Arampannai ஜமாஅத் தலைவர் .
திரு .வைஸ் .கே.ஏ .முஹம்மது உதுமான்
பஞ்சாயத்துதலைவர்
திருமதி.ஹமிதாஹனிபா ;
கவுன்சிலர் .
திருமதி.சரிபாபசிர்

திங்கள், 21 நவம்பர், 2011

நரேந்திர மோடியின் நரபலி வெறி


இஷ்ரத் ஜஹன்என்கவுன்ட்டர் போலியானது: சிறப்புப் புலனாய்வுக் குழு

First Published : 21 Nov 2011 04:40:11 PM IST

ஆமதாபாத், நவ.21: குஜராததில் இஷ்ரத் ஜஹன் என்பவர் சுட்டுக் கொல்லப்பட்ட என்கவுன்ட்டர் சம்பவம் போலியானது என உயர்நீதிமன்றத்தில் சிறப்புப் புலனாய்வுக் குழு அறிக்கை அளித்துள்ளது. இதையடுத்து இந்த போலி என்கவுன்ட்டர்  சம்பவத்தில் தொடர்புடைய அனைவர் மீதும் 302-வது பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யுமாறு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இது நரேந்திர மோடி அரசுக்கு பின்னடைவாகக் கருதப்படுகிறது.
இஷ்ரத் ஜஹன், ஜாவீத் ஷேக், அம்ஜத் அலி ராணா மற்றும் ஜீஷன் ஜோஹர் ஆகியோர் 2004-ம் ஆண்டு ஜூன் மாதம் 15-ம் தேதி ஒரு என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டதாக குஜராத் போலீசார் தெரிவித்திருந்தனர். ஆனால் அதற்கு முன்னதாகவே அவர்கள் கொல்லப்பட்டுள்ளதாக சிறப்புப் புலனாய்வுக் குழு தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
எனினும் சிறப்புப் புலனாய்வுக் குழு அறிக்கையின் விவரங்களை உயர்நீதிமன்றம் முழுமையாக வெளியிட மறுத்துவிட்டது. அது விசாரணையை பாதிக்கும் என்று உயர்நீதிமன்றம் தெரிவித்தது
http://www.dinamani.com/edition/Story.aspx?SectionName=Latest%20News&artid=510735&SectionID=164&MainSectionID=164&SEO=&Title=இஷ்ரத்%20ஜஹன்என்கவுன்