Arampannai ஜமாஅத் தலைவர் .
திரு .வைஸ் .கே.ஏ .முஹம்மது உதுமான்
பஞ்சாயத்துதலைவர்
திருமதி.ஹமிதாஹனிபா ;
கவுன்சிலர் .
திருமதி.சரிபாபசிர்

சனி, 5 ஜனவரி, 2013

இந்திய கிரிக்கெட் அணியில் "_வெடிகுண்டு(!) பயங்கரவாதி(?)"


இன்றைய செய்தி... 

Parvez Rassol, the Jammu and Kashmir allrounder, has been included in the 14-member India A squad to play the warm-up one-day match against England on January 6 in Delhi.

இவரை நியாபகம் உள்ளதா சகோஸ்..? 



மூன்றாண்டுகளுக்கு முன்னர், கர்நாடக காவி அரசால் பெங்களூரு "சின்னசாமி ஸ்டேடிய குண்டுவெடிப்பு" வழக்கில்,  'வெடிகுண்டு வைத்த பயங்கரவாதி' என்று பொய்யாக பழி போடப்பட்டு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட காஷ்மீர் ரஞ்சி டிராபி ஆல்ரவுண்டர் "பர்வேஸ் ரசூல்" தான் இவர்..! ஊடகத்தில்அப்போது இவர் 'வெடிகுண்டு(!) பயங்கரவாதி(?)'. பவுலிங் போடும் இந்த காஷ்மீரி கையில் கிரிக்கெட் பந்துக்கு பதில் கிராபிக்சில் வெடிகுண்டு எல்லாம் வரைந்து கேவப்படுத்தினர் ஊடகத்தினர்..! 

ஆனால்...

இறை நாடினால்... இதே Parvez Rasool நாளை தலைநகர் டில்லியில் ஃபெரோஷா கோட்லாஸ்டேடியத்தில், இங்கிலாந்து அணிக்கு எதிராக களம் கண்டு இந்தியா A அணியின்நட்சத்திர வீரராக வளம் வரவிருக்கிறார்..! மகிழ்வோடு வரவேற்போம்..!

ஆம், பெங்களூரு போலி குண்டுவெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறைக்குள் தள்ளப்பட்டிருந்த அதே "பர்வேஸ் ரசூல்"தான் நடப்பு இங்கிலாந்து சுற்றுலாவில் அதனை எதிர்த்து விளையாடவிருக்கும் இந்தியா-A அணிக்கு  தேர்வாகி உள்ளார். அல்ஹம்துலில்லாஹ்.
 
காஷ்மீரை சேர்ந்த வீரர் ஒருவர், இந்திய கிரிக்கெட் அணியில்
 இடம் பெறுவதும் இதுவே முதல் முறையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

'நான் நிரபராதி' : கோர்ட் தீர்ப்பு

இதற்கு முன்னதாக "ரஞ்சி டிராபி" ஆட்டத்தில் காஷ்மீரின் சார்பாக கலந்துக் கொண்ட பர்வேஸ், அதிரடியாக விளையாடி அனைவரையும்விட அதிகமாக 594 ரன்கள் எடுத்ததுடன் 33 விக்கெட்டுகளையும் கைப்பற்றி லிஸ்டில் டாப் பொசிஷனை எடுத்து தனது ஆல்ரவுண்டர் திறனை நிரூபித்ததுதான் இந்திய கிரிக்கெட் தேர்வுக்குழுவினரை இவரை நோக்கி திரும்ப வைத்திருக்கிறது. 

பாசிஸ அரசு ஊடக பயங்கரவாதம் - "LBW out"

அவரின் திறமைக்கு முன்னால் இந்திய ஊடக பயங்கரவாதமும் கர்நாடக காவி அரசு பொய்களும் எடுபடவில்லை..!

வீரர் தேர்வில் இந்த அளவுக்கு நேர்மையாக நடக்கும் இந்திய கிரிக்கெட் தேர்வாணைய குழுவுக்கு மிக்க நன்றி. யாரும் சற்றும் எதிர்‌பராதது இது..! பாசிஸ ஊடக பயங்கரவாதத்துக்கு நெத்தியடி..!

ஏனெனில், காஷ்மீரி முஸ்லிம் ஒருவர் போலி குண்டுவெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு... பின்னர் 'நிரபராதி' என நீதி மன்றத்தில் நிரூபித்து வெளிவருவது அத்தனை சாதாரணமான விஷயமல்ல நம்  நாட்டில்..! இதற்காக அவரும் அவரது குடும்பமும் எதிர்கொண்ட வேதனைகளும்-சோதனைகளும் கொஞ்சநஞ்சமல்ல..! நிச்சயமாக இது இவரைப்போல பாதிக்கப்பட்ட அனைவருக்கும் மகிழ்ச்சியான செய்தியாகவே இருக்கும் என்றால் மிகை இல்லை..! 

இக்கட்டான நேரத்தில் பொறுமையுடன் இருந்து, இன்னல் தந்தோரிடம் சகிப்புத்தன்மை காட்டி, கோபத்தை கட்டுப்படுத்தி, திறமையை நிரூபித்து சாதித்தும் உள்ளார் பர்வேஸ் ரசூல்..! மாஷாஅல்லாஹ்..!

இன்னும் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் கீழ்படியுங்கள் - நீங்கள் கருத்து வேறுபாடு கொள்ளாதீர்கள்; (அவ்வாறு கொண்டால்) கோழைகளாகி விடுவீர்கள்; உங்கள் பலம் குன்றிவிடும்; (துன்பங்களைச் சகித்துக் கொண்டு) நீங்கள் பொறுமையாக இருங்கள் - நிச்சயமாக அல்லாஹ் பொறுமையுடையவர்களுடன் இருக்கின்றான். (குர்ஆன் 8:46)

நன்றி முஹம்மது ஆசிக் .citizen of world

கருத்துகள் இல்லை: