செந்தோழன்நவம்பர் 16, 2011 இல் 10:18 பிற்பகல் #
நண்பர் இப்ராஹிம் அவர்களே! இந்த கட்டுரையை படித்ததும் வாயடைத்துபோய் விட்டீர்கள் என்பது உங்கள் பதிலில் இருந்து தெரிகிறது.தியாகம் (இஸ்லாமிய நம்பிக்கை) என்ற பெயரில் நாம் இதுவரை செய்த நரபலி (தியாகம்) ஆனைத்தும் முட்டாள்தனமானது,மூடநம்பிக்கை என்று ஆதாரப்பூர்வமாக அம்பலப்படுத்துறாங்களே என்ற கோபமா? ஆனால் இதையெல்லாம் ஒரு பொருட்டாகவே எடுத்துக்கொள்ளக்கூடாது.இந்துக்களை பாருங்கள் பெரியார் எவ்வளவோ எடுத்துச்சொன்னார். கேட்கவா செய்தார்கள் இல்லையே.அவங்க எப்பொழுதும்போல் கோவில்ல ஆடு,பன்றியை வெட்டுவதைபோல் நாமும் எதையும் கண்டுகொள்ளவே கூடாது.நாமும் எப்போழுதும்போல் ஆடு,மாடு பலியிட்டு அல்லாவை இரத்தால் அபிஷேகம் பண்ணுவோம்.யார் யாரோ எதாவது சொன்னால் ஏன்? எதற்கு என்று சிந்தித்து விடாதீர்கள்.அப்படி சிந்தித்து விட்டால் அல்லாஹ் நம்மை மன்னிக்கமாட்டான். அல்லாவும்,நபியும் சொன்னதுக்கு மேல் நாம சிந்திக்கவேகூடாது.ஆனாலும் நாம் இஸ்லாத்தை அறிவியல் பூர்வமானது என்று வெளியில் பீற்றிக்கொள்வோம் நீங்கள் இதற்கெல்லாம் கோபப்படக்கூடாது. அதுக்குதான் நம்ம பிஜே அண்ணே இருக்கிறாரே.இஸ்லாத்தையும், அறிவியலையும் ஒன்றாக ஒப்பிட்டு பேசி விஞ்ஞானிகளை எல்லாம் திணறடித்து விடுவார்.விஞ்ஞானிகளே மூக்கில் விரல் வைக்கும் அளவுக்கு விஞ்ஞான விளக்கம் சொல்லி நம்ம இஸ்லாத்தை காப்பாற்றிவிடுவார்.நீங்கள் கவலைப்படாதீர்கள். அண்ணே பிஜே அண்ணே!வாங்கண்ணே வந்து தியாகத்தையும்,விஞ்ஞானத்தையும் கலந்து ஒரு கலக்கு கலக்கி இஸ்லாத்தை காப்பாத்துங்கண்ணே.அப்படியே உங்க கல்லாவையும் கட்டிட்டு போங்கண்ணே.
செந்தோழன் ,வாயடைத்து போகுமளவுக்கு உங்கள் அண்ணன் என்ன கூறியிருக்கிறார்.? குரான் வசனங்களை தனது மனம் போல் திரித்து ,புரிந்து எழுதியுள்ளதை உங்கள் மனம் சரி கண்டுவிட்டால் ஏனையோர் வாயடைத்து விட்டனர் என்பது பொருள். அன்று .நான் எழுதி உள்ளவற்றில் சிலதை உங்கள் நண்பர் வெளியிடவில்லை.இப்ராஹீம் நபி [அலை]அவர்களையும் அவரது தியாகத்தையும் விமர்சித்து ,ஒரு மருத்துவரின் தியாகம் ஒன்றை கூறி பாராட்டும் வேளையில் உங்களது கம்யுனிச தியாகங்களையும் அங்கெ குரிப்பிட்ட்ருக்கவேண்டும் அல்லவா?
//தனது அடிமைப்பெண்(பணிப்பெண்)ஹாஜிராவுடன் செய்த லீலைகளின் காரணமாக இஸ்மாயில் என்ற மகனை பெற்றெடுக்கிறார். //
இப்ராஹீம்[அலை]அவர்கள் ஹாஜர் அவர்களை பைத்துல் முகத்தசில் வைத்து திருமணம் செய்ததாக ஒரு செய்தி அல்பிதாயா வன்னிஹாயா என்ற நூலிலிருந்து தப்சீர் இப்னு கசிர் தமிழாக்கத்தில் உள்ளது .ஆனால் உமது குரங்குமனமோ வழக்கம்போலவே தனது விகாரத்தை காட்டியுள்ளது.
///இப்ராஹிமிற்கு இஸ்ஹாக் என்ற மகனைக் கொண்டு நற்செய்தியை (கு 6:84, 11:71-72, 15:53, 19:49, 21:72, 29:27, 37:113, 38:45, 51:28) தனது தூதர்கள் வாயிலாக கூறுகிறான் இதைக்கேட்ட தொண்ணூறு வயதான அவரது மனைவி சாரா நம்பமுடியாமல்தனது முகத்திலறைந்தவாறு சப்தமிட்டு சிரிக்கிறார்///
அவர் அதனால் தான் சிரித்தார் என்பது தவறான புரிதலா?அல்லது வேண்டுமென்றே கூறப்பட்டதா?மேலும் யூக கதைகள் என்று அவரே கூறி ஒரு சிலவற்றை மட்டும் குறிப்பிட்டுள்ளார்.மாதவிடாய் நின்றதாக கூறியது,பாறை பிளந்தது என்பதும் போன்று அநேக யூகங்களை கூறியுள்ள அவர் அதை யூகம் என்று குறிப்பிட மறுக்கிறார்.அவ்வாறெனின் அவதூறு எழுதுவது தானே உங்களது திட்டம்.
இப்ராஹீம் நபி[அலை] அவர்கள் தனி ஒரு நபராக நின்று ஒரு அரசனை எதிர்த்து நீதிக்காக போராடுவதை உங்களால் ஜீரணிக்க முடியவில்லை .ஒரு சர்வாதிகாரியின் கீழ் இருந்தால் தான் கம்யுனிசம் காணும் சோஷலிச பாதையை கண்டு பிடிக்க முடியும் என்று கூறும் கம்யுனிச கொள்கை போல் ஓரிறை கொள்கையை உலகமக்கள் ஏற்றுக் கொண்டால்தான் நீதியான ஒரே சட்டத்தை நிறுவி மக்களை நெறிபடுத்த முடியும் என்பதால் பல சோதனைகளையும் தாங்கிக் கொண்டு தனி ஒரு மனிதனாக் நின்று கொண்டு ஒரு அரசையே எதிர்த்து போராடுகிறார். அந்த சோதனை போதாது என்று 86 வயதில் பிறந்த அற்புத குழந்தை பற்றிய சோதனை கனவாக வருகிறது. அவர் இறை தூதர் என்பதால் ,அந்த கனவின் மகிமை உங்களுக்கு எப்படி தெரியும் ?தனது மனைவியும் குழந்தையும் இறை கட்டளை ஏற்று, அவனிடமே பிராத்தித்து தனியாக விட்டு செல்ல வில்லையா? இறைவனும் அவரது நம்பிக்கைக்கு ஏற்றவாறு அந்த பூமியை செழிப்பாக்க விலையா ? அன்றோடு மட்டுமல்ல. இன்று வரை உலகமே பொருளாதார பின்னடைவை சந்தித்தபோழ்து சவூதி மட்டும் செழிப்பாக இருக்க வில்லையா? எனவே தனக்கு வயோதிகத்தில் குழந்தை தந்த இறைவன் ,அக்குழந்தையையும் ,மனைவியையும் தனியாக விட்டுசென்றபோளுதும் தனது பிரார்ர்தனைக்கு ஏற்றவாறு அந்த காட்டு பகுதியை நகரமாக ஆக்கிவிட்ட இறைவன் ,இன்று தனது மகனை அறுத்து பலியிட வேண்டிய போதும் அதற்கு தயாராகிவிட்டதால் ,அதன் மூலம் இன்று பல ஆடுகள் மாடுகள் அறுக்கப்பட்டுஏழை மக்களுக்கு உணவாகவுகவும் ஒரு வாரகாலம் கிடைக்கவில்லையா? ஆடு மாட்டு தோலகள் விற்கப்பட்டு பல ஏழைகளுக்கு மருத்துவ உதவி செய்யப்படவில்லையா? எங்களது கிராமத்தில் தோல் விற்ற பணம் ரூ .23000 /= ஒரு பெண்ணின் இதய அறுவை சிகிச்சை செய்ய உதவியுள்ளோமே.இது போன்று எத்தனை இடங்களில் நடந்து வருகிறது என்பதை உமது காமாலைக் கண்களுக்கு தெரியுமா? இன்னும் சவூதி அரேபியாவால் குர்பானி உணவு பதப்படுத்தப்பட்டு பல ஏழை நாடுகளுக்கு அனுப்பபடவில்லையா?உங்களைபோல் உண்டியல் ஏந்தி கலை நிகழ்ச்சி நடத்தி அவற்றினை போலி கம்யுனிச குடும்பங்களே கண்டு கழித்து நாட்களை நாங்கள் கடத்த வில்லை.
////தியாகம் (இஸ்லாமிய நம்பிக்கை) என்ற பெயரில் நாம் இதுவரை செய்த நரபலி (தியாகம்) ஆனைத்தும் முட்டாள்தனமானது,மூடநம்பிக்கை என்று ஆதாரப்பூர்வமாக அம்பலப்படுத்துறாங்களே என்ற கோபமா//
நாங்கள் நரபலி செய்தோமா?என்ன உளறல்? நாங்கள் ஒவ்வொரு பண்டிகையையும் ஏழை மக்களை கவனத்திற்கொண்டே ,அவர்களுக்கு உதவுவதே எங்களது பண்டிகை கொண்டாட்டாமாக இருக்கிறது. எங்களது இரண்டு பண்டிகைகளும் ஏழைகளின் சிரிப்பில் இறைவானை காண்பதே .ஆனால் இவற்றை நாங்கள் அரசியல் வாதிகள்போல் ,மகஇக போல் வாயளவில் அல்ல செயலளவில். ஒன்று தர்ம பெருநாள் ,இன்னொன்று தியாக பெருநாள் .இரண்டு நாள்களிலும் ஏழைகளுக்கு உணவு உடை அளிக்க வேண்டும் என்பதே முழு நோக்கமும் .இஸ்லாம் அறிவு பூர்வமானதும் ஏழைகளை மதிக்கும் மனித நேயமிக்கதுமாகவே தனது அனைத்து செயல்பாடுகளையும் தன்னகத்தே கொண்டுள்ளது.