Arampannai ஜமாஅத் தலைவர் .
திரு .வைஸ் .கே.ஏ .முஹம்மது உதுமான்
பஞ்சாயத்துதலைவர்
திருமதி.ஹமிதாஹனிபா ;
கவுன்சிலர் .
திருமதி.சரிபாபசிர்

ஞாயிறு, 21 ஜூலை, 2013

இஸ்மாயில் சலபிக்கு பீஜேவின் பதில்


எனது கட்டுரையை வெளியிட்ட இணையத் தளத்தைச் சாடியவாறே அவரது விமர்சனம் ஆரம்பமாகின்றது. அனைத்து குப்பைகளின் குப்பைத் தொட்டியாக பயன்பட்டு வரும் எந்தக் கொள்கையும் இல்லாத பலவேசம் டாட்காம் குப்பைத் தொட்டி, கொள்கை இல்லாதது பலவேசம் டாட்காம் இவைகளெல்லாம் ஒரு பண்பட்ட அழைப்பாளரின் பதப் பிரயோகமா? என்றெல்லாம் குறிப்பிட்டுள்ளீர்கள். முதலில் துவக்கி வைப்பவர் தான் மார்க்கத்தில் குற்றவாளி. இரண்டாவதாக அதற்குப் பதிலடி கொடுப்பவர் குற்றவாளியாக மாட்டார். அநீதமிழைக்கப்பட்டவரைத் தவிர வார்த்தையில் தீயதை பகிரங்கமாகக் கூறுவதை அல்லாஹ் விரும்ப மாட்டான். திருக்குர்ஆன் 4:148 உங்கள் மதனிகள் வெளியிட்ட மொழிபெயர்ப்பைத் தான் மேலே பயன்படுத்தியுள்ளேன். ஒருவனுக்கு அநீதி இழைக்கப்பட்டால் அவன் தீய சொற்களைப் பேசுவது கூட தவறல்ல என்று என்னைப் படைத்த இறைவன் அணுமத்தித்துள்ளான் என்பதால் நான் பொய் கலக்காமல் எவ்வளவு கடுமையாக சொற்களைப் பயன்படுத்தினாலும் நான் குற்றவாளியாக மாட்டேன். கருத்துக்களை விமர்சிப்பதோடு நிற்காமல் தனி நபர் விமர்சனத்தை ஆரம்பித்தது நானா? நீங்களா? தரக் குறைவாக எழுதுவதைத் துவக்கி வைத்தது நானா? நீங்களா? இதற்கான தீர்ப்பை நான் வழங்குவதை விட உங்கள் சகாக்கள் வழங்கி விட்டனர். 26ஆலிம்களை அழைத்து நீங்கள் ஆலோசனைக் கூட்டம் நடத்திய போது நீங்கள் தரக் குறைவாக விமர்சிப்பதாக அவர்களே சுட்டிக் காட்டி அதை உங்கள் பத்திரிகையிலும் வெளியிட்டீர்கள். 

Article Copied From: www.onlinepj.com , Read more at: http://www.onlinepj.com/vimarsanangal/ismayil_salafiku_maruppu/salafi_marupuku_marupu/
Copyright © www.onlinepj.com

கருத்துகள் இல்லை: