Arampannai ஜமாஅத் தலைவர் .
திரு .வைஸ் .கே.ஏ .முஹம்மது உதுமான்
பஞ்சாயத்துதலைவர்
திருமதி.ஹமிதாஹனிபா ;
கவுன்சிலர் .
திருமதி.சரிபாபசிர்

திங்கள், 7 ஜனவரி, 2013

துல அஞ்சலி பொய்களை நம்பாதீர்கள்

"எவனொருவன் மற்றொருவரைக் கொலை செய்கிறானோ அவன் மனிதர்கள் யாவரையுமே கொலை செய்தவன் போலாவான்;. மேலும், எவரொருவர் ஓர் ஆத்மாவை வாழ வைக்கிறாரோ அவர் மக்கள் யாவரையும் வாழ வைப்பவரைப் போலாவார்" 5:32 குர்ஆன் தீவிரவாதத்தை ஒழிக்கும் வாதம்.
துல அஞ்சலி அவர்களே ,நீங்கள் முஸ்லிம்கள் சாக்கடை என்று கூறியதை மறுத்து கேட்டபொழுது முஸ்லிம்கள் வன்முறையாளர்கள் என்று  வாதித்தீர்கள் .அதற்காக நான் இந்த குர்ஆன் வசனத்தை காட்டியபொழுது நீங்கள் கீழ்கண்டவாறு கூறியுள்ளீர்கள் .அதன் உண்மைகளை தெரிந்து கொள்ளுங்கள் 
////"எங்கள் மீது இறக்கப்பட்ட (வேதத்)தின் மீதும் உங்கள் மீது இறக்கப்பட்ட (வேதத்)தின் மீதும் நாங்கள் ஈமான் கொள்கிறோம்; எங்கள் இறைவனும் உங்கள் இறைவனும் ஒருவனே-…. (குர்‍ஆன் 9:46). ஆனால், அவரின் இப்படிப்பட்ட மனப்பான்மை அவருக்கு வலிமை வந்தவுடன் மாறிவிட்டது////
நீங்கள் குறிப்பிட்ட எண்ணில்  உள்ள வசனம் 9;46 இதுதான் 
9:46. அவர்கள் (போருக்குப்) புறப்பட நாடியிருந்தால், அதற்கு வேண்டிய தயாரிப்புகளைச் செய்திருப்பார்கள்; எனினும் அவர்கள் புறப்படுவதை அல்லாஹ் வெறுத்து, அவர்கள் புறப்படாதவாறு தடை செய்துவிட்டான்; (போரில் கலந்து கொள்ள முடியாப் பெண்கள், முதியவர்களைப்போல்) “தங்குபவர்களுடன், நீங்களும் தங்கிவிடுங்கள்” என்று (அவர்களுக்கு) கூறப்பட்டது.

ஆனால் நீங்கள் சொல்ல வந்த வசனங்கள கீழே உள்ளவைகள் ,
109::1,2,3,4,5,6

(ஏக இறைவனை) மறுப்பவர்களே!'' நீங்கள் வணங்குவதை நான் வணங்க மாட்டேன். நான் வணங்குபவனை நீங்கள் வணங்குவோரில்லை. நீங்கள் வணங்குவதை நான் வணங்குபவன் அல்லன். நான் வணங்குபவனை நீங்கள் வணங்குவோரில்லை. உங்கள் மார்க்கம் உங்களுக்கு. என் மார்க்கம் எனக்கு'' எனக் கூறுவீராக.

குர்ஆனின் ஆங்கில தமிழ் மொழிபெயர்ப்புகள் பலர் எழுதி உள்ளவைகள இணையதளத்தில் உள்ளன .ஆனால் அதையெல்லாம் சரிபார்க்காமல் இஸ்லாமிய துஷ் பிரச்சார வல்லுனர்கள் கொடுத்த வசன எண்ணையும் திரிக்கப்பட்ட கருத்துக்களையும் இங்கே வைத்து உள்ளீர்கள் .
நீங்கள் ,எங்களது இறைவனும் உங்கள் இறைவனும் எங்கள் வேதமும் உங்கள் வேதமும் ஒன்றே என வசனம் கூறுவதாக சொல்லியுள்ளீர்கள் ஆனால் நீங்கள் குறிப்பிட்ட எண்ணில் வேறு வசனங்களே உள்ளன .மேலும் வேறு வசனங்கலேயே 109:1,2,3,4,5,6வசனங்களின் கருத்தையே திரித்து கூறியுள்ளீர்கள் .இந்த திரிபு உங்கள் மீது நம்பிக்கையை காட்டுமா?
மேலும் இந்த 109:;1,2,3,4,5,6வசனங்கள் எந்த சமயத்தில் அருளப்பட்டன என்றால் ,முஹம்மது நபி[ஸல்] அவர்கள் மக்காவில் ஏகத்துவ பிரச்சாரத்தை துவங்கிய கட்டத்தில், அங்குள்ள குறைஷிகள் ,முகமமது நபி[ஸல்] அவர்களிடம் உங்கள் இறைவனையும் வணங்குகிறோம் ,எங்கள் தெய்வங்களையும் வணங்குங்கள் ,உங்களுக்கு  தேவையான செல்வங்களை தருகிறோம் ,உங்களுக்கு தேவையான அழகிய பெண்களை திருமணம் செய்து தருகிறோம் என்றார்கள் .அப்போது அவர்களுக்கு தெரிவிக்குமாறு அருளப்பட்ட வாசகங்கள் தான் அவைகள் எனக்கு தேவை இல்லை .உங்கள் மார்க்கம் உங்களுக்கு எங்கள் மார்க்கம்  எங்களுக்கு என்று கூறப்பட்ட இந்த வசனங்கள் .
///முஹம்மது கூறுகிறார்: "யூதர்களாகிய நீங்கள் அறிந்துக் கொள்ளுங்கள், இந்த பூமி அல்லாவிற்கும் அவரது தூதருக்கும் சொந்தமானது. இந்த நாட்டை விட்டு (அரேபியா) உங்களை துரத்தப் போகிறேன், ஆகையால், உங்களிடம் ஏதாவது சொத்துக்கள் இருந்தால், அவைகளை விற்றுவிடுங்கள்”.////
எந்த நபி வழி தொகுப்பு நூல்களிளிலும் இப்படி ஒரு செய்தி இல்லவே இல்லை .இதுவும் திரிபுதான்  ..இது உங்கள் சொந்த சரக்கா? நீங்கள் இதை எங்கு கண்டீர்கள் என்பதை சொல்லுங்கள் விளக்கம் தரலாம் .

////மதினாவின் முக்கிய இடத்தில் பள்ளங்கள் தோண்டப்பட்டன, அவைகளில் முஹம்மது இரவெல்லாம் கஷ்டப்பட்டு வெட்டிய தொல்லாயிரம் மனிதர்களின் உடல்களை போட்டு மூடினார்கள். (See Ibn Hisham: The Propeht’s Biography: vol 2 pages 40&41. 0- பார்க்கவும், இபின் இஷாமின் முஹம்மதுவின் சரிதை, ////
ஏதோ ஒருதுண்டு செய்தியை போட்டு வேடிக்கை காட்ட வேண்டாம்  .நீங்கள் கூறிய நூலில் இந்த செய்தி கிடையாது .700 பேர்கள் கொல்லப்பட்டார்கள் என்பது உண்மை .அவர்கள் ஏன் கொல்லப்பட்டார்கள் என்பதை எல்லாம் மறைத்து கொல்லப்பட்டார்கள் என்று மட்டும் எழுதியிருப்பது .டெல்லியில் 6 பேர்களில் ஒரு 17வயது சிறுவனை தவிர மற்ற 5 பேர்களையும் சுட்டு கொன்றுவிட்டார்கள் .என்று ஒரு செய்தி  வந்தால் எப்படியோ அது போல உள்ளது .அந்த சிறுவன் உட்பட 6 பேர்களும் ஒரு பெண்ணை கற்பழித்துக் கொன்ற விசயத்தை மறைத்ததுபோல இங்கும் அந்த குறைளா யூதர்கள் செய்த ஒப்பந்த மீறலோடு அவர்களால் பல முஸ்லிம் பெண்களும் சிறுவர்களும் சிறை பிடிக்க திட்டமிட்ட சதி செயலும் முறியடிக்கப்பட்ட செய்திகளையும் மறைத்துள்ளார்கள்.இஸ்லாத்தின் உண்மைகளை அறிய http://www.onlinepj.com/

கருத்துகள் இல்லை: