Arampannai ஜமாஅத் தலைவர் .
திரு .வைஸ் .கே.ஏ .முஹம்மது உதுமான்
பஞ்சாயத்துதலைவர்
திருமதி.ஹமிதாஹனிபா ;
கவுன்சிலர் .
திருமதி.சரிபாபசிர்

சனி, 23 ஜூன், 2012

புகழின் உச்சிக்கு போனவர் கசத்தில் விழுந்தார்.


பத்தாவது வகுப்பு தேர்வில் மாநிலத்தில் முதலாவதும் ,ப்ளஸ் டூ தேர்வில் மாநிலத்தில் இரண்டாவது ரேங்கும் பெற்ற ஆசா பெனாசிர் என்ற திருநெல்வேலி பேட்டை மாணவி,சென்னையில்  M.B.,B.S முடித்த  அவர்  டெல்லியில் M.D படித்து அங்குள்ள வேறொரு மதத்தை சேர்ந்தவரை காதலித்து சமாதானபுரத்தில்  உள்ள பதிவு அலுவலகத்தில் திருமணம் செய்து கொண்டார்.

வியாழன், 21 ஜூன், 2012

புனரமைப்பு கமிட்டி கூட்டம் நடை பெற உள்ளது.

நமது பள்ளிவாசலின் புனரமைப்பு கமிட்டி இன்சா அல்லாஹ் வரும் 1/07/2012 ஞாயிறு  மாலை அசருக்கு பின்னர் அசராத நேரத்தில் 4.30மணியளவில் அவசர கூட்டம் கூட்டப்பட உள்ளது  .நாங்கள் பள்ளிவாசல் கட்டவே பணம் தந்தோம் என்றும் ,இப்போது அந்த பணத்தில் கல்யாண மண்டபம் கட்டப்பட்டு பள்ளிவாசலுக்கு ஒரு பக்கம் வருமானம் குவிந்தாலும் ஆனால் நாங்கள் என்ன நோக்கத்திற்கு கொடுத்தோமோ அந்த நோக்கம் நிறைவேறவில்லை.மேலும் இப்போது பள்ளிவாசலை நிர்வகிப்போர் வெறும் வருமான நோக்கத்தையே இலக்காக கொடுள்ளனர். வெள்ளிக்கிழமை ஒருவர் சலாம் சொன்னால் உடன் பாரம்பர்யமிக்க பரபரப்புடன் சலாம் சொன்னவரிடம் காரணம் கேட்டு வழக்கை தீர்க்காமல் வலக்கையால் உண்டியல் சில்லறை எண்ணும் சில்லறை நோக்கத்தோடு அதிகாரமிக்க தொழ வராத செயலாளர் செயல்படுகிறார். இன்னொரு நிர்வாகியோ சிர்க்கின் சிகரமாக உள்ளார்.ஆகவே நாங்கள் இந்த பள்ளிவாசலுக்கு வராத பொழுது நாங்கள் கொடுத்த பணத்தை எங்களிடம் பள்ளிவாசல் கட்ட திருப்பித் தர வேண்டும் ,நாங்கள் தனியாக பள்ளிவாசல் கட்டிக் கொள்கிறோம் என்று பள்ளிவாசலுக்கு பணம் கொடுத்த ஒரு கொள்கையினர் புனரமைப்பு கமிட்டிஇடம் கோரிக்கை வைத்துள்ளனர்.ஆனால புனரமைப்பு கமிட்டியினரோ பணத்தை திருப்பித் தரமுடியாது ,மற்றபடி கடனாக தருகிறோம்,அது பற்றி பரிசிலனை செய்ய வரும் ஜூலை 1ந்தேதி கூட்டட்தை கூட்டி முடிவெடுத்து சொல்லுகிறோம் என்று கூறியுள்ளார்கள் .இதன் பொருட்டு வரும் ஜூலை 1ந்தேதி புனரமைப்பு கமிட்டி கூட்டம் நடை பெற உள்ளது.
முக்கிய குறிப்பு .> இந்த புனரமைப்பு கூட்டம் ரகசியமாக கதவடைத்து கள்ள மசூராகவாக நடை பெறாது என்றும் புனரமைப்பு கமிட்டி உறுப்பினர் அல்லாதவர்களும் கலந்து கொள்ளலாம் .ஆனால் கருத்து தெரிவிக்க கூடாது என்றும் கூறப்பட்டுள்ளது.இடம் பின்னர் அறிவிக்கப்படும் .

சனி, 9 ஜூன், 2012

ஓய்ந்துபோன கொடிகட்டை ஒய்யாரமாக தூக்கி பிடிக்கும் அடிகட்டைகள்


வல்லமை மிக்க இறைவனுக்கு புகழனைத்தும் .அவன் மகாத்தானவன்.கடந்த மாதத்தில் ஆராமபன்னையில் நடந்த ஒன்றிரண்டு திருமணங்கள் தவிர மற்ற திருமணங்கள் அனைத்தும் நபி வழியிலும் நபி வழியை நெருங்கும் வகையிலும் நடந்த திருமணங்களே .மிகுந்த வரவேற்ப்புக்கும் இறைவனை பெருமிதம் கொள்ளுவதற்கும் உரிய விசயங்களே .இவர்கள் அனைவரும் தவ்ஹித் ஜமாத்தில் உறுப்பினர்களாக சேர்க்க வேண்டும் என்பது எங்களது நோக்கமல்ல .யார் சொன்னாலும் நபி வழியை பின்பின்பற்ற வேண்டும் என்பதே எங்கள் வேண்டுகோள்.
மணமகன் மாலை அணிந்து வருவது வெட்கத்திற்குரிய செயலாகிவிட்டது .இருபது ஆண்டுகளுக்கு முன்பு மாலை அணிவதை சரி என்று வாதிட்ட ,அதை தாங்கி பிடிக்க மார்க்க அறிஞர்கள் என்னும் மார்க்க முட்டாள்கள் படாதபாடு பட்டனர்.அவர்களால் கூட மாலை அணிவதை எதிர்த்து நிற்க முடியாமல் மாலைக்கும் பாத்திகா ஓதி தங்கள வாலை  ஆட்டி வந்தனர்.ஆனால் இன்று அவர்கள் கண்கள் முன்பே அந்த மாலை தூக்கி வீசப்பட்டுவிட்டது.தங்களது திருமணங்களில் மாலை அணிவது நபி வழிக்கு மாற்றம் என்று தெரிந்து இருந்தும் அதை தவிர்க்க திராணியற்று ,அதை கழுத்திலும் நாவிலும் தாங்கி பிடித்தவர்கள் ,இன்று சாதாரண இளைஞர்களால் ஒழிக்கப் பட்டுள்ளதை அறிந்து வெட்கி தலை குனிய வேண்டும் .யூசுப்நபிக்கும் சுலைகா என்ற பெண்ணுக்கும் திருமணமே நடவாத பொழுது அவர்களைப் போல வாழ்த்துவது யோக்கியமா?என்று கேட்டால் ,இது என்ன முல்லை பெரியாரா? கூடங்குளம் ரசியரா?என்று சினக்கிறது ஒரு மவுலவி சிந்தனை செல்வம்.இவர்கள் எதை எங்கு சிலாய்க்கிறார்களோ அங்குதானே அதற்கு பதில் அளிக்க முடியும்.அதல்லாமல் திருமண குத்பாவில் எதை பற்றி பேச பேச வேண்டுமோ அதைத்தான் பேசியுள்ளோம் ..முல்லை பெரியாறு ஆராம்பண்ணைக்கு  ஒன்றும் தலை வெடிக்கும் விவகாரம் அல்ல.அது எங்கு பேசப்பட வேண்டுமோ அங்கு அதைப் பற்றி பேசுவோம்.சரிவர பஸ் ஓடாமல் இருக்கையில்,அதையே கண்டு கொள்ளாத நாம்  முல்லை பெரியாறு பற்றி ஏன் பேசவேண்டும்? இந்த மவுலவி கூட்டம் இதுவரை எத்தனை பொது பிரச்சனைகளில் தலையிட்டுள்ளது ?இதுவரை எத்தனை பொது பிரச்னைகளில் போராட்டம் பண்ணியுள்ளது? ஆக ஆறாம்பண்ணையில் அனைத்து மக்களும் நபி வழியில் திருமணம் செய்ய நெருங்கி வந்து கொண்டிருக்கிறார்கள்.பாவம் மவ்லவிகள் கூட்டத்திற்கு வேறு வழியில்லாமல் கிடைத்த வாய்ப்பை மனம்போன போக்கில் பயன்படுத்தியுள்ளனர்.
அடுத்து ,கொடிகட்டு .கடந்த சில வருடங்களாக பொய்த்துப் போன கொடி கட்டை மீண்டும் இரு வருடங்களாக சிலர் உயிர்பிக்க முனைந்தனர்,அணையப் போகும் விளக்கைப் போல அது மீண்டும் ஜொலித்தது .இப்போது முற்றிலுமாக அணைந்து விட்டது.அல்லாவை புகழ் வோமாக !அவனிடமே மன்னிப்புக் கோருவோம்.ஒரு காலத்தில் கொடியை உழு செய்து ஏற்றும் நிலை.இன்றோ முஸ்லிம் அல்லாதவரே ஏற்றும் கராமத்துகள்  நிகழ்கின்றன
கொடிகட்டை  ஒய்யாரமாக தூக்கி பிடிக்கும் சில அடிக்கட்டைகள் ,யானை ஊர்வலம் மேளதாளங்கள் கொண்டு வந்து சைத்தானை திருப்திபடுத்தியே ஆக வேண்டும், என்ற முனைப்பில் சென்னையிலிருந்து வசூல் திரட்ட     பொய்ஜிகள் முனைந்தனர். அடிகட்டைகள் இல்லாமல் வசூல் செய்யும் இவர்களிடம் காசு கொடுக்க மறுத்த ஜமாலிய ஜமாஅத் செல்வந்தர்கள் ஒரு தகரடப்பா கச்சேரி படையை அனுப்பி அந்த குழுவின் பாட்டு கேட்டு காஜா பந்தே நவாஸ் உரூசை முடித்துக் கொள்ளுமாறு வேண்ட , அடிகட்டைகள் அதிகம் காசு பார்க்க வழியின்றி போனது பரிதாபம்.இந்த டப்பாக்கள் ஒலிக்கும் முன்னர் அதோடு வந்த ஒரு சைத்தான் சொற்பொழிவு ஆற்றியிருக்கிறது.அந்த சொற்பொழிவில் முஸ்லிம்களின் கடமைகள் ஐந்து அல்ல என்றும் ஆறு கடமைகள் உண்டு என்றும் ஆறாவது கடமை வலிமார்களை பின்பற்றுவது என்றும் நச்சு கக்கியுள்ளது.ஒருவர் ஐவேளை தொழுதாலும் ,நோன்பு வைத்தாலும் ஹஜ்ஜுக்கு சென்றாலும் சொர்க்கம் செல்ல முடியாது.இத்தனைக்கும் பிறகு வலிமார்களை பின்பற்றினாலே அவன் சொர்க்கம் செல்ல முடியும் என்று பேசியிருக்கிறார்.இன்சா அல்லாஹ் இனி வரும் காலங்களில் இப்படி பட்டவர்கள் பேச வந்தால் அடித்து விரட்டப்பட்ட வேண்டியது நமது கடமையாகும்.
                                                                                                                  அபுஷிரின்

திங்கள், 4 ஜூன், 2012

சயின்ஸ் பாடத்தில் சதம் பெற்ற இரு மாணவிகள் .

மீரா ஸ்கூல் பத்தாம் வகுப்பு பள்ளி தேர்வு முடிவுகள் .
சயின்ஸ் பாடத்தில் சதம் பெற்ற இரு மாணவிகள் .
1.ஷபானா த/பெ .எம்.உமர்கதாப் 
2.ரஹமத்துன் நிஷா த /பெ நய்யா மைதீன் 
இருவருமே பிளஸ் ஒன படிக்கப் போவதில்லை என்று திட்டமிட்டு படிக்காதவர்கள்.
1.ஷபானா 467
2.ரஹமத்துன் நிசா 451
3.முஹம்மது ஆசிகா 433
4.வெங்கடேஷ் குமார் 428
5..ஜைனுல் ஆபதின் 418
6.ஹாஜி இப்ராஹிம் 404
7.நாதிரா இர்பானா 403
8இப்ராஹீம் மூஸா 402
9.மாஜித் ஹமித் 398
10.முஹம்மது ஆசீர் 393
11.சமீரா 393
12.அப்ரோஸ் 390
13.ஜெஸ்ஸி கெசையா 346
14அப்துர் ரஹ்மான் 346
15.சித்திக் 315
16.கபூர் ரிஸ்வான் 314
17.தினேஷ் 312
18ஷர்மிளா 311
19.முபீனா 20.சுமையா ரலினா 291
மாதத்திற்கு ரூ.250/=கட்டணத்தில் மட்டுமே படித்த மற்றும் ஸ்பெசல் ட்யுஷன் எதுவும் இல்லாமல் அதிக மதிப் பெண்கள் பெற்ற மாணவ மாணவிகளுக்கு இறைஅருள் கிடைக்கட்டும் .
பெண்ணியம் மிக்க துடிப்பானவர்கள் பத்தாவது வகுப்பு மாணவிகள் .
நாங்கள் பிளஸ் ஒன்  படிக்கப் போவதில்லை.அதனால் நாங்கள் ஏன் அதிகம் சிரமம் எடுத்து படிக்க வேண்டும் என்று அடிக்கடி எதிர் கேள்வி கேட்பவர்கள்.பரீட்சை நேரங்களிலும் ஒன்பது மணிக்கே படுக்கைக்கு செல்லக் கூடிய இந்த மாணவிகளை நினைத்தால் ஒருபுறம் வேதனையாகவும் இருக்கிறது.பெற்றோர்களின் ஆர்வமின்மையால் அவர்களது எதிர்காலம் பாதிக்கபடுகிறது .ஆர்வமுள்ளவர்களின் பிள்ளைகள் [மாணவ மாணவிகள்] சுமாராக படிக்கிறர்கள் என்பது இன்னொரு வேதனையான விஷயம்.ஏழு,எட்டு ,ஒன்பதாவது வகுப்பில் சில மாணவர்கள் வெளியே சென்று விட்டதால் ரேன்க் வரிசையில் இடைவெளி ஏற்பட்டுள்ளது.சில பள்ளிகளில் அதிக ஸ்கோர் காட்டுவதற்காக தமிழையும் சோசியல் சயின்சையும் முக்கியத்துவம் கொடுத்து படிக்க வைக்கிறார்கள் .இது பிளஸ் டூவில் மதிப்பெண்கள் பெற உதவாது .
பள்ளி மாணவர்களிடம் வயதுக்கு மீறிய மதஉணர்வுகளை பரப்பும் கூட்டமும்  மார்க்க போதனைகளை வற்புறுத்தும் தப்லிக் வகையறாக்களும்  தங்களது வீட்டு பிள்ளைகள் விசயத்தில் உசாராக இருக்கின்றனர்..பள்ளிவாசலில் நடக்கும் ஷிர்ககளை கண்டுகொள்ளாத சிலர் தூண்டுதலின் பேரில் ஸ்கூல் போர்டில் ஷிர்க்களை கண்டிக்கும் குர்ஆன வசனங்களை எழுதிப் போடுவது உண்டு.ஒன்பதாவது வகுப்பு பையன் ஒருவன் தாடிவைக்க ஒரு மவுலவியால் வற்புறுத்தப் பட்டுள்ளான்.