சவூதி அரேபியா சூரா
சவுதி அரேபிய சூரா கவுன்சிலில் 30
பெண்களை நியமித்து அவர்களையும்
சட்டம் இயற்றும் இடத்துக்கு மன்னர் அப்துல்லாஹ் கொண்டு வந்துள்ளார்.
நம் நாட்டு பாராளுமனறத்துக்கு எந்த அளவு அதிகாரம் உள்ளதோ அதைப்
போன்றதுதான் சூரா கவுன்சிலும். இங்கு இயற்றப்படும் சட்டங்கள் மன்னரின்
ஒப்புதலோடு அமுல்படுத்தப்படும். நம் நாட்டில் பெண்களுக்கு
நாடாளுமன்றத்தில் 33 சதவீத இடஒதுக்கீட்டுக்கு இன்றும் சண்டையிட்டுக்
கொண்டிருக்கிறோம். ஆனால் எந்த விளம்பரமும் இல்லாமல் 30 பெண்களை
சூரா கவுன்சிலின் உள்ளே கொண்டு வந்து சத்தமில்லாத புரட்சியை உண்டு
பண்ணியுள்ளார் மன்னர் அப்துல்லாஹ். நாட்டின் முன்னேற்றததில் இனி
பெண்களின் பங்களிப்பும் அபரிமிதமாக இருக்கும். ஆண்கள் படிப்பில் அதிகம்
ஆர்வம் காட்டுவதில்லை. ஆனால் பெண்கள் இன்று சகல துறைகளிலும்
அதிவேகமாக முன்னேறி வருகின்றனர். இன்னும் சில ஆண்டுகளில்
பெண்களின் சம்பாத்தியத்தில் கணவர்கள் வீட்டில் இருந்து சாப்பிடும் காலம்
வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. :-) எந்த அளவு பெண்கள் முன்னுக்கு
வந்தாலும் இஸ்லாமிய சட்டங்களை மீறாத வகையில் அவர்களின்
முன்னேற்றம் இருக்க வேண்டும் என்பதில் சவுதி அரசு கவனமாக
இருக்கிறது. ஆண் மெம்பர்களுக்கு எந்த அதிகாரம் உள்ளதோ அதே அதிகாரம்
பெண்களுக்கும் கொடுக்கப்பட்டுள்ளது. மொத்த எண்ணிக்கையில் 20 சதம்
பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில்
முக்கியமானவரான ஹயாத் சிந்தி ஒரு பயோ டெக்னாலஜிஸ்ட் ஆவார். '
சூரா கவுன்சிலில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் முதலாவதாக என்னை
தேர்ந்தெடுத்தது உண்மையிலேயே மிகுந்த மகிழ்வைத் தருகிறது.
அனைவருடனும் சரிசமமாக இருந்து எங்களது பணிகளை திறம்பட
நாட்டுக்காக செயலாற்றுவோம்' என்கிறார் சிந்தி. துரையா அல் அர்ராய்த்
(கவிஞர், பத்திக்கையாளர்): 'இந்த வாய்ப்பினால் நாட்டின் முன்னேற்றத்தில்
பெண்களின் பங்களிப்பு அதிகமாக இருக்கும். பெண்கள் இந்த சமூகத்தின் ஒரு
அங்கம். அவர்களின் முன்னேற்றம் முழு சமூகத்தையும் முன்னேற்றுவதாக
அமையும்'' சுஹைலா ஜெய்னுல்லாபுதீன் (சமூக சேவகி): 'இந்த
எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கப்பட்டு 50 சதமான பெண்கள் சூரா
கவுன்சிலில் இடம் பெற்றால் நல்லது. அந்த அளவு எண்ணிக்கையிலும்
நாங்கள் இருக்கிறோம். பல திறமைமிகுந்த பெண்கள் தங்களின் உழைப்பைக்
கொடுக்க தயாராகவே உள்ளனர். 20 சதவீத ஒதுக்கீடு என்பது ஆரம்பமே...இது
மேலும் அதிகரிக்கப்பட வேண்டும்' நைலா அத்தார் (தொழிலிபர், சமூக
சேவகி: பெண்கள் முனிசிபல் தேர்தலில் சிறந்த பங்காற்றியது
வரவேற்கத்தக்கது. தேர்ந்தெடுக்கப்பட்ட இந்த பெண்கள் பல திறமைமிக்க
பின்னணியிலிருந்து வந்தவர்கள். எனவே தங்களுக்கு கொடுக்கப்பட்ட
வேலைகளை திறம்பட செய்து முடிப்பர். தேர்ந்தெடுக்கப்பட்ட 30
பெண்மணிகளின் பட்டியல்: 1. Dr. Ilham Mahjoub Ahmad Hassanain 2. Dr. Amal
Salamah Sulaiman Al-Shaman 3. Dr. Thuraya Ahmad Obeid 4. Dr. Thuraya Ibrahim
Hussein Al-Arrayed 5. Dr. Al-Jawharah Ibrahim Muhammad Bubshait 6. Dr. Hamdah
Khalaf Muqbil Al-Enizi 7. Dr. Hanan Abdulraheem Mutlaq Al-Ahmadi 8. Dr. Hayat
Sulaiman Hassan Sindi 9. Dr. Khowlah Sami Saleem Al-Krai’ 10. Dr. Dalal Mukhlid Jahaz
Al-Harbi 11. Dr. Zainab Muthanna Abdoh Abu Talib 12. Princess Sarah Bint Faisal Bin
Abdul Aziz 13. Dr. Salwa Abdullah Fahd Al-Hazza’ 14. Dr. Fatimah Muhammad Al-Qarni
15. Dr. Fadwa Salamah Owdah Abu Mraifah 16. Dr. Firdous Saud Muhammad Al-Saleh 17.
Dr. Lubna Abdulrahman Al-Tayib Al-Ansari 18. Dr. Latifa Othman Ibrahim Al-Sha’lan 19.
Dr. Mastourah Obeid Al-Shammari 20. Dr. Muna Abdullah Saeed Al Mushait 21. Dr. Muna
Muhammad Saleh Al-Dowsari 22. Princess Moudhi Khaled Bin Abdul Aziz Al Saud 23. Dr.
Moudhi Muhammad Abdulaziz Al-Deghaithir 24. Dr. Nihad Muhammad Saeed Ahmad Al-
Hibshi 25. Dr. Noorah Abdulaziz Abdulrahman Al-Mubarak 26. Dr. Noorah Abdullah
Ibrahim Al-Asqah 27. Dr. Noorah Abdullah Abdulrahman Al-Adwan 28. Huda
Abdulrahman Saleh Al-Hilaisi 29. Dr. Haya Abdulaziz Nasser Al-Manee’ 30. Dr. Wafa
Mahmood Abdullah Taibah
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக