Arampannai ஜமாஅத் தலைவர் .
திரு .வைஸ் .கே.ஏ .முஹம்மது உதுமான்
பஞ்சாயத்துதலைவர்
திருமதி.ஹமிதாஹனிபா ;
கவுன்சிலர் .
திருமதி.சரிபாபசிர்

சனி, 21 மே, 2011

ஆராம்பண்ணையில் நடந்த இரத்ததான படங்கள்21/05/2011 

திங்கள், 16 மே, 2011

ஓட்டை விழுந்த ஒற்றுமையும் பஞ்சராகப் போகும் பஞ்சயத்துதேர்தலும்[இன்சா அல்லாஹ்}]


அன்பு ஆறாம்பண்ணை  சகோதரர்களுக்கு ,அஸ்ஸலாமு அழைக்கும் .
தமிழ்நாடு தவ்ஹித் ஜமாஅத் வரும் உள்ளாட்சி தேர்தலில் பங்கு பெறாது,அமைப்பின் பேரில் யாரையும் ஆதரிக்காது.நிர்வாகிகள் போட்டியிடக் கூடாது உறுப்பினர்கள் போட்டியிட்டாலும் டிஎன்டிஜே பேனரை பயன்படுத்தக் கூடாது.என்று தெளிவாக அறிவித்துள்ளது.ஆனால் நமதூர் கவுன்சிலர் தேர்தலில் சுன்னத் ஜமாஅத் போர்வையில் ஊருக்குள் நுழைந்த ஒருவர் ,அமைதியாக இருந்த ஆராம்பன்னையில் ஒற்றுமையை கொண்டு வரப்போகிறோம் என்ற போதையை இளைஞர் களிடம் ஏற்றி ஒற்றுமையாக இருந்த ஊரில் வகப் போர்டில் ஹராமாக சம்பாதித்த காசை வீசி  தேர்தலை கொண்டு வந்து அழிசாட்டியம் பண்ணியவர்கள் ஜமாஅத் நிர்வாகத்தை கைப்பற்றி ஒரு  வருடத்தில் சாதித்தது என்ன? அப்துல் பாரி என்ற ஒரு நபரைவிட,பதினான்கு உறுப்பினர்களும் பதினெட்டு ஆலோசகர்களும் ,நிஜாம் என்ற தலைமை ஆலோசகரும் அவருக்கு பின்னால் பல கள்ள ஆலோசகர்களும் சேர்ந்து பள்ளியில் சாதித்தது என்ன ?சிந்தா தர்காவில் கச்சேரி வைபவங்களும் வானவேடிக்கைகளும் ,மீலாதுவிழா என்ற பெயரிலே வக்ப் சிக்கந்தரை அழைத்து வந்து ஆட்டம் போட்டதையும் தவிர இவர்கள் சாதித்தது என்ன?அப்துல் பாரி அவர்கள் இருதரப்பினரையும் அரவணைத்து சென்று இரண்டாவது ஜமாஅத் நடைபெறாமலும் ,பள்ளியின் அனைத்து நிர்வாக வேலைகளையும்,மற்றும் இமாம் இல்லாத காலங்களில் இமாமாகவும் தனி நபராக நின்று செயல் பட்டதைவிட இந்த நிர்வாக கூட்டம் என்ன சாதித்து விட்டது?தரீக்கா காரரை துணைத்தலைவராகவும் தவ்ஹித் ஜமாஅத்காராரை செயலாளராகவும் வைத்துக் கொண்டு போலிஸ் ஸ்டேசனுக்கும் கோர்ட்டுக்கும் செல்லாமலே பள்ளியில் எந்த ஒரு பிரச்னைகளும் இல்லாமல் வழி நடத்தி செல்லவில்லையா?இதுவன்றோ ஒற்றுமைக்கு சான்று. ஹாருணை தெரியும் சிக்கந்தரை தெரியும் என்று தேர்தலை கொண்டுவந்து நமதூர் பணம் 28000/= ரூபாய்களை வக்ப் போர்டில் கொண்டு சேர்த்தததை தவிர வகப் போர்டில் இருந்து இவர்கள் நமது பள்ளிவாசலுக்கு ஏதாவது உதவிகளை பெற முடிந்ததா?
              ஊரை இரண்டாக்கிவிட்டார்கள் என்று ஏகமாய் கோசம் போட்டவர்கள்.ஒரே ஜமாத்தாக தொழவேண்டும் என்று சென்னை சிபாரிசுடன் எஸ்பி அலுவலகத்துக்கு மனு கொடுத்தவர்கள் ,ஊரில் ஒற்றுமை இல்லாததால் பலநாட்கள் தூங்காமல் இருக்கிறோம் ,என்று கண்ணீர் வடித்தவண்ண்மாக இருந்தவர்கள் இப்போது நடைபெற இருக்கின்ற பஞ்சாயத்து தேர்தலில் என்னஒற்றுமை நடவடிக்கை எடுத்தார்கள்?வழக்கமாக கடந்த மூன்று பஞ்சாயத்து தேர்தல் களிலும் ஜும்மாவுக்கு பிறகு ஆலோசனை கூட்டம் நடத்தி தேர்தல் இல்லாமல் தேர்ந்தெடுக்க வழி வகைகளை ஆலோசனை செய்தது போல் அற்ப முயற்சி கூட செய்யவில்லையே ஏன்?மனக்கரையில் பிரச்னைகள் வரக் கூடாது என்று அவர்கள் எடுத்த முடிவுகள் கூட அமைதி பூங்காவான ஆராம்பன்னையில் எடுக்கப் படவில்லையே ஏன்? ஒரு மாதமாக ரேசன் கார்ட் ,வாக்காளர் அடையாள அட்டை மாற்றம் முயற்சியில் இடி விழுந்து விடக் கூடாது என்பதாலா? இல்லை , நிர்வாக கமிட்டியின் தகுதி மிக்க,மீக்க வேட்பாளர்களை ஜமாத் பொதுக் குழு நிராராகரித்துவிடும் என்ற உள்ளூர பயமா?இல்லை தங்களுக்காக காசை செலவழித்து பள்ளிவாசல் நிர்வாக கமிட்டி அந்தஸ்தை தந்த நிஜாமுக்கு நன்றி பாராட்டும் செயலாகவா?நிஜாமும் செக்கும் வந்து இன்னும் என்ன என்ன ஒற்றுமைகள் ஏற்படுத்தப் போகிறார்களோ?அல்லது என்ன கேவலங்கள் நடைபெறப் போகிறதோ ,அல்லாஹ் காப்பாற்றுவானாக ,இவர்களை தோற்கடிக்க அவன் அருள் புரிவானாக!இவர்கள் ஆராம்பன்னைக்கு செய்த புண்ணியங்களை கொஞ்சம் பட்டியலிட்டு காட்டுங்களேன்.அல்லது அவர்களின் தனி பட்ட பண்புகளை செயல்பாடுகளை மக்களிடம் எடுத்து சொல்லி உங்களது நன்றி கடனை நிறை வேற்றுங்கள்.{அடுத்தவர் நிறுவனத்தில் அறிமுகமில்லாத பெண்களிடம் சென்று கள்ள கணக்கு கேட்டது உட்பட }நாங்கள் அதில் தலையிடவில்லை.ஆனால் தேவையற்ற முறையில் சுன்னத் ஜமாதுக்கும் தவ்ஹித் ஜமாத்துக்கும் இடையே நடக்கும் தேர்தல் என்று பொல்லாங்கு பேச வேண்டாம்.தவ்ஹித் ஜமாஅத் சார்பாக கொங்கராயகுரிச்சியை சேர்ந்த ஒருவரை கவுன்சிலர் தேர்தலில் நிறுத்தி உள்ளதாக  ஒரு பச்சை  பொய்யை நிர்வாக கமிட்டி முதன்மை செயலாளர் அவர்கள் கூறியுள்ளார்கள்.இப்படி ஆதாரமற்ற அவதூறுகளை பரப்பியதன் காரணமாகவே இந்த பிளாக்கர் மூலம் உடைத்திட ஒரு வருட காலமாகிவிட்டது.மீண்டும் பொய்களா?உங்களது அரசியல் ஆதாயங்களை அடைய சேர்மனுக்கு போட்டியிடுபவர் வீசும் சில லட்சங்களை தட்டி பறிக்க அல்லாஹ்வின் மார்க்கத்தை பயன்படுத்துவதா?பஞ்சாயத்து கான்றாக்ட்களில் கமிசன் பெற சுன்னத் ஜமாஅத் என்ற பசுத்தோல் போர்வையா?நீங்கள் யாரை ஏமாற்ற முயசிக்கிரீர்கள்?அல்லாஹ்வையா?அவனது பெயரில் அவனின் அடிமைகளையா? இல்லை சாபி மத்ஹபில்  ,தெருவிளக்கு போடுவது,ரோடு போடுவது ,பஞ்சாயத்து நிர்வாகத்தை நிர்வகிப்பது,சேர்மன் தேர்தலில் எவ்வளவு பெறவேண்டும்?பஞ்சாயத்து திட்டங்களில் கமிசன் எத்தனை சதவீதம் பெறவேண்டும் என்று சொல்லப்பட்டுள்ளதா?இல்லையெனில்,நாங்கள் சுன்னத் ஜமாஅத் முறையில் தெருக்களை சுத்தம் பண்ணப் போகிறோம் ,அவர்கள் வந்தால் தெருக்களை தவ்ஹித் ஜமாஅத் முறைகளில் சுத்தம் பண்ணிவிடுவார்கள்.நாங்கள் பைல்களில் சுன்னத் முறையில் கையெழுத்து போடுவோம் ,அவர்கள் வந்தால் தவ்ஹித் ஜமாஅத் முறையில் ரேசன் கார்டு தருவார்கள் என்று சொல்லி ஓட்டு கேளுங்கள்.
               பஞ்சாயத்து தேர்தலுக்கும் சுன்னத் ஜமாஅத் தவ்ஹித் ஜமாஅத்களுக்கும் என்ன தொடர்பு? இவர்களது குறி ஊரில் ஒற்றுமை நிலை நாட்டவேண்டும் என்பதெல்லாம் வெளி  வேஷம்.ஊரில் வேற்றுமையை உருவாக்கி ,அந்த வேற்றுமையை நிலை நாட்டி,ஒற்றுமை ஏற்படாதவண்ணம் நிழல் வேலைகளை செம்மண செய்து ஆதாயம் அடையும் அற்ப நோக்கத்திற்கு இளைஞர்களே!பழியாகிவிடாதீர்கள். நிஜாம் என்பவர் ரேசன் கார்டு வோடேர்ஸ் ஐடி எல்லாம் பல ஆயிரங்கள் லஞ்சம் கொடுத்து ,தேர்தலில் இன்னுமதிகமாக செலவுகள் செய்து கவுன்சிலராக ஆகி சேவைகள் செய்யாவிட்டால் ஆறாம்பண்ணை ஆத்தோடு போகிவிடுமாஎன்ன?இல்லை இந்த செட்டியார்தான் ஆதாயம் இல்லாமல் ஆத்தோடு போவாரா? சிந்திக்க வேண்டாமா?அரசியல் ஆதாயத்திர்க்காக மார்க்கத்துடன் விளையாடும் இவர்களை  என்ன  வென்று  சொல்லுவது ? 


பின் குறிப்பு ;தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத் பற்றி இவர்கள் வெளியிட்ட தேர்தல் பிரசார துண்டு பிரசுரத்தில் குறிப்பிட்டதால் தவ்ஹித் தலைமையிடம் தொடர்பு கொண்டு தேர்தலில் பங்கேற்பது பற்றி கேட்டோம் .அவர்கள் பரிசீலனைக்கு பின்னர் இது போன்று தஞ்சாவூரிலும் ஓரிரு கிராமங்களில் பஞ்சாயத்து தேர்தல் நிலை உள்ளதால் ஆராம்பன்னைக்கும் அந்த ஊர்களுக்கு மட்டும் தேர்தலில் டிஎன்டிஜே கொடி ,பேனர் இல்லாமல் பிரச்சாரம் செய்து கொள்ளுங்கள் என்று அனுமதி வழங்கினார்கள் .
பஞ்சாயத்து தலைவர் மற்றும் கவுன்சிலர் தேர்தலில் போலி சுன்னத் ஜமாஅத் பஞ்சராகிப் போனார்கள் 

வெள்ளி, 13 மே, 2011

விவேகமற்ற வீரனாக

ஊரெல்லாம் திரண்டு வந்து அவனை பாராட்டினார்கள்.மாலை அணிவித்தார்கள். முசாபா செய்தார்கள்.முலாகத் பண்ணினார்கள்.அவனை தாக்க வந்த சிங்கத்தை எதிர்த்து,அதனுடன் கட்டி புரண்டு போராடி,அதை அடக்கி மரத்தில் கட்டி போட்டுவிட்டான் அந்த வீரன்.அதே போன்று அடுத்து வந்த புலியுடனும் சண்டை போட்டு அதையும் வென்று மரத்தில் கட்டி போட்டான். மக்களும் அவனது வீரத்தைக்  கண்டு அவனை பாராட்டி,மாலைகளை அணிவித்து தங்களது மகிழ்ச்சிகளை பகிர்ந்து கொண்டனர்.இந்த நிகழ்வுகளை  பார்த்துக் கொண்டிருந்த ஒரு பண்ணிக்கு உடன் ஒரு ஐடியா வந்தது, உடன் தனது சகாக்களிடம் நான் இந்த வீரனை தோற்கடித்து காட்டுகிறேன் பார் என்று கூறி,பக்கத்தில் எங்கோ சென்று வந்து களத்தில் இறங்கிவிட்டது.
அந்த வீரனும் தன்னை எதிர்த்து தன்னிடம் சண்டை போட பண்ணி வருவதை பார்த்தான்..அவன் வீரனாக மட்டுமல்ல விவேகனாகவும் இருந்திருந்தால், பண்ணியைக் கண்டு அவன் பயந்து ஓடியிருக்க வேண்டும்.ஆனால் , அவனோ வெறும் வீரன் மட்டும் ஆவான். அதனால் தான் அவன் பண்ணியைக் கண்டதும் ,நான் சிங்கத்தை வென்று கட்டி போட்டுள்ளேன்,புலியை  வென்று கட்டிப் போட்டுள்ளேன்.இதன் பிறகும் இந்த பண்ணிக்கு என்ன திமிர்  இருந்தால் என்னுடன் மோத வரும்? நான் சும்மா விடுவேனா பார்,என்று பண்ணியுடன்                                       கட்டி புரண்டு சண்டை போட்டு அதை மரத்தில் கட்டிபோட்டான்.ஆனால் இந்த சமயத்தில் அவனை யாரும் பாராட்ட வில்லை.அவன் அருகில் கூட யாரும் நெருங்காமல் ஓடினர். வீரனும் நிலைமையை புரிந்து கொண்டு ஆற்றுக்கு ஓடினான் .இதை பார்த்த பண்ணி ,சிங்கமும் புலியும் சோகத்தில் இருக்க,மகிழ்ச்சியுடன்,' நான் வென்று விட்டேன்" என்று சிரித்ததாம். உடன் சிங்கமும் புலியும்,அவனல்லவா வென்று உன்னை மரத்தில் கட்டி போட்டுள்ளான்.நீ எப்படி வெற்றி பெற்றதாக கூறுகிறாய்,என்று கேட்டனவாம்.அதற்கு பண்ணி கூறியதாம்,'உங்களுடன் மோதி வென்ற பிறகு வீரனுக்கு மாலைகளை போட்டார்கள்,பாராட்டு கூறினார்கள். கைகளை குலுக்கி கட்டி பிடித்து முலாகத் பண்ணினார்கள் .சிங்கத்தை வென்ற எங்கள் சிங்கமே!தங்கமே! என்றார்கள். புலியை அடக்கி ஆண்ட இளம் புலியே! புயலே!என்றார்கள்.ஆனால் என்னிடம் மோதிய பிறகு யாராவது பக்கத்தில் வந்தார்களா?யாராவது பண்ணியை வென்ற பண்ணியேஎன்று புகழ்ந்தார்களா? பாராட்டினார்களா? கைகளை குலுக்கி முசாபாஹ் செய்தார்களா? முலாகத்பன்னினார்களா? நான் மோதும் முன்பு நன்றாக சாக்கடையில் குளித்து விட்டு நேரடியாக அவனிடம் மோதினேன். அவனும் கட்டி புரண்டான்.இப்போது என்மீதுள்ள சாக்கடை களெல்லாம் அவன் மீது படிந்து விட்டது நான் சுத்தமாகி விட்டேன்.அவன் மீதுள்ள சாக்கடை கண்டு மக்கள் யாரும் பக்கத்தில் வராமல் ஓடி விட்டார்கள். வீரனும் ஆத்துக்கு ஓடிவிட்டான். இப்போது உங்கள் இருவர்களையும்  கட்டிப் போட்ட கையிற்றை அவிழ்த்து விட்டு உங்கள் இருவர்களையும் நான் காப்பாற்றிவிட்டான். இப்போது சொல்லுங்கள.நான் தானே  வெற்றி பெற்றுள்ளேன் என்று பெருமை பேசியதாம்.
நான் இப்படிப்பட்ட விவேகமற்ற வீரனாக இருக்க விரும்பவில்லை..நான் இதை எதற்கு சொல்லுகிறேன் என்றால் ,,,,,,,,,,,,,,,,,புரிவோர் புரிந்து கொள்ளட்டும்.




மஞ்ச மாக்கான் சொன்னது…




மற்றவர்களை மனநோயாளி என்று குறிப்பிடுகிறீர்களே உங்கள் குடும்பத்தினர்களே உங்களைப் பற்றி
குறிப்பிடும்போது அப்படித்தான் பேசிக்கொள்கிறார்கள் என்பது உங்களுக்கு தெரியுமா?
மாக்கான் என்றால் பள்ளி,கல்லூரி நண்பர்களுக்கிடையில் அரை வேக்காடுகளை மாக்கா[ன்] என்று சொல்லுவதுண்டு.மீசை தாடி வளரக் கூடாது என்பதற்காக சில ஆண்கள் மஞ்சள் தேய்த்து குளிப்பார்கள்.அவர்களைத்தான் மஞ்ச மாக்கான் என்பார்கள்..நீங்கள் தன்னைத்தானே மஞ்ச மாக்கான் என்று சொல்லியிருப்பது என்ன அர்த்தத்திலோ!நான் மனநோயாளிகள் என்று குறிப்பிட்டது இருவர்களை.அதில் ஒருவருக்காக நீங்கள் வாதாடி வந்துள்ளீர்கள்நான் எப்போதும் யாரையும் புண்படுத்தியது இல்லை.என் மீது அபாண்டமாக ஒரு பழியை,அவருக்கு எந்த வகையிலும் தொடர்பு இல்லாத,அதாவது ,நான் இரண்டு லட்ச ரூபாய் கையாடல் பண்ணிவிட்டதாகவும் அதனால் என் மீது வழக்கு போடப்பட்டுள்ளதாகவும் இன்னும் சில நாட்களில் உள்ளே தள்ளி விடுவார்கள் என்றும் ம.அ.அலுவலர் ஒருவரிடம் யார் கூறினாரோ அவரைத்தான் நான் அவ்வாறு கூறியுள்ளேன்.அந்த கூற்றில் கடுகளவேனும் உண்மை இருந்தால் அவரை நிருபிக்கத்தயாரா? என்பதை மானம் வரும் வகையில் கேட்டிருப்பேன்.ஆனால் முழுக்க முட்டாள்தனமான குற்ற சாட்டு என்பதால் ,அவருக்கும் எனக்கும் எந்த பகை இல்லாத காரணத்தில் அவசியம் இல்லாமல் என் மீது அவதூறு கூறியுள்ளதால் அவரை மன நோயாளி என்று அழைத்தாலே சரியாக இருக்கும் என நம்புகிறேன்.
நீங்கள் எந்த உறவுக்காக,எந்த உதவியும் செய்யாத ஒருவருக்காக வாதாடி வந்தீர்களோ,உங்களுக்கும்  அவருக்கும் என்ன உறவோ,அதே போன்று எனக்கும் உறவுடன் உள்ள ஒருவர் ,அநேக உதவிகள் செய்த என்னை மன நோயாளி என்று சொல்லி மகிழ்ச்சி கொள்வதில் எனக்கு ஒன்றும் வருத்த மில்லை.இறைவன் அறிவான் யார் மன நோயாளி என்பதை .

ஞாயிறு, 8 மே, 2011

ப்ளஸ் டூவில் அதிகம் மதிப்பெண்கள்.மற்றும் இத்ரிஸ் சொன்னது

ஜாபர் சாதிக் S/0 K.M.K அப்துல் காதர் 1125/1200
English 187
Tamil    190
Physics 190
Chemistry197
comp.Science198
Mathematics163 
ஹம்மாது ஹதியாத் சதி S/Oஹனிப் ஆலிம்  1120/1200
English 191 
Tamil    190
Physics 193
Chemistry190
Biology  165
Mathematics191
பத்தாவது வகுப்பு வரை மீரா மெற்றிக்.ஸ்கூலில் படித்த ஹம்மாது,சுயமாக படித்தே ப்ளஸ் டூவில் 1120 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.இதற்கு முன்பு  ஒருமாணவர் மீரா ஸ்கூலில் பத்தாவது வகுப்பில் 390 மதிப்பெண்களே பெற்றிருந்தார்.அவரது உறவினரின் உதவியால் ரோஸ் மேரி ஸ்கூலில் சேர்ந்து ப்ளஸ் டூவில் 1105 மதிப்பெண்கள் பெற்றார்.பத்தாவது வகுப்பில் 455 மதிப்பெண்கள் பெற்ற ஹம்மாது வுக்கும் ஒருவரிடம் ரோஸ் மேரியில் படிக்க உதவி கேட்டு கிடைக்கவில்லை.







idris,makkah, சொன்னது…








08 மே 2011 மாலை 07:33
இந்த நிறுவனத்தின் இந்தியாவிலுள்ள பல்வேறு மையங்களில் பணி புரிய எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் 80 இடங்களும், மெக்கானிகல் பிரிவில் 30 இடங்களும், கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவில் 40 இடங்களும் நிரப்பப்படுவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
வயது
பெல் நிறுவனத்திற்கு விண்ணப்பிக்க 01.04.2011 அடிப்படையில் அதிகபட்சமாக 25 வயது நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் உச்ச பட்ச வயதில் எஸ்.சி., எஸ்.டி., மற்றும் உடல் ஊனமுற்ற பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓ.பி.சி., 3 ஆண்டுகளும் சலுகைகள் உள்ளது.
கல்வித் தகுதி
பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் இந்தப் பதவிகளுக்கு தொடர்புடைய படிப்புகளைப் படித்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். பிற இன்ஜினியரிங் பிரிவினர் விண்ணப்பிக்கக் கூடாது.
ஏ.ஐ.சி.டி.இ., அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தின் மூலமாக பி.இ., பி.டெக்., அல்லது பி.எஸ்.சி., இன்ஜினியரிங் படிப்பை எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரானிக்ஸ் அண்டு கம்யூனிகேஷன், கம்யூனிகேஷன், டெலிகம்யூனிகேஷன், மெக்கானிகல், கம்ப்யூட்டர் சயின்ஸ், கம்ப்யூட்டர் சயின்ஸ் அண்டு இன்ஜினியரிங் ஆகிய பிரிவுகளில் படித்தவர்கள் மட்டுமே பெல் நிறுவனத்தின் இந்தப் பதவிகளுக்கு விண்ணப்பிக்க முடியும்.
இவர்கள் குறைந்த பட்சம் 60 சதவிகித மதிப்பெண்களுடன் பட்டப்படிப்பை முடித்திருப்பது அவசியத் தேவையாகும். முழு விபரங்களுக்கு இந்த நிறுவனத்தின் இணைய தளத்தைப் பார்க்கவும்.
தேர்ச்சி முறை
பெல் நிறுவனத்திற்கு வரும் விண்ணப்பங்களில் தகுதி உடைய விண்ணப்பங்கள் மட்டும் தேர்ந்தெடுக்கப்பட்டு எழுத்துத் தேர்விற்கான அழைப்புகள் அனுப்பப்படும். எழுத்துத் தேர்வு 26.06.2011 அன்று பெங்களூரு, புது டில்லி, மும்பை, கோல்கட்டா, கவுகாத்தி ஆகிய மையங்களில் மட்டும் நடைபெறும். அப்ஜெக்டிவ் வகையிலான எழுத்துத் தேர்வில் ஜெனரல் ஆப்டிடியூட், தொடர்புடைய இன்ஜினியரிங் துறைகளிலிருந்து கேள்விகள் கேட்கப்படும். இதில் வெற்றி பெறுபவர்கள் நேர்காணல் மூலம் தேர்ச்சி செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்
பெல் நிறுவனத்தின் இன்ஜினியரிங் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள் ரூ.500/க்கான டி.டி.,யை Bharat Electronics Limited என்ற பெயரில் ஸ்டேட் வங்கியில் புது டில்லியில் மாற்றத்தக்கதாக எடுத்து அனுப்ப வேண்டும். எஸ்.சி., எஸ்.டி., மற்றும் உடல் ஊனமுற்ற பிரிவினர் ரூ.200/க்கு மட்டும் டி.டி., எடுத்தால் போதுமானது.
விண்ணப்பிப்பது எப்படி
பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் இன்ஜினியரிங் காலியிடங்களுக்கு ஆன்லைன் முறையில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முன் உங்களுக்கான உபயோகத்தில் உள்ள பிரத்யேகமான இமெயில் முகவரி இருப்பதனை உறுதி செய்யவும்.
இதன் வாயிலாகவே உங்களின் எழுத்துத் தேர்வு அழைப்பு, நேர்காணல் அழைப்பு, தேர்ச்சி முடிவுகள் போன்ற முக்கியமான விபரங்கள் அனைத்தும் தெரிவிக்கப்படும். ஆன்லைனில் பதிவு செய்த பின் கிடைக்கும் பிரிண்ட் அவுட்டைப் பின்வரும் முகவரிக்கு 16.05.2011க்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும். முழு விபரங்கள் அறிய நிறுவனத்தின் இணைய தளத்தைப் பார்க்கவும்.
முகவரி
Post Box No : 4334,
Kalkaji Head Post Office,
New Delhi - 110019.
ஆன்லைனில் விண்ணப்பிக்க இறுதி நாள்: 10.05.2011
விண்ணப்பங்கள் சென்றடைய இறுதி நாள்: 16.05.2011
இணைய தள முகவரி: http://specialtest.in/bel2011 l









வியாழன், 5 மே, 2011

நோட்டிஸ் அடிக்க போகிறோம் ,டும், டும் டும்


arasan கூறியது...


///////அதனால் நீங்கள் நோட்டிஸ் அடியுங்கள் .பிறகு அதை ஆதாரமாக வைத்து பள்ளி சொத்தை இறைவன் அருளால் மீட்டுதருகிறோம்/////
'பள்ளியின் சொத்தை இறைவன் அருளால் மீட்டு தருகிறோம்'' என்று கூறி இருக்கிறீர்கள். நன்றி. இதிலாவது சொன்ன வாக்கை காப்பாற்றுவீர்களா? அல்லது தடம் புரண்ட பு.க. மாதிரி ஆகிவிடுமா? அல்லாஹ் மீது சத்தியமிட்டு சொல்லுங்கள். அப்போது உங்களை நாங்கள் நம்பிகிறோம் .அது என்ன என்று உங்களுக்கு உண்மையிலேயே தெரியாதா? நாங்கள் நோட்டீஸ் அடிப்பது இன்ஷா அல்லாஹ் உறுதி.

''வந்துட்டாங்கையா... வந்துட்டாங்க'' நோட்டீஸ் அடித்த ஊர் நலன் விரும்பும் ஊர்வாசிகளை வைத்து நோட்டீஸ் அடிக்க இருக்கிறோம்




.உளறுவதை நிறுத்தி செயல்பாட்டை துரிதமாக்குங்கள்.மேலும் சமிபத்தில் வக்ப் செய்யப்பட்ட சொத்து எது என்பதும் அதை விற்றதும் விற்பவருக்கு என்னஉரிமை என்பதும் அல்லாஹ்வின் மீது ஆணையாக எனக்கு தெரியாது.    /// இதை ஏன் உங்களிடம் கூறுகிறேன் என்றால் உங்களிடம் நிறைய இளைஞர்கள் . அதனால் நீங்கள் தடுப்பது எளிது///  கடந்த மாதம் கூட ஒருவர் அவரின் உறவினர் குடும்ப  பிரச்னையை பள்ளி நிர்வாகிகள் பஞ்சாயத்து பண்ண மறுத்து விட்டார்கள் என்றும் நீங்கள் தலை இட்டு அதை முடித்து தருமாறும் கேட்டுக் கொண்டார், அதை போல் போலிசுக்கு போன அந்த பிரச்னையை எளிதாக முடித்துக் கொடுத்தோம்.ஆனால் அவர் இந்த மாதத்தில் நடந்த வேறொரு பிரச்னையில் எனக்கு எதிராக செயல்பட்டார். போகட்டும்.நீங்களும் அது போன்று பள்ளி சொத்து பிரச்னையை எங்களிடம் கொண்டு வந்துள்ளீர்கள்.எங்கள் கிளை தலைவருக்கு அதை மனுவாக எழுதி கொடுத்தாலும் சரி அல்லது நோட்டிஸ் வெளியிட்டாலும் என்ன பெயரில் வெளியிட்டாலும் சரி .பிரஸ் கிடைக்கவில்லை என்றால் சொல்லுங்கள். ஏற்பாடு செய்வோம். நோட்டிஸ் வெளியிடுங்கள். அதற்கு முன்பே ஊளை கூச்சலை தவிருங்கள்.
5 மே, 2011 5:௫௪
Arasan கூறியத



/////// கடந்த பாராளுமன்ற தேர்தலில் கூட எங்களது அமைப்புக்கு என்னிடம் கொடுத்த காசை முறையாக செலவழித்து கணக்குடன் மீதி ரூபாய் முப்பது ஆயிரத்தை கீதா ஜீவனிடம் திருப்பி கொடுத்து விட்டோம் .அதனால் இந்த சட்டசபை தேர்தலில் தூத்துக்குடி மர்கசுக்கு கீதாஜீவன் தானாகவே சென்று ,பலதேர்தல்களை சந்தித்து உள்ளேன் ,இதுவரை வாங்கிய காசை கணக்குடன் திரும்ப கொடுத்தது உங்களது அமைப்பு மட்டும்தான் என்று பாராட்டி ,புதிதாக 35 லட்ச ரூபாயில் வாங்கப்பட்டுள்ள து.குடி மர்கசுக்குநன்கொடையாக வழங்கி சென்றார்//////.
உங்க அப்ரோச் அவர்களுக்கு மிகவும் பிடித்து இருக்கலாம்.அதனால் தௌஹீத் மர்கசுக்கு அவர்களிடம் உள்ள ஹலாலான பணத்தில் இருந்து 75 ஆயிரத்தை நன்கொடையாக கொடுத்திருக்கலாம்.
மற்ற மதத்தினரும்  ஹலால் ஹராம் சட்டத்தை பின்பற்றுகிறார்களா?. 
///////அயோக்கியனே ஓட்டுக்காக கழிசடைகளின் காசுகளை பெற்ற கபோதிகளே கடந்த பாராளுமன்ற தேர்தலில் கூட எங்களது அமைப்புக்கு என்னிடம் கொடுத்த காசை முறையாக செலவழித்து கணக்குடன் மீதி ரூபாய் முப்பது ஆயிரத்தை கீதா ஜீவனிடம் திருப்பி கொடுத்து விட்டோம்//////
நீங்கள் எதுக்காக அவர்களிடம் வாங்கினீர்கள். அவர்களும் (நீங்கள் சொன்ன கபோதிகள்) எதற்கு வாங்கினார்கள் என்று தெளிவாக விளக்கவும்.
5 மே, 2011 6:00 amமுஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்கும் கட்சிகளை ஆதரிப்பதாக தவ்ஹித் ஜமாஅத் அறிவித்திருந்தது.அதன்படி திமுக தவ்ஹித் ஜமாத்தின் பல போராட்டங்களுக்கு பிறகு மூன்றரை சதவீதம் இட ஒதுக்கீடு அளித்தது.அதற்கு நன்றி தெரிவிக்கும் பொருட்டு கடந்த பாராளுமன்ற தேர்தலில் திமுகவை ஆதரித்தோம்.மேலும் இட ஒதுக்கீடு அதிகரிக்க கோரிக்கை வைக்கும் வண்ணம் அவர்களின் வெற்றிக்காக தீவிரமாக் வேலை செய்வது என்றும் அதற்கான செலவை அவர்களிடமிருந்தே பெற்று கொள்வது என்று எடுத்த முடிவுகளின் அடிபடையில் செலவுக்கான தொகை பெறப்பட்டது.அனைத்து மாவட்டங்களிலும் செலவுக்கு பின்னர் எங்களது தலைமைக்கும் வேட்பாளர் வகையாளரிடமும் செலவு கணக்கு கொடுக்கப்பட்டது.
நான் சொன்ன கபோதிகள் முஸ்லிம்களை வோட்டுக்களை பிரிப்பதற்காக அதிமுகவிடம் காசு வாங்கி நின்ற களிசடையிடம் காசு வாங்கி அதற்காகவே செயல்பட்டிருக்கலாம் அவ்வாறில்லை எனின் நீங்களே சொல்லலாம்.. 
///////அதனால் இந்த சட்டசபை தேர்தலில் தூத்துக்குடி மர்கசுக்கு கீதாஜீவன் தானாகவே சென்று ,பலதேர்தல்களை சந்தித்து உள்ளேன் ,இதுவரை வாங்கிய காசை கணக்குடன் திரும்ப கொடுத்தது உங்களது அமைப்பு மட்டும்தான் என்று பாராட்டி ,புதிதாக 35 லட்ச ரூபாயில் வாங்கப்பட்டுள்ள து.குடி மர்கசுக்கு 75 ஆயிரத்தை நன்கொடையாக வழங்கி சென்றார்///// சென்ற ரமளானில்நமது ஊர் இளைஞர்கள் துபாயிலிருந்து இப்தாருக்கு பள்ளிவாசலுக்கு அனுப்பிய பணத்தை விட இந்த பணம் உங்களுக்கு ஹலாலா?
தேவையற்ற கேள்வி துபையிலிருந்து இப்தாருக்கு அனுப்பிய பணத்தை ஹராம் என்று யாரும் சொல்லவில்லையே.துபையிலுள்ள இளைஞர்களின் பெயர்களை முன்பே அறிவித்திருந்தால் பிரச்னையே இல்லாமல் போயிருக்கும்.அல்லது கேட்ட பிறகாவது சொல்லியிருக்க வேண்டும்.அதை மூடு மந்திரமாக காட்டியதால் தான் பிரச்னை.
oor nalan virumbum oor vaasi கூறியது



///////// மேலும் சமிபத்தில் வக்ப் செய்யப்பட்ட சொத்து எது என்பதும் அதை விற்றதும் விற்பவருக்கு என்னஉரிமை என்பதும் அல்லாஹ்வின் மீது ஆணையாக எனக்கு தெரியாது//////
அது சமீபத்தில் வகப் செய்யப்பட்டதல்ல . ம்பல வருடங்களுக்கு முன்பே வகப் செய்யப்பட்ட ஒரு சொத்துதான் மிக சமீபத்தில் விற்கப்பட்டது . அது உங்களுக்கு உண்மையிலேயே தெரியாதா?தெரியாது தெரியாது தெரியாது.
6 மே, 2011 6:47 am
நீக்கு
பெயரில்லா ARASAN கூறியது...



சமீபத்தில் வக்பு செய்யப்பட அல்ல. ஏற்கனவே வக்பு செய்யப்பட ஒரு சொத்து கபளீகரம் செய்யப்பட்டது சமீபத்தில்.இப்போது புரிகிறதா? மீட்டுத் தர எண்ணம் உண்டா? அல்லாஹ்வின் சொத்து அபகரிக்கப்படக்கூடாது என்ற ஈமான் மிகைக்குமா? அல்லது ....?
6 மே, 2011 6:56 am
நீக்குவக்ப் செய்ப்பட்ட சொத்து விற்கப்பட்டது கபளீகரம் செய்யப்பட்டது என்கிறீர்கள் .எனக்கு ஒன்றும்புரியவில்லை. எப்போது வக்ப்செயயப்பட்ட எந்த சொத்து எப்போது விற்கப்பட்டது அல்லது கபளீகரம் செய்யப்பட்டது? பள்ளிவாசல்சொத்தை கபளீகரம் செய்த கொடியவன்யார்? ///இப்போது புரிகிறதா?/// புரியாத மாதிரி சொன்னால் இப்போது மட்டுமல்ல எப்போதும் புரியாது,.மீட்டுத்தரும் எண்ணம் உண்டா? உண்டு.ஆனால் எதை மீட்டுத்தரவேண்டும்?





 பள்ளிவாசல் சொத்தை விற்கப்பட்டதை தட்டி போர்டு எழுதி வைக்க்கலாம் அல்லவா?மக்களிடம் சொன்னீர்களா? இன்று ஜும்மாவிலாவது அறிவித்திருக்கலாமே .பள்ளிவாசல்சொத்தை விறகமுடியாதே! பிறகு எப்படி விற்க முடிந்தது? வான வேடிக்கை ,கச்சேரி பண்ணி மிகைத்து தெருவெல்லாம் வழிந்தோடிய ஈமான் அல்லாவின்  சொத்து அபகரிக்கப்படும் போது அடங்கி ஒடுங்கி இருப்பது ஏன்?நோட்டிஸ் வெளியிடப் போவதாக சொன்னீர்கள் அது என்னவாயிற்று?
பள்ளிவாசல் சொத்து அபகரிக்க பட்டதை இலைமறைவு காயாக சொல்லுவது சரியா?வெளிப்படையாக சொல்லுங்கள் இறை அருளால் அடுத்த நிமிடமே மீட்டுத் தருவோம்.

Arasan கூறியது...
//////மற்ற மதத்தினரும் ஹலால் ஹராம் சட்டத்தை பின்பற்றுகிறார்களா?. ///என்று கேட்டுருக்கிரீர்கள். ஒரு சாராய வியாபாரி தௌஹீத் ஜமாஅத் மர்கசுக்கு ரூபாய் டொனேசன் கொடுத்தால் வாங்குவீர்களா?




5 மே, 2011 10:39 pm தவிர்ப்போம். ஒரு சாராய வியாபாரியை இறைவன் மன்னிப்பான் .ஆனால் இணை வைப்பவர்களை இறைவனை மன்னிக்க மாட்டான்என்பதை மனதில் வைத்துக் கொண்டு இறந்தவர்களுக்கு நாம்கேட்பது கேட்கும் அதனால் அவர்களிடம் வேண்டுதல் புரிபவர்களின் பள்ளி முன்பு மேளதாள  அடித்து அட்டகாசம் புரிந்தவர்களைவிட சாராய  வியாபாரிகள் காசு மோசமானதா என்பதைசிந்திக்கவும். கீதா  ஜீவனிடம்  பள்ளிக்கு  நன்கொடை  பெறுவதை  தடை  செய்யும் குர்ஆன் ஹதித்  இருந்தால் சொல்லுங்கள் ,பரிசிலிப்போம்
 Arasan கூறியது...டாக்டர் அஜீஸ்அவர்களால் ஆரம்பிக்கப்பட்டு பின்னர் அவர் குடும்பத்தினரால் பள்ளிவாசலுக்கு கொடுக்கப்பட்ட மீரா ஸ்கூல் (  பில்டிங் மதரசாவுக்கு சொந்தம்) இப்போது விற்க ...........,,,,,,,,,,,,,,,,கு அனுமதி அளித்தது யார்? அஜீஸ் டாக்டரா? அல்லது ஊர் ஜமாஅத் நிர்வாகமா? இது பற்றி உங்களுக்கு தெரிந்த உண்மையை சொல்லவும்? (உண்மையை மட்டும் சொல்லவும். தனி பாராவில் திட்டுங்கள். முதல் பாராவில் உண்மையை சொல்லுங்கள்.
7 மே, 2011 12:20 am  உண்மையை மட்டும் சொல்லவும். தனி பாராவில் திட்டுங்கள். முதல் பாராவில் உண்மையை சொல்லுங்கள்.


பொய்யர்களுக்கு உண்மை எப்படி இருக்கும் என்று தெரியுமா?அடுத்தவர்கள் மீது அபாண்டம் சுமத்துவதுவதும் பிறகு வாங்கி கட்டுவதும் நீங்களே !தனி பாரா போட்டு திட்டுங்கள் என்றால்  சொரணை இல்லாதவர்களை திட்டுவதால் என்ன பயன்? விசயத்திற்கு வருவோம்.
///டாக்டர்.அஜீஸ் அவர்களால் ஆரம்பிக்கப்பட்டு பின்னர் அவர் குடும்பத்தினரால் பள்ளிவாசலுக்கு கொடுக்கப்பட்ட மீரா ஸ்கூல் ////ன்றாநேற்றுவரை வக்ப் செய்யப்பட்து என்று சொன்ன நீங்கள் இப்போது வெறுமனே பள்ளிவாசலுக்கு கொடுக்கப்பட்டது என்ற வார்த்தையை பயன் படுத்தியுள்ளீர்கள். வக்ப் என்றால் பள்ளிவாசலுக்கு கொடுக்கப்பட்டது என்றுதான் பொருள்.கடந்த ஒருவாரகாலமாக வக்ப் என்ற வார்த்தையை பயன் படுத்திவிட்டு இப்போது பள்ளிவாசலுக்கு கொடுக்கப்பட்டது என்று எழுதி இருப்பது சரியில்ல.இதற்கு முன்பு என்ன வார்த்தையை பயன்படுத்திநீர்களோ அதே வார்த்தையை தான் இப்போதும் பயன்படுத்தயிருக்க வேண்டும்.அல்லது இப்போது பயன்படுத்தியது வார்த்தையை இதற்கு முன்பும் பயன்படுத்தியிருக்க வேண்டும். டாக்டர் அஜிஸ் அவர்கள் மிக உயர்ந்த நோக்கத்தோடு இந்த பள்ளியை ஊரில் ஆரம்பித்தார்.அவர் ஆறாவது படிப்பதற்கே திருவைகுண்டம் நடந்ததால் தன மண்ணின் மக்கள் உள்ளூர்றிலே உயர் கல்வி பெற வேண்டும் என்பதே அவரது லட்சியமாக இருந்திருக்க வேண்டும்.இருப்பினும் இறைவன் நாட்டம் வேறாக இருந்த தால் அவர்தம் மரணத்திற்கு பிறகு பள்ளி பரிதாப நிலையை அடைந்தது.ஆறாவது வகுப்பு நடந்து கொண்டிருந்த நிலையில் அவரின் குடும்பத்தினர் பள்ளி நஷ்டத்தில் நடந்து கொண்டு இருக்கிறது ,இதற்கு மேல் தங்களால் நடத்த முடியாது என்று பள்ளி நிர்வாகிகளிடம் ஒப்படைத்தனர்.ஜமாத்தினர் பள்ளி நடத்துவதற்கு ஆயத்தமாயினர்.அச்சமயத்தில் பள்ளி அங்கீகாரம் பெறவில்லை என்பதோடு அதற்கான எந்தவொரு ஆரம்பகட்ட நடவடிக்கை கூட எடுக்க படவில்லை ஜமாத்தினர் அங்கீகாரம் பெறுவதற்காக மெட்ரிகுலேசன் பள்ளி சங்கத்தின் மூலம் அணுகிய போது ஐந்தாவது வகுப்பு வரை டெப்பாசிட்டாக ஒரு லட்ச ரூபாயும் அங்கீகாரம் பெறுவதற்கு செலவு ஒரு லட்ச ரூபாயும் கேட்டதால் ஜமாத்தினர் பள்ளி நடத்தும் நிலையை கை விட்டனர்.அதன் பின்னர் வெள்ளி ஜும்மாவில் பள்ளியின் நிலையை [மாதம் மூன்றாயிரம் நஷ்டம்] கூறி பள்ளியை யாரவது எடுத்து நடத்த முன் வருமாறு வேண்டுக்கோள் விடப்பட்டது. ஒருவரும் ஸ்கூலை நடத்த முன் வராத ; அச்சமயத்தில் சலாமும் எனது சகோதரும் சேர்ந்து பள்ளியை எடுத்தன ர்.
இப்போது சொல்லுங்கள் பள்ளி வக்ப் செய்யப்பட்டது என்று.
அதன்பின்னர் நாங்கள் தனி ட்ரஸ்ட் அமைத்து பள்ளி அங்கீகாரம் பெற்றோம் .அதன் பிறகே ஸ்கூல் ஆகிறது .அதுவரை டியுசன் செண்டர் போல் இருந்தது எங்களது ட்ரஸ்ட் தான் ஸ்கூல் அங்கீகாரம் வாங்கியது அந்த ஸ்கூலை எங்களால் நடத்த இயலாது என்றும் அதற்கு யார் வேண்டுமானாலும் நடத்திக் கொள்ளுங்கள் என்று ஜமாஅத் சொன்ன பிறகு அது எப்படி  வக்ப் சொத்து ஆகும்? பெயரளவில் ஸ்கூல் ஆக இருந்ததற்கும் மீரா மெற்றிகுலேசன் ஸ்கூலுக்கும் வித்தியாசம் இல்லையா?அந்த பெயரையும் எங்களால் மாற்ற முடியும்.இருப்பினும் டாக்டரின்  முயற்சிக்கு நன்றி பாராட்டும் வகையிலே அந்த பெயரை மாற்ற வேண்டாம் என்று வைத்துள்ளோம்.இது தெரியாத சில கூமுட்டைகள் வக்ப் ஸ்கூல் என்று உளறி  கொட்ட அதைக் கேட்டுக் கொண்டு சில அரை வேக்காடுகளும் ஊதி வருகின்றன. மக்களிடம் தெருவில் சுற்றி ஆதரவு கேட்டோம்.பல கேலிகளும் கிண்டல்களும் வேறு . பள்ளி நடத்துவதற்கென்றே பிறந்தவர்கள் கிறிஸ்தவர்கள் ,அவர்களே பக்கத்த்து ஊரில் பிரைமரி ஸ்கூல் தான் நடத்துகிறார்கள் .இவர்கள் மெட்ரிகுலேசன் ஸ்கூல் நடத்துவதை பார்த்து போடுவோம் என்றார்கள்.நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகள் பக்கத்து ஊரிலே படித்தனர். 2000த்தில் சலாம் அவர்கள் மீண்டும்  வெளி நாடு சென்றதால்அது முதல் நான் நடத்தி வருகிறேன்.2002 இல் முதல் பாடச் பத்தாவது தேர்வு எழுதி ரிசல்ட் வெளி வந்து மார்க் சீட்டில்   மீரா மெட்ரிகுலேசன் ஸ்கூல் என்று பெயர் வந்த பிறகும் ஸ்கூல் அங்கீகாரம் வாங்க வில்லை என்று அவதூறு வை அடுத்தூறு மக்கள் அல்ல உள்ளூர் மக்களே கிளப்பி வந்தனர்.பள்ளி நடத்து வதற்கென்றே அவதாரம் எடுத்தவர்கள் எங்களது இரண்டாவது பாடச் பத்தாவது வகுப்பு அரசு பொதுத் தேர்வு எழுதிய பிறகுதான் எங்களை முன் மாதிரியாக கொண்டு அவர்களும் மெட்ரிகுலேசன் ஸ்கூல் நடத்த ஆரம்பித்தார்கள்.அச்சமயத்தில் நமது சுற்று வட்டாரத்திலே மீரா ஸ்கூல் மட்டுமே மெட்ரிகுலேசன் ஸ்கூலாக இருந்தது 
பல இன்னல்களுக்கும் செலவினங்களுக்கும் மத்தியில் ஒவ்வொரு ஆண்டும் இருபது குழந்தைகள் முதல் நாற்பது  குழந்தைகள் வரை இலவச கல்வி அளித்துள்ளோம்.வெளியூர் மாணவர்களும் நமதூரில் படிக்க வேண்டும் என்பதற்காக வெளியூர் மாணவர்களுக்கு இலவச யுனிபார்ம் ஓராண்டு வழங்கியுள்ளோம்.மேலும் பள்ளியின் நஷ்டத்தை தாங்க முடியாது என்பதால் பள்ளியை மூடிவிடும் நிலையில் ஒரு வெளியூர் நண்பரை அழைத்து அவரது மனைவி ரஹ்மத் நகர் மெக்டலின் ஸ்கூலில் வேலை பார்த்து வந்தார். அச்சமயத்தில் மஸ்டா வான் மட்டும் இருந்தது எட்டு லட்ச ரூபாய் கொடுத்து விட்டு ஸ்கூலை நடத்த சொன்னோம் .ஸ்கூல் பீஸ் சார்ட் பார்த்து விட்டு ஓடி விட்டார்.அதன் பிறகு 2006 -2007 இல் மிகவும் சிரமமான நிலையில் இனி கையிலிருந்து காசு செலவழிக்க முடியாத நிலையில் பள்ளி கட்டணத்தை உயர்த்தினோம்.அதாவது அதுவரை எல்கேஜிஇலிருந்து பத்தாவது வகுப்பு வரை மாத கட்டணம் ரூபாய் எழுபது முதல் நூறு வரையே இருந்தது.அதன் பிறகு எல்கேஜியில்ருந்து பத்தாவது வரை மாத கட்டணம் 125ரூபாய் முதல் 200௦௦ ரூபாய் வரை யளவில் உயர்த்தினோம்.இச்சமயத்தில் தான் ஸ்ரீமதி'தான் திருடி'அவர்களிடம் பள்ளி பொறுப்பை ஒப்படைத்தேன் .அவரிடம் பள்ளி நஷ்டத்திலிருந்து மீட்டு கொண்டுவந்ததால் பள்ளியின் செலவு போக மீதி பணத்தை அவருக்கு தருவதாக கூறி இருந்தேன்.ஆனால் அவர் எனது நம்பிக்கைக்கு மோசடி செய்து விட்டார்.அதுவரை மாணவர்கள் வெளியே நோட்டு வாங்கினார்கள்ஆனால் இந்த 'தான் திருடி' வந்த பிறகு நோட்டுக்களை மொத்தமாக வாங்கி விநியோகித்தார்.இது ஒரு சிலரை பாதிக்கவே எனக்கும் ஸ்கூலுக்கு  எதிராக செயல் பட ஆரம்பித்தனர்.அடுத்தது வெளியூர் மாணவர்களுக்கு வான் வசதி குறைவின் காரணமாக சலாம் அவர்களிடம் ஒரு லட்ச ரூபாய் கடன் வாங்கி டூரிஸ்தர் வான் புக் பண்ணினோம். அதன் பின்னர் டியு கட்ட முடியாமலும் இரண்டு வான்களை விற்று ஒரு வான் வாங்கினோம் அதனால்  ஏற்பட்ட நஷ்டம் மட்டும் ஐந்து லட்ச ரூபாய்.அதில் சலாம் ஒரு லட்சத்து எழுபத்தி ஐந்துஆயிரம்  ரூபாயும் நான் எண்பதினாயிரம் போட்டு சரி கட்டினோம்.இதனிடையே கள்ளத்தனமாக கணக்கு கேட்ட விவகாரம் வேறு.பள்ளிவாசல் சொத்தை அபகரித்ததாக அபாண்டம் போடும் நீங்கள் அடுத்தவர்களின் நிறுவனத்தில் கள்ளத்தனமாக கணக்கு கேட்டதை இதுவரை கண்டித்தது  உண்டா?
இப்படி பலதடைகளையும் சோதனைகளையும் தூக்கி எறிந்து வெற்றி நடை போட்டு வரும் மீரா ஸ்கூல் இப்போது பலரின் பார்வைகளையும் திருப்பியுருக்கிறது அல்ஹம்துலில்லாஹ் .
இப்போது நான் ஸ்கூல் வரலாற்றினை நீங்கள் கேட்டவாறு சுருக்கமாக் கூறியுள்ளேன்.அதில் எங்களுக்கு  ஏற்பட்ட நஷ்டம் பல லட்ச ரூபாய்கள்.அதை எங்களுக்குள் தீர்வு கண்டுள்ளோம் .ஆனால் இப்படி நடந்த இந்த விவகாரத்தில் ஒருவர் மீது பள்ளிவாசல் சொத்தை விற்றதாகவும் வாங்கியதாகவும் பொய்ப்பழி போடுவது உங்கள் மனசாட்சியை உறுத்த வில்லையா? சில மன நோயாளிகள் சொல்லுவதை எல்லாம் அப்படியே கேட்டு எழுதுவதா? உங்களுக்கு சொந்த அறிவு இல்லையா? இங்ஙனம் ஒருவர் மீது பொல்லாங்கு கூறி உண்மையை தெரிந்து கொள்ள முனையும் நீங்களும் உங்கள் வகையறாக்களும் முதலில் உண்மையை கேட்டு தெரிந்து கொண்டு அதன் பின்னர் பேசியிருக்கலாம் இல்லையா?இதுவரை உங்களது பல தவறுகளை  சுட்டி காட்டியுள்ளேன்.ஆனால் ஒரு தடவை கூட வருத்தம் தெரிவிக்கும் சாதாரண பண்பாடு கூட உங்களிடம் கிடையாது.போகட்டும் ஆனால் இப்போது வக்ப் சொத்தில் எங்கள் மீது பழி சுமத்திய நீங்கள்   எங்களிடம் மன்னிப்பு கேட்காதவரை இறைவன் மன்னிக்கமாட்டான். மன நோயாளிகளிடம் அவர்கள் கொடுத்த தகவல்களை நிருபிக்குமாறு கேளுங்கள்.அதுவே உங்களின் நல்ல செயல்பாட்டை தெளிவாக்கும்.
Arasan சொன்னது…
மீரா ஸ்கூலை பள்ளிவாசல் நிர்வாகத்திடம் டாக்டர் அஜீஸ் குடும்பத்தார் ஒப்படைக்கும் போது பள்ளிவாசல் முத்தவல்லியாக இருந்தது யார்?



Arasan சொன்னது,,,,,,,








உங்களை பற்றி பாட்னர் துரோகம், பாட்னர் துரோகம் என்று ஒரு குடும்பமே ஊரில் சொல்லி கொண்டு திரிகிறதாமே? அது பற்றி விளக்கி உங்கள் தரப்பு நியாயத்தை கூறுங்கள். ப்ளீஸ்





 Arasan கூறியது...










நேற்றுக்கும் இன்றைக்கும் எழுத்தில் இவ்வளவு மாற்றமா? நான் இரண்டையும் பிரிண்ட் எடுத்து வைத்திருக்கிறேன். இன்னும் உங்களிடம் உண்மையே எதிர்பார்கிறோம்.
8 மே, 2011 12:09 am  nநோட்டிஸ் அடித்த கதையாக இல்லாமல் இரண்டு பிரின்ட்களையும் போட்டு எனது எழுத்தில் உள்ள மாற்றத்தை நிருபிக்க.மற்றும் அர்த்த மற்ற  உளறல்கள் இங்கு இடம் பெறாது என்பதை கவனத்தில் கொள்க

 Arasan கூறியது...





////ன்றாநேற்றுவரை வக்ப் செய்யப்பட்டது என்று சொன்ன நீங்கள் இப்போது வெறுமனே பள்ளிவாசலுக்கு கொடுக்கப்பட்டது என்ற வார்த்தையை பயன் படுத்தியுள்ளீர்கள்.வக்ப் என்றால் பள்ளிவாசலுக்கு கொடுக்கப்பட்டது என்றுதான் பொருள்/////

பள்ளிவாசலுக்கு கொடுக்கப்பட்டது என்பதும் வக்ப் செய்யப்பட்டது என்பதும் இரண்டும் ஒன்றுதான் என்று ஒப்பு கொண்டதற்கு முதலில் நன்றி. நன்றி.. நன்றி...
7 மே, 2011 8:01 am 
நீங்கள் இவ்விரண்டு வார்த்தைகளை சாதுர்யமாக கையாண்டிருப்பதையே இங்கு சுட்டியுள்ளேன்.பொதுவாக ஒரு நபரை சொல்லும்போது வக்ப் என்றும் தனி நபரை குறிப்பிடும்போது பள்ளிவாசலுக்கு கொடுக்கப்பட்டது  என்றும் நேர்மையற்ற முறையில் இடத்திற்கு தகுந்தவாறு எழுதியுள்ளதையே மறைமுகமாக கூறியுள்ளேன்.இதில் நான் ஒப்புக் கொள்வதற்கும் நீங்கள் நன்றி சொல்லுவதற்கும் வாய்ப்பு இல்லை.அப்புறம் நோட்டிஸ் அடிக்க போகிறோம் என்று ஆர்ப்பரித்தது என்னவாயிற்று?உங்களுடன் உங்களது மன நோயாளி ஆலோசகர்களையும் வரிந்து கட்ட நினைத்திருந்தேன். வாய்ப்பை கெடுத்து விட்டீர்களே! 

Arasan சொன்னது…






/////
அதன் பிறகே ஸ்கூல் ஆகிறது .அதுவரை டியுசன் செண்டர் போல் இருந்தது எங்களது ட்ரஸ்ட் தான் ஸ்கூல் அங்கீகாரம் வாங்கியது//////
இது சரியான வார்த்தையா? 
மிக மிக சரியான வார்த்தை .நூறு சதவீதம் சரியானவார்த்தையே 

/////2000த்தில் சலாம் அவர்கள் மீண்டும் வெளி நாடு சென்றதால்அது முதல் நான் நடத்தி வருகிறேன்/////
நடத்ததான் உங்களிடம் கொடுத்தார்கள்............ சரிதானே? இது உங்கள் வார்த்தைதான் . ச்சே ,வார்த்தைகளில் விளையாடும் தமிழ் பண்டிதரே,நடத்தத்தான் என்னிடம் யார் கொடுத்தார்கள்? எதை கொடுத்தார்கள்?மன நோயாளிகடம் மயங்கும் அரை வேக்காடுகளே !எங்கள் ஸ்கூலை பற்றி பேசுவதற்கு உங்களுக்கும் மன நோயாளிகளுக்கும் என்ன யோக்கியதை இருக்கிறது?
இன்ன்ன்னன்ன்னும் உங்களிடம் உண்மையே எதிர்பார்க்கிறோம்.
எங்களிடம் உண்மை மட்டும்தான் வரும் .உங்களிடம் பொய்யை தவிர வேறொன்றும் வராது என்பதிலும் உறுதியாகவே வாருங்கள்.

Arasan சொன்னது…






அப்புறம் நோட்டிஸ் அடிக்க போகிறோம் என்று ஆர்ப்பரித்தது என்னவாயிற்று?உங்களுடன் உங்களது மன நோயாளி ஆலோசகர்களையும் வரிந்து கட்ட நினைத்திருந்தேன். வாய்ப்பை கெடுத்து விட்டீர்களே!

இன்ஷா அல்லாஹ் கண்டிப்பாக நோட்டீஸ் அடிப்போம். அப்போ தான் நீங்கள் கும்மி அடித்து பிழைப்பு நடத்த முடியும். நான் உங்கள் பிழைப்பை கெடுக்க மாட்டேன். இன்னும் சில விசயங்களை திரட்டி வருகிறோம். நீங்களும் சில விசயங்களை சொல்லி இருக்கிறீர்கள். நன்றி.
நீங்கள் எழுதியவை எல்லாம் அல்லாஹ் மீது சத்தியமாக உண்மை தானே? அல்லது உங்களுக்கு தெரிந்த உண்மையா? நீங்கள் கண்டிப்பாக நோட்டிசை அடிக்கமாட்டீர்கள். மன நோயாளிகளிடம் கூட்டணி வைத்தால் அதன் பாதிப்பு உங்களுக்கு ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.உங்கள் பிழைப்பை கெடுக்க மாட்டேன். சே உங்களுக்கு என்ன மனசு .உங்களுகென்ன  /வலது கை பக்கம் கட்டடங்களிலிருந்து பத்து கோடி ரூபாய் மாத வாடகை வருகிறது இடது கை பக்கம் உள்ள நிலங்களிலிருந்து ஐந்து கோடி வருகிறது அடுத்தவர்களின் பிழைப்பை பார்த்தால் உங்களுக்கு நக்கலாக தெரியும்.இருக்கட்டும் .மனநோயாளியின் பாதிப்பு உங்களிடம் ஏற்படும் முன்பு ஆரம்ப கட்டமாகவே அதை குணப் படுத்த வழி காண்போம்.நான் கும்மி அடித்து என்ன பிழைப்பு நடத்தினேன் ?சொல்லியே தீரவேண்டும்.இல்லையெனில் உங்களின் அயோக்கிதனமான பொய்யில் அதுவும் ஒன்றாக இருக்கும்.நேற்று நீங்கள் கூறியதற்கு இன்று வாயே திறக்காமல் இருந்துவிட்டு பொய்க்கோலம் போடும் கோடிசுவர பிரபே!என் பிழைப்பை கெடுத்து விடாதீர்கள். நீங்கள் திரட்டி  வரமாட்டீர்கள். இப்படி உருட்டியே ஓட்டிவிடுவீர்கள்  .அப்புறம் ஓடிவிடுவீர்கள்.பிறகென்ன  டஜன் பக்கீர் பாவா கப்ர் கதைதான்.
///(80,000+1,50,000 சேர்ந்தால் ஐந்து லட்சம் என்று கணக்கு எழுதி இருக்கிறீர்கள். அது பரவாஇல்லை ஏனென்றால் அது உங்களை நம்பி ஏமாந்து கொண்டிருப்பவர்கலின் ஹராமான பணம். அதற்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை) ///கணக்கில் பிழியேசரி கட்டினோம் என்றால் அவ்வளவுதான் எங்களால் முடிந்தது என்றுதான் பொருள்.ஐந்து லட்சமும் நட்டம்தான் .சரி நான் சொன்ன தொகையாவது சரியாக போட்டிருக்கிறீர்களா? தங்கள் உடம்பில் ஓடுவது ஹராமா? ஹலாலா?என்று நான் தெரிந்து கொள்ள உங்களை கொஞ்சம் அடையாளம் காட்டுங்களேன்.  என்னிடம் ஏமாந்தது போல் உங்களிடம் ஏமாறவில்லை என்ற வாயிற்று எரிச்சல் அதிகமாக இருப்பது போல் தோணுகிறதே  
அனுப்பிய எல்லா கேள்விகளையும் வெளியிட்டு வருகிறீர்களா?

ஆம் எல்லா கேள்விகளையுமே பதிலுடன் வெளியிட்டு வருகிறேன்.பொதுவாக மென்டலகளை யாருமே கணக்கில் எடுத்துக் கொள்வதில்லை.அந்த வகையில் ஓரிரு கேள்விகள் வேண்டுமென்றால் தவிர்க்கப் பட்டிருக்கும்.