முதலில் இங்கு ஒன்றை புரிந்து கொள்ளவேண்டும்.உலகில் சரித்திர நாயகர்களின் வரலாற்றை எழுதியவர்கள் அவர்களின் ஒரு பக்கத்தை மட்டுமே தந்திருப்பார்கள் அவர்களது முழு வாழ்க்கையும் அலசப்பட்டிருக்காது.அவர்களை பற்றிய பெருமைப்படும் செய்திகள் மட்டுமே வரலாற்று நூல்களில் எழுதுவார்கள் .அவர்களது தனிப்பட்ட அந்தரங்க வாழ்க்கை மறைக்கப் பட்டிருக்கும்.நேருவை பற்றி எழுதப்படும் பொழுது அவருக்கும் மவுண்ட்பேட்டனின் மனைவிக்கும் இருந்த உறவை பற்றி பாட நூல்களில் கூறமாட்டார்கள்.காந்திஜியின் அந்தரங்க வாழ்க்கை பற்றி இணைய தளங்களில் காணக் கிடைக்கினும் அவை அங்கீகரிக்கப்பட்டதாக இருக்காது.இப்படி யாக அனைத்து மாமனிதர்கள் பற்றியும் இந்த நடை முறைகளே உள்ளது.ஆனால் அதற்கு மாற்றமாக முஹம்மது நபி [அ.ச.உ]அவர்கள் பற்றிய வாழ்க்கையில் ஒரு நிமிடம் கூட விடாமல் அனைத்து நிகழ்வுகளும் அவர்களது புறத்திலிருந்தே உலகுக்கு கொடுக்கப் பட்டுள்ளது.மேலும் அவற்றின் அனைத்து செய்திகளிலும் உண்மைகளும் பொய்களும் தனித்தனியாக பிரிக்கப்பட்டு விவரிக்கப் பட்டுள்ளது.எந்த ஒரு தனிமனிதனின் வாழ்க்கை வரலாறுகள் இந்த அளவுக்கு ஆய்வுகள் செய்யப்படவில்லை.அலெக்சாண்டார் வந்தார்.வென்றார் மரங்களை நட்டார். என்று மட்டுமே சொலல்ப்பட்டிருக்கும் .அந்த போரில் எதிரிகளை கொன்றார் என்பதோடு செய்திகள் முடிந்துவிடும் பெண்கள் என்ன ஆனார்கள் ?அவர்களை வீரர்கள் கற்பழித்தது பற்றியோ கசக்கி பிழிந்தது பற்றியோ என்பதெல்லாம் வரலாற்றில் எழுத மாட்டர்கள் போர் என்றால் அப்படித்தான் இருக்கும் ,எதிரிகளை வென்றார் என்பதோடு போர் பற்றிய செய்திகள் முடிந்துவிடும் .உண்மைகள் அனைத்தும் வரல்லாற்றில் மறைக்கப்படும்.
இந்த எழுதப்படாத உண்மைகளை மனதில் வைத்துக் கொண்டு இங்கே வாருங்கள். அதெல்லாம் சரிதான் ஒரு இறைத்தூதர் இப்படி இருக்கலாமா?அந்த பெண்களை அப்படியே விட்டு விடவேண்டியதுதானே,முஹம்மது நபி[அ.ச.உ] அவர்கள் உத்தரவிட்டால் அவரது தோழர்கள் பணிவார்கள் அல்லவா?பசித்திருக்கவில்லையா?பட்டினியாக கிடைக்கவில்லையா?ஆம். ஆனால் இப்போதைய கலாச்சாரத்திற்கு பழகிப் போன நமக்கு இவ்வாறே கேட்க தோணும் .மறுப்பதற்கில்லை.ஒரு ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர் ஒருவரிடம் உங்களுக்கு குழந்தைகள் எத்தனை என்று கேட்டால் பனிரண்டு என்பர்.பத்து ,அல்லது பதினைந்து என்பர் .அதில் ஒருவித பெருமிதம் இருக்கும்.ஆனால் இப்போது ஒருவருக்கு அதிகபட்சம் நான்கு குழந்தைகள் இருக்கலாம் அதற்கு மேல் இருந்தால் சொல்லுவதற்கு வெட்கபடுவார்கள்.முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு இளைஞனும் இளைஞியும் தனியாக காணப்பட்டால் ஒரு நாவலே எழுதிவிடுவார்கள்.ஆனால் இப்போது அவர்கள் இருபாலரும் ஒருபாலராக , ஈருடலும் ஓருடலாக என்பதெல்லாம் காப்பி குடிப்பது போலாயிற்று. அவாறேனின் 1400 ஆண்டுகளுக்கு முன்னர் உள்ள சமுதாயம் எப்படியோ இருந்திருக்குமோ அதை முழுமையாக அறியாமல் இங்கே பேசுவது சரியன்று, இல்லையெனில் முஹம்மது நபி[அ.ச.உ]அவர்களின் சம காலத்தில் போரில் நீங்கள் சொல்லுவது போல நடந்ததற்கு ஆதாரம் காட்டப்படவேண்டும் காவிய நூல்களெல்லாம் போருக்கு ஆதாரங்கள் ஆகாது.அதில் கூறப்பட்டுள்ள நெறிகள் எல்லாம் புலவர்களின் கற்பனைக்கு சான்றுகள்.அவ்வளவே.
போரில் கைதான பெண்களை அப்படியே விட்டுவதற்கு லேடிஸ் ஹாஸ்ட்டல் அங்கு சிறைகள் திறக்கப்படவில்லை. பெண்கள் தனியாக விடப்பட்டால் கணவன் இல்லாத அவர்களுக்கு பாது காப்பாற்ற நிலை ஏற்படும்.அந்த காலத்தில் கைதியான பெண்களின் அவலநிலை மிக மோசமாக இர்ந்ததால்தான் முஹம்மது நபி [அ.ச.உ]அவர்கள் அவர்களால் ஏற்கமுடிந்த இப்படி ஒரு நிலை எடுத்திருக்க வேண்டும் .மேலும் அவர்களை தங்களது கண்காணிப்பில் வைத்திருக்க முடியும் .இல்லையெனில் அவர்கள் ஒற்றர் வேலையோ ,தப்பித்து இவர்களின் எதிரிகளுக்கோ உதவக் கூடும் . நபி[அ,ச.உ]அவர்களை கைபர் போருக்கு பின்னர் ஒரு யூத யுவதி அதாவது சபியா அவர்களின் முதல் கணவரின் இரண்டாவது மனைவிதான் விஷம் கலந்து உணவு வழங்கி கொல்ல சதி திட்டம் தீட்டினார் இப்போது அது போன்று நடத்தலாம என்று தேவை இல்லாமல் கற்பனிக்க வேண்டாம் .இப்போது ராணுவத்திற்கு சம்பளம் உட்பட அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளது.
ஆக முஹம்மது நபி[அ.ச.உ] அவர்கள் சம காலத்தில் இருந்த போர் அநியாயங்களை தடுத்து வரலாற்றிலே நல்லதொரு மாற்றம் சீர் திருத்தம் கொண்டு வந்தார்கள் என்பது மறுக்க இயலாத உண்மைகள்..
அளிசினாவின் தமிழ் எடுபிடி ஆர்யா ஆனந்துடன்நடந்த விவாதத்தில் பெண் அடிமைகள் பற்றிய குற்றச்சாட்டுக்கு நான் அளித்த பதில்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக