aashiq ahamed12:57 - Public
இஸ்லாமா? நாத்திகமா? - லண்டன் விவாதம் முடிந்தது - சில எண்ணங்கள்..
இறைவனின் மாபெரும் கிருபையால், லண்டனில், "இஸ்லாமா? நாத்திகமா? - எது அறிவுக்கு ஒத்துவருகின்றது?" என்ற தலைப்பிலான விவாதம் அருமையாக நடந்து முடிந்தது. இஸ்லாமிய கல்வி மற்றும் ஆய்வு மையம் (IERA) சார்பில் ஹம்ஸாவும், நாத்திகத்துக்கு ஆதரவாக நன்கறியப்பட்ட ஆய்வாளர் லாரன்ஸ் க்ராஸ்சும் கருத்துக்களை பரிமாறிக்கொண்டனர்.
மிக சிறப்பாக ஒருங்கிணைக்கப்பட்டிருந்த இந்த விவாதத்திற்கு நேரடி ஒளிபரப்பு இல்லையென்றாலும், IERA சார்பில் உடனுக்குடனான அப்டேட்கள் முகப்பக்கத்தில் பதியப்பட்டன. ஹம்ஸாவின் வாதத்திறன் மற்றொரு முறை என்னை வியப்பில் ஆழ்த்தியது. "அட ஆமாம்ல" என்று எண்ணும் அளவிற்கு மிக ஆழமான கருத்துக்கள், மாஷா அல்லாஹ்.
இன்னும் சில நாட்களில் விவாத வீடியோ வந்துவிடும். அறிவுக்கு நல்ல தீனியாக அமைந்த இந்த விவாதத்தில் பார்வையாளர் நேரத்தில் ஒரு கேள்விக்கு இப்படியாக பதில் சொல்கின்றார் க்ராஸ்.
"science doesn't require you to be an atheist, I know very good scientists who aren't atheists - அறிவியல் நீங்கள் நாத்திகராக இருக்கும்படி கூறவில்லை. நான் அறிந்த மிகச் சிறந்த விஞ்ஞானிகள் நாத்திகர்கள் இல்லை"
அட்ரா சக்க...:-) இதை தானே பல காலமா சொல்கின்றோம். அறிவியல் என்பது நாத்திகத்திற்கான வழியல்ல. அறிவியல் உலகில் ஆயிரக்கணக்கான விஞ்ஞானிகள் கடவுள் நம்பிக்கையாளர்களே. பார்க்க http://www.ethirkkural.com/2010/09/blog-post_28.html
இந்த உண்மை க்ராஸ் மூலமாக மற்றொரு முறை வெளிவந்ததற்கு மகிழ்ச்சி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக