்தது என்று தெரிந்து கொள்வதற்கு முன்பு முகமது அப்சலை தூக்கில் இடுவது எளிதில் மறந்து விட முடியாத ஒரு பிழையாக இருக்கும். அல்லது மன்னிக்க முடியாத ஒன்றாக! அப்படி ஆகி விடக் கூடாது!
நமது பொருளாதாரம் 10% வளர்ச்சியை சாதித்தாலும் அப்படி ஆவதை நியாயப்படுத்த முடியாது!
_______________________________________________________________
நன்றி ;செங்கொடி 

திங்கள், 24 அக்டோபர், 2011

வக்ப் தேர்தல் முடிவுகளும் பஞ்சாயத்து தேர்தல் முடிவுகளும்

அன்பார்ந்த சகோதரர்களே ,அஸ்ஸலாமு அலைக்கும். 

                                                  நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தல் முடிவுகளை பார்த்திருப்பீர்கள்.இந்த முடிவுகள் மூலம் சில உண்மைகளை அறிய முடியும்.கடந்த உள்ளாட்சிதேர்தல்களில் 1986 நடந்தது போன்று போட்டிகள் ஏற்பட்டு ஒரே ஊரில் உறவினர்களிடையே குடும்ப உறவுகள் பாதிக்ககூடாது என்று 1996 இல் நிர்வாகம் ஜும்மாவுக்கு பிறகு பொதுக் குழு கூடி போட்டியின்றி பஞ்சாயத்து தலைவரும்,யூனியன் கவுன்சிலர் வேட்பாளரும் தேர்வு செய்யப்பட்டனர்.அதே போன்றே 2001  இலும் தேர்வு செய்யப்பட்டனர்.2006 லும் அதே போன்றே போட்டியின்றி தேர்வுகள் நடந்தன.இருப்பினும் துரதிர்ஷ்ட வசமாக போட்டி  ஏற்பட்டது .

அதே போன்று இப்போதைய உள்ளாட்சி தேர்தல் பற்றியும் ஆலோசனை நடத்த ஜும்மாவுக்கு பிறகு பொது குழுவை கூட்டாமல் மக்கள் அதிகம் கூடாத செவ்வாய் மக்ரிபில் கூட்டம் நடத்தினர் அதில் எடுத்த முடிவுகளை இரவு பதினோரு மணியளவில் மாற்றினார்கள்.இந்த கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் பத்துக்கும் குறைவானவர்களே .தலைவர் வெகுளியானவர் என்பதும் அவருக்கு இதில் எந்த பங்கும் இல்லை என்பதும் அனைவரும் தெரிந்த விசயம்தான். செயலாளர்,இதற்கு முன்னர் எந்த ஒரு பொது நலனிலும் அக்கறை எடுத்துக் கொண்டவர் அல்லர்.இந்த உள்ளாட்சி தேர்தல் விசயத்திலும் அவர் மேம்போக்காகவே இருந்துள்ளார்.பொருளாளர் ,உடல் நலக் குறைவாக உள்ளார்.கமிட்டி உறுப்பினர்கள் பலருக்கு இந்த கூட்டம் நடப்பதே தெரியாது..உறுப்பினர்கள் அல்லாத சிலர் நாங்கள் தான் நிர்வாக தேர்தலை கொண்டு வந்தோம் ,ஆதலால் நாங்களே நிர்வாகத்தை கவனிப்போம் என்ற ரீதியில் பள்ளியின் நிர்வாகத்தை கையில் எடுத்துக் கொண்டு ,அவர்கள் மனம் போன போக்கில் நிர்வாகத்தை கேலிக்குரியதாக்கி விட்டனர்.தனி நபர் பகைமையையும் காழ்ப்புணர்வுகளையும் கொள்கையின் பேரால் மக்களை பிளவுபடுத்தி வந்தனர். அதன் பேரில் பஞ்சாயத்திலும் ஆதாயம் அடைய கனவுகண்டனர். தமிழ்நாடு தேர்தல் ஆணையத்தையும் வக்ப் போர்டு என எண்ணிக் கொண்டனர்.இறைவன் அருளால் மக்கள் தீர்ப்பு மாற்றமாகவே இருந்தது.அவனுக்கே புகழனைத்தும். பள்ளிவாசலில் நடக்கும் இத்தனை கேலி கூத்துக்களையும் மக்கள் கண்டு கொள்ளவே இல்லையே என்று தவறாக நினைத்துவிட்டோம்.ஜமாத்தார் மவுனமாகவே இவர்களது நடவடிக்கைகளையே கவனித்தே வந்துள்ளனர்.தவ்ஹித் ஜமாஅத் என்று சொல்லி மக்களை ஏமாற்றி விடலாம் என்ற அவர்களது பசப்புகள் பலிக்கவில்லை.தவ்ஹித் ஜமாத்தினர் என்ன செய்து வருகிறார்கள் என்பதை அவர்கள் அறியாமல் இல்லை.இல்லையெனில் பித்ரா காசுகள் தவ்ஹித் ஜமாத்திடம் ரூ. 115000/= வசூலாகி இருக்குமா? நமதூர் பொது நலனில் எவ்வித அக்கறையும் இல்லாத ,இதுவரை  கலந்து கொள்ளாத சிலர் ,தவ்ஹித் ஜமாஅத் தனது சிறப்பான செயல்பாட்டினால் மக்கள் மத்தியில் செல்வாக்கு பெற்று வருகிறதே என்ற பொறாமை குணத்தால்   உந்தப்பட்டவர்கள் சூழ்ச்சி செய்தனர்.ஏகத்துவ கொள்கையுள்ள PFI இளைஞர்களை ,ஏகத்துவமில்லாத PFIகளை வைத்து அவதூறுகளை அள்ளி வீசி பிரித்தனர் தங்கள் கையில் ஒரு இளைஞர்கள் க்ரூப் இருக்கிறது என்று எண்ணி பள்ளிவாசலின் நிர்வாகத்தை கைப்பற்ற திட்டமிட்டனர்.இதனிடையே தவ்ஹித் ஜமாத்தினர் மீது மக்களிடம் கெட்ட பெயர் ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் அரசியல்வாதிகளையும் மிஞ்சும் வண்ணம் சில அபார சூழ்ச்சிகள் செய்தனர். பள்ளியில் அசருக்கு பின்னர் மவ்ளுத் ஓதியவர்கள் மீது கற்களை வீசினர்.சிந்தா  தர்கா கந்தூரியின்போது யானை ஊர்வலம் தெருக்குள் சென்ற வேளையில் தர்காவின் அரண்மனை கொடி என்று சொல்லப்படும் கொடியை கீழிறக்கி கொளுத்த முயன்றனர். மேலும் தர்காவின் டியுப் லைட்கள் உடைக்கப்பட்டன.இது விசயமாக மறுநாள் தர்கா நிர்வாகம் போலீசில் தவ்ஹித் ஜமாத் மீது கம்ப்ளைன்ட் கொடுக்க சென்றனர்.விவகாரம்   முற்றுவதை அறிந்த தவறு செய்தவன் உண்மையை ஒப்புக் கொண்டதால் போலிஸ் ஸ்டேசனுக்கு சென்றவர்கள் பாதியில் திரும்பி வந்தனர்.அதன் பின்னர் தவ்ஹித் ஜமாஅத் போர்டு சுவரில் மாட்டு சாணியடிப்பதை வழக்கமாக கொண்டனர்.இதை நாங்கள் கண்டு கொள்ளாத வேளையில் தீடிரென்று தர்காவின் நெற்றி சுவரில் மாட்டு சாணியால் பூசியிருந்தனர்.அதாவது தவ்ஹித் ஜமாத் சுவரில் சாணி அடித்ததும்  அவர்களே ,அதன் பின்னர் தர்க்கா சுவரில் சாணியடித்ததும் அவர்களே.தவ்ஹித் சுவரில் சாணியடித்ததால் பதிலுக்கு நாங்கள் தர்கா சுவரில் சாணியடித்தது போல் போலிஸ் கம்ப்ளைன்ட் கொடுக்க இப்படி ஒரு அற்புத திட்டம்.இறையருளால் உளவு துறை மூலம் அதுவும்   தகர்க்க பட்டது..சாணியடித்தவர்கள் பெயர்களை கூறியும் அவர்கள் கண்டுகொள்ளப்படவே இல்லை. இவ்வாறாக  தவ்ஹித்  ஜமாத்துக்கு எதிராக செயல்பட்டவர்கள் பள்ளிவாசல் நிர்வாக தேர்தல் கொண்டு வரும்பொருட்டு தங்களுக்கு தெரிந்த வக்ப் போர்டு உறுப்பினர் சிக்கந்தர் மூலமாக பல புகார்கள் செய்தனர்..அதன்  பின்னர் வக்ப் சூப்ரன்ட் உதுமான் மைதின் என்பவர் தேர்தல் இல்லாமல் நிர்வாக கமிட்டி ஏற்படுத்தும் முயற்சி தோல்வி அடைந்ததும் நாங்கள் சொன்ன யோசனைகளையும் ஏற்காது வக்ப் அதிகாரிகள் அவர்கள் கையில் உள்ளனர் என்ற மமதையில் தேர்தலை கொண்டு வந்தனர். தேர்தலில் அணி பிரித்தது முதல் சில தவறுகள் நடக்கவே செய்தன.மேலும் விதிமுறைகளின்படி ஓட்டு பெட்டிகளை சீல் வைத்த பிறகு அவற்றை தனி அறையில் வைத்து பூட்டி சீல் வைத்திருக்க வேண்டும்.அதிகாரிகள் தனி அறையில் திறந்த அலுவலகத்தில் இருந்தே வாக்கு பற்றிய விவரங்களை சரி பார்க்க வேண்டும் . ஆனால் அனைவரையும் வெளி ஏற்றிவிட்டு அனைத்து கதவுகளையும் பூட்டிவிட்டு ஓட்டு பெட்டிகளுடன் இருந்த மர்மம் என்ன?இவ்வாறு அதிகாரிகள் நடந்து கொள்ள விதிமுறைகள் அனுமதிக்கின்றனவா?இல்லை .இந்த தவறுகளை சுட்டிக்காட்டி மறுநாளே தேர்தல் முடிவுகளை நிறுத்தி வைக்குமாறு ஸ்டே ஆர்டர் வாங்க முடியும்.ஆனாலும் நாங்கள் நல்ல முறையில் நிர்வாகம் செய்தால் சரி என்றே விட்டுவிட்டோம் அவர்கள் வீம்புகாட்டமாட்டர்கள் என்று நம்பினோம்.இருக்கட்டும். இப்போது நடந்த தேர்தல் முடிவுகளை பாருங்கள் .பஞ்சாயத்து தேர்தலில் உள்ள ஒன்று முதல் ஐந்து வரை உள்ள வார்டுகளை ஒருவார்டாகவும் ஆறு முதல் ஒன்பது வரை உள்ள வார்டுகளை ஒரு வார்டாகவும் வக்ப் தேர்தலில் பிரித்து இருந்தனர்.அதன்படியே இப்போதுள்ள தேர்தல் முடிவுகளையும் வக்ப் தேர்தலையும் ஒப்பிட்டு பார்த்தால் உண்மை புரியும்.

மெயின் ரோடு ,வடக்குத்தெரு ,நடுத்தெரு மேல்பகுதி நீங்கலாக  அடங்கிய வார்டில் டி.ஏன்.டிஜே ஆதரவு  பெற்ற அப்துல் பாரி அணி பெற்ற ஓட்டுக்கள் ;97 ;வைஸ் உதுமான் அணி பெற்ற ஓட்டுக்கள்  77    தெற்குதெரு,அரபாத் நகர் அடங்கிய வார்டில் அப்துல் பாரி அணிக்கு  32ஓட்டுக்கள்: வைஸ் உதுமான் அணிக்கு 97ஓட்டுக்கள் 
அதே போன்று பஞ்சாயத்து தேர்தலில் ,மெயின் ரோடு ,வடக்கு தெரு ,நடுத்தெரு மேல் பகுதி நீங்கலாக உள்ள வார்டில் ஹனிபாவுக்கு 366  ஓட்டுக்கள்  மதார் அவர்கட்கு286 ஓட்டுக்கள் 
நடு தெரு மேல்பகுதி  ,தெற்கு  தெரு அரபாத்  நகர்  நாடார் தெரு , sc  தெரு அடங்கிய   வார்டில் ஹனிபாவுக்கு 176 ஓட்டுக்களும் மதாருக்கு 174 ஓட்டுக்களும்  விழுந்துள்ளன 
முதல் வார்டில் அப்துல் பாரி  அணி [டிஎன்டிஜே ],வைஸ் உதுமான் அணியை விட 20௦ ஓட்டுக்கள் அதிகம் .அதே வார்டுகளில் ஹனிபா 80  ஓட்டுக்கள் அதிகம்.பெற்றுள்ளார்.அதாவது மொத்த ஓட்டுக்கள் நான்கு மடங்காகும் போது வித்தியாசமும் நான்கு மடங்காகி உள்ளது.
இரண்டாவது வார்டில் வைஸ்உதுமான் அணிக்கு 65  ஓட்டுக்கள் அப்துல் பாரி அணியை விட அதிகம்.அதேபோல் இப்போது நான்கு மடங்காக அதிகம் கிடைக்காவிட்டாலும் ஒரு மடங்காவது அதிகமாக கிடைத்திருக்க வேண்டும்.ஆனால் ஹனிபாவுக்கே 2  ஓட்டுக்கள் அதிகம் கிடைத்துள்ளது.ஹனிபாவுக்கு 176  ஓட்டுக்களும் மதாருக்கு 174  ஓட்டுக்களும் கிடைத்துள்ளன.இதை சமம் என்று வைத்துக் கொள்ளலாம்.நாடார் ஓட்டுக்கள் sc  ஓட்டுக்கள் இருதரப்புக்கும் சமமாக  விழுந்திருக்கின்றன. இப்படி சமமாகவோ  அல்லது ஐந்து அல்லது அதிக பட்சமாக பத்து ஓட்டுக்களோ அதிகமாக வைஸ் உதுமான் அணிக்கு கிடைத்திருக்க வேண்டும். எவ்வ்வித காரணமும் இன்றி 65  ஓட்டுக்கள் அதிகமாக கிடைக்க வாய்ப்பில்லை.ஆக வக்ப் தேர்தலில் மோசடி நடந்திருக்கிறது என்பதற்கு பஞ்சாயத்து தேர்தல் முடிவுகள் அற்புதமான ஆதாரம்.

சனி, 22 அக்டோபர், 2011

பஞ்சாயத்து தேர்தல் ஓட்டு விவரம் .

பஞ்சாயத்து தேர்தல் ஓட்டு விவரம் .
         ஹமிதா ஹனிபா 542 
           மைதின் பாத்திமாமதார் 460 
            ஆமினா மைதின் 76
               செல்லாதா ஓட்டுக்கள் 43 
                   மொத்த ஓட்டுக்கள் 1121        
இது எங்களை ஏன் நாடவில்லை ?என்று நோட்டிசில் கேள்வி கேட்ட ஜமாஅத் கமிட்டிக்கு ,அல்லாஹ்வை நாடிய அனிபாவிற்கு அதிக ஓட்டுக்கள் கிடைப்பதன் மூலம் இறைவன் கொடுத்த பதில். 


பஞ்சாயத்து கவுன்சிலர் ஓட்டு விவரம் 
                   சரிபா பசீர் ADMK  878 
                     ஆபிதா சலாம் IND  862 
                      அனீஸ் உசைன்காஜாDMK  779  
                        மொத்த ஓட்டுக்கள் 2641

ஆராம்பன்னையில் மட்டும் கவுன்சிலருக்கு கிடைத்த ஓட்டுக்கள் {தோராயமாக] 10 ஓட்டுகள் முதல்  20 ஓட்டுகள் வரை வித்தியாசங்கள் இருக்கலாம்.
                      சரிபாபசீர் [அதிமுக] 730
                      அனீஸ்ஒசெங்காஜா [திமுக ] 270 
                      ஆபிதா சலாம் [ind]105
௩ vathuநாங்கள் தான் சுன்னத் ஜமாஅத் நிர்வாக கமிட்டி ,நாங்கள் பத்து பேர் எடுக்கும் முடிவே ஜமாத்த் முடிவு என்று ஆட்டம் போட்டவர்களுக்கு அவர்களின் நிறுவன தலைவர் ஒசெங்காஜாவிற்கு ஜமாத்தினர் கொடுத்த பதிலடிகள் மேலே பார்த்தீர்களா?


கொ.குறிச்சியில் கிடைத்த கவுன்சிலர் ஓட்டுக்கள் விவரம் [தோராயமாக ]
                    ஆபிதா 750 
                      அனீஸ் 510 
                        சரிபா 150
தேர்ந்தெடுக்கப்பட்ட  பஞ்சாயத்து  உறுப்பினர்கள் 
1.வது வார்டு மவுலான அபுல் ஹசன் 36 ஓட்டுக்கள் அதிகம் 
2.வது வார்டு அ.சே.அஜீசா 30௦ ஓட்டுக்கள் அதிகம் 
3.வது வார்டு எ.எஸ்.எம்.செய்யது முஹம்மது 
4.வது வார்டு சல்மா [குலுக்கல் மூலம் தேர்வு ]
5 .வது வார்டு இப்ராஹீம் [வித்தியாசம் இரண்டே இரண்டு ஓட்டுக்கள்]
6 .வது வார்டு பூத் கனி 
7 .வது வார்டு அமிதா பத்து ஓட்டுக்கள் அதிகம் 
8 ,9 ,வார்டுகள் போட்டியின்றி தேர்வனாவர்கள் 

வார்டு வாரியாக ஓட்டுக்கள் விவரம் 
1& 2 வது வார்டு ஹமிதா 146 
                               மைதின் பாத்திமா 76 
3&4 வது வார்டு ஹமிதா 112 
                                மைதின்பாத்திமா 106 
5&6வது வார்டு ஹமிதா 108 
                               மைதின் பாத்திமா 104 
7.வது வார்டு ஹமிதா 34 
                             மைதின் பாத்திமா 29 
8&9 வது வார்டு ஹமிதா 142 
                                மைதின் பாத்திமா 145    

வெள்ளி, 21 அக்டோபர், 2011

ஏணி இல்லாமலே ஏற்றம் பெற்றுவிட்டார்

மக்ரிப் ஜமாஅத் தோற்றது ,அனைவர் ஜமாஅத் வென்றது,அல்ஹம்துலில்லாஹ் 

ஐம்பது ஆண்டு கால திமுக கோட்டை நொறுங்கி தூள் தூளானது ,

ஆறாம்பண்ணையில்  பசீர்[அதிமுகவு]க்கு 750  ஓட்டுக்கள் 

ஜமாத்தின் ஆதரவுடன் போட்டியிட்ட ஜமாத் கமிட்டியின் மேலானா ஆலோசகரும்,வக்ப் போர்ட் ப்ரோக்கரும், கலெக்டர் ஆபிஸ் ,பிடிஒ ,தாலுகா ஆபிஸ் ,போலிஸ் ஸ்டேசன் அனைத்திலும் இவர் இமை   அசைத்தால்போதும் பணி செய்ய  காத்திருக்கும் அளவில் செல்வாக்கு உள்ளவரும் திமுக வேட்பாளருமான 
ஒசெங்காஜாவுக்கு ஆறாம் பண்ணையில் 300௦௦ ஓட்டுகள்
படித்த மெகா மேதையின் பசப்பு வார்த்தைகள் படுகுழிக்குள் பாயிந்தது.
ஆயிரம் ஓட்டுக்களுக்காக அரசியல் பண்ணியவருக்கு  ,பட்டவர்த்தி முக்கை தாண்டாத அரசியல் சா நக்கியருக்கு சவுக்கடி.
இது சுன்னத் ஜமாத்துக்கும் தவ்ஹித் ஜமாத்துக்கும் நடக்கும் தேர்தல் என்று கொக்கரித்த கபரிஸ்தானில் ஓட்டு கேட்ட  கோழைக்கு மரண அடி 
ஏணி இல்லாமலே ஏற்றம் பெற்றுவிட்டார் ஹனிபா,நாலாவது தடவையாக 
ஏணியும் கோணியுமாக வந்தவர்களுக்கு ஏப்பம் தான் மிச்சம்.
இறைவன் அருளால் கிடைக்கும் ஜனாதிபதி விருதும் ,மக்கள் தீர்ப்பும் ஹனிபாவின் பணிகளுக்கு கிடைக்கும் சான்றுகள்.
ஒசெங்காஜா ஜமாத்தின் சான்றும் படித்த மெகா மேதையின் சான்றும் யாருக்கு வேண்டும்?
ஹனிபாவின்  நேர்மை 
எதிர் தரப்பு வேட்பாளர் ஓட்டு கேட்க செல்ல முடியாத நிலையில் ,தனது மனைவி ஓட்டு கேட்க முனைந்த போது அதை தடுத்துவிட்டார் ஹனிபா. . "போட்டி என்பது சம வாய்ப்புகளுடன் இருக்க வேண்டும் என்பதும்,பிறர் மன நிலை பாதிக்கும் வகையில் இருக்கக் கூடாது "என்றும் கூறிவிட்டார்.அவரின் செலவு எதிர் தரப்பு நோட்டிசுக்கு பதில் அளிக்கும் வண்ணம் நோட்டிஸ் அடித்த வகையில் எண்ணூறு ரூபாய் மட்டும் ,மற்றும் டீ செலவுகள் மட்டுமே .

செவ்வாய், 18 அக்டோபர், 2011

தமிழ்மணம்


சென்ற மாதம் தமிழ்மணத்துடனான ஒரு உரையாடலின் போது (அந்த உரையாடலை காணஇங்கே சுட்டவும்) அவர்களை நோக்கி "உங்கள் மீது இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக" என்று முகமன் கூறியதற்கு, தமிழ்மணம் அளித்த பதில் அதிர்ச்சி தந்தது. அது, 

"தமிழ்மணம்மீது இறைவனின் சாந்தியும், சமாதானமும் நிலவ வேண்டாம்"

இந்த பதில் அதிர்ச்சியை கொடுத்தாலும், அந்த தளத்தை விவாதக்களமாக்க விரும்பாததால் இது குறித்து கேட்கவில்லை. 

ஆனால், சில நாட்களுக்கு முன்பு terrorkummi என்னும் தளத்தில் தமிழ்மண நிர்வாகி இரமணிதரன் என்பவர் கூறிய கருத்து (அந்த கமெண்ட்டுக்களை காண இங்கே சுட்டவும்) மிகுந்த அதிர்ச்சியையும், முஸ்லிம்களின் உணர்வுகளை தூண்டுவதாகவும் இருந்தது. 

"சாந்தியும் அவ அக்கா சமாதானியும் உங்களுடன்கூடியே..சே! பதிவுத்தோஷம்.. கூடவேயிருப்பார்கள்"

ஒரு திரட்டியின் நிர்வாகி பொறுப்பில் இருப்பவர் இப்படியான தரம் தாழ்ந்த கருத்தை கூறுவது மிகுந்த வேதனையளிக்கும் விசயம்.                                         {எதிர்குரல் }


தமிழ் மணம் நிர்வாகத்தின் கவனத்திற்கு ,
                          தமிழ் மணக்க வேண்டும் என்பதே நமது விருப்பம் .அதனை நாற்ற மெடுக்க முனைந்தால் அவர்களை தவிர்ப்பதே தமிழ் மணம்.
தமிழ்  மணக்கும் இஸ்லாமிய தளங்களில்,காணப்படும் கண்ணியம் ,சகோதரத்துவம் ,அறிவியல் போன்றவற்றை தகர்க்க ஒரு அற்ப முயற்சி.
ரமணிதரன் போன்றவர்கள் ,உள்ளத்தில் எவ்வளவு நாற்றத்தை வைத்துக் கொண்டு ,மேலே வாசனை திரவியங்களை பூசிக் கொண்டு தமிழ் மணத்தில் வலம் வருகிறார்கள் என்பதற்கு இது ஒரு சாட்சி. .வருத்தம் தெரிவித்தாலே தமிழ் மணமும் மனமும்.

ஞாயிறு, 16 அக்டோபர், 2011

சூப்பரோ சூப்பர்

////பெரும் பொய்யர்களே நய வஞ்சகர்களே நாங்கள் உள்ளாட்சி தேர்தல்களை கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை என்னும் நிலையில் எங்களை வம்புக்கு இழுப்பது நியாயமா? உங்களது ஸ்பெசல் சுன்னத் ஜமாஅத் கொள்கைப் படி அண்ணன் நிஜாம் வழியில் சாராயம் கொடுத்து நாடார் தெருவில் ஓட்டு கேட்டது போல் தெருக்களிலும் ஏதாவது பாமாயில் கொடுத்து ஓட்டு கேட்க வேண்டியது தானே ! ஏன் தவ்ஹித் ஜமாத்தையும் சுன்னத் ஜமாத்தையும் உங்கள் அற்ப அரசியல் ஆதாயங்களுக்கும் சேர்மன் வேட்பாளர் போடும் லட்சங்களுக்கும் பயன்படுத்த வேண்டும்? ///

தவ்ஹித் ஜமாத்தின் வெற்றி என்ற தலைப்பில் நான் மேலே கண்டவாறு எழுதி இருந்தேன் .நான் அதை மறுத்து பதில் வரும் என்று எதிர்பார்ர்த்தேன் ,ஆனால் நடந்தது என்ன?நான் நெட்டில் நாடார் மக்களுக்கு அவர்கள் மதுபானங்களை கொடுத்ததை  எழுதி நாடார் மக்களை கேவலப் படுத்தி விட்டதாக சொல்லி வாக்கு கேட்டுள்ளார்கள்.
சுன்னத் ஜமாஅத் பெயரில் இவர்கள் அடிக்கும் கூத்தை பார்த்தீர்களா? மது கொடுத்து ஓட்டு கேட்டது போதாது என்று அதை நாம் எடுத்து கூறியதையும் சொல்லி ஓட்டு கேட்டுள்ளார்கள் என்றால் ,;இவர்களை சுன்னத் ஜமாஅத் என்று நம்பி ஓட்டு போடுபவர்களை என்னவென்று சொல்லுவது?என்னால் தான் ஆராம்பன்னையில்  தவ்ஹித் வீழ்ச்சி அடைகிறது,நான் இருப்பதால்தான் அவர்கள் தவ்ஹிதுக்கு வரவில்லை என்று பேசுபவர்கள் இந்த மானங்கெட்டவர்களுடன் கூட்டு வைத்துள்ளார்கள் என்றால் இவர்கள் சுன்னத் ஜமாத்தை கேவலப்படுத்துகிறார்களா? இல்லை தங்கள் ஓட்டுக்காக எதையும் உண்ணுவார்களா?

புதன், 12 அக்டோபர், 2011

பொய்யர்களின் நோட்டிஸ்



அன்புடையீர் அஸ்ஸலாமு அலைக்கும், நேற்று நமதூரில் ஜமா[த்தை]அத்தார்கள்மற்றும் அனைத்து சமுதாய பொது மக்கள் சார்பாக ஒரு நோட்டிசை வெளியிட்டிருந்தார்கள்..அதில் கூறப்பட்டுள்ளதாவது,'கடந்த காலங்களில் நம் ஜமாத்தினரின் ஒட்டு மொத்த ஆதரவுடன் வெற்றி பெற்ற முந்தைய ஊராட்சி மன்ற தலைவர்கள் [எத்தனை பேர்?]நிலை பற்றி நாங்கள் உங்கள் நினைவுக்கு கொண்டு வருகிறோம்.
இரண்டு முறையாக அவர்கள் ஜமாத்தார்களின் ஆதரவோடு ஏக மனதாகப்,போட்டியின்றி ,வென்றதோடு அல்லாமல் ,கடந்த மூன்றாவது முறை போட்டியிருந்தும்ஜமாத்தார்களின் ஆதரவை கேட்டு பெற்றுக் கொண்டே மீண்டும் வெற்றி பெற்றார்கள்.
அவாறு மூன்று முறை வென்று 15  வருடங்கள் பொறுப்பில் இருந்த அவர்கள் இந்த முறையும் நிற்க நினைத்தபோது ,தங்களை எல்லா தடவைகளிலும் வெற்றி பெறச்செய்த ,இதே ஜமாத்தார்களின் ஆதரவை மீண்டும் நாடி வராததன் காரணம் ஏனோ?
இவர்கள் பொய்யர்கள் ,மக்கள் மறதியை பயன்படுத்தி எப்படி வேண்டுமானாலும் புழுகுவார்கள்.என்பதற்கு இது ஒன்றே போதும்.இதற்கு முன்னர் கண்ணியமான நிர்வாக கமிட்டி இருந்தது .அவர்கள் தேர்தலில் போட்டி ஏற்படக்கூடாது என்று இஸ்லாமிய பாரம்பர்யப்படி வெள்ளி ஜும்மாவில் ஆலோசனை கூட்டம் நடக்க இருப்பதை முந்திய ஜும்மாவில் அறிவித்தும் நோட்டிஸ் போர்டில் அறிவிப்பு செய்தும் ஜும்மாவில் கூடி மூன்று முறைகளும் ஏக மனதாக தேர்வு செய்யப்பட்டார்.ஹனிபா முன்பும் ஜமாத்தில் மனு கொடுக்கவில்லை., அவர் போட்டியிடப் போவதாகவும் சொல்லவில்லை .,இப்போது ஏன் கேட்கவில்லை அவர் அப்போது ஜமாஅதாரின் ஆதரவை ஏன் கேட்டுப் பெற்றார் ?என்பது தேவையற்ற கேள்வி. மூன்று முறைகளும் ஜமாத்தில்தான் பஞ்சாயத்துத் தலைவரும் கவுன்சிலரும் முடிவு செய்யப்பட்டு ஜமாஅத் ஆதரவு கொடுத்தது.ஆனால் இந்த தடவையும் ஜமாஅத் நிர்வாக கமிட்டி அதுபோன்று தேர்தல் மனுதாக்கல் முடியும் முன் வெள்ளி ஜும்மாவில் கூடி முடிவு எடுப்பார்கள் என்று அனைவரும் எதிர் பார்த்தோம் .ஆனால் வெள்ளி ஜும்மா முடிந்தது .அதன் பின்னர் கள்ளத்தனமாக வக்ப் போர்டில் காசு கொடுத்து வெற்றி பெற்ற குள்ள நரி ஆலோசகர்களின் ஜமாஅத் மகிரிப்பில் இது விசயமாக முடிவு எடுக்கப் போவதாக அறிவித்தது.அந்த மக்ரிப் ஜமாத்தையும் ஞாயிருவில் வைக்கக் கூடாதா? அதிக கூட்டம் வந்து விடக் கூடாது என்பதற்காக் செவ்வாயில் வைத்தார்கள். தொழுகை முடிந்ததும் எந்த அறிவிப்பும் செய்ய வில்லை.தொழுகை முடிந்ததும் வாரந்தோறும் வழக்கமாக நடைபெறும் தப்லிக் கூட அறிவிப்பு செய்வார்கள் .அந்த அறிவிப்பு கூட கிடையாது..செவ்வாய் கிழமையை தேர்ந்தெடுத்தது தப்லிக் காரர்கள் கூட  இருக்க கூடாது என்பதர்க்ககவும் இருக்கலாம்.வழக்கம் போலவே கள்ள மசூராவில் கூடக்கூடிய உறுப்பினர்களும் ஆலோசனை வல்லுனர்களும் கூடி அதாவது பத்துபேர்கள் மட்டும் கூடி முடிவு எடுத்தார்கள். சேக்கையும் நில மோசடி நிஜாமையும் தலைவருக்கும் கவுன்சிலருக்கும் தேர்ந்து எடுத்தார்கள்.அப்புறம் சில கவுரவ ஆலோசகர்களுக்கும் இது பிடிக்காததால் நாலைந்து பேர் வித்ரு ஜமாஅத் வீட்டில் கூடி மறைந்த மதார் சாஹிபை தேர்வு செய்தார்கள்.இப்படியாக கூடிய செவ்வாய் கிழமை மக்ரிப் ஜமாஅத் ,வித்ரு ஜமாத்தில் கூடிய அதிகபட்சம் பத்து பேர் மட்டும் கூடி எடுத்த முடிவுகளும் பள்ளிவாசல் நிரம்பி வழிந்த ஜும்மா முடிவுகளும் ஒன்றாகுமா?
இப்போதைய ஜமாத்தின் தலைவர் யார் ?
கடந்த தேர்தலின் பொது ஜும்மா ஜமாஅத் எடுத்த முடிவுக்கு எதிராக உறுப்பினராக போட்டியிட்டவர்தான் வைஸ் .உதுமான் ஆவார்கள் .
இப்போதைய இணை செயலாளர் ஜும்மா ஜமாஅத் முடிவுக்கு எதிராக பிரச்சாரம் செய்தவர்.
துணை செயலாளர் உறுப்பினராக போட்டியிட்டவர்.
இன்னும் பள்ளிவாசல் கமிட்டி உறுப்பினர்களும் ஜும்மா ஜமாஅத் முடிவுக்கு எதிராக போட்டியிட்டவர்கள் மற்றும் பிரச்சாரம் செய்தவர்கள்.
இப்படிப்பட்ட வர்கள் இப்போது ஜமாத்தின் மகிமை பற்றி பேசுவது வேடிக்கை அல்லாவா?
அடுத்து அவர்கள் கேட்டிருப்பது ,எதனையும் செய்யாத தங்களின் சாதனைகள் பட்டியலிட முடியாமல்  ஜமாத்தை சந்திக்க முடியாத பயத்தினாலா?என்பது 
ஒ.ஒருவேளை இதனால் தான் பன்னாஸ் கவுன்சிலர் ,பழைய  வல்லூருவும்  மறைமுகமாக வளவு வழியாக பஞ்சாயத்துக்குள் நுழைய முயற்சிக்கிறாரோ! இதிருக்கட்டும் உங்க ஜமாஅத் கமிட்டி ஏன் வெள்ளியன்று வழக்கம் போல் ஜும்மாவில் கூடி முடிவு எடுக்காமல் செவ்வாய் மக்ரிபிலும் வித்ருவிலும் கூடி முடிவு எடுத்தத்து? நீங்கள் ஜமாத்தில் வெற்றி பெற்றவர்கள் தானே ! உங்களுக்குள் இருந்த பயம் என்ன /அதை சொல்லுங்கள் 
அடுத்து மூன்று முறையும் ஜமாத்தினரின் ஆதரவால் வெற்றியை ருசித்த அவர்கள் இவ்வாறு ஜமாத்தினரை புறக்கணிக்கலாமா?ஏற்றி வைத்த ஏணியை உதாசீனப் படுத்தலாமா?
கொஞ்சம் கூட வெட்கம் இல்லாமல் இப்படி கேட்டுள்ளார்கள்.இஸ்லாமிய பாரம்பரிய படி ஜமாத்தின் முக்கிய  முடிவுகள் அனைத்தும் வெள்ளிகிழமை ஜும்மா நாளிலே எடுக்கப்படும் .அந்த நிகழ வை அப்படியே மாற்றி ஜமாத்தை குப்பை கூளமாக்கி கள்ளமசூரா கூட்டி உறுப்பினர்கள் அல்லாத கள்ள ஆலோசகர்களுடன் ஆலோசனை செய்து வந்தவர்கள் ,பஞ்சாயத்து தேர்தலிலாவது வெள்ளியன்று அதிகமான மக்கள் கூடும் நாளில் பஞ்சாயத் தலைவர் பற்றி முடிவு எடுக்க கூடாமல் வித்ரு ஜமாத்தில் முடிவு எடுத்து ஜும்மாவில் ஜமாத்தின் முடிவு என்று அறிவிக்கிறார்களே இவர்களுக்குஎன்ன திமிர் இருக்கிறது? ஜமாத்தை கிள்ளுக் கீரையாகாக்கி விட்டு நிஜாமின் மனம் போல் ஆடும் இவர்கள் அல்லவா  ஏற்றி வைத்த ஏணியை உதாசீனப் படுத்தி வருகிறார்கள்.ஒருவேளை வக்ப்போர்டில் பணம் கொடுத்து தங்களை நிர்வாகிகளாக ஆக்கிய நிஜாமை ஏற்றி வைத்த ஏணியாக எடுத்துக் கொண்டார்களோ?
நமதூரின் முன்னேற்றரத்திர்க்காக குறிப்பிட்டு சொல்லக் கூடிய திட்டங்களில் அவர்கள் கவனம் செலுத்திய விவரத்தினை அவர்கள் பட்டியலிட்டு காட்ட  முடியுமா? 
முடியுமே !கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் ஒவ்வொரு யூனியனிலும் ஜனாதிபதி அவார்டுக்காக மூன்று பஞ்சாயத்துக்கள் தேர்வு செயப்பட்டதில் நமது யூனியனில் ஆறாம்பண்ணை பஞ்சாயத்துவும் ஒன்று. 31  பஞ்சாயத்துக்களில் முதல் மூன்று இடங்களில் ஒன்றாக இருந்து ஜனாதிபதியிடம் சான்று வாங்கியது ஒன்று போதாதா? இந்த கள்ள மசூரா ஜமாத்திடம் சான்று வாங்க என்ன வேண்டி கிடக்குது 
அடுத்து அவர்கள் கூறுவது 
ஊர் இரண்டுபட்டால் வேண்டாதவர்களுக்கு கொண்டாட்டம்தானே 
இதில் ஊர் யார்?வேண்டாதவர்கள் யார்?விவஸ்தைகெட்ட கள்ள ஜமாத்தே !உங்களுக்கு யோக்கியதை இருந்தால் ,உங்களது செயலாளர்,சில உறுப்பினர்கள் உட்பட ஊர் மக்கள் அனைவரும் கலந்து கொள்ளக் கூடிய ஜும்மாவில்அல்லவா முடிவு எடுத்திருக்க வேண்டும் .பள்ளிவாசளுக்குரிய ஊழியர்களை நியமிக்கவே கள்ள ஜமாது நிர்வாக் கமிட்டிக்கு அதிகாரம் உண்டுபஞ்சாயத்து தலைவரை போட்டியின்றி தேர்ந்தெடுக்க உங்களுக்கு அதிகாரம் தந்தது யார்?வெள்ளி ஜும்மாவை சந்திக்க திராணியில்லாமல் மக்ரிபிலும் வித்ருவிலும் கூட வேண்டிய அவசியம் என்ன?ஆக ஊரை இரண்டாக்கி ஜும்மாவில் கூடாமல் மக்ரிபிலும் வித்ருவிலும் கொண்டாடுவது நீங்கள் அல்லவா? 
பள்ளிவாசல்  நிர்வாகத்திற்கு இடைஞ்சலாகவும் ,தொந்தரவையும் கொடுக்கும் நபர்களின் மீது காவல்துறையிடம் புகார் அளிக்க சென்றால் ,அவர்களுக்காக வக்காலத்து வாங்கவே தங்களது முக்கிய கடமைகள் அவர்களின் பணிகள் இருந்தனே என்பதனை நீங்கள் அறிவீர்கள்.
மக்களை ஏமாற்ற சொல்லப்படும் பசப்பு வார்த்தைகள். இவர்களது செயலாளர் தொழுதால் அல்லவா பள்ளிவாசலின் அருமை தெரியும் .அவரது மகன் தனது தந்தை செயலாளர் ஆகிவிட்டார் என்பதால் ராஜாவூட்டு கன்னுக்குட்டி போல் பள்ளிவாசலை அந்தப்புரமாக நினைத்து 
தவ்ஹித் ஜமாத்காரர்களை கிண்டல் செய்து வந்தார்.அன்று சாகுலை கிண்டல் செய்யவும் அவரது சகோதரரும் சேர்ந்து விரட்டினார்கள் பள்ளிக்குள் ஓடி ஒழித்து தப்பித்துக் கொண்டான்.இதை தலைவர் இருதரப்பினரையும் அழைத்து விசாரிக்காமல் ,நிலமோசடி நிஜாமின் ஆலோசனை பேரில் பள்ளிவாசல் லட்டர் பேடில் குறிப்பிட்ட நபர்கள் மீது கம்ப்ளைன்ட் கொடுத்தார்கள்.உடன் தவ்ஹித் ஜமாஅத் மாவட்ட நிர்வாகத்துடன் தொடர்பு கொண்டு உண்மை நிலை சொல்லப்பட்டு நடவடிக்கை எதுவும் எடுக்க வில்லை.பள்ளிவாசல் லட்டர் பேடு என்னவோ ஜனாதிபதி சிபாரிசு என்று நினைத்தவர்களுக்கு ஏமாற்றம் .இதற்கும் ஹனிபாவுக்கும் என்ன சம்பந்தம் மேலும் இரண்டாம் ஜமாஅத் ஐ இவர்களது தேர்தல் வாக்குறுதி என்று நினைத்து அதை அவர்களால் ஒன்றும் செய்ய முடியவில்லையே அதற்கும் ஹனிபா தான் காரணமாக இருக்குமோ என்ற அச்சம்.பாளையம் கோட்டை மிலிடெரி லயன் பள்ளி நிர்வாகிகள் உங்களைவிட திறமை மிக்கவர்கள் அரசு வேலை ஓய்வு பெற்றவர்கள்,அவர்கள் சாலை மறியல் நடத்தியும் அங்கு இரண்டாம் ஜமாஅத் நிறுத்த முடிய வில்லை.அங்கு யார் உதவுகிறார்கள்?அல்லாஹ்வின் அருளால் அலகாபாத் கோர்ட் உதவுகிறது.மேலும் ஆத்தூரில் சுன்னத் ஜமாஅத் தலைவராகவும் பஞ்சாயத்து தலைவராகவும் ஆத்தூர் ஒன்றிய அதிமுக செயலாளராகவும் டிஎஸ்பியுடன் நெருங்கிய தொடர்பும் உடைய ஷேக் தாவுதாலே அங்கு உள்ள தவ்ஹித் ஜமாத்தை அசைக்க முடியவில்லை.இறுதியில் ஷேக் தாவுத் க்கு இப்போது சீட் கிடைக்காமல் போயிற்று .
இறையருளால் புதிதாக பொறுப்பேற்ற பள்ளி நிர்வாகம் ,வெற்றி களிப்பில் எதிரணியை பழி வாங்க வேண்டும் என்ற எண்ணம் இல்லாமல் பொறுப்புடனும் பொறுமையுடனும் தம் பணியினை மிகவும் கவனத்துடனும் செய்து வருவதை ,,,,,,,
பழி வாங்க இவர்கள் என்ன தமிழக அரசையா கைப்பற்றி உள்ளார்கள் ?ஆசையைப்பாரு ,இவர்கள் என்னவோ ஜெயலிதா அரசு போலும் நாங்கள் என்னவோ திமுக காரர்கள் போல் நிலமோசடி பண்ணியிருப்பது போலவும்,முழு சுகாதார திட்டத்தின் கீழ் தனது உறவினர்களுக்கு மட்டும் பழைய கழிப்பறையில் வெள்ளையடித்து புதியதாக கட்டியதாக காட்டி காசு பெற்றது போலவும் உளறி யுள்ளார்கள் .
வளவு வழியாக நுழைய நினைக்கும் பழைய வல்லூருகளையும் பன்னாஸ்களையும் விரட்டியடிக்க கத்தரிக்கோல் சின்னத்தில் வாக்கு அளியுங்கள்.பள்ளிவாசல் பிரச்னைகளை தீர்க்க தெரியாத போலிஸ் ஸ்டேசனுக்கும் கோர்ட்டுக்கும் ஓடும் இவர்கள் மக்கள் பிரச்னைகளை தீர்த்து வைப்பார்களா?

திங்கள், 10 அக்டோபர், 2011

தவ்ஹித் ஜமாத்தின் வெற்றி 2

ஆத்தூரில் பஞ்சாயத்து தலைவராகவும் .ஜமாத்தலைவராகவும்,ஆழ்வார்திருநகர் அதிமுக ஒன்றிய செயலாளராகவும் ஷேக் தாவுத் என்பவர் இருந்தார். இவருக்கு அதிகார மட்டத்திலும் நெருக்கமான தொடர்பு இருந்தது.அடியாட்கள் பலமும் உண்டு.அந்த ஊரில் இவர்  தவ்ஹித் ஜமாத்தை அழித்து விடுவோம் .பொசுக்கி விடுவோம் என்றார்.பல இடையூறுகள் பண்ணினார்.வாடகைக்கு இருந்தவர்களின் வீடுகளை,கடைகளை காலி பண்ணுமாறும் கட்டாயப் படுத்தினார். அத்தனை தடைகளையும் உடைத்தெறிந்து சுன்னத் ஜமாஅத் பள்ளி அருகிலே தவ்ஹித் மார்கஸ் உருவாக்கி ஜும்மா மற்றும் ஐவேளைகள் தொழுகைகளும் நடை பெற்று வருகிறது.தவ்ஹித் ஜமாஅத் உறுப்பினர்கள் நமதூரை விட மிகக் குறைவாக இருந்தும் பலமிக்க ஷேக் முகம்மதுவால் தவ்ஹித் ஜமாத்தின் சுண்டு விரலைக் கூட அசைக்க முடியவில்லை.இன்னும் இந்த தடவை அவருக்கு போட்டியிட அதிமுக சீட்டும் கிடைக்காமல் போயிற்று.இவர் எந்த டி.எஸ்.பி.யைவைத்து ஆட்டம் போட்டாரோ அவர் ஓரிரு மாதங்களில் இட மாற்றம் செய்யப்பட்டார்.இதை இங்கே சொல்லுவதற்கு காரணம் என்னவெனில் ,கள்ள ஜமாத் வேட்பாளர்களுக்கு ஆதரவு தேடும் பொய்யர்கள் கூட்டம் ,நாங்கள் பிரெசிடென்ட் ஆனால் போலிசை வைத்து தவ்ஹித் ஜமாத்தை ஒன்றும் இல்லாமல் ஆக்கி விடுவோம் .இப்போதைய ப்ரெசிடென்ட் அவர்களுக்கு ஆதரவாக் இருப்பதால் தான் ஒன்றும் செய்ய முடிய வில்லை.என்றும் வெளியூர் பண்ணை  மக்களிடம் நமதூரில் பெரும் பிரச்னைகளும் தகராறுகளும் அதனால் தான் ஜமாத்தில் இருந்து போட்டியிடுகிறோம் என்றும் அதனால் எங்களுக்கு ஆதரவளிக்குமாறு வேண்டி வருகிறார்கள் .பஞ்சாயாத்தை கைப்பற்றி தங்கள் அதிகார ஆட்டம் போட்டு கமிசனிலும் பங்கு போடவே அன்றி வேறொன்றுமில்லை.இவர்கள் இதைப்போல் ஜமாஅத் தேர்தலில் இரண்டாவது ஜமாத்தை நிறுத்திவிடுவோம் என்று சொன்னார்களே முடிந்ததா?நாங்கள் ஏற்கனவே சொன்னது போல் பள்ளிவாசலில் வைத்து எழுதி கேட்டதை போலிஸ் ஸ்டேசனில் இன்ஸ்பெக்டரிடம் ஏச்சுக்கள் வாங்கி எழுதி கொடுத்தனர்.
மீரா ஸ்கூலை கைப்பற்ற திட்டம் போட்டார்கள். அதற்கும் காரணம் தவ்ஹித் ஜமாஅத் அதை வைத்துதான் வளர்ந்துவிட்டார்கள். அங்கு படிக்கும் மாணவர்களிடம் தவ்ஹித் ஜமாஅத் பற்றி பிரச்சாரம் செய்து இளைஞர்களை வழிகெடுத்து விட்டதாகவும் பொய்யர்கள் அவதூறுகளை சொல்லி வந்தனர்.அது உண்மை என்றல் அதிகமான மாணவர்கள் தவ்ஹித் மர்கசில் அல்லவா தொழுகைக்கு வரவேண்டும்.?நேரில் கண்கூடாக பார்க்கும் விசயங்களிலே இப்படி பச்சை பொய்.சொல்லுகிறார்கள்.தவ்ஹித் ஜமாத்தை சேர்ந்தவர்கள் பிள்ளைகள் கூட தவ்ஹித் மர்கசுக்கு தொழுகைக்கு வருவதில்லை.ஸ்கூலில் கல்வி மட்டுமே இருக்கிறதே தவிர அங்கு மார்க்கம் பற்றி எந்த பாடங்களும் நடக்கவில்லை.இவர்கள் சொல்லை நம்பி என்னிடம் கல்வியாளர் ஒருவர் கேட்டார்."தவ்ஹித் பற்றி பள்ளியில் பாடம் எடுக்கிறீர்களா"?என்று. இவர்களது நோக்கம் ஸ்கூலை கையாள வேண்டும் என்பதே.மீரா ஸ்கூலை வைத்துத்தான் ஆறாம் பண்ணையில் தவ்ஹித் வளர்ந்தது உண்மை என்றால் ,செய்துங்கநல்லூரில் எந்த ஸ்கூல் இருக்கிறது?அங்கு தவ்ஹித் ஜமாஅத் ஒரு பழைய பள்ளிவாசல் இருந்ததை புனரமைப்பு செய்து நமதூரை விட சிறப்பாக ஏசி பள்ளிவாசலாக செயல்பட்டு வருகிறதே.இன்னும் தவ்ஹித் ஜமாஅத் தமிழகம் முழுவதும் மிகவும் சிறப்பாகவும் சீரிய முறைகளிலும் செயல்பட்டு வருகிறதே .அந்த ஊர்களில் எந்த ஸ்கூல் உள்ளது?
அன்பு சகோதரர்களே, இந்த பொய்யர்கள் தங்களது அபிலாசைகளையும் அற்ப அதிகார வெறிகளையும் நிறைவேற்றவே தவ்ஹித் ஜமாத்தை காரணம் காட்டி வருகிறார்கள்.தவ்ஹித் ஜமாஅத் என்ன பாவம் செய்தது?
இன்று பல இளைஞர்களை நபி வழியில் திருமணங்கள் செய்கிறார்களே அது பாவமா?வட்டியில்லா கடன் வழங்கியது பாவமா? கல்வி உதவி,மருத்துவ உதவி ,ரத்ததானங்கள் செய்கிறோமே அவைகள் பாவமா?பித்ராவை முறையாக வசூல் செய்து ஏழைகளுக்கு வழங்குகிறோமே ,கூட்டு குர்பானி மூலம் ஏழைகளுக்கும் பயன் கிடைக்க செய்கிறோமே அவைகள் எல்லாம் பாவமா?மொத்த முஸ்லிம் சமுதாய நலன்களுக்கு போராட்டங்கள் நடத்துவதுதான் பாவமா? சிந்தியுங்கள் .அயோக்கியர்களை அடையாளம் காணுங்கள்.

ஞாயிறு, 9 அக்டோபர், 2011

தவ்ஹித் ஜமாத்தின் வெற்றி

அஸ்ஸலாமு அலைக்கும், 
                                                             சென்னையில் இருந்து வந்த சுன்னத் ஜமாஅத் தீவிர ஆதரவாளர் பெரியவர் ஒருவர் சொன்னாராம் ,கத்தம் பாத்தியாவில் கலந்து கொள்ள வந்த தனக்கு கடும் ஏமாற்றமே மிஞ்சியதாக கூறியுள்ளார்.மேலும் தனக்கும் ஓத மாட்டார்களோ ,தனது சந்தூக்கிலும் மாலை போட மாட்டார்களோ,அடக்கம் முடிந்த பிறகு முசாபாஹ் இருக்காதோ  என்ற ஆதங்கப் பட்டதாக கேள்விபட்டேன்.அல்ஹம்துலில்லாஹ்..இதுதான் தவ்ஹித் ஜமாத்தின் வெற்றி .எந்த தவ்ஹித் ஜமாத்தை ஒழிக்கப் போவதாக மக்களிடம் பொல்லாங்கு கூறி ஜமாஅத் தேர்தல் கொண்டு வந்தார்களோ அந்த ஜமாத்தாலே இன்று தவ்ஹித் வளர்கிறது.கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் பள்ளிவாசல் நிர்வாகத்தை மாற்றப் போகிறோம் என்று கையெழுத்து வேட்டை நடத்தி வக்ப் வாரியத்திற்கு மனுக்கள் அனுப்பினார்கள் .வக்ப் போர்டின் வழிகாட்டுதலின் படி அப்போது சூப்ரண்டாக இருந்த உதுமான் மைதீன் தலைமையில் தேர்தல் இல்லாமல் நிர்வாகத்தினரை தேர்ந்தெடுக்க கூட்டம் நடத்திய பொழுது இரு தரப்பிலும் உறுப்பினர் பட்டியல்களை கேட்டார். அப்போது அப்துல்பாரி அவர்கள் தலைமையில் ஒரு அணியும் யாக்கூப்  தலைமையில் ஒரு அணியும் பட்டியல் கொடுக்கப்பட்டது இரு தரப்பினரையும் கலந்து நிர்வாகிகளை தேர்வு செய்யலாமா என்பது பற்றி பரிசீலனை செய்தபோது யாக்கூப் தரப்பினர் மறுத்துவிட்டனர்.கூட்டம் தீர்வற்ற நிலையில் இருந்த பொழுது ,நாங்கள் .ஒரு தீர்வை சொன்னோம்.அதாவது பள்ளியில் வைத்து மவ்ளுத் ஓதக்கூடாது ,மவ்லூத் ஒதுபவரை இமாமாக நியமிக்கக் கூடாது என்று எழுதித் தந்துவிட்டு யாக்கூப் அணியினர் மட்டுமே நிர்வாகிகளாக இருந்து கொள்ளட்டும் என்று கூறினோம்.அதற்கு ஒரு சிலர் தவிர மற்றவர்களும் எதிர்த்து தேர்தல் கொண்டு வந்தனர்.எப்படியோ வென்றனர்.ஆனால் நாங்கள் எதை எழுதி  கேட்டோமோ,அதை கண்ணியமான முறையில் பள்ளிவாசலில் வைத்து  எழுதி தராதவர்கள் போலிஸ் ஸ்டேசனில் வைத்து எந்த  காலத்திலும்  மவ்ளுத்  ஓதும் இமாம்களை நியமிக்க மாட்டோம் என்று எழுதி கொடுத்தனர். இதுதான் எங்களுக்கு வெற்றி .இதைத்தானே அன்று நாங்கள் கேட்டோம் அப்போதே கொடுத்தால் நமது டெப்பாசிட் காசு மிஞ்சியிருக்கும்.தேர்தல் செலவுகள் இரு பக்கமும் ஆகியிருக்காது மேலும் நீங்க சென்னைக்கும் நெல்லைக்கும் பல முறைகள் படை எடுத்திருக்க வேண்டாம்.நபி[ஸல்] அவர்கள் காட்டித்தந்த பெருநாள் திடல் தொழுகைக்கு அப்துல் பாரி அவர்களை ஏற்பாடு செய்யுமாறு வேண்டிய போது எங்களது ஆதரவாளர் என்று கூறப்பட்ட அவர் மறுத்தார். ஆனால் இன்று நபி[ஸல்]அவர்கள் கூறியவாறு நாங்கள் நடத்தி காட்டியது போன்று நீங்களும் திடல் தொழுகைக்கு வந்து விட்டீர்கள். இதுதான் எங்களுக்கு வெற்றி .நாங்கள் ஓட்டுகளை எண்ணி அடையும் அற்ப வெற்றியை விட இது போன்ற வெற்றியை எதிர்பாக்கிறோம்.தேர்தலில் நீங்கள் யார் வெற்றி பெற்றாலும் எங்களுக்கு அதில் ஒன்றும் இல்லை.ஆனால் நீங்கள் அனைவரும் தவ்ஹித் கொள்கைகளை பின்பற்ற வேண்டும் என்பதே எங்களது இலக்கு.அதுவே எங்கள் வெற்றி.
நாங்கள் உள்ளாட்சி தேர்தலில் பங்கேற்கவோ ,ஆதரிக்கவோ மாட்டோம் என்று அறிவித்த பிறகும் உங்களது தேர்தல் ஆதாயம் கருதி வேண்டுமென்றே எங்களை எதிர்த்து போட்டியிடுவதாக கூறிவந்ததோடு எஸ்.பீ யூனூஸ் மருமகன் அப்துல் சலாம் என்பவரை நிஜாம் என்ற மது சப்ளையரை தோற்கடிக்க நாங்கள் நாற்பதினாயிரம் கொடுத்து நிறுத்தியுள்ளதாக தொழ வராத செயலாளர் உட்பட சில கழுகுகள் வதந்தி பரப்பி வந்தனர்.சலாம் ஏன் அடுத்தவர்களிடம் பணம் எதிர்பாக்க வேண்டும்?பொய்யை சொன்னாலும் பொருந்த சொல்லவேண்டுமா?மோசடி மன்னன் நிஜாமின் சிறப்புகளை சொல்லி ஓட்டு கேட்க வழியில்லாததால் இவ்வாறு பொய்யை பரப்பி இப்படி ஒரு உள்ளூர்காரனை தோற்கடிக்க வெளியூர்காரனுக்கு பணம் கொடுக்க வேண்டுமா?ஐயோ பாவம் நிஜாம். ஆதலால் அவருக்கு சுன்னத் ஜமாத்தினரே ஓட்டு போடுங்கள் ,என்று பிரச்சாரம் செய்து வருகின்றனர். இந்த பொய்யர்கள் கூறுவதை எல்லாம் உண்மை என்று நம்பி வந்த ஒரு பெரியவர் சுன்னத் ஜமாஅத் வெறியர் , இன்று பிரச்சாரம் செய்ய வந்த அப்துல் சலாமிடமும் அவரது மாமாவிடமும் நாற்பதினாயிரம் பற்றி கேட்டுள்ளார்.விடுவார்களா அவர்கள்? செமையாக வாங்கி கட்டிகொண்டார்.ஆக பெரும் பொய்யர்களே நய வஞ்சகர்களே நாங்கள் உள்ளாட்சி தேர்தல்களை கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை என்னும் நிலையில் எங்களை வம்புக்கு இழுப்பது நியாயமா? உங்களது ஸ்பெசல் சுன்னத் ஜமாஅத் கொள்கைப் படி அண்ணன் நிஜாம் வழியில் சாராயம் கொடுத்து நாடார் தெருவில் ஓட்டு கேட்டது போல் தெருக்களிலும் ஏதாவது பாமாயில் கொடுத்து ஓட்டு கேட்க வேண்டியது தானே ! ஏன் தவ்ஹித் ஜமாத்தையும் சுன்னத் ஜமாத்தையும் உங்கள் அற்ப அரசியல் ஆதாயங்களுக்கும் சேர்மன் வேட்பாளர் போடும் லட்சங்களுக்கும் பயன்படுத்த வேண்டும்? [இறைவன் நாடினால் தொடரும்]

வெள்ளி, 7 அக்டோபர், 2011

மனிதாபிமானத்தை விஞ்சும் தேர்தல் வெறி


அன்பு பண்ணையர்களே,அஸ்ஸலாமுஅலைக்கும்.

வர  இருக்கின்ற  பஞ்சாயத்து  தேர்தலில் நமது ஒற்றுமை வேடதாரிகள் ஒற்றுமையை நிலை நாட்ட எங்ஙனம் வேஷம் போட்டு வருகின்றனர் என்பதைமுன்பு கூறியிருந்தேன்.நமதூரில் மிக முக்கிய முடிவுகள் எல்லாம் வெள்ளியன்று ஜும்மாவுக்கு பிறகே எடுப்பது வழக்கம்.ஆனால்  தேர்தல் வருவதும் அதில் போட்டியிடுவதற்கு திட்டமிட்டு ரேசன் கார்டு வாக்காளர் அடையாள அட்டை எல்லாம் முன்பே மாற்ற திட்டமிட்டவர்கள் ஜமாத்தினர் அதிகமாக கூடக்கூடிய ஜும்மா நாளை வேண்டுமென்றே தவிர்த்துள்ளனர்..அதன் பிறகு செப்.27 அன்று செவ்வாய் மாலை மக்ரிப் ஜமாத்தில் பஞ்சயத்துதேர்தல் பற்றி முடிவு எடுக்கப் போவதாக போர்டில் எழுதி போட்டவர்கள்,தொழுகை முடிந்ததும் வழக்கம் போல் அறிவிப்பு எதுவும் செய்யாமல் ஜமாத்தினர் நிர்வாகி உட்பட பெரும்பகுதியினர் சென்ற பின்னர் பத்து பேர் கொண்ட ஜமாஅத் அதாவது அசல் நிர்வாக கமிட்டிசேர்ந்தவர்கள் மட்டுமே பஞ்சாயத்து வேட்பாளர்களை தீர்மானிக்கின்றனர்.நிர்வாக கமிட்டி உறுப்பினர்கள் மட்டும் ஜமாஅத் என்று சொல்லிக்கொண்டு தேர்ந்து எடுப்பதற்கு பஞ்சாயத்து தலைவரும் கவுன்சிலரும் என்ன பள்ளிவாசல் ஊழியர்களா?சரி அதன் பின்னர் பஞ்சாயத்து வேட்பாளர் மாற்றப்படுகிறார் .ஏன் மாற்றப்பட்டார் ?என்று மக்களுக்கு தெரிவித்தீர்களா?நாலு பேர்கள் கூடி ஜமாஅத் வேட்பாளரை தேர்ந்தெடுக்க உங்களுக்கு அதிகாரத்தை தந்தது யார்?நீங்கள்தானே ஜமாத் தேர்தலில் வெற்றி பெற்றீர்கள்.அப்போது ஜமாஅத் உங்களுக்கு ஆதரவாகத்தானே இருக்கும் ?பிறகு ஏன் வெள்ளி ஜும்மா ஜமாத்தைசும்மா வாக்கி விட்டு புதன் இரவு வித்ரு ஜமாத்தில் கூடி பஞ்சாயத்து தலைவரை தேர்ந்தெடுக்க வேண்டிய அவசியம் என்ன? உங்களால் போட்டியிட திராணியற்று ,பஞ்சாயத்து அலுவல்களில் அனுபவம் இலாத மாதர் சாஹிபை அவரது விருப்பத்திற்கு மாற்றமாக வலுக்கட்டாயமாக தேர்ந்துடுத்தது ஏன்? அவரது வெகுளித்தனத்தை பயன்படுத்தி ,போற்றி புகழ்ந்து ஏமாற்றிவிட்டு அதிகாரத்திலும் ,கமிசனில் பங்கும் போடவா? ஜமாஅத் சார்பாக பஞ்சாயத்து தலைவர்க்கும் கவுன்சிலருக்கும் வேட்பாளர்களை நிறுத்த வேண்டும் என்று சுன்னத் ஜமாத்தில் எந்த மத்ஹபில் கூறப்பட்டுள்ளது.ஒற்றுமை கருத்தில் கொண்டால் பெரும்பான்மை மக்கள் கூடும் ஜும்மா நாளில் அல்லவா முடிவு எடுத்திருக்க வேண்டும்?உங்களை தேர்ந்தெடுத்த ஜமாத்தினரை புறக்கணித்துவிட்டு வித்ரு ஜமாத்தில் முடிவு எடுக்க வேண்டிய அவசியம் என்ன?

மறைந்த மதார் சாஹிப் அவர்களுக்கு இதய வலி ஏற்பட்டு ஷிபா மருத்துமனையில் அனுமதிக்கப்படுள்ளார்.மிகவும் சீரியசான முறையில் உடன் அறுவை சிகிச்சை தேவைப்படும் கட்டாயத்தில் அனுமதிக்கப்படுள்ளார். ஆனால் உங்களுடன் நெருங்கி பழகிய பல விசயங்களில் உங்களுடன் ஒத்துப்போன ஜாபார் ஆலிம் நீக்கப்பட்ட பிறகும் உங்களுடன் ஐக்கியமாக இருந்தவர் ,உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் சூழ் நிலையில் கவுன்சிலர் வேட்பாளர் ,முன்னாள் கவுன்சிலருடன் ஓட்டு வேட்டையாடியது நியாயமா?நாடார் தெருவில் மதுபாட்டில்கள் வழங்கியும் கொங்கராயகுரிச்சியில் எதை எல்லாமோ கொடுத்தும் பிரச்சாரமும் பண்ணியது மனிதாபிமான செயலா?அவர் இறந்த செய்தி ஒன்பது மணியிலிருந்து காட்டு தீ போல் பரவிக் கொண்டிருக்கையில் இரவு பத்தரை மணிவரை உங்களது ஓட்டு வெறி தணியவில்லையே ஏன்? பிரச்சாரத்திற்கு இன்னும் நாட்கள் இல்லாமல் போகிவிட்டதா? தன்னுடன் போட்டியிடும் சக வேட்பாளர் உயிருக்கு போராடும் வேலை அவரருகில் இருந்து கண்ணுக்கு இமை போல் இருந்து காத்திருக்க வேண்டாமா? அவர்தம் உயிரை விட உனது வெற்றி அத்தனை பெரிதாகி விட்டதா?

 அவர்தம் ஜனாசா அடங்கப்படும் வேளையிலும் கபர்ஷ்தானிலும் வந்த மக்களிடம் ஓட்டு கேட்க வேண்டுமா?இது உங்களது மனிதாபிமான செயலா? தவ்ஹித் மர்கசில் தொழ வந்தாலே,நெருங்கி உறவினர் ஆனாலும் முகத்தை திருப்பிக் கொள்ளும் அவர் வேட்பு மனுவாபஸ் நாளில்,தன்னை எதிர்த்து போட்டியிடும்  ஹனிபாவை டீ சாப்பிட அழைத்ததோடு தன்னுடன் காரில் ஊருக்குகு வருமாறு அழைத்துள்ளார்..மதார் சாஹிப்  உண்மையிலே எதிர்த்து போட்டியிடுபவாராக இருந்தால் தன்னை எதிர்ப்பவன் நிழல் கூட தன மீது விழக்கூடாது என்று நினைப்பவர்.ஆனால் அதற்கு மாற்றமான அவரது செயல்பாடுகளிலிருந்து    அவர் மீது தேர்தல் வலுக்கட்டாயமாக திணிக்கப்பட்டுள்ளது என்பது உண்மை .

வியாழன், 6 அக்டோபர், 2011


மமக எம்.எல்.ஏ-க்கு 1 ஆண்டு சிறை தண்டனை: பரபரப்பு தீர்ப்பு!

02OCT
முறையாக அனுமதி பெறாமல் வெளிநாட்டிலிருந்து பணம் வசூலித்ததாக சிபிஐ தொடர்ந்த வழக்கில் மனிதநேய மக்கள் கட்சி எம்.எல்.ஏ ஜவாஹிருல்லாவுக்கு ஒரு ஆண்டு கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக கூட்டணியில் மனித நேய மக்கள் கட்சியின் சார்பாக ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.எல்.ஏ வாக இருக்கும் தமுமுக தலைவர் ஜவாஹிருல்லாஹ் மீது தொடரப்பட்டிருந்த வழக்கொன்றில் சென்னை நீதிமன்றம் ஒரு ஆண்டு கடுங்காவல் தண்டனை விதித்து தீர்ப்பு கூறியுள்ளது.
இது தொடர்பாக சிபிஐ காவல்துறையினர் நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
“சிபிஐ காவல்துறையின் லஞ்ச ஒழிப்பு பிரிவு சார்பில் தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழக மாநில தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லாஹ், மாநில பொதுச் செயலாளர் எஸ்.ஹைதர் அலி மற்றும் எச்.சையது நிசார் அகமது, ஜி.எம்.சேக், நல்ல முகமது களஞ்சியம் ஆகியோர் மீது சென்னை எழும்பூர் கூடுதல் தலைமை மெட்ரோபாலிட்டன் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
கடந்த 15.12.1997 முதல் 20.6.2000 வரை இவர்கள் செய்த குற்றம் தொடர்பாக இந்த வழக்கு தொடரப்பட்டது. வெளிநாடுகளில் இருந்து ரூ.1 கோடியே 54 லட்சத்து 88 ஆயிரத்து 508 வசூலித்ததாகவும், இதற்கு முறையாக மத்திய அரசிடமோ, ரிசர்வ் வங்கியிடமோ அனுமதி பெறவில்லை என்றும் மேற்கண்ட 5 பேர் மீதும் வெளிநாட்டு பணம் முதலீட்டு ஒழுங்கு முறை சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டி வழக்கு போடப்பட்டது.
இந்த வழக்கில் சென்னை எழும்பூர் கூடுதல் தலைமை மெட்ரோபாலிட்டன் நீதிபதி பி.மோகன்தாஸ் தீர்ப்பு வழங்கினார். அந்தத் தீர்ப்பில் ஜவாஹிருல்லாவுக்கும், ஹைதர் அலிக்கும் தலா 1 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனையும், சையது நிசார் அகமது, ஜி.எம்.சேக், நல்ல முகமது களஞ்சியம் ஆகியோருக்குத் தலா 2 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்து உத்தரவிட்டார்.
மேலும் இவர்கள் அனைவருக்கும் ரூ.1 லட்சத்து 40 ஆயிரம் (ஜவாஹிருல்லாஹ், ஹைதர் அலி ஆகியோருக்குத் தலா ரூ. 10 ஆயிரம், சையது நிசார் அகமது, ஜி.எம்.சேக், நல்ல முகமது களஞ்சியம் ஆகியோருக்குத் தலா ரூ.40 ஆயிரம்) அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார்.
தண்டனை பெற்றவர்களில் எம்.எச்.ஜவாஹிருல்லாஹ் மனிதநேய மக்கள் கட்சியின் (ராமநாதபுரம் தொகுதி) எம்.எல்.ஏ. ஆவார்.


குலோப் மட்டன் மசால்

தக்கடி என்ற வார்த்தை, நம்மை போன நூற்றாண்டுக்கு அழைத்து செல்வது போல் தெரியும்.பார்ப்பதற்கு சிலருக்கு அருவருப்பாகக்கூட  தெரியும்.ஆனால் அதன் சுவை புதியதாக உண்ணுபவர்களை யும் மீண்டும் தன பக்கம் இழுக்கவே செய்கிறது. நமதூரும் மேலாப்பாளையமும் தவிர மற்ற ஊர்களில் இந்த உணவு கிடையாது. பாரம்பர்யமிக்க இந்த உணவு இப்போது நமது ஊரிலும் கல்யாண வீடுகளில் குறைந்து வருகிறது.இந்த உணவை மீண்டும் பிரபல்யமாக்க கொழுக்கட்டை சைஸ் இல்லாமல்  உருண்டையாக குலோப் ஜாமுன் சைஸ்க்கு செய்து கூட்டு என்று சொல்லக்கூடிய மாவுக்கரைசலை  திக்காக வைத்து ;'குலோப்  சிக்கன் மசால், குலோப் மட்டன் மசால்.' என்று  சென்னை யில் உள்ள நமதூர் பெண்கள் டி.வி  சமையல் நிகழ்ச்சிகளில் அறிமுகம் செய்து வைக்கலாம்.நபி[ஸல்]அவர்கள் இந்த உணவை விரும்பி சாப்பிடுவதாக பிறர் சொல்ல கேள்வி பட்டுள்ளேன். 

munavvirul சொன்னது…
ஆறாம்பண்ணை என்று ஏன் பெயர் வந்தது? "ஆறாம் "என்ற வார்த்தைக்கு உர்து மொழியில் "ஒய்வு" சுகம்" என்று பொருள்..ஓய்வாக,சுகம் அனுபவிக்க சிறந்த பண்ணை என்ற காரணத்தால் இந்த பெயர் வந்தது என்றும் ,நமதூரில் முன்பொரு காலத்தில் திருமணம் செய்திருந்த பொதக்குடியில் அடங்கப்பட்டிருக்கும் அப்துல் கரீம் ஹஜ்ரத் என்பவர் இந்த பெயரை வைத்ததாகவும் "இஸ்லாமிய கலைக்களஞ்சியம் "என்ற புத்தகத்தில் படித்த ஞாபகம் ..

திங்கள், 3 அக்டோபர், 2011

ஆறாம்பண்ணை பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிடுபவர்கள்



பஞ்சாயத்து  தலைவர்  வேட்பாளர்கள் 
1.M .அமிதா W/O -ஹனிபா ---------- கத்தரிகோல்
2.M .ஆமீனாW/O -மைதின் பிள்ளை ---------உருளை 
3.M .முகைதின் பாத்திமாW/O -மதார் -----.பூட்டு
பஞ்சாயத்து உறுப்பினர்கள் வேட்பாளர்கள் 
ஹனிப் அணி 
1.வது  வார்டு மவுலானா .அபுல்  ஹசன் -------சாவி [மெய்ன் ரோடு]
2.வது வார்டு.A .அஜீசா W/O அ.சே. அப்துர் ரஹ்மான்.[வ.தெரு +ந.தெரு]
3.வது A.S.M.செய்து முஹம்மது [வ.தெரு]
4.வது A.சல்மா W/O Mஅஜீஸ்.[ந.தெரு]
5. வது A .அப்துல் அலி[ந.தெரு] [அட்டப்ஸ்]
6 .வது S .காஜா [ந.தெரு+தெ.தெரு] [ப.பட்டியார்]
7 .வது.S .அமிதா S/O ஜிலா [தெ.தெரு]
எதிர் அணி 
1 .வது வார்டு.வைஸ்.இப்ராஹீம் ---------------------சீப்பு 
2 .வது வார்டு.ஒ.கே.சாயிதா 
3.வது ஷேக்.[no.2]
4 வது M .அலிமா W /O.K.MK.முஹம்மது அலி
5 . வது S .இப்ராஹீம் [electric]
6  வது அப்துல் கனி [booth]
7 .வது பாத்திமா W/O K.M அப்துல் வஹாப்  
 தேர்ந்தெடுக்கப்பட்ட  உறுப்பினர்கள் 
8 வது  வார்டு  நாடார்  தெரு ஆரோக்கியம் [தெ.தெரு+நாடார் தெரு]
9 வது வார்டு தாழ்த்தப்பட்டோர் [அரபாத் +தா.தெரு]
போட்டியென்றால் அனைத்து வார்டுகளிலும் முஸ்லிம்களே உறுப்பினர்களாக முடியும்.விட்டு கொடுக்கும் மனப்பான்மையில் அவர்களுக்கு வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
கவுன்சிலர் வேட்பாளர்கள்.
1..W/O  சலாம் சுயேச்சை.[கொ.குறிச்சி+ஆ.பண்ணை]
2.W/O A.பசீர்  அஹ்மது  A.D.M.K
3.W/O T.நிஜாம்   D,M.K 

ஞாயிறு, 25 செப்டம்பர், 2011

ஓட்டைவிழுந்த ஒற்றுமை பஞ்சராகிப் போனது பஞ்சாயத்து தேர்தலில்


ஓட்டை விழுந்த ஒற்றுமை பஞ்சராகிப் போனது பஞ்சாயத்து தேர்தலில் 

அன்பு ஆறாம்பண்ணை  சகோதரர்களுக்கு ,அஸ்ஸலாமு அழைக்கும் .
தமிழ்நாடு தவ்ஹித் ஜமாஅத் வரும் உள்ளாட்சி தேர்தலில் பங்கு பெறாது,அமைப்பின் பேரில் யாரையும் ஆதரிக்காது.நிர்வாகிகள் போட்டியிடக் கூடாது உறுப்பினர்கள் போட்டியிட்டாலும் டிஎன்டிஜே பேனரை பயன்படுத்தக் கூடாது.என்று தெளிவாக அறிவித்துள்ளது.ஆனால் நமதூர் கவுன்சிலர் தேர்தலில் சுன்னத் ஜமாஅத் போர்வையில் ஊருக்குள் நுழைந்த ஒருவர் ,அமைதியாக இருந்த ஆராம்பன்னையில் ஒற்றுமையை கொண்டு வரப்போகிறோம் என்ற போதையை இளைஞர் களிடம் ஏற்றி ஒற்றுமையாக இருந்த ஊரில் வகப் போர்டில் ஹராமாக சம்பாதித்த காசை வீசி  தேர்தலை கொண்டு வந்து அழிசாட்டியம் பண்ணியவர்கள் ஜமாஅத் நிர்வாகத்தை கைப்பற்றி ஒரு  வருடத்தில் சாதித்தது என்ன? அப்துல் பாரி என்ற ஒரு நபரைவிட,பதினான்கு உறுப்பினர்களும் பதினெட்டு ஆலோசகர்களும் ,நிஜாம் என்ற தலைமை ஆலோசகரும் அவருக்கு பின்னால் பல கள்ள ஆலோசகர்களும் சேர்ந்து பள்ளியில் சாதித்தது என்ன ?சிந்தா தர்காவில் கச்சேரி வைபவங்களும் வானவேடிக்கைகளும் ,மீலாதுவிழா என்ற பெயரிலே வக்ப் சிக்கந்தரை அழைத்து வந்து ஆட்டம் போட்டதையும் தவிர இவர்கள் சாதித்தது என்ன?அப்துல் பாரி அவர்கள் இருதரப்பினரையும் அரவணைத்து சென்று இரண்டாவது ஜமாஅத் நடைபெறாமலும் ,பள்ளியின் அனைத்து நிர்வாக வேலைகளையும்,மற்றும் இமாம் இல்லாத காலங்களில் இமாமாகவும் தனி நபராக நின்று செயல் பட்டதைவிட இந்த நிர்வாக கூட்டம் என்ன சாதித்து விட்டது?தரீக்கா காரரை துணைத்தலைவராகவும் தவ்ஹித் ஜமாஅத்காராரை செயலாளராகவும் வைத்துக் கொண்டு போலிஸ் ஸ்டேசனுக்கும் கோர்ட்டுக்கும் செல்லாமலே பள்ளியில் எந்த ஒரு பிரச்னைகளும் இல்லாமல் வழி நடத்தி செல்லவில்லையா?இதுவன்றோ ஒற்றுமைக்கு சான்று. ஹாருணை தெரியும் சிக்கந்தரை தெரியும் என்று தேர்தலை கொண்டுவந்து நமதூர் பணம் 28000/= ரூபாய்களை வக்ப் போர்டில் கொண்டு சேர்த்தததை தவிர வகப் போர்டில் இருந்து இவர்கள் நமது பள்ளிவாசலுக்கு ஏதாவது உதவிகளை பெற முடிந்ததா?
              ஊரை இரண்டாக்கிவிட்டார்கள் என்று ஏகமாய் கோசம் போட்டவர்கள்.ஒரே ஜமாத்தாக தொழவேண்டும் என்று சென்னை சிபாரிசுடன் எஸ்பி அலுவலகத்துக்கு மனு கொடுத்தவர்கள் ,ஊரில் ஒற்றுமை இல்லாததால் பலநாட்கள் தூங்காமல் இருக்கிறோம் ,என்று கண்ணீர் வடித்தவண்ண்மாக இருந்தவர்கள் இப்போது நடைபெற இருக்கின்ற பஞ்சாயத்து தேர்தலில் என்னஒற்றுமை நடவடிக்கை எடுத்தார்கள்?வழக்கமாக கடந்த மூன்று பஞ்சாயத்து தேர்தல் களிலும் ஜும்மாவுக்கு பிறகு ஆலோசனை கூட்டம் நடத்தி தேர்தல் இல்லாமல் தேர்ந்தெடுக்க வழி வகைகளை ஆலோசனை செய்தது போல் இல்லாவிட்டாலும் கூட அற்ப முயற்சி கூட செய்யவில்லையே ஏன்?மனக்கரையில் பிரச்னைகள் வரக் கூடாது என்று அவர்கள் எடுத்த முடிவுகள் கூட அமைதி பூங்காவான ஆராம்பன்னையில் எடுக்கப் படவில்லையே ஏன்? ஒரு மாதமாக ரேசன் கார்ட் ,வாக்காளர் அடையாள அட்டை மாற்றம் முயற்சியில் இடி விழுந்து விடக் கூடாது என்பதாலா? இல்லை , நிர்வாக கமிட்டியின் தகுதி மிக்க,மீக்க வேட்பாளர்களை ஜமாத் பொதுக் குழு நிராராகரித்துவிடும் என்ற உள்ளூர பயமா?இல்லை தங்களுக்காக காசை செலவழித்து பள்ளிவாசல் நிர்வாக கமிட்டி அந்தஸ்தை தந்த நிஜாமுக்கு நன்றி பாராட்டும் செயலாகவா?நிஜாமும் செக்கும் வந்து இன்னும் என்ன என்ன ஒற்றுமைகள் ஏற்படுத்தப் போகிறார்களோ?அல்லது என்ன கேவலங்கள் நடைபெறப் போகிறதோ ,அல்லாஹ் காப்பாற்றுவானாக ,இவர்களை தோற்கடிக்க அவன் அருள் புரிவானாக!இவர்கள் ஆராம்பன்னைக்கு செய்த புண்ணியங்களை கொஞ்சம் பட்டியலிட்டு காட்டுங்களேன்.அல்லது அவர்களின் தனி பட்ட பண்புகளை செயல்பாடுகளை மக்களிடம் எடுத்து சொல்லி உங்களது நன்றி கடனை நிறை வேற்றுங்கள்.{அடுத்தவர் நிறுவனத்தில் அறிமுகமில்லாத பெண்களிடம் சென்று கள்ள கணக்கு கேட்டது உட்பட }நாங்கள் அதில் தலையிடவில்லை.ஆனால் தேவையற்ற முறையில் சுன்னத் ஜமாதுக்கும் தவ்ஹித் ஜமாத்துக்கும் இடையே நடக்கும் தேர்தல் என்று பொல்லாங்கு பேச வேண்டாம்.தவ்ஹித் ஜமாஅத் சார்பாக கொங்கராயகுரிச்சியை சேர்ந்த ஒருவரை கவுன்சிலர் தேர்தலில் நிறுத்தி உள்ளதாக  ஒரு பச்சை  பொய்யை நிர்வாக கமிட்டி முதன்மை செயலாளர் அவர்கள் கூறியுள்ளார்கள்.இப்படி ஆதாரமற்ற அவதூறுகளை பரப்பியதன் காரணமாகவே இந்த பிளாக்கர் மூலம் உடைத்திட ஒரு வருட காலமாகிவிட்டது.மீண்டும் பொய்களா?உங்களது அரசியல் ஆதாயங்களை அடைய சேர்மனுக்கு போட்டியிடுபவர் வீசும் சில லட்சங்களை தட்டி பறிக்க அல்லாஹ்வின் மார்க்கத்தை பயன்படுத்துவதா?பஞ்சாயத்து கான்றாக்ட்களில் கமிசன் பெற சுன்னத் ஜமாஅத் என்ற பசுத்தோல் போர்வையா?நீங்கள் யாரை ஏமாற்ற முயசிக்கிரீர்கள்?அல்லாஹ்வையா?அவனது பெயரில் அவனின் அடிமைகளையா? இல்லை சாபி மத்ஹபில்  ,தெருவிளக்கு போடுவது,ரோடு போடுவது ,பஞ்சாயத்து நிர்வாகத்தை நிர்வகிப்பது,சேர்மன் தேர்தலில் எவ்வளவு பெறவேண்டும்?பஞ்சாயத்து திட்டங்களில் கமிசன் எத்தனை சதவீதம் பெறவேண்டும் என்று சொல்லப்பட்டுள்ளதா?இல்லையெனில்,நாங்கள் சுன்னத் ஜமாஅத் முறையில் தெருக்களை சுத்தம் பண்ணப் போகிறோம் ,அவர்கள் வந்தால் தெருக்களை தவ்ஹித் ஜமாஅத் முறைகளில் சுத்தம் பண்ணிவிடுவார்கள்.நாங்கள் பைல்களில் சுன்னத் முறையில் கையெழுத்து போடுவோம் ,அவர்கள் வந்தால் தவ்ஹித் ஜமாஅத் முறையில் ரேசன் கார்டு தருவார்கள் என்று சொல்லி ஓட்டு கேளுங்களேன்.
               பஞ்சாயத்து தேர்தலுக்கும் சுன்னத் ஜமாஅத் தவ்ஹித் ஜமாஅத்களுக்கும் என்ன தொடர்பு? இவர்களது குறி ஊரில் ஒற்றுமை நிலை நாட்டவேண்டும் என்பதெல்லாம் வெளி  வேஷம்.ஊரில் வேற்றுமையை உருவாக்கி ,அந்த வேற்றுமையை நிலை நாட்டி,ஒற்றுமை ஏற்படாதவண்ணம் நிழல் வேலைகளை செம்மண செய்து ஆதாயம் அடையும் அற்ப நோக்கத்திற்கு இளைஞர்களே!பழியாகிவிடாதீர்கள். நிஜாம் என்பவர் ரேசன் கார்டு வோடேர்ஸ் ஐடி எல்லாம் பல ஆயிரங்கள் லஞ்சம் கொடுத்து ,தேர்தலில் இன்னுமதிகமாக செலவுகள் செய்து கவுன்சிலராக ஆகி சேவைகள் செய்யாவிட்டால் ஆறாம்பண்ணை ஆத்தோடு போகிவிடுமாஎன்ன?இல்லை இந்த செட்டியார்தான் ஆதாயம் இல்லாமல் ஆத்தோடு போவாரா? சிந்திக்க வேண்டாமா?அரசியல் ஆதாயத்திர்க்காக மார்க்கத்துடன் விளையாடும் இவர்களை  என்ன  வென்று  சொல்லுவது ?