Arampannai ஜமாஅத் தலைவர் .
திரு .வைஸ் .கே.ஏ .முஹம்மது உதுமான்
பஞ்சாயத்துதலைவர்
திருமதி.ஹமிதாஹனிபா ;
கவுன்சிலர் .
திருமதி.சரிபாபசிர்

ஞாயிறு, 26 பிப்ரவரி, 2012

ஆறாம்பண்ணை நற்பணி மன்ற பலகையில்


7053. 'தம் (ஆட்சித்) தலைவரிடமிருந்து (மார்க்க விஷயத்தில் குறை) எதையேனும் (கண்டு அதை) வெறுப்பவர் பொறுமையாக இருக்கட்டும். ஏனெனில், ஆட்சியாள(ருக்குக் கட்டுப்படாமல் அவ)ரிடமிருந்து ஒரு சாண் அளவு வெளியேறுகிறவர் அஞ்ஞான கால மரணத்தை எய்துவார்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். 

அஸ்ஸலாமு அழைக்கும் .மேற்கண்ட ஹதீதை பள்ளிவாசலின் வெளிப்புற சுவற்றில் ஆறாம்பண்ணை நற்பணி  மன்ற பலகையில் காணப்பட்டது.நாம் ஹதீதை எடுத்து வைத்தால் அதை கண்டுகொள்ளாதவர்கள் ,நம்மில் சிலருடன் ஒற்றுமை பேச வந்தவர்கள் குர்ஆன் ஹதித் பற்றி பேசவேண்டாம் என்று நிபந்தனை வைத்தவர்கள் ,இப்போது ஹதிதின் வாயிலாக நமக்கு அறவுரை கூற முயன்றுள்ளனர். புகழ் இறைவனுக்கே . வரவேற்போம்.
அவர்கள் இங்கு ஆட்சி தலைவர் என்று குறிப்பிட்டது பள்ளிவாசல் நிர்வாகி பற்றியே இருக்கும் என்று நம்புவோம்..நபி [ஸல்] அவர்கள் யாரைவேண்டுமானாலும் ஆட்சி தலைவராக வைத்துக் கொள்ள அனுமதித்தார்களா? .ஏனெனில் ,குர்ஆன் தொழுபவர்களையும் ,சக்காத் கொடுப்பவர்களையும் மட்டுமே பள்ளிவாசல் நிர்வாகிகளாக நியமிக்குமாறு தெளிவாக கூறுகிறது.இணைவைக்கும் நிர்வாகிகள் உள்ள பள்ளிகளை தொழுவதையே இஸ்லாம் மறுக்கிறது. 
ஆனால் இணைவைப்பவரை டம்மி தலைவராகவும் ,பள்ளிக்கு தொழ வராத  ஒருவரை,எட்டாவது வகுப்பு படிக்கும் மாணவனே பேணக்  கூடிய சுன்னத்தான தாடியை வைக்காத ஒருவரை பள்ளியின் செயல் தலைவராக வைத்துக் கொண்டு மார்க்க விசயங்களில் குறை காணப்பட்டால் என்றால் அதன் பொருள் என்ன?        குரானை மதிக்காதவர்கள் ஹதீதை பற்றி பேசுவது சரியா? அல்லாஹ்வுக்கும் தூதருக்கும் கட்டு படுங்கள் ,உங்களுக்குள் கருத்து வேறுபாடு இருக்குமானால் அல்லாஹ்விடமும் அவனது தூதரிடமும் திரும்புங்கள் அதுவே உங்களுக்கு சிறந்ததாக் இருக்கும் என்று குர் ஆன் கூறுகிறது.அவாறு இருக்க அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் மாறு செய்பவர்கள் எப்படி முஸ்லிம்களின் ஆட்சி தலைவராக இருக்க முடியும்? 


ஆகவே இந்த ஹதித் ,குர் ஆன் ,ஹதிதுக்கு கட்டுப்பட்டு நடக்கும் மக்களின் தலைவர்களைப் பற்றியே பேசுகிறது. [ஆட்சி] தலைவரிடமிருந்து [மார்க்க விசயங்களில் ] குறைகள் காணப்பட்டால் அதற்காக வெறுப்பவர் பொறுமையாக் இருக்கட்டும் என்பது தவ்ஹித் ஜமாஅத் தலைவர்களுக்கே பொருந்துமே ஒழிய மாவட்ட ஆட்சிதலைவர் கலெக்டர் குரான் ஹதித்களுக்கு முற்றிலும் முரண்பட்ட ஜமாத் தலைவர்களுகெல்லாம் பொருந்தாது.
ஆயின் குர்ஆன் ஹதித் பற்றி .இன்னும் அதிகமாக சிந்தியுங்கள் . அதன் மூலமே ஒற்றுமையையும் அல்லாஹ்வின் பாதுகாப்பையும் பெறமுடியும்.

கருத்துகள் இல்லை: