Arampannai ஜமாஅத் தலைவர் .
திரு .வைஸ் .கே.ஏ .முஹம்மது உதுமான்
பஞ்சாயத்துதலைவர்
திருமதி.ஹமிதாஹனிபா ;
கவுன்சிலர் .
திருமதி.சரிபாபசிர்

செவ்வாய், 21 ஆகஸ்ட், 2012

பித்ராவை சொல்லி ஓட்டு கேட்டேனா ?


பித்ராவை சொல்லி ஓட்டு கேட்டேனா ?

பித்ரா செய்ததை சுட்டி காட்டி கடந்த பஞ்சாயத்து தேர்தலில் நான் ஓட்டு கேட்டு 
நெட்டில் பிரச்சாரம் செய்ததாக கீழ்க்காணும் 20011 அக்டோபரில் 9,11தேதிகளில் நான் வெளியிட்டுள்ள  கடைசி பத்தியை பிரின்ட் அவுட் எடுத்து அவதூறு பரப்பியுள்ளார்கள் . மஞ்சள் கலரில் அடையாளமிட்டுள்ள பகுதியை 
பாருங்கள் .நான் இதில் பித்ராவை சுட்டிக்காட்டி ஓட்டு  கேட்டதற்கு ஆதாரம் இருக்கிறதா?

ஞாயிறு, 9 அக்டோபர், 2011


தவ்ஹித் ஜமாத்தின் வெற்றி

அஸ்ஸலாமு அலைக்கும், 
                                                             சென்னையில் இருந்து வந்த சுன்னத் ஜமாஅத் தீவிர ஆதரவாளர் பெரியவர் ஒருவர் சொன்னாராம் ,கத்தம் பாத்தியாவில் கலந்து கொள்ள வந்த தனக்கு கடும் ஏமாற்றமே மிஞ்சியதாக கூறியுள்ளார்.மேலும் தனக்கும் ஓத மாட்டார்களோ ,தனது சந்தூக்கிலும் மாலை போட மாட்டார்களோ,அடக்கம் முடிந்த பிறகு முசாபாஹ் இருக்காதோ  என்ற ஆதங்கப் பட்டதாக கேள்விபட்டேன்.அல்ஹம்துலில்லாஹ்..இதுதான் தவ்ஹித் ஜமாத்தின் வெற்றி .எந்த தவ்ஹித் ஜமாத்தை ஒழிக்கப் போவதாக மக்களிடம் பொல்லாங்கு கூறி ஜமாஅத் தேர்தல் கொண்டு வந்தார்களோ அந்த ஜமாத்தாலே இன்று தவ்ஹித் வளர்கிறது.கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் பள்ளிவாசல் நிர்வாகத்தை மாற்றப் போகிறோம் என்று கையெழுத்து வேட்டை நடத்தி வக்ப் வாரியத்திற்கு மனுக்கள் அனுப்பினார்கள் .வக்ப் போர்டின் வழிகாட்டுதலின் படி அப்போது சூப்ரண்டாக இருந்த உதுமான் மைதீன் தலைமையில் தேர்தல் இல்லாமல் நிர்வாகத்தினரை தேர்ந்தெடுக்க கூட்டம் நடத்திய பொழுது இரு தரப்பிலும் உறுப்பினர் பட்டியல்களை கேட்டார். அப்போது அப்துல்பாரி அவர்கள் தலைமையில் ஒரு அணியும் யாக்கூப்  தலைமையில் ஒரு அணியும் பட்டியல் கொடுக்கப்பட்டது இரு தரப்பினரையும் கலந்து நிர்வாகிகளை தேர்வு செய்யலாமா என்பது பற்றி பரிசீலனை செய்தபோது யாக்கூப் தரப்பினர் மறுத்துவிட்டனர்.கூட்டம் தீர்வற்ற நிலையில் இருந்த பொழுது ,நாங்கள் .ஒரு தீர்வை சொன்னோம்.அதாவது பள்ளியில் வைத்து மவ்ளுத் ஓதக்கூடாது ,மவ்லூத் ஒதுபவரை இமாமாக நியமிக்கக் கூடாது என்று எழுதித் தந்துவிட்டு யாக்கூப் அணியினர் மட்டுமே நிர்வாகிகளாக இருந்து கொள்ளட்டும் என்று கூறினோம்.அதற்கு ஒரு சிலர் தவிர மற்றவர்களும் எதிர்த்து தேர்தல் கொண்டு வந்தனர்.எப்படியோ வென்றனர்.ஆனால் நாங்கள் எதை எழுதி  கேட்டோமோ,அதை கண்ணியமான முறையில் பள்ளிவாசலில் வைத்து  எழுதி தராதவர்கள் போலிஸ் ஸ்டேசனில் வைத்து எந்த  காலத்திலும்  மவ்ளுத்  ஓதும் இமாம்களை நியமிக்க மாட்டோம் என்று எழுதி கொடுத்தனர். இதுதான் எங்களுக்கு வெற்றி .இதைத்தானே அன்று நாங்கள் கேட்டோம் அப்போதே கொடுத்தால் நமது டெப்பாசிட் காசு மிஞ்சியிருக்கும்.தேர்தல் செலவுகள் இரு பக்கமும் ஆகியிருக்காது மேலும் நீங்க சென்னைக்கும் நெல்லைக்கும் பல முறைகள் படை எடுத்திருக்க வேண்டாம்.நபி[ஸல்] அவர்கள் காட்டித்தந்த பெருநாள் திடல் தொழுகைக்கு அப்துல் பாரி அவர்களை ஏற்பாடு செய்யுமாறு வேண்டிய போது எங்களது ஆதரவாளர் என்று கூறப்பட்ட அவர் மறுத்தார். ஆனால் இன்று நபி[ஸல்]அவர்கள் கூறியவாறு நாங்கள் நடத்தி காட்டியது போன்று நீங்களும் திடல் தொழுகைக்கு வந்து விட்டீர்கள். இதுதான் எங்களுக்கு வெற்றி .நாங்கள் ஓட்டுகளை எண்ணி அடையும் அற்ப வெற்றியை விட இது போன்ற வெற்றியை எதிர்பாக்கிறோம்.தேர்தலில் நீங்கள் யார் வெற்றி பெற்றாலும் எங்களுக்கு அதில் ஒன்றும் இல்லை.ஆனால் நீங்கள் அனைவரும் தவ்ஹித் கொள்கைகளை பின்பற்ற வேண்டும் என்பதே எங்களது இலக்கு.அதுவே எங்கள் வெற்றி.
நாங்கள் உள்ளாட்சி தேர்தலில் பங்கேற்கவோ ,ஆதரிக்கவோ மாட்டோம் என்று அறிவித்த பிறகும் உங்களது தேர்தல் ஆதாயம் கருதி வேண்டுமென்றே எங்களை எதிர்த்து போட்டியிடுவதாக கூறிவந்ததோடு எஸ்.பீ யூனூஸ் மருமகன் அப்துல் சலாம் என்பவரை நிஜாம் என்ற மது சப்ளையரை தோற்கடிக்க நாங்கள் நாற்பதினாயிரம் கொடுத்து நிறுத்தியுள்ளதாக தொழ வராத செயலாளர் உட்பட சில கழுகுகள் வதந்தி பரப்பி வந்தனர்.சலாம் ஏன் அடுத்தவர்களிடம் பணம் எதிர்பாக்க வேண்டும்?பொய்யை சொன்னாலும் பொருந்த சொல்லவேண்டுமா?மோசடி மன்னன் நிஜாமின் சிறப்புகளை சொல்லி ஓட்டு கேட்க வழியில்லாததால் இவ்வாறு பொய்யை பரப்பி இப்படி ஒரு உள்ளூர்காரனை தோற்கடிக்க வெளியூர்காரனுக்கு பணம் கொடுக்க வேண்டுமா?ஐயோ பாவம் நிஜாம். ஆதலால் அவருக்கு சுன்னத் ஜமாத்தினரே ஓட்டு போடுங்கள் ,என்று பிரச்சாரம் செய்து வருகின்றனர். இந்த பொய்யர்கள் கூறுவதை எல்லாம் உண்மை என்று நம்பி வந்த ஒரு பெரியவர் சுன்னத் ஜமாஅத் வெறியர் , இன்று பிரச்சாரம் செய்ய வந்த அப்துல் சலாமிடமும் அவரது மாமாவிடமும் நாற்பதினாயிரம் பற்றி கேட்டுள்ளார்.விடுவார்களா அவர்கள்? செமையாக வாங்கி கட்டிகொண்டார்.ஆக பெரும் பொய்யர்களே நய வஞ்சகர்களே நாங்கள் உள்ளாட்சி தேர்தல்களை கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை என்னும் நிலையில் எங்களை வம்புக்கு இழுப்பது நியாயமா? உங்களது ஸ்பெசல் சுன்னத் ஜமாஅத் கொள்கைப் படி அண்ணன் நிஜாம் வழியில் சாராயம் கொடுத்து நாடார் தெருவில் ஓட்டு கேட்டது போல் தெருக்களிலும் ஏதாவது பாமாயில் கொடுத்து ஓட்டு கேட்க வேண்டியது தானே ! ஏன் தவ்ஹித் ஜமாத்தையும் சுன்னத் ஜமாத்தையும் உங்கள் அற்ப அரசியல் ஆதாயங்களுக்கும் சேர்மன் வேட்பாளர் போடும் லட்சங்களுக்கும் பயன்படுத்த வேண்டும்? [இறைவன் நாடினால் தொடரும்]

திங்கள், 10 அக்டோபர், 2011


தவ்ஹித் ஜமாத்தின் வெற்றி 2

ஆத்தூரில் பஞ்சாயத்து தலைவராகவும் .ஜமாத்தலைவராகவும்,ஆழ்வார்திருநகர் அதிமுக ஒன்றிய செயலாளராகவும் ஷேக் தாவுத் என்பவர் இருந்தார். இவருக்கு அதிகார மட்டத்திலும் நெருக்கமான தொடர்பு இருந்தது.அடியாட்கள் பலமும் உண்டு.அந்த ஊரில் இவர்  தவ்ஹித் ஜமாத்தை அழித்து விடுவோம் .பொசுக்கி விடுவோம் என்றார்.பல இடையூறுகள் பண்ணினார்.வாடகைக்கு இருந்தவர்களின் வீடுகளை,கடைகளை காலி பண்ணுமாறும் கட்டாயப் படுத்தினார். அத்தனை தடைகளையும் உடைத்தெறிந்து சுன்னத் ஜமாஅத் பள்ளி அருகிலே தவ்ஹித் மார்கஸ் உருவாக்கி ஜும்மா மற்றும் ஐவேளைகள் தொழுகைகளும் நடை பெற்று வருகிறது.தவ்ஹித் ஜமாஅத் உறுப்பினர்கள் நமதூரை விட மிகக் குறைவாக இருந்தும் பலமிக்க ஷேக் முகம்மதுவால் தவ்ஹித் ஜமாத்தின் சுண்டு விரலைக் கூட அசைக்க முடியவில்லை.இன்னும் இந்த தடவை அவருக்கு போட்டியிட அதிமுக சீட்டும் கிடைக்காமல் போயிற்று.இவர் எந்த டி.எஸ்.பி.யைவைத்து ஆட்டம் போட்டாரோ அவர் ஓரிரு மாதங்களில் இட மாற்றம் செய்யப்பட்டார்.இதை இங்கே சொல்லுவதற்கு காரணம் என்னவெனில் ,கள்ள ஜமாத் வேட்பாளர்களுக்கு ஆதரவு தேடும் பொய்யர்கள் கூட்டம் ,'நாங்கள் பிரெசிடென்ட் தேர்தலில் வெற்றி பெற்றால் , போலீஸை வைத்து தவ்ஹித் ஜமாத்தை ஒன்றும் இல்லாமல் ஒடுக்கி விடுவோம் .இப்போதைய ப்ரெசிடென்ட் ஹனிபா ,தவ்ஹித் ஜமாத்துக்கு  ஆதரவாக் இருப்பதால் தான் ஒன்றும் செய்ய முடிய வில்லை.என்றும் வெளியூர் பண்ணை  மக்களிடம் நமதூரில் பெரும் பிரச்னைகளும் தகராறுகளும் அதனால் தான் ஜமாத்தில் இருந்து போட்டியிடுகிறோம் என்றும் அதனால் எங்களுக்கு ஆதரவளிக்குமாறு வேண்டி வருகிறார்கள் .பஞ்சாயாத்தை கைப்பற்றி தங்கள் அதிகார ஆட்டம் போட்டு கமிசனிலும் பங்கு போடவே அன்றி வேறொன்றுமில்லை.இவர்கள் இதைப்போல் ஜமாஅத் தேர்தலில் இரண்டாவது ஜமாத்தை நிறுத்திவிடுவோம் என்று சொன்னார்களே முடிந்ததா?நாங்கள் ஏற்கனவே சொன்னது போல் பள்ளிவாசலில் வைத்து எழுதி கேட்டதை போலிஸ் ஸ்டேசனில் இன்ஸ்பெக்டரிடம் ஏச்சுக்கள் வாங்கி எழுதி கொடுத்தனர்.
மீரா ஸ்கூலை கைப்பற்ற திட்டம் போட்டார்கள். அதற்கும் காரணம் தவ்ஹித் ஜமாஅத் அதை வைத்துதான் வளர்ந்துவிட்டார்கள். அங்கு படிக்கும் மாணவர்களிடம் தவ்ஹித் ஜமாஅத் பற்றி பிரச்சாரம் செய்து இளைஞர்களை வழிகெடுத்து விட்டதாகவும் பொய்யர்கள் அவதூறுகளை சொல்லி வந்தனர்.அது உண்மை என்றல் அதிகமான மாணவர்கள் தவ்ஹித் மர்கசில் அல்லவா தொழுகைக்கு வரவேண்டும்.?நேரில் கண்கூடாக பார்க்கும் விசயங்களிலே இப்படி பச்சை பொய்.சொல்லுகிறார்கள்.தவ்ஹித் ஜமாத்தை சேர்ந்தவர்கள் பிள்ளைகள் கூட தவ்ஹித் மர்கசுக்கு தொழுகைக்கு வருவதில்லை.ஸ்கூலில் கல்வி மட்டுமே இருக்கிறதே தவிர அங்கு மார்க்கம் பற்றி எந்த பாடங்களும் நடக்கவில்லை.இவர்கள் சொல்லை நம்பி என்னிடம் கல்வியாளர் ஒருவர் கேட்டார்."தவ்ஹித் பற்றி பள்ளியில் பாடம் எடுக்கிறீர்களா"?என்று. இவர்களது நோக்கம் ஸ்கூலை கையாள வேண்டும் என்பதே.மீரா ஸ்கூலை வைத்துத்தான் ஆறாம் பண்ணையில் தவ்ஹித் வளர்ந்தது உண்மை என்றால் ,செய்துங்கநல்லூரில் எந்த ஸ்கூல் இருக்கிறது?அங்கு தவ்ஹித் ஜமாஅத் ஒரு பழைய பள்ளிவாசல் இருந்ததை புனரமைப்பு செய்து நமதூரை விட சிறப்பாக ஏசி பள்ளிவாசலாக செயல்பட்டு வருகிறதே.இன்னும் தவ்ஹித் ஜமாஅத் தமிழகம் முழுவதும் மிகவும் சிறப்பாகவும் சீரிய முறைகளிலும் செயல்பட்டு வருகிறதே .அந்த ஊர்களில் எந்த ஸ்கூல் உள்ளது?
அன்பு சகோதரர்களே, இந்த பொய்யர்கள் தங்களது அபிலாசைகளையும் அற்ப அதிகார வெறிகளையும் நிறைவேற்றவே தவ்ஹித் ஜமாத்தை காரணம் காட்டி வருகிறார்கள்.தவ்ஹித் ஜமாஅத் என்ன பாவம் செய்தது?
இன்று பல இளைஞர்களை நபி வழியில் திருமணங்கள் செய்கிறார்களே அது பாவமா?வட்டியில்லா கடன் வழங்கியது பாவமா? கல்வி உதவி,மருத்துவ உதவி ,ரத்ததானங்கள் செய்கிறோமே அவைகள் பாவமா?பித்ராவை முறையாக வசூல் செய்து ஏழைகளுக்கு வழங்குகிறோமே ,கூட்டு குர்பானி மூலம் ஏழைகளுக்கும் பயன் கிடைக்க செய்கிறோமே அவைகள் எல்லாம் பாவமா?மொத்த முஸ்லிம் சமுதாய நலன்களுக்கு போராட்டங்கள் நடத்துவதுதான் பாவமா? சிந்தியுங்கள் .அயோக்கியர்களை அடையாளம் காணுங்கள்.
பின் குறிப்பு ;தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத் பற்றி இவர்கள் வெளியிட்ட 
தேர்தல் பிரசார துண்டு பிரசுரத்தில் குறிப்பிட்டதால் 
தவ்ஹித்ஜமாஅத் மாநில  தலைமையிடம் தொடர்பு கொண்டு
 தேர்தலில் பங்கேற்பது பற்றி கேட்டோம் .முதலில் மறுத்துவிட்டார்கள்.அந்த சமயத்தில் எழுதப்பட்டது.
அதன் பின்னர் அவர்கள் பரிசீலனைக்கு 
பின்னர் இது போன்று தஞ்சாவூரிலும் ஓரிரு கிராமங்களில் 
பஞ்சாயத்து தேர்தல் நிலை உள்ளதால் ஆராம்பன்னைக்கும் 
அந்த ஊர்களுக்கு மட்டும் தேர்தலில் டிஎன்டிஜே 
கொடி ,பேனர் இல்லாமல் பிரச்சாரம் செய்து கொள்ளுங்கள் 
என்று அனுமதி வழங்கினார்கள் . இது பற்றி பீஜே அவர்கள் 
நெல்லையில் நடந்த பொதுகுழுவிலும் குறிப்பிட்டார் .

ஞாயிறு, 12 ஆகஸ்ட், 2012

உண்மைகள் உசைன் காச்சாவை ஊமையாக்கி விட்டதா என்ன?

[தலைப்பு மாற்றம்]
வெளிநாடுவாழ் சகோதரர்களுக்கு அஸ்ஸலாமுஅலைக்கும் ,
                                            புனரமைப்பு  கமிட்டி பைலாவின் படி பொதுக் குழு கூட்டம் நடத்தி புனரமைப்பு கமிட்டி நிர்வாகத்தை புதிதாக தேர்தெடுத்து வங்கியில் பணத்தை பெற்றுக் கொள்ளுங்கள் என்று பலமுறைகள் கூறியிருந்தோம் .ஆனால் கடந்த 12/09/2012 அன்று பொது குழுவை கூட்டினார்கள்.மினிட் புக்கில் கலந்து கொண்டவர்கள் என்ற தலைப்பில் கையெழுத்து பெற்றார்கள்,இக்கூட்டத்தில் மகபூப் அலி தலைமை தாங்கி நடத்தினார்.இதில் அனைத்து மக்களும் கலந்து கொண்டனர் .இந்த கூட்டத்தில்
  நம்பிக்கை கொண்டோரே! ஊகங்களில் அதிகமானதை விட்டு விலகிக் கொள்ளுங்கள்! சில ஊகங்கள் பாவமாகும். துருவித் துருவி ஆராயாதீர்கள்! உங்களில் ஒருவர் மற்றவரைப் புறம் பேசாதீர்கள்! உங்களில் எவரேனும் இறந்த தமது சகோதரனின் மாமிசத்தைச் சாப்பிட விரும்புவாரா? அதை வெறுப்பீர்கள். அல்லாஹ்வை அஞ்சுங்கள்! அல்லாஹ் மன்னிப்பை ஏற்பவன்; நிகரற்ற அன்புடையோன்.என்ற குர்ஆன் வசனத்தை ஒரு ஆலிம் துவக்கத்தில் வாசித்தார்.
 முன்னாள் பள்ளிவாசல் தலைவர் பற்றி இந்நாள் இ.செ அவதூறு பரப்பியதை ஆதாரத்துடன் இந்த வசனத்தை சுட்டிக்காட்டி கேட்டோம்.
அடுத்து தொவ செயலாளர் மகன் பள்ளிவாசலில் வைத்து ஒருவரை கிண்டல் செய்ததினால் வந்த பிரச்னையில் அந்த பொடியனை கண்டிக்காமல் ,தனி நபர் பிரச்னைக்காக பள்ளிவாசல் லட்டர் பேடில் போலீசிடம் புகார் கொடுத்தது பற்றி கேட்டோம் ..நாங்கள் அவ்வாறு பள்ளிவாசல் பேடில்  கொடுக்கவில்லை என்று  தலைவர் கூறினார்.நாங்கள் கொடுத்த புகாரின் நகலை காட்டுவதாக சொன்னார்.ஆனால் இதுவரை காட்டப்படவில்லை .போகட்டும் 
அதன் பிறகு தீர்மானம் என்னவென்று கேட்கப்பட பொழுது நான்கு கழிப்பறைகள் கட்டப் போவதாக கூறினார்கள்.அந்த தீர்மானம் நிறைவேறியதும் வேறு தீர்மானங்கள் இல்லை என்று கூறப்பட்டது.மகபூப் அலி மீண்டும் கேட்டார் .இது ஒரு தீர்மானம் மட்டுமே என்று கூறப்பட்டது.புனரமைப்புகமிட்டி பற்றி கேட்டதற்கு அதன் தலைவர் அப்துல் பாரி அவர்கள் இப்போது உம்ரா சென்றுள்ளதால் அவர் வந்த பிறகு அது பற்றி பேசலாம் என்று கூறப்பட்டது.அதன் பிறகு ஈசாவின் கூச்சலால் குழப்பம் ஏற்பட்டு போலீசார் தலையிட்டு கூட்டம் முடிவடைந்தது என்பதை னைவரும் அறிவார்கள்.
ஆனால் இந்த பொது குழுவில் புனரமைப்பு கமிட்டி நிர்வாகத்தை புது பள்ளிவாசல் கமிட்டி  ஏற்றுக் கொள்வதாகவும் ,வரதட்சணை மாப்பிள்ளைக்கு பள்ளிவாசலில் நிக்காஹ் நடத்த அனுமதிக்க கூடாது என்றும் ஐந்து தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டதாக போலிதீர்மானங்களை தயார் செய்து  கமிட்டி உறுப்பினர்கள்  உட்பட சிலரின் கையெழுத்துகள் போடப்பட்டுள்ளது.அதில் சில கமிட்டி உறுப்பினர்களின்  கையெழுத்துக்கள் போர்ஜரி என்பது தெளிவு .. பொதுகுழுவில் கலந்து கொண்டவர்களின் கையெழுத்து களையும் இந்த போலி தீர்மானங்களுக்கு ஆதரவு தெரிவித்ததாகவும் காட்டப்பட்டுள்ளது. 

அதைப்போல 22/07/2011 அன்று ஜும்மாவில் பள்ளி விரிவாக்கம் பற்றி வக்ப்  போர்டில் அனுமதிக்காக  மனு செய்ய  உள்ளதால் அதற்க்கு அனைவரும் ஆதரவு  தெரிவித்து கையெழுத்து போடுமாறு வேண்டிக் கொண்டனர்.. இவ்வாறு ஜமாத்தினரின் கையெழுத்துக்களை பெற்று ,அன்று பொதுக்குழு கூட்டம் நடந்ததாகவும் அதில் புனரமைப்பு கமிட்டி உறுப்பினர்களாக  தேர்ந்தெடுக்கப் பட்டு ,அபுல்ஹசன்,பசீர் ஆகிய இருவரும் வங்கி வரவு செலவு அத்தாரிட்டியாக  தேர்வு செய்யப் பட்டதாக கூறப் பட்டுள்ளது 
பொதுகுழு  நடத்தாமல் பொதுக்குழு நடத்தியதாக மினிட் புக்கில் பதிவு செய்துள்ளனர் 
இந்த இரண்டு போலி கூட்டத்தின் தீர்மானங்களையும்  கொடுத்து வங்கி பணத்தை கைப்பற்ற முயற்சித்து உள்ளனர்.அத்துடன் பள்ளிவாசல் கமிட்டி தேர்வு செய்யப்ப் பட்டதற்கான வக்ப் அங்கீகார நகலையும் கொடுத்துள்ள்ளனர்.அதை   பெற்றுக் கொண்ட வங்கி அதிகாரி operating authorities மாற்றினாலும் வரவு செலவு பண்ணுவதை நிறுத்தி வைத்துள்ளார் 
இதில் குறிப்பிடும் விஷயம் என்ன வென்றால் S.A.அபுல் உசேன் என்று ஓரிடத்தில்  கையெழுத்து உள்ளது..இன்னொரு இடத்தில் S.Aஅபுல் ஹசன் என்றும் கையெழுத்து உள்ளது . டிஎம் எ  யாக்கூப் அவர்களின் கையெழுத்துமூன்று  விதமாக உள்ளது.கையெழுத்து வித்தியாசம் மட்டும் அல்ல .பெயரின் ஸ்பெல்லிங்கும் வித்தியாசமாக உள்ளது yacoob என்றும் yacoof என்றும் yookof என்றும் மூன்றுவிதமாக் உள்ளது 
ஒரு உறுப்பினர் ஒரே நாளில் ஒரு இடத்தில் ஆங்கிலத்திலும் இன்னொரு இடத்தில் தமிழிலும் கையெழுத்து இட்டுள்ளார்.இன்னும் பல குளறுபடிகள் உள்ளன.
இதைப் பற்றி கேட்டால் இன்று வரை மவுனம் சாதிக்கிறான் .வங்கியில் இவன்தான் வாதம் பண்ணிஇருக்கிறான் .
நமக்கு வெட்ட வெளிச்சமாக தெரிந்த விசயங்களிலே இத்தனை மோசடி செய்துள்ள நிஜாமுத்தின் என்ற ஹுசைன் காஜா  முந்தைய விசயங்களிலும் என்னவெல்லாம் பண்ணியிருப்பான் என்று நினைவுறுத்தி பாருங்கள் .
பள்ளிவாசல்  நிர்வாகம் பண்ண  மோசடி வித்தைகள் எல்லாம் பண்ண வேண்டுமா?
வெளியுலகில் பண்ணும் பாவங்களுக்கு மன்னிப்பு கோரும் பள்ளியிலே பாவங்கள் செய்தால் இவர்கள் போட்டி போட்டு நிர்வாகத்திற்கு வந்தது அல்லாஹ்வுக்காகவா ?இல்லை அயோக்கியத்தனத்திர்ககாகவா ?
நமதூருக்கு பஸ் போக்குவரத்து முதன்முதலாக கொண்டு வந்த முஸ்லிம் இளைஞர் முன்னணி யின் செயலாளராகவும் ,நன்கு வாதிடக் கூடியவருமான கோஸ் பீர்முஹம்மத்தை தேர்ந்தெடுக்காமல் ,தொழ  வராதவரை தேர்ந்தெடுத்து கைபிள்ளையாக வைத்து ஆட்டிபடைக்கலாம் என்பதற்காகவா?
உஸ் காசான் ஊமை இல்லையாம் ,இதோ ஊமையாக்கிய உண்மைகள் அவனை இப்போது உளற வைத்துவிட்டது .வெளிநாடுவாழ் சகோதரர்களுக்கு வெட்டி ஒட்டவில்லை என்பதற்கு மட்டும் அல்லாஹ்வின் மீது ஆணையாக சத்தியம் செய்தவன், பதில் என்ற பெயரில் ,போர்ஜரி இல்லை என்பதற்கு வெளிநாடு சகோதரர்களுக்காக இன்னும் அல்லாஹ்வின் மீது ஆணையாக சத்தியம் பண்ண மறுத்து வருகிறான்.
கள்ள தீர்மானங்கள் பற்றி  வாய் திறக்காமல் ஊமையாக நடிக்கும் அவன் விற்கவே முடியாத வக்ப் சொத்துக்கள் பற்றியும் அது சம்பந்தமாக எனக்கு எவ்வித பங்கும் இல்லாத பொழுது ரமளானில் கொஞ்சம் கூட  அச்சம் இல்லாமல்  மனம் துணிந்து  பொய்களை அள்ளி வீசிஉள்ளதை பாருங்கள்.
நான் கேட்டிருப்பது 
1.போர்ஜரி  இல்லை  என்று அல்லாஹ்வின்மீது மீது ஆணையாக சத்தியம் பண்ணத் தயாரா ?
2. 12/09/2010 அன்று ஐந்து தீர்மானங்கள் நிறைவேறியதாகவும் ,22/07/2011 அன்று பொது குழு நடந்து புனரமைப்பு நிர்வாக கமிட்டி மற்றும் operating authorities தேர்வு செயப்பட்டதும் உண்மையா?

வெள்ளி, 10 ஆகஸ்ட், 2012

பெருநாள் குத்பாவுக்கு

வெளிநாடு சகோதரர்களுக்காக ஒரு விசயத்தில் மட்டும் அல்லாஹ்வின் மீது ஆணையிட்ட ப.நூ .,போர்ஜரி பிரச்சனையில் வெளிநாடு சகோதரர்களுக்காக ஏன் இன்னும் அல்லாஹ்வின் மீது ஆணையாக சத்தியம் செய்ய  மறுக்கும் மர்மம் என்னவென்று வெளிநாடு சகோதரர்கள் தப்பாக நினைக்க மாட்டார்களா?
ஆதாரத்தை சும்மாவெல்லாம் வெளியிட முடியாது .நான் வெளியிடும் ஆதாரத்தை நீ பொய்யானது என்று நிருபித்தால் நீயோ ,உனது எடுபிடி ஜமாஅத் நிர்வாகிகளோ என்ன சொன்னார்களோ அதற்கு நான் கட்டுபடுகிறேன் .அது உண்மையானது என்றால் அதில் சம்பந்தப்பட்ட நிர்வாகிகள் பெருநாள் குத்பாவுக்கு பிறகு பகிரங்கமாக தவறை ஒப்புக் கொள்வார்களா?ப.நூ.பதிலை வெளிநாடு சகோதரர்கள் இரண்டு நாளாக எதிர்பாத்தவண்ணம் உள்ளனர் .
ப.நூசே ,ஆதாரத்தை வெளியிட உனது பதிலுக்காக நானும் காத்திருக்கிறேன்.

திங்கள், 6 ஆகஸ்ட், 2012

ஜும்மாவில் ஒப்புக் கொள்ளத்தயாரா?


நான் பதில் எழுத அவசியம் இல்லாத அளவுக்கு கிட்டத்தட்ட உண்மையை மறைமுகமாக ஒப்புக் கொள்ளும் அளவுக்கு உளறிக் கொட்டியதை பன்னி நூசில் காணலாம்.உனது உளறலில் இருந்தே உன்னை பலர் புரிந்து கொள்வார்கள்.நான் என்ன கேட்டிருக்கிறேன் ,நீ என்ன உளறியுல்லாய் என்பதை அனைவரும் அறிவார்.நீ இப்படி உளறாமல் இருந்தாலே உன் மீது ஒரு சிலருக்காவது அறை குறை நம்பிக்கை இருந்திருக்கும் 
///இந்த பொய்யன் ஏதோ பேப்பரில் வெட்டி,ஒட்டி, போர்ஜரி செய்ததாக கிறுக்கி  உள்ளான். அல்லாஹ் மீது ஆணையாக எதுவும்  வெட்டி ஒட்டப்படவில்ல////
இவனே அல்லாஹ்வின் மீது ஆணையாக நான் வெட்டி ஒட்டவில்லை என்று சொல்லிவிட்டு இதை போல மற்றவிசயங்களுக்கு அல்லாஹ்வின் மீது ஆணையாக என்று சொல்ல மாட்டானாம் .அப்படி கேட்க எனக்கு தகுதி இல்லையாம் .அப்படி ஒரு தகுதியை அல்லாஹ்வும் அவனது தூதர் நபி [ஸல்] அவர்களும் சொல்லாத நிலையில் தகுதி பற்றி வரையறுக்க இந்த சாக்கடை பன்னிக்கு என்ன தகுதி இருக்கிறது?
அவன் மேலே கருப்பு குண்டு எழுத்தில் எழுதியுள்ளதை பாருங்கள் அதிலேயே அவனை பொய்யன் என்பதை அடையாளம் கண்டு கொள்ளலாம்.பேப்பரில் வெட்டி ஓட்டி போர்ஜரி செய்துள்ளதாக கிறுக்கி உள்ளேனாம் .அப்புறம் பாருங்கள் அல்லாஹ்வின் மீது ஆணையாக எதுவும் வெட்டி ஓட்டப்படவில்லையாம் .போர்ஜரி என்பதை லாவகமாக விட்டுவிட்டான்.அல்லாஹ்வின் மீது ஆணையாக போர்ஜரியும் செய்யப்படவில்லை என்று சொல்லியிருக்க வேண்டுமா?இல்லையா?

பன்னி நூசுசொன்னது ; நீ ஆதாரத்தை வெளியிடு. ஒவ்வொன்றுக்கும்  பதில் சொல்றேன். 
நமது பதில் ;12 /09 /2012 அன்று நடந்த பொதுக் குழுவில் உண்மையில் ஒரு தீர்மானம் மட்டும் நிறைவேற்றப்பட்டதை மறைத்து ஐந்து தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டதாக வங்கியில் கொடுத்தது உண்மையா இல்லையா? நான் அந்த ஆதாரத்தை இப்போது வெளியிட்டால் நாங்கள் பள்ளிவாசல் விசயத்தில் கள்ளத்தனமாக நடந்தது உண்மைதான்  என்று நீ உட்பட சம்பந்தப்பட்ட நிர்வாகிகள் பகிரங்கமாக ஜும்மாவில்   ஒப்புக் கொள்ளத்தயாரா?இன்சா அல்லாஹ் இப்போதைக்கு இது போதும் 
பன்னி நூசுசொன்னது ; நீ ஆதாரத்தை வெளியிடு. ஒவ்வொன்றுக்கும்  பதில் சொல்றேன். 
நமது பதில் ;"வரதட்சணை ஒழிப்பில் முதல்படியாக வரதட்சணை வாங்கும் மாப்பிள்ளைமார்களுக்கு பள்ளிவாசலில் வைத்து திருமணம் நடத்த அனுமதியை மறுப்பது என்று பொது குழு தீர்மானித்தது '
இப்படி ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக யாருக்காவது தெரியுமா?சரி ரகசியமாக ஒருவேளை நிறைவேற்றினாலும் அப்படி வரதட்சணை வாங்கிய எந்த மாப்பிள்ளைக்கு பள்ளிவாசலில்  வைத்து நிக்காஹ் நடத்த அனுமதி மறுத்ததை கூறுவார்களா?
  நான்  மேலே என்ன கேட்டுள்ளேன் .அவன் அதற்கு கீழே என்ன பதில் சொல்லியிருக்கிறான் என்று பாருங்கள் 

சைக்கோவிற்கு (வட்டிமூசா)  பதில்     

            சகோதரர்களே !   சைக்கோ பள்ளிவாசல் புனரமைப்பு நிர்வாகம் சில அவதூறு சொல்லி இருக்கிறான். இவன்  தன்  பிராடுதனத்தை  மறைக்கவே அவ்வப்போது தன் சாக்கடை புத்தி மூலம்  சிலபொய்களை சொல்லி  மற்றவர்கள்  மீது  அபாண்டம் பரப்பி  தன் மீதான  குற்றத்தை  நீர்த்து  போகசெய்வான்.ஆனால் இப்போது   மக்கள் இவனை நன்றாக புரிந்து, புறக்கணித்து விட்டனர் .நான் அல்லாஹ்மீது ஆணையாக என்று சொன்னது வெளிநாடுவாழ் சகோதரர்கள் இவனை மீண்டும்நம்பிரகூடாது என்றுதான் சொன்னேன்.    இப்பவும் சொல்கிறேன் அவனை வெளியிட சொல்லுங்கள். நான் பதில் சொல்கிறேன் என்று கூறி விட்டேன். முன்பு கள்ளஒட்டு நிர்வாகம் என்றான், கக்கூஸ் வழி நிர்வாகம் என்றான்  இப்போ இதை  சொல்கிறான். ஆனால் இதுவரை அவன் கூறிய எந்த (அவதூறையும்) பொய்யையும் நிரூபித்ததில்லை. ஆதாரமும் காட்டியதில்லை. இனி இந்த பிராடை (வட்டிமூசா என்று ஒத்துகொண்டான்) ஆதாரத்தை வெளியிட சொல்லுங்கள்.  நான் பதில் சொல்கிறேன்.
            இவன் களவாண்டி, வட்டிதுட்டு,சீட்டுகாசு, மார்வாடியிடம்  ஆட்டையை  போட்டது என்று   நிறைய வைத்து உள்ளான். ஆனால் நாம் அப்படி  அல்ல.  உழைத்தால்  தான் துட்டு. இவன்(பொய்யன்)  வெட்டி  கூச்சலுக்கு  தினமும்  பதில்  எழுதமுடியாது . ஆதாரம் காட்ட சொல்லுங்கள். அவன் ரியாத் அவுட் நபரிடம்  சவால் விட்டுவிட்டு  ஓடியது போல், நான்  ஓட மாட்டேன்.
                                             .......நிஜாம்.   ////
எனது கேள்விகளுக்கும் இவனது பதில்களுக்கும் கொஞ்சமாவது பொருத்தம் உள்ளதா?வெளிநாடு வாழ் சகோதரர்களை இன்னும் ஒன்றும் தெரியாதவர்கள் என்று நினைத்துக் கொண்டு இருக்கிறானா ?
அவன் வெளிநாடு சகோதர்களுக்காக அல்லாஹ்வின் மீது ஆணையாக கூறினானாம் . சரி  வைத்துக் கொள்வோம் .போர்ஜரி பண்ணவில்லை என்பதற்கும் வெளிநாடு சகோதரர்களுக்காக அல்லாவின் மீது ஆணையாக போர்ஜரி பண்ணவில்லை என்று கூற வேண்டியது தானே .12/09/2010 அன்று நடந்த பொதுக் குழுவில் கக்கூஸ்  மட்டுமே தீர்மானம் என்றும் புனரமைப்பு கமிட்டி பணம் பற்றி அப்துல்பாரி அவர்கள் இப்போது ஊரில் இல்லாததால் அவர் வந்த சமயம் அதுபற்றி பேசிக்கொள்ளலாம் என்று முடிவு எடுத்ததும் அனைவரும் அறிவர் .அவ்வாறிருக்க புனரமைப்பு நிர்வாகத்தை புது நிர்வாகம் ஏற்றுக் கொள்வது உட்பட ஐந்து தீர்மானங்கள் நிறைவேற்றியதாக வங்கியில் கொடுத்தது உண்மையா இல்லையா  என்றால் ஆம் அல்லது இல்லை என்று மட்டுமே பதில் சொல்லவேண்டும் .அவன் இல்லை என்று சொன்னால் நான் ஆதாரத்தை வெளியிடுகிறேன் .அது உண்மையான ஆதாரம் என்றால் அதில் சம்பந்தப்பட்டவர்கள் ஜும்மாவில் கள்ளத்தனத்தை ஒப்புக் கொள்ள வேண்டும் எனது ஆதாரத்தை பொய் என்று நிருபித்தால் இவர்கள் என்ன சொன்னார்களோ அதற்கு நான் கட்டுபடுகிறேன் ஆனால் இவன் அதற்கு மட்டும் பதில் சொல்லாமல் வேறு தனிநபர் பிரச்னை பற்றி இங்கு உளறுகிறான் .அதற்கு இடிமாங்கரையில் பதில் அளித்துள்ளேன் .யார் ஓடியுள்ளார்கள் என்பதை அங்கு பார்த்தால் தெரியும் .

         

ஞாயிறு, 5 ஆகஸ்ட், 2012

அல்லாவின் மீது ஆணையாக கூறத்தயாரா?

////இந்த பொய்யன் ஏதோ பேப்பரில் வெட்டி,ஒட்டி, போர்ஜரி செய்ததாக கிறுக்கி  உள்ளான். அல்லாஹ் மீது ஆணையாக எதுவும்  வெட்டி ஒட்டப்படவில்ல////
கடந்த இரு வருட காலமாக எத்தனையோ பிரச்னைகளுக்கு அல்லாவின் மீது ஆணையாக சத்தியமிட்டு கூறத் தயாரா? என்று கேட்டுள்ளேன் .அப்போது பலமுறைகள் மவுனம் காத்தும் உனக்கு அதற்கு தகுதி இருக்கிறதா என்றுமே கேட்டு வந்துள்ள பன்னி நூசு இப்போது முதல்முறையாக அல்லாஹ்வின் மீத ஆணையாக என்று கூறியுள்ளதை வரவேற்போம் .இதற்கு முன்பு இவன் அல்லாஹ்வின் மீது ஆணையாக நான் அழைத்தபோதெல்லாம் மவுனம் காட்டியதிலிருந்து அதெல்லாம் அதாவது நான் சொன்னதெல்லாம் உண்மை என்பதை மறைமுகமாக ஒப்புக் கொண்டான் என்பதை இப்போது விளங்கிக் கொள்ளலாம்.
///12 /09 /2010 அன்று  நடந்த பொதுக்குழுவில் கக்கூஸ் தீர்மானம் மட்டுமே என்று ஊரறிய  சொல்லிவிட்டு ஐந்து தீர்மானங்கள் நிறைவேற்றியதாக இடை செருகல் செய்தது யார்?
பொதுக் குழுவில் கலந்து கொண்டவர்கள் என்று கையெழுத்து வாங்கிவிட்டு ஐந்து தீர்மானகள் ஏகமனதாக நிறைவேற்ற ஒப்புதல் அளித்தது போல் பேங்கில் காட்டியது அயோக்கியத்தனமா இல்லையா?///
மேலே நான் கேட்டது பற்றி பதில் சொல்லவில்லையே ஏன்?
இப்போது நான் கேட்கிறேன் ,12 /09 /2010 அன்று நடந்த பொதுக்குழுவில் வங்கியில் கொடுத்தவாறு ஐந்து தீர்மானங்கள் நிறைவேற்றியது உண்மைதான் என்று அல்லாஹ்வின் மீது ஆணையாக கூறத் தயாரா?
அடுத்து 17 /07 /2011 அன்று  பொதுகுழு கூட்டம் நடந்தது என்று அல்லாஹ்வின்  மீது ஆணையாக கூறத் தயாரா?
அன்று இன்னாறேல்லாம்  புனரமைப்பு கமிட்டி உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டது உண்மை என்று அல்லாஹ்வின் மீது ஆணையாக கூறத் தயாரா?
அன்று வங்கி வரவு செலவு பண்ண இரண்டு நபர்கள் தேர்தெடுக்கப்பட்டது பொதுக்குழுவில் கூடிய அனைவர்களுக்கும் தெரியும் என்று அல்லாவின் மீது ஆணையாக கூறத்தயாரா?
17 /07 /2011 அன்று பள்ளிவாசல் விரிவாக்கம் பண்ண வக்ப் போர்டில் அனுமதி கேட்க உள்ளோம் அதற்காக அனைவரும் ஒப்புதல் அளித்து வெளி பள்ளியியில் வைக்கப்பட்டுள்ள புத்தகத்தில் கையெழுத்திட்டு செல்லுமாறு கூறியது உண்மையா இல்லையா ?அல்லாஹ்வின் மீது ஆணையாக இதை மறுக்க தயாரா?
அப்புறம் ஹெச்.எஸ் பார்ட்டி என்றால் உனக்கு யார் என்று தெரியாதது உண்மையா?உனக்கு மெயிலில் அது யார் என்று உனக்கு அதன் full form அனுப்பவில்லையா ?.சமிபத்தில் கூட H.S.என்பதை வேறொரு நபரிடம் அது நீங்கள்தான் உனது வகையறாக்கள் தூண்டிவிட முயன்ற போது அது நண்ணி இக்பால் என்று நான் எழுதியதை அறியாதது போல வேசமிடும் அயோக்கியனே ,இனியும் உனது கிரிமினல் கதை மக்களிடம் எடுபட வாய்ப்பில்லை.
பள்ளிவாசல் வயலில் நூறு ரூபாய் மனை வாடகையில் அவர்கள் சொந்த செலவில் வீடு கட்டிக் கொள்ள வேண்டும் என்று கொண்டுவரப்பட்ட தீர்மானத்திற்கும்  எனக்கும் எந்த பங்கும் இல்லை .அன்று ஜும்மாவில் பலரும் அதை அமோதித்தது போல நானும் ஆமோதித்தேன் .பைத்துல்மால் சொத்தை பாவப்பட்ட மக்களுக்கு நபி ஸல் அவர்கள் தாரளமாக வழங்கியுள்ளார்கள் .மக்களுக்கு பயன்படாத பைத்துல்மால் எதற்கு ?யாருக்கு?
நமதூரில்பல எளிய மக்கள் வீடு இல்லாமல் படும் அவஸ்தைகள் சிரமங்கள் பற்றி நல்லவர்களுக்கு தெரியும் .எத்தனையோ ஊர்களில் பள்ளிவாசல் இடங்களை இது போன்று எளிய மக்கள் குடியிருக்க மனை வாடகைக்கு கொடுத்துள்ளார்கள்.அதன்படியே நமதூரிலும் செயல்படுத்தலாம் என்று பஞ்ச.தலைவர் உட்பட சிலர் கூறினார்கள்.இந்த திட்டத்தை பழைய பஞ்ச.தலைவர் உட்பட சிலர் எதிர்த்தனர்.அதனால் அவர் ஒரு மாற்று திட்டம் கொண்டு வந்தார்.
வக்ப் சொத்தை விற்பனை செய்ய முடியாது என்பது மாங்க மடையனும் அறிவான் .இருப்பினும் சென்ட் ஒரு லட்ச ரூபாய் என்ற கணக்கில் ஒரு நபருக்கு மூன்று சென்ட் அவர்கள் உரிமை பாத்தியம் பெரும் வகையில் சில பள்ளிவாசல் களில் எழுதி கொடுக்கிறார்கள் அது போல எழுதி கொடுக்கலாம் என்று முன்னால்பஞ்ச.தலைவர் தான் சொன்னார் .அந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது .ஆனால் இந்த திட்டத்தின்படி யாரும் வாங்க முன்வரவில்லை 
ஆக பள்ளிவாசல் இடம் இந்த திட்டத்தின்படி யாரும் மனையைப் பெற முன்வரவில்லை.
இரண்டுமே நல்ல திட்டங்களே ஆனால் அது செயல்படாமல் மக்களுக்கும் பயன்பாடு இல்லாமல் பள்ளிவாசலுக்கும் பயன்பாடு இல்லாமல் இன்று விலை மதிப்புள்ள இடம் தரிசாக உள்ளது.
இந்த பிரச்சனையில் உனக்கு எந்த பங்கும் இல்லை.எனக்கும் எந்த பங்கும் இல்லை மற்றபடி நல்லதும் நடக்கவில்லை கெட்டதும் நடக்கவில்லை.பிறகு இந்தவிசயத்தை இப்போது பேசுவானேன் .திசைதிருப்பும் நோக்கம் தான் காரணமாக இருக்க வேண்டும் .
 கையெழுத்து போர்ஜரி என்பதை அடுத்து வெளியிடுகிறேன் .நண்பர்களே நீங்களே பார்த்து எளிதாக முடிவு  பண்ணலாம்  

சனி, 4 ஆகஸ்ட், 2012

கொட்டைபாக்குக்கு விலை கேட்டால் பட்டு கோட்டைக்கு வழி காட்டினானாம்

கொட்டைபாக்குக்கு விலை கேட்டால் பட்டு கோட்டைக்கு வழி காட்டினானாம் அதுவும் பட்டுகோட்டைக்காரனுக்கு
நான் கேட்டிருப்பது புனிதமான பள்ளிவாசலை கட்டுவதற்கு கள்ள தீர்மானங்கள் நிறைவேற்றவேண்டிய அவசியம் என்ன?
12 /09 /2010 அன்று  நடந்த பொதுக்குழுவில் கக்கூஸ் தீர்மானம் மட்டுமே என்று ஊரறிய  சொல்லிவிட்டு ஐந்து தீர்மானங்கள் நிறைவேற்றியதாக இடை செருகல் செய்தது யார்?
பொதுக் குழுவில் கலந்து கொண்டவர்கள் என்று கையெழுத்து வாங்கிவிட்டு ஐந்து தீர்மானகள் ஏகமனதாக நிறைவேற்ற ஒப்புதல் அளித்தது போல் பேங்கில் காட்டியது அயோக்கியத்தனமா இல்லையா?
பள்ளிவாசல் கட்ட வக்பில் அனுமதி என்று சொல்லி ஜும்மாவில் அறிவித்து அனைவரையும் கையெழுத்திட வைத்து விட்டு பின்னர் வைஸ் உதுமான் தலைமையில் பொதுக்குழு 17 /11 /2011 நடந்ததாகவும் அதில் புனரமைப்பு கமிட்டி மற்றும் பான்க் வரவு செலவு  பண்ண இன்னாறேல்லாம் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள் என்று தீர்மானம் நிறைவேற்றியதாக  பாங்குக்கு ஆவணங்கள் அளிக்கப்பட்டுள்ளதே  17 /11 /2011 அன்று பொதுக்குழு நடந்ததா?  ஜும்மா தொழ வந்தவர்களிடம் பொய்யான காரணத்தை சொல்லி கையெழுத்து வாங்கிவிட்டு பொதுக்குழு நடந்ததாக வும் அதில் இன்ன தீர்மானங்கள் நிறைவேற்றியதாகவும் போலியான ஆவணங்கள் தயார் செய்து வங்கியில் கொடுத்தது கசடற்ற கயமைத்தனம் இல்லையா?
பொதுக்குழுவில் கலந்துகொண்டவர்கள் என்ற இடத்தில் கமிட்டி உறுப்பினர்கள்  கையெழுத்துகளுக்கும் அதே நாளில் ஐந்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதாக வெட்டி ஒட்டிஉள்ள பேப்பரில் கோஸ் பீர்முஹம்மது மற்றும் பொருளாளர் என்ற இடத்தில் கையெழுத்திட்டுள்ள அப்துல் கனி மற்றும் கமிட்டி உறுப்பினர்கள் சிலர் கையெழுத்துகளுக்கும் உள்ள வித்தியாசங்களையும் பார்த்தால் அந்த கையெழுத்துக்கள் போர்ஜரி என்பதை தெளிவாக அறிய  முடியும்.கமிட்டி உறுப்பினர்களே உசார் .இறையருளால் பெருநாள் அன்று ஆதாரங்கள் வெளியிடப்படும் .

புனரமைப்பு கமிட்டி பைலாவின் படி பொதுக்குழுவை கூட்டி தீர்மானங்கள் நிறைவேற்றி புனரமைப்பு கமிட்டி நிர்வாக பொறுப்பை மாற்றிட  சொன்னால் அதை திருட்டுத்தனமாக சூழ்ச்சியாக செய்தது ஏன்? சூழ்ச்சிக்காரனுக்கேல்லாம் சூழ்ச்சிக்காரன் ஒருவன் இருக்கிறான் என்பதை மறக்கடித்த சைத்தான் அல்லவா அவன் .
இதற்கு பதில் சொல்லாமல் இவன் எம்ஜியார் படத்தில் பெண்ணுக்கு ஆபத்து வரும்பொழுது மலையிலிருந்து குதித்து வந்து எம்ஜியார் காப்பாற்றுவது போல ஆறாம்பண்ணை பள்ளிவாசலுக்கு ஆபத்து வந்தது போலவும் இவன் சென்னையிலிருந்து குதித்து ஸ்கூலில் கள்ளத்தனமாக கணக்கு கேட்டது முதல் பல கள்ளத்தனங்களை செய்து பள்ளிவாசலை காப்பாற்றியதாக வம்பலக்கிறான் .அவனது நோக்கம் திசை திருப்பவே .அவன் சொல்லியுள்ளது அத்தனையும் பொய் கலந்துள்ளது என்பதும் அதில் எனக்கு எவ்வித பங்கும் இல்லை என்பதையும் நடுநிலையாளர்கள் அறிவார்கள்.பள்ளிவாசல் இடத்தில் மாதம் நூறு ரூபாய்க்கு வாடகை திட்டட்டத்தில்  ஐந்து இடங்களை எழுதியது இவன் அடிவருடும் ஹெச்.எஸ் பார்ட்டிதான் என்பதை இந்த விசயங்களை இவனுக்கு சொல்லி கொடுத்தவரிடம் கேட்டு தெரிந்து கொள்ளட்டும். நான் எனக்கோ எனது உறவினர்களுக்கோ என்று ஒரு இடத்தையும் கேட்கவில்லை .
கெட்டிக்காரனின் பொய்யும் புரட்டும் எத்தனை நாளைக்கு?
உனது போலியான ஆதாரங்களை ஏற்றுக் கொள்ளாமல்
In the meantime as a precautionary measure ,we have blocked the operation of the SB a/c15961 till the dispute is solved.
வங்கி அதிகாரி மேற்கண்டவாறு நடவடிக்கை எடுத்துள்ளார்