Arampannai ஜமாஅத் தலைவர் .
திரு .வைஸ் .கே.ஏ .முஹம்மது உதுமான்
பஞ்சாயத்துதலைவர்
திருமதி.ஹமிதாஹனிபா ;
கவுன்சிலர் .
திருமதி.சரிபாபசிர்

திங்கள், 21 மே, 2012

நபிமார்கள் பற்றி பேச உங்களுக்கு வெட்கமாக தெரியவில்லையா


நேற்று21/5/2012 நடந்த திருமண நிகழ்வில் கலந்து கொண்ட ஒரு மவுலவி மணமக்களை நபிமார்கள் போல் வாழ்த்துவதில் தவறு இல்லை என்று நபி ஸல் அவர்கள் காட்டி தந்த நடைமுறைகளுக்கு மாற்றமாக பேசினார் . திருமணத்தில் நபிமார்கள் வாழ்ந்தது போல வாழ்த்துவது உண்மை என்றால் வாழ்நாள் முழுவதும் நபிமார்கள் வாழ்ந்தது போல வாழுவது ஒருபுறம் இருக்கட்டும்.ஆனால் குறைந்த பட்சம் அந்த திருமணத்திலாவது முஹம்மது நபி ஸல் அவர்கள் திருமணம் செய்தது போல ,அவர்கள் மகள் பாத்திமா [ரலி]அவர்களுக்கு திருமணம் செய்து வைத்தது போல ,இன்னும் நபி[ஸல்] வாழும் பொழுதே நடந்த அவர்களது தோழர்கள் திருமணங்கள் போல இவர்கள் செய்தார்களா?
பைதது ஓதி எந்த நபிமார் மாப்பிளை அழைத்து வந்தார்கள்?
அல்லாஹும்மா அள்ளிப்னபைனஹுமா துஆ எந்த நபிமார்கள் ஓதிக்காட்டினார்கள்?அத்துடன் பதினைந்து நிமிட திருமண துஆ ஓதினார்கள்?
மாப்பிள்ளைக்கு பிஸ்மில்லாஹ் கூறி மாலை அணிவ்த்து மவுலவிகள் அதற்கு ஒரு துஆ ஒதுகிறார்களே  இது எந்த நபிமார் செய்தார்கள்?
பெண்வீட்டார் விருந்தை சாப்பிட்டு வருகிறார்களே இந்த மவ்லவிகள் ,எந்த நபிமார் பெண்வீட்டில் திருமண விருந்து என்னும் வலிமாவை வயிறு புடைக்க சாப்பிட்டார்கள்?
பெண்ணுக்கு தாலி கட்டுகிறார்களே இது எந்த நபிமார் செய்தார்கள்?
இன்னும் எத்தனையோ கேள்விகள் கேட்ட்கலாம் .

வரதட்சணை சீர் சீராட்டு ,பெண்வீட்டு விருந்து தாலிகட்டுதல் முதல் ஆரத்தி எடுத்தல் வரை அத்தனை மூட பழக்கங்களுடன் திருமணம் செய்த மவுலவிகளே ! நபிமார்கள் பற்றி பேச தூண்டிவிடுவதற்கும் பேசுவதற்கும் உங்களுக்கு வெட்கமாக தெரியவில்லையா?
யூசுப் [அலை]அவர்களுக்கும் அஜீஸின் மனைவிக்கும் திருமணம் நடந்ததாகவும் அவர்கள்போல  வாழ வாழ்த்துவதகா கதைக்கும் சொதப்பல் மவுலவிகளே  !
அந்த அஜீஸின் மனைவிக்கு சுலைகா என்று பெயர் வைத்து காதுகுத்தி கைமடக்கு வாங்கிய ஆளிமுசா யார்?
அஜீஸின் மனைவியான சுலைகா என்று சொல்லப்பட்ட அந்த பெண்ணுக்கும் யூசுப் [அலை] அவர்களுக்கும் திருமணம் நடந்தது என்றால் அஜிஸ் தலாக் சொல்லியிருக்க வேண்டும் .அஜிஸ் தலாக் விட்டாரா?இல்லை அந்த பெண் குலா விட்டாரா ?தீர்த்துவிட்ட ஜமாஅத் எது? பதினாலு பேர் கொண்ட ஆராம்பண்ணை கமிட்டி ஜமாத்தா?
யூசுப் நபி[அலை]அவர்களுக்கும் சுலைகா என்று சொல்லப்பட்ட பெண்ணுக்கும் திருமனம செய்ய பேசி முடித்து வெற்றிலை பாக்கு வாங்கிய  பெத்தா யார்?
யூசுப்நபி[அலை] அவர்களுக்கும் சுலைகா என்று சொல்லப்பட்ட பெண்ணுக்கும் பச்சை போட்டு பந்தக்கால் நாட்டி பாத்தியா ஓதியதும் அதன் பின்னர் நிக்காஹ் எழுதி அல்லிப்ன பைனஹும்மா 
துஆ ஓதிய மவுலான மௌலவி யாரோ?
அட மானங்கெட்ட மவுலவிகளே !அல்லாஹ்வுடைய இல்லத்தில் இருந்து இப்படி ஒரு கதையா?
திருமண சொற்பொழிவுகளில் வரதட்சணை பற்றி மணிகணக்கில் பேசியுள்ளோம்.மகர் பற்றி பேசுகிறோம் வலிமாபற்றி பேசுகிறோம் மற்றும் மாலை போன்ற மற்ற அனாச்சாரங்களை பற்றி பேசுகிறோம் .அதைவிடவா யூசுப் சுலைகா பற்றி அதிக நேரம் பேசியுள்ளோம் .நிருபிக்க முடியுமா?அதைப் பற்றியெல்லாம் வாய் திறக்காமல் யூசுப் சுலைகாவை நங்கள் முல்லைபெரியாறு கூடங்குளம் பிரச்னை போல பேசினோம் என்று உட்டாலடிக்கும் மட மவுலவி கூட்டமே ! முஸ்லிம்களின் கல்வி வேலை வாய்ப்பு பற்றி கடுகுஅளவேனும் சிந்திக்காமல் மவுலூது சோறுவிலே காலம் கழித்தது மறந்து போச்சா? தாயத்து விற்பதிலே தாலாட்டியது மறந்துவிட்டதா? முல்லை பெரியாறு தமிழகத்துக்கும் கர்நாடகத்துக்கும் உள்ள பிரச்னை .ஆனால் அஜீஸின் மனைவி ,யூசுப்நபி[அலை] அவர்கள் மீது கொண்ட கள்ளக் காதலை அங்கீகரித்து அஜிசுக்கு தெரியாமலே, யூசுப் நபி[அலை] அவர்களுக்கு திருமணம் செய்து வைத்து அவர்கள் போல வாழ்த்துவது கள்ளக் காதலை ஊக்குவித்தது ஆகாதா?
கூடங்குளம் பிரச்னையில் மவுலவிகள் பலர் உண்ணாவிரதம் இருந்து மவுழுத் சாப்பாட்டை தியாகம் செய்தது எலும்பும்தோலுமாக ஆகிவிட்டார்களாமே!அது  உண்மையா?

வெள்ளி, 11 மே, 2012

செங்கொடி ,


செங்கொடி ,நீங்கள் கொண்டு வந்த 
கேட்பொலி ஆதாரம் ;அவர்கள் ,”அடிங்க’ என்று சொன்னார்களா ?இல்லையா ? என்றால் அடிங்க என்று சொன்னார்கள் என்பதற்கு மட்டுமே 'கேட்பொலி'யை  ஆதாரமாக கொள்ள முடியும் .நியாய சிந்தனையுள்ள நடுநிலையாளர்கள் யாரும் அதை அடித்ததற்கு ஆதாரமாக கொள்ளமாட்டார்கள்.
2. காணொளி ஆதாரம் ;அடிக்கவில்லை என்பதற்கு 'காணொளி 'ஆதாரமாக மிகத் தெளிவாக உள்ளது . அடிக்கவேண்டும் என்ற சிநதனையில் சிலர் இருந்தார்கள் .ஆனால் உங்களின் நிலைக்கு , அதாவது அடிக்கப்பட வேண்டும் என்ற நிலைக்கு வந்துவிட்டீர்களே என்று பலர் வருத்தப்பட்டதாகா முல்லா தெளிவாகக் கூறுகிரார்..இதைவிட அடிக்கபடவில்லை என்பதற்கு என்ன ஆதாரம் வேண்டும்?வார்க்கப்பட்ட தோசையை திரித்து மீண்டும் இட்லி பண்ண முயற்சிக்க வேண்டாம்.
மேலும் அங்கே உள்ள துராப்சாவும் அதை ஆமோதிக்கிறார்..அவர் அடிபட்டிருந்தால் , சிலர் எனனை அடித்துவிட்டார்கள் ,இருப்பினும் எனக்கு அது பொருட்டல்ல ,நான் அவர்களின் உணர்வுகளை புரிந்து கொண்டேன்.நான் தாக்கப்பட்டதை விட அவர்களின் உணர்வுகளை நான் மதிக்கிறேன் என்று நாசுக்காக கூட அவர் தாக்கப்பட்டதை பதிவு செய்திருக்கலாம் ஆனால நடவாத ஒன்றை ஏன் சொல்லவேண்டும்? என்றே அவர் அங்கு ஏதும் கூறவில்லை.
நொண்டி ஆதாரங்கள் நொறுங்கிப்போன பிறகு உதாரணத்தை தேடி பூமியை சுத்திவருகிறார்.என்னிடம் கேட்பொலி இருக்கிறது ,காணொளி இருக்கிறது என்று போட்ட ஆதாரங்கள் பொய்த்துப் போனபிறகு இப்போது பைத்தியம் என்கிறார்.அது யாருக்கு என்பது போக போகத் தெரியும்.கம்யுனிச வெறிபிடித்து பேயாட்டம் போடும் செங்கொடி தனது காட்டுமிராண்டித்தனத்தை நிருபித்து வருகிறார்..இவருடைய உதாரணத்தை அவர்தான் மெச்சிக் கொள்ளவேண்டும்.இவர் படத்தைக் காட்டியது உண்மைதான் .ஆனால் அது வடிவேல் வடிவத்தில் உள்ளது.மக்களிடம் பணத்தை வாங்கி கடவுளை காட்டப்போவதாக காட்டிற்கு அழைத்து சென்று குன்றின் உச்சியை காட்டி அங்கே கடவுள் தெரிவதாக சொல்லி மக்களிடமிருந்து நழுவியது போல ,இவர் நழுவாமல் ,ஒரு சாப்பாடு தட்டு படத்தை காட்டி ,இதுதான் பூமியின் செயற்கைக்கோள் படம் இதை பாருங்கள் ,இது கோளவடிவத்தில் உள்ளது ,என்கிறார்.அங்கு சென்ற நான் நீவிர் காட்டியிருப்பது தட்டு படம் ,அது எப்படி கோள வடிவத்தில் இருக்கும் என்று கூறினால் எனனை பார்த்து பைத்தியம் என்கிறார்.
///தோழர் துராப்ஷாவின் கருத்துச் சுதந்திரத்தை மீறி காட்டுமிராண்டிகளால் தாக்கப்பட்டார். இது சரியா? தவறா? அது தவறானது, காட்டுமிராண்டித்தனமானது என்று ஆதாரத்துடன் காட்டியிருக்கிறேன். ///
ரசியாவில் ஸ்டாலின் ஆட்சியில் உள்ள கருத்து சுதந்திரத்தை கொஞ்சம் மக்கள் மத்தியில் காணொளி ,கேட்பொலி இல்லாவிட்டாலும் , உங்களது சோஷலிச இருப்பிலிருந்தாவது ஒன்றை காட்டலாம் இல்லையா? உழைக்கும் முஸ்லிம் மக்கள் மத்தியில் முஹம்மது நபி[ஸல்] அவர்களை போல படம் போட்டதற்கே கலவரம் நடந்ததை அறியமாட்டீர்களா? அவ்வாறிருக்க குர் ஆனில் இலாத ஒன்றை எங்கிருந்தோ கொண்டு வந்து ஏன் விமர்சிக்க வேண்டும்? முஸ்லிம்கள்,கம்யுனிஸ்ட்கள் மத்தியில் வந்து சோஷலிச உங்களது தெய்வம் ஸ்டாலினோடு ,ஸ்டாலின் கதை பாதி தெரிந்து மீதி முடிவு இல்லாவிட்டால் நித்தியானந்தா கதையோடு இணைத்து முடித்தால் அதற்கு பெயர் விமர்சனமா?கருத்து சுதந்திரமா?இல்லை முஸ்லிம்கள் அப்படி ஏதாவது செய்தார்களா? இஸ்லாத்தை விட்டு வெளியேறி விட்டீர்களா? எப்படியும் நாசமாக போகவேண்டியதுதானே ,இஸ்லாத்தை விமர்சித்தால் , அதை உழைக்கும் மக்கள் மத்தியில் கொண்டு சென்றால் ,அவர்கள் உணர்வுபூர்வமாக எதையாவது செய்ய வேண்டும் ,அதன் மூலம் பிரபல்யமாக வேண்டும் என்பதுதானே உங்களது குறிக்கோள் . எவனும் அடித்துக் கொண்டு சாகட்டும். நாங்கள குளிரறையில் உட்கார்ந்து கொண்டு கீபோர்டு தட்டி வேடிக்கையை ரசிக்கிறோம் என்பது பச்சையான மொள்ளமாறித்தனமா ஆகாதா? இவர் கருத்துப்படி , துராப்சா காட்டுமிராண்டித்தனமாக தாக்கப்பட்டார் என்று வைத்துக் கொள்வோம் .அப்போது இவரது தோழரை காப்பாற்ற இவர் என்ன செய்தார் ? இவர் தோழர் தாக்கப்படும் போழ்து ஓடோடி வந்து அவருக்கு உற்ற துணையாக இருக்க வேண்டுமா?இல்லையா ? அவர் விசாரிக்க அழைக்கப்பட்டால் அழைத்தவர்களை தொடர்பு கொண்டு அவரது கருத்து சுதந்திரம் பற்றி பேசியிருக்க வேண்டாமா?அவர்களுடன் வாதாடி உமது நியாயத்தை கேட்டிருக்க வேண்டாமா?அவாரில்லாமல் தன்னை காப்பாற்ற எடுத்த முயற்சியில் ,தந்திரத்தில் ,கொஞ்சமேனும் தோழருக்காக செய்யவில்லையே , அதுவும் ஒரு மொள்ளமாரித்தனம் என்பதாலே குறிப்பிட்டுள்ளேன் .
கருத்து சுதந்திரமா?இல்லாத ஒன்றை இட்டு கட்டுவது கருத்து சுதந்திரமா ? ஆதாரம் ,தாரம் இல்லாமல் தவிக்கிறது .இவர் ஆதாரத்துடன் காட்டிவிட்டாராம்.நீவிர் காட்டிய கானொளியில் சிலர் அடிக்க வேண்டும் என்ற சிந்தனையில் இருந்தார்கள் என்று தெளிவாக இருக்கிறது..நீவிர் காட்டிய கானொளியில் அவர் கண்ணியமாகவே காட்டப்பட்டுள்ளார். அதை நீவிர் கன்னியாக ,,,,,,இழுத்துக்கொண்டே போனால் எனெக்கென்ன ஆயிற்று?
////காணொளியில் தோழர் தாக்கப்பட்டார் என்று தான் அந்த முல்லா கூறியிருக்கிறார் என்பதை தெளிவாக நிறுவியிருக்கிறேன். ஒன்று அதை ஏற்றுக் கொள்ள வேண்டும் அல்லது மறுத்து அவரின் விளக்கங்களை கூற வேண்டும். மறுத்து கூற முடியவில்லை என்றால் ஏற்றுக் கொண்டதாகத்தான் பொருள்.///
அடிக்க வேண்டும் என்ற சிந்தையில் இருந்திருக்கிரறாக்கள் என்று முல்லா தெளிவாக கூறுவது தாக்கப்பட்டார் என்று கூறியிருப்பதாக அர்த்தமாம். அதையும் தெளிவாக நிருவியிருக்கிராராம் .கேழ்வரகில் நெய்வடிகிறது,,,,,,,,செங்கொடியும் அவரது செல்லகிளிகளும் தான் நக்கிக் கொள்ளவேண்டும்.மேலும் கேட்பொலியில் பிற சேர்க்கை சாத்தியம் என்றுதான் சொல்லியுள்ளேன் .அதை அவர் மறுத்தது தோடு நில்லாது அதையும் அவரே நிருபித்திருக்க வேண்டும்.இல்லைஎன்றால் நான் அக்கருத்தை வலியுறுத்தாத பொழுது அதை பிடித்து தொங்கி கொண்டிருப்பது ஏனோ? வேறு வாதங்களுக்கு வாய்ப்பில்லை என்று நினைத்துவிட்டாரோ?
அடித்தற்கு கேட்பொலி ஒரு ஆதாரமே இல்லை .அடிப்போம் என்று கூறினார்களா இல்லையா ?என்பதற்கே இந்த கேட்பொலியை ஆதாரமாகக் கொள்ளமுடியும் .
////அடிக்காதீர்கள் என்று சிலர் கூறுகிறார்கள் என்றாலே அவர்கள் அடிக்கப் பாய்ந்திருக்கிறார்கள் என்பதாகத்தான் இருக்கும். ///
அப்படிஎன்றால் அடிக்கவில்லை என்றுதானே அர்த்தம்.
////இல்லையென்றால் அடிக்காதீர்கள் என்று கூற வேண்டிய தேவை இல்லையே.///
அடிக்காதீர்கள் என்று அவரது உறவினர்கள் கூறியுள்ளதால் அடிக்க படவில்லை என்பதுதானே உண்மை.
//இவ்வளவு தூரம் முனைப்பு காட்டியவர்கள் அடிக்க மட்டும் செய்யவில்லை என்றால் அது எப்படி? அப்படி இப்ராஹிம் நம்ப விரும்புகிறார் என்பதால் நாமும் அப்படித்தான் நம்ப வேண்டுமா? பாவம் ///
இவ்வளவு தூரம் கேட்பொலி ,காணொளி எடுத்தவர்கள் ஒரு அடி விழுவதையாவது காட்டியிருக்க வேண்டுமா இல்லையா எப்படி? அப்படி அடித்ததாக செங்கொடி நம்ப விரும்புகிறார் என்பதால் அப்படித்தான் எல்லோரும் நம்பவேண்டுமா?
அடிப்பதை கானொளியில் படம்பிடித்துக் காட்டினாலும் அழுக்கை துடைத்ததாக கூறுவேணாம். . அடித்தால்தானே படம் எடுப்பதற்கு ?நடவாத ஒன்றை எப்படி படம் எடுக்க முடியும்? நல்லவேளை இந்தியாவில் செங்கொடி தெய்வம் ஸ்டாலின் ஆட்சி இல்லை .இல்லைஎன்றால் காணோளியாவது கேட்பொலியாவது ? காணமும் கேப்பையும்தான் கிடைக்கும் சிறையில் .
///இப்போதும் கூட நேரில் கண்ட ஒருவர் தோழர் தாக்கப்பட்டார் என்று கூறியிருக்கிறார். ///
என்னிடம் கூட நேரில் கண்டவர் ஒருவர் கூறினார் ,தாக்கப்படவில்லை என்று.
பரசுராமபுரம் பள்ளியில் கூறியது தீர்ப்பாம் ,முபாரக் பள்ளியில் கூறியது அறிவிப்பாம்.சே ,,உங்களது வியாக்கியானமே தனி அலாதி. முபாரக் பள்ளியின் அறிவிப்பிற்கு யாரும் கட்டுபடவில்லையாம் . பரசுராமபுரம் பள்ளியில் சொன்னபிறகு ஒருவரும் கோழிகடைக்கு செல்லவில்லையாம் .முபாரக் பள்ளியை மஹல்லாவாக கொண்டவர்கள் ஐந்து சதவீதம் இருப்பார்கள் .அதனால் அவர்கள் மட்டும் கட்டுபட்டிருப்பார்கள் .பரசுராமபுரம் பள்ளியை மஹல்லா வாக கொண்டவர்கள் 75 சதவீதம் பேர்கள் இருப்பார்கள் .அதனால் அனைவரும் கட்டுபட்டிருக்க வேண்டும்.ஆக இரண்டுமே அறிவிப்புகள் தான் .
///எந்த இரண்டு பேர் தம்பதியரோ அந்த இருவரோடும் தொடர்பில்லாத இன்னொருவர் மூன்று குழந்தைகள் இருக்கும் நிலையில் அந்த இருவரும் கணவன் மனைவி அல்லர் என்று கூறினால் அது அறிவிப்பா? தண்டனையா? ///
எந்த இரண்டு பேர் தம்பதியரோ அந்த இருவரும் அவர்களோடு தொடர்புடைய பெற்றோரும் தங்களை தம்பதியர்களாக்க எங்கே விண்ணப்பித்து கட்டணம் கட்டி அவர்கள் தம்பதியர்கள் என்று சாட்சிகளுடன் உறுதி செய்யபப்ட்டு ,அவர்களை தம்பதியர்கள் என்று அறிவித்தார்களோ , அந்த ஜமாத்தும் எதன் அடிப்படையில் அறிவித்ததோ ,அந்த அடிப்படையை ,அந்த தமபதியர்களில் ஒருவர் மீறினால் , அவர்களுக்கு அவர்கள் இஸ்லாத்தின் அடைப்படையில் கணவன் மனைவி அல்ல என்று கூறினால் அது அறிவிப்பே .தண்டனை அல்ல .அதன் பிறகும் அவர்கள் கணவன் மனைவியாக வாழ்ந்து அவர்களில் ஒருவருக்கு கசையடி கொடுத்தாலே தண்டனை.சிலர் அந்த அறிவிப்பையே தண்டனையாக கொண்டால் அதற்கு ஜமாஅத் பொறுப்பல்ல .
பிஸ்மி சொல்லி கற்பு அழித்ததாக கூறும் ஒருவர் தனது கடையில் பிஸ்மி சொல்லி கோழியை அறுக்க ஆள் வைத்திருக்கிறார் என்றால் அது கேலி செய்வதாக கொள்ளமுடியும் என்பதே எனது சொல்லின் சாராம்சம் .நான் நேரடியாக கூறினார் என்று கூறவில்லை.
///லூத் ஒரு லூஸு எனும் கட்டுரையில், கட்டுரையாளர் லூத்தை ஏன் லூஸ் என்று கூறுகிறார் என்பது மிகத் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது. தைரியமோ, திராணியோ இருந்தால் கட்டுரையாளர் கூறுவது தவறு என்று நிரூபித்துவிடுங்கள் பார்க்கலாம்.///
செங்கொடி பற்றி கதை எழுத ஆரம்பித்து ,அவரது இணைய தளம் மூடி விட்டு ஓடிவிட்டாதால் அதற்கு மேல் அவரைப்பற்றி ஒன்றும் தகவல் இல்லாததால் மீதி கதையை செந்தோழன் நிகழ்வுடன் முடித்தால் அதற்கு என்ன பெயர்? இருவரும் செந்தோழர்கள் தானே .
மீண்டும் மீண்டும் சொல்லுகிறோம் ,லூது நபி[அலை]அவர்களின் கதையை குர்ஆனில் சொல்லவில்லை. அவர்களின் வாழ்க்கையை ஒரு குறிப்பிட்ட குற்ற செயலுக்காக ,அதை கண்டித்து மக்கள் அதலிருந்து விடுபடவேண்டும் என்பதர்க்ககா ஒரு பாடமாக சொல்லப்பட்டுள்ளது.அதிலிருந்து உமது அல்ப புத்தி கதையை துவங்கினால் முஸ்லிம்கள் கண்டிக்கவே செய்வார்கள்.உங்களுக்கு தேவையானால் அது போன்ற படங்கள் நிறைய இருப்பதால் அங்கே உமிழ்ந்து கொள்ளுங்கள்.மேலும் உமர்[ரலி] பற்றிய ஹதிது புகாரியில் உள்ளது ஹதித் எண் அடுத்து தருவோம்
//பழைய ஏற்பாட்டில் இருப்பதையும் அதுவே குரானில் கூறப்பட்டிருக்கும் விதத்தையும் இதற்கு முன்னர் ஒப்பு நோக்கப்பட்டதே இல்லையா? ///
இதற்கு முன்னர் என்ன ஒப்பு நோக்கப்பட்டது?சொல்லுங்கள்.
///அப்பரசண்டிகளா! இப்படித்தான் பார்ப்பன பயங்கரவாதிகளும் நம்புகிறார்கள். அயோத்தியில் குறிபிட்ட இடத்தில் தான் ராமன் பிறந்தான் என்று. அதை மட்டும் ஏன் மறுக்கிறீர்கள். அப்படி என்றால் உங்கள் நம்பிக்கை மட்டும் கேள்வி கேட்கப்படக் கூடாது. அடுத்தவர் நம்பிக்கையை கிண்டிக் கிளறி ஆதாரம் கேட்பீர்கள் அப்படித்தானே. இதற்குப் பெயர்தான் பாசிசம். ///
செங்கொடியின் அறிவின் முதிர்ச்சி வெறித்தனம் ஆகி நாளடைவில் உளற ஆரம்பித்துவிட்டது.இதைத்தான் பட்டுகோட்டைக்கு வழி கேட்டால் கொட்டைபாக்குக்கு விலை சொல்வதாக சொல்லுவார்கள்.குர் ஆனில் என்ன உள்ளதோ ,அதை மட்டுமே நாங்கள் நம்புகிறோம் . அந்த நம்பிக்கைப் பற்றி இவரது தச்ச ஆள விமர்சிக்கட்டும் .துச்சமெனக் கொண்டு பதிலுரைப்போம். பைபிளில் உள்ள கதையை குரானின் தொடராக சேர்த்தது மொள்ளமாறித்தனமா இல்லையா? பைபிள் எங்களது நம்பிக்கையா? இதற்கும் ராமன் பிறந்த நம்பிக்கை எங்களுக்கு பொருட்டல்ல அதற்காக அங்குள்ள பள்ளிவாசலை இடித்து இடத்தை வன்முறையில் பெறுவதும் ஒன்றாகுமா?அடுத்தவர் நம்பிக்கைக்கு ஆதாரம் கேட்கவில்லை .குறிப்பிட்ட பள்ளிவாசலை இடிப்பதற்கும் ,அந்த இடத்தை அவர்களிடம் ஒப்படைப்பதற்கும் தான் ஆதாரம் கேட்கப்பட்டுள்ளது.மேலும் இதில் அரசியல் உலகறிந்த உண்மை .அதை தூக்கி கொண்டு இங்கே செங்கொடி வருவது ,தமிழன் போன்றவர்கள் இவர் புகழ் பாடவே .
அடுத்து இவர் அப்ரண்டிஸ் என்பதை நிருபிக்கிறார் .உட்கார்ந்துதான் சிறுநீர் கழிக்க வேண்டும் என்று நபி[ஸல்] அவர்கள் நடத்தை நெறியாக வற்புருத்தியுள்ளர்கள்.ஆனால் உட்கார்ந்தால் அசுத்தமாகிவிடும் என்று கருதப்பட்ட இடத்தில் நின்று சிறுநீர் கழித்துள்ளார்கள் .அதை போலவே ,உமர் [ரலி] அவர்கள் இன்ஜிலை வாசித்த சமயத்தில் மக்களுக்குஅது தேவை இல்லை எனப்பட்ட காலம் . முகம்மதுநபி[ஸல்] அதனால்அதை வாசிப்பதை நிறுத்த வேண்டுகிறார்கள்.ஆனால் இப்போது கஹ்பா நிலைக்குமா?குரான் இறைவேதமா ? என்று அவர்கள் இஸ்லாத்தை விமர்சிக்க ,அதை ஒழிக்க முனையும் பொழுது அவர்களோடு தர்கித்து உண்மையை மக்களுக்கு விளக்க அவர்களது வேதத்தை பாராயண செய்தது தவறில்லை.கம்யுனிசத்தில புரளும் தாங்கள் இஸ்லாத்தை இப்படி அரைகுறையாக அறிந்து கொண்டு விமர்சிப்பது அழகன்று .
துராப்சாவின் நிலைபாட்டை மக்கள் அறிந்திருந்தும் அவர் கடையில் கோழிக்கறி வாங்கினார்கள் என்று செங்கொடி கூறியதாலே ,அப்படி என்றால் துராப்சா ஆயிசா[ரலி]அவர்கள் பற்றி கூறிய இந்த கருத்தையும் மக்கள் அறிந்து இருந்தார்களா? என்று கேட்டிருந்தேன் .அதற்கு செங்கொடி என்ன பதில் சொல்லியிருக்க வேண்டும்? ஆம் அலல்து இல்லை என்றுதான் பதில் சொல்லியிருக்க வேண்டும் .ஆனால் அதை செய்யாமல் தனது குரூர புத்தியை வெளி கொணர்ந்து அந்த செய்தியின் உள்ள நுழைகிறார்.செந்தோழன் என்ற பெயரில் துராப்சா ஆயிசா பற்றி எழுதியதை வற்புருத்த்கிறார்.
முகம்மது நபி[ஸல்] அவர்கள் காலத்திலும் அவர்களுக்கு முந்தைய ,பிந்திய காலத்திலும் நடைமுறையில் உள்ள வழக்கபடியே ,.சபிய்யா [ரலி] அவர்கள் கைபர் போரில் கைதானபோளுது அவருக்கு வயது பதினேழி என்று கூறப்படுகிறது.ஆனால் அதற்கு முன்பே அவர் யூதராக இருக்கையிலே இரண்டு திருமணம் செய்துள்ளார் என்றால் அவரது முதல் திருமணம் என்ன வயதில் நடந்திருக்கும்?இந்த மாதிரி இளம் வயதிலே திருமணம் நடந்துள்ளதால் ,தோழிகள் மூலம் இல்லற வாழ்க்கையி அவர்கள் அறிந்து இருக்கவே முடியும்.அதனால் கற்பழிப்பு என்று கூறுபவர்கள் நிர்வாண ஊரில் கோவணம் கட்டியவன் தான் பைத்தியக்காரன் .ஆனாலும் முஹம்மது நபி [ஸல்] அவர்கள் பெண்களின் சம்மதத்துடனே திருமணம் என்று வரையருத்திருப்பதிளிருந்து ,உலகின் முதன் முதலாக பால்யவிவாகத்திர்க்கு முற்றுப் புள்ளி வைத்தது இஸ்லாமே .
மேலும் ,பெண்களை வலுகட்டாயமாக் அடைவது உங்களுக்கு அனுமதி இல்லை.[அல் குர் ஆன் 4;19 ]
///இப்ராஹிம் தலையைச் சுற்றி மூக்கைத் தொடுவது போன்ற அவசியமில்லாமல் அதை விட தெளிவாகவே குரான் வசனம் இருக்கிறது.///
மூக்கில் வடிவதை நேரடியாகவே துடைத்துக் கொள்ளுங்கள்
குழந்தை திருமணத்தை ஆதரிக்கும் வசனத்தை கூறுங்கள்.

வியாழன், 10 மே, 2012

"நான் குடிப்பதில்லை. ஏனென்றால் நான் முஸ்லிம் (I don't drink because I am a Muslim)"


EPL - ஆட்டநாயகன் பரிசு நிராகரிப்பு - பரபரப்பு



நம் அனைவர் மீதும் இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...ஆமீன்.

லகின் பிரசித்திப்பெற்ற கால்பந்தாட்ட போட்டிகளில் (tournament) இதுவும் ஒன்று. முக்கிய ஆட்டம். 2-0 என்ற கோல் கணக்கில் வென்ற அணியில் அந்த இரண்டு கோல்களையும் போட்டதால் ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்படுகின்றார் ஒருவர். ஆனால் பரிசாக கொடுக்கப்பட்ட பெரிய ஷாம்பைன் (மது) பாட்டிலை ஏற்க மறுத்துவிடுகின்றார்.

இது எம்மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை சற்றே சிந்தித்து பாருங்கள். இன்று உலக ஊடகங்கள் பலவும் இந்த செய்தியை பெரிய அளவில் பேசுகின்றன. கால்பந்தாட்ட உலகின் சூப்பர்ஸ்டார்களில் ஒருவராக கருதப்படும் இந்த வீரர், தன்னுடைய இந்த செயலால் பலரது பாராட்டுகளையும் பெற்று மக்கள் மனதில் சூப்பர்ஸ்டாராக உட்கார்ந்துவிட்டார்.

யார் இவர்?
எந்த போட்டி அது?
என்ன காரணம் கூறி பரிசை நிராகரித்தார்?

தற்போது நடந்துவரும் இங்கிலீஷ் ப்ரீமியர் லீக் (EPL) போட்டிகளில் தான் இந்த சம்பவம் சென்ற ஞாயிறுக்கிழமை நடந்தேறியுள்ளது. இந்த வீரரின் பெயர் யாயா டோரே (Yaya toure). ஐவரி கோஸ்ட் நாட்டை சேர்ந்த இவர் தற்போது மான்செஸ்டர் சிட்டி அணிக்காக ப்ரீமியர் லீக்கில் விளையாடி வருகின்றார். கடந்த 44 வருடங்களாக எந்தவொரு முக்கிய tournament-டையும் வென்றதில்லை மான்செஸ்டர் சிட்டி. தற்போது யாயா டோரே போன்றவர்களின் சிறப்பான ஆட்டத்தில் மகுடம் கிடைக்கலாம் என்று எதிர்ப்பார்க்கப்படுகின்றது. இன்னும் ஒரே ஒரு ஆட்டம் தான். அதில் வென்று விட்டால் சரித்திரம் படைக்கப்போகின்றது இந்த டீம்.

யாயா டோரே - இந்த மனிதர் கால்பந்தாட்ட ஹீரோக்களில் ஒருவராக பார்க்கப்படுகின்றார். மிகச் சிறந்த மத்தியகள ஆட்டக்காரரான இவர் பந்தை தன் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதிலும், நீண்ட தூரம் லாவகமாக பாஸ் செய்வதிலும், போட்டியில் ஆதிக்கம் செலுத்துவதிலும் கில்லாடி.

Yaya Toure (Image courtesy - goal.com)

ஆப்பிரிக்காவின் மிகச்சிறந்த கால்பந்தாட்ட வீரர் என்று விருதை (African Footballer of the Year) 2011-ஆம் ஆண்டு பெற்ற இவர், தேவைப்பட்டால் முன்னேறிச்சென்று தாக்குவதிலும் வல்லவர். இதனாலேயே இவருக்கு box-to-box player என்ற செல்லப்பெயரும் உண்டு.

கடந்த ஞாயிறுக்கிழமை newcastle அணியுடன் நடந்த முக்கிய போட்டியில் தன் அணிக்காக இரண்டு கோல்களை போட்டு வெற்றி தேடித்தந்தார் டோரே. இதற்காக ஆட்டநாயகனாக தேந்தேடுக்கப்பட்ட அவருக்கு பெரிய ஷாம்பைன் (champagne) பாட்டில் பரிசாக கொடுக்கப்பட்டது. இதனை ஏற்றுக்கொள்ள மறுத்து தன் பக்கத்தில் இருந்த சக வீரரிடம் கொடுத்துவிட்டார் டோரே.

என்ன காரணம்?

இதற்கு அவர் கூறிய காரணம், "நான் குடிப்பதில்லை. ஏனென்றால் நான் முஸ்லிம் (I don't drink because I am a Muslim)"

மது வாங்க மறுத்த காட்சியை கீழே காணலாம்.

EPL நிர்வாகத்தாருக்கு யாயா டோரேயின் இந்த செய்கை சங்கடத்தை தந்தாலும், இந்த நிகழ்வுக்கு பின்னணியில் மேலும் பல உண்மைகள் தெரியவந்தன. அதாவது, இம்மாதிரி நடக்கலாம் என்று முன்பே தாங்கள் யூகித்து பரிசை மாற்றுவது குறித்து ஆலோசனை செய்ததாக கூறி மேலும் பரபரப்பை உண்டாக்கியுள்ளனர் நிர்வாகத்தினர். இருப்பினும், ஷாம்பைன், வீரர்களால் மிகவும் விரும்பப்படும் பரிசு என்பதால் அதனை மாற்ற வேண்டாம் என்று இறுதியில் முடிவெடுத்ததாகவும் தெரிவித்துள்ளனர்.

தாங்கள் எண்ணியது போலவே தற்போது நடந்துள்ளதால், எதிர்காலத்தில் பரிசுகளில் மாற்றம் கொண்டு வர எண்ணியுள்ளனர். அதாவது, ஷாம்பைன் பாட்டிலுடன் பதக்கவில்லையும் சேர்த்து தர திட்டம் தீட்டியுள்ளனர். மது வேண்டாமென்னும் வீரர்களுக்கு பதக்கம் மட்டும் தரப்படும்.

மான்செஸ்டர் சிட்டி அணியின் முக்கிய வீரர்கள் பலரும் முஸ்லிம்கள் என்பதால் அவர்களுக்கென தனி தொழுகை அறை வசதியை அணி நிர்வாகம் ஏற்படுத்தி தந்துள்ளது இங்கே கவனிக்கத்தக்கது.

நட்சத்திரங்களின் செய்கைகள் அவர்களது ரசிகர்களை பாதிக்கும் என்பது உண்மை. அந்த வகையில் மதுவை நிராகரித்து தன் ரசிகர்களுக்கு ஒரு மிக சிறந்த முன்னுதாரணத்தை காட்டிவிட்டார் யாயா டோரே என்றால் அது மிகையாகாது.
இறைவன் நம்மை என்றென்றும் நேர்வழியில் நிலைநிறுத்துவானாக...ஆமீன்.

இறைவனே எல்லாம் அறிந்தவன்.

செவ்வாய், 8 மே, 2012

சாஜிபானு (22)ஐ.ஏ.எஸ்.


கேரள மாநிலம் மலபுரத்தைச் சேர்ந்த மாணவி சாஜிபானு (22). கும்பகோணத்தை அடுத்த கோவிலாச்சேரி அன்னை கல்லூரியில் எம்.பி.ஏ. பயிலும் இவர், இதே கல்லூரியில் பி.எஸ்.சி., ஐ.டி. பிரிவில் பாரதிதாசன் பல்கலைக்கழக அளவில் ஏழாமிடம் பெற்றவர். 
அகில இந்திய அளவில் 2,400 பேர் எழுதிய சிவில் சர்வீசஸ் தேர்வில், 910 பேர் வெற்றி பெற்றனர். இதில் இந்திய ஆட்சிப் பணி (ஐஏஎஸ்) தேர்வில் வெற்றி பெற்ற 170 பேரில், முதல் முயற்சியிலேயே 98-வது இடத்தைப் பிடித்த சாஜிபானுவுக்கு அந்தக் கல்லூரியில் திங்கள்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது. 
பின்னர் அவர் அளித்த பேட்டி: எனக்கு ஐ.ஏ.எஸ். ஆக வேண்டும் என்ற விருப்பம் இருந்தது. ஆனால், எனது பெற்றோர் அதை விரும்பவில்லை. எனது மாமா, சகோதர, சகோதரிகள், உறவினர்கள் மற்றும் கல்லூரித் தலைவர், செயலர், முதல்வர், பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் எனது விருப்பத்துக்கு ஆதரவு அளித்து ஊக்கப்படுத்தினர். 
இக்கல்வி நிறுவனத்தில் உள்ள நூலகம் மற்றும் ஆசிரியர்களிடமிருந்து பெற்ற தகவல்களைக் கொண்டு ஐ.ஏ.எஸ். தேர்வு எழுத முடிவு செய்தேன்.  அதன்படி, சைதை துரைசாமி நடத்தும் மனித நேய அறக்கட்டளை சார்பில் நடத்தப்படும் ஐ.ஏ.எஸ். பயிற்சி வகுப்பில் சேர்ந்து படித்தேன்.நான் ஐ.ஏ.எஸ். தேர்வுக்கு தயாராகி வந்தது எனது பெற்றோருக்குக் கூடத் தெரியாது. கல்லூரிக்கு கட்டுவதற்காக கொடுத்த செமஸ்டர் கட்டணத்தையே ஐ.ஏ.எஸ். தேர்வு எழுத செலவழித்தேன். மலையாளம் மற்றும் ஆங்கிலத்தில் தேர்வெழுதி, முதல் முயற்சியிலேயே வெற்றி பெற்றுள்ளேன். என்னுடைய ஐ.ஏ.எஸ். கனவை நனவாக்கியது தமிழகம்தான். தமிழக மக்களுக்கு சேவை செய்வதே எனது விருப்பம் என்றார் சாஜிபானு. கல்லூரி முதல்வர் மணி, தலைவர் அன்வர்கபீர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
-நன்றி : தினமணி.

சனி, 5 மே, 2012

மனைவியின் கடமைகள்


இஸ்லாம்
இல்லறக் கடமைகளில் முக்கியமான ஒன்று, கணவனுக்கு மனைவி கட்டுப்படுதல் ஆகும்.
சிலரை மற்றும் சிலரை விட அல்லாஹ் சிறப்பித்திருப்பதாலும், ஆண்கள் தமது பொருட்களைச் செலவிடுகிறார்கள் என்பதாலும் ஆண்கள் பெண்களை நிர்வாகம் செய்பவர்கள். கட்டுப்பட்டு நடப்போரும், அல்லாஹ்வின் பாதுகாவல் மூலம் மறைவானவற்றைக் காத்துக் கொள்வோருமே நல்ல பெண்கள். (அல்குர்ஆன் 4:34)
பெண்களை நிர்வகிப்பவர்கள் ஆண்கள் என்பதற்கு அல்லாஹ் இரண்டு காரணங்களைக் கூறுகிறான். ஒன்று, அவன் இயற்கையிலேயே ஆண்களை சிறப்புமிக்கவனாகப் படைத்துள்ளான். இரண்டாவது, பெண்களுக்கு ஆண்கள் செலவு செய்வதால்.
இந்த இரண்டு காரணங்களால் பெண்களை நிர்வகிக்கும் பொறுப்பை ஆண்கள் பெறுகிறார்கள். எனவே ஒரு குடும்பத்தை நிர்வகிப்பவன் ஆண் என்று அல்லாஹ் கட்டளையிட்ட பின்னர் பெண்கள் அதை ஏற்று நடப்பது கட்டயாமாகும்.
மார்க்கத்திற்கு முரண் இல்லாத அனைத்துக் கட்டளைகளுக்கும் கட்டுப்பட்டு நடப்பது மனைவியின் கடமையாகும். இதை அல்லாஹ் “கட்டுப்பட்டு நடப்போரும், அல்லாஹ்வின் பாதுகாவல் மூலம் மறைவானவற்றைக் காத்துக் கொள்வோருமே நல்ல பெண்கள்” என்று குறிப்பிடுகிறான்.
இந்த இறைக் கட்டளையை ஏற்று, மனைவி கணவனுக்குக் கட்டுப்பட்டு நடப்பது அவசியமாகும். கணவனுக்குக் கட்டுப்படுதல் பற்றி நபி (ஸல்) அவர்கள் பின்வருமாறு கூறுகிறார்கள்.
“நான் ஒருவருக்கு ஸஜ்தா செய்ய (சிரம் பணிய) கட்டளையிடுபவனாக இருந்திருந்தால் பெண்ணை அவள் கணவனுக்கு ஸஜ்தா செய்யுமாறு கட்டளையிட்டிருப்பேன்”
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: திர்மிதீ 1079
இந்த நபிமொழி கணவனுக்குக் கட்டுப்படுதலின் உச்சக்கட்டத்தைத் தெரிவிக்கும் செய்தியாகும். இந்தச் செய்தியைப் படிக்கும் பெண்கள் கணவனுக்குச் செய்ய வேண்டிய கடமைகள் எவ்வளவு முக்கியம் என்பதை புரிந்து கொள்வர்.
ஒழுக்கம் பேணுதல்
கணவனுக்குச் செய்ய வேண்டிய கடமைகளில் முதல் கடமை கணவனின் இடத்தில் மற்றொரு ஆணை வைக்காமல் இருப்பதாகும். தன் கற்பொழுக்கத்தைப் பேணுவதாகும். கணவனுக்குக் கடும் கோபத்தையும் வெறுப்பையும் ஏற்படுத்துவதில் முதலிடம் வகிப்பது இந்த ஒழுக்கம் சார்ந்த நடவடிக்கைகள் தான் என்பதை பெண்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.
சிலரை மற்றும் சிலரை விட அல்லாஹ் சிறப்பித்திருப்பதாலும், ஆண்கள் தமது பொருட்களைச் செலவிடுகிறார்கள் என்பதாலும் ஆண்கள் பெண்களை நிர்வாகம் செய்பவர்கள். கட்டுப்பட்டு நடப்போரும், அல்லாஹ்வின் பாதுகாவல் மூலம் மறைவானவற்றைக் காத்துக் கொள்வோருமே நல்ல பெண்கள். (அல்குர்ஆன் 4:34)
தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறும் தமது கற்புகளைப் பேணிக் கொள்ளுமாறும் நம்பிக்கை கொண்ட பெண்களுக்குக் கூறுவீராக! (அல்குர்ஆன் 24:31)
முஸ்லிமான ஆண்களும், பெண்களும், நம்பிக்கை கொண்ட ஆண்களும், பெண்களும், கட்டுப்பட்டு நடக்கும் ஆண்களும், பெண்களும், உண்மை பேசும் ஆண்களும், பெண்களும், பொறுமையை மேற்கொள்ளும் ஆண்களும், பெண்களும், அடக்கமாக நடக்கும் ஆண்களும், பெண்களும், தர்மம் செய்யும் ஆண்களும், பெண்களும், நோன்பு நோற்கும் ஆண்களும், பெண்களும், தமது கற்பைக் காத்துக் கொள்ளும் ஆண்களும், பெண்களும், அல்லாஹ்வை அதிகம் நினைக்கும் ஆண்களும், பெண்களும் ஆகிய அவர்களுக்கு அல்லாஹ் மன்னிப்பையும், மகத்தான கூலியையும் தயாரித்துள்ளான்.
(அல்குர்ஆன் 33:35)
“உங்கள் படுக்கையை அடுத்தவர்களுக்கு வழங்காமல் இருப்பதும் அவர்களின் அனுமதி இல்லாமல் மற்றவர்களை வீட்டில் அனுமதிக்காமல் இருப்பதும் பெண்களின் மீது கடமையாகும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அம்ர் பின் அல்அஹ்வஸ் (ரலி)
நூல்: திர்மிதீ 1083
பெண்கள் ஒழுக்கமாக வாழ்வது மிக முக்கியம் என்பதால் பெண்ணின் ஒழுக்கத்திற்குக் கேடு விளைவிக்கும் பல காரியங்களை இஸ்லாம் தடுத்துள்ளது. அதைப் பெண்கள் பேணி, கடைப்பிடித்தால் அவர்களது வாழ்க்கை ஒழுக்கமிக்கதாக அமையும்.
அலங்காரங்களை வெளிப்படுத்தக் கூடாது
ஆண்களைக் கவரும் வண்ணம் அலங்காரங்களை அந்நியர்களுக்கு வெளிப்படுத்தக் கூடாது. தன் அலங்காரங்களை கணவனுக்கு மட்டுமே காட்டும் வண்ணம் அமைத்துக் கொள்ள வேண்டும்.
தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறும் தமது கற்புகளைப் பேணிக் கொள்ளுமாறும் நம்பிக்கை கொண்ட பெண்களுக்குக் கூறுவீராக! அவர்கள் தமது அலங்காரத்தில் வெளியே தெரிபவை தவிர மற்றவற்றை வெளிப்படுத்த வேண்டாம். தமது முக்காடுகளை மார்பின் மேல் போட்டுக் கொள்ளட்டும். தமது கணவர்கள், தமது தந்தையர், தமது கணவர்களுடைய தந்தையர், தமது புதல்வர்கள், தமது கணவர்களின் புதல்வர்கள், தமது சகோதரர்கள், தமது சகோதரர்களின் புதல்வர்கள், தமது சகோதரிகளின் புதல்வர்கள், பெண்கள், தங்களுக்குச் சொந்தமான அடிமைகள், ஆண்களில் (தள்ளாத வயதின் காரணமாக பெண்கள் மீது) நாட்டமில்லாத பணியாளர்கள், பெண்களின் மறைவிடங்களை அறிந்து கொள்ளாத குழந்தைகள் தவிர மற்றவர்களிடம் தமது அலங்காரத்தை அவர்கள் வெளிப்படுத்த வேண்டாம். அவர்கள் மறைத்திருக்கும் அலங்காரம் அறியப்பட வேண்டுமென்பதற்காக தமது கால்களால் அடித்து நடக்க வேண்டாம். நம்பிக்கை கொண்டோரே! அனைவரும் அல்லாஹ்வை நோக்கித் திரும்புங்கள்! இதனால் வெற்றியடைவீர்கள்.
(அல்குர்ஆன் 24:31)
நபியே! (முஹம்மதே!) உமது மனைவியருக்கும், உமது புதல்வியருக்கும், (ஏனைய) நம்பிக்கை கொண்ட பெண்களுக்கும் முக்காடுகளைத் தொங்கவிடுமாறு கூறுவீராக! அவர்கள் (ஒழுக்கமுடைய பெண்கள் என்று) அறியப்படவும், தொல்லைப்படுத்தப்படாமல் இருக்கவும் இது ஏற்றது” அல்லாஹ் மன்னிப்பவனாகவும், நிகரற்ற அன்புடையோனாகவும் இருக்கிறான்.
(அல்குர்ஆன் 33:59)
மேற்கூறிய வசனங்கள் பெண்களின் ஒழுக்கம் தொடர்பாக அறிவுரை கூறும் வசனங்களாகும். “பெண்கள் அலங்காரத்தில் வெளிப்படையாகத் தெரிபவற்றைத் தவிர வேறு எதையும் வெளிப்படுத்தக் கூடாது” என்ற ஒரு அறிவுரை இந்த வசனம் நமக்கு எடுத்துரைக்கிறது.
அலங்காரம் என்பது இயற்கையாக ஒருவருக்கு அமைந்துள் ள அழகைக் குறிக்கும் சொல் அல்ல. மாறாக புறச் சாதனங்களால் ஏற்படுத்தப்படுகின்ற அழகே அலங்காரம் எனப்படும்.
உதட்டுச் சாயம் பூசுவது, நகைகளால் ஜோடனை செய்வது, மேக்கப்’ பொருட்களைப் பயன்படுத்துவது, ஆடைகளால் அழகை அதிகரிப்பது, இவை ஜீனத் என்ற சொல்ரில் அடங்கும்.
எனவே இவ்வசனத்தில் கூறப் படுகின்றவர்களைத் தவிர மற்றவர்களுக்கு முன் இது போன்ற உபரியான சாதனங்களால் அலங்காரம் செய்த நிலையில் பெண்கள் காட்சி தரக் கூடாது.
பெண்கள் தங்கள் முகங்களையும் முன் கைகளையும் தவிர மற்ற பாகங்களை அன்னிய ஆடவரிடமிருந்து மறைத்துக் கொள்ள வேண்டும் என்று இஸ்லாம் கட்டளையிடுகின்றது. இஸ்லாமிய வழக்கில் இது ஹிஜாப்’ என்றும் நம் நாட்டில் பர்தா’ புர்கா’ துப்பட்டி’ என்றும் குறிப்பிடப்படுகின்றது.
ஹிஜாப் என்பது பெண்ணின் பாதுகாப்புக்காகவும், அவர்களைக் கவுரவிப்பதற்காகவுமே ஏற்படுத்தப் பட்டுள்ளது என்பதை முதலில் இஸ்லாமிய பெண்கள் விளங்கிக் கொள்ள வேண்டும்.
ஆண்கள் பெண்களை ரசிக்கக் கூடியவர்களாகவும், பெண்கள் ஆண்களை ரசிக்கக் கூடியவர்களாகவும் படைக்கப்பட்டுள்ளதை நாம் அறிவோம். ஆயினும் இரு பாலரின் ரசனைகளும் வித்தியாசமானவை என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.
பெண்களின் நிறம், அல்லது அவர்களின் அழகு, அல்லது அவர்களின் இளமை, அல்லது உறுப்புகளின் திரட்சி ஆகியவையே ஆண்களால் ரசிக்கப்படுகின்றன. இதன் காரணமாகத் தான் குறைந்த ஆடையுடன் அல்லது கவர்ச்சியை வெளிப்படுத்திக் காட்டும் இறுக்கமான ஆடையுடன் பெண்கள் காட்சி தரும் போது அதை ஆண்கள் ரசிக்க விரும்புகின்றனர். திரும்பத் திரும்பப் பார்க்க விரும்புகின்றனர். விதி விலக்காக மிகச் சிலர் இருந்தாலும் பொதுவாக ஆண்களின் இயல்பு இது தான்.
பெண்களின் ரசனை இத்தகையது அன்று. ஆண்களின் உடலுறுப்புக்களின் கவர்ச்சியில் அவர்களின் ரசனை செல்வது கிடையாது. இதன் காரணமாகத் தான் ஆண்கள் எவ்வளவு குறைந்த அளவு ஆடையுடன் காணப்பட்டாலும் பெண்கள் பார்த்து ரசிப்பதில்லை. திரும்பப் பார்க்க வேண்டும் என்று அவர்கள் விரும்புவதில்லை. ஆண்களின் அழகையோ, கட்டுடலையோ, கொள்ளை கொள்ளும் நிறத்தையோ பெண்கள் விரும்ப மாட்டார்கள் என்று இதற்கு அர்த்தமில்லை. நிச்சயமாக இதையெல்லாம் பெண்கள் விரும்பவே செய்வர்.
கணவன் கட்டுடலுடன் இருக்க வேண்டும் என்று பெண்கள் விரும்புவது அவனிடம் முழுமையான ஆண்மை இருக்கும் என்று நம்புவதால் தான். கணவன் நல்ல அழகுடனும் நல்ல நிறம் கொண்டவனாகவும் இருக்க வேண்டும் என்று பெண்கள் விரும்புவது மற்ற பெண்களிடம் பெருமையடிக்கவும் தங்கள் வாரிசுகள் அழகுடன் பிறக்க வேண்டும் என்பதற்காகவும் தான். ஆபாச சினிமாக்கள், புத்தகங்கள் ஆகியவை பெண்களின் நிர்வாணக் கோலத்தை வியாபாரமாக்குவதில் இருந்தும், ஆண்களின் நிர்வாணக் கோலத்தை வியாபாரமாக ஆக்க முடிவதில்லை என்பதிரிருந்தும் கூட இதை அறியலாம். ஆண்களும் பெண்களும் கலந்து வாழ்கின்ற இவ்வுலகில் பெண்களின் விருப்பத்தை மட்டும் அடிப்படையாகக் கொண்டு அவர்களின் ஆடையைத் தீர்மானிப்பது தவறாகும். இவர்களைப் பார்த்து ரசிக்கின்ற ஆண்களின் மனோ நிலையையும் கருத்தில் கொண்டே அவர்களது ஆடைகள் தீர்மானிக்கப்பட வேண்டும் என்பதை இஸ்லாம் வலியுறுத்துகிறது. இரு சாராரும் கற்புடனும், ஒழுக்கத்துடனும் நடந்து கொள்ள இவ்வாறு கவனிப்பது மிக மிக அவசியமாகும்.
அழகான அன்னியப் பெண்ணொருத்தியிடம் எதை எல்லாம் பார்த்து ஒரு ஆண் ரசிக்க விரும்புகிறானோ அவை கண்டிப்பாக மறைக்கப்பட வேண்டும். ஏனெனில் அவளை முழுமையாக ரசிக்கும் உரிமை அவளது கணவனுக்கு மட்டுமே உரியதாகும். முறையின்றி பார்ப்பவனுக்கு இதில் எந்த உரிமையும் கிடையாது.
பார்ப்பதால் என்ன குறைந்து விடப் போகிறது என்ற கேள்வி தவறாகும். இதனால் ஏற்படக் கூடிய விளைவுகளை அன்றாட வாழ்வில் நாம் சந்திக்கவே செய்கிறோம். தம் மனைவியரை விட அதிக அளவு ரசிக்கத்தக்கவளாக ஒருத்தியைக் காண்பவர்களில் பலர் ரசிப்பதோடு நிறுத்திக் கொண்டாலும் சிலர் முறையின்றி அவளை அடையவும் அனுபவிக்கவும் முயல்வர். கற்பழிப்பு, கொலை வரை கூட இவர்கள் சென்று விடுவதை அன்றாடம் காண முடிகின்றது. இவ்வளவு மோசமாக நடக்காதவர்கள் கூட மனதளவில் அவளது நினைவிலேயே மூழ்கி விடுகின்றனர். தம் மனைவியருடன் ஒப்பிட்டுப் பார்த்து மனைவியின் மேல் உள்ள ஈடுபாட்டைக் குறைத்துக் கொள்கின்றனர்.
ஒழுக்க வாழ்வில், மிகவும் மோசமாக உலகம் பின்னடைந் திருப்பதற்கு முதற்காரணம், பெண்களின் அரைகுறை ஆடைகளும் ஆண்களைச் சுண்டி இழுக்கும் அலங்காரங்களுமே. எனவே ஒழுக்கத்தை பேணும் பெண்கள் மறைக்க வேண்டிய பகுதிகளை அந்நியர்களிடம் மறைப்பதும் அலங்காரங்களை கணவனுக்கு மட்டும் வெளிபடுத்துவதும் அவசியமாகும்.
ஆனால் இன்று அரைகுறை ஆடைகளுடன் அந்நியர்களுக்கு மத்தியில் பெண்கள் வருவதைப் பார்க்க முடிகிறது. வீட்டிற்கு வரும் வேலையாட்கள், பால்காரர்கள், கேபிள் காரர்கள் என்று ஏராளமான அந்நியர்களுக்கு முன்னால் நைட்டியை அணிந்து கொண்டு காட்சி தருவது மேற்கூறிய இறைவசனத்தின் ஒழுக்க அறிவுரைக்கு முரணானதாகும். இரவு நேர ஆடைகளை இரவு நேரத்தில் வீட்டில் மட்டுமே பயன்படுத்த வேண்டும். தெருவில் அந்த ஆடைகளை அணிந்து கொண்டே தண்ணீர் பிடிப்பது, மளிகைக் கடை, பால் கடைகளுக்கு போவது ஒழுங்கீனமாகும்.
சில பெண்கள் பர்தா அணியாமல் மெல்லிய சேலைகளை அணிந்து கொண்டு வெளியில் சென்று வருவதும் இஸ்லாமிய ஒழுக்க அறிவுரைக்கு மாற்றமானதாகும்.
இரு பிரிவினர் நரகவாசிகளில் அடங்குவர். அந்த இரு பிரிவினரையும் நான் பார்த்ததில்லை. (முதலாவது பிரிவினர் யாரெனில்) மக்களில் சிலர் பசு மாட்டின் வாலைப் போன்ற (நீண்ட) சாட்டைகளைத் தம்மிடம் வைத்துக் கொண்டு, மக்களை அடி(த்து இம்சி)ப்பவர்கள். (இரண்டாவது பிரிவினர் யாரெனில்) மெல்லிய உடையணிந்து தம் தோள்களைச் சாய்த்து (கர்வத்துடன்) நடந்து (அந்நிய ஆடவர்களின் கவனத்தை) தன் பால் ஈர்க்கக் கூடிய பெண்கள் ஆவர். அவர்களது தலை (முடி) கழுத்து நீண்ட ஒட்டகங்களின் (இரு பக்கம்) சாயக் கூடிய திமில்களைப் போன்றிருக்கும். அவர்கள் சொர்க்கத்தில் நுழைய மாட்டார்கள். (ஏன்?) சொர்க்கத்தின் வாடையைக் கூட நுகர மாட்டார்கள். சொர்க்கத்தின் நறுமணமோ இவ்வளவு இவ்வளவு பயணத் தொலைவிலிருந்தே வீசிக் கொண்டிருக்கும்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: முஸ்லிம் 4316
மேற்கூறிய திருக்குர்ஆன் வசனங்கள், நபிமொழிகளைக் கவனத்தில் கொண்டு ஒழுக்கத்தை முஸ்லிம் பெண்கள் மேற்கொள்ள வேண்டும்.

tntj.net என்ற தளத்திலிருந்து….