அம்பேத்கார் சொன்னார் பெரியார் சொன்னார் அறிஞர் அண்ணா சொன்னார்,என்று எத்தனை காலம் நாம் பெருமைகளை பேசிக் கொண்டு இருக்கப் போகிறோம் ,ஆனால் இஸ்லாமியர் ஒருவர் என்ன சொன்னார் தெரியுமா?
நான் நாவிதர் ,எனக்கு இஸ்லாத்தில் உள்ள என்னைவிட பலமடங்கு வசதி குறைந்தவன் கூட எனக்கு பெண் தரமறுக்கிறார்கள் .நான் நாவித தொழிலை கைவிட்ட பிறகும் என்னை தனி இனமாக பார்ப்பது ஏன் என்றும் புரியவில்லை. முஹம்மது நபி [ஸல்] அவர்கள் நாவிதர்கள் வீட்டில் பெண் எடுக்கவும் கொடுக்கவும் தடை செய்துள்ளார்களா? என்று கேட்கிறாரே ,இதற்கு இன்றைய இஸ்லாமிய ,இளைஞர்கள் இளைஞ்சிகள் என்ன பதில் சொல்லாப்போகிறார்கள் ?
நமது ஊரில் கூட நாவிதர்களை வயது முதிர்ந்தவர்களாக இருந்தால் கூட ஒருமையில் பேசுவதை பார்க்கிறோமே ,நாவிதர்களை தனி சாதியாக ஒதுக்கிட இஸ்லாம் அனுமதிக்கிறதா?
பல ஊர்களில் சில தறுதலைகள் மாற்றுமதத்தினர்களுடன் சாதி வித்தியாசம் இல்லாமல் ஓடியதை பார்க்கிறோம் ஆனால் முஸ்லிம் நாவிதர்களுடன் ஓடியதாக செய்திகள் வந்ததில்லையே ,இது ஏன் ?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக