Arampannai ஜமாஅத் தலைவர் .
திரு .வைஸ் .கே.ஏ .முஹம்மது உதுமான்
பஞ்சாயத்துதலைவர்
திருமதி.ஹமிதாஹனிபா ;
கவுன்சிலர் .
திருமதி.சரிபாபசிர்

ஞாயிறு, 8 மே, 2011

ப்ளஸ் டூவில் அதிகம் மதிப்பெண்கள்.மற்றும் இத்ரிஸ் சொன்னது

ஜாபர் சாதிக் S/0 K.M.K அப்துல் காதர் 1125/1200
English 187
Tamil    190
Physics 190
Chemistry197
comp.Science198
Mathematics163 
ஹம்மாது ஹதியாத் சதி S/Oஹனிப் ஆலிம்  1120/1200
English 191 
Tamil    190
Physics 193
Chemistry190
Biology  165
Mathematics191
பத்தாவது வகுப்பு வரை மீரா மெற்றிக்.ஸ்கூலில் படித்த ஹம்மாது,சுயமாக படித்தே ப்ளஸ் டூவில் 1120 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.இதற்கு முன்பு  ஒருமாணவர் மீரா ஸ்கூலில் பத்தாவது வகுப்பில் 390 மதிப்பெண்களே பெற்றிருந்தார்.அவரது உறவினரின் உதவியால் ரோஸ் மேரி ஸ்கூலில் சேர்ந்து ப்ளஸ் டூவில் 1105 மதிப்பெண்கள் பெற்றார்.பத்தாவது வகுப்பில் 455 மதிப்பெண்கள் பெற்ற ஹம்மாது வுக்கும் ஒருவரிடம் ரோஸ் மேரியில் படிக்க உதவி கேட்டு கிடைக்கவில்லை.







idris,makkah, சொன்னது…








08 மே 2011 மாலை 07:33
இந்த நிறுவனத்தின் இந்தியாவிலுள்ள பல்வேறு மையங்களில் பணி புரிய எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் 80 இடங்களும், மெக்கானிகல் பிரிவில் 30 இடங்களும், கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவில் 40 இடங்களும் நிரப்பப்படுவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
வயது
பெல் நிறுவனத்திற்கு விண்ணப்பிக்க 01.04.2011 அடிப்படையில் அதிகபட்சமாக 25 வயது நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் உச்ச பட்ச வயதில் எஸ்.சி., எஸ்.டி., மற்றும் உடல் ஊனமுற்ற பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓ.பி.சி., 3 ஆண்டுகளும் சலுகைகள் உள்ளது.
கல்வித் தகுதி
பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் இந்தப் பதவிகளுக்கு தொடர்புடைய படிப்புகளைப் படித்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். பிற இன்ஜினியரிங் பிரிவினர் விண்ணப்பிக்கக் கூடாது.
ஏ.ஐ.சி.டி.இ., அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தின் மூலமாக பி.இ., பி.டெக்., அல்லது பி.எஸ்.சி., இன்ஜினியரிங் படிப்பை எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரானிக்ஸ் அண்டு கம்யூனிகேஷன், கம்யூனிகேஷன், டெலிகம்யூனிகேஷன், மெக்கானிகல், கம்ப்யூட்டர் சயின்ஸ், கம்ப்யூட்டர் சயின்ஸ் அண்டு இன்ஜினியரிங் ஆகிய பிரிவுகளில் படித்தவர்கள் மட்டுமே பெல் நிறுவனத்தின் இந்தப் பதவிகளுக்கு விண்ணப்பிக்க முடியும்.
இவர்கள் குறைந்த பட்சம் 60 சதவிகித மதிப்பெண்களுடன் பட்டப்படிப்பை முடித்திருப்பது அவசியத் தேவையாகும். முழு விபரங்களுக்கு இந்த நிறுவனத்தின் இணைய தளத்தைப் பார்க்கவும்.
தேர்ச்சி முறை
பெல் நிறுவனத்திற்கு வரும் விண்ணப்பங்களில் தகுதி உடைய விண்ணப்பங்கள் மட்டும் தேர்ந்தெடுக்கப்பட்டு எழுத்துத் தேர்விற்கான அழைப்புகள் அனுப்பப்படும். எழுத்துத் தேர்வு 26.06.2011 அன்று பெங்களூரு, புது டில்லி, மும்பை, கோல்கட்டா, கவுகாத்தி ஆகிய மையங்களில் மட்டும் நடைபெறும். அப்ஜெக்டிவ் வகையிலான எழுத்துத் தேர்வில் ஜெனரல் ஆப்டிடியூட், தொடர்புடைய இன்ஜினியரிங் துறைகளிலிருந்து கேள்விகள் கேட்கப்படும். இதில் வெற்றி பெறுபவர்கள் நேர்காணல் மூலம் தேர்ச்சி செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்
பெல் நிறுவனத்தின் இன்ஜினியரிங் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள் ரூ.500/க்கான டி.டி.,யை Bharat Electronics Limited என்ற பெயரில் ஸ்டேட் வங்கியில் புது டில்லியில் மாற்றத்தக்கதாக எடுத்து அனுப்ப வேண்டும். எஸ்.சி., எஸ்.டி., மற்றும் உடல் ஊனமுற்ற பிரிவினர் ரூ.200/க்கு மட்டும் டி.டி., எடுத்தால் போதுமானது.
விண்ணப்பிப்பது எப்படி
பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் இன்ஜினியரிங் காலியிடங்களுக்கு ஆன்லைன் முறையில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முன் உங்களுக்கான உபயோகத்தில் உள்ள பிரத்யேகமான இமெயில் முகவரி இருப்பதனை உறுதி செய்யவும்.
இதன் வாயிலாகவே உங்களின் எழுத்துத் தேர்வு அழைப்பு, நேர்காணல் அழைப்பு, தேர்ச்சி முடிவுகள் போன்ற முக்கியமான விபரங்கள் அனைத்தும் தெரிவிக்கப்படும். ஆன்லைனில் பதிவு செய்த பின் கிடைக்கும் பிரிண்ட் அவுட்டைப் பின்வரும் முகவரிக்கு 16.05.2011க்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும். முழு விபரங்கள் அறிய நிறுவனத்தின் இணைய தளத்தைப் பார்க்கவும்.
முகவரி
Post Box No : 4334,
Kalkaji Head Post Office,
New Delhi - 110019.
ஆன்லைனில் விண்ணப்பிக்க இறுதி நாள்: 10.05.2011
விண்ணப்பங்கள் சென்றடைய இறுதி நாள்: 16.05.2011
இணைய தள முகவரி: http://specialtest.in/bel2011 l









கருத்துகள் இல்லை: