Arampannai ஜமாஅத் தலைவர் .
திரு .வைஸ் .கே.ஏ .முஹம்மது உதுமான்
பஞ்சாயத்துதலைவர்
திருமதி.ஹமிதாஹனிபா ;
கவுன்சிலர் .
திருமதி.சரிபாபசிர்

செவ்வாய், 8 மே, 2012

சாஜிபானு (22)ஐ.ஏ.எஸ்.


கேரள மாநிலம் மலபுரத்தைச் சேர்ந்த மாணவி சாஜிபானு (22). கும்பகோணத்தை அடுத்த கோவிலாச்சேரி அன்னை கல்லூரியில் எம்.பி.ஏ. பயிலும் இவர், இதே கல்லூரியில் பி.எஸ்.சி., ஐ.டி. பிரிவில் பாரதிதாசன் பல்கலைக்கழக அளவில் ஏழாமிடம் பெற்றவர். 
அகில இந்திய அளவில் 2,400 பேர் எழுதிய சிவில் சர்வீசஸ் தேர்வில், 910 பேர் வெற்றி பெற்றனர். இதில் இந்திய ஆட்சிப் பணி (ஐஏஎஸ்) தேர்வில் வெற்றி பெற்ற 170 பேரில், முதல் முயற்சியிலேயே 98-வது இடத்தைப் பிடித்த சாஜிபானுவுக்கு அந்தக் கல்லூரியில் திங்கள்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது. 
பின்னர் அவர் அளித்த பேட்டி: எனக்கு ஐ.ஏ.எஸ். ஆக வேண்டும் என்ற விருப்பம் இருந்தது. ஆனால், எனது பெற்றோர் அதை விரும்பவில்லை. எனது மாமா, சகோதர, சகோதரிகள், உறவினர்கள் மற்றும் கல்லூரித் தலைவர், செயலர், முதல்வர், பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் எனது விருப்பத்துக்கு ஆதரவு அளித்து ஊக்கப்படுத்தினர். 
இக்கல்வி நிறுவனத்தில் உள்ள நூலகம் மற்றும் ஆசிரியர்களிடமிருந்து பெற்ற தகவல்களைக் கொண்டு ஐ.ஏ.எஸ். தேர்வு எழுத முடிவு செய்தேன்.  அதன்படி, சைதை துரைசாமி நடத்தும் மனித நேய அறக்கட்டளை சார்பில் நடத்தப்படும் ஐ.ஏ.எஸ். பயிற்சி வகுப்பில் சேர்ந்து படித்தேன்.நான் ஐ.ஏ.எஸ். தேர்வுக்கு தயாராகி வந்தது எனது பெற்றோருக்குக் கூடத் தெரியாது. கல்லூரிக்கு கட்டுவதற்காக கொடுத்த செமஸ்டர் கட்டணத்தையே ஐ.ஏ.எஸ். தேர்வு எழுத செலவழித்தேன். மலையாளம் மற்றும் ஆங்கிலத்தில் தேர்வெழுதி, முதல் முயற்சியிலேயே வெற்றி பெற்றுள்ளேன். என்னுடைய ஐ.ஏ.எஸ். கனவை நனவாக்கியது தமிழகம்தான். தமிழக மக்களுக்கு சேவை செய்வதே எனது விருப்பம் என்றார் சாஜிபானு. கல்லூரி முதல்வர் மணி, தலைவர் அன்வர்கபீர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
-நன்றி : தினமணி.

1 கருத்து:

முஹம்மத் ஷஃபி BIN அப்துல் அஜீஸ் சொன்னது…

அஸ்ஸலாமு அலைக்கும் சகோ, இஸ்லாம் பற்றிய அவதூறான பதிவுக்கு தாங்கள்(S.Ibrahim) சென்று பின்னூட்டமிடவேண்டாம் என கேட்டுகொள்கிறேன்.படிப்பதோடு நிறுத்திகொள்ளுங்கள் அவர்களுக்கு விளக்கம் கொடுப்பதற்க்காக அவர்களுடைய தளத்தில் பின்னூட்டமிட்டு உங்கள் நேரத்தை வீணக்கிக்கொள்ளவேண்டாம்.அவர்கள் விளக்கம் பெறுவதற்க்காக தளத்தை நடத்தவில்லை அங்கு வாசிப்பவர்களும் விளக்கத்தை கேட்பதாக இல்லை.நீங்கள்தான் ஒரு தளத்தையே நிர்வகிக்கின்றீர்களே அவதூறான பதிவுக்கு உங்களுடைய தளத்தில் எதிர்பதிவு போடுங்கள்.