Arampannai ஜமாஅத் தலைவர் .
திரு .வைஸ் .கே.ஏ .முஹம்மது உதுமான்
பஞ்சாயத்துதலைவர்
திருமதி.ஹமிதாஹனிபா ;
கவுன்சிலர் .
திருமதி.சரிபாபசிர்

வெள்ளி, 2 டிசம்பர், 2011

அவர்கள் உங்களை எவ்வாறு கேலி செய்தார்களோ நீங்களும் அதைப் போன்றே அவர்களை கேலி செய்யுங்கள் [அல்குர்ஆன்]

வினவு விவாதத்திலிருந்து ,,,

        • karuppanNovember 30, 2011 at 10:01 pm 
          79
          அப்துர் ரஹ்மான் : அவரு இருக்காரே அவரு, அதான் அபுபக்கர் அவரு முகம்மதுநபிக்கு ரொம்ப பக்கபலமா இருந்து இசுலாத்தை பரப்ப உதவினாராம்.
          கருப்பன் ; ஆங்…. அப்படியா !
          அப்துர் ரஹ்மான் : ஆமாம், மக்காவிலிருந்து முகம்மதுநபி மதினாவுக்கு தப்பி போகும்போது உதவினது மட்டுமல்லாமல் கூடவே மதினாவுக்கு சொத்துகளை எல்லாம் விட்டு விட்டு போனார்பா.
          கருப்பன் ; ஓ…. ரொம்ப பாசமுள்ளவர்னு சொல்லுங்க.
          அப்துர் ரஹ்மான் : மதினா போகும்போது வழியில முகம்மது நபி ஒய்வெடுக்கும் போது, ஒரு வண்டு அபுபக்கர கடிச்சிக்கிட்டு இருந்துச்சாம். மடியில் படுத்து தூங்கிக்கிட்டு இருந்த அவரது தூக்கம் கலைஞ்சிடக்கூடாதுன்னு அபுபக்கர் ஆடாம அசையாம கடியுடைய வேதனையை தாங்கிக் கொண்டாராம்.
          கருப்பன் : அய்யய்யோ ! அப்புறம் ?
          அப்துர் ரஹ்மான் : மதினாவில அபுபக்கர்தான் உற்ற தோழர். உற்ற தோழராக இருந்தாலும் முகம்மது நபிக்கு திருப்தி இல்லே. எப்படியாவது அவரோட உறவை பலப்படுத்தனும்னு கவலையா இருந்தார்.
          கருப்பன் : அதுக்கு என்ன செய்தார் ?
          அப்துர் ரஹ்மான் : கவலையில கொஞ்சநாள் போயிடுச்சு. திடீரென அவருக்கு கனவில அல்லா வந்து அபுபக்கருடைய மகள கல்லாயணம் பண்ணிக்கிட்டு உறவை உடனே பல்படுத்தச் சொல்லி உத்தரவு வந்துச்சு. கண்ணு முழிச்துதான் தாமதம் உடனே சம்பந்தம் பண்ண ஆளனுப்பினார். மறுபடியும் ஒரு யோசனை வந்துச்சான். அபுபக்கர் மகளுக்கு 6 வயது தானே ஆகுதுன்னு என்ன செய்யலாம் னு. அல்லாவே சொல்லிட்ட பிறகு அதை நாம செய்யாமல் இருக்கலாமா? நாம மட்டுமா செய்யுரோம் எல்லாரும்தானே செய்யுறாங்க என்று நினைச்சுக்கிட்டு சம்பந்தம் பேசி கல்யாணம் பண்ணிக்கிட்டு “உறவை” பலப்படுத்திக்கிட்டார். பாவம் அவரு என்னதான் பண்ணுவாரு. அபுபக்கருக்கு வேறு பொம்புளை புள்ளைங்களும் இல்ல. உறவுதான நமக்கு முக்கியம். தோழமையல்லாம் பின்னாடிதானே.
          கருப்பன் ; என்னங்க சொல்லுறிய? 6 வயது பொண்ணா?
          அப்துர் ரஹ்மான் : ஆமாம் அப்பவெல்லாம் பொறக்குறதுக்கு முன்னாடியே கல்யாணம் பண்ணிக்குவாங்க தெரியுமா ! காலச்சூழ்நிலையை பாக்கனும் கருப்பா. இல்லேன்னா நாம அரைவேக்காடாக போய்விடுவோம். முழுசா வெந்தாத்தான் ருசியா இருக்கும். மண்டையில மசலாவும் சேரும்.
          கருப்பன் ; ரஹ்மான் என் அறிவுக் கண்ணை தெறந்திட்டீங்க. இனிமே அடுத்த அவுலியா நீங்கதான். உங்களுக்குதான் அந்த முழுதகுதியும் இருக்கு. ஆன்லைன்லகூட நீட்டி முழங்கிக்கிட்டு…. நச்சு நாலே வாரத்தையில அழகாக சொல்லிட்டீங்க. எனக்குகூட இப்போ நாளைக்கே இஸ்லாத்திற்கு வந்து உங்களோட உறவை பலப்படுத்திக்கனும்னு ஈமான் துடிக்குது.
        • 80
          அப்துரஹ்மான் ;தாரளமாக நாளைக்கே முஸ்லிமாகிவிடு
          கருப்பன் முஸ்லிம் ஆகிவிட்டார்..பெயரை கலிமுல்லா என்று மாற்றிக் கொண்டார்.உடன் அப்துரகுமானை சந்தித்து ஆறுவயது பெண்ணை திருமணம் செய்து வைக்க கோருகிறார்.
          AR உடனே திருமணம் செய்துவைக்க முடியுமா? முதலில் தொழ ஆரம்பிக்க வேண்டும் தெரியுமா?
          கலிமுல்லா :அப்படியா தொழ கற்று தாருங்கள்
          AR நாளை என்னுடன் தாவ செண்டர் மண்ணடியில் உள்ளது அங்கு வாருங்கள்
          கலிமுல்லா’ சரி வருகிறேன்
          மறுநாள் தொப்பி தலையுடன் கலிமுல்லா தாவ செண்டர் செல்கிறார் அப்துரஹ்மான் அவரை தாயீ க்கு அறிமுகப்படுத்தி வைக்கிறார் அவர் ஒரு மாதம் அங்கு தங்க வைக்கப்படுகிறார். அப்போது அவர் அங்கு மார்க்க விசயங்களை கற்கிறார்.ஏழை பணக்காரன் வித்தியாசமின்றி தொழுகையில் முதல் வரிசையில் நின்று தொழுகிறார் ஒரே தட்டில் இருந்து சாப்பிடுகிறார்கள்
          கலிமுல்லா,சுகாதார சிப்பந்தியாக இருந்த தன்னை ஒருமையில் பலரால் விளிக்கப்பட்ட தன்னை இப்பொது முஸ்லிமாக ,தங்களில் ஒருவராக ,தெருவில் சென்றால் பாய் என்று அழைக்கப்படும் மகிழ்ச்சியை அவரால் பகிர்ந்து கொள்ள முடியவில்லை.[தொடரும்,இறைவன் நாடினால்} .
              • S.IbrahimDecember 1, 2011 at 11:30 am 
                80.1.1.1
                தொடர்ந்து கலிமுல்லாஹ் பீஜே அவர்களின் பல நூல்களை படிக்கிறார் வீடியோ நிகழ்ச்சிகள் காணுகிறார்.அதில் ஆயிஷா[ரலி] அவர்களின் திருமணம் ,மற்றும் பலதார திருமணம் ,இஸ்லாத்தில் பெண்கள் உரிமை பற்றியெல்லாம் படிக்கிறார்.மற்றும் அங்கு வந்த பீஜே அவர்களிடமும் மற்ற மார்க்க அறிஞர்களிடமும் தனது சந்தேகங்களுக்கும் “வினவு”களுக்கும் விடைகள் கேட்டு உண்மைகளை அறிந்துகொண்டு கொண்டு திருப்தியடைகிறார்.AR .அவர்களை அழைத்து தன்னுடைய தவறுதலான புரிதலுக்கு வருத்தம் தெரிவித்து தனது மனைவி குழந்தைகள் அனைவரையும் முஸ்லிம் மதத்தை தழுவ செய்கிறார்.
                AR : கலிமுல்லாஹ் பாய் திருமணம் பண்ணப்போவதாக சொன்னேர்களே பண்ணிவைத்திடுவோமா?
                கலிமுல்லாஹ்: ஒரு திருமணம் பண்ணி வாழ்வதற்கே இப்போதைய பொருளாதாரம் ஒத்து வராது,நீங்கள் என்ன இரண்டு திருமணமா பண்ணியுள்ளீர்கள் ,மேலும் நான் தாவ சென்டரில் இருந்த பொழுது எத்தனையோ சகோதரர்களை சந்தித்தேன் ,அவர்கள் யாரும் இரண்டு திருமணம் செய்யவில்லை .ஒரு சந்தேகத்தில் அடிமைகள் வைத்திருப்பார்களோ என்று விசாரித்து பார்த்தேன்,அதற்கும் பதில் சொன்னார்கள் ,பீஜேவின் விளக்கத்தையும் படித்து உண்மைகளை அறிந்து கொண்டேன்.நபி[ஸல்] அவர்கள் பாவ செயலுக்கும் தவறுகளுக்கும் அடிமைகள் விடுதலை அளிக்க உத்தரவிட்டது அடிமை முறைகளை ஒழிக்கவே என்பதையும் புரிந்து கொண்டேன்.எனது மூத்தமகனுக்கு தாவா சென்டரில் ஒரு சகோதரர் மகளை திருமணம் செய்துவைக்க முடிவுபண்ணியுள்ளோம்..நான் இளைஞர் ஆக இருந்த பொழுது படித்தது வேளையில் இருந்தாலும் கம்யுனிச கொள்கை யிலிருந்த எனக்கு எந்த சாதியினரும் பெண் தர மறுத்துவிட்டார்கள்.என்னை ஒரு கம்யுநிசவாதியாக பார்க்காமல் சக்கிலியனாகவே பார்த்தார்கள். மேலும் அவர்கள் வீட்டுக்கு விருந்து அழைக்கும்பொழுது என்னை சாதுர்யமாக தவிர்த்துவிடுவார்கள்.மேடையில்தான் சமத்துவம் ,புரட்சி என்பார்கள்.அவர்கள் சொல்லைகேட்டு நானும் இஸ்லாம் பற்றி தவராகபுரிந்துவிட்டேன் .ஆனால் இஸ்லாத்தில் வந்த பிறகே உண்மைகள் தெரிகிறது .அல்ஹம்துலில்லாஹ்

                karuppanDecember 1, 2011 at 12:12 pm 
                81
                இபுராகிம் நல்லா சொன்னீங்க இபுராகிம். எத்தனை இந்து பொண்ணுங்களை தள்ளிட்டுவந்த பையனுகளுக்கெல்லாம் தாவா சென்டர்ல வச்சு மதம் மாற்றி, தொழுவ, ஓத பயிற்சி கொடுத்து கல்யாணம் பண்ணிவச்சிருக்கப்ப எனக்கு மட்டும் மாட்டேன்னுவா சொல்லுவீங்க. நம்ம பையன் அன்வரும் அவன் பிரண்டும் சேர்ந்து செஞ்சியிலேர்த்து இரண்டு பொண்ணுங்களை தள்ளிக்கிட்டுவந்ததும் மதுரையில உள்ள மதஸாவில சேர்த்து பயிற்சி கொடுப்பதுபோல எனக்கும் கிடைக்குன்னு ஈமானுடன்தான் இருக்கிறேன்.
                ஆனால் ஒரு சின்ன சந்தேகம் நம்ம சிரில் அண்ணனுக்கு அதான்ண பிஜேவுக்கு பாடிகாடா இருந்தார்ல அவருதான், குஞ்சல்லாம் கட் பண்ணிகிட்டு ஈமானோட இருந்தும் அவரு ஆசைப்பட்ட டீச்சர் பொண்ணை கல்யாணம் பண்ணிவைக்காம கடையரு வீட்டு பசங்களுக்கெல்லாம் நாசுவ வீட்டு பொண்ணு இருக்குன்னு சொல்லி ஆசைப்பட்ட பொண்ணை கல்யாணம் பண்ணி வைக்காத து போல எனக்கும் சொல்லிடுவீங்களோன்னு ஒரு சந்தேகம். நமக்கு நாசுவ வீடு பக்கீர்சா வீடு எதுவானாலும் பலவாயில்லைனா. ஆனால் உங்களோட உறவையும் வலுப்டுத்தனும்னா. அதனால நீங்கள் பக்கீர்சாவா இருந்தாலும் பரவாயில்லைனா. பாவம்னா சிரில். தவ்ஹீதுலேயும் சாதியான்னு வெருத்துப்போய் குஞ்சு வெட்டிய கிறித்தவராக திரும்பிட்டார்னா.
                இன்னொன்ன சொல்ல மறந்துட்டேன்னா. நம்ம இசுமாயிலுக்கும் பக்கீர்சா வீடுன்னு பொண்ணு கொடுக்காம பக்கத்து ஊர்லதான்னா கல்யாணம் பன்ணினார். நிறைய கம்மயூட்டர் பத்தி படிச்சி நல்ல சம்பளமும் போது வீடு இருந்த தால பக்கத்து ஊர்காரங்க என்னசாதியின்னு பாக்காம பொண்ண கொடுத்தாங்கண்ணா.
                இபுராகிம் அண்ணா எப்ப வரனும் ? நம்ம பிர்தவுஸ் வீட்லகூட தங்கிக்கிடலாமுண்ணா. பக்கத்தில இருப்பதால வசதியா இருக்கும்.
                இரண்டாவது இபுராகிம் பின்னூட்டத்திற்கு, : ஏன்னா கிண்டல்ல வேணாண்னா. இன்னும் நமக்கு கல்யாணம்லா ஆகலியாங்காட்டுக்கும்.
                aruppanDecember 1, 2011 at 11:22 pm 
                83
                இபுராகிம் காக்கா, 
                பாக்கர் கதைன்னா ஜென்டில்மேன் அக்ரிமென்ட் போட்டுட்டாங்களோன்னு கேட்டேன் காக்கா.
                அப்புறம், பிஜே காக்கா பயான்லா கேட்டு அவரு அடிமையா ஆகனுமாக்கும். பரவாயில்லை காக்கா. நமக்கு எப்படியும் ‘உறவை’ பலப்படுத்தனும். தோழமை எல்லாம் சும்மா வெளிவேசம் காக்கா. உறவு அதுதான் முக்கியம்.
                • S.IbrahimDecember 2, 2011 at 10:53 am 
                  83.1

                  நாங்கள் விரும்பியவருடன் உறவை பலப்படுத்த விரும்புவோமே தவிர உம்மைப்போல் கழிசடைகளிடம் உறவை பலப்படுத்த விரும்புவதில்லை.
                  கருப்பன்December 2, 2011 at 6:36 pm 
                  90
                  இபுராகிம் அண்ணா,
                  மனம் திருந்தி முஸ்லீமாக மாறிவிட்டேன்னு சொல்லிவிட்டு இப்போ கழிசடை என்று கழற்றுகிறீர்களே. உறவை பலப்டுத்த எவ்வளவு ஆர்வமாக இருக்கேன் தெரியுமா ! நம்ம முக்தார், சேக் , நஜிம் இப்படி 50 பேர்களுக்கு மேல் உறவை பல்படுத்த தயாராகிட்டோம். இவர்களெல்லம் யார் என்று கேட்கிறீர்களா? பிஜே எஜமானுக்கு நல்லா தெரியும். அவரிடம் கேட்டுக்குங்க.
                  நீங்க வரச் சொல்லாட்டாலும் நாங்கள் எல்லோரும் ஒருநாள் திடீரொன்று தாவாவுக்கு வந்துவோமுள்ள.
                  • S.IbrahimDecember 2, 2011 at 10:37 pm 
                    90.1
                    அப்துரகுமானை அழைத்து வரவேண்டும் கருப்பா
                    கருப்பன்December 4, 2011 at 2:18 pm 
                    99
                    கலிமுல்லாவாகிய கருப்பன் நான். அப்துல் ரஹ்மான் யார் ? அப்துல் ரஹமானிடமிருந்து வந்த மின்னஞ்சலிருந்து ரஹ்மான் சொன்னதை உரையாடலாக தந்திருந்தேன். நம்ம இபுராகிம் ரஹ்மானுடைய உரையாடலையும் என்னுடைய நடவடிக்கையையும் எழுதியதன் மூலம் நம்ம இபுராகிம்தான் ரஹமான் என் அறிந்து கொண்டேன். மனம் திருந்திய என்னை பொட்டாட்டி புள்ளைங்களோட மதம் மாறினேன் என்று சொன்னது மட்டும் பொய் என்பதால் பொய் என்று கடுமையாக குற்றம் சாட்டாமல் கல்யாணம் எல்லாம் ஆகலீங்க என்ற தகவலைச் சொன்னேன். என்ன செய்ரது உறவை பலப்படுத்தனும்னா எல்லாத்தையும் பொறுத்துக் கொள்ளனுமுள்ள.
                    ஆனால் மனம் திருந்திய சக்கிலியனான என்னை கழிசடை என்று கழட்டிவிட முயற்றசிப்பதும் அப்துல் ரஹ்மானை கூட்டிகிட்டு வா என்று சொல்வதும்……
                    சக்கிலியனா இருந்து கேவலப்பட்ட என்னை பாய் என்று அழைத்ததும் புல்லரித்து போயிருக்கும் என்னை…. அண்ணா கிண்டல் வேணாமுங்க. நீங்கதான்னா அப்துல் ராஹ்மான். இல்லன்னா அப்துல் ரஹ்மான் என்னிடம் சொன்னது எப்படி உங்களுக்க தெரியும் ?
                    • S.IbrahimDecember 4, 2011 at 11:30 pm 
                      99.1
                      கருப்பன் ,நான் அப்துல்ரகுமான் என்றாலும் என்னிடம் வந்த கருப்பன் கலிமுல்லாவாக மாறிவிட்டார். அவர் தன அறியாமையை உணர்ந்து தனக்கு ஒரு திருமணமே போதும் என்று சொல்லி உங்களைப் போன்ற கழிசடை கறுப்பன் களுக்கு இப்போது தாவ பண்ணி கொண்டு இருக்கிறார்.அவர் மீண்டும் தன்னை கருப்பன் என்று சொல்லப்போவது இல்லை.உங்கள் உறவை பலப்படுத்த நாங்கள் விரும்பவில்லை. நீங்கள் பலப்படுத்த விரும்பினால் உங்கள் உறவு பெண்களை முஸ்லிமாக்கி உங்களது ஊர் முஸ்லிம்களை அணுகவும் .அதன் பின்னர் உங்களுக்கு அங்கெ பெண் தந்து பலப்படுத்திக் கொள்வார்கள். ஆக இப்போது இரட்டை பலப்படுத்தல் ஆகிவிடும்.
                      இதன் பிறகு கருப்பன் வரவில்லை /ஓடிவிட்டார்.

செவ்வாய், 22 நவம்பர், 2011

செந்தோழன் மறுப்பும் எனது பதிலும்


  1. செந்தோழன்நவம்பர் 20, 2011 இல் 10:25 பிற்பகல் #
    இப்ராஹிம் அண்ணே ! ஏண்ணே கோபப்படுறீங்க நம்ம 2 பண்டிகையும் ஏழைகளை கவனத்தில் கொண்டே கொண்டாடப்படுகிறது என்பது ஒருபக்கம் இருக்கட்டும்.ஆனா ஏங்கூட சேர்கிற பயபுள்ள( மாற்று மதத்தவர்) என்ன சொல்றார்ன்ன இதையேதான் நாங்களும் கோவில்ல அறுத்து செய்கிறோம்.அப்படின்னா 2 மதமும் ஒன்றுதானே என்கிறான்.இப்போ ஹஜ் வழிபாட எடுத்துக்கொள்ளுங்கள் இங்கிருந்து அங்கேபோய் கல் கட்டிடத்தைசுற்றி வாராங்க,மொட்டை போடுறாங்க,புனிதநீருன்னு (ஜம்ஜம் தண்ணீர்) சொல்றாங்க,அப்புறம் அறிவியலின் உச்சகட்டமாம் சைத்தானை (நரபலியை தடுத்த நல்ல மனிதரை)கல்லவுட்டு எரிவது இதுதானே ஹஜ் யாத்திரை.இதைத்தான் இங்குள்ள இந்து மதத்திலும் செய்றாங்க அதுமட்டும் மூடநம்பிக்கை அப்படின்னு சொல்றோம்.எண்ணாண்ணே! இதுக்கு விளக்கம் சொல்லுங்கண்ணே எனக்கு ஒன்னும் புரியமாட்டேங்குது.எனக்கும் இது சரின்னுதான்படுது. ஓரே அறிவியல்,விஞ்ஞானம்னு படுச்சு பார்க்கும்போது கம்யூனிசம் சொல்றது சரின்னுபடுது இஸ்லாத்தில வருசத்தில் 5 நாள் மட்டும் ஏழைகளை கவனிக்கிறோம்(மற்ற நேரம் அவன் எக்கேடும் கெட்டுபோகிறான் ) ஆனால் கம்யூனிசத்தில் ஏழைகளே இருக்கக்கூடாதுன்னு சொல்றாங்க அப்போ எதுண்ணே சரியானது? ஏழையை இல்லாமல் ஒழிக்க அல்லாகிட்ட ஆயுதம் இல்லையா? ஆனால் கம்யூனிசத்தில் ஏழ்மையை ஒழிக்கும் அந்த ஆயுதம் இருக்குண்ணே. அல்லா தன் தூதர் இப்ராஹிமிடம் எனக்காக உன் குழந்தையை அறுத்து நரபலியிடு என்று கட்டளையிடுபவன் எப்படி கருணையாளனாய் இருக்கமுடியும்.(மதம் அன்பை போதிக்கிறதாம் எந்த முட்டாள் சொன்னான்) அப்போ இங்கே பூசாரி குழந்தையை கடத்திக்கொண்டு போய் கருணையே இல்லாமல் கடவுளின் பெயரால் நரபலி கொடுக்கின்றானே! அப்போ 2 மதமும் செய்றதுக்கு பெயர் தியாகமாண்ணே ! அப்போ உங்க அகராதியில தியாகம்ன்னா பெத்த புள்ளய போட்டு ஈவுயிரக்கமில்லாமல் கழுத்த அறுக்கிறதானா ? அண்ணே !சோமாலியா, சோமாலியான்னு ஒரு நாடு இருக்கு அல்லாஹ்வுக்கு தெரியுமான்னு கேளுங்க அங்கே சோறு தண்ணி இல்லாமல் பயபுள்ளைங்க சாகுறாங்க அல்லா எப்போ வருவான் எப்போ வருவாருன்னு கேட்டுக்கொண்டே இருக்கிறாங்க அங்குள்ள மக்கள்.நீங்க துஆ (செல்போன்) மூலமா செய்தியை சொல்லி அல்லாவை அங்கே ஒரு விசிட் போய்ட்டு வர சொல்லுங்கண்ணே! என்ன செய்றது அந்த நாட்டையும் அல்லாதான் படைத்திருப்பான் என்ன செய்ய பல வேலைகள் இருப்பதால் மறந்திருப்பான் நீங்கள் கண்டிப்பாக ஞாபகப்படுத்திடுங்கள். பசியோடுயிருக்கும் ஏழை மக்கள் மத்தியில் இப்ராஹிம் அண்ணன் குர் ஆன் ஹதீஸை படித்து விளக்கி பயான் செய்கிறார். இப்ராஹிம் ; கல்லில்யிருக்கும் தேரைக்கும் அல்லாவே உணவளிப்பவன். ஏழை ;எவண்டா அவன் இங்கே மனுசன் சோறு தண்ணியில்லாம தவிக்கிறான் அல்லா புடுங்கினாறாம்.எங்க ஏழ்மையை கேலி செய்யவா வந்திருக்க ஏய் !இவனை கல்லால் அடித்து வெரட்டுங்கடா………….!

    • S.Ibrahimநவம்பர் 21, 2011 இல் 10:20 மு.பகல் #
      ///ஏழை ;எவண்டா அவன் இங்கே மனுசன் சோறு தண்ணியில்லாம தவிக்கிறான் அல்லா புடுங்கினாறாம்.எங்க ஏழ்மையை கேலி செய்யவா வந்திருக்க ஏய் !இவனை கல்லால் அடித்து வெரட்டுங்கடா………….!////
      ஏழைகளே ,இப்படி உத்தரவு போட்டு ஏமாற்றுபவர் எங்கே இருக்கிறார் தெரியுமா?இவர் உங்களுடன் எத்தனை நாட்கள் பட்டினியாக கிடந்தார் என்று தெரியுமா? ஏழைகள் உணவில்லாமல் இருக்கிறார்கள் அதனால் ஒருநாள் கூட வயிறு புடைக்க சாப்பிட மாட்டேன் என்று இருந்தது உண்டா? என்று இவரிடம் கேளுங்கள். இவர் எங்கேயோ கார்பொரேட் கம்பெனியில் வேலை பார்த்துக்கோ கொண்டு ,கொளுத்த தீனிகளை வயிற்றில் திணித்துக் கொண்டு கம்யுனிச நாடகத்தில் ஆட்டம் போடும் சோமாறி யாக இருப்பார். உழைப்பை பற்றி பேசும் அண்ணன் செங்கொடி தனது பெயரை மாற்ற எவ்வளவு கஷ்டப் படவேண்டும் என்பதை பக்கம் பக்கமாக எழுதுகிறார்.இவர்களுக்கு எல்லாம் பாமர மக்கள் உணவுக்காக ,அரசு சலுகைகளுக்காகக் என்ன பாடுபடுகிறார்கள் என்பது கடுகளவாது தெரியுமா?என்னவோ கீ போர்டில் தட்டிவிட்டால் ஏழைகளோடு உறவாடுவது  போல் காட்டிக் கொள்கிறார்கள்போலும் 

      • செந்தோழன் ,நீங்கள் சிவப்பு மயமாக பெயர்களை வைத்துக் கொள்வது ,சிவப்பு உடைகள் அணிவது,இதற்கும் பொதுவுடமை கொள்கைக்கும் என்ன தொடர்போ ,அது போன்றே ஹஜ் கிரியைகளும் ,.தனி ஒரு மனிதனாக என்று ஏக இறை கொள்கையை நிலை நாட்ட போரிட்ட இப்ராஹீம் நபி[அலை]அவர்களின் தியாக உணர்வுகளை நினைவு கூறும் வண்ணமாக,நடை பெரும் செயல்பாடுகளைத்த தவிர அதில் கட்டாய கடமைகள் இல்லை.அது போன்றே ஜம்ஜம் நீர் புனிதமாக கருதப் படவில்லை.ஆனால் அதன் அற்புதமும் மகிமையுமே போற்றப்படுகிறது.25 லட்சம் மக்கள் கூடும் நாட்களில் அனைத்து மக்களுக்கும் தலா 20௦ லட்டர் ஒரு கிணற்றிலிருந்து கிடைக்கச்செயகிறது என்றால் அதன் அற்புதத்தை மறைக்கமுடியுமா?
        மேலும் இஸ்லாத்தில் குறிப்பிட்ட நாட்களில் மட்டும் ஏழைகளை கவனிக்கவில்லை.இரு இரு பெருநாட்களையும் குறிபிட்டது ஏன் என்றால் எங்களது மகிழ்ச்சிகரமான நாட்களும் ஏழைகளின் மகிழ்ச்சியில் பகிர்ந்து கொள்வதே .நாங்கள் கீபோர்டில் உட்கார்ந்து கொண்டு ஏழைகளைப் பற்றி பேசவில்லை.ஏழைகளின் வாசல் தேடி உதவி செய்கிறோம் என்பது கலை நிகழ்ச்சி காணும் கம்யுனிஸ்ட் களுக்கு தெரிய நியாயமில்லை. இன்னும் பிச்சைகாரர்கள் பிச்சை எடுக்க தேர்ந்தெடுத்த நாளை பார்த்தீர்களா? வெள்ளிகிழமை என்னும் ஜும்மா நாளில். சக்காத்,சதக்கா ,போன்ற கடமைகள்,அடுத்த வீட்டுக்காரன் பசித்திருக்க நீ வயிற்றை நிரப்பாதே போன்ற நபிமொழிகள் ஏழைகளின் மீது இஸ்லாம் காட்டும் அக்கறையை வெளிப்படுத்தும்.எங்களது பக்கத்து கிராமத்தை சேர்ந்த ஒரு பெரும் செல்வந்தர் தனது வருட “ஏழைவரி” என்னும் சக்காத்தை வருடம் தோறும் தனது உறவு,மற்றும் ஊரை சேர்ந்த [சுமார்ஐந்து லட்ச ரூபாய்] ஒரே நபருக்கு கொடுத்து அவர்கள் அதன் மூலம் வியாபாரம் செய்து முன்னேற வழிவகுக்கிறார்.இது போன்று இரண்டு கோடி ரூபாய் சக்காது கொடுக்கும் செல்வந்தர்களை நான் அறிவேன் என்றும் அந்த மக்களின் சக்காதை முறைப்படுத்தினால் ஏழைகள் இல்லாமற் செய்துவிடலாம் என்று முன்பு ஒரு மாவட்ட ஆட்சி தலைவராக இருந்த ஒருவர் இப்போது தமிழ்நாடு தலைமை செயலகத்தில் பணியாற்றும் ஒரு அதிகாரி ஒரு நிகழ்ச்சயில் கூறியதை இங்கு நினைவு கூறுகிறேன்.கம்யுனிசம் ஏழைகளை இல்லாமற் செய்யுமா?அல்லது இன்னும் ஏழைகளை அதிகரிக்க செய்யுமா?என்று ரஷ்யாவில் சென்று பார்த்து வந்தால்தான் தெரியும்.பெயர் மாற்றம் செய்யவே உழைக்காதவர்கள் ,இது போன்று விசயங்களில் அரசு சலுகைகள் பெற ஏழை மக்கள் படும் அவஸ்தைகளை நேரில் கண்டு அனுபவித்து பார்க்க ,பகிர்ந்து கொள்ள சங்கடப் படுபவர்கள குளிர் சாதன அறையிலிருந்து கொண்டு கீ போர்டில் ஏழைகளை இல்லாமற் செய்வோம் என்று தட்டுவது போன்ற காரியங்களை இஸ்லாம் செய்ய வில்லை.கலை நிகழ்ச்சயில் ஏழைகளாக நடித்தும் காட்டுவதிலும் இஸ்லாம் ஏழை உபகார நிகழ்ச்சியாக்கவில்லை. கிறித்தவர்கள் ஏழை நோயாளிகளை கவனித்தது போன்று உங்களது கம்யுனிச காம்ரேடுகள் செயல் பாட்டினை எங்காவது என்றாவது நடத்தியதாக கூற முடியுமா?
        தனது மகனை சில சமயங்களில் உன்னை கொன்னுடுவேன் என்று சொன்னால் அந்த தாய் பெற்ற பிள்ளையை நரபலி கேட்கிறார் என்று செந்தோழன் பொருள் கொள்வாரா என்ன ?
        ///பசியோடுயிருக்கும் ஏழை மக்கள் மத்தியில் இப்ராஹிம் அண்ணன் குர் ஆன் ஹதீஸை படித்து விளக்கி பயான் செய்கிறார். ///
        நீங்கள் இந்தியாவில் இருந்து கொண்டு ரஷ்யாவைப் பற்றி சொல்லாதீர்கள் .இந்தியாவில் மாதம் இப்பொது இருபது கிலோ அரிசி இலவசமாக கிடைக்கிறது .ஆகவே இங்கே யாரும் பசியோடு இருக்கவில்லை.ஏழைகளை அணைத்துக் கொண்டு பணக்காரர்கள் மத்தியில் வியர்வை உலருமுன் உழைப்பவர்களின் கூலியை நியாயமான முறையில் கொடுத்துவிடுங்கள் என்ற குர்ஆன் ஹதிதையே பயான் பண்ணிக் கொண்டிருக்கிறோம் .எங்களின் பயானின் பயன் ஏழைமக்களுக்கு தெரியும்.

திங்கள், 21 நவம்பர், 2011

நரேந்திர மோடியின் நரபலி வெறி


இஷ்ரத் ஜஹன்என்கவுன்ட்டர் போலியானது: சிறப்புப் புலனாய்வுக் குழு

First Published : 21 Nov 2011 04:40:11 PM IST

ஆமதாபாத், நவ.21: குஜராததில் இஷ்ரத் ஜஹன் என்பவர் சுட்டுக் கொல்லப்பட்ட என்கவுன்ட்டர் சம்பவம் போலியானது என உயர்நீதிமன்றத்தில் சிறப்புப் புலனாய்வுக் குழு அறிக்கை அளித்துள்ளது. இதையடுத்து இந்த போலி என்கவுன்ட்டர்  சம்பவத்தில் தொடர்புடைய அனைவர் மீதும் 302-வது பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யுமாறு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இது நரேந்திர மோடி அரசுக்கு பின்னடைவாகக் கருதப்படுகிறது.
இஷ்ரத் ஜஹன், ஜாவீத் ஷேக், அம்ஜத் அலி ராணா மற்றும் ஜீஷன் ஜோஹர் ஆகியோர் 2004-ம் ஆண்டு ஜூன் மாதம் 15-ம் தேதி ஒரு என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டதாக குஜராத் போலீசார் தெரிவித்திருந்தனர். ஆனால் அதற்கு முன்னதாகவே அவர்கள் கொல்லப்பட்டுள்ளதாக சிறப்புப் புலனாய்வுக் குழு தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
எனினும் சிறப்புப் புலனாய்வுக் குழு அறிக்கையின் விவரங்களை உயர்நீதிமன்றம் முழுமையாக வெளியிட மறுத்துவிட்டது. அது விசாரணையை பாதிக்கும் என்று உயர்நீதிமன்றம் தெரிவித்தது
http://www.dinamani.com/edition/Story.aspx?SectionName=Latest%20News&artid=510735&SectionID=164&MainSectionID=164&SEO=&Title=இஷ்ரத்%20ஜஹன்என்கவுன்

வெள்ளி, 18 நவம்பர், 2011

தியாக பெருநாள் பற்றி செந்தோழன் கருத்துக்கு பதிலாக


செந்தோழன்நவம்பர் 16, 2011 இல் 10:18 பிற்பகல் #
நண்பர் இப்ராஹிம் அவர்களே! இந்த கட்டுரையை படித்ததும் வாயடைத்துபோய் விட்டீர்கள் என்பது உங்கள் பதிலில் இருந்து தெரிகிறது.தியாகம் (இஸ்லாமிய நம்பிக்கை) என்ற பெயரில் நாம் இதுவரை செய்த நரபலி (தியாகம்) ஆனைத்தும் முட்டாள்தனமானது,மூடநம்பிக்கை என்று ஆதாரப்பூர்வமாக அம்பலப்படுத்துறாங்களே என்ற கோபமா? ஆனால் இதையெல்லாம் ஒரு பொருட்டாகவே எடுத்துக்கொள்ளக்கூடாது.இந்துக்களை பாருங்கள் பெரியார் எவ்வளவோ எடுத்துச்சொன்னார். கேட்கவா செய்தார்கள் இல்லையே.அவங்க எப்பொழுதும்போல் கோவில்ல ஆடு,பன்றியை வெட்டுவதைபோல் நாமும் எதையும் கண்டுகொள்ளவே கூடாது.நாமும் எப்போழுதும்போல் ஆடு,மாடு பலியிட்டு அல்லாவை இரத்தால் அபிஷேகம் பண்ணுவோம்.யார் யாரோ எதாவது சொன்னால் ஏன்? எதற்கு என்று சிந்தித்து விடாதீர்கள்.அப்படி சிந்தித்து விட்டால் அல்லாஹ் நம்மை மன்னிக்கமாட்டான். அல்லாவும்,நபியும் சொன்னதுக்கு மேல் நாம சிந்திக்கவேகூடாது.ஆனாலும் நாம் இஸ்லாத்தை அறிவியல் பூர்வமானது என்று வெளியில் பீற்றிக்கொள்வோம் நீங்கள் இதற்கெல்லாம் கோபப்படக்கூடாது. அதுக்குதான் நம்ம பிஜே அண்ணே இருக்கிறாரே.இஸ்லாத்தையும், அறிவியலையும் ஒன்றாக ஒப்பிட்டு பேசி விஞ்ஞானிகளை எல்லாம் திணறடித்து விடுவார்.விஞ்ஞானிகளே மூக்கில் விரல் வைக்கும் அளவுக்கு விஞ்ஞான விளக்கம் சொல்லி நம்ம இஸ்லாத்தை காப்பாற்றிவிடுவார்.நீங்கள் கவலைப்படாதீர்கள். அண்ணே பிஜே அண்ணே!வாங்கண்ணே வந்து தியாகத்தையும்,விஞ்ஞானத்தையும் கலந்து ஒரு கலக்கு கலக்கி இஸ்லாத்தை காப்பாத்துங்கண்ணே.அப்படியே உங்க கல்லாவையும் கட்டிட்டு போங்கண்ணே.
  • செந்தோழனுக்கு பதில் 


செந்தோழன் ,வாயடைத்து போகுமளவுக்கு உங்கள் அண்ணன் என்ன கூறியிருக்கிறார்.? குரான் வசனங்களை தனது மனம் போல் திரித்து ,புரிந்து எழுதியுள்ளதை உங்கள் மனம் சரி கண்டுவிட்டால் ஏனையோர் வாயடைத்து   விட்டனர் என்பது பொருள். அன்று .நான் எழுதி உள்ளவற்றில் சிலதை உங்கள் நண்பர் வெளியிடவில்லை.இப்ராஹீம் நபி [அலை]அவர்களையும் அவரது தியாகத்தையும் விமர்சித்து ,ஒரு மருத்துவரின் தியாகம் ஒன்றை கூறி பாராட்டும் வேளையில் உங்களது கம்யுனிச தியாகங்களையும் அங்கெ குரிப்பிட்ட்ருக்கவேண்டும் அல்லவா?
 //தனது அடிமைப்பெண்(பணிப்பெண்)ஹாஜிராவுடன் செய்த லீலைகளின் காரணமாக இஸ்மாயில் என்ற மகனை பெற்றெடுக்கிறார். //
இப்ராஹீம்[அலை]அவர்கள் ஹாஜர் அவர்களை பைத்துல் முகத்தசில் வைத்து திருமணம் செய்ததாக ஒரு செய்தி அல்பிதாயா வன்னிஹாயா என்ற நூலிலிருந்து தப்சீர் இப்னு கசிர் தமிழாக்கத்தில் உள்ளது .ஆனால் உமது குரங்குமனமோ வழக்கம்போலவே தனது விகாரத்தை காட்டியுள்ளது.
///இப்ராஹிமிற்கு இஸ்ஹாக் என்ற மகனைக் கொண்டு நற்செய்தியை (கு 6:84, 11:71-72, 15:53, 19:49, 21:72, 29:27, 37:113, 38:45, 51:28) தனது தூதர்கள் வாயிலாக கூறுகிறான்  இதைக்கேட்ட  தொண்ணூறு வயதான அவரது மனைவி சாரா நம்பமுடியாமல்தனது முகத்திலறைந்தவாறு சப்தமிட்டு சிரிக்கிறார்///
அவர் அதனால் தான் சிரித்தார் என்பது தவறான புரிதலா?அல்லது வேண்டுமென்றே கூறப்பட்டதா?மேலும் யூக கதைகள் என்று அவரே கூறி ஒரு சிலவற்றை மட்டும் குறிப்பிட்டுள்ளார்.மாதவிடாய் நின்றதாக கூறியது,பாறை பிளந்தது என்பதும் போன்று அநேக யூகங்களை கூறியுள்ள அவர் அதை யூகம் என்று குறிப்பிட மறுக்கிறார்.அவ்வாறெனின் அவதூறு எழுதுவது தானே உங்களது திட்டம்.
இப்ராஹீம் நபி[அலை] அவர்கள் தனி ஒரு நபராக நின்று ஒரு அரசனை  எதிர்த்து நீதிக்காக போராடுவதை உங்களால் ஜீரணிக்க முடியவில்லை .ஒரு சர்வாதிகாரியின்   கீழ் இருந்தால் தான் கம்யுனிசம் காணும்  சோஷலிச பாதையை கண்டு பிடிக்க முடியும் என்று கூறும் கம்யுனிச கொள்கை போல் ஓரிறை கொள்கையை உலகமக்கள் ஏற்றுக் கொண்டால்தான் நீதியான ஒரே சட்டத்தை நிறுவி மக்களை நெறிபடுத்த முடியும்  என்பதால் பல சோதனைகளையும் தாங்கிக் கொண்டு தனி ஒரு மனிதனாக் நின்று கொண்டு ஒரு அரசையே   எதிர்த்து போராடுகிறார். அந்த சோதனை போதாது என்று 86 வயதில் பிறந்த அற்புத குழந்தை பற்றிய சோதனை கனவாக வருகிறது. அவர் இறை தூதர் என்பதால் ,அந்த கனவின் மகிமை உங்களுக்கு எப்படி தெரியும் ?தனது மனைவியும் குழந்தையும் இறை கட்டளை ஏற்று, அவனிடமே பிராத்தித்து தனியாக விட்டு செல்ல வில்லையா? இறைவனும் அவரது நம்பிக்கைக்கு ஏற்றவாறு அந்த பூமியை செழிப்பாக்க விலையா ? அன்றோடு மட்டுமல்ல. இன்று வரை உலகமே  பொருளாதார பின்னடைவை சந்தித்தபோழ்து சவூதி மட்டும் செழிப்பாக இருக்க வில்லையா? எனவே தனக்கு வயோதிகத்தில் குழந்தை தந்த இறைவன் ,அக்குழந்தையையும் ,மனைவியையும் தனியாக விட்டுசென்றபோளுதும் தனது பிரார்ர்தனைக்கு ஏற்றவாறு அந்த காட்டு பகுதியை நகரமாக ஆக்கிவிட்ட இறைவன் ,இன்று தனது மகனை அறுத்து பலியிட வேண்டிய போதும் அதற்கு தயாராகிவிட்டதால் ,அதன் மூலம் இன்று பல ஆடுகள் மாடுகள் அறுக்கப்பட்டுஏழை மக்களுக்கு உணவாகவுகவும் ஒரு வாரகாலம் கிடைக்கவில்லையா? ஆடு மாட்டு தோலகள் விற்கப்பட்டு பல ஏழைகளுக்கு மருத்துவ உதவி செய்யப்படவில்லையா? எங்களது கிராமத்தில் தோல் விற்ற பணம் ரூ .23000 /= ஒரு பெண்ணின் இதய அறுவை சிகிச்சை செய்ய உதவியுள்ளோமே.இது போன்று எத்தனை இடங்களில் நடந்து வருகிறது என்பதை உமது காமாலைக் கண்களுக்கு தெரியுமா? இன்னும் சவூதி அரேபியாவால் குர்பானி உணவு பதப்படுத்தப்பட்டு பல ஏழை நாடுகளுக்கு அனுப்பபடவில்லையா?உங்களைபோல் உண்டியல் ஏந்தி கலை நிகழ்ச்சி நடத்தி அவற்றினை போலி கம்யுனிச குடும்பங்களே கண்டு கழித்து நாட்களை நாங்கள் கடத்த வில்லை. 
////தியாகம் (இஸ்லாமிய நம்பிக்கை) என்ற பெயரில் நாம் இதுவரை செய்த நரபலி (தியாகம்) ஆனைத்தும் முட்டாள்தனமானது,மூடநம்பிக்கை என்று ஆதாரப்பூர்வமாக அம்பலப்படுத்துறாங்களே என்ற கோபமா//
நாங்கள் நரபலி செய்தோமா?என்ன உளறல்? நாங்கள் ஒவ்வொரு பண்டிகையையும் ஏழை மக்களை கவனத்திற்கொண்டே ,அவர்களுக்கு உதவுவதே எங்களது பண்டிகை கொண்டாட்டாமாக இருக்கிறது. எங்களது இரண்டு பண்டிகைகளும் ஏழைகளின்  சிரிப்பில் இறைவானை காண்பதே .ஆனால் இவற்றை நாங்கள் அரசியல் வாதிகள்போல் ,மகஇக போல் வாயளவில் அல்ல செயலளவில். ஒன்று தர்ம பெருநாள் ,இன்னொன்று தியாக பெருநாள் .இரண்டு நாள்களிலும் ஏழைகளுக்கு உணவு உடை அளிக்க வேண்டும் என்பதே முழு நோக்கமும் .இஸ்லாம் அறிவு பூர்வமானதும் ஏழைகளை மதிக்கும் மனித நேயமிக்கதுமாகவே தனது அனைத்து செயல்பாடுகளையும் தன்னகத்தே கொண்டுள்ளது.