S.Ibrahim
மார்ச் 24, 2012 இல் 9:14 மு.பகல் #
நல்லூர் ஒப்பாரி ////ஒன்றை கவனிக்கலாம். வெட்டணும், கொல்லணும், புண் பட்டு விட்டது, கருத்துரிமையின் எல்லை என்றெல்லாம் கதை பேசியவர்கள் வாருங்கள் அது குறித்து பேசுவோம் என்றதும் கள்ள மௌனம் சாதிக்கிறார்கள் .////
அது குறித்து பேசுவோம் ? பீஜே வுடன் விவாதம் என்றால் என்னை அடையாளம் கண்டு கொன்னுவிடுவார்கள் என்று சால்ஜாப்பு சொல்லும் நீங்கள் மற்றவர்களை மட்டும் பேச அழைப்பது ஏன்? அவர்களை எழுத்து விவாதத்திற்குத்தான் அழைத்தேன் என்று கதையை திருப்பக் கூடாது. எழுத்து விவாதம் என்பது மாத கணக்கில் இழுத்துக் கொண்டு செல்லும்.உங்களைப் போல் எல்லோரும் சோம்பேறிகள் இல்லை .வேலை இல்லாதவர்களும் இல்லை .ஆயின் நேரடி விவாதத்தில் ஓரிரு நாளில் பேசி யாரிடம் உண்மை உள்ளது என்பது மக்களுக்கு தெரிந்துவிட்டு போகட்டும்
பதில்
S.Ibrahim
மார்ச் 24, 2012 இல் 9:17 மு.பகல் #
கம்யுனிஸ்ட்கள் மொல்லுமாரித்தனம் செய்தார்களா? கடையநல்லூர் ஜமாஅத் மொல்லுமாரித்தனம் செய்ததா?என்ற தலைப்பில் விவாதத்திற்கு வரத்தயாரா?
உள்வாங்கவில்லை .தட்டையாக பேசுகிறீர்கள் என்று வழக்கமான உங்களது சம்பிராதயங்களை தவிர்க்க வேண்டும் .
பதில்
nallurmuzhakkam
மார்ச் 24, 2012 இல் 3:00 பிற்பகல் #
இப்ராஹிமே,
தயார். ஆனால் அதற்கு முன்னால் தொடர்பற்ற விசயங்களை எழுதமாட்டேன்,கேட்ட கேள்விகளுக்கு நியாயமாக பதில் கூறுவேன், சுற்றி வளைத்து திசைதிருப்ப மாட்டேன் என்று உறுதி மொழிகள் தரவேண்டும். தயாரா?
பதில்
S.Ibrahim
மார்ச் 25, 2012 இல் 3:00 மு.பகல் #
தயார்,ஆனால் நியாயமான பதிலை தந்தாலும் சுற்றி வளைத்து திசை திருப்பாதீர்கள் என்று சொல்லக் கூடாது.பதில் சொல்ல இயலாத கருத்தாக இருந்தால் தொடர்பற்ற விஷயங்கள் என்று சொல்லக் கூடாது.
பதில்
nallurmuzhakkam
மார்ச் 25, 2012 இல் 3:17 பிற்பகல் #
இப்ராஹிமே,
முதலிலேயே திருகலா? சுற்றி வளைத்து திசை திருப்புதல் என்றால் என்ன? கேட்கப்பட்ட கேள்விக்கு,கேள்வியின் நோக்கத்திற்கு பதில் கூறாமல் அதனுடன் தொடர்புடைய வேறொன்றைக் கூறுவது. எடுத்துக் கொண்ட தலைப்பிற்கு வெளியில் இருந்தால் அது தொடர்பற்றது தான், அதில் நீங்கள் எவ்வளவு விருப்பம் கொண்டிருந்தாலும். இவைகளுக்கு எடுத்துக் காட்டு வேண்டுமென்றால் முன்னர் நடந்த விவாதத்தில் உங்களின் வாதங்களைப் பார்த்துக் கொள்ளுங்கள். பின்னர் சம்மதமா என்று கூறுங்கள். அதன்பிறகு கடையநல்லூர் கம்யுனிஸ்ட்கள் மொல்லுமாரித்தனம் செய்தார்களா? கடையநல்லூர் ஜமாஅத் மொல்லுமாரித்தனம் செய்ததா? என்பதை விரிவாக விவாதிப்போம்
பதில்
S.Ibrahim
மார்ச் 25, 2012 இல் 8:45 பிற்பகல் #
///இவைகளுக்கு எடுத்துக் காட்டு வேண்டுமென்றால் முன்னர் நடந்த விவாதத்தில் உங்களின் வாதங்களைப் பார்த்துக் கொள்ளுங்கள். ////
எங்கே எடுத்துக் காட்டுங்கள் ?
நான் சுற்றி வளைக்க வில்லை நீங்கள் தொடர்பற்றது என்பதை நான் தொடர்புடையது தான் என்று நிருபிக்கிறேன்.உங்கள் விருப்பதிர்கேற்றவாறு எதை வேண்டுமானாலும் தலைப்புக்கு தொடர்பற்றது என்று கூறக் கூடாது.இந்த திருகல் முறுகல் வெங்காயம் விளக்கெண்ணை எல்லாம் வேண்டாம்.
விவாதத்தை தொடங்குங்கள் .மக்கள் எது திருகல் முறுகல் என்று முடிவு பண்ணட்டும்
ஆணும் பெண்ணும் தனித்து இருக்கும் பொழுது மூன்றவதாக சைத்தான் இருக்கிறான் என்ற நபி மொழியை அனுபவபூர்வமாக் உண்மைபடுத்துகிறார் .முற்போக்கு பெண் எழுத்தாளரான ஜோதிர்லதாகிரிஜா அவர்கள்
ஆண் - பெண் நட்புறவு
ஜோதிர்லதா கிரிஜாFirst Published : 20 Mar 2012 04:38:01 AM இசட் தினமணி
ஆண்-பெண் நட்புறவின் சாத்தியம் பற்றிய கேள்வியை என் எழுத்தாள நண்பர் ஒரு வார இதழில் அண்மையில் எழுதியுள்ள கட்டுரையின் சில பகுதிகள் எழுப்புகின்றன.
ஆண்களும் பெண்களும் கலந்து பழகவே கூடாது என்பதில் நம் முன்னோர்கள் காலம்காலமாக மிகப் பிடிவாதமாக இருந்து வந்துள்ளார்கள். இது முழுவதுமாய் ஏற்கத்தக்கதன்று என்பதே எனது கருத்தாகவும் இருந்து வந்துள்ளது. ஒன்று சொன்னால் நம்புவீர்களா? தோழிகளைக் காட்டிலும் எனக்குத் தோழர்களே அதிக எண்ணிக்கையில் உள்ளனர்.
ஆண்-பெண் நட்புறவில் இங்கே ஆணுக்கு எதிராய் நான் சொல்லப்போகும் கருத்தை என்னைப்பற்றி ஏற்கெனவே இருக்கக்கூடிய கணிப்பின் அடிப்படையில் விமர்சித்தல் சரியாக இருக்காது என்பதை எடுத்துச்சொல்ல இந்தச் சுய தம்பட்டம் தேவைப்படுகிறது. மன்னிக்கவும்.
ஆண்களுடன் பழகுவது தீமை பயக்கும் என்பதாய்ச் சின்னஞ்சிறு வயதிலிருந்தே ஒரு பெண்ணுக்குச் சொல்லப்பட்டு வருகிறது. இது தவறானது என்று அறவே புறந்தள்ளிவிட முடியாது. பத்து வயதுச் சிறுவர்கள்கூட நம்பத்தகுந்தவர்கள் அல்லர் என்பதே உண்மை. விகாரங்களைத் தூண்டும் ஊடகங்கள் இல்லாத அந்த நாளிலேயே இப்படியெனில், இந்த நாள் பற்றிச் சொல்லவே வேண்டியதில்லை. எல்லாத்துக்கும் சின்னவன் ஆனா, கல்யாணத்துக்கு மட்டும் பெரியவன் என்பதாய் ஒரு தமிழ்ப் பழமொழி உண்டு.
ஆணின் இயல்பை நன்கு அறிந்த தமிழர்கள் இயற்றிய பொன்மொழி இது. இதுபற்றிய அறிவால்தான் நம் பெரியவர்கள் ஆம்பளப் பசங்களோட வெளையாண்டா, காது அறுந்து போகும் என்று பெண் குழந்தைகளை அச்சுறுத்தி வந்தார்கள் போலும். ஒரு தகப்பன் தன் மகளை ஆண் நண்பர்களுடன் பழக அனுமதிப்பதில்லை என்பது கவனிக்கத்தக்கது.
ஒரு பெண்ணோடு பழகும்போது இவள் ஒரு பெண் என்கிற நினைவையும் நினைப்பையும் அகற்றி அவளை ஒரு நண்பனைப் பார்ப்பதுபோல் ஒரு தோழியாக மட்டுமே பார்ப்பவர் ஆண்களில் அரிது என்பதே கசப்பான உண்மை.
இத்தகைய அரிய ஆண்களை மட்டுமே தன் உள்ளுணர்வால் கண்டுணர்ந்து பழகும் கெட்டிக்காரத்தனம் பெண்ணுக்கு இருந்தால்தான் அவள் உருப்படியாக மீண்டுவர முடியும். இயல்பான உள்ளுணர்வு பெண்ணுக்கு உண்டு. அது இறைவன் அவளுக்கு அளித்த கொடை. முதுகுக்குப் பின்னால் இருந்தபடி எவரேனும் முறைத்தாலும் திரும்பிப் பார்க்கும் உள்ளுணர்வு அவளது பிறப்பியல்பு.
பெண் அதைச் சரியாகவோ, முழுமையாகவோ பயன்படுத்திக் கொள்ளாதபோதுதான் அவள் கண்மூடித்தனமாக ஆணை நம்பி ஏமாந்து போகிறாள்.
தனது உள்ளுணர்வைப் புறக்கணிக்காமல், அதை ஏற்று நண்பர்களைத் தேர்ந்தெடுக்கும் பெண் ஏமாந்து போவதில்லை. எதிர்ப் பாலைச் சேர்ந்தவனாக ஆண் நண்பன் இருப்பதால் அதிகப்படியாக நிகழக்கூடிய வன்னுகர்வு எனும் ஆபத்தைத் தவிர்த்தல் கட்டாயமாகிறது.
ஒரு பெண் இன்னொரு பெண்ணைத் தோழியாக்கிக் கொள்ளும்போது பாலுணர்வு சார்ந்த இந்தக் கசப்பான ஆபத்து அவளுக்கு இல்லை. எனவே தன் உள்ளுணர்வைச் சார்ந்துதான் ஒருத்தி தன் தோழியைத் தேர்ந்தெடுத்தாக வேண்டும் என்கிற இன்றியமையாத் தேவையும் இல்லை. சண்டை வரும்போது விலகவோ, விலக்கவோ செய்யலாம். (பெண்களிடையே சண்டை அடிக்கடி வரும்)
தன்னோடு வெறும் நண்பனாக மட்டுமே பழகி வந்துள்ள நிலையிலும் - அது புனிதமான நட்பு மட்டுமே என்பது இரு தரப்பிலும் ஒப்புக்கொள்ளப்பட்ட நிலையிலும் - திடீரென்று அந்த நண்பன் அத்துமீறிய வக்கிரச் செயலில் ஈடுபடும்போது, அந்தப் பெண் அதிர்ந்து போகிறாள். சின்னச் சின்ன அத்துமீறல்கள் ஏற்படும்போதே, அதைப் புரிந்துகொள்ளும் - ஆனால் அதை விரும்பாத - பெண் அவனைப் புறந்தள்ளி விடுவாள்.
ஆனால், ஆண் இவ்விஷயத்தில் தந்திரமானவன். நம்ப வைத்துக் கழுத்தறுப்பவன். தன்னைப் புரிந்துகொண்டு பெண் தன்னைத் தவிர்த்துவிடுவாளோ என்னும் உணர்வால், சிறு அத்துமீறல்களைக் கூடத் தவிர்த்துக் கண்ணியவானைப்போல் நடப்பதில் (நடிப்பதில்) மிகுந்த கவனம் காட்டி அவளது நன்மதிப்பைச் சம்பாதித்த பின் என் எழுத்தாள நண்பர் குறிப்பிட்ட அந்த ஐந்து இளைஞர்களைப்போல் மிகக் கீழ்த்தரமாக நடந்து கொள்ளுபவன்.
தன் உண்மையான தன்மையை அவளுக்குக் காட்டிக் கொடுக்கக் கூடிய சிறு அத்துமீறல்களை அவன் செய்ய மாட்டான். தோதான வாய்ப்பின்போது, எடுத்த எடுப்பிலேயே வன்னுகர்வுதான். அந்த வாய்ப்பையும் அவனே ஏற்படுத்திவிடுவான்.
எனவே, ஒரு புற்றில் பாம்பு இருக்கிறதா அல்லது எறும்பு இருக்கிறதா என்றெல்லாம் ஒரு பெண் அதனுள் கையை விட்டுப் பார்த்துக்கொண்டிருக்கக் கூடாது. அது தேவையற்ற அபாய நிலை (ழ்ண்ள்ந்). ஆக, மிக, மிகச் சரியான கணிப்பு இருந்தால் மட்டுமே அவள் ஆண் நண்பர்களைச் சேர்த்துக்கொள்ளலாம். மிக மிக நல்லவர்கள் என்கிற மதிப்பீடேயானாலும், அவர்களை வைக்க வேண்டிய இடத்தில் வைப்பதுதான் அவளுக்கு நல்லது. ஏனெனில், மிகுந்த கெட்டிக்காரத்தனமும் கவனமும் உள்ள பெண்களே கூட இந்தத் தேர்வில் ஏமாந்துவிடக்கூடும்.
காதலித்துத் திருமணம் செய்துகொண்டு, அவளோடும் அவள் பெற்றுத் தந்த குழந்தைகளோடும் வாழும் ஆண்களே சமயங்களில் தம் பெண் நண்பர்களிடம் வழிவது பற்றிய கதைகள் காதில் விழுவதுண்டு. பெரும்பாலான ஆண்கள் முழு நம்பிக்கைக்கு உரியவர் அல்லர் என்னும் காரணத்தால், அவர்களுடன் பழகும் பெண்களும் சரி, தோழிகளுடனான தன் கணவனின் நடத்தையை நம்பாத பெண்களும் சரி, வீண் மனக் கலக்கம், குழப்பம், கவலை ஆகியவற்றுக்கு ஆளாகிறார்கள் என்பதே உண்மை. (பெண்களிலும் வழிசல்கள் உண்டென்றாலும், அவர்களின் எண்ணிக்கை மிக, மிகக் குறைவே.)
பல்லாண்டுகள் எந்தவிதச் சலனமோ, வக்கிரமோ இல்லாமல் பழகும் ஆணேகூடச் சறுக்கிவிடுவதை அறிந்துள்ள பெண் தன் கணவனையும் அவனுடைய தோழியையும் சந்தேகக் கண்கொண்டு பார்க்க முற்பட்டுவிடுகிறாள்.
ஆணின் நெருக்கமான நட்பு ஒரு பெண்ணுக்கு இன்றியமையாத தேவை இல்லை. ஆணின் நட்பு இருந்தால்தான் அவளது பிறவி சாபல்யம் அடையுமா என்ன? பெண்ணையும் ஆணையும் பால் வேற்றுமையால் பிரித்து வைப்பதும், அவர்களை நெருங்கிப் பழகவிடாமல் தடுப்பதும்தான் ஆண்களின் கவர்ச்சிக்கும், அதன் விளைவான தவறான நடத்தைக்கும் அடிகோலுகிறது என்பது பச்சைப் பொய் அபத்தத்திலும் அபத்தமான கருத்து.
பெண்களோடு அவர்களைப் பழகவிட்டாலும், பழகவிடாவிட்டாலும், அவர்கள் காட்டுகிற இயல்பு ஒன்றுதான். அதை மாற்றுவது மிக, மிக மிகக் கடினம். எனவே, பெண்கள் கவனமாக இருத்தல் வேண்டும் என்பது அவளது பத்திரமும், நலனும் சார்ந்த கோட்பாடாகும். கிழவனோ, குமரனோ, மணமானவனோ, பள்ளி கல்லூரி மாணவனோ, சிறுவனோ, இவ்வனைவரிலும் பெரும்பாலோர் பெண்ணை உடலுறவு சார்ந்த துய்பொருளாகத்தான் பார்க்கிறார்கள்.
எனவே, விஷப்பரீட்சை செய்து கொண்டிராமல், நம்பிக்கைக்கு உரியவன் என்பதே தனது கணிப்பானாலும், ஒரு நண்பனைக் குறிப்பிட்ட தொலைவில் வைத்து ஓர் எல்லை வகுப்பதே அறிவுடைமையாகும். நட்பின் தொடக்கத்திலேயே அதை அவனுக்குப் புரிய வைப்பவள் இன்னும் அதிக அறிவாளியாவாள்.
நமது கல்வித் திட்டம் குறைபாடு உடையது. பெண்களைச் சகோதரிகளாகவும், சக உயிர்களாகவும் கருதும் பக்குவத்தையும், அவர்களைக் காக்கும் ஜடாயுத்தனத்தையும் சிறு வயது முதலே ஆண்களுக்குக் கற்பிக்கத் தவறியுள்ள கல்வித் திட்டம் நம்முடையது.
வட இந்திய ஊர் ஒன்றில் அண்மையில் நடந்தது நினைவுக்கு வருகிறது. ஒரு நண்பனுடன் நடந்து சென்றுகொண்டிருந்த இரண்டு பெண்களைச் சில கயவர்கள் வழிமறித்து வன்னுகர்வுக்கு முயல, அருகே வயல் ஒன்றில் வேலை செய்துகொண்டிருந்த ஆண்கள், கூக்குரலிட்டு உதவி கோரிய அந்தப் பெண்களை நோக்கி ஓடி வந்து, அவர்களுக்கு உதவாமல், ஆனால், கூட்டு வன்னுகர்வில் தாங்களும் கலந்துகொண்ட கொடுமையை என்ன சொல்ல? பொதுவாக இதுதான் ஆண்களின் லட்சணம்.
இதுபோன்ற நேரத்தில் பெண்ணைக் காப்பற்றத் தங்கள் உயிரையே தியாகம் செய்துவிடும் ஆண்களும் உண்டுதான். மறுக்கவில்லை. ஆனால், அவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம் என்பதால், ஆணின் பொதுவான இயல்பின் அடிப்படையில்தான் ஒரு பெண் தன் நடவடிக்கைகளை அமைத்துத் தன்னைக் காத்துக்கொள்ள வேண்டும்.
ஆண்களும் பெண்களும் கலந்து பழகினால் இத்தகைய குற்றங்கள் குறையும் என்று சில மனத்தத்துவ வல்லுநர்கள் கூறுவது வெறும் பிதற்றல். இதனால் எல்லாம் ஆணின் பிறவி இயல்பை மாற்றிவிட முடியாது. நற்சிந்தனையும், உயரிய எண்ணங்களும், பெண்களை நுகர்பொருளாய்ப் பார்க்காமல் சகமனிதர்களாய்ப் பார்க்கும் நியாய உணர்வும்கொண்ட சிலருக்கு இந்த உண்மை கசக்கும்தான்.
எனவேதான் நல்லிதயம் படைத்த ஆண்கள் சிலர் (மகாபாரத தருமபுத்திரர்போல்) தங்களைப் போன்றே மற்றவர்களையும் எடை போட்டு ஆண்-பெண் நட்புக்கு வக்காலத்து வாங்குகிறார்கள். அவ்வாறு இல்லாத பிற ஆண்களும்கூட இதை ஆதரிக்கிறார்கள் - ஆனால், வேறு உள்நோக்கத்துடன். அவர்கள் காட்டில் மழை பெய்யுமன்றோ, அதற்காக!
அன்பர்களே பத்தொன்பதில் இரண்டு முட்டி மோதிக்கொண்டு ஒற்றுமை என்னும் கயிற்றைஎன்ன செய்தார்கள்?
போஸ்டரில் உள்ள வார்த்தைகளை கவனியுங்கள் பெற்றோர்களே உசார் ! நமதூரிலும் இந்த பிள்ளை பிடிக்கும் கூட்டம் நடமாடுகிறது . பாப்புலரில் சேரவேண்டாம் என்று நான் சொல்ல வில்லை ,தமுமுக சொல்லுகிறது .போஸ்டரில் உள்ள வாசகங்கள் சமுதாய துரோகிகள் P.F.I; S.D.P.Iகட்சியினர் உங்கள் இளம் வயது பிள்ளைகளின் மனதை கரைத்து வன்முறை பாதைக்கு அழைக்கிறார்கள் .இவர்களை அடையாளம் கண்டு பெற்றோர்களே அவர்களிடமிருந்து உங்கள் பிள்ளைகளை பாதுகாத்துக் கொள்ளுங்கள்
சுற்றுச் சூழல் மற்றும் உயிர் தொழில் நுட்ப பிரிவில் டாக்டரேட் பட்டம் பெற்ற மஜ்தா அப்ராஸ் என்ற சவுதி பெண்மணி நாசாவில் பணியமர்த்தப்பட்டுள்ளார். இவர் லண்டன் பல்கலைக் கழகத்தில் டாக்டரேட் பட்டம் பெற்றவர்.
நாசா வளைகுடா பிராந்தியத்தின் தலைவரான முஹம்மது இபுறாகிம் கூறும்போது 'மஜ்தா அப்ராஸ் வளைகுடா பகுதிகளில் சுற்றுச் சூழலை கண்காணிப்பதில் மிகுந்த அக்கறை கொண்டு அதில் வெற்றியும் பெற்றதற்காக இப்பதவியில் அமர்த்தப்படுவதாக' கூறினார்.
பதவி ஏற்பு விழாவில் அப்ராஸ் பேசும் போது 'எனது இந்த வெற்றிக்கு காரணமான மன்னர் அப்துல்லாவுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஒரு சிறந்த வழிகாட்டியை இந்த நாடு பெற்றுள்ளது. பெண்கள் முன்னேற்றத்தில் மன்னர் அதீத அக்கறை காட்டுகிறார். பிரின்ஸ் நூரா பல்கலைக் கழகம் மூலம் இனி சவுதி பெண்கள் சமூகத்தில் சிறந்த இடத்தைப் பெற முடியும். மேலும் அதிகார மையமான சூரா கவுன்ஸிலிலும் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து அதிகாரத்தை பெண்களுக்கும் பகிர்ந்தளித்திருக்கிறார் மன்னர். மேலும் எனது இந்த முன்னேற்றத்திற்கு பிரின்ஸ் துர்க்கி பின் நாஸரும் ஒரு காரணம். அவர் கேட்டுக் கொண்டதால்தான் சவுதி சுற்றுச் சூழல் அமைப்பின் பெண்கள் பிரிவுக்கு தலைவியாக இருக்கிறேன்.' என்றார்.
மேலும் மன்னர் அப்துல் அஜீஸ் பல்கலைக் கழகத்தின் உயிரியல் பிரிவில் ஆசிரியராகவும் நுண்ணுயிரியியல், சுற்றுச் சூழல் என்று பல தலைப்புகளில் விரிவுரையும் ஆற்றியுள்ளார். ஜெத்தா பெண்கள் அமைப்பிலும், கேன்ஸர் சம்பந்தமான அல் ஈமான் குரூப்பிலும், எகிப்திய ஆராய்ச்சி சென்டரிலும், சவுதி எய்ட்ஸ் தடுப்பு அமைப்பிலும் உறுப்பினராக உள்ளார் மஜ்தா அப்ராஸ்.
நன்றி அரப் நியூஸ் 25-02-2012
எட்டு மணி நேரம் வேலை பார்க்கவே நமக்கு உலகத்து டென்ஷனும் வந்து விடுகிறது. இந்த பெண்மணி இத்தனை வேலைகளையும் சளிப்பில்லாமல் பார்ப்பது ஆச்சரியம்தானே! முந்தய பதிவில் ஒரு அன்பர் இஸ்லாமிய ஆட்சி வந்தால் பெண்களின் சுதந்திரம் பறிக்கப்படும் என்றும் அமைதி போய் விடும் என்றும் பின்னூட்டமிட்டிருந்தார். அவருக்கு நான் சொல்லிக் கொள்வது.
பாகிஸ்தான், ஈராக், ஆப்கானிஸ்தான், லிபியா, டுனீஷியா போன்ற எந்த நாடுகளும் இஸ்லாமிய ஷரீயாவை பின்பற்றவில்லை. அதன் ஆட்சியாளர்கள் மக்களை சுரண்டுவதிலும், தங்களின் ஆட்சியை தக்கவைத்துக் கொள்ள எதையும் செய்யக் கூடியவர்களாகவுமே இருந்தனர். ஆட்சித் தலைமை மார்க்கப் பற்றுடன் இருந்தால் அதன் குடிமக்களும் மன்னனையொட்டி நேர்மையாக நடப்பர். நாட்டு மக்களும் சுபிட்சமாக இருப்பர். சதாமிலிருந்து கடாபியிலிருந்து அனைத்து தலைவர்களும் ஆடம்பர வாழ்விலும் சுகபோகங்களிலும் திளைத்தனர். நேரம் பார்த்து அமெரிக்காவுக்கு எண்ணெய் வயல்கள் மீது மோகம் வர நாட்டின் எதிர்ப்பாளர்களை பயன்படுத்திக் கொண்டு ஆட்சிகளையும் வீழ்த்தியது. ஆனால் அமெரிக்கா நினைத்ததற்கு மாற்றமாக புதிதாக ஆட்சியில் அமர்ந்த அனைத்து நாடுகளிலும் இஸ்லாமிய சட்டங்கள் பின் பற்றப்படுகின்றன. மக்களும் அதனை விரும்புகின்றனர். தங்களுக்கு அமைதியும் சுபிட்சமும் இஸ்லாமிய சட்டங்கள் மூலமாகத்தான் கிடைக்கும் என்று எண்ண ஆரம்பித்துள்ளனர். இனி வரும் காலங்களில் இந்த நாடுகளில் முழுமையான இஸ்லாமிய சட்டத்தால் அமைதி திரும்பும்.
சவுதி அரேபியாவில் கராமா என்ற அமைப்பு அல்வலீது பவுண்டேஷன் மற்றும் இளவரசி அமீரா துணையோடு 90000 டாலர் அன்பளிப்பில் தற்போது இயங்கி வருகிறது. முஸ்லிம் பெண் வழக்கறிஞர்களை உலக தரத்திற்கு உயர்த்துவதே கராமாவின் நோக்கம். உலக அளவில் மனித குலத்தின் கண்ணியம், மத சுதந்திரம், மத உரிமை, இஸ்லாமிய சட்டங்கள் போன்றவற்றில் முஸ்லிம் பெண்கள் சிறந்த இடத்தைப் பெற வேண்டும் என்பதற்காக இவ்வமைப்பு பாடுபடுகிறது. இந்த அமைப்பு வாஷிங்டனிலும் தனது கிளையை துவக்கியுள்ளது.
உலகில் உள்ள இஸ்லாமிய நாடுகளில் ஓரளவு ஷரியத் சட்டத்தின் படி ஆட்சி நடைபெறும் நாடுகளில் சவுதி அரேபியாவும் ஒன்று. இங்கு பெண்களுக்கு கல்வி கற்பதில், வேலைக்குச் செல்வதில் எந்த விதத்திலும் சவுதி அரசு தடை போடவிலலை. இஸ்லாமும் அதற்கு தடை போடவில்லை. ஆண்களை விட பெண்களே இன்று கல்வி கற்பதில் மிகுந்த அக்கறை காட்டுகின்றனர். பெண்களுக்கு கல்வியைக் கொடுப்பதோடு அவர்களின் பாதுகாப்புக்கும் அரசு ஆவண செய்கிறது.
//The king’s latest announcement promised that women could vote in the next municipal elections, scheduled for 2015. Half of the municipal council’s seats are elected, and the other half are appointed by the government. The powers of the councils remain unclear and are not significant, though recent changes ensure that each municipal council can directly work with the local mayor and governor, and not only report to the minister of municipal and rural affairs in Riyadh.
The king also announced that women could become full voting members of the Shura Council, an appointed consultative body that has authority to review laws and question ministers but cannot propose or veto legislation and has no binding powers. In 2006 the Shura Council appointed six women as advisors, a number that has now risen to 12. //-BBC
நம் அனைவர் மீதும் இறைவனின் சாந்தியும், சமாதானமும் நிலவுவதாக..ஆமீன்.
சமீபத்தில் நான் பார்த்த தகவல் மிக சுவாரசியமாக இருந்தது. பழம்பெரும் அமைப்பான "Inter-Parliamentary Union", சில மாதங்களுக்கு முன்பாக, பாராளுமன்றங்களில் உள்ள பெண்களின் எண்ணிக்கை குறித்த தகவல்களை வெளியிட்டிருந்தது. சுமார் 188 நாடுகளின் தகவல்களை கொண்டு தரவரிசையை வெளியிட்டிருந்தது.
முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் பல நாடுகள் அந்த பட்டியலில் முதல் 50 இடங்களில் இடம்பிடித்திருந்தன.
பெண்களை அதிகமாக பாராளுமன்றத்திற்கு அனுப்பும் முஸ்லிம் நாடுகளின் வரிசையில் துனிசியா இரண்டாம் இடத்தில் இருக்கின்றது. இங்கு பாராளுமன்ற உறுப்பினர்களில் 26.3% பேர் பெண்கள். பொது இடங்களில் ஹிஜாப் அணிவதற்கு தடை விதிக்கப்பட்டிருந்த நாட்டில் இன்று ஹிஜாபுடன் பாராளுமன்றத்தில் பெண்கள்.
துனிசியா நம்மை ஆச்சர்யப்படுத்த இன்னொரு காரணமும் உண்டு. புரட்சிக்கு பிறகு துனிசியாவில் ஆட்சியை பிடித்தது மீடியாக்களால் இஸ்லாமிய கட்சி என்று அழைக்கப்படும் Ennahda கட்சியே. மீடியாக்களால் இஸ்லாமியவாதிகள் என்று அழைப்பட்ட இவர்கள் அதிக அளவிலான பெண்களை வேட்பாளர்களாக நிறுத்தியிருந்தனர். முடிவோ, இன்று துனிசிய பாராளுமன்றத்தில் நிறைய பெண் உறுப்பினர்கள்.
ஆச்சர்யங்களுக்கு எல்லாம் மகுடம் வைத்தார் போல இருந்தது, ஆப்கானிஸ்தான் நாடாளுமன்றம் குறித்த தகவல் தான். முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள நாடுகளின் வரிசையில் இந்த நாட்டிற்கே முதல் இடம். ஆப்கானிஸ்தான் பாராளுமன்றத்தில் 27.7% பேர் பெண்கள்.
நம் அண்டை நாடுகளான பாகிஸ்தானுக்கும் (22.2%), பங்களாதேஷுக்கும் (18.6%) முறையே 47 மற்றும் 63-வது இடங்கள். நம் நாடு 10.8% பெண் உறுப்பினர்களுடன் 99-வது இடத்தில் இருக்கின்றது.
இப்போது பதிவின் முக்கிய பகுதிக்கு வருவோம். பெண்ணுரிமை குறித்து அதிகம் பேசும் அமெரிக்கா, பெண்களை நாடாளுமன்றத்திற்கு அனுப்பும் /தேர்ந்தெடுக்கும் விசயத்தில் பின்னணியிலேயே இருக்கின்றது. பிரான்சும் அப்படியே. இவை முறையே 71 மற்றும் 61-வது இடத்தில் இருக்கின்றன. அமெரிக்க நாடாளுமன்றத்தில் 16.8% பேர் மட்டுமே பெண்கள்.
இந்த தகவல்களை கொண்டு எந்த முடிவிற்கும் வருவது இந்த பதிவின் நோக்கமல்ல. மாறாக, தாங்கள் பெரிதும் விரும்பும் ஒரு மார்க்கம் தங்கள் முன்னேற்றத்திற்கு தடையாக இருந்தால், இத்தனை பெண்கள் தலைவர்களாக வந்திருக்க முடியாது.
அதுபோல, யாரை நோக்கி 'பெண்களை அடக்குமுறைகளுக்கு உள்ளாக்குகின்றனர்' என்று குற்றம் சாட்டப்படுகின்றதோ, அவர்களும் இத்தனை பெண்களை பாராளுமன்றத்திற்கு தேர்ந்தெடுத்து அனுப்பியிருக்க முடியாது.
தெளிவான ஆதாரங்கள் நம் கண்முனே இருக்கின்றன. புரிந்துக்கொள்ள முடிந்தவர்கள் புரிந்துக்கொள்ளட்டும்.
7053. 'தம் (ஆட்சித்) தலைவரிடமிருந்து (மார்க்க விஷயத்தில் குறை) எதையேனும் (கண்டு அதை) வெறுப்பவர் பொறுமையாக இருக்கட்டும். ஏனெனில், ஆட்சியாள(ருக்குக் கட்டுப்படாமல் அவ)ரிடமிருந்து ஒரு சாண் அளவு வெளியேறுகிறவர் அஞ்ஞான கால மரணத்தை எய்துவார்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
அஸ்ஸலாமு அழைக்கும் .மேற்கண்ட ஹதீதை பள்ளிவாசலின் வெளிப்புற சுவற்றில் ஆறாம்பண்ணை நற்பணி மன்ற பலகையில் காணப்பட்டது.நாம் ஹதீதை எடுத்து வைத்தால் அதை கண்டுகொள்ளாதவர்கள் ,நம்மில் சிலருடன் ஒற்றுமை பேச வந்தவர்கள் குர்ஆன் ஹதித் பற்றி பேசவேண்டாம் என்று நிபந்தனை வைத்தவர்கள் ,இப்போது ஹதிதின் வாயிலாக நமக்கு அறவுரை கூற முயன்றுள்ளனர். புகழ் இறைவனுக்கே . வரவேற்போம்.
அவர்கள் இங்கு ஆட்சி தலைவர் என்று குறிப்பிட்டது பள்ளிவாசல் நிர்வாகி பற்றியே இருக்கும் என்று நம்புவோம்..நபி [ஸல்] அவர்கள் யாரைவேண்டுமானாலும் ஆட்சி தலைவராக வைத்துக் கொள்ள அனுமதித்தார்களா? .ஏனெனில் ,குர்ஆன் தொழுபவர்களையும் ,சக்காத் கொடுப்பவர்களையும் மட்டுமே பள்ளிவாசல் நிர்வாகிகளாக நியமிக்குமாறு தெளிவாக கூறுகிறது.இணைவைக்கும் நிர்வாகிகள் உள்ள பள்ளிகளை தொழுவதையே இஸ்லாம் மறுக்கிறது.
ஆனால் இணைவைப்பவரை டம்மி தலைவராகவும் ,பள்ளிக்கு தொழ வராத ஒருவரை,எட்டாவது வகுப்பு படிக்கும் மாணவனே பேணக் கூடிய சுன்னத்தான தாடியை வைக்காத ஒருவரை பள்ளியின் செயல் தலைவராக வைத்துக் கொண்டு மார்க்க விசயங்களில் குறை காணப்பட்டால் என்றால் அதன் பொருள் என்ன? குரானை மதிக்காதவர்கள் ஹதீதை பற்றி பேசுவது சரியா? அல்லாஹ்வுக்கும் தூதருக்கும் கட்டு படுங்கள் ,உங்களுக்குள் கருத்து வேறுபாடு இருக்குமானால் அல்லாஹ்விடமும் அவனது தூதரிடமும் திரும்புங்கள் அதுவே உங்களுக்கு சிறந்ததாக் இருக்கும் என்று குர் ஆன் கூறுகிறது.அவாறு இருக்க அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் மாறு செய்பவர்கள் எப்படி முஸ்லிம்களின் ஆட்சி தலைவராக இருக்க முடியும்?
ஆகவே இந்த ஹதித் ,குர் ஆன் ,ஹதிதுக்கு கட்டுப்பட்டு நடக்கும் மக்களின் தலைவர்களைப் பற்றியே பேசுகிறது. [ஆட்சி] தலைவரிடமிருந்து [மார்க்க விசயங்களில் ] குறைகள் காணப்பட்டால் அதற்காக வெறுப்பவர் பொறுமையாக் இருக்கட்டும் என்பது தவ்ஹித் ஜமாஅத் தலைவர்களுக்கே பொருந்துமே ஒழிய மாவட்ட ஆட்சிதலைவர் கலெக்டர் குரான் ஹதித்களுக்கு முற்றிலும் முரண்பட்ட ஜமாத் தலைவர்களுகெல்லாம் பொருந்தாது.
ஆயின் குர்ஆன் ஹதித் பற்றி .இன்னும் அதிகமாக சிந்தியுங்கள் . அதன் மூலமே ஒற்றுமையையும் அல்லாஹ்வின் பாதுகாப்பையும் பெறமுடியும்.
சனி, 25 பிப்ரவரி, 2012
ஆறாம் பண்ணையில் இப்போது மூன்று மதரசாக்கள் .அபார வளர்ச்சி
1 . தவ்ஹித் ஜமாஅத் என்ற அசல் சுன்னத ஜமாஅத் மதரசா 2 சுன்னத் ஜமாஅத் உலாமா சபை என்ற பெயரில் தரிக்கா ஜமாஅத் மதரசா 3 சுன்னத் ஜமாஅத் என்று சொல்லி கொள்ளும் இரண்டும் கெட்டான் மதரசா
தேசபக்தியை மொத்த விலைக்கு குத்தகை எடுத்திருப்பதாக சொல்லிக் கொள்ளும் தேசத் துரோக இந்துத்துவா கும்பல் முஸ்லிம் மக்களை அன்னிய கைக்கூலிகள் என்று அவதூறு செய்வதை அம்பலப்படுத்தும் பாடல்
தேசபக்தியை மொத்த விலைக்கு குத்தகை எடுத்திருப்பதாக சொல்லிக் கொள்ளும் இந்துத்துவா கும்பல் உண்மையில் நாட்டு விடுதலைப் போராட்ட தியாகிகளுக்குச் செய்யும் துரோகங்களின் வரலாற்றை சித்தரிக்கும் பாடல். நாமெல்லாம் நாட்டு வரலாற்றை புதிதாகக் கற்றுக் கொள்ளும் தேவையை உணர்ச்சி ததும்ப உணர்த்தும் பாடல்.
=========
பாபர், தன் மகன் ஹூமாயூனுக்கு விட்டுச் சென்ற உயிலில் சொல்கிறார். ‘அருமை மகனே, வகை வகையான மதங்களை பின்பற்றுபவர்கள் இந்தியாவில் இருக்கிறார்கள். நீ உனது மனதை குறுகிய மத உணர்வுகள் பாதிக்க அனுமதிக்கக் கூடாது. நீ மற்ற சமூகத்தினரின் வழிபாட்டுத் தலங்களை ஒரு போதும் இடித்து சேதப்படுத்தக் கூடாது. பாரபட்சமற்ற முறையில் நீதி வழங்க வேண்டும்.’ இது பாபர் தன் கைப்பட எழுதிய உயில். அர்ஜூனனுக்கு கண்ணன் செய்த கீதோபதேசம் போல புராணக் கட்டுக்கதை அல்ல. எனினும் அந்த பாபர்தான் கோயிலை இடித்ததாகக் குற்றம் சாட்டுகிறார்கள்.
இவர்கள் பழைய வரலாற்றை மட்டுமா திரித்தார்கள்! வெள்ளையனுக்கு எதிராக வீரப் போர் புரிந்து இறந்த முஸ்லீம் போராளிகளின் தியாகத்தையும் மறைக்கிறார்கள், திரிக்கிறார்கள். போர்த்துக்கீசியரை கடற்போரில் வென்ற கேரளத்தின் குஞ்ஞாலி மரைக்காயரையும், முதல் இந்திய சுதந்திரப் போருக்கு தலைமை தாங்கிய மன்னன் பகதூர்ஷாவையும் எத்தனை பேருக்குத் தெரியும்? வெள்ளையர்கள் நடுநடுங்க வீரப் போர் புரிந்த பைசலாபாத் மௌல்வி அகமதுஷாவை வெள்ளையரிடம் கைக்கூலி வாங்கிக் கொண்டு சதி செய்து கொன்றவன் அன்றைய அயோத்தியின் இந்து மன்னன் ஜகன்னாத ராஜா, என்று யாருக்குத் தெரியும்?
முதல் சுதந்திரப் போருக்கு வித்திட்ட வேலூர் கோட்டைக் கலகத்திற்கு தலைமை தாங்கிய முஸ்லீம் தளபதிகள் சவுக்காலும் புளியம் விளாறுகளாலும் அடித்தே கொல்லப்பட்டது யாருக்குத் தெரியும்? பகத்சிங்கைப் போலவே தூக்கு மேடை ஏறிய அவன் தோழன் அஷ்வகுல்லாகானை யாருக்குத் தெரியும்?
தெரியக் கூடாது என்பதில் எச்சரிக்கையாக இருக்கிறது ஆர்எஸ்எஸ் கும்பல். அதனால்தான் புராணப் புளுகுகளை உண்மை போல சித்தரிக்கும் தொலைக்காட்சியில் திப்புசுல்தானின் வரலாற்றை கற்பனைக் கதை என்று குறிப்பிடுகிறார்கள். இருட்டடிப்பு மட்டுமா, அந்தத் தியாகிகளை துரோகிகள் என்றும் தூற்றுகிறார்கள்.
அவர்களுடைய வாரிசுகளும் இந்த மண்ணின் மைந்தர்களுமான முஸ்லீம் மக்களை அன்னிய கைக்கூலிகள் என்று அவதூறு செய்கிறார்கள். எத்தனை பெரிய துரோகம், உங்கள் இதயம் வலிக்கவில்லையா, கண்கள் பனிக்கவில்லையா இந்த அநீதியைக் கண்டு?
என்றும்…உன்னோடும் என்னோடும் மண்ணோடும் வாழும் வாழும்
கோரஸ் : சொல்லாத சோகம் – வெல்லாத வீரம்
நெஞ்சோடு மோதும் – கண்ணீரின் கீதம்…
அயோத்தி என்பது தியாகம் – அதன் சின்னம் அசரத் பேகம்
கோரஸ் : அதன் சின்னம் அசரத் பேகம்
அசரத் மஹல் அயோத்தியின் ராணி. முதல் சுதந்திரப் போரில் ஆங்கிலேயரை எதிர்த்து வீரப் போர் நடத்தி தோல்வியுற்றாள் ஹசரத் மஹல். அவளுக்கு அடைக்கலம் அளிக்கக் கூட எந்த இந்து மன்னனும் முன்வரவில்லை. தன் 10 வயது மகனோடு இமயத்தின் அடிவாரக் காடுகளில் அநாதையாக திரிந்து இறந்தாள் அந்தத் தாய்.
அயோத்தி என்பது தியாகம் – அதன் சின்னம் அசரத் பேகம்
கோரஸ் : அதன் சின்னம் அசரத் பேகம்
ஆளரவம் இல்லா காட்டில்…அநா..தையாக மரணம்
கோரஸ் : அநா..தையாக மரணம்
அந்தப் பெண் ஈன்ற மண்ணே… இன்று அய்யோ அவமானம்…
கோரஸ் : அந்தப் பெண் ஈன்ற மண்ணே… இன்று அய்யோ அவமானம்…
திப்பு சுல்தான், இந்திய மன்னர்கள் அனைவரையும் ஒன்று சேர்த்து வெள்ளையனை விரட்ட வேண்டும் என்பது அவன் கனவு. ஆனால், திப்பு தோற்கடிக்கப்பட்டான். அவனை முதுகில் குத்தியவர்களில் முதன்மையானவர்கள் மராத்திய பேஷ்வா மன்னர்கள். வேறு யாருமல்ல, அவர்கள்தான் ஆர்எஸ்எஸ்சின் மூதாதையர்களான சித்பவன பார்ப்பனர்கள்.
மாப்பிளா போராட்டம் – மண்ணை உழவன் கையில் சேர்க்கும்
கோரஸ் : மண்ணை உழவன் கையில் சேர்க்கும்
உழுபவனுக்கு நிலம். மாப்பிளா முஸ்லீம் விவசாயிகளின் முழக்கம். அது தாழ்த்தப்பட்ட மக்களும் முஸ்லீம் விவசாயிகளும் இணைந்து நடத்திய போராட்டம். சொந்த மண்ணின் மக்களை ஒடுக்க வெள்ளையனின் காலை நக்கினார்கள் நம்பூதிரிகள். கிராமம் கிராமமாக கொலை செய்யப்பட்ட போதும் 50 ஆண்டு காலம் அந்த போராட்டம் ஓயவில்லை.
மாப்பிளா போராட்டம் – மண்ணை உழவன் கையில் சேர்க்கும்
கோரஸ் : மண்ணை உழவன் கையில் சேர்க்கும்
நம்பூதிரி வெள்ளையர் ஆட்டம் – அவன் சாதித் திமிரை ஓட்டும்
கோரஸ்: அவன் சாதித்திமிரை ஓட்டும்
அரை நூற்றாண்டு காலம் அடி பணியாத கோபம்
கோரஸ் : அரை நூற்றாண்டு காலம் அடி பணியாத கோபம்
என்றும் உன்னோடும் என்னோடும் மண்ணோடும் வாழும் வாழும்
முதல் சுதந்திரப் போராட்டம் – தமிழ்மண்ணில்தான் வெள்ளோட்டம்
கோரஸ் : தமிழ்மண்ணில்தான் வெள்ளோட்டம்
வேலூர் கோட்டை. அங்கே சிறை வைக்கப்பட்டிருந்த திப்புவின் முஸ்லீம் தளபதிகளும் ஆங்கிலப் படையின் தமிழ் சிப்பாய்களும் கோட்டையைக் கைப்பற்றினார்கள். கிளர்ச்சியை நசுக்கினான் வெள்ளையன். பீரங்கி வாயில் வைத்து அவர்களை பிளந்து அகழியில் வீசினான். விடுதலைப் போரின் உறவாய் அந்த மண்ணில் உறைந்து விட்ட இரத்தத்தில் மதம் எங்கே?
முதல் சுதந்திரப் போராட்டம் – தமிழ்மண்ணில்தான் வெள்ளோட்டம்
கோரஸ் : தமிழ்மண்ணில்தான் வெள்ளோட்டம்
வெள்ளை கசையால் சிதைந்த தேகம் – வேலூர் கோட்டை அகழியை மூடும்
கோரஸ் : வேலூர் கோட்டை அகழியை மூடும்
அந்த முஸ்லீம் மக்கள் தியாகம்…விடுதலைப் புயலின் கருவாய் மாறும்…
கோரஸ் : அந்த முஸ்லீம் மக்கள் தியாகம்…விடுதலைப் புயலின் கருவாய் மாறும்…
எட்டப்பன்மாரின் துரோகம் – இந்து என்பதனாலா மாறும்
கோரஸ் : இந்து என்பதனாலா மாறும்
பேஷ்வா அரச பரம்பரையும் இன்னும் பல எட்டப்பன்களும் நினைத்திருப்பார்களா, இந்து என்ற ஒரே காரணத்தால் நாம் போற்றப்படுவோம் என்று. அல்லது களத்தில் உயிர்நீத்தானே திப்பு சுல்தான், அவன் நினைத்திருப்பானா, முஸ்லீம் என்ற ஒரே காரணத்தால் நாம் தூற்றப்படுவோம் என்று. இசைப்பார் இல்லை என்பதால் அந்த ராகம் இல்லாமலா போய் விடும்.
எட்டப்பன்மாரின் துரோகம் – இந்து என்பதனாலா மாறும்
கோரஸ் : இந்து என்பதனாலா மாறும்
திப்பு சுல்தானின் தியாகம்… – ஏன் முஸ்லீம் என்ற பேதம்
கோரஸ் : ஏன் முஸ்லீம் என்ற பேதம்
இது பாடாத வீரம் யாரும் தேடாத ராகம் -
கோரஸ் : இது பாடாத வீரம் யாரும் தேடாத ராகம்
என்றும் உன்னோடும் என்னோடும் மண்ணோடும் வாழும்… வாழும்…