Arampannai ஜமாஅத் தலைவர் .
திரு .வைஸ் .கே.ஏ .முஹம்மது உதுமான்
பஞ்சாயத்துதலைவர்
திருமதி.ஹமிதாஹனிபா ;
கவுன்சிலர் .
திருமதி.சரிபாபசிர்

திங்கள், 16 மே, 2011

ஓட்டை விழுந்த ஒற்றுமையும் பஞ்சராகப் போகும் பஞ்சயத்துதேர்தலும்[இன்சா அல்லாஹ்}]


அன்பு ஆறாம்பண்ணை  சகோதரர்களுக்கு ,அஸ்ஸலாமு அழைக்கும் .
தமிழ்நாடு தவ்ஹித் ஜமாஅத் வரும் உள்ளாட்சி தேர்தலில் பங்கு பெறாது,அமைப்பின் பேரில் யாரையும் ஆதரிக்காது.நிர்வாகிகள் போட்டியிடக் கூடாது உறுப்பினர்கள் போட்டியிட்டாலும் டிஎன்டிஜே பேனரை பயன்படுத்தக் கூடாது.என்று தெளிவாக அறிவித்துள்ளது.ஆனால் நமதூர் கவுன்சிலர் தேர்தலில் சுன்னத் ஜமாஅத் போர்வையில் ஊருக்குள் நுழைந்த ஒருவர் ,அமைதியாக இருந்த ஆராம்பன்னையில் ஒற்றுமையை கொண்டு வரப்போகிறோம் என்ற போதையை இளைஞர் களிடம் ஏற்றி ஒற்றுமையாக இருந்த ஊரில் வகப் போர்டில் ஹராமாக சம்பாதித்த காசை வீசி  தேர்தலை கொண்டு வந்து அழிசாட்டியம் பண்ணியவர்கள் ஜமாஅத் நிர்வாகத்தை கைப்பற்றி ஒரு  வருடத்தில் சாதித்தது என்ன? அப்துல் பாரி என்ற ஒரு நபரைவிட,பதினான்கு உறுப்பினர்களும் பதினெட்டு ஆலோசகர்களும் ,நிஜாம் என்ற தலைமை ஆலோசகரும் அவருக்கு பின்னால் பல கள்ள ஆலோசகர்களும் சேர்ந்து பள்ளியில் சாதித்தது என்ன ?சிந்தா தர்காவில் கச்சேரி வைபவங்களும் வானவேடிக்கைகளும் ,மீலாதுவிழா என்ற பெயரிலே வக்ப் சிக்கந்தரை அழைத்து வந்து ஆட்டம் போட்டதையும் தவிர இவர்கள் சாதித்தது என்ன?அப்துல் பாரி அவர்கள் இருதரப்பினரையும் அரவணைத்து சென்று இரண்டாவது ஜமாஅத் நடைபெறாமலும் ,பள்ளியின் அனைத்து நிர்வாக வேலைகளையும்,மற்றும் இமாம் இல்லாத காலங்களில் இமாமாகவும் தனி நபராக நின்று செயல் பட்டதைவிட இந்த நிர்வாக கூட்டம் என்ன சாதித்து விட்டது?தரீக்கா காரரை துணைத்தலைவராகவும் தவ்ஹித் ஜமாஅத்காராரை செயலாளராகவும் வைத்துக் கொண்டு போலிஸ் ஸ்டேசனுக்கும் கோர்ட்டுக்கும் செல்லாமலே பள்ளியில் எந்த ஒரு பிரச்னைகளும் இல்லாமல் வழி நடத்தி செல்லவில்லையா?இதுவன்றோ ஒற்றுமைக்கு சான்று. ஹாருணை தெரியும் சிக்கந்தரை தெரியும் என்று தேர்தலை கொண்டுவந்து நமதூர் பணம் 28000/= ரூபாய்களை வக்ப் போர்டில் கொண்டு சேர்த்தததை தவிர வகப் போர்டில் இருந்து இவர்கள் நமது பள்ளிவாசலுக்கு ஏதாவது உதவிகளை பெற முடிந்ததா?
              ஊரை இரண்டாக்கிவிட்டார்கள் என்று ஏகமாய் கோசம் போட்டவர்கள்.ஒரே ஜமாத்தாக தொழவேண்டும் என்று சென்னை சிபாரிசுடன் எஸ்பி அலுவலகத்துக்கு மனு கொடுத்தவர்கள் ,ஊரில் ஒற்றுமை இல்லாததால் பலநாட்கள் தூங்காமல் இருக்கிறோம் ,என்று கண்ணீர் வடித்தவண்ண்மாக இருந்தவர்கள் இப்போது நடைபெற இருக்கின்ற பஞ்சாயத்து தேர்தலில் என்னஒற்றுமை நடவடிக்கை எடுத்தார்கள்?வழக்கமாக கடந்த மூன்று பஞ்சாயத்து தேர்தல் களிலும் ஜும்மாவுக்கு பிறகு ஆலோசனை கூட்டம் நடத்தி தேர்தல் இல்லாமல் தேர்ந்தெடுக்க வழி வகைகளை ஆலோசனை செய்தது போல் அற்ப முயற்சி கூட செய்யவில்லையே ஏன்?மனக்கரையில் பிரச்னைகள் வரக் கூடாது என்று அவர்கள் எடுத்த முடிவுகள் கூட அமைதி பூங்காவான ஆராம்பன்னையில் எடுக்கப் படவில்லையே ஏன்? ஒரு மாதமாக ரேசன் கார்ட் ,வாக்காளர் அடையாள அட்டை மாற்றம் முயற்சியில் இடி விழுந்து விடக் கூடாது என்பதாலா? இல்லை , நிர்வாக கமிட்டியின் தகுதி மிக்க,மீக்க வேட்பாளர்களை ஜமாத் பொதுக் குழு நிராராகரித்துவிடும் என்ற உள்ளூர பயமா?இல்லை தங்களுக்காக காசை செலவழித்து பள்ளிவாசல் நிர்வாக கமிட்டி அந்தஸ்தை தந்த நிஜாமுக்கு நன்றி பாராட்டும் செயலாகவா?நிஜாமும் செக்கும் வந்து இன்னும் என்ன என்ன ஒற்றுமைகள் ஏற்படுத்தப் போகிறார்களோ?அல்லது என்ன கேவலங்கள் நடைபெறப் போகிறதோ ,அல்லாஹ் காப்பாற்றுவானாக ,இவர்களை தோற்கடிக்க அவன் அருள் புரிவானாக!இவர்கள் ஆராம்பன்னைக்கு செய்த புண்ணியங்களை கொஞ்சம் பட்டியலிட்டு காட்டுங்களேன்.அல்லது அவர்களின் தனி பட்ட பண்புகளை செயல்பாடுகளை மக்களிடம் எடுத்து சொல்லி உங்களது நன்றி கடனை நிறை வேற்றுங்கள்.{அடுத்தவர் நிறுவனத்தில் அறிமுகமில்லாத பெண்களிடம் சென்று கள்ள கணக்கு கேட்டது உட்பட }நாங்கள் அதில் தலையிடவில்லை.ஆனால் தேவையற்ற முறையில் சுன்னத் ஜமாதுக்கும் தவ்ஹித் ஜமாத்துக்கும் இடையே நடக்கும் தேர்தல் என்று பொல்லாங்கு பேச வேண்டாம்.தவ்ஹித் ஜமாஅத் சார்பாக கொங்கராயகுரிச்சியை சேர்ந்த ஒருவரை கவுன்சிலர் தேர்தலில் நிறுத்தி உள்ளதாக  ஒரு பச்சை  பொய்யை நிர்வாக கமிட்டி முதன்மை செயலாளர் அவர்கள் கூறியுள்ளார்கள்.இப்படி ஆதாரமற்ற அவதூறுகளை பரப்பியதன் காரணமாகவே இந்த பிளாக்கர் மூலம் உடைத்திட ஒரு வருட காலமாகிவிட்டது.மீண்டும் பொய்களா?உங்களது அரசியல் ஆதாயங்களை அடைய சேர்மனுக்கு போட்டியிடுபவர் வீசும் சில லட்சங்களை தட்டி பறிக்க அல்லாஹ்வின் மார்க்கத்தை பயன்படுத்துவதா?பஞ்சாயத்து கான்றாக்ட்களில் கமிசன் பெற சுன்னத் ஜமாஅத் என்ற பசுத்தோல் போர்வையா?நீங்கள் யாரை ஏமாற்ற முயசிக்கிரீர்கள்?அல்லாஹ்வையா?அவனது பெயரில் அவனின் அடிமைகளையா? இல்லை சாபி மத்ஹபில்  ,தெருவிளக்கு போடுவது,ரோடு போடுவது ,பஞ்சாயத்து நிர்வாகத்தை நிர்வகிப்பது,சேர்மன் தேர்தலில் எவ்வளவு பெறவேண்டும்?பஞ்சாயத்து திட்டங்களில் கமிசன் எத்தனை சதவீதம் பெறவேண்டும் என்று சொல்லப்பட்டுள்ளதா?இல்லையெனில்,நாங்கள் சுன்னத் ஜமாஅத் முறையில் தெருக்களை சுத்தம் பண்ணப் போகிறோம் ,அவர்கள் வந்தால் தெருக்களை தவ்ஹித் ஜமாஅத் முறைகளில் சுத்தம் பண்ணிவிடுவார்கள்.நாங்கள் பைல்களில் சுன்னத் முறையில் கையெழுத்து போடுவோம் ,அவர்கள் வந்தால் தவ்ஹித் ஜமாஅத் முறையில் ரேசன் கார்டு தருவார்கள் என்று சொல்லி ஓட்டு கேளுங்கள்.
               பஞ்சாயத்து தேர்தலுக்கும் சுன்னத் ஜமாஅத் தவ்ஹித் ஜமாஅத்களுக்கும் என்ன தொடர்பு? இவர்களது குறி ஊரில் ஒற்றுமை நிலை நாட்டவேண்டும் என்பதெல்லாம் வெளி  வேஷம்.ஊரில் வேற்றுமையை உருவாக்கி ,அந்த வேற்றுமையை நிலை நாட்டி,ஒற்றுமை ஏற்படாதவண்ணம் நிழல் வேலைகளை செம்மண செய்து ஆதாயம் அடையும் அற்ப நோக்கத்திற்கு இளைஞர்களே!பழியாகிவிடாதீர்கள். நிஜாம் என்பவர் ரேசன் கார்டு வோடேர்ஸ் ஐடி எல்லாம் பல ஆயிரங்கள் லஞ்சம் கொடுத்து ,தேர்தலில் இன்னுமதிகமாக செலவுகள் செய்து கவுன்சிலராக ஆகி சேவைகள் செய்யாவிட்டால் ஆறாம்பண்ணை ஆத்தோடு போகிவிடுமாஎன்ன?இல்லை இந்த செட்டியார்தான் ஆதாயம் இல்லாமல் ஆத்தோடு போவாரா? சிந்திக்க வேண்டாமா?அரசியல் ஆதாயத்திர்க்காக மார்க்கத்துடன் விளையாடும் இவர்களை  என்ன  வென்று  சொல்லுவது ? 


பின் குறிப்பு ;தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத் பற்றி இவர்கள் வெளியிட்ட தேர்தல் பிரசார துண்டு பிரசுரத்தில் குறிப்பிட்டதால் தவ்ஹித் தலைமையிடம் தொடர்பு கொண்டு தேர்தலில் பங்கேற்பது பற்றி கேட்டோம் .அவர்கள் பரிசீலனைக்கு பின்னர் இது போன்று தஞ்சாவூரிலும் ஓரிரு கிராமங்களில் பஞ்சாயத்து தேர்தல் நிலை உள்ளதால் ஆராம்பன்னைக்கும் அந்த ஊர்களுக்கு மட்டும் தேர்தலில் டிஎன்டிஜே கொடி ,பேனர் இல்லாமல் பிரச்சாரம் செய்து கொள்ளுங்கள் என்று அனுமதி வழங்கினார்கள் .
பஞ்சாயத்து தலைவர் மற்றும் கவுன்சிலர் தேர்தலில் போலி சுன்னத் ஜமாஅத் பஞ்சராகிப் போனார்கள் 

கருத்துகள் இல்லை: