காங் ஐ விட பாஜக மிகப்பெரிய சாத்தான் ..! எடியூரப்பாவே தான் சொல்கிறார்..!
முன்னாள் கர்நாடக முதல்வரும், கர்நாடக மாநில பாஜக வின் தலைவரும் ஆன எடியூரப்பா தான் இவ்வாறு கூறியுள்ளார். பெங்களூருவில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த எடியூரப்பா, காங்கிரஸ் மற்றும் மத சார்பற்ற ஜனதா தள கட்சிகளை விட மிகப்பெரிய சாத்தான் பாஜக தான், இது நூறு சதவீதம் உண்மை என்றார்.மேலும் கூறுகையில்,
மாநில கட்சியாக கர்நாடக ஜனதா என்ற கட்சியை தொடங்கி, தமிழ்நாட்டின் கருணாநிதியைப் போல, உத்திரப்பிரதேச முலாம்சிங் போல வருவேன் என்றார்.கர்நாடக மாநிலத்தில் அர்ஸ், நிஜலிங்கப்பா, ஹெக்டே, பங்காரப்பா போன்றவர்கள் ஏற்படுத்த தவறிய மாநில கட்சியை உருவாக்குவேன் என்றார்.அது அவரின் விருப்பம் நடக்கிறதா நடக்குமா என்பதை போகப் போக தெரிந்து கொள்ளலாம் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.
தனது 20 வது வயதில் ஆர்.எஸ்.எஸ்.- ல் இணைந்து, அங்கு பயிற்றுவிக்கப்பட்டு ( என்னத்த, என்ன பயிற்சி தருவார்கள்.அங்கு..? ஒரே மூளைச் சலவை செய்வார்கள்.முஸ்லிம்கள் நமது எதிரிகள், நமது பாரத நாடு பழம் பெரும் நாடு, நமது நாட்டிற்காக நமது உயிரை கொடுக்க வேண்டும் என்று 'ஸ்லிப்பர் செல்' பாணியிலும், உங்கள் வாழ்நாளில் ஒரு முஸ்லிமையாவது கொல்ல வேண்டும்.அப்படியே நமது மதம் இந்து மதம். இந்துக்கள் மட்டுமே வாழ வேண்டும் இங்கு. [ அப்பத்தானே பார்ப்பனியம் நீடித்து நிலைத்து நின்று அரசை இயக்க முடியும்..] என்று தரம் வாரியாக, அதாவது சிலருக்கு என்ன மண்டையில் ஏற்றினாலும் தேமே என்று இருப்பவர்களை நைசாக கழட்டி விடுவார்கள், கொஞ்சம் சார்ப்பாக இருப்பவர்களை வருடக்கணக்கில் மூலச் சலவை செய்து வெளியே அனுப்புவார்கள்..) வெளியே வந்த நம்ம எடியூரப்பா அவர்கள் அரிசி ஆலையில் வேலைக்கு சேர்ந்து, அப்படியே அந்த அரிசி ஆலையின் ஓனர் பெண்ணை கல்யாணம் செய்து கொண்டு ( ஒருவேளை திட்டம் போட்டு காதலித்து கை பிடித்திருப்பாரோ..? இருக்கலாம் தான்.இல்லாமலும் போகலாம் தான். ) ஜில்லா அளவில் ஜனசங்கத்தில் சேர்ந்து அப்படியே வளர்ந்து பாஜக என்று முதல்வராகி,தற்பொழுது மீண்டும் தனி கட்சி துவங்கி அடுத்த முதல்வராகி விடுவேன் என்கிறார்.
ஆக, ஆர்.எஸ்.எஸ்.என்ற மக்கள் விரோத இயக்கம் ஆட்களை ட்ரைனிங் கொடுத்து, அரசியல் என்றல்ல பல்வேறு துறைகளில் நுழைத்து இந்திய நாட்டையே மதவெறி நாடாக மாற்றி, இந்துமயமாக்கல் ஆக்கி, பல லட்சம் மக்களை, அருகில் உள்ள ஒரு சின்னஞ் சிறு நாட்டில் கொன்றார்கள் லட்சக்கணக்கில். உள்நாட்டில் மதவெறியை தூண்டி கொலை வெறியாட்டம் போட்டு பல ஆயிரம் முஸ்லிம் மக்களை கொன்றார்கள், தேவைப்படும் பொழுது மேலும் கொல்வார்கள். எல்லா துறைகளிலுமா..? என்று கேட்பவர்களுக்கு இதோ எடுத்துக்காட்டு
தற்பொழுது அணைத்து மொழிகளில் இயங்கும் இணைய தளங்களிலும் நுழைத்து விட்டார்கள். எந்த இணைய தளமாக இருக்கட்டும் அங்கு ஒருவர் அல்ல பலர் இந்த விஷ கருத்துக்களை பரப்பிக் கொண்டே இருப்பார்கள். ஈழம் தவிர்த்த இணையங்களில் மட்டும் இன்னும் அவர்களால் நுழைய முடியவில்லை..அங்கும் நுழைந்து விடுவார்கள். அதில் தான் அவர்களின் திறமை நுட்பம் இருக்கிறது. கிடக்கட்டும் இவைகள் எல்லாம். சாத்தான் விசயத்திற்கு வருவோம்.
இப்பேற்பட்ட இயக்கத்தில் பயின்று வந்துவிட்டு, அவர்களின் அரசியல் கட்சியில் தலைவர், பிறகு முதல்வர் என்று இருந்து விட்டு இப்பொழுது இவ்வாறு சொல்கிறார் என்றால் உண்மையைத் தவிர வேறு என்னவாக இருக்கும்..? கருணாநிதியைப் போல் வருவேன் என்கிறார். அப்படியென்றால் இவரின் குடும்பம் நம்ம தலைவர் அளவிற்கு பெரிதோ..? அல்லது ஆசியாவின் மிகப்பெரிய கார்ப்பரேட் ஆக வருவேன் என்று சொல்ல வருகிறாரா என்ன..? முலாயம்சிங் போல என்கிறார். இவரின் மகனை அடுத்த வாரிசாக கொண்டு வந்தே தீருவேன் என்ற சபதமாக இருக்குமோ..?
ஆக, அணைத்து அரசியல் கட்சிகளும் நூறு சதவீத சாத்தான்கள் என்று கருதலாமா..? என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.
சங்கிலிக்கருப்பு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக