கர்ளாவியின் வழியில் பெண்களுடன் கை குழுக்கும் இஹ்வான்களின் தலைவர்.
உலகம் முழுவதும் இஸ்லாமிய ஆட்சியை நிறுவப் போவதாக கொக்கரிக்கும் கூட்டத்தினர்களில் முக்கியமானவர்கள் தான் இஹ்வான்கள் என்பவர்கள்.
யூசுப் அல் கர்ளாவி என்பவரை மிகப் பெரும் மார்க்க மேதையாக நினைத்து அவருடைய கருத்துக்களுக்கு முக்கியத்துவம் வழங்கி அவரை பூஜிக்கும் ஒரு அமைப்புத்தான் பூஜிப்பவர்கள் தான இந்த இஹ்வான்கள் .
இலங்கை வரலாற்றில் இலங்கை முஸ்லிம்கள் மத்தியில் இந்த வழிகெட்ட இயக்கத்தவர்களை முஸ்லிம்களின் சர்வதேச காவலர்களாக அறிமுகப்படுத்திய பெருமை ஷீயா ஏஜன்டுகளான இலங்கை ஜமாத்தே இஸ்லாமியையே சாரும்.
தங்களின் மாதாந்த மற்றும் வாராந்த இதழ்களில் இஹ்வான்களைப் பற்றியும் யூசுப் அல் கர்ளாவி பற்றியும் தவறாமல் பக்கங்களை வீனாக்கும் பெருமை இவர்களுக்கு உண்டு.
கடந்த சில மாதங்களுக்கு முன் இவர்களின் ஆத்மீக குரு கர்ளாவி கத்தார் மன்னரின் மனைவியின்கையைப் பிடித்ததை கூட கண்டும் காணாமல் இருந்தார்கள் என்பது அனைவரும் அறிந்த உண்மை.
கர்ளாவி கத்தார் இளவரசியின் கையைப் பிடித்த அதே பாணியில் இஹ்வான்களின் தலைவர் அஹ்மத் ஷம்ஜாத் தற்போது ஹிலாரி கிளின்டனின் கைகளைப் பிடித்துள்ளமை இவர்களின் இஸ்லாமிய சிந்தனையை தெளிவாக உணர்த்துகின்றது.
நபி (ஸல்) அவர்களின் துணைவியாரான ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
இந்த (60:10-12ஆவது) வசனங்களின் ஆணைக்கேற்ப அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (மக்காவிலிருந்து) நாடு துறந்து தம்மிடம் வந்த இறைநம்பிக்கை கொண்ட பெண்களை சோதனை செய்து வந்தார்கள்.
இந்த (இறைவசனத்திலுள்ள) நிபந்தனையை இறைநம்பிக்கை கொண்ட பெண்களில் எவர் ஏற்றுக்கொண்டாரோ அவரிடம் “உன் விசுவாசப் பிரமாணத்தை ஏற்றுக்கொண்டேன்” என்று பேச்சால் மட்டுமே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறுவார்கள்.
அல்லாஹ்வின் மீதாணையாக! நபி (ஸல்) அவர்களது கரம் விசுவாசப் பிரமாணம் வாங்கும்போது எந்தப் பெண்ணின் கரத்தையும் தொட்டதில்லை.
பெண்களிடம் “நான் உன் விசுவாசப் பிரமாணத்தை ஏற்றுக்கொண்டேன்” என்று அவர்கள் வாய்மொழியாகவே தவிர வேறெந்த முறையிலும் விசுவாசப் பிராமணம் வாங்கியதில்லை.(புகாரி – 4891)
மேற்கண்ட நபி மொழி நமக்குச் சொல்வது என்ன? நபியவர்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளும் பெண்களிடம் பைஅத் (உறுதிப் பிரமானம்) எடுக்கும் போது கூட நபியின் கை அண்ணியப் பெண்ணின் கையில் கூடப் பட்டதில்லை.
ஆனால் இஹ்வான்களின் தலைவரோ சர்வ சாதாரணமாக இன்னொரு பெண்ணின் கையைப் பிடித்து கை குழுக்குகிறார்.
திருட்டு பைஅத்தின் பெயரால் மக்களை வழிகெடுக்கும் ஜமாத்தே இஸ்லாமி, தாருல் அர்க்கம், உஸ்தாத் (?) மன்சூர், போன்றவர்களுக்கும் இஸ்லாத்தின் உயரிய கருத்துக்களுக்கும் எவ்வித சம்பந்தமும் கிடையாது என்பதை பொது மக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.
நன்றி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக