///..உலகெங்கும் உள்ள தீவிரவாத அமைப்புகள் இஸ்லாம் சார் அதாவது இஸ்லாமுக்காக போராட்டத்தில் அல்லது வன்முறைகளில் ஈடுபடும் அமைப்புகளே......இது கட்டாயம் அறிந்திருப்பீர்கள்....தேவை எனின் புள்ளி விபரங்களுடன் கூடிய தகவல் தர முடியும்.....////
.///பகிரங்கமாக அழைக்கின்றேன் தோழரே ....தலிபான்,மற்றும் அல்கொய்தா போன்ற பெரும் இயக்கங்கள் உட்பட ஏராளமான தீவிரவாத அமைப்புகள் இஸ்லாமுக்காக போராடுகின்றனர்.....ஏற்று கொள்கிறீரா????////
இஸ்லாம் தீவிரவாத மார்க்கம் என்பதற்கு அதிகபட்சமாக தாலிபான் அல்காய்தா அமைப்புகளையே முன்னிறுத்தி உள்ளீர்கள் .
ஆப்கானிஸ்தானில் கனிமவளங்கள் அதிகமாக உள்ளது என்பதை வல்லரசுகளான இருந்த ரஷ்யாவும் அமெரிக்காவும் அறிந்திருந்தன.இதில் ஏற்கனவே இருந்தரசுடன் கம்யுனிச கொளகைகளை ஆப்கானுக்குள் புகுத்தி உறவு கொண்டாடி வந்த ரசியா ஆப்கானில் புரட்சி ஏற்பட்டவுடன் அந்த நாட்டை தனது படைகளை அனுப்பி ஆக்கிரமித்து கம்யுனிச நாடாக முயற்சித்தது .இதனால் ஆத்திரமுற்ற அமெரிக்க ரசியர்களை அங்கிருந்து விரட்ட சவூதி அரேபியாவின் மில்லியனர் வீட்டு பிள்ளையாக அமெரிக்காவில் படித்துக் கொண்டிருந்த உசாமா பின் லாதினை பயன்படுத்தியது .பின் லாதின் மூலம் ஏராளமான ஆயுதங்களையும் பணத்தையும் அங்கு ஏற்கனவே ரசியாவை எதிர்த்து போராடிக் கொண்டிருந்த தாலிபான்களுக்கு அளித்து வந்தது.பின்லாதினையும் அமெரிக்காவே ஆப்கானிஸ்தானுக்கு அனுப்பிவைக்கிறது தலிபான்கள் தங்களது நாட்டிலுள்ள ரசியாராணுவத்தை எதிர்த்து போராடுகிறார்கள் .பின் லாதினுக்கு இங்கு என்ன வேலை?அமெரிக்காவே அதற்கான தயாரிப்புடன் அனுப்பி வைக்கிறது .உலகில் உள்ள முஸ்லிம் நாடுகளை ஆக்கிரமிப்பாளர்கள் இடமிருந்து காப்பற்றப் படவேண்டும் என்ற கொள்கையுடன் அல்காய்தா என்ற அமைப்பை உருவாக்கி இஸ்லாமிய நாடுகளில் உள்ள இளைஞர்களை பின் லாதின் தலைமையில் தாலிபான்களுடன் இணைந்து ரசியாவுக்கு எதிராக போராடியது .இங்ஙனம் ரசியாவுக்கு எதிராக போறாடியபோதேல்லாம் அமெரிக்காவுக்கு தாலிபான்கள் தீவிரவாதிகளாக தெரியவில்லை .போராளிகளாக மட்டுமே தெரிந்தனர் .
இராக்கில்தந்து நாணய மாற்றுவிகிததை டாலரிலிருந்து ஈரோவுக்கு மாற்றிய சதாமை அகற்றிவிட்டு எண்ணை வளத்தை கைப்பற்ற பேரழிவு ஆயுதங்கள் என்ற உலக மகா பொய்யை சொல்லி ஒபெக்கைஒழித்து எண்ணை மார்கெட்டை கைப்பற்றி தந்து பொம்மை அரசை நிறுவி எண்ணெய் கொள்ளை நடந்து வருகிறது .
அதைப்போல தாலிபான் ஆட்சி அகற்றப்பட்டு கார்சாய் தலைமையில் அமெரிக்காவின் பொம்மை அரசு ஆபாகநிச்தானில் நடந்து வருகிறது .
லிபியாவில் கதாபி ஜனநாயக பேரில் அங்குள்ள மக்களுக்கு ஆயுதங்கள் கொடுத்து பணத்தையும் அள்ளிவீசி தீவிர வாதத்தில் வெற்றி பெற்று கதாபியை கொன்று அங்கும் ஒரு பொம்மை அரசை நிறுவி அமெரிக்க கம்பெனிகள் எண்ணை கொள்ளை நடை பெறுகிறது .சிரியாவிலும் அதற்கான முயற்சிகள் நடைபெறுகிறது .
அதைப் போலவே ரசியர்களை விரட்டி தாலிபான்களை தனது பொம்மை அரசாக வைத்துக்கொள்ள அமெரிக்க நினைத்தது . தாலிபான்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை மீறி அவர்களை அடக்கி முயற்சித்தது .அதற்கு உடன்படாத தாலிபான்கள் அரசு மீது தனது உலக தாதா பலத்தால் மீடியாக்கள மூலமாக அவதூறுகளை பரப்பியது .அமெரீகாவின்
வேண்டுகோளை ஏற்று ஜப்பான் உடன்படிக்கைக்கு மாற்றமாக குழந்தைகளுக்கான உயிர் காக்கும்மருந்துகளை சப்ளை செய்வதை நிறுத்தியது .இதனால் ஆப்கான் குழந்தைகள் பாத்திக்கப்பட்டதால் ஜப்பானை கண்டிக்கும் வகையில் ,எங்கள் குழந்தைகள் மருந்தின்றி செத்துக் கொண்டிருக்கையில் உயிரில்லாத புத்தர் சிலைஎதற்கு என்று தகர்த்தனர் .அதே கால கட்டத்தில்தான் தமிழ்நாட்டிலும் கற்புக்கரசி கண்ணகியின் சிலையையும் லாரி மூலம் இடித்து தள்ளி அப்புறப்படுத்தினர் .இது முதல்வராக இருந்த ஜெயலலிதா ஜாதகத்திற்கு எதிராக இருந்ததால் அகற்றப்பட்டது .ஆனால் புத்த்ரசிலை அகற்றப்பட்டது உலக கொடுமையாக மீடியாக்கள் காட்டி வந்தன .மேலும் அதற்கான காரணத்தையும் மறைத்துவிட்டனர்.
துல அஞ்சலி ,தாலிபான்கள் தங்களது நாட்டுக்காக போராடுகிறர்கள் ,சிரியா அரசை எதிர்த்து அங்குள்ள முஸ்லிம்கள் அமெரிக்காவின் ஆயுத ,பண பலத்தால் போராடுவதை போலவே தாலிபான்களும் ,அமெரிக்காவின் பொம்மை அரசை எதிர்த்து தங்கள் நாட்டுக்காக போராடுகிறார்கள் .இதில் அமெரிக்காவே அவர்களது எதிரிகள் என்பதால் அவர்களை அவர்கள் அளவில் இயன்றவாறு தாக்குகிறார்கள் .
தாலிபான்கள் செய்தது தீவிரவாதம் என்றால் அமெரிக்க ,ரசியா நாடுகள் ஆப்கானை ஆக்கிரமித்து லட்ச கணக்கான் மக்களை கொன்றது என்ன வாதம் ?
பகத்சிங் போராடியதும் தீவிரவாதமா?
விடுதலை புலிகள் செய்தது தீவிரவாதம் கிடையாதா?
அல்காய்தா ,உலக முஸ்லிம்கள் ,மற்றும் முஸ்லிம் நாடுகள் அமெரிக்காவால் ஆக்கிரமிக்கப்பட்டு இஸ்ரேலுக்கு உற்றதுணையாக இருப்பதால் அவர்களும் போராடுகிறர்கள் .
ஜப்பான் மீது அணுகுண்டு வீசி கோடிக்கணக்கான மக்களை கொல்லுவது மிதவாதமா?அஹிம்சையான வழியா?
ஒரு சில அமெரிக்கர்களை கொன்றுவிட்டால் தீவிரவாதமா?
தாலிபான்களை ஆப்கானிலிருந்து கவுடிமாலாவுக்கு ஒவ்வொரு கண்டைனரிலும் 600பேர்களை அடைத்து அதில் பாதிபேர்கள் மூச்சு திணறி செத்தார்களே ,அதெல்லாம் என்ன வாதம்?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக