Sunday, December 09, 2012
அரைகுறை ஆடையுடன் கூடிய மேற்கத்திய வாழ்க்கைதான் சுதந்திரத்தின் அடையாளம் என்று நான் வாழ்ந்த போது உணராத சுதந்திரமும் சமுகத்தில் எனக்கு கிடைக்காத அங்கீகாரமும் இன்று ஹிஜாபின் மூலமே எனக்கு கிடைத்தது. ஒரு முன்னாள் முஸ்லீம் அல்லாத பெண் என்கிற அனுபவத்தில் சொல்கிறேன் , ஹிஜாப் பெண்ணுரிமையின் அடையாளம்,சம நீதியின் குறியீடும், பெண் விடுதலையின் புதிய குறியீடும் நிகாப்தான் என்பதை அனைத்து பெண்களும் உணர வேண்டும்.ஹிஜாப் என் வாழ்கையில் ஏற்படுத்திய அமைதி மற்றும் மகிழ்ச்சியை போன்றே எல்லா பெண்களின் வாழ்விலும் கொண்டுவரும் என்பதில் சந்தேகம் இல்லை. - சாரா போக்கர்
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ
ஹிஜாபின் பெருமை உலகெங்கிலும் பரவி வருகிறது.இன்றைய காலகட்டத்திற்கு மிகவும் முக்கியமான ஒன்றாக எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டும் வருகிறது .. முஸ்லிம் மக்கள் ஹிஜாப் பேணுவதில் எந்த பெருமையும் இல்லை.. மேற்குலக நாகரிகத்தில் மூழ்கிப் போன மாற்று மத சகோதரிகள் அதை உணர்ந்து அதன் பெருமையைச் சொல்லும் போது தான் அதன் மேன்மை புரிகிறது. இஸ்லாமிய பெண்களாகிய நாங்கள் அதை பற்றி பெருமிதமாக சொல்வதை விட முஸ்லிம்களை ஒடுக்க நினைக்கும் நாட்டில் இருந்து கொண்டு,மேற்கத்திய ஆடைகுறைப்பு நாகரிகத்தில் ஊறி திளைத்த ஒரு பெண் ஹிஜாப் மற்றும் குர்ஆனின் பெருமையைக் கூறும் பொழுது நமக்கு மெய் சிலிர்க்கவே செய்கிறது ..
சாராபோக்கர்!
மேலை நாட்டு கலாச்சாரத்தில் பிறந்து வளர்ந்து ஒரு கால கட்டத்தில் இஸ்லாத்தை புரிந்து கொண்டு , ஹிஜாபின் பெருமை உணர்ந்து அல்லாஹ்வின் வழி காட்டலில்இன்று முஸ்லிம்மாக வாழ்ந்து வரும் மாடல் அழகி இவர்!
ஆரம்பகாலத்தில்:
அமெரிக்காவின் நடுப்பகுதியில் பிறந்து, வளர்ந்த ஒரு அமெரிக்க பெண் . மற்ற பெண்கள் போலவே அந்த பெரிய நகரத்திற்கு உண்டான ஆடம்பர வாழ்க்கை முறையிலேயே வளர்ந்தார். ஒரு கட்டத்தில் , பகட்டு வாழ்க்கை முறைக்கு பெயர் போன புளோரிடா, மியாமி தென் கடற்கரை பகுதிக்கு நான் குடி பெயர்ந்தார். ஆரம்பத்தில் மேற்கத்திய பெண்களின் சராசரி மனநிலையே இவருக்கும் இருந்தது.பார்ப்பவர்களின் கவனத்தை ஈர்க்கும் வண்ணம் உடைகள் மற்றும் அலங்கார அணிகலன்கள் அணிவதும் அடுத்தவர் தம்மை கவுரமாக நினைப்பதே வாழ்க்கையின் அந்தஸ்து என்றும் எண்ணம் கொண்டிருந்தார். தனது கடுமையான உழைப்பின் மூலம் தனி நபர் பயிற்சியாளர் என்ற தகுதிக்கு தன்னை உயர்த்திகொண்டதோடு கடற்கரை ஒட்டி ஒரு வீடும் சொந்தமாக வாங்கும் அளவுக்கு பொருளாதார அளவில் உயர்ந்த நிலையிலும் நாகரீக வாழ்க்கை வாழும் ஒரு பெண்மணியாக தன்னை ஆக்கினார்!
ஆண்டுகள் உருண்டோட ஆரம்பித்தது! பெண் அடிமைத்தனத்தை எதிர்க்கிறேன் பேர்விழி என்று உருவெடுத்த சாராவிற்கு வாழ்கைத்தரம் உயர்ந்த அளவுக்கு வாழ்க்கையில் நிம்மதியும், சந்தோஷமும் உயரவில்லை.. மாறாக குறைந்து கொண்டே வந்ததை உணர ஆரம்பித்தார். தன் வாழ்க்கை முறை மற்றும் மனநிம்மதிக்கும் இடையேயான இடைவேளை அதிகமாகி கொண்டே போவதை உணரஆரம்பித்தார். போதை மற்றும் பார்ட்டிகளுக்கு அடிமையாய் இருந்த சாரா அவற்றில் இருந்து விடுபடவேண்டி தியானம், சேவை மற்றும் மத ரீதியான காரியங்களில் ஈடுபட தொடங்கினார்.ஆனால் அனைத்து வழிமுறைகளும் ஒரு தற்காலிக வலி நிவாரணியாக இருந்ததே தவிர அவருக்கு நிரந்தர தீர்வேதுவும் கொடுக்கவில்லை!
பெண்ணியம்,பெண் சுதந்திரம் மற்றும் புதிய உலகம் உருவாக வேண்டும் என்று கருத்துகளோடு உலாவி கொண்டு இருந்த சாராவிற்கு அதே எண்ணத்துடன் ஒத்துப்போகக்கூடிய பொதுவுடைமை மற்றும் சுயமரிதை தொடர்பாக போராடி வரும் ஒரு நண்பரின் அறிமுகம் கிடைத்தது. அந்த கொள்கைகளில் ஈடுபாடு கொண்டு அவருடன் இணைந்து சாரா செயல்பட ஆரம்பித்தார். தான் இணைந்த புதிய இயக்கம் அவருக்கு வித்தியாசமாக இருந்தது! ஒரு சிறிய வட்டத்திற்குள் பெண்ணியம் பெண் உரிமை என்று இருந்த சாராவிற்கு சுதந்திரம், நீதி, சுயமரியாதை எல்லாம் அனைத்து மக்களுக்கும் சமமானது என்றும் மக்கள் அனைவரும் சமமே முதன்முறையாக உணர ஆரம்பித்தார்.
மாற்றம் நிகழ்ந்த தருணம்:
அக்காலகட்டத்தில் தான் ஒரு பெரிய மாற்றம் நிகழ்ந்தது! மேற்கத்திய நாடுகளில் எதிர்மறையான கருத்துக்கள் கொண்ட ஒரு நூல் என்று சொல்லப்படக்கூடிய நூலை தற்செயலாக ஒரு நாள் படிக்க நேர்ந்தது. ஆம் குர்ஆன் தான் அது! அது வரை இஸ்லாம் என்றால் மனைவியை அடித்து கொடுமைபடுத்தும் பழக்கம்,வீட்டுக்குள் அடைத்து வைக்கப்பட்ட பெண்கள்,பயங்கரவாதம் மட்டுமே இஸ்லாம் என்று நினைத்துக்கொண்டிருந்த அவர் எண்ணத்தை அடியோடு மாற்றியது குர்ஆன்! குரானை படிக்க படிக்க அதன் பாணி, எழுதப்பட்ட விதம் மற்றும் அணுகுமுறை ஆகியவை சாராவை அதிகம் ஈர்த்தது!! படைக்கபட்டவை மற்றும் படைப்பாளிக்கான உறவை அதில் சொல்லி இருந்த விதம் சாராவை மிகவும் கவர்ந்தது.
குர் ஆன் முதன் முதலாக படித்தபோது அவருக்கு ஏற்பட்ட அனுபவத்தை இவ்வாறு விவரிக்கிறார்:
இஸ்லாத்தை தன் வாழ்வியல் நெறியாயக்கொண்டு, ஹிஜாப்பை தன் உரிமையாக ஏற்றுக்கொண்டு வாழ்ந்த சாரா திருமணம் செய்ததும் ஒரு முஸ்லீம்மை தான்! நிகாப்(முகத்தை முழுமையாக மூடும் துணி) போடும் பெண்களின் எண்ணிக்கை அதிகமாகிக்கொண்டே போன போது அதைபற்றிய ஆர்வம் அதிகரித்தது சாராவிற்கு! தான் ஏற்கெனவே அணிந்து கொண்டிருந்த ஹிஜாப் இல் இருந்தால் போதுமா, அல்லது நிகாப் அணிய வேண்டுமா என தன் கணவரிடம் ஆர்வமாய் கேட்க ஹிஜாப் அணிவது கடமை என்றும், நிகாப் அவரவரின் தனிபட்ட விருப்பம் என்றும் அவர் கூறினார். ஆனாலும் சாரா விடவில்லை..ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு, நிகாப் அணிய ஆசையாக உள்ளதாக மீண்டும் தன்கணவரிடம் சொன்னார். அதோடு, அதிக அடக்கமாக இருப்பதனால் என் மன நிம்மதியையும் அது அதிகப்படுத்தும் என்றும் அவரிடம் கூறிகிறார். சாராவின் ஆர்வத்தை கண்டு கணவர் தன் மனையின் முடிவை ஆதரித்தார். 'இஸ்தால்' என்று சொல்லப் பட்ட ஒரு தளர்ச்சியான, தலை முதல் கால்வரை மூடும் ஒரு கருப்பு கவுனையும், கண்களைத் தவிர தலையையும் முகத்தையும் முழுமையாக மூடும் நிகாபையும் வாங்கிக் கொடுத்தார்.
வெகு விரைவில் சில அரசியல்வாதிகள்,கத்தோலிக்க பாதிரிகள் மற்றும் ,மனித உரிமை போராளிகள் என்று சொல்லிகொள்பவர்களிடமிருந்து ஹிஜாப்
பெண்ணடிமைத்தனத்தின் அறிகுறி என்றும் ,முன்னேற்றத்துக்கான தடை என்றும் எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது. அந்த வேளையில் ஒரு எகிப்திய அதிகாரி ஹிஜாப் பிற்போக்கு சிந்தனையின் அடையாளம் என்றும் குறிப்பிட்டார்.
அந்த தருணத்தை பற்றி சாரா குறிப்பிடுகையில் :
சாரா ஹிஜாப் எதிர்ப்பாளர்களுக்கு சொன்ன பதில் இஸ்லாத்தின் கொள்கை மீதான அவரின் அசைக்க முடியாத நம்பிக்கையை காட்டுவதாக அமைந்துள்ளது.
தன்னை சார்ந்த சமூகத்திற்கு ஒரு நல்ல முஸ்லிம் பெண்ணா இருப்பதற்கும் ,கணவனுக்கு உறுதுணையாய் நிற்கும் ஒரு முஸ்லிம் மனைவியாக இருப்பதற்கும், மேலும் தன் குழைந்தைகளை இஸ்லாம் நெறிமுறையில் வளர்த்து வருங்கால மனிதகுலத்திற்கு ஒளி வீசும் ஒளிகீற்றுகளாய் வளர்ப்பதற்கும் தன்னால் ஆனதை முஸ்லீம் பெண்களுக்கு கற்றுக்கொடுத்துக்கொண்டிருக்கிறார்.
இஸ்லாமிய வாழ்வியல் நெறியோடு முற்றிலும் மாறுபட்ட வாழ்க்கை வாழ்ந்து, இப்போது இஸ்லாம் காட்டித்தந்த அழகான பாதையில் பயணிக்கும் சாரா தற்சமயம் "த மார்ச் பார் ஜஸ்டிஸ்" என்ற மனித மற்றும் சிவில் உரிமைகள் இயக்கத்தின் தகவல் தொடர்பு இயக்குனராக உள்ளார். மேலும் "த குளோபள் சிஸ்டர்ஸ் நெட்வொர்க்" கின் துணை நிறுவனராகவும், புகழ்பெற்ற "ஷாக் அன்ட் ஏவ் கேலரி" யின் தயாரிப்பாளராகவும் இருக்கிறார். அல்ஹம்துலில்லாஹ். அல்லாஹ் அவரின் முந்தைய பாவங்களை மன்னித்து , இம்மையிலும் மறுமையிலும் வெற்றிகளை வழங்குவானாக. ஆமீன்
த மார்ச் பார் ஜஸ்டிஸ் பற்றி அறிய click
'Shock and Awe' Gallery காண click

எந்த விதமான மொழிபெயர்ப்பும் தேவை இல்லாமல் எளிமையாக படிக்கும் வண்ணம் இருந்த குரான் என் இதயம் மற்றும் ஆன்மாவிற்கு மிகவும் நெருக்கமான முகவரியை எனக்கு கொடுத்தது.. இறுதியில் அந்த ஒரு கணத்தில் குர்ஆன் என்னை பார்த்ததன் உண்மையை உணர்தேன். தன்நம்பிக்கை மற்றும் நிறைவான வாழ்க்கை வாழ ஒரு முஸ்லிமாக மாற முடிவெடுத்தேன்.ஆம்... சாரா தன் இரத்தத்திலேயே ஊறிய மேற்கத்திய கலாச்சாரத்தை தூக்கி எறிந்துவிட்டு ஒரு முஸ்லிம்மாக மாற முடிவெடுத்தார். உடனே அழகான நீண்ட உடையையும் தலையை மறைக்கும் விதமான ஸ்கார்ப்பும் வாங்கிக்கொண்டார். மேற்கத்திய பெண் என்ற ரீதியில் எந்த வீதியில் அரைகுறை ஆடைகளுடன் நடமாடினாரோ அதே தெருவில் தலையில் இருந்து கால் வரை மறைக்கும் விதமாக இருக்கும் ஹிஜாப் அணித்துச் செல்ல தொடங்கினார். அந்த அனுபவத்தை பற்றி சாரா குறிப்பிடுகையில் :பழகிய முகங்கள் ,பழகிய கடை வீதி என்றாலும் ஹிஜாப் அணிந்து நடமாடும் போது முதன்முறையாக மனதினில் தெம்பும் ,நிம்மதியும் ,தன்னிறைவும் பெற்ற ஒரு உணர்வு நிகழ்ந்தது என்னுள்.! தடைகள் தகர்ந்து புதிய உலகிற்குள் நுழைந்த சுதந்திர உணர்வை பெற்றேன்.வேட்டைக்கான இரையை போன்று ஒரு காலத்தில் பார்க்கப்பட்ட நான் இன்று இந்த சமுதாயம் முற்றிலும் புதிய கோணத்தில் என்னை பார்ப்பதை உணர்ந்தேன். என் தோள்களில் இருந்து மிக பெரிய பாரம் இறக்கி வைக்கப்பட்டது போன்று உணர்ந்தேன்.வேலை, ஷாப்பிங், ஒப்பனை என்று கழிந்த என் வாழ்க்கை இப்பொழுது சரியான திசையை நோக்கி செல்வதை உணர்ந்தேன்.இஸ்லாம் என் இதயத்திற்கு மிகவும் நெருக்கமான மார்க்கமாக உணர்ந்தேன்.
இஸ்லாத்தை தன் வாழ்வியல் நெறியாயக்கொண்டு, ஹிஜாப்பை தன் உரிமையாக ஏற்றுக்கொண்டு வாழ்ந்த சாரா திருமணம் செய்ததும் ஒரு முஸ்லீம்மை தான்! நிகாப்(முகத்தை முழுமையாக மூடும் துணி) போடும் பெண்களின் எண்ணிக்கை அதிகமாகிக்கொண்டே போன போது அதைபற்றிய ஆர்வம் அதிகரித்தது சாராவிற்கு! தான் ஏற்கெனவே அணிந்து கொண்டிருந்த ஹிஜாப் இல் இருந்தால் போதுமா, அல்லது நிகாப் அணிய வேண்டுமா என தன் கணவரிடம் ஆர்வமாய் கேட்க ஹிஜாப் அணிவது கடமை என்றும், நிகாப் அவரவரின் தனிபட்ட விருப்பம் என்றும் அவர் கூறினார். ஆனாலும் சாரா விடவில்லை..ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு, நிகாப் அணிய ஆசையாக உள்ளதாக மீண்டும் தன்கணவரிடம் சொன்னார். அதோடு, அதிக அடக்கமாக இருப்பதனால் என் மன நிம்மதியையும் அது அதிகப்படுத்தும் என்றும் அவரிடம் கூறிகிறார். சாராவின் ஆர்வத்தை கண்டு கணவர் தன் மனையின் முடிவை ஆதரித்தார். 'இஸ்தால்' என்று சொல்லப் பட்ட ஒரு தளர்ச்சியான, தலை முதல் கால்வரை மூடும் ஒரு கருப்பு கவுனையும், கண்களைத் தவிர தலையையும் முகத்தையும் முழுமையாக மூடும் நிகாபையும் வாங்கிக் கொடுத்தார்.
வெகு விரைவில் சில அரசியல்வாதிகள்,கத்தோலிக்க பாதிரிகள் மற்றும் ,மனித உரிமை போராளிகள் என்று சொல்லிகொள்பவர்களிடமிருந்து ஹிஜாப்
பெண்ணடிமைத்தனத்தின் அறிகுறி என்றும் ,முன்னேற்றத்துக்கான தடை என்றும் எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது. அந்த வேளையில் ஒரு எகிப்திய அதிகாரி ஹிஜாப் பிற்போக்கு சிந்தனையின் அடையாளம் என்றும் குறிப்பிட்டார்.
அந்த தருணத்தை பற்றி சாரா குறிப்பிடுகையில் :
பெண்களுக்கு என்று பிரத்தியோகமான உடை மற்றும் சட்டங்கள் திணிக்கும் சில அரசாங்கள் இருக்கும் போது அதை எதிர்க்கவேண்டியவர்கள் எதிர்ப்பதில்லை! ஆனால் உண்மையான உரிமைகளான வேலை, கல்வி போன்ற எத்தனையோ துறைகளில் பெண்கள் பின்தங்கி இருக்கும் போது ,அதை எல்லாம் விட்டு விட்டு ஹிஜாபை கையில் எடுத்து கொண்டு பெண் விடுதலைகளுக்கு போராடுகிறோம் பேர்விழி என்று கூறிக்கொள்ளும் சில கையாலாகதவர்களின் வேற்று கூச்சலாகவே என்னால் இதை பார்க்க முடிந்தது. நல்ல கட்டளைகளை நிறைவேற்றவும் எந்த தீயசக்திகளுக்கு எதிராகவும் நீதி நெறியினை நிலைநாட்டவும் ஹிஜாப் தான் சரியான வழி. ஹிஜாப் அடிமைத்தனத்தின் அடையாளம் அல்ல அது முஸ்லிம் பெண்களின் உரிமை,சுதந்திரம் மற்றும் ,பாதுகாப்பின் குறியீடு என்று உணர வேண்டும்.தன் கவர்ச்சியான உடையையும் , மேற்கத்திய போலி வாழ்க்கை முறையையும் கழற்றி எறிந்து விட்ட சாரா, படைத்தவனோடு நிம்மதியாக இருப்பதிலும், சுயமரியாதையும் கண்ணியமும் உள்ள ஒரு பெண்ணாக தன்னைச் சுற்றியிருப்பவர்களோடு வாழ்வதிலும்தான் அதிக சந்தோசமிருக்கிறதென்றும் அதனால்தான் நிகாப் அணிவதைத் தேர்ந்தெடுத்துக் கொண்டதாகவும், தன்னை விட்டுப் பிரிக்க முடியாத அதை அணியும் உரிமைக்காக உயிரை விடவும் செய்வேனென்றும் கூறுகிறார். மாஷா அல்லாஹ்...
சாரா ஹிஜாப் எதிர்ப்பாளர்களுக்கு சொன்ன பதில் இஸ்லாத்தின் கொள்கை மீதான அவரின் அசைக்க முடியாத நம்பிக்கையை காட்டுவதாக அமைந்துள்ளது.
"நாகரீக மோகத்தில் ஹிஜாபை இழிவுபடுத்துபவர்களுக்கும் அதனை புறக்கணிப்பவர்களுக்கும் நான் கூற விரும்புவது ஒன்று தான்! நீங்கள் உங்கள் அறியாமையினால் எதை இழந்து கொண்டிருக்கிறோம் என்பதை உணராமலே இழந்து கொண்டிருகிறீர்கள்"
தன்னை சார்ந்த சமூகத்திற்கு ஒரு நல்ல முஸ்லிம் பெண்ணா இருப்பதற்கும் ,கணவனுக்கு உறுதுணையாய் நிற்கும் ஒரு முஸ்லிம் மனைவியாக இருப்பதற்கும், மேலும் தன் குழைந்தைகளை இஸ்லாம் நெறிமுறையில் வளர்த்து வருங்கால மனிதகுலத்திற்கு ஒளி வீசும் ஒளிகீற்றுகளாய் வளர்ப்பதற்கும் தன்னால் ஆனதை முஸ்லீம் பெண்களுக்கு கற்றுக்கொடுத்துக்கொண்டிருக்கிறார்.
இஸ்லாமிய வாழ்வியல் நெறியோடு முற்றிலும் மாறுபட்ட வாழ்க்கை வாழ்ந்து, இப்போது இஸ்லாம் காட்டித்தந்த அழகான பாதையில் பயணிக்கும் சாரா தற்சமயம் "த மார்ச் பார் ஜஸ்டிஸ்" என்ற மனித மற்றும் சிவில் உரிமைகள் இயக்கத்தின் தகவல் தொடர்பு இயக்குனராக உள்ளார். மேலும் "த குளோபள் சிஸ்டர்ஸ் நெட்வொர்க்" கின் துணை நிறுவனராகவும், புகழ்பெற்ற "ஷாக் அன்ட் ஏவ் கேலரி" யின் தயாரிப்பாளராகவும் இருக்கிறார். அல்ஹம்துலில்லாஹ். அல்லாஹ் அவரின் முந்தைய பாவங்களை மன்னித்து , இம்மையிலும் மறுமையிலும் வெற்றிகளை வழங்குவானாக. ஆமீன்
"எவருக்கு அல்லாஹ் நன்மையை நாடுகிறானோ அவரை மார்க்கத்தில் விளக்கமுடையவராக ஆக்கிவிடுகிறான்"reference: The New Symbol of Women's Liberation
த மார்ச் பார் ஜஸ்டிஸ் பற்றி அறிய click
'Shock and Awe' Gallery காண click
நன்றி ;இஸ்லாமிய பெண்மணி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக