ஊரெல்லாம் திரண்டு வந்து அவனை பாராட்டினார்கள்.மாலை அணிவித்தார்கள். முசாபா செய்தார்கள்.முலாகத் பண்ணினார்கள்.அவனை தாக்க வந்த சிங்கத்தை எதிர்த்து,அதனுடன் கட்டி புரண்டு போராடி,அதை அடக்கி மரத்தில் கட்டி போட்டுவிட்டான் அந்த வீரன்.அதே போன்று அடுத்து வந்த புலியுடனும் சண்டை போட்டு அதையும் வென்று மரத்தில் கட்டி போட்டான். மக்களும் அவனது வீரத்தைக் கண்டு அவனை பாராட்டி,மாலைகளை அணிவித்து தங்களது மகிழ்ச்சிகளை பகிர்ந்து கொண்டனர்.இந்த நிகழ்வுகளை பார்த்துக் கொண்டிருந்த ஒரு பண்ணிக்கு உடன் ஒரு ஐடியா வந்தது, உடன் தனது சகாக்களிடம் நான் இந்த வீரனை தோற்கடித்து காட்டுகிறேன் பார் என்று கூறி,பக்கத்தில் எங்கோ சென்று வந்து களத்தில் இறங்கிவிட்டது.
அந்த வீரனும் தன்னை எதிர்த்து தன்னிடம் சண்டை போட பண்ணி வருவதை பார்த்தான்..அவன் வீரனாக மட்டுமல்ல விவேகனாகவும் இருந்திருந்தால், பண்ணியைக் கண்டு அவன் பயந்து ஓடியிருக்க வேண்டும்.ஆனால் , அவனோ வெறும் வீரன் மட்டும் ஆவான். அதனால் தான் அவன் பண்ணியைக் கண்டதும் ,நான் சிங்கத்தை வென்று கட்டி போட்டுள்ளேன்,புலியை வென்று கட்டிப் போட்டுள்ளேன்.இதன் பிறகும் இந்த பண்ணிக்கு என்ன திமிர் இருந்தால் என்னுடன் மோத வரும்? நான் சும்மா விடுவேனா பார்,என்று பண்ணியுடன் கட்டி புரண்டு சண்டை போட்டு அதை மரத்தில் கட்டிபோட்டான்.ஆனால் இந்த சமயத்தில் அவனை யாரும் பாராட்ட வில்லை.அவன் அருகில் கூட யாரும் நெருங்காமல் ஓடினர். வீரனும் நிலைமையை புரிந்து கொண்டு ஆற்றுக்கு ஓடினான் .இதை பார்த்த பண்ணி ,சிங்கமும் புலியும் சோகத்தில் இருக்க,மகிழ்ச்சியுடன்,' நான் வென்று விட்டேன்" என்று சிரித்ததாம். உடன் சிங்கமும் புலியும்,அவனல்லவா வென்று உன்னை மரத்தில் கட்டி போட்டுள்ளான்.நீ எப்படி வெற்றி பெற்றதாக கூறுகிறாய்,என்று கேட்டனவாம்.அதற்கு பண்ணி கூறியதாம்,'உங்களுடன் மோதி வென்ற பிறகு வீரனுக்கு மாலைகளை போட்டார்கள்,பாராட்டு கூறினார்கள். கைகளை குலுக்கி கட்டி பிடித்து முலாகத் பண்ணினார்கள் .சிங்கத்தை வென்ற எங்கள் சிங்கமே!தங்கமே! என்றார்கள். புலியை அடக்கி ஆண்ட இளம் புலியே! புயலே!என்றார்கள்.ஆனால் என்னிடம் மோதிய பிறகு யாராவது பக்கத்தில் வந்தார்களா?யாராவது பண்ணியை வென்ற பண்ணியே! என்று புகழ்ந்தார்களா? பாராட்டினார்களா? கைகளை குலுக்கி முசாபாஹ் செய்தார்களா? முலாகத்பன்னினார்களா? நான் மோதும் முன்பு நன்றாக சாக்கடையில் குளித்து விட்டு நேரடியாக அவனிடம் மோதினேன். அவனும் கட்டி புரண்டான்.இப்போது என்மீதுள்ள சாக்கடை களெல்லாம் அவன் மீது படிந்து விட்டது நான் சுத்தமாகி விட்டேன்.அவன் மீதுள்ள சாக்கடை கண்டு மக்கள் யாரும் பக்கத்தில் வராமல் ஓடி விட்டார்கள். வீரனும் ஆத்துக்கு ஓடிவிட்டான். இப்போது உங்கள் இருவர்களையும் கட்டிப் போட்ட கையிற்றை அவிழ்த்து விட்டு உங்கள் இருவர்களையும் நான் காப்பாற்றிவிட்டான். இப்போது சொல்லுங்கள.நான் தானே வெற்றி பெற்றுள்ளேன் என்று பெருமை பேசியதாம்.
நான் இப்படிப்பட்ட விவேகமற்ற வீரனாக இருக்க விரும்பவில்லை..நான் இதை எதற்கு சொல்லுகிறேன் என்றால் ,,,,,,,,,,,,,,,,,புரிவோர் புரிந்து கொள்ளட்டும்.
மஞ்ச மாக்கான் சொன்னது…
மற்றவர்களை மனநோயாளி என்று குறிப்பிடுகிறீர்களே உங்கள் குடும்பத்தினர்களே உங்களைப் பற்றி
குறிப்பிடும்போது அப்படித்தான் பேசிக்கொள்கிறார்கள் என்பது உங்களுக்கு தெரியுமா?
குறிப்பிடும்போது அப்படித்தான் பேசிக்கொள்கிறார்கள் என்பது உங்களுக்கு தெரியுமா?
மாக்கான் என்றால் பள்ளி,கல்லூரி நண்பர்களுக்கிடையில் அரை வேக்காடுகளை மாக்கா[ன்] என்று சொல்லுவதுண்டு.மீசை தாடி வளரக் கூடாது என்பதற்காக சில ஆண்கள் மஞ்சள் தேய்த்து குளிப்பார்கள்.அவர்களைத்தான் மஞ்ச மாக்கான் என்பார்கள்..நீங்கள் தன்னைத்தானே மஞ்ச மாக்கான் என்று சொல்லியிருப்பது என்ன அர்த்தத்திலோ!நான் மனநோயாளிகள் என்று குறிப்பிட்டது இருவர்களை.அதில் ஒருவருக்காக நீங்கள் வாதாடி வந்துள்ளீர்கள்நான் எப்போதும் யாரையும் புண்படுத்தியது இல்லை.என் மீது அபாண்டமாக ஒரு பழியை,அவருக்கு எந்த வகையிலும் தொடர்பு இல்லாத,அதாவது ,நான் இரண்டு லட்ச ரூபாய் கையாடல் பண்ணிவிட்டதாகவும் அதனால் என் மீது வழக்கு போடப்பட்டுள்ளதாகவும் இன்னும் சில நாட்களில் உள்ளே தள்ளி விடுவார்கள் என்றும் ம.அ.அலுவலர் ஒருவரிடம் யார் கூறினாரோ அவரைத்தான் நான் அவ்வாறு கூறியுள்ளேன்.அந்த கூற்றில் கடுகளவேனும் உண்மை இருந்தால் அவரை நிருபிக்கத்தயாரா? என்பதை மானம் வரும் வகையில் கேட்டிருப்பேன்.ஆனால் முழுக்க முட்டாள்தனமான குற்ற சாட்டு என்பதால் ,அவருக்கும் எனக்கும் எந்த பகை இல்லாத காரணத்தில் அவசியம் இல்லாமல் என் மீது அவதூறு கூறியுள்ளதால் அவரை மன நோயாளி என்று அழைத்தாலே சரியாக இருக்கும் என நம்புகிறேன்.
நீங்கள் எந்த உறவுக்காக,எந்த உதவியும் செய்யாத ஒருவருக்காக வாதாடி வந்தீர்களோ,உங்களுக்கும் அவருக்கும் என்ன உறவோ,அதே போன்று எனக்கும் உறவுடன் உள்ள ஒருவர் ,அநேக உதவிகள் செய்த என்னை மன நோயாளி என்று சொல்லி மகிழ்ச்சி கொள்வதில் எனக்கு ஒன்றும் வருத்த மில்லை.இறைவன் அறிவான் யார் மன நோயாளி என்பதை .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக