Arampannai ஜமாஅத் தலைவர் .
திரு .வைஸ் .கே.ஏ .முஹம்மது உதுமான்
பஞ்சாயத்துதலைவர்
திருமதி.ஹமிதாஹனிபா ;
கவுன்சிலர் .
திருமதி.சரிபாபசிர்

ஞாயிறு, 30 செப்டம்பர், 2012

குர்ஆனில் எழுத்து பிழைகள் விவாதம் .தூத்துக்குடி

பிஸ்மில்லா ஹிரஹ்மாநிர் ரஹீம் ,,,,,,

தூத்துக்குடியில் டிஎன்டிஜே வும் ஷேக் அப்துல்லா ஜமாலியின் ஜமாத்துல் உலாம சபையும் குர்ஆனில் எழுத்து பிழைகளா ?என்ற தலைப்பில் விவாதத்தை நேற்று துவக்கினார்கள் .நேற்றைய விவாதத்தில் குர்ஆனில் எழுத்து பிழைகள் உண்டு என்று இதுவரை எந்த முஸ்லிம்களும் சொன்னதில்லை ,யூதர்கள் மட்டுமே அவ்வாறு சொல்லி வருகின்றனர் என்று ஜமாலி தரப்பினர் குற்றசாட்டு வைத்து அதற்கு  answering islam  என்ற இணைய தளத்தில் இருந்து பிரின்ட் அவுட் எடுத்து ஆதாரம் வைத்தனர்.
குர்ஆனில் எழுத்து பிழைகள் உண்டு என்பதை ஹிஜ்ரி 5ஆம் நூற்றாண்டில் பாக்கியான் என்னும் முஸ்லிம் அறிஞர் கூறியதையும் இப்னு ஹுதைபா,தப்ரி கூறியுள்ளதையும் ஆதாரமாக டிஎன்டிஜே எடுத்துவைத்து அவர்கள் வாதத்தை உடைத்ததோடு நில்லாது அவர்கள் கூறிய யூதனும் குர்ஆனில் எழுத்து பிழைகள் உண்டு என்பதை நேரடியாக கூறாமல் ,ஒரு முஸ்லிம் அறிஞரின் கருத்தையே எடுத்து மேற்கோள் காட்டி கூறியுள்ளதையும்  நிருபித்து ஜமாலி குருப்பின் ஆதாரங்களை தவிடுபொடியாக்கினார்கள் .
அடுத்து குர்ஆனில் நுன்ஜி என்று வரக்கூடிய சொல்லில் நூன் விடுபட்டு நுஜி என்று எழுதப்பட்டிருப்பதையும் அதில் விடுபட்ட நூன் சிறிதாக மேலே சேர்க்கப்பட்டிருப்பதையும் எடுத்து வைத்து குர்ஆனில் பிழை உண்டு என்று தங்கள் வாதத்தை நிலை நிறுத்தினார்கள்.இதை மறுக்க பல திரிபு வாதங்களை எடுத்து வைத்து சமாளிக்க முயன்ற ஜமாலி வகையறாக்களின் வாதங்கள் சல்லடையாக்கப் பட்டது.
மேலும் ஜமாலி மாணவர் முஸ்தபா என்பவர் லாகின்ன ,போன்ற நாலு சொற்களை மட்டுமே வைத்துக் கொண்டு அதிலுள்ள பிழைகளை சொல்லுமாறு மீண்டும் மீண்டும் வேண்டி வந்தார் .அவர் அவ்வாறு கோருவது தவறு..ஏனெனில் தலைப்பு குர்ஆனில் எழுத்து பிழைகள் உண்டு என்பது பீஜேவின் வாதம்.இல்லை என்பது இவரின் வாதம்.அவ்வாறிருக்க எழுத்து பிழைகள் எதுவானாலும் பீஜே தரப்பினர் சொல்லலாம்.குர்ஆனில் பிழையான வார்த்தைகள் என்று சொல்லப்பட்ட லாகின்ன ,போன்ற சொல்லில் பிழை இல்லை என்பது மட்டுமே தலைப்பாக இருந்தால் அந்த சொற்களோடு நிற்க முடியும்  ஆனால் அதற்கு மாற்றமாக குர்ஆனில் எழுத்து பிழைகள் இல்லை என்று பொதுவாக சொல்லி விட்டு நான்கு சொற்களில் மட்டுமே நிற்பது தலைப்புக்கு மாற்றமானது
பீஜே ,அப்பாஸ் அலி ,ரஹ்மத்துல்லா போன்றவர்களுக்கு கிளிப்பிள்ளை போல பாடம் எடுப்பதாக கூறிய மூலானா மூலவி அஸ்சீக் அல்லாமா,இல்லாம முஸ் தப்பா? அவர்கள் தான் மிகபெரும் அறிஞர் என்றால் ,இரண்டு வருடகாலங்கள் போராடி விவாதத்திற்கு அழைத்துவந்தது  உண்மை என்றால் ,இவரல்லவா ஏற்கனவே பீஜே அவர்கள் மொழியாக்கத்தில் குர்ஆனில் உள்ள 19 எழுத்து பிழைகளை அடுக்கி அவைகள் அனைத்தும் பிழைகள் இல்லை என்பதை ஆதாரங்களுடன் அவையில் எடுத்து வைத்திருக்க வேண்டும் 19 எழுத்து பிழைகளையும் நிருபிக்க திராணிஇல்லைஎன்றால் , இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக ஆய்வு செய்து கண்டுபிடித்த அந்த நாலு சொற்களையாவது அவற்றில் பிழைகள் இல்லை என்பதை நிறுவியிருக்க வேண்டாமா என்ன ? அதற்கு மாற்றமாக நாலு சொற்களிலும் உள்ள பிழைகளை சொல்லுங்கள் என்று ஏன் கெஞ்சி கூத்தாட வேண்டும்?
நீங்கள் உண்மையிலே சகாபாக்கள் மீது அவதூறுகள் வரக் கூடாது என்பதற்கு அஞ்சுவதாக இருந்தால் நீங்கள் உங்கள் ஆய்வில் கண்டுபிடித்த பீஜெவின்தவறுகளை சுட்டி காட்டி உடனடியாக தர்ஜுமாவில் திருத்துமாறு வேண்டியிருக்க வேண்டும் .அதற்கு அவர்கள் மறுப்பு தெரிவித்து இருந்தால் முஸ் தப்பா?பீஜேவை விவாதத்திற்கு அழைத்திருக்க வேண்டும் .
சகாபாக்கள் மீது பாசத்தை கொட்டும் இவர்கள்  காட்டு அவுலியா முதல் கண்டகண்ட அவுலியாக்களுக்கு எல்லாம் தர்கா கட்டி விழா எடுத்து வருடம் தோறும் உறுசு கந்துரி நடத்தி வருவது போல குர்ஆன் ஐ எழுத்து வடிவில தொகுத்து தந்த சஹாபா பெருமக்களுக்கு ஒரு தர்காவாது கட்டியிருக்கக் கூடாதா? கொடி ஊர்வலம் கந்தூரி வைபவங்கள் நடத்தக் கூடாதா?
நீங்கள் மக்கள் மத்தியில் போற்றி புகழும் உங்களது பல அவுலியாக்கள் பற்றி நாறடித்துக் கொண்டிருக்கிறோமே அப்போதெலாம் கொதித்து எழுந்து அது பற்றி விவாதிக்க அழைக்க வில்லையே ஏன்?
நீங்கள் பின்பற்றாத மேலும் அவர்களுக்கு முற்றிலும் முரண்பட்டு நடக்கும் நீங்கள் சஹாபாக்களின் மனித கவனக் குறைவுகளை ஆதாரங்களுடன் மக்கள் கவனத்திற்கு கொண்டு வந்த நிலையில் சகாபாக்கள் மீது கரிசனம் கொட்டி வடிவது ஏன்?
பிழைகள் இல்லை என்பதை நிருபிக்கவா?அல்லது பிழைக்க வழியில்லை என்ற நிலையை  போக்கவா?
இறுதியில் லாகின்ன என்ற சொல் எழுதப்பட்ட நிலையிலும் உள்ள.தவறுகள் விளக்கப்பட்டது.அத்ற்கு கடைசி வாதத்தில் லாகின்ன கேட்டு துடித்துக் கொண்டிருந்த முஸ்தபா கடைசி 10 நிமிடங்களையும் அவர் எடுத்து அதற்கு விளக்கம் தந்திருக்க வேண்டும் .ஆனால் ஜமாலி குறுக்கிட்டுஅது பற்றி மூச்சு காட்டாமல்  சொதப்பி அதன் பின்னர் முஸ்தபாவும் வேறு விசயமாக உளறி நேரம் முடிந்தது .
விவாதம் 2 வது  நாள் 

லாக்கின்ன,லிதஸ்லூவ ,லி யப்லூவ ,வ நப்லூவ என்ற சொற்களில் உள்ள பிழைகள்பற்றி தொடர்ந்து கேட்டுக் கொண்டிருந்த முஸ்தபா முதலில் சொல்லப்பட்ட லாக்கின்ன என்ற சொல்லில் உள்ள பிழையை கூட நிருபிக்க முடியாமல் தவித்தார். அந்த ஒரு சொல்லில் கூட பிழை இல்லை என்பதை நிருபிக்க அவர் கடந்த இரண்டு ஆண்டுகளாக செய்த ஆய்வுகள் அவருக்கு கைகொடுக்கவில்லை .ஆக டிஎன்டிஜே தரப்பில் எடுத்து வைக்கப்பட்ட னுஞ்சி என்ற சொல் பிழையாக நுஜி என்று எழுதப்பட்டுள்ளதை அவர்களால் மறுத்து  ஆதாரங்கள் தரமுடியவில்லை .மேலும் அவர்கள் தர்ஜுமாவில் சொல்லப்பட்டுள்ள 19 பிழைகலில் நான்கை மட்டும்  விளக்கம் கேட்டு வற்புறுத்தி வந்த முஸ்தபா அதில் ஒன்றை கூட பிழை இல்லை என்பதை நிருபிக்க இயலாமற் சகாபாக்களை குறை  சொல்லிவிட்டார்கள் என்று ஆரம்ப முழக்கத்தையே இறுதி முழக்கமாக முழங்கிக் கொண்டு சென்றார்.

இரண்டு விவாதங்கள் நடத்தி அதில் தனது கொள்கைகளை நிலை நிறுத்தமுடியாமல் வெறும் சால்ஜாப்புகளையும் ,வெளிப்படையான சமாளிப்புகளையும் வைத்து வாதாடிய ஜமாலி இந்த விவாதத்தில் கலந்து கொண்டார். இவர் கலந்து கொள்வதை ரகசியமாக வைத்து பெரிய ஒரு பூச்சாண்டி காட்டுவது போல தங்களைத்தானே ஏமாற்றிக் கொண்டனர். களியக்காவிளை விவாதத்தில் தன்னைத்தானே வெற்றி பெற்றதாக அறிவித்துக் கொண்ட சர்க்கஸ் கோமாளி ,பீஜேயுடன் யாரும் விவாதிக்க முன்வராத நிலையில் ஜமாலி தனது கோமாளித்தன வாதங்களுடன் விவாதம் நடத்திய பிறகு அறியாத மக்களிடம் பிரபல்யம் ஆகி அதன் மூலம் பல் இடங்களில் கூட்டங்கள் நடத்த offer கிடைத்தது .இஸ்லாத்திற்கு புதிதாக வந்தவர்களுக்கு முஸ்லிம்களிடையே கிடைக்கும் மரியாதை பயன்படுத்தி கூட்டங்கள் நடத்தி பண அறுவடை செய்து கொண்ட பெரியார் தாசன் போல ,அதன் பின்னர் பெரியார்தாசனும் பாக்கரும் முகவரி இல்லாமற் போனது போல ஜமாலி நிலையும் கேட்பார் இல்லாமற் போயிற்று.அடுத்து அவர் ,உருவம் அற்ற இறைவன் என்பது முஸ்லிமகள் மத்தியில் ஊறிப்போன விசயத்திற்கு மாற்றமான கருத்துடைய பீஜே யுடன் அந்த தலைப்பில் அதன் பின்னர் நடத்திய அல்லாஹ்வுக்கு உருவம் உண்டா என்ற விவாதமும் மக்கள் மத்தியில் எடுபடவில்லை .
அதன் பின்னர் ,குர்ஆனில் பிழைகள் என்று பீஜே சொல்லுகிறார். முஸ்லிம்களே 
அய்யையையோ இது அபத்தம் என்று கூறி நாம் நேரடியாக அழைத்தால் அவர் நோக்கம் புரிந்து ஜமாலியின் விளம்பர வேட்டைக்கு பலியாகிவிடக் கூடாது என்று டிஎன்டிஜே மறுத்துவிடும் என்பதால் ,தனது மாணவர் ஜிப்பாவுக்குள் ஒழிந்து கொண்டு விவாதத்திற்கு ஒப்பந்தம் போட்டு கள்ளத்தனமாக் விவாதத்தில் கலந்து கொண்டார்.
விவாதத்தில் எப்போதும் பீஜே அவர்களின் பல வாதங்களை மறுத்து சால்ஜாப்புகளுடன் சமாளித்து வரும் ஜமாலி ,பீஜேயின் வாதங்களால் அவர் மாறியிருக்கும் நிலையை பகிரங்கமாக இறைவன் வெளிப்படுத்தி விட்டான் களியக்காவிளை விவாதத்திர்க்கான கடித பரிமாற்றங்களில் உள்ள கடிதங்களில்  786/92 என்று பிஸ்மில்லாஹ்வுக்கும் கிர்கரிக்கும் அப்ஜத் முறையில் எழுதிய அவர் இப்போது அவர் 786 என்று எழுதுவதில்லை என்றும் பிஸ்மில்லாஹ் என்றுதான் உண்ண முடியும் 786 என்று சொல்லி உண்ண முடியுமா? என்று கேட்டு நீங்கள்தான் நபி [ஸல்] அவர்கள்  சொல்லுக்கு மாற்றமாக இறைவனின் திருப் பெயரால் ,,, என்று எழுதுவதாகவும் கூறினார் .இதை அவர் சொன்னதும் அதை ரசித்து அவர்கள் தரப்பில் வந்த பார்வையாளர்கள் சிரித்தனர்..அதன் பிறகு அங்கு வந்த பார்வையாளர் ஒருவர் அவர்களுக்கு கொடுக்கப்பட்ட அடையாள அட்டையில் 786 எழுதியுள்ளதையும் சுட்டி காட்டி அந்த அட்டையை பீ ஜெவிடம் கொடுத்தார்.இந்த அடையாள அட்டையில் 786 எழுதியதற்கும் ஜமாலிக்கும்  எவ்வித தொடர்பும் இல்லை யென்பது வேறு விஷயம் .அதைப்போல அங்கு வந்த மக்களுக்கு அவர்கள் என்ன நிலையில் இருக்கிறார்கள் என்பதும் தெரியவில்லை என்பதும் மற்றொரு விஷயம்..ஆனால் களியக்காவிளை விவாதத்திற்கு முன்னர் 786/92 என்று எழுதியதோடு அந்தவிவாததில் அப்ஜதுக்கு ஆதரவாக வாதாடிய ஜமாலி இன்று நாம் 1980-90 களில் 786 ஐ கேலி செய்தது போல இன்று அவரும் கேலி செய்ததோடு அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப் பெயரால் ,,,,,,,என்று தான் எழுத வேண்டும் என்று திருநெல்வேலிக்கார னுக்கே அல்வா கொடுத்தார் போல நமக்கே பிஸ்மில்லாஹ் பற்றி சொல்லுமளவில் மாறிவிட்டார் .அல்ஹம்துலில்லாஹ் 
முஸ்தபா நல்ல வாதங்களுடன் விவாதிக்க வந்திருந்தால் ,அவர் தனது வாதத்தில் பீஜே தர்ஜுமாவில் அறிவிக்கப்பட்டுள்ள 19 பிழைகளையும் அடுக்கி அவைகளில் பிழைகள் இல்லை என்பதற்கான தனது ஆதாரங்களை எடுத்து வைத்திருக்க வேண்டும் .அதோடு நில்லாது அவர் எதிர் பார்க்காத நிலையில் பீஜே தரப்பினர் பிழைக்கு கூடுதலாக வைத்த னுஞ்சி பற்றியும் அவர் இறுதியில் பேசியிருக்க வேண்டும் .ஆனால் அதற்கு திராணியற்ற அவர் தனது ஈராண்டு ஆய்வு செய்த லாகின்ன போன்ற நாலு சொற்களில் உள்ள பிழைகள் சொல்லுங்கள் என்று எதிர் தரப்பினரிடம் கெஞ்சிக் கொண்டு இருந்தது அவர் அறைவேக்காடாகவே வந்துள்ளார் என்பதை வெளிப்படுத்துகிறது .எவ்விதத்திலும் எதிர்கொள்ளாமற் பீஜே  தரப்பினருக்கு பாடம் நடத்துவதாக நடித்துக் காண்பித்தார். அதை அவர்கள் தரப்பினர் படம் எடுத்துள்ளார்கள் .படபிடிப்பில் கலந்து கொண்ட மகிழ்ச்சியுடன் அவரது தரப்பில் வந்திருந்த மக்களும் நாரே தக்பீர் கோசங்கள் முழங்க கர கோசத்துடன் சென்றனர்.

புதன், 26 செப்டம்பர், 2012

அதிரை ’வெங்காய வியாபாரி’ இராணுவ இரகசியங்களை கடத்தினாரா? – உண்மை அறியும் குழுவின் அறிக்கை


ThoothuOnline.com

தமீம் அன்சாரி
சென்னை:இந்திய ராணுவ ரகசியங்கள் மற்றும் ராணுவ பயிற்சி மையங்களின் புகைப்படங்களை வெளிநாட்டுக்கு கடத்த முயன்றதாக கூறி,  ‘வெங்காய வியாபாரி’யான தமீம் அன்சாரி(35) என்பவரை  ‘கியூ’ பிரிவு போலீஸார்” கைது செய்தனர்.  இதன் மூலம் தமிழகத்தினை தீவிரவாதிகள் தகர்க்கும் சதி முறியடிக்கப்பட்டதாகவும் உளவுத்துறையினர் தெரிவித்தனர்.  மேலும் ஊடகங்களும் தன் பங்கிற்கு பல கதைகளை புனைந்து தினந்தோறும் செய்திகளை வெளியிட்டு வருகின்றன.   இந்நிலையில் இச்சம்பவம் தொடர்பாக மனித உரிமை அமைப்புகள் அடங்கிய உண்மை அறியும் குழுவினர் பல்வேறு மட்டங்களில் விசாரணைகளை மேற்கொண்டு தங்களது அறிக்கையை வெளியிட்டுள்ளனர்.
உண்மை அறியும் குழுவினர் வெளியிட்ட அறிக்கை:
சென்ற 18ந்தேதி முதல் தமிழக ஊடகங்களில் தஞ்சையைச் சேர்ந்த தமீம் அன்சாரி என்னும் இளைஞன் இலங்கை வழியாக இராணுவ இரகசியங்களைப் பாகிஸ்தானுக்குக் கடத்தியதாக ஒரு செய்தி மிகவும் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது. திருச்சி ‘கியூ’ பிரிவு போலீசார் அவரைக் கைது செய்து வழக்குப் பதிவு செய்துள்ளனர் (மு.த.அ எண் 1/2012. குற்றப் பிரிவுகள்; The Official Secret Act 3, 4 & 9 மற்றும் IPC 120(B)). இவருடன் சக குற்றவாளிகளாக இலங்கை கொழும்பு நகரைச் சேர்ந்த ஷாஜி மற்றும் லங்கா ஷாஜி ஆகியோரும் இலங்கையிலுள்ள பாகிஸ்தான் தூதரக அதிகாரி அமீர் சுபைர் சித்திக் என்பவரும் சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்கள் பாகிஸ்தான் நாட்டு உளவுப் பிரிவான ஐ.எஸ்.ஐயின் தென் ஆசியப் பகுதியின் முக்கிய முகவர்கள் என்பதாகவும் கியூ பிரிவு போலீசார் ஊடகங்களுக்குச் செய்திகள் தந்துள்ளனர்.
“மத விரோதம் காரணமாகவும் சொந்த லாபத்திற்காகவும்” தமீம் அன்சாரி இதைச் செய்துள்ளார் எனவும், (1) இந்தியாவை இஸ்லாமிய நாடாக்கும் நோக்கத்துடனும், (2) வட இந்தியாவைப் போல தென்னிந்தியாவிலும் பயங்கரவாதத் தாக்குதல்களை நடத்தி இந்திய அரசை அச்சுறுத்தும் நோக்கத்துடனும் இச்சதி வேலை தொடங்கப்பட்டுள்ளதாகவும் கியூ பிரிவு போலீசார் கொடுத்துள்ள செய்தி காட்சி மற்றும் அச்சு ஊடகங்களில் பெரிய அளவு முக்கியத்துவத்துடன் தொடர்ந்து வெளிவருகிறது.
குற்றச்சாட்டுகள் கடுமையானவை; கவலைக்குரியவை. தமிழகத்தில் பயங்கரவாதத் தாக்குதல்களுக்குக் காரணமாகிற சதி என்கிற வகையில் உடனடி நடவடிக்கையைக் கோருபவை என்பதில் யாருக்கும் ஐயம் இருக்க முடியாது. ஆனால் அதே நேரத்தில் கைது செய்யப்பட்டுள்ள தமீம் அன்சாரி குறித்து வேறு வகையான தகவல்களும் கிடைத்தன. அவர் மார்க்சிஸ்ட் கட்சியிலும் அது சார்ந்த வெகுமக்கள் அமைப்புகளிலும் பல ஆண்டுகளாகச் செயல்பட்டு வந்தவர் எனவும், வெங்காயம் மற்றும் உருளைக் கிழங்கு ஏற்றுமதி செய்வது என்கிற அளவிலேயே அவருக்கு இலங்கையுடன் தொடர்பிருந்தது எனவும், அவரும் அவரது குடும்பத்தாரும் கியூ பிரிவு போலீசின் குற்றச்சாட்டை மறுக்கின்றனர் எனவும் அறிந்தோம்.
எனவே இவ்வழக்கு தொடரப்பட்டுள்ளது குறித்த உண்மைகளை அறிய கீழ்க்கண்ட குழு ஒன்று அமைக்கப்பட்டது.
1. பேரா.அ. மார்க்ஸ், மனித உரிமைகளுக்கான மக்கள் கழகம் (PUHR), சென்னை,
2. கோ. சுகுமாரன், மக்கள் உரிமைக் கூட்டமைப்பு (FPR), புதுச்சேரி,
3. எஸ்.வி. ராஜதுரை, மூத்த மனித உரிமைப் போராளி, நீலகிரி,
4. பேரா. பிரபா. கல்விமணி, பழங்குடி இருளர் பாதுகாப்புச் சங்கம், திண்டிவனம்,
5. பேரா. சே.கோச்சடை, மக்கள் சிவில் உரிமைக் கழகம் (PUCL), காரைக்குடி,
6. வழக்குரைஞர் அ.கமருதீன், திருச்சி.
இக்குழு உறுப்பினர்கள் சென்ற 21, 22, 23 தேதிகளில் திருச்சி, தஞ்சை முதலான இடங்களுக்கு நேரில் சென்று சிறையிலிருந்த தமீம் அன்சாரியைச் சந்தித்து அவரது வாக்குமூலத்தைப் பெற்றுக் கொண்டனர். அவரது வழக்குரைஞர் ஜே.கென்னடி என்கிற ஸ்டீபன் செல்வராஜ் மற்றும் அன்சாரியின் மனைவி நபீலா (23), தாயார் முத்து நாச்சியார் (50), மாமா லியாகத் அலி மற்றும் அவருடன் தொடர்பிலிருந்த மார்க்சிஸ்ட் கட்சி மற்றும் அதன் வெகு மக்கள் அமைப்பின் முக்கிய பொறுப்பாளர்கள் ஆகியோரைச் சந்தித்தனர். திருச்சி விமான நிலைய மேலாளரிடம் நேரிலும், இம்மிக்ரேஷன் அதிகாரி சிரீதரனிடம் தொலைபேசியிலும் பேசினர்.. அவர்கள் தமக்கு ஏதும் தெரியாது எனக் கூறி முடித்துக் கொண்டனர். கியூ பிரிவு போலீசாருடன் மும்முறை தொடர்பு கொண்டோம். இறுதியாகப் பேசிய ஆய்வாளர் ஒருவர் எதுவானாலும் சென்னை அலுவலகத்தில் விசாரித்துக் கொள்ளுங்கள் எனச் சொல்லித் தொடர்பைத் துண்டித்து விட்டார்..
நாங்கள் அறிந்த உண்மைகள்
அதிராம்பட்டினத்தைச் சேர்ந்த தமீம் அன்சாரி (35) தமிழில் முதுகலைப்பட்டம் பயின்றவர். அவரது தந்தை அப்துல் ரஹ்மான் மற்றும் மூன்று சகோதரர்கள் வெளிநாடுகளில் உள்ளனர். அன்சாரிக்கு மனைவியும் ஒரு ஆண் குழந்தையும் உண்டு. மாணவப் பருவம் தொட்டு மார்க்சிஸ்ட் கட்சியின் வெகு மக்கள் அமைப்புகளில் முக்கிய பொறுப்புகளில் இருந்துள்ளார். இந்திய மாணவர் சங்கத்தின் தஞ்சை மாவட்டச் செயலாளராகவும் மாநிலத் துணைச் செயலாளராகவும் பதவி வகித்துள்ளார். முற்போக்கு ஏழுத்தாளர் சங்கத்திலும் செயல்பட்டுள்ளார். அறிவியல் மன்றத்திலும் (Science Forum) மாவட்டச் செயலாளராக இருமுறை இருந்துள்ளார். இவ் அமைப்பின் செயலாளர் பொறுப்பு கட்சி உறுப்பினர்களுக்கே கொடுக்கப்படும் என்பதால் இவர் மார்க்சிஸ்ட் கட்சி உறுப்பினராக இருந்தார் எனவும் யூகிக்கலாம். அன்சாரி எந்த நாளிலும் முஸ்லிம் அமைப்புகளில் இருந்ததில்லை. அவரது தொடர்புகள் யாவும் இடதுசாரி அமைப்புகளுடனேயே இருந்துள்ளன. இதற்கு முன் அவர் எந்த வழக்கிலுமோ, குற்றச்சாட்டுகளிலுமோ தொடர்புபடுத்தப்பட்டதுமில்லை. தங்கள் கட்சியில் உறுப்பினராக இருந்தவர் என்பதை மார்க்சிஸ்ட் கட்சியினர் இன்று சொல்லத் தயங்கியபோதும், அவர் கட்சியில் இருந்த காலத்தில் அவர்மீது இப்படியான தொடர்புகளுக்காகக் கட்சி நடவடிக்கை ஏதும் எடுக்ககப்பட்டதில்லை என்பது குறிப்பிடத் தக்கது.
தஞ்சையில் இருந்துகொண்டு மருந்து ஏற்றுமதி முதலான பல தொழில்களை முயற்சி செய்து பெரிய வெற்றி அடையாத அவர், இறுதியில் இலங்கைத் தலைநகரம் கொழும்பில் உள்ள ஹாஜி என்கிற சித்திக் அலிக்கு வெங்காயம், உருளைக்கிழங்கு முதலியவற்றை ஏற்றுமதி செய்துள்ளார். நீலகிரி முதலான இடங்களுக்குச் சென்று இவற்றைக் கொள்முதல் செய்து கப்பலில் அனுப்பியுள்ளார். இது தொடர்பாக அன்சாரி இதுவரை நான்கு முறை இலங்கை சென்று வந்துள்ளார். கிழக்குக் கடற்கரையோர முஸ்லிம்கள் இலங்கையுடன் பாரம்பரியமாகக் கடல் வணிகம் செய்து வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த வணிக உறவில் ஹாஜிக்கும் அன்சாரிக்கும் இடையே ஒரு சிக்கல் உருவாகியுள்ளது. அன்சாரி அனுப்பிய ஒரு லோட் வெங்காயம் அழுகி விட்டதெனக் கூறி அதன் விலையான 10 லட்சம் ரூபாயை ஹாஜி தர மறுத்துள்ளார். இதைப் பெறுவதற்காக ஐந்தாம் முறையாக அன்சாரி கடந்த 16ம் தேதி காலை 7.30 மணி அளவில் திருச்சியிலிருந்து இலங்கைப் புறப்படும் விமானத்தில் டிக்கட் பதிவு செய்துள்ளார்.
செப்.16 காலை 5 மணிக்கு தஞ்சையிலுள்ள தன் வீட்டிலிருந்து புறப்பட்ட அவர் 5.30 வரை மனைவியிடம் செல் போனில் பேசியுள்ளார். அதற்குப் பின் 11 மணிவரை அவரை செல்போனில் தொடர்பு கொள்ள இயலவில்லை. திட்டமிட்டபடி அவர் பயணம் செய்திருந்தால் 10 மணி வாக்கில் அவர் கொழும்பு சென்றிருப்பார். கொழும்பு சிம் எண்ணுக்குத் தொடர்பு கொண்டபோது அதுவும் இயங்கவில்லை. 11 மணி வாக்கில் இங்குள்ள சிம் எண்ணில் தணிந்த குரலில் அன்சாரி மனைவியுடன் பேசியுள்ளார். தான் சில காரணங்களால் இலங்கை செல்லவில்லை எனவும், ரவி என ஒருவர் வருவார் அவரிடம் தனது லேப்டாப், மெமரி கார்ட் ரீடர்கள் முதலியவற்றைக் கொடுத்தனுப்புமாறும் கூறி போனைத் துண்டித்துள்ளார். சற்று நேரத்தில் ரவி எனச் சொல்லிக் கொண்டு ஒருவர் வந்து லேப்டாப்பைக் கேட்டுள்ளார். சந்தேகம் கொண்ட மனைவி அன்சாரியைத் தொடர்புக் கொண்டபோது வந்துள்ள நபரிடம் லேப்டாப் முதலியவற்றைக் கொடுக்கச் சொல்லி போனைத் துண்டித்துள்ளார்.
அடுத்த நாள் காலை வரை அன்சாரியுடன் தொடர்பு கொள்ள இயலவில்லை. காலை 10 மணி அளவில் அன்சாரியிடமிருந்து போன் வந்துள்ளது. தான் கோவை செல்வதாகவும். தனது போனில் சார்ஜ் குறைந்து வருவதால் இனி பேச இயலாது எனவும் கூறித் தொடர்பைத் துண்டித்துள்ளார். அன்று(செப்.17) மாலை  தொலைக்காட்சிகளில் காட்டப்பட்ட செய்திகளிலிருந்தே குடும்பத்தினர் அன்சாரி கைது செய்யப்பட்டுள்ளதை அறிந்து அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
நடந்தது இதுதான்
காலை 7.30 மணி அளவில் திருச்சி விமான நிலைய இம்மிக்ரேஷன் போலீசின் ஒத்துழைப்புடன் கியூ பிரிவு போலீசார் அன்சாரியைக் கைது செய்து கொண்டு சென்றுள்ளனர். போர்டிங் பாஸ் எல்லாம் வாங்கியபின் இந்தக் கைது நடந்துள்ளது. அவரை என்கவுன்டர் செய்வது என்கிற அளவில் மிரட்டி செல்போனில் பேச வைத்து லேப்டாப் முதலியவற்றைப் பெற்றுள்ளனர். 17 மாலை திருச்சி நீதிமன்றத்தில் அன்சாரியை ஆஜர்படுத்தியுள்ளனர்.
கியூ பிரிவின் முதல் தகவல் அறிக்கையில் காணப்படும் முரண்கள்
1. பதினாறு காலை 7.30 மணி அளவில் திருச்சி விமான நிலையத்தில் வைத்துக் கைது செய்யப்பட்ட அவரை, அன்று இரவு 8 மணி அளவில் திருச்சி டோல்கேட் டி.வி.எஸ் அருகில் தஞ்சை செல்லும்  பேருந்து நிறுத்தத்திற்குப் பக்கத்திலுள்ள டாஸ்மாக் கடை அருகில் கைது செய்ததாகச் சொல்கிறது முதல் தகவல் அறிக்கை. ஓடிப் பிடித்து அவரைக் கைது செய்தனராம். அந்தப் பக்கத்திலுள்ள கடைகள் அனைத்தையும் எங்கள் குழு விசாரித்தது, அப்படியான ஒரு சம்பவம் அன்று நடக்கவே இல்லை என்பதை எல்லோரும் உறுதிப்படுத்தினர், ஆக ஒரு பகற் பொழுது முழுவதும் சட்ட விரோதக் காவலில் வைத்திருந்தது என்பது தவிர, முதல் தகவல் அறிக்கையில் ஏன் இந்தப் பொய்?
2. அன்சாரி மூலமாக பாகிஸ்தான் உளவுத் துறை பெற விரும்பியதாகச் சொல்லப்படும் தகவல்கள் யாவும் மிக எளிதில் கூகுள் முதலான இணையத் தளங்களில் கிடைப்பவை. எடுத்துக்காட்டாக வெலிங்டன் பாரக்சை பாகிஸ்தான் தூதர் சுபைர் கொடுத்த ப்ளாக்பெர்ரி செல்போனின் மூலம் காருக்குள் அமர்ந்தவாறு அன்சாரி படம் எடுத்து அனுப்பினாராம். வெலிங்டன் பாரக்ஸ் படம் கூகுளில் மிகத் தெளிவாகக் கிடைக்கிறது. செல்போனில் எடுக்கப்படும் படத்தைக் காட்டிலும் அது கூடுதல் விவரங்களைக் கொண்டது. தவிரவும் வெலிங்டன் பாரக்ஸ் பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் உருவாக்கப்பட்டது. அதனுடைய வடிவமைப்பு உலகறிந்த இரகசியம்.  செல்போனில் வெளியிலிருந்து படமெடுத்து இலங்கை வழியாகக் கடத்தப்பட வேண்டிய அளவுக்கு அது யாருமறியா ஒன்றல்ல. இன்னொன்றும் சிந்தனைக்குரியது. இலங்கை இராணுவத்திற்கு இந்திய அரசு வெலிங்டன் பாரக்சிலும் மற்ற இராணுவத் தளங்களிலும் பயிற்சி அளிக்கிறது. அவர்களுக்குக் கிடைக்காத என்ன இரகசியத்தை இந்தச் செல்போன் படங்கள் தந்துவிட இயலும்? இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையேயான இராணுவ உறவுகளை அறிவோம். Most Favoured Nation என்கிற நிலையில் அவை செயல்படுகின்றன என்பதையும் நாம் மனதில் கொள்ள வேண்டும்.
3. தவிரவும் தான் பதிவு செய்த ‘இரகசியங்களை சி.டி யில் பதிவு செய்து நேரடியாகக் கொண்டு கொடுக்க அன்சாரி இலங்கை சென்றார் என்பதும் நம்பும்படியாக இல்லை. முன்னதாகப் பலமுறை விமானப் பயணம் செய்துள்ள அன்சாரி, 16ந்தேதி அன்று விமான நிலையத்தில் கைப்பை பரிசோதனை செய்யப்படுவதைக் கண்டு அதிர்ச்சியடைந்து பயணத்தை ரத்து செய்து திரும்பினார் என்பதும் ஏற்றுக்கொள்ளுமாறு இல்லை.
4. தஞ்சைக்கு அருகில் உள்ள வல்லத்தைச் சேர்ந்த ராதா என்கிற ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரியிடம் அன்சாரி நெருங்கிப் பழகி இராணுவ இரகசியங்கள் பலவற்றைப் பெற்றார் எனச் சொல்லப்படுகிறது. ஏன் அந்த ராதாவை இதுவரை விசாரிக்கவில்லை? ஓய்வு பெற்ற இராணுவ வீரர்களிடமெல்லாம் இராணுவ இரகசியங்கள் இருக்கும் என்பதும் நம்பத் தகுந்ததாக இல்லை.
5. தூதரக அதிகாரிகளுக்கே  உரித்தான சிறப்பு உரிமைகளை உடையவர்களை எல்லாம் (Diplomatic immunity) வழக்கில் சேர்த்திருப்பதென்பது வழக்கை நீண்ட நாட்களுக்கு இழுத்தடிக்கும் நோக்குடன்  செய்யப்பட்டதாகவே உள்ளது.
6. செப்.21 மாலை அன்சாரியைப் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி அளித்தபோது அவர் எங்கு வைத்து விசாரிக்கப்படுகிறார் என்பது அவரது வழக்குரைஞர்களுக்குத் தெரிவிக்கப்பட வேண்டும் எனவும், தேவையானால் அவர் தன் வழக்குரைஞர்களைக் கலந்தாலோசிக்கலாம் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் அன்சாரி போலீஸ் கஸ்டடியில் எடுக்கப்பட்டது தொடங்கி மீண்டும் நீதிமன்றக் காவலுக்குக் கொண்டு வரப்படும் வரை  கியூ பிரிவு போலீசார் வழக்கறிஞருக்குத் தகவல் தெரிவிக்கவில்லை. செப்.16 ம் தேதி அன்று அன்சாரியின் மனைவியிடமிருந்து சட்ட விரோதமாகக் கைப்பற்றப்பட்ட லேப்டாப் முதலியவற்றை இந்த விசாரணையின்போது கைப்பற்றியதாகாக் காட்டுவதற்காகவே இப்படிச் செய்திருக்க வேண்டும்.
‘கியூ’ பிரிவு போலீஸ்
கியூ பிரிவு போலீஸ் என்பது 1970ல் வால்டர் தேவாரம் அதிகாரியாக இருந்தபோது நக்சலைட் கட்சியினர் குறித்த உளவுகளை அறிய உருவாக்கப்பட்ட ஒரு உளவு அமைப்பு. வெறும் உளவு அமைப்பாக இருந்த கியூ பிரிவிற்கு 1993ல் போலீஸ் அதிகாரம் கொடுக்கப்பட்டது. எனினும் அதில் பணியாற்றுபவர்களுக்குச் சீருடை கிடையாது. காவல் நிலையத்தில் பெயர்ப் பலைகைகள் கூட இருப்பதில்லை.
உளவுத் துறையும் காவல்துறையும் அவற்றின் நோக்கம், செயல்படும் விதம் உள்ளிட்ட எல்லா அம்சங்களிலும் வேறுபட்டவை. உளவுத் துறை என்பது ஒரு இரகசிய அமைப்பு.  ஒரு வகையில் சட்ட நெறிகளுக்கு அப்பாற்பட்ட அமைப்பும்கூட (clandestine organization). இது சேகரிக்கிற உளவுத் தகவல்களுக்கு (intelligence) சாட்சிய மதிப்பு (evidential value) கிடையாது. அதாவது சேகரிக்கப்பட்ட உளவுகளை அப்படியே சாட்சியமாக ஏற்க முடியாது. அமெரிக்க கூட்டரசுப் புலனாய்வு மையத்தின் (FBI) தலைவராக 48 ஆண்டுகள் பணி செய்த ஜே. எட்கார் ஹூவர் ஒருமுறை ஒரு இரகசியக் குறிப்பில் எழுதியது போல உளவுத் துறை  என்பது அரசுக்கு எதிரான செயற்பாடுகளையும் அமைப்புகளையும் சிதைத்து அழிக்கும் ஒரு நிறுவனம். இந்த அழிவுச் செயலை நியாயப்படுத்துவதற்காக  அது முன்வைக்கும் “குற்றச்சாட்டுகளுக்குப் பின்னால்  ஆதாரபூர்வமான உண்மைகள் உள்ளனவா இல்லையா என்பது முக்கியமில்லை”. சட்டபூர்வமற்ற படைகளை உருவாக்குவது, போட்டி ஆயுத இயக்கங்களை உருவாக்கி அவைகட்கு ஆயுதங்களையும் பயிற்சிகளையும் அளிப்பது முதலான செயல்களை இந்திய உளவு நிறுவனங்கள் செய்து வருவதை நாமறிவோம்.
காவல்துறை என்பது உளவு உள்ளிட்ட தகவகல்களின் அடிப்படையில், கைது செய்யப்படக் கூடிய குற்றத்தைச் (cognizable offence) செய்தவர் என ஒருவரைக் கருதினால்,   முறையாக முதல் தகவல் அறிக்கை ஒன்றைப் (FIR) பதிவு செய்து, நீதிமன்றத்தில் தாக்கல் செய்து கைதுசெய்தல், தேடுதல், பொருட்களைக் கைப்பற்றுதல் முதலானவற்றைச் செய்யும் ஒரு  நிறுவனம். அத்துடன் அதன் பணி முடிந்து விடுவதில்லை. நீதிமன்றத்தில் அது சேகரித்த சாட்சியங்களின் உண்மைத் தன்மையையும் அது நிறுவியாக வேண்டும்.
இந்த இரு நிறுவனங்களையும் ஒன்றாய் இணைப்பது  வழக்கமல்ல என்பது மட்டுமின்றி அது நீதியுமல்ல. இன்னும் அதிகமான அரசியல் பழிவாங்கல்களுக்கும் மனித உரிமை மீறல்களுக்கும் அது வழிவகுக்கும்.
கியூ பிரிவு போலீசும் இன்று இதே வடிவில் அமைக்கப்பட்டுள்ள தேசியப் புலானாய்வு மையமும் (NIA) இத்தகைய ஆபத்தை உள்ளடக்கியுள்ளன. உளவுத்துறையும் காவல்துறையும் ஒன்றாக இணைந்துள்ள வகையில் அரசியல் நோக்குடன் அவை செயல்படுகின்றன. இன்று இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் அதிக அளவில் அமெரிக்கத் திரைப்படத்திற்கெதிரான முஸ்லிம் போராட்டங்கள் நடைபெறுகின்றன. இந்தத் தருணத்தில் முஸ்லிம்களை தேசத்தைக் காட்டிக் கொடுப்பவர்களாகச் சித்திரிக்கும் நோக்குடன் கியூ பிரிவு அன்சாரி விஷயத்தில் செயல்பட்டிருக்கலாம் என எண்ணவும் இடமுண்டு, தவிரவும் கூடங்குளம் போராட்டம் வலுப்பெற்றுள்ள  சூழலில் தமிழகத்தின்மீது பயங்கரவாதத் தாக்குதல் என்கிற அச்சத்தைக் கிளப்பி விடுவது  தமிழகத்தின் மீதான காவல் கண்காணிப்பை மிகுதிப்படுத்துவதற்கான ஒரு உளவுத்துறை உத்தியாகவும் இருக்கலாம்.
கியூ பிரிவு போலீசார் அரசியல் நோக்கில் செயல்படுவதற்கு வேறு பல எடுத்துக்காட்டுகளும் உண்டு. கோவையில் செம்மொழி மாநாடு நடைபெற்றபோது விழுப்புரம் அருகிலுள்ள சித்தணி என்னுமிடத்தில், திருச்சி செல்லும் ரயில் பாதை குண்டு வைத்துச் சேதப்படுத்தப்பட்டது. உடனடியாக கியூ பிரிவு போலீசார் அப்பகுதியைச் சேர்ந்த தமிழ்த் தேசிய அமைப்புகளில் உள்ள இளைஞர்கள் சிலரைக் கைது செய்து சட்ட விரோதக் காவலில் வைத்துத் துன்புறுத்தினர். எங்களுடைய ஆய்வில் அந்த இளைஞர்களுக்கும் குண்டு வெடிப்பிற்கும் எந்தத் தொடர்புமிலை என்பது தெரிய வந்தது. இன்றுவரை அது தொடர்பாக யாரும் கைது செய்யப்படவில்லை. செம்மொழி மாநாட்டுச் சூழலில் கவனத்தை ஈர்ப்பதற்காக இந்தக் குண்டு வெடிப்பை உளவுத் துறைகளேகூடச் செய்திருக்கலாம் என அப்போது பரவலாகப் பேசப்பட்டது. இரண்டாண்டுகளுக்குப் பின் இப்போது மீண்டும் டெசோ மாநாடு நடந்துள்ள சூழலில், அவ் வழக்கை முடிக்கும் நோக்கில் கியூ பிரிவு போலீசார் அந்த இளைஞர்களை மீண்டும் விசாரித்து மிரட்டத் தொடங்கியுள்ளனர். இப்படி நிறைய எடுத்துக்காட்டுகளைச் சொல்ல முடியும்.
எமது கோரிக்கைகள்
1.முதல் தகவல் அறிக்கையில் கண்டுள்ள பொய்கள் மற்றும் சட்ட விரோதக் காவல், கைது விவரங்கள் வீட்டாருக்குத் தெரிவிக்கப்பட வேண்டும் என்பது உட்பட்ட டி.கே.பாசு வழக்கில் உச்சநீதிமன்ற நெறிமுறைகள் மீறப்ப்பட்டது ஆகியன குறித்து விசாரித்து பொறுப்பான அதிகாரி தண்டிக்கப்பட வேண்டும்.
2. ‘கியூ’ பிரிவு போலீசிடமிருந்து காவல்துறை அதிகாரம் பறிக்கப்பட வேண்டும்.
3.அன்சாரியின் வழக்குரைஞர் கென்னடியின் வீட்டிற்கு அவர் இல்லாத நேரத்தில் சென்று உளவுத்துறையினர் மிரட்டும் நோக்கில் விசாரித்துள்ளனர். எத்தனை பெரிய குற்றமானாலும், குற்றம் சாட்டப்பட்டவருக்குச் சட்ட பூர்வமான உதவிகளைச் செய்ய வழக்குரைஞர்களுக்கு உரிமை உண்டு உயர்நீதிமன்ற மூத்த வழக்குரைஞர் சங்கரசுப்பு அவர்களின் மகன் சென்ற ஆண்டு குரூரமாகக் கொலை செய்யப்பட்டதும், அவரது குடும்பத்தினரும் சக வழக்குரைஞர்களும் காவல்துறையே இதற்குக் காரணமாக இருக்கலாம் எனக் குற்றம் சாட்டுவதும் இங்கே நினைவுக்குரியது. வழக்குரைஞரின் வீட்டாரை உளவுத்துறை மிரட்டும் நோக்கில் விசாரித்ததை வன்மையாகக் கண்டிக்கிறோம்.

வெள்ளி, 21 செப்டம்பர், 2012

கள்ள தீர்மானங்கள் 2&3


செப்டம்பர் 12 ,2010 இல் நடந்த பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் என்று கையெழுத்து வாங்கப்பட்ட மினிட்புக்கின் நகல் .இதுதான் ஒரிஜினல் .



2011 ஜூலை 22 அன்று ஜும்மா வில் பள்ளிவாசலை விரிவாக்கம் பண்ண வக்ப் போர்டு அனுமதி வேண்டி அனைவரும் கையொப்பமிடுமாறு அறிவித்து பக்கம் 35 இல் கையெழுத்து பெற்ற பிறகு பக்கம் 33 இல் ஜமாஅத் பொதுக்குழு கூடியதாகவும் புனரமைப்பு கமிட்டி புதிதாக 14உறுப்பினர்களை தேர்ந்தெடுத்ததாகவும் அவர்களில் பசீர் மற்றும் அபுல்ஹசன் ஆகியோர்களை வங்கிவரவு செலவு பண்ண அனுமதிக்குமாறு வங்கியை வேண்டிகொள்வதாகவும் இந்த அயோக்கியத்தனத்தை மறைக்க முன்பு வரதட்சணை மாப்பிள்ளைக்கு அனுமதி இல்லை என்று கள்ள தீர்மானம் போட்டது போல இப்போதும் மக்களை முட்டாள்களாக்க அதோடு இரண்டாவது ஜமாத்துக்கு அனுமதி மறுத்தது போன்றும் ஒரு கள்ள தீர்மானம் நிறைவேற்றியுள்ளார்கள் .பக்கம் 35 இல் கையெழுத்து போட்டவர்களாக நீங்களும் இருக்கலாம் ..உங்கள் கையெழுத்து இருந்தால் இது போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டது உண்மையில் நடந்ததா என்று சிந்தித்து பாருங்கள் .இப்படி கள்ளத்தனமாக தீர்மானங்கள் போட்டவர்கள் கள்ளத்தனமாக வெற்றி பெற முயற்சி எடுத்திருக்க மாட்டார்களா?



சனி, 15 செப்டம்பர், 2012

கள்ள தீர்மானங்கள் பாருங்கள்

அஸ்ஸலாமு அலைக்கும் ,2010 செப்டம்பர் 12 இல் நடந்த பொதுக் குழுவில் கழிப்பறைகள் மட்டுமே கட்டப் போவதாக மக்கள்  மத்தியில் ஒரே ஒரு தீர்மானம் நிறைவேற்றுவதாக சொன்னார்கள்.ஆனால் புனரமைப்பு கமிட்டி நிர்வாகத்தையும் தாங்கள் ஏற்றுக் கொள்வதாகவும் ,வரதட்சணை வாங்கும் மாப்பிள்ளைகளுக்கு பள்ளிவாசலில் வைத்து நிக்காஹ் நடத்த அனுமதி மறுப்பதாகவும் எனபது போன்ற ஐந்து தீர்மானங்கள் நிறைவேற்றியதாக வும் மக்களை ஏமாற்றிய வஞ்சகத்தை பாருங்கள் .இந்த  கள்ள தீர்மானம் நிறைவேற்றிய பிறகு  எத்தனை வரதட்சணை திருமணங்கள் பள்ளிவாசலில் வைத்து நடந்தன என்று பட்டியல் போடவா?புனரமைப்பு கமிட்டி பணத்தை கைப்பற்றும் நடவடிக்கையை மறைக்கும் எண்ணத்தோடு  வரதட்சணை ஒழிப்பு என்ற கள்ள நாடகம் வேறு.நெல்லை மகாராஜா  நகரில் உள்ள I.O.B வங்கியில் பள்ளிவாசல் நிர்வாக கமிட்டி தங்களது  பெயரில் புனரமைப்பு கமிட்டி  பணத்தை மாற்றக் கோரி கொடுத்துள்ள ஆவணங்களில் பொதுக்குழு தீர்மானங்கள் பற்றி அவர்கள்  கொடுத்த நகல் வெளியிடப்பட்டுள்ளது 
7வது  பக்கத்தில் கமிட்டி உறுப்பினர்களின் கையெழுத்துகளும் 8வது பக்கத்தில் எட்டு நபர்களின் கையெழுத்துக்கள் மட்டுமே உள்ளன .இதுதான் பொதுக் குழுவா?
8வது பக்கத்தில் கையொப்பமிட்டுள்ள 8நபர்கள் கமிட்டி உறுப்பினர்களா? பொதுக் குழு உறுப்பினர்களா?
பக்கத்தின் மீது கிளிக் செய்து பெரியதாக்கி பார்க்க 

 மேலே உள்ள நகலில் எழுத்துக்கள் வாசிக்க இயலவில்லை என்றால் அதிலுள்ள செய்திகள் பிசகு இல்லாமல் கீழே  தரப்பட்டுள்ளது.
அஸ்ஸலாமு அலைக்கும்[வரஹ்]
  ஆறாம்பண்ணை முஹைதீன்பள்ளிவாசலின்  பக்கத்திலுள்ள மண்டபத்தில் வைத்து 2010 -ம் வருடம் செப்டம்பர் மாதம் 12 ம்தேதி ஞாயிற்று கிழமை மாலை அசர் தொழுகைக்கு பின் ஜமாஅத் தலைவர் கா.அ. முஹம்மது உதுமான் அவர்கள் தலைமையில் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது .
                    பொதுக்குழு கூட்டத்தில் கீழ் கண்ட தீர்மானங்கள் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.
1 .பள்ளிவாசல் விரிவாக்கம் செய்வதற்காக வக்ப்வாரியத்தை அணுகி தேவைப்படும் பணத்தை பெற முயற்சிகள் செய்வது,
2 .பள்ளிவாசல் புனரமைப்பு மற்றும் விரிவாக்கம் கமிட்டி நிர்வாகத்தை முஹைதீன் பள்ளிவாசல் ஜமாஅத் நிர்வாகமே ஏற்றுக் கொள்வது 
3 .நமது பள்ளிவாசலுக்கு தேவையான கழிப்பிடங்களை அதிகப்படுத்துவது ,
4 .முஹைதீன் பள்ளிவாசல் பைத்துல்மால் என்று ஏற்படுத்தி அதன்மூலம் நமதூர் மதரசாவை மேலும் மேம்படுத்துவது ,அதற்க்குண்டான நன்கொடை சந்தா வசூல் செய்ய ஆட்களை நியமிப்பது ,
5 வரதட்சணை ஒழிப்பின் முதல்படியாக வரதட்சணை வாங்கும் மாப்பிள்ளைமார்களுக்கு பள்ளிவாசலில்  வைத்து திருமணம் நடத்த [நிக்காஹ் ]அனுமதியை மறுப்பது என்று பொதுக்குழு தீர்மானிக்கிறது.
                          மேற்கண்ட தீர்மானங்களை பொதுக்குழு ஏகமனதாக ஏற்றுக் கொள்கிறது
தலைவர் ;கா.அ .முஹம்மது உதுமான் கையொப்பம்
உப தலைவர் ;K.S.பீர்முஹம்மது கையொப்பம்
செயலாளர்;S. பசிர் அஹ்மத்       '"              "
இணை செயலாளர் மீ.சா.அப்துர் ரஹ்மான் " "
துணை செயலாளர் ;S.A.அபுல் உசேன்  "       "
பொருளாளர் ; A .அப்துல் கனி                  "     "
S.இஸ்மாயில்                                      "   "
மு.அஹ்மது                          "   "
முஹம்மது அலி                 "              "
அ .முஹம்மது ஹனிபா    "    "
m .காஜா முஹிதீன்  "  "
T.M.A யாக்கூப்             "  "  
பொருளாளரும் துணை செயலாளரும்  இடம் மாறி கையெழுத்திட்டுள்ளனர் .என்ன அவசர கோலமோ !!! 

திங்கள், 3 செப்டம்பர், 2012

மோடி எடுபிடிகளின் பயங்கர செயல்களும் கோர்ட்டின் தீர்ப்பும்

 வினவு ,லிருந்து ,,,,


பாபு-பஜ்ரங்கி-மாயா-கோத்னானி
பாபு பஜ்ரங்கி – மாயா கோத்னானி
2002 குஜராத் இனப்படுகொலையிலேயே ஆகக் கொடியதான நரோதா பாட்டியா படுகொலையின்தீர்ப்பு வெளிவந்திருக்கிறது. குற்றம் சாட்டப்பட்டோரில் 32 பேர் தண்டிக்கப் பட்டிருக்கின்றனர் 29 பேர் விடுவிக்கப் பட்டிருக்கின்றனர். மோடியின் அமைச்சரவையில் பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சராக இருந்த மாயா கோத்னானிக்கு 28 ஆண்டுகள் சிறை. பாபு பஜ்ரங்கிக்கு சாகும் நாள் வரை சிறை.
கோத்ரா சம்பவத்துக்கு மறுநாளே நடைபெற்ற இந்தப் படுகொலையில் கொல்லப்பட்ட முஸ்லிம் மக்கள் 97 பேர். அவர்களில் 36 பேர் குழந்தைகள், 35 பேர் பெண்கள். 9 மாத கர்ப்பிணியான கவுசர் பீ என்ற பெண்ணின் வயிற்றைக்கிழித்து சிசுவை வெளியே இழுத்து வெட்டிக் கொன்ற குற்றவாளிகள்தான் தற்போது தண்டிக்கப்பட்டிருப்பவர்கள்.
சிறுமிகளும் பெண்களும் கணவன்மார்களின் கண் முன்னே, சகோதரர்களின் கண் முன்னே கும்பல் வன்புணர்ச்சிக்கு ஆளாக்கப்பட்டு பின்னர் கண்டதுண்டமாக வெட்டிக்கொல்லப்பட்டதும், படுகொலையெல்லாம் நடத்தி முடித்தபின், கொல்லப்பட்ட மக்களின் உடல்கள் அப்பகுதிக்கு அருகில் இருந்த ஒரு பாழுங்கிணற்றில் வீசப்பட்டதும் நரோதா பாட்டியாவில்தான்.
பாபு பஜ்ரங்கி ஒரு மனித மிருகம். “நான் பஜ்ரங்கி, நரோதா வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவன்” என்று பெருமையாக ஊடகங்களுக்கு பேட்டி கொடுத்தவன். “கொலைகளையும் வன்புணர்ச்சிகளையும் முடித்தபின்னர் நான் என்னை ஒரு ராணா பிரதாப் போல உணர்ந்தேன்” என்று தெகல்காவுக்கு பேட்டி கொடுத்தவன்.
இந்தப் படுகொலையின் சூத்திரதாரி (kingpin) என்று நீதிபதியால் சித்தரிக்கப்பட்டிருக்கும், மாயா கோத்னானிதான் இத்தனை அக்கிரமங்களையும் தலைமை தாங்கிய நடத்தியவள். பெண்கள் மீது நிகழ்த்தப்பட்ட எல்லா வன்முறைகளும் மாயாவின் கண் பார்வையில்தான் நடந்தன.
மாயா ஒரு கைனகாலஜிஸ்ட். தாய் சேய் நல மருத்துவர். 2002 இல் அந்த தொகுதியின் எம்.எல்.ஏ. வாக இருந்த மாயாவை அமைச்சராக்கி அவருக்கு பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை வழங்கினார் மோடி.
தீஸ்தா சேதல்வாத் உள்ளிட்ட பல அர்ப்பணிப்புணர்வு மிக்க வழக்குரைஞர்கள் மற்றும் அமைப்புகளின் முயற்சியால், நரோதா பாட்டியா வழக்கின் புலன் விசாரணையை உச்சநீதிமன்றம் தனது நேரடி கண்காணிப்பில் எடுத்துக் கொண்டு, சிறப்புப் புலனாய்வுக் குழுவை நியமித்த பின்னர்தான் விசாரணை நகர்ந்தது.
அமைச்சராக இருந்த மாயாவை போலீசு பாதுகாப்புடன் தலைமறைவாக அனுப்பி வைத்தார் மோடி. தன்னை மவுன்ட் அபுவில் தங்க வைத்து மோடி பாதுகாத்தாரென்று தெகல்கா வீடியோவில் வாக்குமூலமே கொடுத்திருக்கிறான் பஜ்ரங்கி. நரோதா பாட்டியா வெறியாட்டம் நடக்கும்போது, அங்கிருந்தபடியே மாயா கோத்னானி பலமுறை முதல்வர் அலுவலகத்துடன் தொலைபேசியில் பேசி, தங்கள் சாதனைகளை லைவ் ரிலே செய்திருக்கிறார்.
சாட்சி சொல்லிய பலர் படுகொலை செய்யப்பட்ட நிலையிலும், நீதி பெறுவதற்காக தம் உயிரைப் பணயம் வைத்திருக்கிறார்கள் இந்த வழக்கில் சாட்சி சொன்ன முசுலீம் மக்கள். இன்னமும் மோடியின் குஜராத்தில், அதே நரோதா பாட்டியாவில் குடியிருந்தபோதிலும், எள்ளளவும் அச்சமின்றி நீதிமன்றத்தில் சாட்சி சொன்ன பெண்களின் தைரியம்தான் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவதற்கு மிக முக்கியமான காரணம் என்கிறார் தீஸ்தா சேதல்வாத்.
அதுமட்டுமல்ல, கலவரத்தில் ஈடுபட்ட காலாட்படையினரை மட்டுமின்றி, அதற்கு தலைமை தாங்கி வழிநடத்தியவர்களையும் தண்டித்திருப்பது இத்தீர்ப்பின் சிறப்பம்சம் என்கிறார் தீஸ்தா.
கோத்ரா படுகொலையினால் ஆத்திரம் அடைந்த இந்துக்களின் எதிர்வினைதான் குஜராத் படுகொலை, என்ற வாதத்தை தனது தீர்ப்பில் நிராகரித்திருக்கிறார் நீதிபதி திருமதி. ஜியோத்ஸ்னா யாக்னிக்.  இது திட்டமிட்ட சதி என்று அழுத்தம் திருத்தமாக கூறியிருப்பதுடன், சதிக்குற்றத்துக்காக தண்டித்துமிருக்கிறார். அது மட்டுமல்ல, மோடியின் போலீசு மாயா கோத்னானியைப் பாதுகாத்தது என்பதையும் தனது தீர்ப்பில் பதிவு செய்திருக்கிறார் யாக்னிக்.
நரோதா தீர்ப்பு கூறும் செய்தியாக பா.ஜ.க கூறுவது என்ன? மோடியைப் பற்றி அவதூறு செய்தவர்களின் வாயை இத்தீர்ப்பு அடைத்திருக்கிறதாம். மோடி அரசின் நடுநிலையை நிரூபித்திருக்கிறதாம். ஆனால் இதை கோத்னானியும், பாபு பஜ்ரங்கியுமல்லவா சொல்ல வேண்டும்?
UthayamSeptember 4, 2012 at 12:02 am 
4
பாபு பஜ்ரங்கி ஒரு மனித குல விரோதி. இப்போது தூக்கு தண்டனை கொடுக்கப்பட்டுள்ள அஜ்மல் கசாப்புக்கு கொஞ்சம் கூட சளைத்தவனல்ல இந்த மனித மிருகம். இருவரும் அப்பாவிகளை கொன்று குவித்தவர்கள் என்ற நிலையில் சமமானவர்கள் என்றாலும் முஸ்லிம்கள் கொல்லப்படுவதை ரசித்து அனுபவித்து அவர்கள் துடிதுடித்து செத்து மடிவதை சந்தோசமாக பார்த்தது மட்டுமின்றி அதனை தெகல்கா நிருபரின் விடியோ முன் பெருமிதப்பட்டான். இவன் இப்படி முஸ்லிம்களை துடிக்க விட்டு கொல்லப்படுவதை ரசிக்குமளவிற்கு இவனை உருவாக்கியது “ஹிந்துத்துவ பயங்கரவாதம்”. மனித குல விரோதிகளை பாசறைகளில் வளர்த்து வரும் இந்து வகுப்புவாத இயக்கங்களை வெளிச்சத்திற்கு எந்த ஊடகங்களும் கொண்டு வர தயாரில்லை.
“அவர்களை(முஸ்லிம்களை) நாங்கள் விரட்டிச் சென்று ஒரு குழியில் தள்ளினோம். அவர்கள்அஞ்சி நடுங்கி ஒருவரையொருவர் கட்டிப்பிடித்துக் கொண்டனர். முந்தையதினம் சேகரித்த பெட்ரோலையும், டீசலையும் அவர்கள் மீது ஊற்றினோம். பின்னர் டயர்களை தீவைத்து அவர்கள் மீது வீசினோம்”- இரத்தத்தை உறைய வைக்கும் இந்த வார்த்தைகளுக்கு சொந்தக்காரன் தாம் பாபு பஜ்ரங்கி.
பாபு பஜ்ரங்கியின் கொள்கைகள்??
இந்த நாட்டில் முஸ்லிம்களைக் கொல்ல மத்தியரசே உத்தரவிடவேண்டும். அவர்களை கொல்ல, உயர் ஜாதி இந்துக்கள் வீதிக்கு வர தேவையில்லை. பழங்குடி மற்றும் தாழ்த்தபட்ட மக்களிடம், முஸ்லிம்களை கொன்று அவர்களின் சொத்துக்களை சூறையாடிக்கொள்ளுங்கள் என்று சொன்னால் போதுமாம், முஸ்லிம்கள் அனைவரும் மூன்று நாட்களில் இந்தியாவிலிருந்து துடைத்தெறியப்படுவார்களாம்.
கவுசர் பானு என்ற கர்ப்பினியின் வயிற்றைக் கிழித்து அந்த சிசுவை சூலாயுதத்தால் குத்தி தீயிலிட்டு பொசுக்கியவn இவன் தான். இதனையும் அந்த விடியோ முன் பெருமையாக சொன்னவன் “இன்னொரு வாய்ப்பை மோடி சாப் கொடுத்தாலும் சந்தோஷமாக அவர்களை (முஸ்லிம்களை) கொல்வேன்” என்றான். இந்த காட்சியை நேரில் கண்ட, கவுசர் பானுவின் கணவர் பித்து பிடித்தவர் போலானார். கடந்த வருடங்களில் நடை பிணமாக வாழ்ந்த அவருக்கு பாபு பஜ்ரங்கிக்கு எதிரான இந்த தீர்ப்பு பெரிய சந்தோசத்தை கொடுத்திருக்க வேண்டும். அவர் அழுததை பார்த்தவர்கள் எல்லாம் தங்களது உணர்வுகளை கட்டுப்படுத்த முடியாமல் கண்கள் கசிந்தனர்.
ஒரிஸ்ஸாவில் காவிமயமான பள்ளிக்கூடங்களில் கூட முஸ்லிம்களை வெறுப்பதை பாடப்புத்தகங்களில் பாடமாக வைத்திருக்கிறார்கள். அப்பட்டமான முஸ்லிம் வெறுப்பு என்பதை இந்த சங்பரிவார் பயங்கரவாதிகள் எப்படியெல்லாம் விதைக்கிறார்கள் என்று பார்ப்போம். ஒரு முஸ்லிம் தனது வாழ்நாளில் ஏழு மாடுகளை உண்கிறானாம். ஒரு முஸ்லிமை கொன்றால் எத்தனை மாடுகளை காப்பாற்ற முடியும் என்று கணிதப்பாடத்தில் கேள்வி வருகிறது. வெறுப்பை எங்கே விதைக்கிறார்கள் பாருங்கள். இங்கு முஸ்லிம்களுக்கு எதிராக பெரிய சதிவலை எல்லா வகையிலும் பின்னி வருகிறது காவி பயங்கரவாதம், அதில் வெற்றியும் பெற்று வருகிறது. இந்துத்துவ பயங்கரவாதத்தை ஊடகங்கள் வெளிக்கொணருவார்கள் என்று எதிர்பார்ப்பது அவநம்பிக்கையாக போய்விடுமோ என்ற அச்சம் ஏற்படுவதை தவிர்க்க முடியவில்லை. தீஸ்டா வுக்கு இந்திய முஸ்லிம் சமூகம் கடமைபட்டிருக்கிறது. சகோதரி.. உங்களின் போராட்ட குணத்திற்கும் நேர்மைக்கும் நன்றி.
கொடூர குற்றமும் புரிய ஊக்கப்படுத்தியதோடு அதற்கு மறைமுகமாக ஆதரவும் கொடுத்து தூண்டிவிட்டு , தூண்டப்பட்டவர்கள் செய்த மனித தன்மையற்ற செயல்களை மூடி மறைக்கவும் செய்த ஒரு நாயை செருப்பால் அடிக்காமல், வருங்கால பிரதமர் என்று துதி பாடும் வெறி பிடித்த கூட்டமா இந்தியாவின் எதிர்காலத்தை நிர்ணயிக்கப்போகிறது?? எவ்வளவு பெரிய ஒரு உண்மை வெளிப்பட்டிருக்கிறது ஆனால், காவிமயமான காவல்துறை இன்னமும் தீவிரவாதிகளை முஸ்லிம் சமூகத்தில் தான் தேடிக்கொண்டிருக்கிறார்கள். எத்தனை தடைகளை மீறி இந்த நரோடா தீர்ப்பு வந்திருக்கிறது என்று பின்னோக்கி பார்க்கும் போது தான் தெரிகிறது நியாயத்தின் குரல்வலையை நெறிக்க எத்தனை அநியாயவாதிகள் முயன்றிருக்கிறார்கள் என்று.